என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOMby Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm
» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm
» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm
» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm
» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm
» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm
» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am
» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am
» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am
» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am
» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am
» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am
» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am
» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am
» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am
» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am
» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am
» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am
» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am
» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am
» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am
» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am
» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am
Most Viewed Topics
Log in
Alt+n
அல்லது இதை சொடுக்குங்கள்
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
உடலுறவால் மாரடைப்பு ஏற்படுமா ?
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX
Page 1 of 1 • Share •
உடலுறவால் மாரடைப்பு ஏற்படுமா ?
நம்ம சமுதாயத்துல, எத்தனை மாத்ருபூதங்கள் வந்தாலும், அத்தனை மாத்ருபூதங்களும் ஒன்றாகச் சேர்ந்து, செக்ஸ் குறித்த, எண்ணிலடங்கா நம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் போக்க முயற்ச்சித்தாலும், “ஒரு பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா” என்பதைப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க (?), சில/பல சந்தேகங்கள் போல, செக்ஸ் குறித்த பல சந்தேகங்கள் காலம்காலமாய் தெளிவில்லாமலேயே இருந்துகொண்டுதான் இருக்கின்றன?! (செக்ஸ் பற்றிய கருத்துகளைப் விரிவாகப் பேசவோ/விவாதிக்கவோ வயதும், அனுபவமும் எனக்குப் போதாது என்றெண்ணுவதாலேயே இந்த நிலைப்பாடு!)
இது போதாதென்று, சின்ன கலைவாணர் அப்படீன்னு தனக்குத்தானே (?) பட்டம்/அடைமொழி போட்டுக்கொண்டு, ஆனால் சினிமாவில் சில சில்லறைப் பாத்திர நடிகைகளைத் தனக்கு சோடியாக போட்டால்தான் நடிப்பேன் என்று, கொஞ்சம்கூட வெட்கமேயில்லாமல் கேட்கும் நடிகர்/கள், மாத்ருபூதம் போன்ற வயதான, சமுதாயத்தில் ஒரு நல்ல பொறுப்பிலுள்ள, மரியாதையுடன் வாழக்கூடிய ஒருவரை, “சார் நீங்க வெறும் தாஸா இல்ல லார்டு லபக்கு தாஸா” என்பதைப்போன்ற கேவலமான (?) நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கச் செய்து, மக்கள் மத்தியில் அவர்களின் உண்மையான அடையாளத்தையே மாற்றிவிட்டிருப்பதும் உங்களில் பலருக்குத் தெரிந்ததே?! (ஏய் யாருப்பா அது, மேலிருப்பான் பக்கத்துல அரசியலெல்லாம் எழுதுறது/பேசுறது?!)
சரி அதவிடுங்க, நாம எழுத வந்த மேட்டரப் பார்ப்போம். பின்வரும் செய்தியை ஒரு பதிவா நான் எழுதுறதுக்கு இரண்டு காரணங்கள்.
ஒன்று, “சில உயிர் காக்கும் அல்லது உயிர் போக்கும் சில/பல உடல் உபாதைகளைப் பற்றிய நம் புரிதல் தவறானது, அதை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது” அப்படீன்னு தகுந்த ஆதாரங்களுடன், உரக்கச் சொல்லுகிற ஒரு ஆய்வு இது என்பது.
இரண்டு, செக்ஸ் குறித்த நம் எத்தனையோ கேள்விகள் விடையில்லாமலும், தொடர்ந்து ஒரு மர்மமாகவுமே இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வி உடலுறவுக்கான தகுந்த/தகாத காலம்/சூழ் நிலையைப் பற்றியது! அந்தக் கேள்விக்கு ஒரு தீர்க்கமான, நம்பத்தகுந்த, ஆதாரங்களுடன் கூடிய ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதில்/செய்தி இது என்பது!
என்ன இந்த மேலிருப்பான், இந்தப் பதிவை எழுதுறதுக்கு முன்னாடி ரொம்ப பீடுகையெல்லாம் போடுறானேன்னு பார்க்குறீங்களா? அதெல்லாம் ஒன்னுமில்லீங்க! இனிமேலும் வெட்டிப்பேச்சி பேசாம நாம் நேரா பதிவுச் செய்திக்குப் போய்டுவோம் வாங்க…..
செக்ஸ் சந்தேகங்களும் மாரடைப்பும்!
செக்ஸ் குறித்த ஆயிரக்கணக்கான சந்தேகங்கள்ல மிக முக்கியமானதும், கொஞ்சம் விபரீதமானதுமான ஒரு சந்தேகம்…..<blockquote>
மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதற்க்குப் பின் உடலுறவில் ஈடுபடுவது ஆபத்தானதா, பாதுகாப்பானதா? </blockquote>
அதெல்லாம் சரி, அதென்ன புதுசா மாரடைப்புக்கும் செக்ஸ்/உடலுறவுக்கும் ஒரு முடிச்சு அப்படீன்னு கேட்டீங்கன்னா, செக்ஸ் அப்படீங்கிறத அறிவியல்/மருத்துவ ரீதியா பார்த்தோமுன்னா, உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகப்படியாக வேலை செய்யும், சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான உடற்பயிற்ச்சியாம்!
அப்புறம் இன்னொரு விஷயம். உங்கள்ல எத்தனை பேருக்குத் இது தெரியும்னு எனக்குத் தெரியாது. ஆனா, பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்லயும், தொலைக்காட்சித் தொடர்கள்லயும் ஒரு வித்தியாசமான காட்சியமைப்பு ஒன்னு இருக்கும். அதாவது, ஒரு இளம்பெண்ணும், கொஞ்சம் வயதான ஆணும் உடலுறவில் ஈடுபட்டு, செக்ஸின் உச்சகட்டத்தில் இருக்கும்போது, திடீர்னு அந்த ஆண் மாரடைப்பால் இறந்துபோய்விடுவார்!
இம்மாதிரியான காட்சிகளின் அடிப்படை/மூலமாக சொல்லப்படும் கருத்து என்னன்னா, வயதானவர்கள் செக்ஸ்/உடலுறவில் ஈடுபடும்போது, மாரடைப்பால் அவர்கள் இறக்க வாய்ப்புண்டு என்பதுதான். முக்கியமாக, ஒரு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள், அதன்பின் உடலுறவில் ஈடுபட்டால் அது ஆபத்தில் முடியலாம் என்பதுதான்! இது எவ்வளவு தூரம் உண்மைன்னு யாருக்குமே தெரியாது. காரணம், அதற்க்கான சரியான ஆதாரங்களுடன் கூடிய ஒரு ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே!
உடலுறவின்போது மாரடைப்பு; அறிவியல் பார்வையில்!
ஆனா, அமெரிக்காவின் இருதய அமைப்பின், இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு குறித்த ஒரு சமீபத்திய கருத்தரங்கில் நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை குறித்து செய்திகள், கருத்துகள் வெளியிடப்பட்டது. அக்கருத்தரங்கில், மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், சுமார் 60% பெண்களும், மாரடைப்பு ஏற்பட்ட ஒரு வருடத்துக்குப் பின் செக்ஸில்/உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டனர் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது!<blockquote>
“உடலுறவு/செக்ஸில் ஈடுபடுவது இருதயத்துக்கு பாதுகாப்பானது/நல்லது; மாரடைப்புக்கு பின்னும்” என்கிறார்கள் ஆய்வாளர்கள்!</blockquote><blockquote>
“ஒருவர், உடலுறவின்போது இறப்பதற்க்கான வாய்ப்பு மிக மிக குறைவு; அது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராயிருப்பினும்” என்கிறார் சிக்காகோ பல்கலைக்கழக மருத்துவர் ஸ்டேசி லின்டா (Dr. Stacy Lindau of the University of Chicago)</blockquote><blockquote>
சினிமாவில் காண்பிப்பது போல, உடலுறவின் இறப்பது என்பதற்க்கான வாய்ப்பு, நிஜ வாழ்வில் மிக மிக குறைவு. அதனால், அதைப்பற்றிய கவலை தேவையில்லாதது!!
</blockquote>
“பெரும்பாலான மருத்துவர்களின் கருத்துப்படி, ஒரு இருதய நோயாளி மிதமான உடற்பயிற்ச்சிக்கு தயார் நிலையில் இருக்கிறார் என்றால், அவர் செக்ஸ்/உடலுறவுக்கு தயார் என்றே அர்த்தம்! ஏனென்றால், செக்ஸ்/உடலுறவும்கூட இரு மிதமான உடற்பயிற்ச்சியே”, என்கிறார் மிஸ்ஸூரி பல்கலைக்கழக மருத்துவர் ஜான் ஸ்பெர்டஸ் (Dr. John Spertus of the University of Missouri in Kansas City)
அதெல்லாம் சரி, உடற்பயிற்ச்சியைப் பத்தி வெளிப்படையா/கூச்சப்படாம பேசிடலாம். உடலுறவு/செக்ஸைப் பத்தி வெளிப்படையா பேச முடியுமா? (எத்தனை பேரு பெசுறாங்க நம்ம சமுதாயத்துல?!)
இப்படியொரு கேள்விக்கு “முடியாது” அப்படீன்னு ஒரு பதிலை யோசிக்காம கூட சொல்லிடலாம்! இல்லீங்களா?!
ஆக, பேசமுடியாது/பேச மாட்டாங்க அப்படீங்கிற பட்சத்துல, இம்மாதிரியான சந்தேகங்களும், அதற்க்கான விடையில்லா நிலையும் ஒரு தொடர்கதையாகவே இருக்குமே தவிர, முடிவுக்கு வராது. ஆனா, இங்கே பிரச்சினை அதில்ல! இம்மாதிரியான சந்தேகங்கள் ஒருவரை மனதளவிலும், உடலளவிலும் எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு குறைந்துபோகிறது என்பதை கவனத்தில் கொள்கிறார்கள் மருத்துவர்கள்!
சுமார் 1,760 மிகவும் பாதிக்கப்பட்ட மாரடைப்பு நோயாளிகள் பங்குபெற்ற இந்த ஆய்வில், பாதிக்கும் குறைவானவர்களே உடலுறவில் ஈடுபடுவது குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்களாம். குறிப்பாக, பெண்கள் இம்மாதிரியான சந்தேகங்களை எழுப்ப தயங்குகிறார்களாம்! மருத்துவரே, உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சினை ஒன்றுமில்லை என்று சொல்லாத பட்சத்தில் இருதய நோயாளிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை தவிர்க்கிறார்களாம்!
உங்கள்ல சில பேர் யோசிக்கலாம். செக்ஸ்/உடலுறவில் ஈடுபடலைன்னா, உயிரா போயிடும்? வாழ்க்கையில அனுபவிக்க செக்ஸ் தவிர வேற ஒன்னுமேயில்லையா? அப்படீன்னு…..<blockquote>
“இருதய நோயாளிகளைப் பொருத்தவரை, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அவர்கள் திரும்பப் பெருவதே இங்கு குறிக்கோள். அது, மாரடைப்புக்கான வாய்ப்புகள், ஆபத்துகள் போன்றவற்றை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை கூட்டுவதாலும்தான். செக்ஸ் வாழ்க்கைத்தரமும் சேர்ந்ததே ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம்” அப்படீன்னு சொல்றாரு மருத்துவர் ஸ்பெர்டஸ்!
நன்றி -பத்மஹரி-[You must be registered and logged in to see this link.]

தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
ஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|