ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    இஸ்லாமும் விஞ்ஞானமும் -இஸ்லாமிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்

    Go down

    இஸ்லாமும் விஞ்ஞானமும் -இஸ்லாமிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் Empty இஸ்லாமும் விஞ்ஞானமும் -இஸ்லாமிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள்

    Post by Admin Fri 19 Nov 2010, 11:08 pm

    இறைவனின் திருப்பெயரால்...

    மேற்கத்திய அறிவியல் வளர்ச்சியடைந்து அதன் பரிணாமமான நவீன கண்டுபிடிப்புக்கள் உலகை ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கின்றன. அதேநேரம் உலகின் மகிழ்ச்சிக்கு குழிதோண்டிக் கொண்டிருப்பதும் மறுக்க முடியாத ஒன்றாகும்.இத்தருனத்தில் இஸ்லாம் கூறும் அறிவியல் பக்கங்களை ஒருமுறை புறட்டிப்பார்ப்பது மிகவும் பொருத்தமாக அமையும்.

    எமது அவா என்னவென்றால்:

    1. மேற்கத்திய உலகையே உதவிக்கு அழைத்துக் கொண்டிருக்கும் நமது சமூகம் இவைகளை உணர்ந்து தன்னை வளர்ச்சியின் பக்கம் திருப்பிக் கொள்வதற்கு இந்த வரிகள் ஓர் ஊன்று கோலாய் அமையும்.
    2. முஸ்லீம்கள் அல்லாத நம் சகோதரர்கள் இந்த உண்மைகளை உணர்ந்து சத்தியத்தைப் பின்பற்ற வழிகோலும்.

    இவை நமது பிரதான எதிர்பார்ப்புகளாகும்.

    இந்த ஆக்கத்தில் கூறப்பட்டிருக்கும் முக்கிய சில பகுதிகள் 27-04-2007 ஆம் நாளன்று சவுதி அரேபியா, அல்-ஜுபைல் தஃவா சென்டரில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டில் உரையாற்றப்பட்டது. இத்தலைப்பு பறந்து விரிந்த ஒரு தலைப்பாதலால் பெரும்பாலான பகுதி உரையில் விடுபட்டுள்ளது. எனவே தமிழ் உலகம் பயனடைய வேண்டும் என்ற ஒரு நோக்கில் என்னால் முடிந்தளவு பல தகவல்களை ஒன்று திரட்ட முயற்சிக்கிறேன். வல்ல றஹ்மான் நம் அனைவருக்கும் தெளிவையும் சத்தியத்தைப் பின்பற்றும் வாய்ப்பையும் தந்தருள்வானாக.

    இத்தலைப்பில் ஆங்கிலத்தில் விரிவாக நூற்கள் வெளிவந்த அளவுக்கு தமிழில் வெளிவரவில்லைதான். இருந்தாலும் சில எழுத்தாளர்கள் தங்களுக்கு முடிந்த வரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் அந்த நூற்கள் ஒரு சில விடயங்களை மட்டுமே அலசுகின்றன. நிறைய தகவல்கள் விடுபட்டுள்ளன. நமது இந்த ஆக்கம் கூட அனைத்தையும் உட்கொள்ளாவிட்டாலும் ஓரளவு பல விடயங்களை வியாபித்துள்ளதை நீங்களே போகப் போக புறிந்து கொள்வீர்கள்.

    இந்த ஆக்கம் எழுதப்படுவதற்கு இதர இருபெரும் காரணங்கள் உள்ளன:
    1-இஸ்லாத்தின் மூலாதார நூற்கள் கூறும் அறிவியல் உண்மைகளை, நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புக்களோடு உரசிப்பார்த்து நமது ஈமானை புதுப்பித்துக் கொள்ளுதல்.
    2-மேற்கத்திய உலகின் நன்றி மறந்த தன்மையையும், அவர்களது சுய ரூபத்தையும் மக்களுக்கு உணர்த்துதல்.

    மேலே குறிப்பிட்ட காரணங்களில் இரண்டாவது காரணத்தில் மிகப் பெரும் உண்மை உலகின் கண்களை விட்டும் மறைக்கப்பட்டுள்ளன. அதாவது மேற்கத்திய உலகின் கண்டுபிடிப்புகளுக்கும் விஞ்ஞான வளர்ச்சிக்கும் முஸ்லீம்கள் தான் காரணமாக அமைந்திருக்கிறார்கள். முஸ்லீம்களது அன்றைய அறிவியல் கண்டுபிடிப்புக்கள்தான் அவர்களுக்கு வளர்ச்சிப் படிக்கட்டுக்களாக அமைந்துள்ளன. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்தல் தகுமோ? என்பதே நமது கேள்வியாகும்.

    இக்கூற்றினைப் பார்க்கும் அநேகருக்கு இது புதுமையாகக் கூட இருக்கலாம். அல்லது முஸ்லீம்கள் அறிவியல் முன்னோடிகளாக இருந்துள்ளனரா? என்ற கேள்வி கூட எழுப்பலாம். இதனை நாம் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை. மாறாக அவர்களது கூற்றுக்களை வரலாறுகள் பட்டியலிடுகின்றன.

    ஐரோப்பிய விஞ்ஞான வளர்ச்சியின் முன்னோடிகள்:-
    '
    Marguis' எனும் அறிஞர் தனது‘speeches delivered in ' எனும் நூலில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    '
    It is to musalman science, to musalman art and to musalman literature that Europe has been in a great means indebted for its extrication from darkness of the middle ages.'
    'ஐரோப்பா இடைக்காலத்தில் அறியாமை எனும் இருளை விட்டு வெளிவரக் காரணமாக இருந்ததற்கு முஸ்லிம்களின் கலை, முஸ்லிம்களின் விஞ்ஞானம், முஸ்லிம்களின் இலக்கியம் ஆகியவற்றிற்கு அது (ஐரோப்பா) பெருமளவில் நன்றிக் கடன் பட்டிருக்கிறது.'

    ஏனென்றால், 8-12ம் நூற்றாண்டு காலப்பகுதியானது 'ஐரோப்பா அறியாமை எனும் இருட்டில் தத்தளித்துக் கொண்டிருந்த காலப்பகுதியாகும்' என இன்றும் வரலாறு கூறுகின்றது. இக்காலப்பகுதியில் முஸ்லீம்களின் கண்டுபிடிப்புக்கள் அசாத்தியமானவைகளாகும். இந்த நான்கு நூற்றாண்டுகளிலும் வரலாறு சான்று பகரும் அளவுக்கு முஸ்லீம்கள் வளர்ச்சியடைந்திருந்தார்கள் என்பதற்கு இஸ்லாம் மார்க்கமும், அவர்களது வேதமும்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    Maurice Bucaille :
    'அந்த நூற்றாண்டில் வாழ்;ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத - இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புக்களின் யதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படி துல்லியமாகத் தெரிவிக்க முடிந்தது?' -
    The Bible, The Quran and Science 1978,p.125
    Sir. William Muir கூறுகிறார்:
    'குர்ஆன் இஸ்லாத்தின் மாபெரும் சாதனையாகும். அதன் ஆதிக்கம் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் போன்ற அனைத்துத் துறைகளிலும் படர்ந்து நிற்கிறது. குர்ஆன் அனைத்திற்கும் மேலானது என்று ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.' -
    The life of Mohammed, London 1903, ch. The Coran p.vii.
    இந்த நடுநிலைவாதிகளின் கூற்றுக்கள் உண்மையில் பொன் வரிகளில் பொறிக்கப்பட வேண்டியவைகளாகும். வரலாறுகளை மாற்ற முடியாதல்லவா! அதுதான் இன்னும் இந்த உண்மைகள் புறையோடிக் கிடக்கின்றன. சத்தியவாதி அவைகளைத் தூசிதட்டி வெளிக் கொணருகிறான்.சாதனைகள் பல கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் பலரது வரலாறுகளை உலகின் கண்களை விட்டும் மறைத்த பெருமையும் மேற்கத்திய உலகையே சாரும்.

    வியக்கத்தகு சாதனைகள் படைத்த முஸ்லிம் விஞ்ஞானிகள் சிலர்:
    இல பெயர் காலகட்டம்(கி.பி) துறை
    1 அல்குவாரிஸ்மி (அல்காரிஸ்ம்) 780-850 கணிதம், வானவியல்
    2 அல்ராஜி (ரேஜஸ்) 844-946 மருத்துவம்
    3 அல்ஹைதம் (அல்ஹேஜன்) 965-1039 கணிதம், ஒளியியல்
    4 அல்பிரூணி 973-1048 கணிதம், தத்துவம், வரலாறு
    5 இப்னுசீனா (அவிசென்னா) 980-1037 மருத்துவம்
    6 அல்இத்ரீஸி (டிரேஸஸ்) 1100 புவியியல்
    7 இப்னுருஸ்து (அவிர்ரோஸ்) 1126-1198 மருத்துவம், தத்துவம்
    8 ஜாபிர் இப்னு ஹையான் (ஜிபர்) 803 பெளதீகம்
    9 அல்தபரி 838 மருத்துவம்
    10 அல்பத்தானி (அல்பதக்னியஸ்) 858 தாவரவியல்
    11 அல்மசூதி 957 புவியியல்
    12 அல்ஸஹ்ராவி (அல்புகேஸிஸ்) 936 அறுவைசிகிச்சை
    13 இப்னுஹல்தூன் 1332 வரலாறு
    14 இப்னு ஹுஜ்ர் (அவன்ஜோர்) அறுவை சிகிச்சை
    15 இப்னு இஷாக் அல்கிந்தி 800-873 தத்துவம், பெளதீகம், ஒளியியல்
    16 முஹம்மது ஷாகிர் ஹஸன்
    (
    Angel of red sea)
    17 முஹம்மது சகரிய்யா யாஸீன் மருத்துவம்
    18 அலி இப்னு அப்பான் மருத்துவம்

    (அலி இப்னு அப்பான் எனும் மருத்துவ மேதை அக்காலத்திலேயே 20 பாகங்களைக் கொண்ட ஒரு மருத்துவ நூலை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).


    The Random House Dictionary of the English Language Comple by:- Lawrance Urdang – p ல் காணப்படும் Algebra (Ap’lwo), Al-Chemy (Chemistry). Alcohol, Alkali, Algorithm போன்ற விஞ்ஞானப் பெயர்கள் அரபியிலிருந்து எடுக்கப்பட்டவைகள் என்பதும் கவணத்திற் கொள்ளப்பட வேண்டியவைகளே.


    அல்-குஆனும் அறிவியல் விஞ்ஞானமும்:
    1642 ல் பிறந்த ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானியே பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் என மேற்கத்திய வரலாறு கூறுகின்றது. ஆனால் அல்குர்ஆனோ 1400 வருடங்களாக விஞ்ஞானிகளுக்கே பாடம் புகட்டிக் கொண்டிருப்பதை மேற்கத்திய உலகம் கண்டு கொள்ளவே இல்லை. அல்லது மூடி மறைத்திருக்கின்றது என்று கூட சொல்லலாம்.

    அல்குர்ஆன் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் எனும் உண்மையை
    Dr.Zakir Naik அவர்கள், தனக்கே உரிய பானியில் மிகவும் அற்புதமாக இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்:
    '
    The Holy Quran is Miracle of Miracles, Quran is Miracle of all times’'.
    நபிகளார் (ஸல்) அவர்கள் உலகம் அஸ்தமிக்கும் வரைக்கும் அனைவருக்குமான தூதராதலால், அல்குர்ஆன் நிச்சயமாக நிலையான அற்புதமே! (وما أرسلناك إلا كافة للناس)-34:28 'உம்மை உலகத்தார் அனைவருக்கும் (தூதராக) அனுப்பியிருக்கிறோம்' எனும் வசனம் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

    Albert Anstain said: ‘Science without religion is lame, and religion without science is blind’.
    இந்த அல்குர்ஆனின் அதிசயத் தன்மைகள் ஏராளம்! அல்குர்ஆன் கூறும் அறிவியலாகும். ஆதேபோன்று அதனது சபதத்தை மனிதர்களால் முறியடிக்க முடியாமையாகும்.

    Dr.Zakir Naik இதனை மிகவும் அழகாகக் கூறுவார்கள்: 'Al-Quran is a book of SIGNS not a book of SCIENCE'. அதாவது, அல்-குர்ஆன் அத்தாட்சிகள் கொண்ட ஒரு வேதமே தவிர விஞ்ஞானப் புத்தகம் கிடையாது என்பதாகும்.

    قال تعالى:ஜوإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقينழூ فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرينஸ- البقرة:23-24
    'நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.
    உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! நிராகரிப்பாளர்களும், கற்களுமே அதன் எரிபொருட்களாகும். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.' – 2:23-24.

    இந்த சபதம் 1400 ஆண்டுகளைக் கடந்த பினபும் இதுவரை எவராலும் முறியடிக்க முடியவில்லை. அரபு மொழியை தாய் மொழியாகக் கொண்ட
    (Coptic Christian) கிறிஸ்தவர்கள் எகிப்தில் மட்டும் 6 மில்லியன் இருக்கின்றனர். அதேபோன்று லெபனான், சிறியா போன்ற இன்னும் பல அரபு நாடுகளிலும் அரபு மொழி பேசக் கூடிய கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். அப்படியிருந்தும் அவர்களால் அல்குர்ஆனின் சவாலை முறியடிக்க முடியவில்லை என்பது அல்குர்ஆனின் இறைத் தன்மையையும், அதன் உண்மைத் தன்மையையும் உணர்த்துகின்றது!

    காலத்தை வென்ற கச்சித வேதம் அல்குர்ஆன் ஓர் நிலையான அற்புதமாகும்.
    அல்குர்ஆனின் வரலாறுகள் புராணங்கள் போன்று கிடையாது.
    நிதர்சன உண்மைகள் அல்குர்ஆனில் தனிரகம்!
    அல்குர்ஆன் சரித்திரம் பேசும் ஆனால் சரித்திர நூலன்று! வரலாறு கூறும் ஆனால் வரலாற்று நூலுமன்று!
    விஞ்ஞானம் அல்குர்ஆனின் விந்தைகளிற் சில, ஆனால் விஞ்ஞான நூலல்ல!
    அல்குர்ஆனின் போதனைகள் நிச்சயமாக உலகத்திற்குத் தேவை!!
    காலத்தின் நகர்வோடு சிறிதளவும் சலைக்காது நடைபோடும் ஒரே தன்நிகரற்ற வேதம் என்றால் அது அல்குர்ஆனைத் தவிர வேறெதுவும் கிடையவே கிடையாதென அடித்துக் கூறலாம்.

    உலகில் இன்று வேதவாக்குகள் மறுக்கப் படலாம் ஆனால், விஞ்ஞானிகளின் வாக்குகள்தான் மேதாவிகள் பலருக்கு வேதப் பாடம். விஞ்ஞானிகளுக்கே விஞ்ஞானம் புகட்டும் வேதப் புத்தகத்தை உலகில் கண்டிருக்கிறீர்களா? அது அல்குர்ஆன் மட்டும்தான்! ஏனைய மதநூற்களில் கூட ஓரிரு விஞ்ஞானக் கருத்துக்கள் காணக்கிடக்கின்றன. அவைகள் தற்செயலாக விஞ்ஞானத்தோடு பொருந்திப் போனவைகள் என்றே கருத வேண்டும். ஏனென்றால் அதிகமான இடங்களில் மதக் கருத்துக்கள் விஞ்ஞானத்தோடு மோதுகின்றமை அன்று முதல் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. உதாரணத்திற்கு கலீலியோ கலீலியின் விஞ்ஞானக் கருத்துக்கு திருச்சபைகள் எவ்வாறு தடையாக இருந்தன என்பதை வரலாறுகள் நிருபித்துக் காட்டுகின்றன.

    அதே நேரம் உலக வேதபுத்தகங்களிலேயே அல்குர்ஆன் தனித்து நிற்பதை கீழ் வரும் 'அல்குர்ஆனும் விஞ்ஞானமும்' எனும் தொடர் உண்மைப்படுத்துவதை உணர்வீர்கள்!!

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum