ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    வாதரோகசிகிச்சை

    Go down

    வாதரோகசிகிச்சை Empty வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:16 pm



    கோஷ்டகதவாதசிகிச்சை :- திரிகடுகு,கருப்புப்பு, சீரகம்,கருங்காய்ப்பிஞ்சு, உப்பு, வெங்காரம், சைந்தவலவணம்,பிடாலவணம், நன்னாரி, முள்ளங்கத்திரி, சுக்கு, வெட்பாலைவிரை, சித்திரமூலம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து தயிர்நீர், புளித்தநீர்வெந்நீர்,முதலிய அனுபானங்களில் மேற்சூரணத்தை கலந்து கொடுத்தால் கோஷ்டவாயுநிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.

    ஜீரணசக்திஉண்டுபண்ணும்படியான ரசங்களினாலாவது அல்லதுஇதர ஒளடங்களினாலாவதுமலமூத்திரங்கள் தாராளமாக வரும்படி செய்து பால் குடித்து வர கோஷ்டவாதம்நிவர்த்தியாகும்.

    ஆமாசயவாதகதசிகிச்சை :-ஆமாசவாய்யு நிவர்த்திக்க, பசி யுண்டாகவும், சீரணசக்தி யுண்டாகவும்,ஒளடதங்களை கொடுத்தாவது, அல்லது வாந்தியாகவும் பேதியாகவும் ஒளடதங்களைகொடுத்து பச்சைப்பயறு, நவதானியம், பழைய அரிசி சாதம் இவைகளை பத்தியமிடவேண்டியது.

    பக்குவாதசய வாத சிகிச்சை :-பக்குவாசய வாயுவைப் போக்க அக்கினிதீபனம் உண்டாகும் படியானசிகிச்சையாகிலும் அல்லது உலர்ந்த வாயு நிவர்த்திக்கச் சொல்லியஉபசாரங்களையாவது செய்தல் வேண்டும்.
    வயிற்றில் இருக்கும் வாயுவு நிவர்த்திக்க தீபனகரமான க்ஷ¡ரங்கள் சூரணங்கள் இவைகள் கொடுக்கவேண்டியது.
    குஷிகத வாயு நிவர்த்திக்க சுக்கு, வெட்பாலைவிரை, சித்திர மூலம் இவைகளின்சூரணத்தை வெந்நீரில் சாப்பிடவேண்டியது.பக்குவாசய வாயுவை போக்க பேதியாகஎண்ணெய்களை சாப்பிட வேண்டியது. லவனாதி சூரணத்தைப் புசிக்க வெண்டியது.

    சர்வாங்கவாத சிகிச்சை :- சர்வாங்கவாதம் அல்லது ஏகாங்க வாதம் இதை நிவர்த்தி செய்ய ஆமணக்கெண்ணெயை அப்பியங்கனம் செய்து வெந்நீரில் குளித்தல் நன்று.

    குதஸ்திவார சிகிச்சை :- குதவாததோஷம் நிவத்திக்க குதாவர்த்தத்தில் சொல்லிய சிகிச்சைகளைச் செய்யவேண்டியது.

    வஸ்தி, குக்ஷ¢, குதம் இவ்விடத்தில் பிரகோபித்த வாய்வு, சமனமாகும்படிக்குதசமூல கியாழத்திலாவது அல்லது கொடி மாதுளம்பழ ரசத்திலாவது எண்ணெயைப்போட்டுசாப்பிட வேண்டியது.

    சோத்திராதி கதவாத சிகிச்சை :- செவி முதலிய இந்திரியத்தானத்தில் பிரகோபித்தவாதமானது நிவர்த்திக்க வாதநாச உபசாரங்கள் செய்து எண்ணை யிட்டுக்கொள்ளல்அப்பியங்கனம் பற்று ஒற்றடம், பூச்சு, புகை முதலியன செய்யவேண்டியது.

    ஜீரும்பவாத சிகிச்சை :-சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், இந்துப்பு இவைகளை சமனளவு எடுத்துசூரணித்து ஒன்றாய்க் கலந்து கொடுத்தால் அந்தக்ஷணமே ஜீரும்பவாதம் நாசமாகும்.

    பிரலாபகவாத சிகிச்சை :-கிரந்திதகரம், பற்பாடகம்,கொன்னை, கோரைக்கிழங்கு, கடுகுரோகணி, வெட்டிவேர்,அமுக் கிறாக்கிழங்கு, துளசி, திரா¨க்ஷ, சந்தனம், தசமூலம், காக்கட்டான்இவைகள் சமஎடை கியாழம் வைத்துக் குடித்தால் பிரலாபகவாதம் சீக்கிரம்நீங்கும்.

    ரசாஞான சிகிச்சை :-உருசியின்மை முதலியவற்றுடன் நாக்கு மரத்திருந்தால் இந்துப்பு, மிளகு,திப்பிலி, சுக்கு, பலாசு விதை இவைகளை சூரணித்து நாக்கில் தேய்த்தாலும்அல்லது நெல்லிக்காய் புளிப்பு இது அகப்படவிட்டால் சுக்கான்கீரைகொடுத்தாலும் அல்லது சீமை நிலவேம்பு, கடுகுரோகணி, வெட்பாலைவிரை,வெட்பாலைப்பட்டை, பேயகத்தி, முருக்கன்விரை, கடுகு, கருஞ்சீரகம், திப்பிலி,மோடி, சித்திரமூலம், சுக்கு, மிளகு இவைகளைச் சூர
    ணித்து இஞ்சி ரசத்தினால் கல்கஞ்செய்து அடிக்கடி நாக்கில் தடவிக்கொண்டுவந்தாலும் நாக்கின் தடிப்பை எடுத்து லேசாக்கி ருசியின்மை முதலியவைகளைநிவர்த்திக்கச் செய்யும்.

    துவக்சூனியதசி சிகிச்சை :-சுப்தவாதம் நிவர்த்திக்க அடிக்கடி தேகத்திலிருந்து குருதிவாங்கல்சிகிச்சையையும் இந்துப்பு, கருதூபம் இவைகளை தயிலத்துடன் கலந்து தேகத்தின்மீது லேபனஞ் செய்தல் முதலியவைகளையும் செய்யவேண்டியது.

    சப்ததாதுகதவாயு சிகிச்சை :-சர்மத்தின் வாதகததோஷம் நிவர்திக்க சிநேகபானம், அப்பியங்கனம், வியர்வைவாங்கல் முதலிய கிரியைகளைச் செய்யவேண்டியது. ரத்தகதவாயுதோஷம் நிவர்த்திக்கசீதபேதனம், விரேசனம், இரத்தம் வாங்கல், முதலிய சிகிச்சைகள் செய்யவேண்டியது.

    ஸ்நாயுகத சிகிச்சை :-எலும்புவாயுதோஷம் நிவர்த்திக்க வியர்வை வாங்கல், உபநாஹகிரியை, சூடுபோடல்,கட்டுகட்டல்,மர்த்தளம்செய்தல் முதலிய கிரியைகளை செய்தல் வேண்டும்.
    (ஸ்நாயு-எலும்பு).

    சந்நிகவாத சிகிச்சை :- ஆற்றுத்தும்மட்டிவேர், திப்பிலி இவைகளைச் சூரணித்து சமன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் சந்நிகவாதம் நீங்கும்.

    பித்தகபாசிரித பிராணாதித சிகிச்சை :-பித்தத்துடன் கலந்த வாயு நிவர்த்தியாக வாதபித்தஹரசிகிச்சைகள்செய்யவேண்டியது. அந்த வாயு கபத்துடன் மிசிரமானால் வாதசிலேஷ்மஹரசிகிச்சைகளைச் செய்யவேண்டியது.

    ஆகேஷபக வாயு சிகிச்சை:- சிற்றாமுட்டிவேர், தசமூலம், யவதானியம், இலந்தை, கொள்ளு இவைகளதுகியாழம், பசும்பால் இவைகள் வகைக்கு 8 பாகம், எண்ணெய் 1 பாகம், அதிமதூரம்இந்துப்பு, அகில், குங்கிலியம், புஷ்கரமூலம், தேவதாரு,மஞ்சிஷ்டி தாமரைக்கிழங்கு, கோஷ்டம், இலவங்கப்பத்திரி, கெந்தி, சன்னமானநன்னாரிவேர், வசம்பு, தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கிறாங்கிழங்கு,சோம்பு, வெள்ளைச்சாரணை இவைகள் வகைக்கு 1 பங்கு தோலா வீதம் எடுத்து பதினாலுபங்கு நீர் விட்டு, எட்டிலொன்றாக
    நீர்விட்டு முன் கியாழத்துடன் சேர்த்து தயிலம் காய்ச்சி வடித்து முறைப்படிஅருந்திவர ஆகேஷபகவாயுகள் வாத வியாதிகள் நீங்கும். விக்கல், சுவாசம்அதிமந்தம், குன்மம், இருமல் முதலியன நாசப்படுத்தும். மேற்படி தயிலத்தைஆறுமாதங்கள் தேகத்தில் தடவிக்கொண்டால் அண்டவிருத்தி நாசமாகும்.கர்ப்பமாதர்களுக்கு அவர்களது பலாபலத்தை அறிந்து இதை பிரயோகித்தால்பிரசூதிரோகங்கள் நீங்கும். மலடிமாதர்கள் இதைச்
    சாப்பிட்டால் மலடித்தனம் நீங்கி கர்ப்பமுண்டாகும். க்ஷ£ணதாது வுடையபுருஷர்களுக்குக் கொடுத்தால் தாதுவிருத்தியுண்டாகும். வாயுவினால்க்ஷ£ணமானவனுக்கும், மர்மஸ்தானத்தில் அடுயுண்டவ
    னுக்கும் அதிக அலுப்பும் ஆயாசமுமடைந்த மனிதனுக்கும், அபி காதம்அடைந்தவனுக்கும் எலும்பு முதலியது உடைந்தவனுக்கும் இதை கொடுக்கலாம்.அரசர்கள், மெல்லிய தேகமுடையவர்கள் சுகுமார முடையவர்கள்,சுமாயிருப்போருங்கூட இதை உட் கொண்டால் மிகவும் சுகமாயிருப்பார்கள்.


    Last edited by Admin on Sun 03 Oct 2010, 6:46 pm; edited 1 time in total

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:17 pm

    மஹாராஸ்னாதி கியாழம் :-சித்தரத்தை, ஆமணக்குவேர், சீந்தில்கொடி, வசம்பு, பச்சை, அழவணை, பேயாவரை,பற்பாடகள், கோரைக்கிழங்கு, கண்டுபாரங்கி, ஓமம், குராசானி ஓமம், சுக்கு,தேவதாறு, வாய்விளங்கம், கடுக்காய்ப்பூ, சிற்றாமுட்டி வேர்,பெருங்குரும்பை, கடுகுரோகணி, மஞ்சிஷ்டி, வெள்ளை அதிவிடயம், கரும்அதிவிடயம், கிச்சிலிக்கிழங்கு, திரிபலை, திப்பிலி,யசக்ஷ¡ரம், சிகப்புசந்தனம், கொண்ணைசதை, ஜாதிக்காய், வெட் பாலைப்பட்டை, தேள்கொடுக்குவேர்,தசமூலங்கள் இவைகளை சம எடையாக நறுக்கி பதினாறுபங்கு நீர்விட்டுஎட்டிலொன்றாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் ஏகாங்கவாதம், சர்வாங்கவாதம்,சுவாச காசங்கள், வியர்வை, சைத்தியம், நமை, சூலை, களரோகம், தேக
    மெல்லாம் குத்தல், உதரல், கம்பவாதம், கல்லிவாதம், ஆனைக்கால், ஆமவாதம்,கர்ப்பிணிரோகங்கள், சுப்திவாதம், ஜிம்மதம்பம், அபதானகம், குத்தல்வலி,வீக்கம், திமிர்வாதம், குப்ஜவாதம், அபதந்திரவாதம், அர்ஜிவாதம், குதவாதம்,குடவாதம், அநுக்கிரக வாதம், பாதசூலை, வாதசிலேஷ்மம் வியாதிகள் முதலியனயாவும் நாசமாகும்.

    மஹாபில்வாதி கியாழம் :-சிற்றாமுட்டிவேர், சுக்கு இவை களின் கியாழத்தில் திப்பிலி சூரணம்போட்டுஇரண்டு மூன்று நாள் சாப்பிட்டால் சீதவாதம், கம்பவாதம், தாகம் இவைகள்நீங்கும்.

    சர்வாங்கவாதத்திற்கு மாஷாதி கியாழம்:-உளுந்து, பூனைக்காஞ்சொரி, ஆமணக்குவேர், சிற்றாமுட்டிவேர் இவைகள் வகைக்குஒரு தோலா வீதம் சதைத்து அத்துடன் சுட்ட பெருங்காயம்-7 குன்றிஎடைஇந்துப்பு-7 குன்றிஎடை, சீரகம் 28 குன்றிஎடைப்போட்டு கியாழம் வைத்துஇருவேளையாக்கி குடித்தால் பக்ஷகாத
    வாதம் நாசமாகும்.

    கபிகச்வாதி கியாழம் :-பூனைக்காஞ்சொரி விரை, சிற்றாமுட்டி வேர், ஆமணக்குவேர், உளுந்து, சுக்குஇவைகள் சமஎடை கியாழம் போட்டு அத்துடன் இந்துப்பு கலந்து மூக்கில் நசியம்செய்தால் பக்ஷ¡காதம், சிரோரோகம் சந்நிவாதம் முதலிய வாதங்கள் நீங்கும்.

    வாதத்திற்கு ராஸ்னாதி கியாழம் :-சிற்றரத்தை, சீந்தில்கொடி சரக்கொன்றைப் புளி, தேவதாரு, சிறிய நெரிஞ்சில்,ஆமணக்கு வேர், வெள்ளைச்சாரணை இவைகள் சமஎடை கியாழம் வைத்து அதில் சுக்குசூரணத்தைப் போட்டு சாப்பிட்டால், தொடைகள்,முழங்கால், முதுகுதண்டுஎலும்புக்கு கீழ்பாகம், பக்கங்கள் இவைக ளிடத்தில் இருக்கும் குத்தல், நோய்இதுகள் நீங்கும்.

    ஸ்வச்சந்த பைரவரசம் :- சுத்திசெய்தபாதரசம், லோஹபஸ் பம், சுவர்ணமாக்ஷ¢கபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, தாளகம்,கடுக் காய்பிஞ்சி, ஆமணக்குவிரை, நொச்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, பொரித்தவெங்காரம், சுத்திசெய்த வசநாபி, இந்த பதின்மூன்று தினுசுகள் சம எடையாகநிறுத்திகொண்டு நொச்சியிலை சாற்றினால்
    ஒரு நாள் அரைத்த பிறகு சிவகரந்தை யிலைச்சாற்றினால் ஒரு நாள் அரைத்துமான்சிமிழியில் வைத்துக்கொள்ளவும். இதில் குன்றி எடைவீதம், சிற்றரத்தை,சீந்தில்கொடி, தேவதாரு, சுக்கு, ஆமணக்
    குவேர் இவைகளை கியாழம் விட்டு அதில் குங்கிலிய பற்பம் போட்டு இந்தஅனுபானத்தில் மருந்தை கூட்டிச் சாப்பிட்டு வந்தால் வாதரோகங்கள் யாவும்நீங்கும்.

    சமீரபன்னக ரசம்:- அப்பிரக பற்பம் கெந்தி, வசநாபி, சுக்கு மிளகு, திப்பிலி, பாதரசம்,வெண்காரம் இவைகள் சமஎடையாக சுத்திச்ய்து கல்வத்திலிட்டு கரிசாலைசாற்றினால் அரைத்து வெய்யிலில் உலர்த்தவும். இப்படி 7 முறை செய்துஎடுக்கவும். இந்த மருந்தில் இரண்டு மூன்று குன்றி எடை பிரமாணம் இஞ்சிசுரசத்திலாவது அல்லது கற்கண்டுடனாவது கொடுத்தல் பிரபலமான வாதரோகங்கள் அந்தக்ஷணமே நீங்கும்.

    வாதரக்ஷ¡ச ரசம் :-இரச பஸ்பம், கெந்தி, காந்த பஸ்பம் அப்பிரகபஸ்பம், தாம்பிரபஸ்பம், இவைகளைசமஎடையாக நிறுத்திக்கொண்டு கல்வத்திலிட்டு அதை வெள்ளைச்சாரணை, சீந்தில்கொடி, சித்திரமூலம், துளசி இவைகளின் சுரசத்திலும், திரிகடுகுகியாழத்திலும், தனித்தனி மூன்று நாள் அரைத்து வில்லை செய்துலர்த்தி
    அகலிலடக்கி சீலைமண் வலுவாகச் செய்து நன்குலர்த்தி இலகு புட மாக விட்டுஆறிய பிறகு மருந்தைப் பொடித்து வைத்துக்கொள்க. வாதரத்தம், காந்திபங்கம்,ஆமவாதம், தனுர்வாதம், வேதனாவாதம் வாதசூலை, உன்மாதம் இவைகளை நாசமாக்கும்.இதை அனுபான பேதங்களால் கொடுத்தால் 84 வாதங்களையும் குணமாக்கும்.

    வாதாரி ரசம் :-பாதரசம் 1 பாகம், கெந்தி2 பாகம், திரிபலை 3 பாகம், சித்திரமூலம் 4 பாகம்,குங்கிலியம் 5 பாகம், இவைகள் யாவையும் கல்வத்திலிட்டு இரண்டு ஜாமம்அரைத்து பிறகு ஆமணக்கெண்ணெய் யால் அரைத்து வேளைக்கு 1, 2 வராகனெடை வீதம்தினம் ஒரு வேளை காலையில் சாப்பிட்டு பிறகு சுக்கு ஆமணக்குவேர் இவை கள்கியாழத்தை அருந்த பேதியாகும். பேதி அதிகமானால் மருந்தின் அளவை குறைத்துக்கொள்க. உஸ்ணமான போஜனம் செய்து காற்றில்லாத காற்றில்லாத இடத்தில் வசித்துக்கொண்டு புணர்ச்சியற்று ஒரு மாத காலம் சாப்பிட்டால் சகல வாதங்கள்நீங்கிவிடும்.

    சமீரகஜ கேசரீ ரசம் :-சுத்திசெய்த புதிய அபினி, நாவல் பட்டை குடிநீரில் நன்கு வேகவைத்துசுத்திசெய்து மேல்தோல் நீக்கிய எட்டிக்கொட்டை, புதியமிளகு இவைகளைசமஎடையாகச் சூரணித்து 1/2 முதல் 1 குன்றிஎடை சூரணத்தை கொடுத்து தாம்பூலம்போடச்செய்தால் குப்ஜவாதம், கஞ்சவாதம், சர்வஜவாதம், குருத்ரசிவாதம்,அவபாஹீகம், வீக்கம், நடுக்கல், பிரதானக வாதம், பேதி, அருசி, அபஸ்மாரம்இவைகளைப் போக்கும்.

    மிருதசஞ்சீவினி ரசம் :-லிங்கம் 4-பாகம், நாபி 2-பாகம்,பொரித்த வெண்காரம் 1-பாகம், நேர்வாளம்1-பாகம் இவைகளை முறைப்படி நன்கு சுத்திசெய்து கல்வத்திலிட்டு, 2-ஜாமம்இஞ்சி ரசத்தினால் அரைத்து பிறகு எருக்கன் பால், தண்ணீர்விட்டான் கிழங்குரசம், இவைகளைனாலும் அரைத்து குன்றிஎடை கொடுத்தால்
    வாதரோகம், ஊருஸ்தம்பம், ஆமவாதம், சங்கிரஹணி, மூலவியாதி, எட்டுவித சுரங்கள்இவைகள் நீங்கும். இதற்கு மிருதசஞ்சீவினி என்றும் ரசசாகரமென்றும் பெயர்.

    வாதகஜாங்குச ரசம்:- ரசபஸ்பம், லோஹபஸ்பம், கெந்தி, தாளகம், சுவர்ணமாக்ஷ¢க பஸ்பம்,கடுக்காய், கடுக்காய்ப்பூ, வசநாபி, திரிகடுகு, நெல்லி, வெண்காரம் இவைகளைசமஎடையாக கல்வத்தி லிட்டு சிவகரந்தை, நொச்சி இந்த இரண்டு ரசத்திலும்தனித்தனி ஒவ்வொரு நாள் அரைத்து குன்றிஎடை சாப்பிட்டால் சகலவாதங்கள்,சாத்திய அசாத்திய ரோகங்கள் யாவையும் நாசமாக்கும்.

    வியாதிகஜ கேசரீ ரசம் :-பாதரசம், கெந்தி, தாளகம், வசநாபி, திரிகடுகு, திரிபலை, வெங்காரம் இந்ததினுசுகள் வகைக்கு 1/2 தோலா நேர்வாளம் 1-தோலா இவைகளை மைப்போல் சூரணித்துகரசனாங்கண்ணி மணத்தக்காளி நொச்சி, ஒவ்வொன்றிலும் தனிததனி எவ்வேழு முறைஅரைத்து மிளகு பிரமாணம் மாத்திரை
    செய்யவும்.

    வியாதிகளின் பக்குவா பக்குவங்களை அறிந்து மருந்தை பால் அனுபானத்தில்கொடுத்தால் எட்டுவித சுரங்களும், நொச்சியிலை, கோரைக்கிழங்கு இந்த இரண்டுதினுசு கியாழத்தில் கொடுத்தால் 84-வாதரோகங்களும், வெல்லத்துடன் கொடுத்தால்40-வித பித்தரோகங்களும் நாசமாகும். அனுபான விசேஷங்களில் கொடுத்தால் சகலரோகங்களும் நிவர்த்தியாகும்.


    Last edited by Admin on Sun 03 Oct 2010, 6:51 pm; edited 3 times in total

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:18 pm

    சூரியபிரபா வடுகங்கள் :-சித்திரமூலம், திரிபலை, வேப்பம் பட்டை, பேய்ப்புடல், அதிமதுரம், மஞ்சள்,சிறுநாகப்பூ, ஓமம், சீமைநிலவேம்பு, மரமஞ்சள், ஏலக்காய், கோரைக்கிழங்கு,பற்பாடகம், ரசாஞ்சனம், கடுகுரோகணி, கண்டுபாரங்கி, செவ்வியம்,தாமரைக்கிழங்கு, குரோசானி ஓமம், திப்பிலி, மிளகு, நேர்வாளம்,கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, புஷ்கரமூலம், வாய்விளங்கம், மோடி, சீரகம்,தேவதாரு, இலவங்கப்பத்திரி, வெட்பாலைப்பட்டை சிற்றரத்தை, போயாவரை,சீந்தில்கொடி, சிவதைவேர், அல்லி
    விரை, தாளிசபத்திரி, இந்துப்பு, பீடாலவணம், வளையலுப்பு கொத்தமல்லி,சோம்பு, சுவர்ணமாஷிகம், சாதிகாய், யவக்ஷ¡ரம், சக்திஷாரம், மிளகு, இந்ததினுசுகள் வகைக்கு 4 தோலா வைத்து சர்க்கரை 20 பலம், நெய் 10 பலம் கலந்துஇரசாயணமாக செய்து ரோகொணியின் பலாபலத்தை அறிந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலாஎடை வீதம் கொடுத்தால் வாதவியாதி, வூருஸ்தம்பம் அர்த்திதவாதம், குத்ரவாதம்,வித்ருதி, ஆனைக்கால், குன்மம், பாண்டுரோகம். அநாகம், அஸ்மரிமேகம்,பிரமேகங்கள் ரத்தபித்தம், காமாலை, வாதரோகங்கள், பித்தரோகங்கள்,கபரோகங்கள், சந்நிபாதரோகங்கள், இவைகள் யாவையும் நாசப்படுத்தும். மற்றும்
    அக்கினிதீபனம் மனோவுல்லாசம், ஆயுசு விருத்தி, புஷ்டி இவைகளை யுண்டாக்கும்.

    லகுவாதவித்வம்ச மாத்திரை ரசம் :-பாதரசம், வெண்காரம், கெந்தி, பாக்ஷ¡ணபேதி, வசநாபி, பலகறைபஸ்பம்,தாளகபஸ்பம் சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன்யிலைச்சாற்றினால் அரைத்து 1/2, 1 குன்றி எடை பிரமாணம் மாத்திரை செய்துகொடுத்தால் சந்நிபாதங்கள் கபங்கள், வாதங்கள், சீதங்கள், அக்கினிமாந்தம்,சுவாசங்கள், சூலைகள், கிறாணி இருமல் இவைகள் நீங்கும்.

    வந்ஹிகுமாரம் :-பொரித்த வெங்காரம், சுத்திசெய்த பாதரசம், கெந்தி, சங்கு, பஸ்பம், பலகறைபஸ்பம் இவைகள் சம எடை, வசநாபி 3 பாகம், மிளகு 8 பாகம் இவைகள் யாவையும்கல்வத்திலிட்டு கரிசாலை சாற்றினால் அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்துகொள்ளவும் இதில் பிரதி தினம் காலையில் ஒரு மாத்திரை கொடுத்து வந்தால் சகலவாத ரோகங்கள், சுவாசரோகம் கபரோகம், அக்கினிமாந்தம், பீலிகம், இருமல்,சூலை, இவைகள்
    நீங்கும்.

    வாதவித்வம்ச ரசம் :- பாதரசம்1 பாகம், கெந்தி 1 பாகம்,வசநாபி 2 பாகம், தாம்பிரபஸ்பம் 1 பாகம்,லோஹபஸ்பம் 1 பாகம மாக்ஷ¢க பஸ்பம் 1-பாகம், நேர்வாளம் 1-பாகம், தாளகம்1-பாகம், திரிகடுகு 1-பாகம், இவைகள் யாவையும் சேர்த்து நொச்சி, கருணை,எருக்கன்பால், முன்னை, வெள்ளைச்சாரணை, ஊமத்தன் இவை களின் ரசத்தினால்தனித்தனி ஏழுமுறை அரைத்து குன்றிஎடை பிரமாணம் மிளகு சூரணத்தில்கொடுக்கவும்.

    முழங்கால், துடை, கண்டச்சதை, முதுகு, முதுகுதண்டு,பாதங்கள், உதடு, தலை,இந்த இடங்களில் நோய், தலைபெரிய நரம்புகள், தாடைகள், குதபிரதேசம்,இவ்விடங்களில் தம்பித்தல், சுழ்கவாதம், ஜிம்மதம்பம், பாஹீதம்பம்,பாததம்பம், அதோபாக ஜனிதவாயுவுகள் சகல வாதங்கள் இவைகள் யாவையும்குணமாக்கும்.

    கரசமசமீரபன்ன் :-பாதரசம், தாளகம், சவர்ணமாக்ஷ¢க பற்பம், லோஹபற்பம், கெந்தி, கடுக்காய்,சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, துளசிவேர், கடுக்காய்ப்பூ, வசநாபி,சுட்டவெண் காரம் இவைகள் சமஎடை எடுத்து துளசி, சிவகரந்தை, இந்த ரசங்களில்அரைத்து குன்றிஎடை மாத்திரைகள் செய்யவும். இந்துப்பு, சுக்கு,சித்திரமூலம், இவைகள் கியாழத்தில் கொடுத்தால் வாயுரோகங்கள் நீங்கும்.

    திரிகுணாக்கிய ரசம் :-கெந்தம் 8-பாகம் பொடித்து ஓர் மணணோட்டில் வைத்து அடுப்பிலேற்றிச்சிறிதீயாக எரித்து அதில் பாதரசம் 1-பாகம் சேர்த்து ஒரு க்ஷண பொழுதுநெருப்பில் வைத்து எடுத்துக் கல்வத்திலிட்டு பொடித்து அத்துடன் அதற்குசமம் கடிக்காய் சூரணம் கலந்து நன்குகலக்க அரைத்து வைத்துக்கொண்டு
    முதல்நாள் 7-குன்றிஎடை, இரண்டாவதுநாள் 8-குன்றிஎடை, இம் மாதிரியாகநாளுக்கு ஒவ்வொரு குன்றிபிரமாணம் விருத்திசெய்த 21-குன்றி ஆகிறவரையிலும்கொடுத்து பால், நெய் சர்க்கரை கலந்த அன்னத்தை புசித்து காற்றில்லாதஇடத்திலிருந்தால் 3-பக்ஷங்களில் கபவாதம் நாசமாகும்.

    விதூமவாதத்திற்கு வாதாரி ரசம் :-சுத்திசெய்த பாதரசம் 8-பலம், கழிநீரில் மூன்றுநாள் ஊறவைத்து உலர்த்தியஎட்டிக்கொட்டை 8-பலம், கெந்தி 8-பலம், சுக்கு, திப்பிலி, மிளகு,கடுக்காய்த்தோல், தானிக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு, சித்திரமூலம்,இலவங்கப்பத்திரி, கோரைக்கிழங்கு, வசம்பு, அமுக்கிறாக்கிழங்கு,
    காட்டுமிளகு, சுத்திசெய்த நாபி, கோஷ்டம், திப்பிலிமூலம், இவை வகைக்கு1-பலம் சூரணித்து யாவும் ஒன்றாய்ச் சேர்த்து 24-பலம் வெல்லம் கலந்துஅரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்யவும்.
    பசும்நெய், மிளகுசூரணம், இந்த அனுபானத்தில் ஒவ்வொரு மாத்விகிதம் கொடுத்தால் விதூமவாதம் குணமாகும்.

    ஏகாங்கவாதத்திற்கு ஸ்பரிசாரி ரசம் :- சுத்திசெய்த ரசம் 1 பாகம், சுத்திசெய்த கெந்தி 2 பாகம், முறுக்கன் விரை2 பாகம் கழுநீரில் மூன்று நாள் ஊறவைத்து எட்டிக்கொட்டை 12 பாகம் இவைகளைகல்வத்திலிட்டு சூரணித்து தேன் விட்டு அரைத்து மெழுகு பதத்தில் நெய்வைத்திருந்த பானையில் போட்டு ஒரு மாதம் தானிய களஞ்சியத்தில் வைத்து சிறுகுன்றியளவு விகிதம் கொடுத்து வர ஏகாங்கவாதம், கஞ்சவாதம் இவைகள் நீங்கும்.

    கபவாதாரி ரசம் :- ரசபஸ்பம், லோஹபஸ்பம், சுத்திசெய்த தாளகம், ஹேமமாஷிகபஸ்பம், சுத்திசெய்தகெந்தி, இவைகள் சம எடை கல்வத்திலிட்டு ஆமணக்குவேர், இஞ்சி,கரிசனாங்கண்ணி,மணத்தக்காளி, வெள்ளைகாக்கட்டான், இவைகளின் ரசங்களினால்பிரத்தியேகம் ஒவ்வொரு நாள் அரைத்து மாத்திரைகள் செய்து பாண்டத்தில்வைத்து சீலைமண் செய்து மந்தாக்கினியால் ஒரு நாள் எரித்து ஆறிய பிறகுஎடுத்து கல்வத்திலிட்டு சூரணித்து அதற்கு திரிகடுகு, சித்திரமூலம்,சுத்திசெய்தகெந்தி, சுத்திசெய்த நாபி கருணைக்கிழங்கு, கடுக்காய், சுட்டவெண்காரம் இவைகளது சூரணத்தைச்சேர்த்து சிவகரந்தை, நொச்சி, கரிசனாங்கண்ணி, இவைகளின் சாற்றினால் மூன்று நாள் அரைத்து 4 குன்றி பிரமாணம் மாத்திரைசெய்து தடவைக்கு ஒரு மாத்திரை வீதம் அனுபானத்துடன் கொடுத்தால் கபவாதம்நிவர்த்தியாகும்.

    ஜிம்மாங்கவாதாங்குரசம் :-சுத்திசெய்த பாதரசம் 5 பலம் தாம்பிரபஸ்பம் 5 பலம், சுத்திசெய்த கெந்தி 5பலம் இவைகளை எலுமிச்சம்பழச்சாற்றினாலும், வெற்றிலை சாற்றினாலும் அரைத்துகாசிக்குப்பியில்வைத்து சீலைமண் செய்து லகுபுடமிட்டு ஆறிய பிறகுஎடுத்து கல்வத்திலிட்டு சூரணித்து அதற்குச் சரியாகதிரிகடுகுச்சூரணச்சேர்த்து இரண்டு குன்றி எடை பிரமாணம் கொடுத்தால்ஜிம்மாங்க
    வாதம் நீங்கும்.


    Last edited by Admin on Sun 03 Oct 2010, 6:48 pm; edited 1 time in total

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:18 pm

    ஸ்கந்தவாதத்திற்கு வாதமுத்கர ரசம் :-பாதரசம், நாபி சுட்ட வெண்காரம், கெந்தி, மனோசிலை, ஊமத்தன்விரை, இவைகளைசுத்திசெய்து சம எடையாக கல்வத்திலிட்டு செருப்படை சாற்றினால் அரைத்துஉருண்டை செய்து குப்பியில் வைத்து மேல் மூடி சீலைமண் செய்துவாலுகாயந்திரத்தில் நாலுஜாமங்கள் எரித்து
    ஆறிய பிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு கள்ளிப் பால் விட்டுஅரைத்து பிறகு மீன்பிச்சியினால் அரைத்து குன்றி எடைமாத்திரைகள் செய்துகொள்ளவும். இந்த மாத்திரையை அனுபான விஷேசங்களுடன் கொடுத்தால்ஸ்கந்தவாதம், கந்தரவாதம்இவைகள் நீங்கும்.

    பாதவாதத்திற்கு ஸ்வச்சந்தநாயக ரசம் :-ரசபஸ்பம், லோகபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, சுத்திசெய்த தாளகம், ஹேமமாஷிகபற்பம், கடுக்காய்த்தோல், கடுக்காய்ப்பூ, சுத்திசெய்த நாபி,திரிகடுகு சுட்ட வெண்காரம் இவைகள் யாவும் சம எடையாக கல்வத்திலிட்டு ,சிவகரந்தை, நொச்சி, இவைகளின் சாற்றினால் ஒவ்வொரு நாளாக
    அரைத்து 3 குன்றி எடை பிரமாணம் மாத்திரை செய்து அனுபான பேதத்தில் கொடுத்தால் பாதவாதம் நிவர்த்தியாகும்.


    வஸ்திவாதத்திற்கு ஸ்வச்சந்தபைரவ ரசம்:- ரசம், சுத்தி ாபி, அப்பிரகபற்பம், சுத்திசெய்தலிங்கம்,சுத்திசெய்த ந்தி, சுத்திசெய்த தாளகம் இவைகள் சமஎடையாக கல்வத்தி லிட்டு,செருப்படை ரசத்தால் மூன்றுநாள் அரைத்து குக்குடபுட மிட்டு ஆறியபிறகுஎடுத்து கல்வத்திலிட்டு சூரணஞ்செய்து மீன்,
    ஆமை, காட்டுபன்றி இவைகளின் பித்தத்தினால் ஒவ்வொரு நாளாக அரைத்து உளுந்துஅளவு மாத்திரைகள் செய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் மிகவுங் குரூரமாகியவஸ்திகாரம் நீங்கும்.

    சுருங்கலவாதத்திற்கு திரிகுணாக்கிய ரசம் :-சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம்,ஆமல வேதசம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை இலைசாற்றினால்இரண்டு நாள் அரைத்து காசி குப்பியில் வைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகுஎடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு மீன் பித்தத்தில் பாவனைச்செய்துஇரண்டு குன்றிஎடை மாத்திரைச்செய்து ஒவ்வொரு மாத்திரை விகிதம் வசம்புகியாழத்திலாவது அல்லது மிளகு கியாழத்திலாவது கொடுத்தால் சுருங்கலவாதம்நீங்கும். இதற்கு பத்தியம், பால்சாதம் அல்லது தேங்காய் பாலுடன் கூடியஅன்னத்தை புசிக்கவேண்டியது.

    சுக்கிலவாதத்திற்கு பணிபதி ரசம்:- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம், லோஹபற்பம்,தாம்பிரபற்பம் இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால்இரண்டுநாள் அரைத்து உருண்டைசெய்து காசிகுப்பியில் வைத்து சீலைமண்செய்துஉலர்த்தி வாலுகாயந்திரத்தில் 6 ஜாமங்
    கள் எரித்து ஆறியபிறகு எடுத்து குன்றிஎடை மருந்தை மிளகு சூரணத்தில் நெய் கலந்துக் கொடுத்தால் சுக்கிலவாதம் நீங்கும்.

    நஷ்டேந்திரியத்திற்கு வாதாந்தக ரசம் :- சுவர்ணபற்பம்,
    காந்தபற்பம், லோஹபற்பம், தாம்பிரபற்பம், அப்பிரகபற்பம், இரசபற்பம்,சுத்திசெய்த கெந்தி, வைகிறாந்தபற்பம், பிரவாளபற்பம், ரஜிதபற்பம்,தாளகபற்பம், இவைகளை சமஎடையாக சுபமுகூர்த் தத்தில் கல்வத்திலிட்டு4-ஜாமங்கள் சித்திரமூல கியாழத்தினால் அரைத்து பில்லை செய்து நிழலில்உலர்த்தி ஆறியபிறகு எடுத்து மைப்போல் சூரணித்து சூரணத்திற்கு பேர்பாதிஇரசபற்பம், தாளகபற்பம், கலந்து சித்திரமூலம், இஞ்சி, நொச்சி,பெருங்குரும்பை, ஆடாதோடை, எலுமிச்சம்பழம் இவைகளின் ரசத்தினால்ஒவ்வொன்றிலும் ஏழுமுறை அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்துக்கொள்ளவேண்டியது. திப்பிலி சூரணத்தில் நெய் அல்லது தேன் கலந்து வேளைக்கொருமாத்திரை விகிதஞ் சாப்பிட்டால் சுப்தவாதம், வாதசூலை, வேதனையுடன்கூடியவாதம், சிநாயுவாதம், கம்ப வாதம், காத்திரபங்கவாதம், பக்ஷகாதவாதம்,ஹனுக்கிரஹவாதம், தம் முதலிய 80-வாதங்கள், சகல ரோகங்கள் நிவர்த்தியாகும்.மேலும் இம்மருந்தினால் மலடியும் கர்ப்பிணியாவாள். நஷ்ட வீரியமும்விருத்தியாகும்.

    சூதிகாவாதத்திற்கு படபானல ரசம் :-சுத்திசெய்த ரசம் 1-பாகம், தாம்பிரபஸ்பம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி2-பாகம், திரிகடுகு 3-பாகம், சித்திரமூலம் 1-பாகம், கோஷ்டம் 1-பாகம்,இவைகளை கல்வத்திலிட்டு துளசிரசத்தில் ஒருநாள் அரைத்து இலந்தன்விரை அளவுவடுகங்கள் செய்து வெள்ளைப்பூண்டு ரசத்தில்
    வேளைக்கொரு மாத்திரை விகிதம் கொடுத்தாலும் அல்லது பேயாவாரை வேர்ரசத்திலாவது அல்லது முள்விலாம்பட்டை ரசத்தில் மிளகுசூரணம் போட்டுஅத்துடனாவது கொடுத்தாலும் பிரசூதி வாதம் நீங்கும்.

    சூதிகாவாதத்திற்கு வாதவித்வம்ஸி ரசம்:- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, நாகபஸ்பம், வங்கபஸ்பம்,லோஹபஸ்பம், தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த அப்பிரகபஸ்பம், திப்பிலி,சுட்ட வெங்காரம், மிளகு, சுக்கு இவைகள் வகைக்கு 1-பாகம்,சுத்திசெய்தவசநாபி 4 1/2-பாகம், இந்த தினுசுகளை கல்வத்தி லிட்டு திரிகடுகு கியாழம்.நிலபனங்கிழங்குரசம், சித்திரமூலரசம், கரசனாங்கண்ணி ரசம், கோஷ்டகியாழம்இவைகளால் தனித்தனி மூன்றுதடவையும், நொச்சி, இஞ்சி, ஆடாதோடை,கெஞ்சாஇலை,வேப்பிலை இவைகளின் சாற்றினால் தனித்தனி ஒரு தடவையும் அரைத்துகுன்றிபிரமாணம் மாத்திரைகள் செய்து வைத்து கொள்ளவேண்டியது. வேளைக்கு 1-2மாத்திரைகளாக அனுபானங்களுடன் சாப்பிட்டுவந்தால், வாதரோகம், சூலை, சிலேஷ்ம
    ரோகம், கிரஹணி, சந்நிபாதம், முகவாதம், அபஸ்மாரம், அக்கினிமந்தம், சீதபித்தம், பிலீகோதரம், குஷ்டரோகம், இந்தரோகங்கள்
    நீங்கும்.

    கடிவாதத்திற்கு வாதகேசரிரசம்:- சுத்திசெய்த லிங்கம், சுத்தி செய்த வசநாபி, கடுரோகணி, திரிகடுகு,வசம்பு இவைகள் சம எடை செய்து தோலாயந்திரத்தில் ஒருஜாமம் எரித்து 1-2குன்றி வீதம் கொடுத்தால் கடிவாதம் நீங்கும்.

    ஊருஸ்தம்ப வாதத்திற்கு வாதகஜாங்குசம் :- சுத்திசெய்த பாதரசம் 8-பாகம்,கழுநீரில் மூன்று நாள் ஊரவைத்த எட்டிக்கொட்டை 8-பாகம், சுத்திசெய்த கெந்தி8-பாகம், திரிகடுகு வகைக்கு 3-பாகம், திரிபலை, வகைக்கு 3-பாகம், இவைகளைகல்வத்தி லிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து குன்றிஎடைமாத்திரைகளாகச் செய்துலர்த்தி வைத்துகொள்ளவேண்டியது.

    வேளைக்கு தேக தத்துவத்தை அறிந்து 1 முதல் 2 மாத்திரை களாக நெய் மிளகுச்சூரணம்சேர்ந்த அனுபானத்துடன் கொடுத்து வர ஊருஸ்தம்ப வாதத்துடன் 80வாதங்களும் நாசமாகும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:19 pm

    கம்ப வாதத்திற்கு விஜயபைரவிரசம்:- இரச பஸ்பம், தாம்பிர பஸ்பம் இவைகள் இரண்டும் சம எடையாக கல்வத்திலிட்டுநெறிஞ்சல்வேர் ரசத்தில் அரைத்து உலர்த்தி, இம்மாதிரியாக 21-நாள் அரைத்துபிறகு குன்றி பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலி லுலர்த்தி பேரரத்தைகியாழத்திலாவது அல்லது நெய் மிளகு சூரணத்துடன் கலந்தாவது ஆறு மாதங்கள்சாப்பிட்டால் கம்பவாதம் நடுக்கல் நீங்கும்.

    சீதவாதத்திற்கு அக்கினி குமார ரசம் :-இரசபஸ்பம், தாம்பிர பஸ்பம், சுத்திசெய்த வசநாபி இவைகள் தனித்தனி 1-பாகம்,சுத்தி செய்த கெந்தி 2-பாகம், திரிகடுகு 1-பாகம், திரிபலை 1-பாகம், இவைகளைகல்வத்திலிட்டு நொச்சி இலை, கண்டங்கத்திரி வேர், சித்திர மூலம், சிவப்புஆமணக்கு வேர், காட்டுக்கொடி, பாகல், கரும் மணத்தக்காளி இவைகளின்ரசத்தினால் 21 முறை அரைத்து பாவனை செய்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்துஇஞ்சி ரசத்தில் கொடுத்தால், சந்நிபாதம், சீதாங்கவாதம், வாய்வுபிடிப்புகள்இவைகள் நீங்கும். சந்நிபாத சீதசுரத்தினால் மரணாவஸ்தையடையசித்தமாயிருக்கும் ரோகியானது நடுநெத்தியில் மயிரை வாங்கிவிட்டு ஊசியால்இம்மருந்தை எடுத்து அவ்விடத்தில் குத்தி மருந்தையேற்றி ரத்தத்துடன்சேருகிற வரையிலும் கையினால் தேய்த்தால் சந்நி பாதம் நீங்கி சீவிப்பான்எனக் கூறப்படுகிறது.

    முகவாதத்திற்கு சதுர்முக ரசம் :-இரசபஸ்பம், அப்பிரக பஸ்பம், சுத்திசெய்த மயில்துத்தம், அஞ்சனக்கல்,சுத்திசெய்தசிலாசத்து, சுத்திசெய்த குங்கிலியம், சுத்திசெய்த மனோசிலைஇவைகள் சமஎடையாக தேன்விட்டு அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்துகொடுத்தால் முகவாதம் குணமாகும்.

    அசீதிவாதத்திற்கு காலாக்கினி ருத்திர ரசம்:- ரசம், வச நாபி, கெந்தி இவைகளை சுத்திசெய்து இத்துடன் குரோசானியோமம்,திரிபலை, சஜ்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், சித்திரமூலம். சைந்தல வணம், சீரகம்,சவ்வர்ச்சலவணம், வாய்விளங்கம், சுட்ட வெண் காரம், திரிகடுகு இவைகளைசமஎடையாகச்சேர்த்து சூரணித்து இந்த சூரணத்திற்கு சமமாக சுத்திசெய்தஎட்டிக்கொட்டை சூரணத் தைக் கலந்து கல்வத்திலிட்டுஎலுமிச்சம்பழச்சாற்றினால் ஒருநாள் அரைத்து மிளகு பிரமாணம் மாத்திரைகள்செய்து வைத்துக்கொள்ள வேண்டியது. நெய், மிளகு சூரணம் இந்தஅனுபானத்துடன் கொடுத்தால் அக்கினிமாந்தம், பக்ஷவாதம், முதலிய 80வாதரோகங்கள், குன்மம், கிராணி முதலியவைகள் நீங்கும்.

    விலோமவாதத்திற்கு வாதசம்மோஹன ரசம் :-சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, அப்பிரகபஸ்பம், சுக்கு, மிளகு,சுத்திசெய்த கெந்தி சுட்டவெண்காரம், இந்துப்பு, சுத்திசெய்த ஊமத்தன்விரை,இவைகளை சம
    எடையாக கல்வத்திலிட்டு பாவல் யிலைச்சாற்றினால் மூன்று நாள் அரைத்துவஜ்ரமூசையிலாவது அல்லது காசிகுப்பியிலாவது அம்மருந்தை வைத்துவாலுகாயந்திரத்தில் மூன்று ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்துகல்வத்திலிட்டு மீன் பித்தத்தினால் அரைத்து உளுந்தளவு மாத்தி ரைகள் செய்துவேளைக்கு ஒரு மாத்திரையாக போயாவரை ரசத்திலாவது நொச்சி யிலை ரசத்திலாவதுசேர்த்து கொடுத்தால் அனுலோமவாதம் நிவர்த்தியாகும்.

    விலோமவாதத்திற்கு சிம்மநாத ரசம் : - பாதரசம், வசநாபி கெந்தி, மனொசிலை, பலகறை இவைகள் யாவையும் சுத்திசெய்து சமஎடையாக சேர்த்து இந்தச்சூரணத்திற்கு சமமாக நிலதந்தி
    விரைச் சூரணத்தை கலந்து கல்வத்திலிட்டு பாவல் யிலை ரசத்தால் இரண்டு நாள்அரைத்து பிறகு இரண்டு ஜாமங்கள் வாலுகாயந்திரத்தில் எரித்து ஆறிய பிறகுஎடுத்து சூரணித்து குன்றி பிரமாணமாக
    நொச்சியிலை சாற்றிலாவது அல்லது போயாவரை ரசத்திலாவது கொடுத்தால் விலோமவாதம் நீங்கும்.

    பக்ஷவாதத்திற்கு காலகண்ட ரசம் :-சுத்திசெய்த ரசம்,சுத்திசெய்த வசநாபி, சுத்திசெய்த கெந்தி, மிளகு,சுட்டவெண்காரம், திப்பிலி, சுத்திசெய்த ஊமத்தன்விரை, திரிபலை இவைகளை சமஎடையாக சூரணித்து கல்வத்திலிட்டு கருத்தும்பை, பெரியமுள்ளங்கத்திரி,பேயத்தி, கார்போகிவிரை, விலாம், இஞ்சி
    கரிசனாங்கண்ணி இவைகளின் ரசத்தினால் எடுத்து கல்வத்திலிட்டு ு இவைகளின்பித்தத்தினால் இரண்டு நாள் அரைத்து குன்றி எடை மாத்திரை செய்து வேளைக்குஒரு மாத்திரை யாக திரிகடுகு, திரிபலை இந்தக்கியாழங்களில் கொடுத்தால்பக்ஷகாதவாதம் நீங்கும்.

    அதபவாதத்திற்கு வாதசார்த்தூல ரசம்
    :-சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபஸ்பம்,சுத்திசெய்த லிங்கம், இந்துப்பு, மோடி, இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டுசெருப்படை ர்சத்தினால் ஒரு நாள் அரைத்து குக்குட- புடமிட்டு ஆறியபிறகுஎடுத்து சூரணித்து குன்றிஎடை நெய்யுடன் மிளகு சூரணத்தில் கொடுத்தால்சூரியன் உதயமானதும் அந்தகாரம் எப்படி நீங்குமோ அவ்விதம் அதபவாதம் நீங்கும்.

    அக்கினிவாதத்திற்கு வீரபத்திர ரசம் :-இரசபஸ்பம், தாம்பிர பஸ்பம், இவைகளை சமமாக கல்வத்திலிட்டு நெரிஞ்சல்வேர்கியாழத்தினால் 21-நாள் அரைத்து உலர்த்தி மாத்திரைசெய்து கொடுப்பதுடன்அம்மாம்பச்சரிசி, அதிவிடையம், சித்திரமூலம், இவைகள் சமஎடை நீர்விட்டுஅரைத்து அதில் கொஞ்சம் நெய்யை சேர்த்து காய்ச்சி சரீரத்திற்கு தடவினால்அக்கினிவாதம் நீங்கும்.

    சுப்தவாதத்திற்கு கனகசுந்தர ரசம் :-சுத்திசெய்த ரசம், தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, பொரித்தவெண்காரம்,திப்பிலி இவைகளை சம எடையாக கல்வத்திலிட்டு வெலுமசந்தி வேர்உத்தாமணி வேர் இவைகளின் கியாழத்தினால் ஒருநாள் அரைத்துமாத்திரைசெய்துதுலாயந்திரத்தில் ஒரு ஜாமம் காடாக்கினியாக எரித்து இரண்டு குன்றிஎடை முதல்ஏழுகுன்றி வரையிலும் தேகபலத்தை அறிந்தி இஞ்சி ரசத்திலும் கொடுத்தால்சுப்தவாதம் நாசமாகும். சகல வாதங்களும் நீங்கும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:19 pm

    குல்பவாதத்திற்கு பிராணவல்லப ரசம் :-சுத்திசெய்த ரசம், வசநாபி, அதிவிடயம், அப்பிரகபற்பம், கெந்தி, மனோசிலை இவைகள் சமஎடையாக எடுத்து கல்வத்திலிட்டு பற்பாடக கியாழத்தில்
    இரண்டு நாள் அரைத்து வஜ்ஜிர மூசையில்வைத்து பூமியில்புடமிட்டு ஆறியபிறகுஎடுத்து மீன், ஆடு, மயில் இவைகளின் பித்தத்தினால் ஒருஜாமம் அரைத்துகுன்றிஎடை மாத்திரைசெய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் குல்பவாதமும், சகலவாதங்களும் நீங்கும்.

    ஜங்காவாதத்திற்கு லக்ஷமீவிலாச ரசம்
    :-இரசம், நாபி, கெந்தி, நேர்வாளம், லிங்கம் இவைகள் சமஎடையாகச் சுத்திசெய்துகல்வத்திலிட்டு சித்திரமூலகியாழத்தினால் ஒருநாள் அரைத்து துலாயந்தி
    ரத்தில் ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து மீன் பித்தத்தினால், இரண்டுஜாமமும், பிரமதண்டுபாலினால் ஒருநாளும் அரைத்து குன்றிஎடைமாத்திரைகள்செய்து சிவகரந்தை இலைசாற்றில் மிளகு சூரணத்தைப்போட்டுக்கொடுத்தால் ஜங்காவாதம் நீங்கும்.

    ப்ரமணவாதத்திற்கு விஷ்ணுபராக்கிரம ரசம் :-சுத்திசெய்த இரசம், கெந்தி, பொரித்த வெண்காரம், சுத்திசெய்த வசநாபி, சர்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், இந்துப்பு இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன்இலைச்சாற்றினால் அரைத்து உருண்டைசெய்து குக்கிடபுடமிட்டு ஆறியபிறகுஎடுத்து மறுபடுயுஞ் சூரணித்து, மீன், காட்டுப்பன்றி இவைகளின்பித்தத்தினால் அரைத்து உளுந்து பிரமாணம் மாத்திரைகள்செய்து வேளைக்கொருமாத்திரை விகிதம் குளிர்ந்த நீரிலாவது அல்லது கொண்ணைவேர் கற்கத்திலாவதுஅல்லது சந்தனத்திலாவது கொடுத்தால் சந்நிபாதங்கள் சுரங்கள்சுவாசரோகம் விஷமதோஷங்கள், அமஸ்மாரம், தனுர்வாதம், கம்பவாதம், பிராமண வாதம்முதலியன நீங்கும்.

    தண்டவாதத்திற்கு விஜயபைரவ ரசம் :-சுத்திசெய்த ரசம், நாபி, கெந்தி, மிளகு, சுக்கு, கஜ்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம்,டங்கண க்ஷ¡ரம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம், பீடாலவணம், காசிசாரம்சமுத்திரலவணம், இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு இஞ்சிரசத்தில் ஒரு நாள்அரைத்து காசிக்குப்பியில் வைத்து சீலை செய்து, உலர்த்திவாலுகாயந்திரத்தில் வைத்து சிறு தீயாக எரித்த ஆறிய பிறகு எடுத்து அதற்குபதினொன்றிலொரு பாகம் சுத்திசெய்த நாபியை கலந்து மை போல் அரைத்து குன்றிஎடை இஞ்சிரசத்தில் கொடுத்தால் தண்டவாதம் நிவர்த்தியாகும்.

    மந்தவாதத்திற்கு காலகண்டரசம் :-சுத்திசெய்த ரசம்,சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபஸ்பம், லோஹபஸ்பம், தாம்பிரபற்பம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தால் இரண்டு நாள்அரைத்து காசிக்குப்பியில் வைத்து சீலை செய்து, வாலுகாயந்திரத்தில் ஆறுஜாமங்கள் எரித்துஆறிய பிறகு
    எடுத்து உளுந்த அளவு, உளுந்து தட்டு, வெள்ளைப்பூண்டு ரசம் இந்த அனுபானத்தில் கொடுத்தால் மந்த வாதம் நிவர்த்தியாகும்.

    இரத்தவாதத்திற்கு ரக்தவாதாந்தர ரசம்:- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, அப்பிரகபஸ்பம், அதிவிடயம், மிளகு,சுக்குதிப்பிலி இவைகள் சமஎடையாக எடுத்து கல்வத்திலிட்டு சித்திர மூலவேர்கியாழத்திலும், ஆடாதோடை இலை ரசம், எருக்கன் வேர் கியாழம்,எலுமிச்சம்பழச்சாறு இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நாள் அரைத்துஉருண்டையாக்கி கோமூத்திரத்தில் துலாயந்திரமாக எரித்து உளுந்தளவுமாத்திரைகள் செய்து
    வேளைக்கு ஒரு மாத்திரையாக நீர்முள்ளி கியாழத்தில் கொடுத்தால் ரத்தவாதம் நீங்கும். மிளகு சூரணத்தில் கொடுத்தால் ஷீணவாதம் நீங்கும்.

    கஞ்சாகாதத்திற்கு வாதவஜ்ரரசம் :-அப்பிரகபற்பம் சுத்திசெய்த ரசம், சுத்திசெய்தவச நாபி, சுத்திசெய்த கெந்தி,திரி கடுகு, சைந்தவலவணம், சுத்திசெய்த லிங்கம், வாய்விளக்கம் மோடி,சித்திரமூலம், இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை யிலை ரசத்தால்ஒரு நாள் அரைத்து குக்குடபுடமிட்டு அனுபானத்தில் கொடுத்தாலும் அல்லதுஅரத்தை சூரணத்தில் கொடுத்தாலும் கஞ்சரவாதம் நிவர்த்தியாகும்.களாவாதத்திற்கும்
    இதைத்தான் கொடுக்கவேண்டியது.

    ஸ்த்யானவாதத்திற்கு வாதோன்மூல ரசம்:- பாதரசம், நாபி, கெந்தி இம்மூன்றையும் சுத்திசெய்து இவைகளுக்கு சமம்சுத்தி செய்த ஊமத்தன்விரை சூரணத்தைக் கலந்து கல்வத்திலிட்டு பஞ்ச
    கோலம் அதாவது (சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம்)இவைகளின் கியாழத்தினால் இரண்டுநாள் அரைத்து மூசையில்வைத்து மேல்மூடி மூடி,சீலைசெய்து உலர்த்தி, பூதாயந்தி
    ரத்தில் புடமிட்டு ஆறியபிறகு எடுத்து சூரணித்து மீன்பித்தத்தினால்இரண்டுநாள் அரைத்து குன்றி அளவு மாத்திரைகள்செய்து பஞ்சகோல க்ஷ¡யத்தில்கொடுத்தால் ஸ்த்யானவாதமும் இன்னும்
    மற்ற வாதங்களும் நிவர்த்தியாகும்.

    கோஷ்டவாதத்திற்கு சுவச்சந்தபைரவ ரசம் :-ரசம், நாபி, கெந்தி, நேர்வாளம் இவைகளை சுத்திசெய்து அத்துடன் அதிவிடயம்,சித்திரமூலம் இவைகள் சமஎடையாகச் சேர்த்து கல்வத்தி லிட்டு எருக்கன்வேர்கியாழத்தில் ஒருஜாமம் அரைத்து துலாயந்தி ரத்தில் ஒரு ஜாமம் எரித்துகுன்றிஎடை கொடுத்தால் கோஷ்டகத வாதம் நிவர்த்தியாகும். மற்ற வாதங்களும்நாசமாகும்.

    குல்மவாதத்திற்கு திரிவிக்கிரம ரசம் :-இரசம், நாபி, மனோ சிலை, தாளகம், கெந்தி இவைகளை சுத்திசெய்து,தாம்பிரபஸ்பம், கோஷ்டம், சிற்றாமுட்டிவேர், கடுக்காய்,சுத்திசெய்ததுத்தம், நிலப்பனங்கிழங்கு இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டுஆமணக்கெண்ணெய்விட்டு ஒருநாள் அரைத்து குன்றிஎடை மாத்திரைச்செய்துவேளைக்கொரு மாத்திரை விகிதம் சாரணைரசத்தில் கொடுத்தால் குன்மவாதம் போம்.

    ததிவாதாரி ரசம்:- ரசம், கெந்தி, நேர்வாளம் இவைகளைச்சுத்திசெய்து சமஎடையாக கல்வத்திலிட்டுசித்திரமூல கியாழத்தால் ஒருநாள் அரைத்து துலாயந்திரத்தில் இரண்டுஜாமம்எரித்து
    குன்றிஎடை கொடுத்தால் ததிவாதம் நிவர்த்தியாகும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:20 pm

    ஊர்த்துவ வாதத்திற்கு வாதாரி ரசம் :-சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம், கடுக்காய்தோல்3-பாகம், தானிக்காய் 4-பாகம், நெல்லிபருப்பு 5-பாகம், சித்திரமூலம்6-பாகம், சுத்திசெய்த குங்கிலியம் 7-பாகம் இவைகள் யாவையும் கல்வத்திலிட்டு 5-பாகம் விளக்கெண்ணெய் வார்த்து அரைத்து பிறகு
    தேவதாரு இவைகளின் சூரணத்தைக் கலந்து ஒருஜாமம் அரைத்து 1/2-தோலா வீதம்மாத்திரைகள்செய்து வேளைக்கொரு மாத்திரை விகிதம் ஆமணக்குவேர் கியாழத்தில்கொடுத்து அந்த எண்ணையை
    தேகம்முழுக்க தடவி வியர்வை உண்டாகுமளவு தேகத்தை பிடித்து வர ஊர்த்துவவாதம் நிவர்த்தியாகும்.

    சுண்டீ சூரணம் :-சுக்குசூரணம் 7 பலம், நெய்யில் வருத்த வெள்ளைப்பூண்டு 7 பலம்,இவ்விரண்டையும் அரைத்துவைத்துக்கொண்டு தேகதத்துவத்தை அறிந்து கொடுத்து வரவாதரோகம் நீங்கும்.

    நாராச சூரணம்:- திப்பிலி 1 பலம், சிவதைவேர் 4 பலம் இவைகளைச் சூரணித்து 4 பலம் கற்கண்டுசேர்த்து 1/4 தோலா சூரணம் விகிதம் தேனுடன் கலந்து கொடுத்தால் ஆத்மானவாதம்நீங்கும்.

    ஹிங்குவாதி சூரணம்:- பெருங்காயம், மோடி, கொத்தமல்லி சீரகம், வசம்பு, சித்திரமூலம்,கிச்சிலிகிழங்கு, புளிஓடு, இந்துப்பு பீடாலவணம், உப்பு, மிளகு, சுக்கு,திப்பிலி, யவக்ஷ¡ரம், வெங்காரம்,
    கடுக்காய், கோஷ்டம், சிவகரந்தை, கருஞ்சீரகம் இவைகள் சூரணித்துொடிமாதுழம்பழம் இவைகளுடன் கலந்து அனுபானங்களுடன் கொடுத்தால் வாதரோகங்கள்நீங்கும்.

    ராஸ்னாதி சூரணம் :-சிற்றரத்தை, தண்ணீர் விட்டான் கிழங்கு தேவதாரு, தக்கோலம், பொடுதலை,திப்பிலி, ரத்தசந்தனம், பறங்கிச்சக்கை, இந்துப்பு, தாமரைக்கிழங்கு,அமுக்கிறாக்கிழங்கு, சீந்தில்கொடி கோரைக்கிழங்கு, ஏலக்காய், நிலக்கடம்பு,சதாப்புஇலை,ஓமம், சுக்கு, கோஷ்டம், இவைகளைச் சமஎடையாக சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் சருமவாதம் அஸ்திகதவாதம், வாதவிப்புருதி முதலியனயாவும் சீக்கிரத்தில் நீங்கிவிடும்.

    சிக்ருமூலாதி சூரணம் :-முருங்கைவேர், திப்பிலி, சிற்றரததை, சுக்கு, நெரிஞ்சுமுள், இந்துப்பு,சித்திரமூலம், ஆமணக்குவேர் இவைகள் யாவையும் சூரணித்து திரிகடிப்பிரமாணம்கொடுத்துவர சர்வாங்கத்தில் வியாபித்த வாய்வும் அதிவேகத்தில் நீங்கிவிடும்.

    ஆஜாமோதாதிசூரணம் :-ஓமம், திப்பிலி, சிற்றரத்தை, சுக்கு, அமுக்கிறாக்கிழங்கு, சீந்தில்கொடி,சோம்பு, தண்ணீர் விட்டான் கிழங்கு இவைகள் சமஎடை சூரணித்து நெய்யுடன்கொடுத்தால் ஹிருத்ரோகம், கோஷ்டகத, கண்டகதவாதங்கள் முதலியன நாசமாகும்.

    குஷ்டாதிசூரணம் :-கோஷ்டம், வெட்பாலைவிரை, சுக்கு, சித்திரமூலம், அதிவிடயம், மஞ்சள் இவைகள்யாவும் சமஎடையாகச் சூரணித்து வெந்நீருடன் சாப்பிட்டால் சகலவாதவிகாரங்களையும் நசிக்கச் செய்யும்.

    தூமவாதத்திற்கு திரிபலாதி சூரணம் :-கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல், சித்திரமூலம், அதிவிடயம், இவைகள்சமஎடையாக சூரணித்து ஆமணக்கெண்ணெய், கோமூத்திரம், நெய், இந்த அனுபானத்தில்ஒரு மாதம் சாப்பிட்டால் தூமவாதம் நிவர்த்தியாகும்.

    சிநாயுவாதத்திற்கு பிருங்கராஜ சூரணம் :-காரைச்செடிவேர் சூரணம் 1 பாகம், மிளகு சூரணம் 1/2 பாகம், கிறாம்பு சூரணம்கால் பாகம், இவைகள் யாவும் சூரணித்து இதற்குச் சமஎடை சர்க்கரை
    கலந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலாவிகிதம் வெந்நீருடனாவது அல்லது பசும்நெய்யுடனாவது
    அனுபானத்தில் ஒருமாதம் சாப்பிட்டால் தூமவாதம் நிவர்த்தியாகும்.

    சிநாயுவாதத்திற்கு பிருங்கராஜ சூரணம் :-காரைச்செடி வேர் சூரணம் 1-பாகம், மிளகுசூரணம் 1/2-பாகம், கிறாம்பு சூரணம்கால் பாகம் இவைகள் யாவும் சூரணித்து இதற்குச் சமஎடை சர்க்கரை கலந்துவேளைக்கு 1/2 முதல் 1 தோலா விகிதம் வெந்நீருடனாவது அல்லது பசும்நெய்யுடனாவது கொடுத்தால் வாதத்தால் பிறந்த கொப்புளங்கள், கட்டி, விரணம்,கிரந்தி முதலியன நீங்கி தோலை வுரித்த சர்ப்பத்தைப்போல் தேகம் இருக்கும்.

    போகவாதத்திற்கு ஏரண்டமூல சூரணம் :- பெரிய ஆமணக்கு வேரை சூரணித்து 1/4 முதல் 1/2 தோலா வீதம் ஜலத்திடன் கலந்தி 40-நாள் கொடுத்தால் போகவாதங்கள் சகல வாதங்கள் போம்.

    முகவாதத்திற்கு விளங்காதி சூரணம் :- வாய்விளங்கம், பெருங்காயம், நாயுருவிவிரை, புங்கன்விரை, கடுகு இவைகளைச்சூரணித்து புகைப்பிடித்தால் முகவாதரோகம் நிவர்த்தியாகும்.

    பத்யாதி குக்குலு :-கடுக்காய் 100 காய்கள், தானிக்காய் 200 காய்கள், நெல்லிக்காய் 400 காய்கள்இம்மூன்றுஞ் சேர்ந்து ஏறகுறைய 64-தோலா எடை இருக்கவேண்டும். இவைகளை 1024தோலா எடையுள்ள ஜலத்தில் இரவில் ஊறவைத்து மறுநாள் காலை அடுப்பேற்றிபேர்பாதிபாகம் மீரும்படியாக காய்ச்சி வடிகட்டி இரும்புப்பாணலில் போட்டுசெவ்வையாகக் காய்ச்சி இறக்கி அதில் வாய்விளங்கம், தந்திமூலம், திரிபலை,சீந்தில்கொடி, திப்பிலி,
    சிவதை, சுக்கு, மிளகு இவைகள் வகைக்கு 2-தோலா சூரணித்து போட்டுக் கலக்கி லேகியபதமாக செய்யவும்.
    இதைச் சாப்பிட்டு தனக்கிஷ்டமான போஜனம், குளிர்ந்த ஜலபானம் செய்தாலும்,குருத்ரசி, கஞ்சவாதம், பிலீகம், பங்குவாதம், பாண்டு, நமைச்சல், வாந்தி,வாதரக்தம் இவைகள் யாவும் நாசமாகும்.

    தூவாதிரிம்சக குக்குலு :-சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல்,கோரைக்கிழங்கு, வாய்விளங்கம், செவ்வியம், சித்திரமூலம், வசம்பு, ஏலரிசி,மோடி, சிவகரந்தை, தேவதாரு, செவ்வலிக்கொடி, கோஷ்டம், அதிவிடயம், மஞ்சள்,மரமஞ்சள், சீரகம், சுக்கு, சாதிப்பத்திரி, பேயாவரைவேர், சூரத்துகருப்புப்பு, வாய்விளங்கம், யவக்ஷ¡ரம், சத்திக்ஷ¡ரம், ஆனைத்திப்பிலி,இந்துப்பு இவைகள் வகைக்கு 1-பலமாக இவைகள் எடை களுக்கு சமமாககுங்கிலியத்தைச் சேர்த்து மேற்கூறிய பிரகாரம் மருந்து தயார்செய்துஇலந்தைப்பழம் பிரமாணம் மாத்திரைசசெய்து தேன் அல்லதி நெய் அனுபானத்தில்காலையில் மாத்திரம் சாப்பிட்டுவந்தால் , ஆமம், உதாவர்த்தம், அண்டவிரித்தி,சூதகிருமி, மகாசுரம், பூத யாதை, அநாஹரோகம், உன்மாதரோகம் குஷ்டரோகம்,பாரிசசூலைகள், ஹிருத்ரோகம், குருத்ரசி, ஹதுஸ் தம்பம், பக்ஷகாதம்,ஆபதானகம், சோ¨க்ஷ, பீலிகை, காமாலை இவைகள் யாவும் நீங்கும்.

    பிரமவாதத்திற்கு விச்வாத்திய குக்லு :-தண்ணீர்விட்டான் கிழங்கு, ஆமணக்குவேர், ஜடாமாஞ்சி, சுக்கு, மரமஞ்சள்,கோஷ்டம், இந்துப்பு, சிற்றரத்தை, சீந்தில்கொடி, இவைகள் யாவையும்
    சூரணித்து இந்த சூரணத்திற்கு 2 பாகம் சுத்திசெய்த குங்கிலிய சூரணத்தைகலந்து சேர்த்து மாத்திரைகள் செய்து தேக தத்துவத்தை அறிந்து கொடுத்தால்பிரமவாதம் முதல் நாட்பட்ட வாதப்பிணிகள் நிவர்த்தியாகும். இதைபத்தியத்துடன் சாப்பிடவும்.

    வேறுமுறை :-சுக்கு, திப்பிலி, திப்பிலிமூலம், வாய்விளக்கம் தேவதாரு, இந்துப்பு,சிற்றரத்தை, ஓமம், சித்திரமூலம், மிளகு கரும்வசம்பு, கடுக்காய் இவைகள்யாவையும் சமஎடையாகச் சூரணித்து
    இந்த சூரணத்திற்கு 2 பாகம் குங்கிலிய சூரணத்தை சேர்த்து நெய்யுடன்கொடுத்தால் வாதங்கள், சூலைகள், குன்மங்கள், பேதிகள் நடுக்கல், குதவாததோஷம் இவைகளைப் போக்கும்.

    அஸ்திமஜ்ஜாகதவாதத்திற்கு கேதகாதி தைலம் :-தாழம்பு, சிற்றாமுட்டி, போராமுட்டி, இவைகளின் ரசத்தில் நல்லெண்ணெய்சேர்த்து தைலபக்குவமாக காய்ச்சி சரீரத்திற்கு லேபனஞ்செய்தால் அஸ்திகவாதம்நீங்கும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:20 pm

    பாஹியாமவாதத்திற்கு சர்ஜ தைலம் :-தனுர்வாதத்திற்கு சர்ஜதைலத்தால் லேபனஞ்செய்து பிடித்தாலும் தசமூலகுடிநீரைஅருந்தினாலும் அல்லது நசியஞ்செய்தாலும் தனுர்வாதம் நசிக்கும்.(சர்ஜதைலமென்பது குங்கிலிய தைலம்).

    பக்ஷகாதவாதத்திற்கு கிரந்திகாதிதைலம்:-மோடி, சித்திர மூலம், சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு, இந்துப்பு இவைகளைகல்கஞ்செய்து உளுந்துக்கியாழம், எள் எண்ணெய் இவைகள் யாவையுஞ்சேர்த்துதைலபதமாக காய்ச்சி தேகத்திற்கு தடவிக்கொடுத்தால் பக்ஷகவாதம் நீங்கும்.

    பக்ஷகாதவாதத்திற்கு மாஷாதிதைலம்
    :-உளுந்து, போயா வரை, அதிவிடயம், ஆமணக்குவேர், சிற்றரத்தை, தண்ணீர்விட்டான்கிழங்கு, இந்துப்பு இவைகளை சூரணித்து உளுந்து சிற்றா முட்டிஇவையிரண்டையும் கியாழம் வைத்து கியாழத்திற்கு காலில்ஒரு பாகம் எண்ணெய்வார்த்து மேற்கூறியவைகள் யாவும் ஒன்றாய்க்கலந்து தைலபதமாக காய்ச்சிசரீரத்திற்கு தடவிக்கொடுத்தால்பக்ஷகவாதம் நீங்கும்.

    சர்ஜ தைலம் :- குங்கிலியத்தை சூரணித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி வடித்து சரீரத்திற்கு தடவினால் பக்ஷ¡காதவாதம் நீங்கும்.

    மஹாவிஷ கர்ப்ப தைலம் :-ஊமத்தன், நொச்சி, சுரை,சாரணை, ஆமணக்குவேர், அமுக்கிறாக்கிழங்கு,தகரைச்செடி, சித்திரமூலம், முருங்கைப்பட்டை, மணத்தக்காளி, தானிக்காய்,வேப்பன், மலைவேப்பன், ஈசுரமூலி, தசமூலங்கள், தண்ணீர்விட்டான்கிழங்கு,பாவல், வெள்ளை, நன்னாரிவேர், சிவகரந்தை, நிலப்பூசனி, கள்ளிப்பால்,எருக்கன், மருதம்பட்டை, வெள்ளை சிகப்பு அலரி, வசம்பு, வெலுமசந்தி,நாயுருவி, சிற்றாமுட்டி, பேராமுட்டி, முள்ளங்கத்திரி, ஆடாதோடை,முதியார்கூந்தல், இவைகள் வகைக்கு 4-தோலா எடை சூரணித்து 1024-தோலா எடைசலத்தில்போட்டு நாலிலொன்றாக குடிநீரிட்டு அதில் திரிகடுகு, எட்டிகொட்டை,சித்தரத்தை, கோஷ்டம், அதிவிடயம், கோரைக்கிழங்கு, தேவதாரு, வசநாபி,யவக்ஷ¡ரம், வெண்காரம், இந்துப்பு, பிடா
    லவணம், சூரத்து கரும் உப்பு, கடல் உப்பு, மயில்துத்தம், பெருங்காயம்,சுக்கு, கண்டுபாரங்கி, நவாச்சாரம், அழவனை, பேயாவரைவேர், சீரகம், பெரியசதாப்பிலை இவைகள் சமஎடையாகச் சூரணித்து இந்தச் சூரணம் 16-தோலா, 64-தோலாஎண்ணெய் இவைகள் யாவையும் ஒன்றாகச் சேர்த்துமந்தாக்கினியால் தயிலபதமாக
    காய்ச்சி தயார் செய்யவேண்டியது. இந்த தயிலத்தை தேகத்திற்கு தடவினால்வாதங்கள் யாவும் நீங்கிவிடும். சர்வாங்கத்திலும் சந்திகளிலும்உள்ளவாதங்கள் ஆட்யவாதம், குததோஷவாதம், மஹாவாதம்,
    தண்டபதாளகம், கர்ணநாதம், திமிர்வாதம் இவையாவும் காட்டில் சிங்கத்தைபார்த்தால் மற்றமிருகங்கள் ஓடுவதுபோல் பறந்தோடும் ஆனை குதிரை இவைகளின்மீதிருந்து விழுந்து நரம்புகள்
    எலும்புகள் உடைந்தது தீராவினையையும் பாதையையும் கொடுக்கிற நோய்களையும்தீர்த்துவிடும். பசுக்களுக்கு வாதரோகமிருந்தாலும் இந்த தைலத்தைதடவிவந்தால் அதின் பிணியையும் தீர்க்கும்.

    பிரசாரிணீ தைலம் :-முதியார்கூந்தல்செடி சமூலமாக இடித்துப் பிழிந்தசாறு 400-தோலாஎடை, தயிர்256-தோலாஎடை, காடி 512-தோலாஎடை, நல்லெண்ணெய் 100-தோலாஎடை இவைகளை ஓர்தைலப்பாண்டத்திலிட்டு அதில் சுக்கு 20-தோலா, சிற்றரத்தை 8-தோலா,முதியார்கூந்தல் 8-தோலா, அதிமதுரம் 8-தோலா இவைகள் யாவையும் சூரணித்துமேற்கூறியதிரவத்தில் சேர்த்து மந்தாக்கினியில் தயிலபதமாக காய்ச்சிதேகத்திற்கு தடவினாலும் அல்லதுநசியஞ்செய்தாலும் ஏகாங்கவாதம்,சர்வாங்கவாதம், அபஸ்மாரம், உன்வாதம், வித்திரதி, அக்கினிமந்தம்,சர்மரோகம், பிடிப்புசந்திகளி லிருக்கும் வாதங்கள், சுக்கிரவாதம்,ரஜோகவாதம் முதலிய சகல வாதங்களும் போம். இன்னும் இதுபுருஷனுக்குவீரியவிருத்தியும், மலடிகளுக்கு கர்ப்பத்தையும் உண்டாக்கும்,கிழவர்கள்பாலர்கள், இராஜாக்கள் இவர்களுக்கு மிகவும் சவுக்கியத்தைதரும்.

    சதாவரீதைலம் :-தண்ணீர்விட்டான்கிழங்கு, சிற்றாமுட்டி, போராமுட்டி, சித்தாமல்லி,நிலக்கடம்பு, ஆமணக்குவேர், அமுக்கிறாக்கிழங்கு, நெரிஞ்சல், வில்வம்,நாணல், அழவணை இவைகள் வகைக்கு
    1 1/2 பலம் அரைத்து கற்கம் செய்து அதற்கு நாலுபாகங்கள் அதிகமாக ஜலம்விட்டு காய்ச்சி நாலில் ஒரு பாகம் மீறும்படி படியாக குடிநீரிட்டு வடிகட்டிஅதில் எண்ணெய் 20 பலம், பசும்பால் 20 பலம், தண்ணீர்விட்டான்கிழங்கு 20பலம், ஜலம் 20 பலம், அதில் தண்ணீர்விட்டான்கிழங்கு, தேவதாரு, ஜடாமாஞ்சிகிரந்திகரம், சந்தணத்தூள், பெரியசோம்பு, சிற்றாமுட்டி, கோஷ்டம், ஏலக்காய்,கல்லுப்பு, கருஅல்லி, நிலப்பனை, அதிமாதூரம் இலுப்பைமரப்பட்டை,அமுக்கிறாக்கிழங்கு, பூசினிக்கிழங்கு, தினுசுகள் வகைக்கு 1/4 பலம்பிரமாணம் அரைத்து கற்கம் செய்துஅத்துடன் சேர்த்து கோமலத்தால் செய்தஎருமுட்டைகளால் எரித்து
    தைலபக்குவமாக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டியது. இந்த தைலத்தைபுருஷர்கள் தேகத்திற்கு தேய்த்துக்கொண்டால் காமம் அதிகரித்து பிரதிதினம்மாதரின் புணர்ச்சியைவிடார்கள். மாதர்கள் சரீரத்திற்குலேபஞ் செய்தால்யோனி சூலைகள் நசிந்து பிள்ளைகளைப்பெருவார்கள். அங்கசூலைகள் சிறோசூலைகள்,காமாலை, பாண்டு, விஷ்பாதை, குருதசீவாதம், பீலிகை சோஷை, மேகங்கள்,தாபத்துடன் கூடிய வாதாக்தம், பித்தத்தினால் உண்டாகிய மாதரின் பெரும்பாடுநோய், பிரமேகம், இரத்தபித்தம் இவைகள் நீங்கும்.

    மாஷதைலம் :-உளுந்து 64 தோலா 256 தோலா எடையுள்ள ஜலத்தில் போட்டு நாலிலொன்றாக கியாழம்வைத்து அந்த கியாழத்திற்கு நாலு பங்கு பசும்பாலும் 64 தோலா எடைநல்லெண்ணெய்யும் சேர்த்து ஜீவநீயகணத்தில் சொல்லிய 8 சரக்குகள் அதாவதுசோம்பு, இந்துப்பு, சிற்றரத்தை, அதிமதூரம், சிற்றாமுட்டி சுக்கு, மிளகு,நெரிஞ்சல், திப்பிலி இவைகள் வகைக்கு 1 தோலாவீதம் கற்கம் செய்து அதில்விட்டு தைலபக்குவமாகக்காய்ச்சவும் இந்த தைலத்தை உள்ளுக்கு குடித்தாலும்அல்லது மேலுக்கு தடவினாலும் அல்லது வஸ்திரகர்மஞ்செய்தாலும்பக்ஷகாதம்,அர்தித வாதம், கர்ணசூலை, செவிடு, திமிர்ரோகம் சந்நிபாதரோகம், கைநடுங்கல்,கைகள்சுழங்கித்தல், கழுத்துவலி இழுப்பு, முதலிய கழுத்துரோகங்கள் நீங்கும்.

    சதாவரிநாராயணதைலம் :-சதாவரி, சிற்றாமல்லி, நிலக்கடம்பு கிச்சிலிக்கிழங்கு, சிற்றாமுட்டி,ஆமணக்குவேர், முள்ளங்கத்திரி கண்டங்கத்திரி, முதியார்கூந்தல், புங்கண்,முள், அழவணை இவைகள் வகைக்கு 40-தோல, 5024-தோலாஎடை ஜலத்தில்ப்போட்டுகியாழம் நாலில் ஒருபங்கு மீறும்படிக் காய்ச்சி வடிகட்டி அதில்வெள்ளைச்சாரணை, வசம்பு, மரமஞ்சள், தண்ணீவிட்டான்கிழங்கு, சந்தனம்,கிருஷ்ணாகரு, சிலாசத்து, கிரந்திதகரம், கோஷ்டம், கல்லுப்பு, ஏலக்காய்,ஜடாமாஞ்சி, துளசி, சிற்றாமுட்டி, அமுக்கிறாக்கிழங்கு, இந்துப்பு,சிற்றரத்தை, மஞ்சிஷ்டி, கோரைக்கிழங்கு, கிரந்திதகரம், காட்டுமிளகு, ஞாழல்இந்த தினுசுகள் வகைக்கு 6-தோலா கற்கஞ்செய்து பசும்பால், ஆட்டுபால் இவைகள்தனித்தனி 2-சேர்கள் தண்ணீவிட்டான்கிழங்கு ரசம் 1-சேர், எண்ணெய் 1-சேர்இவைகள் யாவையும் சேர்த்து தைலப்பதமாகக் காய்ச்சி இறக்கிகொண்டு கிராம்பு,நகமென்கிற வாசனைதிரவியம், தக்கோலம், வாய்விளங்கம்,சீரகம், இலவங்கப்பட்டை,கடுகுரோகணி, பச்சைக்கற்பூரம், குங்கு மப்பூ, கஸ்தூரி இவைகள் யாவையும்சூரணித்து தைலத்தில் போடவும். இந்த தைலத்தை வாதரோகத்தால் பீடிக்கப்படும்குதிரைகளுக்கு, ஆனைகளுக்கு, மனிதர்களுக்கு தடவினால் சகல வாதங்கள்
    நாசமாகும். மனிதர்கள் அதை உட்கொண்டால் தீர்க்காயுசு பலம் நிச்சயமாய்உண்டாகும். ஹிருதயசூலை, பாரிச்சூலை, ஒற்றை தலைநோய், கண்டமாலை, வாதரக்தம்,காமாலை, அஸ்மரீ, பாண்டு, உன்மாதம் இவைகளை நீங்கும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:21 pm

    பிரசாரீணீ தைலம் :-முதியார்கூந்தல் சமூலம் 300-தோலா, தண்ணீவிட்டான்கிழங்கு 400-தோலா,அமுக்கிறாக்கிழங்கு 400- தோலா, தாழம்பூ இதழ்கள் 400-தோலா, தசமூலம்பிரத்தியேகம்
    400-தோலா, ஜலம் 102400-தோலா, இவைகளை 1024-தோலா கியாழன் மீரும்படியாகசுண்டக்காய்ச்சி அதில் கியாழத்திற்கு இரண்டு பாகம் அதிகமாக புளித்தசலம்,தயிர்மூதுதேட்டை, பால், வெள்ளைக்
    கரும்புரசம், ஆட்டுக்கரிரசம் இவைகள் பிரத்தியேகம் 1024-தோலாஎள் எண்ணெய்1024-தோலா இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து பிறகு சேராங்கொட்டை,கிரந்திதகரம், சுக்கு, சித்திரமூலம், திப்பிலி, கிச்சிலிக்கிழங்கு,வசம்பு, முதியார்கூந்தல், மோடி, தேவதாரு, தண்ணீவிட்டான்கிழங்கு, ஏலக்காய்,இலவங்கப்பட்டை, வெட்டிவேர், குங்குமப்பூ, மஞ்சிஷ்டி,கருப்புசேராங்கொட்டை, நகமென்கிற வாசனைதிரவியம், அகரு, பச்சைக்கற்பூரம்,மஞ்சள், கிராம்பு, காமாக்ஷ¢புல், சந்தனம், தக்கோலம், நாயுருவி,கோரைக்கிழங்கு, மரமஞ்சள், கோஷ்டம், கிச்சிலிக்கிழங்கு, காட்டுமிளகு,சிலாரசம், கிருஷ்ணாகரு, தாழம்பூ, திரிபலை, கற்பூரகிச்சிலிக்கிழங்கு,புஷ்கரமூலம், க்ஷ£ரகாகோளி, காட்டுப்பச்சைபயறு, காட்டு உளுந்து,வெள்ளைத்தண்ணீவிட்டான்கிழங்கு, நிலப்பனை, சாரனை, சசமூலங்கள், போளம்,ரக்தபோளம், நாககேசரம், ரசாஞ்சனம், கடுகு ரோகணி, பின்னங்காய் இவைகள்வகைக்கு 12-தோலா விகிதம் சேர்த்து கற்கஞ்செய்து மந்தாக்கினியால்தயிலபதமாகக் காய்ச்சிஅப்பியங்கனம் செய்தால் சருமரோகம் நீங்கும். பானம்செய்வதால் கோஷ்டகதவாதமும் அன்னத்துடன் கலந்து சாப்பிட்டால்குஷ்மநாடிகவாதமும், நசியம் செய்தால் ஊர்த்துவதகதவாதமும்வஸ்திகர்மம்செய்தால் பக்ஷ¡சிரிதவாயுவும், நிரோஹிகிரியை செய்தால்சர்வாங்கவாதமும் போம். வாதம், பித்தம், கபம், தொந்தம் சந்நிபாத சம்பந்தமானசுவஸ்தமாகும்.

    விஷகர்ப்பதைலம் :-நொச்சி, கரிசனாங்கண்ணி, ஊமத்தன் இவைகளின் ரசங்கள் கோமூத்திரம் இந்ததினுசுகள் வகைக்கு 64 தோலா வசம்பு, கோஷ்டம், ஊமத்தம்விரை, காயபலம்இவைகள் வகைக்கு 2 பாகம் இவைகள் யாவையும் கற்கம் செய்து கலந்துகல்கத்திரவியங்களுக்குச் சமம் வசநாபியும் எள் எண்ணெய் 64தோலா எடையுஞ்சேர்த்து தைலபக்குவமாகக்காய்ச்சி மேலுக்கு தடவி பிடிக்கச்செய்தால்வாதவியாதி நிவர்த்தியாகும்.

    இத்தைலத்தில் நாபி, ஊமத்தை, முதலிய கொடிய நஞ்சுச்சரக்குகள் சேர்ந்திருப்பதால் இந்தத்தைலம் வாயில் படாதபடி கவனிக்கவும்.

    மஹாபலாதி தைலம் :-சிற்றாமுட்டிவேர், தசமூலங்கள், யவ தானியம், இலந்தை, கொள்ளு இவைகளைசமஎடையாகக் கொண்டு முறைப்படி எட்டிலொன்றாக காய்ச்சிய கியாழம் பசும்பால்இவைகள் வகைக்கு 8 பாகங்கள் இந்துப்பு, அகருகுங்கிலிய்ம் சரளதேவதாரு,தேவதாரு, மஞ்சிஷ்டி, சந்தணம், கோஷ்டம், எலக்காய்
    இலந்தை, தண்ணீர்விட்டான்கிழங்கு, பன்னீர்கிழங்கு, சதாப்பிலை சாரணை இவைகளைசமஎடையாக கற்கஞ்செய்து கியாழத்தின் எடையில் எட்டிலொன்றை சேர்த்துதயிலபதமாகக்காய்ச்சி பொன்பாத்திரத்திலாவது
    அல்லது வெள்ளிப்பாத்திரத்திலாவது அல்லது மண்பாத்திரத்திலாவது உபயோகித்தால் சகலவாதரோகங்கள் நிவர்த்தியாகும்.

    சிசுவைப்பெற்றவளுக்கு தேகபலத்தை அறிந்து கொடுத்தால் பிரசவத்திலுண்டான ரோகங்கள் நீங்கும்.
    மலடிக்கு கொடுத்தால் கர்ப்பிணியாவாள். புருஷனுக்கு கொடுத்தால் நஷ்டவீரியம்விரித்தியாகும். தேகதத்துவத்தை அறிந்து கொடுத்தால் ஷீணகாதம், மர்மகாதம்,தண்டாகாதம், பீடை அஸ்திபங்கம், ஆஷேபகாதவாதங்கள் இவைகள் யாவும்நிவ்ர்த்தியாகும்.

    சந்தனாதிக்தைலம் :- சந்தனம்,தாமரைத்தண்டுகள், கோஷ்டம் வெட்டிவேர், தேவதாரு, சிறுநாகப்பூ,இலவங்கப்பத்திரி,ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஜடாமாஞ்சி, கிரந்திதகரம், வெட்டி
    வேர், ஜாதிக்காய், கழற்சிக்காய், குங்குமப்பூ, ஜாபத்திரி, நகமென்கிறவாசனைதிரவியம், குங்கிலியம், கஸ்தூரி, ஓமம், இஞ்சிரசம், புஷ்க்கரமூலம்,கோரைக்கிழங்கு, ரக்த சந்தனம், நன்னாரிவேர், கிச்சிலிக்கிழங்கு,பச்சைக்கற்பூரம், மஞ்சிஷ்டி, அரக்கு, அதிமதுரம், கடுகுரோகணி, பெரியசோம்பு,தண்ணீவிட்டான்கிழங்கு,
    பெருங்குரும்பை, அமுக்கிறாக்கிழங்கு, சுக்கு, தாமரைப்பூ, கிருஷ்ணா கரு,காட்டுமிளகு, கிராம்பு, தக்கோலம், இவைகள் வகைக்கு 2-தோலா சேர்த்து கியாழம்வைத்தது 1-பாகம், தசமூல கியாழம் 6-பாகம், பால் 6-பாகம், நவதானியம்,இலந்தை, கொள்ளு, சிற்றாமுட்டி இவைகளின் கியாழம் தனித்தனி 1-பாகம்,இவைகளையாவும் ஒன்றாகச்சேர்த்து இதில் பதினாறிலொருபாகம் எண்ணெயை விட்டுதைலபதமாகக் காய்ச்சி, பாண்டத்திற்கு துபாதிவாசனை கொடுத்தி அதில் தைலத்தைவார்த்து வைக்கவும். இதை முடித்தைலமாகவும், பிடித்தைலமாகவும்உபயோகப்படுத்திவர 80-வாதங் கள், கருப்பினிரோகம், பாலரோகம், க்ஷ£ணவாதம்,தாபயுக்தமான ஜீரணசுரம், சீதசுரம், விஷமசுரம், சோஷை, அபஸ்மாரம்,குஷ்டரோகம், நமைச்சல், அதிஉஷ்ணம், வெள்ளைகுஷ்டம், இவைகள்நீங்கும்.மலடிக்கு சந்தானமுண்டாகும். இன்னும் இதனால் தேஜசு, புஷ்டி இவைகள்உண்டாகும்.

    ராஸ்னாபூதிக தைலம் :-தசமூலங்கள், சிற்றாமுட்டி, மரமஞசள், அமுக்கிறாக்கிழங்கு, தண்ணீர்விட்டான்கிழங்கு, ஆமணக்குவேர், நொச்சிவேர், முருங்கை வேர்ப்பட்டை,கரும்புவேர், அழவணை, சித்திரமூலம், புங்கன், முள்ளங்கி, சாரணை,நிலகாளான்,எருக்கன், பேயாவரை, சீந்தில்கொடி, எட்டிகொட்டை, சிகப்புஆமணக்குவேர், ஜடாமாஞ்சி, செம்பருத்தி, நவதானியம், இலந்தை, கொள்ளு இவைகளுக்குசமஎடை சித்தரட்தை இவைகள் யாவுக்கும் சமஎடை புங்கன்பட்டை இவைகளை கியாழம்க்காய்ச்சி எட்டில் ஒரு பாகமாக இறக்கிகொண்டு கக்ஷ¡யத்திற்கு நாலில் ஒருபாகம் எண்ணெய் இதற்கு சமஎடை ஆட்டுப்பால் சேர்த்து குங்கிலியம்,கிரந்திதகரம், ஜடாமாஞ்சி, திரிகடுகு, திரிபலை,இலவங்கப்பட்டை,இலவங்கப்பத்திரி, ஏல்க்காய், நாககேசரங்கள்,கிச்சிலிக்கிழங்கு, வாய்விளங்கம், தேவதாரு, பெருங்காயம், சித்தரத்தை,வசம்பு, கடுகுரோகணி, அதிமதுரம், சுக்கு, சித்திரமூலம், ஞாழல்,மோடி,சந்தனம், செவ்வியம், ஓமம், கிராம்பு, சம்பங்கி மொக்கு, கோஷ்டம்,மஞ்சிஷ்டி, பெரிய சோம்பு, வெள்ளை கடுகு, ஜாதிக்காய், வாசனைப்புல்,வெட்டிவேர் இவைகள் யாவையுஞ் சூரணித்து எண்ணைக்கு ஆறிலொருபாகமாககற்கஞ்செய்துச்சேர்த்து மந்தாக்
    கினியால் தைலப்பக்குவமாக காய்ச்சி வடிக்கவும். இதை பானம், லேபனம்சிரோவஸ்தி, முதலியவைகளாகப்பயன்படுத்த தனுர்வா தம், அந்தராயாமவாதம்,குதவாதம், அவபஹீவாதம், ஆ§க்ஷபகவாதம், பிராணயாமவாதம், விசுவாசீவாதம்,அபதந்திரிகாவாதம் ஆடியவாதம், ஹனுஸ்தம்பவாதம், சிராவாதம்,அபதானகவாதம்தூம்ரதவாதம், சங்கவாதம், கர்ணவாதம், நாசாவாதம், பக்குவாதம்சர்வாங்கவாதம், ஏகாங்கவாதம், அர்த்திதவாதம், பாதஹாரிசாவாதம் பக்ஷகாதவாதம்,ஊருஸ்தம்பவாதம், சப்தவாதம் இவைகள்
    யாவும் நீங்கும்.

    பலா தைலம் :-சிற்றாமுட்டி 8 பாகம், தசமூலங்கள் 8 பாகம், கொள்ளு, இலந்தைவிரைப்பருப்பு,இவைகள் வகைக்கு 8 பாகம் மேற்கூறியவைகளை 32 பாகம் ஜலத்தில் விட்டு எட்டில்ஒரு பாகமாக
    கியாழம் விட்டு வடிகட்டிக்கொண்டு அந்தக்கியாழத்துடன் பால் 8 பாகம், எள்எண்ணெய் 1 பாகம், இவைகள் யாவையுஞ்சேர்த்து அதில் தண்ணீர்விட்டான்கிழங்கு,கோஷ்டம், தேவதாரு, அகரு, இந்துப்பு வசம்பு, வெள்ளைச்சாரணை, ஜடாமாஞ்சி,வெள்ளைநன்னாரிவேர், இலவங்கப் பத்திரி, பெரியசோம்பு, அமுக்கிறாக்கிழங்கு,ஏலக்காய், இவைகள்யாவையும் எண்ணெய்க்கு நாலில் ஒரு பாகமாக கல்கஞ்செய்துஅத்துடன் கலந்து தைலபக்குவமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டியது.

    இதை உபயோகித்தால் சகல வாத ரோகங்கள் நிவர்த்தியாகும். மலடிகள் இதைச்சாப்பிட்டால் புத்திரவதியாவார்கள் தாது க்ஷணமான புருஷன் சாப்பிட்டால்தாதுவிருத்தியாகும். மிகவும் ஆயாசத்தை உடையவர் தடவினால் ஆயாசம்நிவாரணமாகும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:21 pm

    கிரீஸ்வதம்பாதி வாதத்திற்கு மாஷாதிதைலம் :- உளுந்து, யவதானியம், முள்ளங்கத்திரி, அகத்திவிரை, பூனைகாஞ்சொரிவிரை, அழவணை, நெரிஞ்சல், புணற்றண்டு, இவைகள் வகைக்கு
    7 பலம் இவைகளை 224 பலஞ் சலத்தில் போட்டு சதுர்சாம்தமாக கியாழம் காய்ச்சிவடிகட்டி, பருத்திவிரையிலுள்ள பருப்பு, இலந்தை விரையிலுள்ள பருப்பு,கொள்ளு இவைகள் வகைக்கு 14 பலங்கள் விகிதம் காய்ச்சிவடிகட்டி ஆட்டுமாமிசம்20 பலம் 64 பலம் சதூர் தாமிசமாக கியாழம் காய்ச்சி வடிகட்டி 20 பலம்எண்ணெய் இவைகள்
    யாவையும் சேர்த்து சுக்கு, மிளகு, சிற்றரத்தை, சீந்தில்கொடி கோஷ்டம்,வெள்ளைச்சாரணை, ஆமணக்குவேர், திப்பிலி, பெரிய சோம்பு, சிற்றாமுட்டிவேர்,முதியார் கூந்தல், ஜடாமாஞ்சி,
    கடுகுரோகணி, இவைகள் யாவையும் 1/2 பலம் வீதம் கல்கஞ்செய்து அதில் கலந்துசிறு தீயில் எரித்து தைலபதமாக காய்ச்சவும் . இதைத்தடவினால்கழுத்துநம்பவாதம், பாஹீகவாதம், அர்த்தாங்கவாதம் ஆஷேபகவாதம், அபதானகவாதம்,ஹஸ்தபாதாதிசாகாகம்பம், சிரோகம்பம், விசுவாசீவாய்வு, அர்திதவாதம், இவைகள்யாவுங் குணமாவதுடன் சகல வாதங்களும் நாசமாகும்.

    மாஷ தைலம் :-உளுந்து 4-சேர் பாண்டத்தில்போட்டு 32-சேர் ஜலம்விட்டு நாலில் ஒரு பாகமாகக்காய்ச்சி பால்கீரை, சிறிய சதாப்பிலை, திரிகடுகு, தும்பராஷ்டகம்,அதிமதுரம், இந்துப்பு, பூனைகாஞ்சொரிவிரை இவைகள் 1/4 சேர் சூரணஞ்செய்துசேர்த்து நல்லெண்ணெய் 4-சேர், பால் 16-சேர் இவைகள் யாவையும் ஒன்
    றாகச் சேர்த்து தைலபதமாகக் காய்ச்சி சரீரத்திற்கு தடவிப்பிடிக்க அஸ்திவாதம், நடுக்குவாதம், கம்பவாதம், பாதிரியரோகம் இவைகள் நீங்கும்.

    ஆமலாதி வாதத்திற்கு விஷதிண்டுக தைலம் :-எட்டிக்கொட்டை 4-சேர், கழுநீர் 32-சேர் வார்த்து நாலில் ஒன்றாக சுண்டக்காய்ச்சி புதியவஸ்திரத்தினால் வடிகட்டி அதில் எலுமிச்சம்பழச்சாறு 8-சேர் இவைகள் யாவும்ஒன்றாகக் கலந்து தைலப்பக்குவமாகக் காய்ச்சி சரீரத்திற்குதடவிக்கொண்டிருந்தால் சர்வாங்கவாதம், சந்நிவாதம், அஸ்திவாதம், அமிலவாதம்,கபவாதம், கோரமான வாதசூலைகள், ஊருதம்பவாதம், தனுர்வாதம் இவைகள் நீங்கும்.

    கர்ணவாதத்திற்கு தசமூலாதி தைலம் :-வில்வம், பூசினி, முன்னை, பாதிரி, பெருவாகை, சிற்றாமல்லி, நிலக்கடம்பை,பெரிய முள்ளங்கத்திரி, நெரிஞ்சல், இவைகள் சமஎடையாகச் சேர்த்து
    கியாழம்ப்போடு கியாழத்திற்கு சமஎடை ஆட்டுப்பால் சேர்த்து இந்த இரண்டுக்குசமம் எண்ணெய் வார்த்து தயிலபதமாகச்சமைத்து காதில்விட்டால் செவிடு,சத்தமுண்டாகுதல் இவைகள் நீங்கும்.

    சகல வாதத்திற்கு அர்க்காதி தைலம் :-எருக்கன்பால், ஆட்டுப்பால், நொச்சியிலைரசம், புளியிலை ரசம், எண்ணெய்இவைகள் சமஎடையாக பாண்டத்தில்ப்போட்டு தயிலப்பக்குவமாக காய்ச்சிசரீரத்திற்கு லேபனஞ்செய்தால் 80-வாதங்கள் நீங்கும்.

    ஏரண்டபுட பாகம் :-ஆமணக்கு விரையிலுள்ள பருப்பை எடுத்துக்கொண்டு அதற்கு எட்டுபாகம் அதிகமாகபாலைவார்த்து அந்தப்பால் சுண்டுகிற வரையிலும் வேகவைத்து எடுத்துஉலர்த்தி மைபோலரைத்து சிறிது நெய்விட்டு சிறுதீயால் வதக்கி ஆ ய பிறகுஅதில் திரிகடுகு, இலவங்கம், ஏலக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி,சிறுநாகப்பூ, அமுக்கிறாக்கிழங்கு, ஜடாமாஞ்சி,சிற்றரத்தை, கருவசம்பு,காட்டுமிளகு விதைகள், தண்ணீர்விட்டான்கிழங்கு, லோகபஸ்பம், சாரணை,கடுக்காய், வெட்டிவேர், ஜாதிக்காய், ஜாபத்திரி, அப்பிரகபஸ்பம், இவைகளைசமஎடையாகச் சேர்த்துச் சூரணித்து இவைகள் யாவும் ஒன்றாகக் கலந்துமேற்கூறியசகல சரக்குகளுக்கும் சமஎடையாக சர்க்கரைய பாகுபிடித்து அதில் சரக்குகளைப்போட்டு சகலமும் ஒன்றாக சேரும் படியாகத் திரட்டி எடுக்கவும். இம்மருந்தைகாலையில் சாப்பிட்டு வந்தால் 80 வித வாதரோகங்கள், 40 வித பித்தரோகங்கள்8 வித உதரரோகங்கள், 21 வித மேகசாட்டியங்கள், 60 விதங்களான நாடி விரணங்கள்,18 வித குஷ்டவியாதிகள், 7 விதமான க்ஷய ரோகங்கள், 5 வித பாண்டுரோகங்கள், 6வித சுவாசரோகங்கள், 4 வித சங்கிரஹைகள், திருஷ்டிரோகங்கள்,சகலவாதரோகங்கள் இவைகள் யாவும் நாசமாகும். இதனைச்சாப்பிடும்போது பத்தியமாகச் சாப்பிடவேண்டியது. இது அனுபவமானது.

    ரசோன பாகம் :-வெள்ளைப்பூண்டு மேல்தோல் நீக்கியது 64 தோலா இதை மோரில் ஊறவைத்து மறுநாள்அரைத்து 246 தோலா பாலில் கரைத்து அடுப்பிலேற்றி காய்ச்சி கோவா ஆகும் படிகிளறிக்கொண்டு அதில் 16 தோலா நெய் விட்டு சிற்றரத்தை,தண்ணீர் விட்டான்கிழங்கு, ஆடாதோடை, சீந்தில்கொடி, கிச்சிலிக்கிழங்குசுக்கு, தேவதாரு, திப்பிலி, மிளகு, ஓமம், சித்திரமூலம் பெரியசோம்பு,வெள்ளைச்சாரணை, வாய்விளக்கம் இவைகள் வகைக்கு 1 தோலா வீதம் சூரணித்துப்போட்டு ஆறிய பிறகு எடுத்து 16 தோலா தேன் கலந்து வைத்துக்கொள்ளவும். அதைசர்க்கரை அனுபானத்துடன் சாப்பிட்டால் ஆடியாவாதம் ஹதுக்கிரஹவாதம்,ஆஷேபகவாதம், ஊருஸ்தம்பவாதம், ஹிருத்ரோகம், சர்வாங்கவாதம்சந்நிபாதவாதம்இவைகள் நீங்கும். சரீரகாந்தி, தேகபுஷ்டி ஆயுசுவிருத்தி, இவைகள் உண்டாகும்.

    குபேர பாகம் :-சுமார் 50 தோலா எடையுள்ள சுழற்சிக்காயை ஒரு முடாஜலத்தில் ஒருநாள் பகலும்இரவும் ஊறவைத்து மறு நாள் காலையில் எடுத்து அதன் மேல் ஓட்டை எடுத்துவிட்டு பருப்பை அரைத்து அதற்கு நாலு பங்கு அதிகமாக பாலும் நெய்யும் கலந்துஅடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பாலெல்லாஞ்சுண்டி ஈறமில்லாமல் இருக்கும்பதத்தில் ஆறிய பிறகு அதில் இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி சிறுநாகப்பு,ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி சோம்பு,சீரகம், கோரைக்கிழங்கு, இலவங்கம், சிற்றாமுட்டிவேர் மஞ்சள், மரமஞ்சள்,இவைகளின் சூரணங்கள் வகைக்கு 2 தோலா லோஹ பஸ்பம், தாம்பிரபஸ்பம்,வங்கபஸ்பம், இவைகளும் வகைக்கு 2 தோலா இவைகள் யாவையும் ஒன்றாய்ய்சேர்த்துபோதிய அளவு
    தேன்விட்டு இரசாயனம்போல் செய்து வைத்துக்கொண்டு தேகத்தின் பலத்தை அறிந்துகொண்டு 1/4 முதல் 1/2 தோலா வீதம் கொடுத்துவர சம்பூர்ணவாயு,அக்கினிமாந்தம், பலக்ஷயம், பிரமேகம், மூத்திர கிரிச்சரம், அஸ்மரீ,குன்மம், பாண்டு, பீனசம், கிறாணி, அதிசாரம், அருசி இவைகளைநிவர்த்திக்கும். காமவிருத்தி, தாதுவிருத்தி, காந்திபுஷ்டி பலம் இவைகளையுண்டாக்கும்.

    லசுனபாகம் :-1024-தோலா பாலில் மேல்தோல் போக்கியவெள்ளைப்பூண்டு 64-தோலா போட்டுவேகவைத்து அதில்16-தோலா நெய்விட்டு தேன்நிறம் ஆகுறவரையிலும் காய்ச்சி128-தோலா சர்க்கரையையும், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப்பட்டை,இலவங்கப்பத்திரி, ஏலரிசி, சிறுநாகப்பூ, மோடி, செவ்வியம், சித்திரமூலம்,வாய்விளங்கம், மஞ்சள், மரமஞ்சள், சிவக்கரந்தை, புஷ்கரமூலம், ஓமம்,இலவங்கம், தேவதாரு, சாரணை, நெருஞ்சில், வேப்பன், சித்தரத்தை, சோம்பு,தண்ணீர் விட்டான் கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு,பேயாவரைவிரை,இவைகள் வகைக்கு 1-தோலா சூரணித்துப் போட்டு கலக்கி இரசாயணம்போலசெய்து வைத்துக்கொண்டு நோயின் பலாபலத்தை அறிந்து வழங்கிவர சகலவாதரோகங்கள், சூலைகள், அபஸ்மாரங்கள், உரக்ஷதரோகம், குன்மம், உதரம்,வாந்தி, பிலீகை, அண்ட விருத்தி, கிருமிகள், மலபந்தம், அநாஹவாதம், வீக்கம்,அக்கினிமந்தம், பலக்ஷயம், விக்கல், இரைப்பு, இருமல், அபதந்திரகவாதம்,
    தனுர்வாதம், அன்தராயாமவாதம், பக்ஷவாதம், அபதானகவாதம், அர்திதவாதம்,ஆ§க்ஷபகவாதம், குப்ஜவாதம், ஹநுக்கிரஹவாதம்,சிரோகிரஹவாதம், விசுவாசீவாதம்,கிருத்தசீவாதம், கல்லிவாதம், பங்குவாதம், சந்நிவாதம், பதிரத்துவம்,சகலசூலைகள், கபம்முதலிய வியாதிகளை வெகுசீக்கிரமாக நிவர்த்திக்கும்.இந்தவெள்ளைப்பூண்டு
    லேகியமானது வாதரோகமென்கிற யானைக்கு சிங்கத்தைப்போல் இருக்கும். வலிவு புஷ்டி இவைகளையுமுண்டாக்கும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:22 pm

    ஆட்யவாதத்திற்கு பிரபாவதி வடுகங்கள் :-சுத்திசெய்த இரசகற்பூரம் 1-பாகம், சுத்திசெய்தகெந்தி 1/2-பாகம்,வாய்விளங்கம் 1/2-பாகம், கிறாம்பு 1-பாகம், ஜாதிப்பத்திரி 1-பாகம்,ஜாதிக்காய் 1-பாகம், ஏலக்காய் 1-பாகம், சுக்கு 1-பாகம், திப்பிலி 1-பாகம்,மிளகு 1-பாகம் இந்த தினுசுகள் யாவையுஞ் சூரணித்து கல்வத்தி லிட்டுதேன்விட்டு ஒருஜாமம் அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து வேளைக்குகொருமாத்திரை விகிதஞ் சாப்பிட்டால் ஆட்யவாதம் நீங்கும்.

    பங்குவாதத்திற்கு பிரபாவதி வடுகங்கள் :-மஞ்சள், வேப்பன் இலை, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், கோரைக்கிழங்கு,சீரகம், சுக்கு, சித்திரமூலம், இந்துப்பு, கோஷ்டம், அதிவிடயம்,வட்டத்திருப்பி, கடுக்காய்த்தோல் இவைகள் யாவையுஞ் சமஎடையாகச்சூரணித்துகல்வத்திலிட்டு வெள்ளாட்டு மூத்திரத்தினால் நான்கு ஜாமங்கள் அரைத்து கடலைஅளவு மாத்திரைகள் செய்து உலர்த்தி வேளைக்குகொரு மாத்திரையாகவெந்நீரில்கொடுத்துவர பங்குவாதம் குணமாகும். மற்றும் இதனை வெல்லத்துடன்கொடுக்க வாதநோய்களும்,கரிசாலை சாற்றில் கொடுக்க சிரோவாதம்,கோமூத்திரத்தில் கொடுக்க பீலிகநோய்களும், ஆட்டுப்பால் அமுக்கிறாக்கிழங்குசூரணத்துடன் கொடுக்க கக்ஷயகாசங்களும் குணமாகும். இம்மாத்திரையைகோமூத்திரத்தில் அரைத்து மேலுக்கு பூசவிஸ்போடக ரணங்களும், எருக்கன் பாலில்அரைத்து மேலுக்கு கடி வாயில் பூச தேள் கடி விஷமும் நீங்கும்.

    தசமூலத் தைலம் :- தசமூலமெனப்படும்கண்டங்கத்திரி, சிறு வழுதுளை, சிற்றாமல்லி, போராமல்லி, நெரிஞ்சில்,கூவினை, பெருங்குமிள், தழுதாழை, பாதரி வாகை என்னும் பத்து மூலிகைகளின்வேர்கள் வகைக்கொன்று பலம் 10 வீதம் நன்கு சதைத்து ஓர் பாண்டத்தில் விட்டுஇரண்டு தூனி ஜலம் விட்டு ஒரு மரக்கால் அளவிற்கு சுண்டக்காய்ச்சி வடித்துஅத்துடன் உழுந்து கியாழம் 1/2 படியும் நல்லெண்ணெய் ஒரு மரக்காலும்சேர்த்து எட்டிவிதை, விலாமிச்சவேர், ஏலம், கோரைக்கிழங்கு, சந்தனம்,செஞ்சந்தனம்,
    தேவதாரு, சரளதேவதாரு, கோஷ்டம், கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய்,அதிமதூரம், வெட்பாலைவேர்ப்பட்டை, சதகுப்பை நீர்முள்ளிவிதை, மஞ்சிஷ்டி,மரமஞ்சள், கூகை நீர், சுக்கு,
    மிளகு, திப்பிலி, இந்துப்பு, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம்வகைக்கு பலம் 1/2 வீதம் பொடித்து பால்விட்டரைத்து கற்க்கமாக்கி முன்திரவத்துடன் அடுப்பிலேற்றிப் பதமுறத்தைலங் காய்ச்சிவடித்து வைத்துக்கொள்க.

    இதில் வேளைக்கு 1/2 முதல் 1 தேக்கரண்டி வீதம் தினம் ஒரு வேளையாக உள்ளுக்குஅருந்திவர தலைக்கு தேய்த்தல் உடலில் பூசிப்பிடித்தல் முதலியவைகளும் செய்துவர நோய்கள் யாவும் வெகு சீக்கிரத்தில் நீங்கும்.

    வாதகேசரித்தைலம் :-நொச்சி, தழுதாளை சதுரங்கள்ளி இவைகளின் சாறு, வெள்ளாட்டுப்பால்,எருக்கம்பால், எண்ணெய் ஆமணக்குநெய் வகைக்கு படி 1 வீதம் ஓர் தைலபாண்டத்திலிட்டு நெல்லிக்காய் கந்தகம், கோஷ்டம், சுக்கு, மிளகு, திப்பிலிவகைக்கு 8 காசெடையாக எடுத்து பால்விட்டரைத்து அடுப்பிலேற்றி எரித்து பதமுறதைலமாக காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்க. இதை மேலுக்கு தேய்த்துப் பிடிக்கசகலவாத ரோகங்களும் நீங்கும்.

    எருக்கன்பால் தைலம் :-எருக்கம்பால், எருக்கிலைச்சாறு, சதுரங்கள்ளிச்சாறு, பிறண்டைச்சாறு,பற்பாடகைச்சாறு, மெருகன் கிழங்குச்சாறு வகைக்கு 5 பலம் இத்துடன் 10 பலம்நல்லெண்ணெய்
    யைச் சேர்த்து அடுப்பிலேற்றி பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க. இதைச்சிறு அளவில் லேசாக மேலுக்கு
    பால்விட்டரைத்து முன் திரவங்களுடன் கலந்து தைலபாண்டத்திலிட்டுஅடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து தைலபக்கு வமாக வடித்து வைத்துக்கொள்க.

    இத்தைலத்தை பிடித்தைலமாக உடலுக்கு தேய்த்துப் பிடித்துவர கைநடுக்கம்,கால்நடுக்கம், தலைநடுக்கம், முதலிய நடுக்கல் வாதங்களை நன்குகுணப்படுத்தும். மேலும் இத்தைலத்தை தைலமாக சிரசில் தேய்த்து ஸ்தானஞ்செய்துவர பாதிரியரோகமென்னும் செவிட்டுரோகம், உபஜிக்வாரோகம் முதலியவைகளும்குணமாகும்.

    வாதஹர தைலம் :-சிற்றாமுட்டி, ஆமணக்குவேர், நொச்சி கண்டங்கத்திரி, சிறுவழுதுளை,சிற்றாமல்லி, போராமல்லி, நெரிஞ்சில் வில்வம், செம்முள்ளி, பெருங்குமிள்,தழுதாதை,பாதிரி வகை
    இவைகளில் வகைக்கு பலம் 10 பலம் சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு இரண்டு தூணிநீர் விட்டு எட்டிலொன்றாக குடிநீரிட்டு வகைக்கு படி 1 வெள்ளாட்டுப்பால்படி 3 சேர்த்து கலக்கி அமுக்கிறாக்கிழங்கு, கோரைக்கிழங்கு, சதகுப்பை,மஞ்சள், இந்துப்பு ஏலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சுக்கு, வசம்புஅகில், தேவதாரு, சிற்றரத்தை, வகைக்கு பலம் 1/4 வீதம் சன்னமாய் பொடித்துவஸ்திராயஞ்செய்து மேற்படி திரவங்களுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாகஎரித்து பதமுற காய்ச்சி வடித்து ஆறின பின்பு நெற்புடத்தில் ஒரு வாரம்வைத்து எடுக்கவும். இதை மேலுக்கு தேய்த்துப் பிடிக்க சகலவாத ரோகங்களும்நீங்கும்.

    வேம்புச்சுடர் தைலம் :-வேப்பண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு பலம் 5 இவைகளைக் கலந்து வைத்துக் கொள்க.நெல்லிக்காய் கந்தகம், பெருங்காயம் இவையிரண்டையும் வகைக்கு பலம் 4
    வீதம் பொடித்து கல்வத்திலிட்டு தோலுரித்த வெள்ளைப்பூண்டு பலம் 8 கூட்டிஅரைத்து ஒரு அடி சதுரமுள்ள ஒரு சுத்தமான சீலையில் தடவி சிறிது உலர்த்திவேளைச்செடியின் வேர்கள்
    நாலைந்து துண்டுகளை கத்தையாக கட்டி அதன் மீது மருந்து பூசிய சீலையை சுற்றிஇரும்புக்கம்பியால் சுற்றி கட்டித் தொங்கவிட்டு முன்பு வேப்பண்ணெய்யும்,நல்லெண்ணெய்யும் கலந்து வைத்ததில்
    தோய்த்துக்கொழுத்தவும் இப்படியே எண்ணெய்யை சிறிது சிறிதாய் கரண்டியால்மொண்டு எரியுஞ்சுடரில் விட்டுக்கொண்டே வரவும். எண்ணெய் எல்லாம் முடிந்தபின்பு சேகரஞ்செய்த சுடர்தைலத்தை முன்மாதிரியே சிறிது சிறிதாய்விட்டுகொளுத்தி சுடர் தைலம் வாங்கவும். அதாவது ஒரு முறை கிடைக்கப்பெற்ற
    தேய்த்துவர மகாவாதரோகக் கூட்டங்கள் நீங்கும். இதில் ஒரு துளிகாதில் விடகடூர கர்ணசூலையும் குணமாகும். இன்னும் இதில் 1/2 முதல் 1 தேக்கரண்டியளவுவீதம் கருங்குருவையரிசிமாவில் விட்டு
    பிசறி தினம் ஒருவேளையாக 10-20 நாள் அருந்த குன்மம், சோபை, பாண்டு, சூலை,வாய்வு முதலியன குணமாகும். இச்சா பத்தியமா யிருத்தல்வேண்டும்.

    வாதநாசத் தைலம் :-நொச்சி, முடக்கற்றான், வீழி, வெண்சாரனை, உத்தாமணி, பாவட்டை, பொடுதலைஇவைகளின் சாறுகள், தேங்காய்ப்பால், சிற்றாமணக்கு, நெய் வகைக்கு ஒருபடி-1/4, இதில் சுக்கு, வசம்பு, தேவதாரு, சீரகம், கப்புமஞ்சள்,கஸ்தூரிமஞ்சள், வெள்ளைப்பூண்டு, உத்தாமணி வேர், பெருங்காயம், மிளகு,சுட்டஆமையோடு வகைக்கு வராகனெடை 1-வீதம், தேங்காய்ப்பால்விட்டரைத்துக்கலக்கி அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து பதமுறத்தைலங்காய்ச்சி வடித்துவைத்துகொள்க.

    இதில் வேளைக்கு 1/2 முதல் 1 பலம் வீதம் தேக பலத்தையும் நோயின் வன்மையையும்கவனித்து தினம் 1 வேளையாக காலையில் கொடுக்க நாலைந்து முறை நன்குபேதியாகும். இப்படி 1-முதல் 3-வரையில் கொடுக்கலாம். பத்தியமாக இருத்தல்வேண்டும். இதனால் வாதநோய்கள், கை கால் பிடிப்பு, குடைச்சல், இடுப்புவலி,கீல்வாயு, உடலில் ஓடி ஓடி வீங்கி துன்பத்தை தராநின்ற ஓடு வாய்வு,விப்புருதிக் கட்டிகள் முதலியன யாவும் குணமாகும். இதில் வேளைக்கு 1/2முதல் 1 தேக்கரண்டி வீதம் தினம் 1 வேளையாக காலையில் பாலர்கட்கு 1-2 நாள்புகட்டி பின்பு ஆமையோடு பற்பம்,மாந்தக்குடிநீர் முதலியவைகளை கொடுத்துவரமாந்தரோகம் குணமாகும்.


    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:23 pm

    இலகு விஷமுட்டித் தைலம்:- நல்லெண்ணெய் படி-1, வெள்ளாட்டுப்பாலில் ஓர் இரவி ஊறவைத்து மறு நாள்சிறு துண்டுகளாக நறுக்கிய எட்டிக்கொட்டை சீவல் பலம்-1 1/4, தோலுரித்தவெள்ளைப்பூண்டு பலம் 1 1/4, முருங்கைப்பட்டை தூள் பலம் 3/4இவைகளை ஒன்றுக்கூட்டி ஓர் தைலப்பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாகஎரித்து சரக்குகள் சிவந்து மிதக்கும்பதத்தில் வடித்து வைத்துக் கொள்க.இத்தைலத்தை வாதரோகங்களில் பிடித்தைலமாக பயன்படுத்திரவர மிக நல்ல பலனைத்தரும்.

    மாஷ தைலம்:- ஒரு படி உளுந்தை ஓர் பாண்டத்திலிட்டு 4-படி ஜலம்விட்டு அடுப்பிலேற்றிகாய்ச்சி ஒருபடியாக குடிநீரிட்டு அத்துடன் வெள்ளாட்டுப் பால் படி-1,நல்லெண்ணெய் படி-1 கூட்டி, பூனைக்காலி பருப்பு, சதபுட்பி, அரத்தை, சுக்கு,மிளகு, திப்பிலி, வெட்பாலைமரப்பட்டை, அதிமதுரம், இந்துப்பு, வசம்பு
    இவைகள் வகைக்கு வராகனெடை-1 வீதம் எடுத்து வெள்ளாட்டுப் தைலத்தைக்கொண்டேமீண்டும் மடக்கித் தைலம் வாங்குவதால் இதனை மடக்குத் தைலம் எனப்பட்டது.)இப்படி மூன்று முறை
    மடக்கி கடைசியில் வருந் தைலத்தை எடுத்து வைத்துகொள்க, வேண்டியபோது இதில்சிறிதளவு எடுத்து அனலில் வெதுப்பி தாளக்கூடிய சூட்டில் உடலில்தேய்த்துப்பிடிக்க வாதநோய்கள் குணமாகும். சிறப்பாக இசிவு ரோகத்திற்குமிகவும் நன்மையை பயக்கும்.

    சம்பீராதித் தைலம் :-நன்கு பழுத்த பெரிய எலுமிச்சங்கனி கள் பத்து சேகரித்து ஒவ்வொன்றையும்நான்கு பிளப்பாய்க் கீறி ஓர் பாண்டத்திலிட்டு அதில் ஆமணக்கெண்ணெய்படி-1/2, கோமூத்திரம் படி-1/2, இலுப்பைப்பட்டைச் சூரணம் பலம்10-சேர்த்துக்கலக்கி அப்பானையின் வாய்க்கு ஓடு மூடிச் சீலைமண் செய்துபூமியில் குழித்தோண்டி புதைத்து ஒரு மண்டலம் (அதாவது 40 நாள்) சென்றபின்புஎடுத்தி தினந்தோறும் காலையில் ஒரு பழத்தில் நாலில் ஒரு பாகமும் 1/4 பலம்தைலமும் அருந்திவரவும். இப்படியே அரை
    முதல் ஒரு மண்டலம் அருந்தி இச்சாபத்தியமாய் இருந்துவர வாத ரோக கூட்டங்கள் யாவும் அணுகாது.

    மெருகுள்ளித் தைலம்:- தோலைச்சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிய மெருகன்கிழங்கு பலம் 10,தோலுரித்த வெள்ளைப்பூண்டு திரி பலம் 10 இவைகளிரண்டையும் ஓர்பாண்டத்திலிட்டு அதில்
    சிற்றாமணக்கு நெய் வீசை 1/2 சேர்த்து அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்துசரக்குகள் சிவந்து மிதக்குஞ் சமயத்தில் கீழிறக்கி ஆறின பின்புவடித்துவைத்துக்கொள்க.

    இதில் வேளைக்கு 1/2 பலம் முதல் 2 பலம் வீதம் தேக திடததிற்கும், நோயின்வன்மை மென்மைக்குத் தக்கபடி தினம் ஒரு வேளையாக காலையில் மட்டும்கொடுத்துவரவும். இப்படி 3-முதல் 5-நாள் வரையில் கொடுக்கலாம். தேவையாயின்10-15 நாள் விட்டு வைத்து மீண்டும் முன்போல் ஒருமுறை கொடுக்கலாம். இப்படிவிட்டுவிட்டு 2-3 முறை கொடுப்பதற்குள் அவசியம் குணமாகும். இதனால்கீல்வாதம் என்னும் சந்நிகசிலேஷ்ம, ரோகம், உடலில் ஓடி ஓடி வரும் வாதவீக்கங்கள், விரணம், மேகசூலை, பிடிப்பு முதலியனயாவும் குணமாகும். மருந்துசாப்பிட்டு வரும்போது உப்பு, புளி நீக்கி பத்தியமிருந்து வருதல் நன்று.

    மெழுகுத் தைலம் :-தேன் மெழுகு வீசை 1, சக்கிமுக்கிகல் வீசை 1, சோற்றுப்பு வீசை 1, ஆற்றுமணல்வீசை 1/2, ஓமம், பலம் 5, கப்புமஞ்சள் பலம் 5, சடாமாஞ்சி பலம் 2 1/2,இவற்றுள் தேன்மெழுகையும், சக்கிமுக்கிகல்லையும் சிறு துண்டுகளாகநறுக்கி, ஓமம், கப்புமஞ்சள் இவைகளை ஒன்றிரண்டாக சிறிதுஇடித்துத்தூள்செய்து, சடாமாஞ்சியை சிறு துண்டுகளாக கத்தரித்துபிறகுயாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துவைத்துக்கொள்க.

    மேற்கூறிய சரக்குகள் யாவும் அரைபாகத்தில் அடங்கும்படி யான ஓர் கழுத்துநீண்ட மட்பானையையும், அதில் மூன்றிலொரு பங்குள்ள மற்றொரு சிறிய பானையையும்சேகரித்து, பெரிய பானையின் பக்கவாட்டில் இரண்டங்குல வட்டமுள்ள ஓர்துவாரத்தையும், சிறிய பானையின் பக்கவாட்டில் துடப்பச் சுப்பல்நுழையும்படியான நாலைந்து சிறு துவாரங்களையுஞ் செய்து, பெரிய பானையில்சரக்குகளைக் கொட்டி பெரிய பானையிலுள்ள துவாரம் மேல்நோக்கியும், சிறியபானையிலுள்ள துவாரங்கள் கீழ் நோக்கியும் இருக்கும்படி
    இரண்டு பானைகளையும் பொருத்தி, பொருந்து வாய்க்கு வலுவாக சீலைமண்செய்துலர்த்தி அடுப்பிலேற்றி எரிக்கவும். பெரிய பானையிலுள்ள துவாரத்தின்மீது ஓர் மண்ணோட்டை வைத்து அதன்மீது பசும் சானத்தை அப்பி வைக்கவும். சிறுபானையிலுள்ள துவாரங் களில் குச்சிகளைச் செருகி அதன் கீழேசொட்டுந் தைலத்தைசேகரிக்க ஓர் கிண்ணத்தை வைக்கவும். சிறு பானையின் மேல் பாகத்தில்ஈரத்துணியைப்போட்டு வைத்து அது உலர உலர அடிக்கடி நீர்தெளித்து எப்போதும்குளிர்ந்து இருக்கும்படிப் பார்க்கவும்.
    பானையை முதலில் நேராக வைத்து 1/2 மணிநேரம் எரித்து அதன் பிறகுசரிவாகவைத்து எரித்துவரவேண்டும், இவ்வாறு எரித்துவர பெரிய பானையிலுள்ளசரக்குகள் வெந்து அதினின்று சத்துகள் புகையாக எழும்பி சிறு பானைக்கு வந்துஅங்கு குளிர்ச்சியினால்தைலமாக மாறி அங்குள்ள துவாரத்தின் மார்க்மாய்சொட்டும். சுமார் நாலைந்து மணிநேரம் அல்லது தைலம் கிடைக்கும் வரையில்எரித்து தைலம் வாங்கவும்.

    இத் தைலத்தை மேலுக்குத் தேய்த்துப் பிடித்துவர கை கால் குடைச்சல், வலி,பிடிப்பு, இசிவு, அர்தாங்கவாதம் என்னும் பாரிச வாதம் முதலியன குணமாகும்.இன்னும் இதனை வெட்டுக்காயம், அடிப்பட்ட காயம், சுளுக்கு வீக்கம்,கீல்வாயு, நரித்தலைவாதம், நோயுடன் கூடிய பீஜத்தின் வீக்கம், பெண்குறித்தளர்ச்சி, ஆண்
    குறித்துவளல், கீல் எலும்பு, மாமிசம், நரம்பு இவைகளைப்பற்றிய வாய்வு முதலியன குணமாகும்.

    வாதநாராயண எண்ணெய
    ்:- வாத நாரயண இலைச்சாறு படி 1, சிற்றாமணக் கெண்ணெய் படி 1, இவை இரண்டையும்ஒரு மிக்கக் கலந்து ஓர் தைலப்பாண்டத்திலிட்டு, அதில் தோலுரித்த
    10-பலம் வெங்காயத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிப்போட்டு, அடுப்பிலேற்றிச்சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகுபதம் வரும் போது வடிகட்டி எடுத்துக்கொள்.பிறகு சுத்திசெய்த பூரம் 1/4- பலம், கல்வத்திலிட்டு பொடித்து ஒருமணிநேரம்நன்கு அரைத்து பிறகு காய்ச்சிய தைலத்தில் சிறிது துளிதுளியாக விட்டுஇரண்டு மணிநேரம் அரைத்து இதைவழித்து முன் சித்தப்படுத்திய தைலத்துடன்சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக்கொள்க. தேக திடத்திறகும் நோயின்வன்மைக்கும் தக்கபடி இந்த எண்ணெயில்
    வேளைக்கு 1/2 முதல் 3/4 அவுன்சு வீதம் தினம் 1 வேளை காலையில் வெறும்வயிற்றில் கொடுக்கவும். இதனால் நாலைந்து முறை பேதி யாகும். கொடுத்த அளவில்சரிவர பேதியாகாவிடில் மறுமுறை சிறிது அளவை அதிகபடுத்திகொள்க. ஒருக்கால்பேதி அதிகமாயின் அளவைச் சற்று குறைத்துக்கொள்க. இப்படி வாரத்திற்கு ்மூன்று முறைகள் கொடுக்க ஓடு வாய்வு, குத்தல், குடைச்சல், கீல்வாய்வு,வீக்கம், சர்வாங்க பிடிப்பு முதலியன குணமாகும். மருந்து சாப்பிடும்போதுமட்டும் புளிதள்ளி இச்சா பத்தியமாக இருத்தல் நன்று.

    கொடிவேலி எண்ணெய் :- பச்சைசித்திரமூல வேர்பட்டை பலம்-1, னைவெல்லம் வராகனெடை-2, நல்லெண்ணெய்படி-1/4, சித்திரமூல வேர்பட்டையை அம்மிக்கல்லிலிட்டு நீர்விட்டு அரைத்து
    கற்கமாக்கி ஓர் தைல பாண்டத்திலிட்டு, அதனில் பனைவெல்லத்தையும்,நல்லெண்ணெயையும் சேர்த்துக் கரைத்து அடுப்பிலேற்றிச சிறு தீயாக எரித்துவண்டல் மெழுகுபதமாக வரும்போது கீழிறக்கி ஆறினபின்பு வடித்து வைத்துக்கொள்க.

    இதில் வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம் தினம் இருவேளயாக ஐந்து நாள்கொடுக்கவும். பேதியாகாது இதனால் கை கால் பிடிப்பு குடைச்சல், மேகவாய்வுமுதலியன குணமாகும். இச்சாபத்தியம்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Admin Tue 21 Sep 2010, 9:24 pm

    இலகுவாதகேசரித் தைலம் :-நல்லெண்ணெய் பலம்-10, நல் வேளைச்சாறு பலம்-10, தோலுரித்த வெள்ளைப்பூண்டுபலம்-2 1/2, பெருங்காயம் பலம் 1/2, மூசாம்பரம் பலம்-1/2, இவற்றுள்பெருங்காயத்தையும், மூசாம்பரத்தையும் பொடித்து, வெள்ளைப்பூண்டை அரைத்து,மூலிகைச் சாற்றில் கரைத்து, நல்லெண்ணெய் சேர்த்து
    அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகுபதமாக வரும் போதுவடித்து வைத்துக்கொண்டு மேலுக்கு தேய்த்து பிடித்துவரகை கால் குடைச்சல்,வலி, வீக்கம், கீல்வாய்வு, மேகசூலை முதலி யன குணமாகும்.

    மூசாம்பர மாத்திரை :- மூசாம்பரம் தோலா-1, சுக்குத்தூள்
    தோலா-1, கசகசா தோலா-1, சுத்திசெய்த வாளம் தோலா-1/2, இலவங்கம் தோலா-1/4இவைகளைக் கல்வத்திலிட்டு, வெந்நீர்விட்டு அரைத்து மெழுகுபதத்தில்குன்றியளவு மாத்திரைகளாகசெய்து நிழலிலுலர்த்தி வைத்துக்கொள்க.

    இரவு லகுவான ஆகாரம் உண்டு சுமார் 10 மணிக்குமேல் படுக்கைக்கு போகும்முன்புஇந்தமாத்திரையில் 1,2 மாத்திரையை விழுங்கி சிறிது ஜலம் அருந்தவும்.அதிகாலையில் நாலைந்து முறை பேதியாகும். பத்தியம் சூப்சாதம் சாப்பிடவும்,இதனால் கைகால்குடைச்சல், இடுப்புவலி, மார்பகவலி, சூதகவாய்வு, வாதசுரம்
    நெரிகட்டி சுரம் முதலியன குணமாகும்.

    வாதராஜ சூரணம் :-சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி வகைக்கு பலம் 1, சுக்கு, மிளகு,திப்பிலி, இலவங்கம், மோடி இலவங்கப்பட்டை, சீரகம், கருஞ்சீரகம்,சிற்றரத்தை, அதிமதூரம் கோஷ்டம், அக்ராகாரம், கண்டுபாரங்கி, தாளிசபத்திரிவகைக்குப் பலம் 1, இவற்றுள் முதலில் இரசத்தையும் கந்தகத்தையும் சேர்த்துக்
    கல்வத்திலிட்டு 1 மணி நேரம் நன்றாய் அரைத்து வைத்துக்கொள்க. மற்றசரக்குகளைஇடித்து வஸ்திரகாயஞ்செய்து இரச கெந்தித்தூளை சிறிது சிறிதாக கூட்டிக்கலக்கஅரைக்கவும். இப்ப்படி இரண்டு அல்லடு மூன்று ஜாமம் நன்கு அரைத்து வைத்துஎடுத்துக்கொள்க. இதில் வேளைக்கு பணவெடைவீதம் தினம் இரு வேளை தேன்இஞ்சிச்சாறு முதலிய அனுபானங்களில் கொடுத்து வர சுரம், சன்னி, சூலை,வாய்வு, கபநோய்கள் முதலியன குணமாகும்.

    பட்டுக்கருப்பு :- சுத்திசெய்தரசம் பலம் 2, சுத்திசெய்த கந்தகம் பலம் 2, இவையிரண்டையும் கல்வத்திலிட்டு1ஜாமம் நன்கு அரைத்து பிறகு சிற்றாமணக்கெண்ணெயை துளித்துளியாக விட்டுமெழுகுபதம் வரும் வரையில் அரைத்து உருட்டி அதன் மீது பட்டுத்துணியைஇரண்டு மூன்று சுற்று சுற்றி, அதன் மீது 8 பலம் சித்திரமூலவேர்ப்பட்டையைஅரைத்து கவசம் செய்து அதன் மீது சீலைமண் வலுவாக செய்துலர்த்தி மணல்மறைவில் வைத்து 20 விறட்டியில் புடமிட்டு ஆறின பின்பு மருந்தை மட்டும்அரைத்து வைத்துக் கொள்க. இதில் வேளைக்கு 1/4 1/2 குன்றி எடை தினம்இருவேளை திரிகடுகுச் சூரணத்துடன் கடுகு சேர்த்து அருந்திவர சுரம், வாதநோய்கள் கபநோய்கள் முதலியன குணமாகும்.

    மூர்ச்சாவாதத்திற்கு மதூகாதி நசியம் :-நசியம் இலுப்பைவேர், கற்கண்டு இவைகளை முலைப்பாலில் அரைத்துநசியஞ்செய்தாலும் அல்லது முலைப்பால், சந்தனம், கரும்புரசம் இவைகளையொன்றாகக்
    கலந்து நசியஞ்செய்தாலும் மூர்ச்சாரோகம் நீங்கும்.

    மூர்ச்சைகளுக்கு குங்குமாதி நசியம் :- குங்குமப்பூவை நெய் யில் கலக்கி நசியஞ்செய்தால் மூர்ச்சை, பைத்தியவிகாரம், தலைதிரும் பல் இவைகள் நீங்கும்.
    சகலவாதங்களுக்கு திரிகடுகாதி நசியம் :-சுக்கு, மிளகு, திப்பிலி சித்திரமூலம், கார்த்திகைகிழங்கு, வசம்பு,இலுப்பைவிரை, சிறுவட்டத்திருப்பிவேர், சமுத்திரபாலைவிரை, சுத்திசெய்ததாளகம்,
    திசெய்த வசநாபி, அழிஞ்சல், சர்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், இவைகள் யாவையும் சமஎடையாக எடுத்து மைப்போல் அரைத்து நொச்சி, புளி இலை, இஞ்சி இவைகளரசத்தினால் ஒருநாள் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து உலர்த்திவேளைக்கொரு மாத்திரை விகிதம் எருக்கன்வேர் ரசத்தில் அரைத்து நசியஞ்செய்தால்
    அபஸ்மாரம், வாதரோகத்தால் அறிவுஹீனமாக விழுதல், தனுர் வாதம், ப்ரமணவாதம், உன்மாதம், சந்நிபாதம் இவைகள் யாவும் நாசமாகும்.

    வாதரோக பத்தியங்கள் :-அட்டைவிடல், வியர்வை வாங்கல், குளித்தல், தேகத்தைப் பிடித்தல்,வாதத்திற்கு செய்யவேண்டிய கிரியைகள், விரேசனம், காற்று இல்லாத இடத்தில்வசித்தல், சூடுப்போடுதல், கட்டு கட்டுகிறது, நிலத்தின்மீது படுக்கை,ஸ்நானஞ்செய்தல், ஆசனம் போடுதல், நசியங்கள், ஒத்தடம் கொடுத்தல்,
    தித்திப்பு, புளிப்பு, உப்பு இந்த ரசபதார்த்தங்கள், புதிய எள்ளு, கோதுமை, 60-நாள் பயிராகும் நெல் அரிசி, கொள்ளு, நண்டு, ஊக்குருவி கோழி, மயில்,கவுதாரி, காடை இவைகளின் இறைச்சிகள், புடலங்காய், முருங்கைக்காய்,கத்திரிக்காய், வெங்காயம், எலுமிச்சம்பழம், இலந்தைப்பழம், திரா¨க்ஷப்பழம்,
    கிச்ச்லிப்பழம், விளக்கெண்ணெய், கோமூத்திரம், வெள்ளை சர்க்கரை, தாம்பூலம்,உஷ்ணமாக சாப்பிடுதல், விரேசனம், இவைகள் வாதரோகிகளுக்கு பத்தியங்களென்றுஅறியவேண்டியது.

    அபத்தியங்கள்:-சதாசிந்தை செய்தல், விழித்திருக்குதல்,மலமூத்திரத்தை யடக்கல், வமன சிகிச்சைசெய்தல், மிக உழைப்பு, உபவாச மிருக்குதல், கடலை, வேர்கடலை, காராமணி,மொச்சை, பட்டாணி முதலிய வாய்வு பொருட்கள், குளிர்ந்த ஜலம், க்ஷ¡ரங்கள்,உலர்ந்த இறைச்சிகள், இரத்தம் வாங்குதல், துவர்ப்பு பதார்த்
    தங்கள், மிகவும் காரபதார்த்தம், கசப்பு பதார்த்தங்கள், புணர்ச்சி, யானை,குதிரை இவைகளின்மீது ஏறுதல், மிகவும் திரிதல், கட்டி லின்மீது சயனித்தல்,வயிறுப்பி யிருக்கும்போது சாப்பிடுதல், கெட்ட ஜலத்தில் குளித்தல்,பல்களின் சந்துகளில் குத்துதல் இவை கள் யாவும் சகல வைத்திய சாஸ்திரங்களில்வாதரோகிகளுக்கு
    ஆகாதென்று சொல்லப்பட்டிருக்கிறது.


    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    வாதரோகசிகிச்சை Empty Re: வாதரோகசிகிச்சை

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum