ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    +3
    Admin
    meenavijay
    தோழன்
    7 posters

    Page 2 of 2 Previous  1, 2

    Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:50 pm

    என் வயது 21. நான் நல்ல நிறமாக இருப்பேன். என் முகத்தில் உதடுகளுக்கு மேல்ரோம வளர்ச்சி அதிகமிருக்கிறது. பார்ப்பவர்கள் எல்லாம் கிண்டல் செய்கிறார்கள். மஞ்சள் உபயோகித்தும் பலனில்லை. வேறு என்ன தீர்வு? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

    உங்களுக்கு மாதவிலக்குசுழற்சி சரியாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஹார்மோன் கோளாறுகள்இருந்தாலும் இப்படி ரோம வளர்ச்சி இருக்கும். ஒரு வெற்றிலை, ஐந்து மிளகு, மூன்றுபற்கள் பூண்டு சேர்த்து வாரம் ஒரு முறை வெறும் வயிற்றில் காலையில்சாப்பிட்டு வரவும். இது உங்கள் மாத விலக்கு சுழற்சியைம் சரியாக்கும்.ரோம வளர்ச்சியையும் குறைக்கும். சிலருக்குத் திருமணத்துக்கு முன்புவரை இருக்கிற ரோம வளர்ச்சி, திருமணத்துக்குப் பிறகு உடலில் நிகழ்கிற ஹார்மோன் மாறுதல்களால் குறையும். உங்களுக்கும் அப்படி நடக்கலாம். பயத்தம் பருப்புமற்றும் கஸ்தூரி மஞ்சளை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். சாதாரணமஞ்சள் மாதிரி இல்லாமல் மரத் துண்டு மாதிரி இருக்கும்) அரைத்து முகத்தில்தடவி, சிறிதுநேரம் காய விட்டுக் கழுவவும். வாரம் மூன்று முறைகள் இப்படிச்செய்யவும். மீதி நாட்களில் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சம் சாறு கலந்துமுகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.கூடவே திரெடிங் செய்து வரலாம். இவையெல்லாம் ரோம வளர்ச்சியைப் படிப்படியாகக் கட்டுப்படுத்தும். கவலை வேண்டாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:50 pm

    நான் ரொம்பவும் கட்டுப்பாடான குடும்பத்தில் வளர்ந்தவள். சமீபத்தில்தான்எனக்குத் திருமணமானது. என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமானபுத்தகங்களையும், படங்களையும்காட்டி அதிலுள்ளது போல என்னைசம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள்தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள். -எம்.எஃப்., திருச்சி.

    தன் மனைவியைத்திருப்திப்படுத்த முடியுமோ, முடியாதோ என்ற பயத்திலும், தன் ஆண்மையைமனைவிக்கு நிரூபிக்கவும் நினைத்துப் பல ஆண்கள் இப்படிப்பட்ட செயல்களில்ஈடுபடுகிறார்கள். இப்படியெல்லாம் செய்தால்தான் அவர்களுக்கு உறவு சாத்தியம்என்று தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. கணவர் நல்ல மன நிலையில் இருக்கிறபோது இது பற்றி அவரிடம் பக்குவமாகப் பேசுங்கள். இப்படிப்பட்ட விஷயங்கள்இல்லாமலும் அவரால் உங்களுடன் உறவில் நல்லபடியாக ஈடுபட முடியும் என்றுநம்பிக்கை கொடுங்கள். தேவைப்பட்டால் அவரை கவுன்சலிங் அழைத்துச் செல்லலாம்.அவர்கள் உங்கள் கணவரின் அனாவசிய குழப்பங்களையும், பயத்தையும் போக்கி, சகஜமாகமாற்றுவார்கள். பொறுமையாகத்தான் இப்பிரச்சினையைக் கையாளவேண்டும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:51 pm

    எனக்குத் திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை தங்கவில்லை.மாதவிலக்கு நாட்கள் தவிர மற்ற எல்லா நாட்களும் உறவு கொண்டும் கருதங்குவதில்லை. உறவு முடிந்ததும், விந்தணுக்கள்உடனே வெளியேறி விடுகின்றன. அக்கம்பக்கத்தில் எல்லாரும் துக்கம் விசாரிக்க ஆரம் பித்துவிட்டார்கள். என்னகோளாறாக இருக்கும்? என்னசிகிச்சை வேண்டும்? -சி. மங்கையர்க்கரசி, ஆத்தூர்.

    பொதுவாகத் திருமணமாகி, ஒன்றிரண்டு வருடங்கள் வரை குழந்தை இல்லாமல் இருப்பது பெரிய விஷயமில்லை. அதன்பிறகும் கரு தங்கா விட்டால்தான் மருத்துவப் பரிசோதனை அவசியம். அதற்குள்கிளம்புகிற அக்கம் பக்கத்தாரது விமர்சனங்களைப் பொருட்படுத்தாதீர்கள்.விஞ்ஞான ரிதியாகப் பார்த்தால் விந்தணு என்பது வெளியேறுவதுஇயற்கை. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆணின் விந்தணு. உறவின் போதுசிலதுதான் கருக் குழாய் வழியே கருப்பைக்குப் போகும். சிலது போனாலும், போகாவிட்டாலும் வெளியேறவே செய்யும். எனவே இதற்கும், நீங்கள் கருத்தரிக்காததற்கும்தொடர்பில்லை. அரைகுறை விஷயங்களைக் கேள்விப்பட்டு அனாவசியமாகக்குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். கருத்தரிக்க தினசரி உறவு என்பதும்அனாவசியம். மாதத்தின் எல்லா நாட்களிலும் பெண்ணின் உடலில் கருமுட்டைஉருவாவதில்லை. மாதவிலக்கானதிலிருந்து முதல் பத்து நாட்களைத் தவிர்த்து, அடுத்தபத்து நாட்களில் உறவு கொள்ளலாம். அதற்கடுத்த பத்து நாட்களையும்தவிர்க்கலாம். இடைப்பட்ட நாட்கள்தான் கருத்தரிக்க உகந்தவை. தினசரிஉறவு கொண்டால்தான், அதுவும் பல முறைகள் உறவில் ஈடுபட்டால்தான் கருத்தரிக்கும்போல என்பது பலரது தவறான அபிப்ராயம். நீங்கள் இன்னும் ஆறு மாதங்கள்காத்திருந்து பார்க்கலாம். அதன் பிறகும் கரு தங்கா விட்டால் மருத்துவரைக்கலந்தாலோசிக்கவும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:51 pm

    என் வயது 26. இரண்டு வருடங்களுக்கு முன்புதான் குழந்தை பிறந்தது.சுகப்பிரசவம். அதன் பிறகு என் கணவர் என்னை நெருங்குவதே இல்லை. உறவின் போது பிறப்புறுப்பு ரொம்பவும் தளர்ந்து விட்டதாகக் காரணம் சொல்கிறார்.எனக்கு மட்டும்தான் இப்படியா? இதைசரிசெய்ய வாய்ப்பேஇல்லையா? - எல்.டி., சென்னை.

    பெண்ணின் உடம்புஎன்பது கர்ப்பம் தரிப்பதற்கும், குழந்தை பெறுவதற்கும் முன்பிருந்த அதேநிலையில் காலத்துக்கும் இருக்காது. பெண்பித்தர்கள்தான் இப்படியெல்லாம் காரணம்சொல்லி மனைவியை விட்டு விலகியிருப்பார்கள். தன் பெண் பித்தை மறைக்க இப்படிமனைவி மேல் குறை சொல்கிற கணவர்களில் உங்களவரும் ஒருவராக இருக்கிறார்.அந்தக் காலத்தில் எல்லாம் பெரும் பாலும் சுகப்பிரசவம்தான். எல்லாப்பெண்களுக்கும் இந்தத் தளர்வு இருக்கும். ஆனால் இதையெல்லாம் காரணம் காட்டிமனைவியை விட்டு, விலகியதாக நாம் எந்த ஆணைப் பற்றியும் கேள்விப் பட்டதில்லை.இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். பிரசவித்த பெண்கள் எல்லாரும் சந்திக்கிறபிரச்சினைதான் இது. உங்களுக்குப் பிரசவம் பார்த்த மருத்துவரை அணுகுங்கள்.அவர் உங்களுக்கான விவரங்களை விளக்கமாகச் சொல்வார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:52 pm

    என் மனைவிக்கு பிரபல டாக்டரிடம் சிசேரியன் செய்த பிறகு, காப்பர் டி போடப்பட்டது. அதுபோட்டு ஒரே மாதத்தில் உள்ளே போய் விட்டது. அது கருப்பையின் ஒரு ஓரத்தில் இருப்பதாகச் சொல்லி மறுமுறை குழந்தை பிறக்கும் போது எடுத்துவிடலாம் என்றார்கள். இரண்டு ஆண்டுகள் ஆகிறது. வேறு ஏதேனும் பாதிப்பு உண்டா? இதனால் கருத்தரிக்க ஏதேனும் கால தாமதம் ஆகுமா? -எஸ். கண்ணன், குலமங்கலம்.

    முதல் வேலையாகஉங்கள் மனைவிக்கு ஸ்கேன் செய்யுங்கள். அதன் மூலம்தான் அது எங்கே இருக்கிறதுஎன சரியாகத் தெரிந்து கொள்ளமுடியும். வெறும் கருவிகளைக் கொண்டே எடுத்துவிட முடியுமா அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். என்ன ஆனாலும் இப்படி காப்பர் டி உள்ளுக்குள் புதைந்திருக்கக்கூடாது. அது எந்த நிலையில், எந்த இடத்தில் இருக்கிறது என்பதைப்பொறுத்துதான்உங்கள் மனைவி கருத்தரித்து, சிசேரியன் செய்கிற போது எடுக்கமுடியுமாஎன்பதையும் முடிவுசெய்ய முடியும். காப்பர் டி ஏடாகூடமான இடத்தில்இருக்கிற பட்சத்தில்உங்கள் மனைவி கருத்தரிப்பதில் பிரச்சினைகள் வரலாம்.அப்படியே கருத்தரித்தாலும், காப்பர்டி இருக்கிற நிலையின் காரண மாக, குழந்தைஉருவாகிற வடிவமே மாறிப் போகக் கூடும். குழந்தை வளர்ந்து சுழலும் போதுஅதைக் குத்தலாம். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளதால், உடனடியாகஸ்கேன் செய்து அதை அகற்றி விடுவது நல்லது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:52 pm

    எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான்.திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கைகிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா? -விஜயலட்சுமி, நாகர்கோயில்.

    நிறைய ஆண்களிடம் காணப்படுகிறபிரச்சினைதான் இது. உடலளவில் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனத்தளவில்தன் மனைவியைத் தன்னால் திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின்விளைவாகவே இப்படி இருப்பார்கள். இவர்களுக்குத் தேவை கவுன்சலிங். தாழ்வுமனப்பான்மையை விரட்ட, முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட்அல்ல) அழைத்துச் செல்லுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை எனத்தெரிந்து, அதற்கேற்பகவுன்சலிங் கொடுப்பார்கள். பிறகு மருத்துவ சிகிச்சைதேவைப்பட்டால், அதற்கான மருத்துவரையும், மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள். இது முதல் கட்டசிகிச்சை. அடுத்துஉங்கள் கணவருக்கு விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள்எப்படியிருக்கின்றன எனத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பசிகிச்சை அளித்தால் கருத்தரிக்க முடியும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:53 pm

    என் வயது 22. திருமணமாகி 13 மாதங்கள் ஆகின்றன. குழந்தை பிறந்துநான்கு மாதங்கள் ஆகின்றன. ஒரு பக்க மார்பில் குழந்தை சரியாகப் பால்குடிக்காததால், அந்தப் பக்க மார்பகம் சிறியதாகி விட்டது. தாய்ப்பால் சுரப்பும்எனக்குக் குறைவாக இருக்கிறது. சிறியதாகி விட்ட மார்பகத்தை சரி செய்யவும், தாய்ப்பால் அதிகம் சுரக்கவும் ஆலோசனைகள் சொல்வீர்களா? -ஏ. சாந்தி, ஊர் வெளியிட விரும்பவில்லை.

    நீங்கள் அசைவம்சாப்பிடுகிறவராக இருந்தால் பால் சுறா அதிகம் சேர்த்துக் கொள்ளவும். வாரம்ஒரு முறை மதியத்தில் ஆட்டுக் கறியும், மீனும்சாப்பிடவும். சைவம் சாப்பிடுகிறவராக இருந்தால், பிஞ்சுக்காய்கறிகள் நிறைய சேர்த்துக் கொள்ளவும்.கறிவேப்பிலை பவுடர் கால் டீஸ்ன் தினமும் சாதத்தில் சேர்த்துப் பிசைந்துசாப்பிடவும். தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடவும். மூன்று டம்ளர் பால் குடிக்கவும்.மார்பகங்களின் அளவு பெரிதாகவோ, சிறிதாகவோ இருப்பது என்பது இயற்கை.அதை மருந்து, மாத்திரைகளால் நீங்கள் எது வும் செய்ய முடியாது. தாய்ப்பால்ஊட்டும் காலங்களில் இப்படி இருப்பவை, பிறகுஒரு கட்டத்துக்குப் பிறகு தாய்ப் பாலை நிறுத்திய பிறகு சம அளவுக்குவரலாம். கவலை வேண்டாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:53 pm

    என்வயது 36.காப்பர்டி போட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றன. சமீபத்தில் வேறு ஒருபிரச்சினைக்காக மருத்துவரை சந்தித்த போது, காப்பர் டி உள்ளேபுதைந்திருக்கிற மாதிரித் தெரிவதாகச் சொன்னார். அதை அறுவைசெய்துதான் எடுக்க முடியுமா? வேறு வழி உண்டா? இது ஆபத்தானதா? எத்தனை வருடங்களுக்கொருமுறை காப்பர்டியை மாற்ற வேண்டும்? -சி. ஈஸ்வாp, அந்தியூர்.

    காப்பர்டியில்நிறைய வகைகள் உள்ளன. தரத்தைப் பொறுத்து, அவற்றை வருடத் திற்கொரு முறையோ அல்லதுஇரண்டு, மூன்று வருடங்களுக்கொரு முறையோ மாற்றிக்கொள்ளலாம். காப்பர் டி போட்டுக் கொண்ட சில பெண்களுக்கு இரத்தப் போக்கு திடீரென அதிகமிருக்கும். அப்படியிருந்தால், அதை எடுத்து விட்டு, சில நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடி போடுவார்கள். நீங்கள் பல வருடங்களாக அதைக் கண்டுகொள்ளாமலேயே விட்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது.ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது இருக்கும் இடம் சரியாகத் தெரியும். மேலோட்டமாக இருந்தால், அறுவை சிகிச்சையின்றி, அதை எடுத்து விடுவார்கள். ரொம்பவும் ஆழமாக இருந்தால் அறுவை தேவைப் படலாம். அதை உங்களைப் பரிசோதித்தமருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவரிடம் தாமதிக்காமல் ஆலோசனை பெறுங்கள். இதை எடுத்து விட்டு, மூன்று மாதங்கள் இடைவெளி தரவும். பிறகு உங்கள் உடல்நிலையைப் பொறுத்து மீண்டும் வேறு பொருத்திக்கொள்ளலாம். எல்லாவற்றையும் விட, உங்கள் கணவரை ஆணுறை உபயோகிக்கச் சொல்வதுயாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாத எளிய கருத்தடை முறை.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:53 pm

    என் கணவருக்கு வயது 40. அவருக்கு சர்க்கரை நோய்இருக்கிறது. உறவின் போது முன்பிருந்த ஈடுபாடு அவரிடம் இல்லை. சர்க்கரை நோய் என்பது உறவின் மூலம் பரவவாய்ப்புண்டா? -கே. நீலா, சென்னை.

    உறவின் மூலம்சர்க்கரை பரவாது. பயம் வேண்டாம். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்குஉறவில் ஈடுபாடு குறைவது சகஜமே. மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு இரண்டும்தான் சர்க்கரை நோய்க்கான சிகிச்சைகள். நீரிழிவுநோய்க்கு நிரந்தரத்தீர்வு கிடையாது. நீரிழிவு நோயாளிகள் தினம் இரண்டு முதல் ஒன்பது கிலோமீட்டர் வரை நடக்க வேண்டும். கலோரி குறைவான உணவுகளையே சாப்பிட வேண்டும்.தினம் ஒரு வேளை கோதுமை உணவு அவசியம். கீரையும், காய்கறிகளும் தினசரிஉணவில் கணிசமாக இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும் போது வெட்கப்படாமல் சர்க்கரை இல்லாத பானங்களையே கேட்டுக் குடிக்கவும். செயற்கை இனிப்புகூடவேண்டாம். இவை தவிர பிரத்யேகமாக மருந்துகளே தேவையில்லை. சர்க்கரையைக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வென்றே சில யோகாசனங்கள் உள்ளன. அவற்றையும்தினம் செய்யலாம். இப்படியெல்லாம் மனம் மற்றும் உணவுக் கட்டுப்பாட்டைக்கடைப்பிடித்தால், செக்ஸ் உறவும் இயல்பாக இருக்கும். நூறு வயதுவரை ஆரோக்கியமாகவும் வாழலாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:54 pm

    நான் ஒரு கல்லூரி மாணவி. எனக்குப் பின்பக்க சதைகள் மிகவும் பெருத்துப் போய்அசிங்கமாகக் காணப்படுகிறது. பலரும் கிண்டல் செய்கிறார்கள். சாப்பாட்டைக் கூடக் குறைத்து விட்டேன். உடல் இளைக்கும் மாத்திரைகள் சாப்பிட்டும்பின்பக்கச் சதைகள் குறைவதாகத் தெரியவில்லை. இம்மாதிரி பின்பக்க சதைகள் அதிகமிருந்தால், செக்ஸ் உணர்ச்சிகள் அதிகமிருக்கும்என என் தோழிகள் கிண்டல் செய்கிறார்கள். என்ன செய்வது?

    உடல் இளைக்கும்மருந்துகள், சாப்பாட்டை நிறுத்துதல் போன்றவையெல்லாம் ஆபத்தில்தான்முடியுமே தவிர, நீங்கள் எதிர்பார்க்கிற பலனைத் தராது. உடலின் எந்தஇடத்துச் சதையையும் குறைக்க உடற்பயிற்சி ஒன்று தான் சரியான வழி. நீங்கள்இடுப்பு, தொடைகள், கால்கள்போன்றவற்றுடன் தொடர்புடைய உடற்பயிற்சிகளைச்செய்து வர வேண்டும். முடிந்தால் ஏதேனும் ஜிம்மில் சேர்ந்துபயிற்சிகளை ஆரம்பியுங்கள். பொதுவாகவே இந்தியப் பெண்களுக்கு இடுப்பெலும்புகொஞ்சம் அகலம். உங்களுக்கு ஒருவேளை பிறவியிலேயே அப்படித்தான் என்றால்சரியாக்குவது சிரமம். திடீரென உடல் பெருத்து அப்படி ஆகியிருக்கிறதுஎன்றால் உடற்பயிற்சி தீர்வளிக்கும். பின்பக்க சதை பெருத்திருப்பதற்கும், செக்ஸ்உணர்ச்சியின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.தோழிகளின் பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள். பொறுமை இருந்தால்கட்டாயம் பலன் காண்பீர்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by தோழன் Sat 20 Nov 2010, 11:55 pm

    என் வயது 18.வயதுக்கு வந்து நான்காண்டுகள் ஆகிறது.வெள்ளைப்போக்கு அதிகமிருக்கிறது. தவிர, டி.வி,சினிமாக்களில் நெருக்கமானஉடலுறவுக் காட்சிகளைப் பார்க்கும் போது அந்தரங்க உறுப்பில் கசிவுஇருக்கிறது. இந்த மாற்றங்கள் எனக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.தீர்வு உண்டா?

    வெள்ளைப் படுதல் என்பது சாதாரணமானஒரு விஷயம்தான். அது உங்கள் உள்ளாடையை நனைக்கும் அளவுக்கோ, அரிப்புடனோ, எரிச்சலுடனோஇருந்தால், தொற்றுக் கிருமியின் தாக்குதல் என நினைத்துக் கொள்ளலாம். அப்போது மருத்துவப்பரிசோதனை அவசியம். பருவ வயதில் உணர்ச்சிகளின் உந்துதால் செக்ஸ் தொடர்பானகாட்சிகளைப் பார்த்தாலோ, படித்தாலோஅந்தரங்க உறுப்பில் கசிவு இருக்கும். அதுவும் சகஜமான ஒன்றுதான்.நீங்கள் பயப்படுகிற அளவுக்கு அது நோயோ, பிரச்சினையோஇல்லை. இயல்பாக இருங்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by meenavijay Sun 20 Feb 2011, 12:14 am

    I am 26 year old .I have PCO ..how to cure the PCO problem ..?

    meenavijay

    Posts : 4
    Points : 5
    Reputation : 1
    Join date : 19/02/2011

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by Admin Sun 20 Feb 2011, 4:47 pm

    my suggestions for u..

    tryanthyaadhi kasaayam 15 ml medicine with 45 ml water morning and night before food

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by meenavijay Sun 20 Feb 2011, 6:06 pm

    மிக்க நன்றி ..

    meenavijay

    Posts : 4
    Points : 5
    Reputation : 1
    Join date : 19/02/2011

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by மலை Sat 03 Aug 2013, 9:19 pm

    -நன்றி-நன்றி-நன்றி-நன்றி-நன்றி-நன்றி-நன்றிcheers cheers cheers cheers cheers 

    மலை

    Posts : 8
    Points : 13
    Reputation : 3
    Join date : 10/01/2012

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by TAMILARASAN Wed 14 May 2014, 11:31 am

    madam, enaku age 22, ennudaya partner'ku 20,engaluku marriage agavillai, nangal marriage'ku munbagave udaluravu kondom, 1 murai mattum than,20 days irukum. so idhanal , aval pregnant avadharku chance iruka, adhai identify panna enna enna valigal irukirathu, and appadi pregnant'nu conform aidichina adhai thavirka enna seiya vendum, please help pannunga madam.ippadiku tamilarasan (namakkal)

    TAMILARASAN

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 14/05/2014

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Bleeding

    Post by kayal Thu 09 Jun 2016, 3:10 pm

    vanakkam madam enaku age 25.kalyanam aagi 1 yr aaguthu..enaku ithu varai suya inbam pazhakkam illai..sports um intrest illai..but enaku ithu varai koodal appo bleeding ye aagala...enna kaaranam.en husbend itha patri kettathum illai but enaku etho problem ah nu thonu kannith thirai pathi thelivaga kooravum madam pls...

    kayal

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 09/06/2016

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

    திருமணமான ஆஆன்டி என்னை உறவுக்கு அழைக்கிறார். . எனக்கும் ஆசையாக இருக்கிறது. . எனது பருவம் 23.. இதுவரை யாரிடமும் உறவு கொண்டதில்லை.. இப்போது அவளை அனுபவிப்பதா வேண்டாமா.. குழப்பமாய் இருக்கிறது. . பதில் சொல்லுங்க ப்ளீஸ். .

    srikanth

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 25/06/2016

    Back to top Go down

    Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு - Page 2 Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 2 of 2 Previous  1, 2

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum