ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    கிரகணி சிகிச்சைகள்

    Go down

    கிரகணி சிகிச்சைகள் Empty கிரகணி சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 9:26 pm

    கிரகணி சிகிச்சை

    வாதகிராணிக்கு சாலிபர்ணியாதி கியாழம் :- நிலக்கடம்பை வேர்,சிற்றாமுட்டிவேர், இளம் வில்வக்காய், கொத்தமல்லி, சுக்கு இவைகள் சமஎடைகியாழம் வைத்துக் கொடுத்தால் வயிறுப்பல், சூலை இவைகளுடன் கூடிய வாதகிராணிநீங்கும்.

    பித்தகிராணிக்கு திக்தாதி கியாழம் :-கடுகுரோகணி, சுக்கு, ரசாஞ்சனம், சிறுநாகப்பூ, கடுக்காய்பிஞ்சு,வெட்பாலைவிரை, கோரைக்கிழங்கு, வெட்பாலைப்பட்டை, வெள்ளை அதிவிடயம், இவைகள்சமஎடை கியாழம் வைத்து சாப்பிட்டால் நானாவிதவிகாரங்களுடனும்குதசூலையுடனுங்கூடிய பித்தகிராணி நீங்கும்.

    சாதுர்பத்ராதி கியாழம் :-சீந்தில்கொடி, அதிவிடயம், சுக்கு, கோரைக்கிழங்கு, இவைகள் சமஎடை கியாழம்வைத்து குடித்தால் ஆமயுக்தமான கிராணி நீங்கும். அக்கினிதீபனம், ஜீரணம்இவைகளை உண்டாக்கும்.

    சுண்டியாதி கியாழம் :-சுக்கு, கோரைக்கிழங்கு, அதிவிடயம், சீந்தில்கொடி, இவைகள் சமஎடை கியாழம்வைத்து குடித்தால் அக்கினிமந்தம், ஆமவாதம், ஆமயுக்தமான கிராணி இவைகள்நீங்கும்.

    புனர்னவாதி சூரணம் :-வெள்ளைசாரணைவேர், மிளகு, கொள்ளுக்காய்வேளைவேர், சுக்கு, சித்திரமூலம்,கடுக்காய்பிஞ்சு, புங்கண்பட்டை, வில்வக்காய், இவைகள் சமஎடை கியாழம் போட்டுகொடுத்தால் குன்மங்கள் கிறாணிகள் நீங்கும்.

    நாகறாதி கியாழம் :-சுக்கு, வெட்டிவேர், அதிவிடயம் கொத்தமல்லி, ஓமம், கோரைக்கிழங்கு,சித்தாமல்லி, போராமல்லி இவைகள் சமஎடை கியாழம் வைத்துச் சாப்பிட்டால்கிறகணி யைப்போக்கி அக்கினி தீபனம் ஜீரணம் இவைகளைப் போக்கும்.

    அதிவிஷாதி கியாழம் :-அதிவிடயம், கோரைக்கிழங்கு, குறுவேர், காட்டாத்திப்பூ, வெட்பாலை,மாதுளம்பழத்தோல் லோத்திரப்பட்டை, வட்டத்திரிப்பி, இவைகள் சமஎடை கியாழம்வைத்து குடித்தால் கிராணி சகல சுரங்கள், அருசி, மந்தம், இவைகள் நீங்கும்.தாதுவிரித்தி யுண்டாகும்.

    தசமூலாதி கியாழம் :- தோல் போக்கிய சுக்கு, தசமூலங்கள் இவைகள் சமஎடை கியாழம் வைத்து குடித்தால் வீக்கம் சீதத்துடன் கூடிய கிராணி இவைகள் நீங்கும்.

    ஸ்ரீபாலாதி கல்கம் :-வில்வம்பிஞ்சை கல்கம் செய்து அதில் சுக்கு, சூரணம் வெல்லம் இவைகள் கலந்துகொடுத்தால் கொடூரமான கிராணி நீங்கும். மோர் சாதம் பத்தியம்.

    கிரகணிகபாட ரசம் :
    -ஜாதிக்காய், சுத்திசெய்தரசம், திரிகடுகு, சுத்திசெய்த நாபி, சுத்திசெய்தகெந்தி, இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு மாம்பிஞ்சி ரசத்தினால் அரைத்துகுன்றி எடை சாப்பிட்டால் சகல கிராணிகள் சகல மூலங்கள் இவைகள் நீங்கும்.

    வேறு முறை :-சுத்திசெய்த பாதரசம், கெந்தி, அதிவிடயம் கடுக்காய், அப்பிரகபஸ்பம் இவைகள்தனித்தனி 10 பாகம் சுத்திசெய்த கஞ்சா 3 பாகம், இவைகள் யாவையும்கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் இரண்டு சாமம் நன்கு அரைத்துகுன்றி அளவு மாத்திரைகள் செய்து கொடுத்தால் கிராணி நிவர்த்தியாகும்.

    கிராணி கஜகேசரி ரசம் :-சுத்திசெய்த பாதரசம், கெந்தி, அதிவிடயம், ஜாதிக்காய், கடுக்காய்,அப்பிரகபஸ்பம், சுக்கு, கடுக்காய், அப்பிரகபஸ்பம், கொத்தமல்லி, ஓமம்,கோரைக்கிழங்கு, சித்தாமல்லி, போராமல்லி, விலாம்பழம், பொரித்தவெங்காரம்,வெட்பாலைச்சூரணம், ஊமத்தைவிரை, பாதிரிவேர், இவைகள் சமஎடை
    சூரணித்து எடிலொன்று அபினி கலந்து சூரணித்துஊமத்தன் ரசத்தால் அரைத்துமிளகு பிரமாணம் மாத்திரை செய்து கொடுத்தால் கிராணி, அதிசாரம்,ரக்தாதிசாரம், வெகு நளாக பாதிக்க கூடிய சீதபேதி, சுரத்துடன் கலந்தபேதிஇவைகளை நிவர்த்திக்கும்.அனுபான விஷெசங்களில் கொடுத்தால் சாத்திய அசாத்திய
    ரோகங்கள் யாவும் நிவர்த்தியாகும்.

    அக்கினிசூனு ரசம் :-பலகறை பஸ்பம் 1-பாகம், சங்கு பஸ் பம் 2-பாகம், கெந்தி, ரசம் இவைகள்இரண்டும் கலந்து 1-பாகம், மிளகு 3-பாகம் இவைகளை கல்வத்திலிட்டுவேப்பன்பட்டை ரசத்தில் அரைத்து வைத்துக்கொண்டு பணவெடை வீதம்அருந்தவும்.இதை நெய், கற்கண்டு இந்த அனுபானத்தில் கொடுத்தால் வெகு நாளாகபாதிக்கும் கிறாணி, அக்கினிமந்தம், பலயீனம் இவைகளை குணபடுத்தும். திப்பிலிசூரணம் தேன் அனுபானத்தில் கொடுத்தால் கிறாணிரோகம், மோரில் சாப்பிட்டால்க்ஷயங்கள், சுரங்கள்,
    அருசி, சூலைகள், குன்மங்கள், பாண்டுரோகங்கள், உதரரோகங்கள், மூலவியாதி, மேகம் இவைகள் நீங்கும்.

    சூதராஜ ரசம் :-ரசம் 1-பாகம், கெந்தி 2-பாகம், அப்பிரக பஸ்பம் 8-பாகம், இவைகளைகலக்கும்படியாக அரைத்து 3 குன்றி எடை பிரமாணம் தேகவலியையறிந்து 40-நாள்கொடுத்தால் சகல் ரோகங்கள், கிறாணி, க்ஷயங்கள், குன்மம், மூலவியாதி,மேகங்கள், தாதுகதசுரம், இவைகள் நீங்கும்.

    அகஸ்திசூத ராஜரசம் :-பாதரசம் 1-பாகம், கெந்தி 1-பாகம்,வீக்கம் 1-பாகம், ஊமத்தன்விரை, அபினி,இவைகள் வகைக்கு 2-பாகம், இவைகளை சூரணித்து கரசனாங்கண்ணி சாற்றினால் இரண்டுநாள் அரைத்து உலர்த்தவும். இதை திரிகடுகு சூரணத்துடன் தேன் கலந்துகொடுத்தால் வாந்தி, சூலை, கபம், வாதவிகா
    ரம், அக்கிமந்தம், மயக்கம் இவைகளை நிவர்த்திக்கச் செய்யும். மிளகுசூரணத்தில் நெய்யைகலந்து ஒரு குன்றிஎடை மருந்தைக்கூட்டிக் கொடுத்தால்விடாதபேதியை நிவர்த்திக்கும். ஜாதிக்காய்,
    சீரகம் இந்த சூரணம் கலந்து அதில் ஒரு குன்றிஎடை கொடுத்தால் ஆறுஅதிச்சாரங்களை போக்கும். இது கிறாணி என்கிறகமுத்திரத்தை உலாச்செய்யும்.

    கனகசுந்தர ரசம் :-லிங்கம், மிளகு, கெந்தி, திப்பிலி, வெண்காரம், நாபி இவைகளை சமஎடையாகச்சேர்த்து இந்த சேர்க்கைக்கு சமஎடையாக ஊமத்தன்விரையையுஞ் சேர்த்து கஞ்சாஇலைகியாழத்தில் இரண்டு ஜாமங்கள் அரைத்து குன்றியளவு மாத்திரை செய்துவைத்துக்கொண்டு கொடுக்கவும். கிராணி, அக்கினி மந்தம்,
    சுரம், தீவிரமான அதிசாரம், இவைகளைப் போக்கும். பத்தியம் மோர்சாதம் தயிர்சாதம் கொடுக்கவேண்டியது.

    நாகராதி சூரணம் :-சுக்கு, அதிவிடயம், கோரைக்கிழங்கு,சிறுநாகப்பூ, ரசாஞ்சனம்,வெட்பாலைப்பட்டை, வெட்பாலை விரை, விலவபழம், சுக்கு, சீமை நிலவேம்பு,கடுகுரோகணி, இவைகள் சமஎடை சூரணம்செய்து கழுநீரில் தேன்கலந்து சூரணத்தைகொடுத்தால் பித்தசங்கிரஹணி, ரக்தசங்கிரஹணி, மூலவியாதி, இருதயரோகம்,குய்யரோகம்,சூலை, அதிசாரம் இவைகள் யாவும் நீங்கும்.

    யவானியாதி சூரணம் :- ஓமம்,மோடி, இலவங்கப்பட்டை இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பு, ஏலரிசி, சுக்கு,காட்டாத்திப்பூ புகையிலை, திப்பிலி, வெட்டிவேர், இவைகள் தனித்தனி ஒரு தோலாஎடைசேர்த்து சூரணீத்து இதற்கு 6 பாகம் சர்க்கரை கலந்து தினம் கால் பாகவிகிதம் சாப்பிட்டு ஆட்டுப்பால் குடித்தால் பித்த சங்கிரஹணி, அதிசாரம்இவைகள் நீங்கும்.

    ரசாஞ்சனாதி சூரணம் :-ரசாஞ்சனம், அதிவிடயம், வெட்பாலைவிரை, வெட்பாலைப்பட்டை, சுக்கு,காட்டாத்திப்பூ இவைகள் சமஎடை சூரணித்து சூரணத்தை கழுநீர், தேன் விட்டுசாப்பிட்டால் பித்தசங்கிரஹணி, மூலவியாதி, ரத்தபித்தம், பித்தாதிசாரம்இவைகள் நீங்கும்.

    சிலேஷ்ம கிராணிக்கு சட்டியாதி சூரணம் :-சுக்கு, மிளகு கடுக்காய்பிஞ்சு, கிச்சிலிகிழங்கு, யவக்ஷ¡ரம்,சக்திக்ஷ¡ரம், மோடி வில்வம்பழம், இவைகளைச்சூரணித்து எலுமிச்சம்பழ ரசத்தில்இந்துப்பு போட்டு சூரணத்துடன் கலந்து சாப்பிட்டால் சிலேஷ்ம கிரஹணிநிவர்த்தியாகும்.

    ராஸ்னாதிசூரணம் :-சிற்றரத்தை, கடுக்காய், கிச்சிலிகிழங்கு, சுக்கு, மிளகு, யவக்ஷ¡ரம்,சக்திக்ஷ¡ரம், இந்துப்பு, திப்பிலிசூரத்து கருப்புப்பு, பீடாலவணம், மோடி,வில்வம்பழம் இவைகள் சமபாகம் சூரணித்து வெந்நீரில் சாப்பிட்டால்கபசங்கிரஹணியை நசித்து தேகத்திற்கு பலம், வீரியம், காந்தி, தேஜசு,இவைகளுண்டாகும்.

    பூநிம்பாதி சூரணம் :-சீமைநிலவேம்பு, திரிகடுகு, வெட்பலை விரை, கோரைக்கிழங்கு, கடுகுரோகணி,இவைகள் வகைக்கு ஒரு தோலாஎடை சித்திரமூலம் 8 தோலாஎடை, வெட்பாலைப்பட்டை 16தோலாஎடை இவைகளைச் சூரணித்து அச்சூரணத்தை பானகத்தில் சாப்பிட்டால்கிரஹணியால் உண்டான விவகாரங்கள் நீங்கும்.

    வியோஷாதி சூரணம் :-சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், குரோசானியோமம், வாய்விளக்கம்,சித்திரமூலம், பெருங்காயம், அமுக்கிறாக்கிழங்கு, இந்துப்பு, சீரகம்,கருஞ்சீரகம், சூரத்துக்கருப்புப்பு இலந்தம்பட்டை, கொத்தமல்லி, சுத்திசெய்தகஞ்சாயிலை சூரணம்,கிராம்பு இவைகள் சமஎடை சூரணித்து 1/8 தோலா எடை நெய்தேனுடன் கொடுத்தால் அக்கினிதீபனம், காந்தி, பலம் இவைகளை உண்டாக்கும்.அதிசாரம், கிரகணி நாசமாகும்.

    தாளிசாதி சூரணம் :-தாளிசப்பத்திரி, வசம்பு, மஞ்சள், சுக்கு, மிளகு, திப்பிலி, மோடி,சித்திரமூலம், செவ்வியம், கஸ்தூரிமஞ்சள், விலவபழம், அதிமதுரம்,கிச்சிலிகிழங்கு, சாதுர்சாதம், கிறாம்பு, காட்டாத்திப்பூ, அதிவிடயம்,சாதிக்காய், ஓமம், சுக்கு, இலவன்பிசின், மாங்கொட்டைப்பருப்பு, பஞ்சலவணங்கள், சீரகம், வாய்விளங்கம், புளி இலை, திரிபலை, கலியாணமுருக்கன்காய்,ஜடாமாஞ்சி, ஆவாரை, வெட்டிவேர், ஏலரிசி, பேயத்தி, சத்தி க்ஷ¡ரம்,கீழாநெல்லி, கோஷ்டம், இவைகள் சமஎடை இவைகள் யாவைக்கும் சமம் சிற்றாமுட்டி,மேல்கூறிய யாவைக்கும் சமம் கடுக்காய் இவைகள் யாவையும் சூரணித்து இதற்குசமம் கற்கண்டு கலந்து சாப்பிட்டால் கிரகணி, க்ஷயங்கள், இருமல், அருசி,பிலீகை, மூலவியாதி, அதிசாரம், சுரம், வாயு, தூலித்தல், பிரமேகம்,அபஸ்மாரம், பாண்டு, குன்மம், உன்மாதம், வயிறுப்பல், பேதி இவைகளை போக்கும்.அக்கினி மந்தம் முதலிய ரோகங்களை நாசப்படுத்தி புஷ்டி ஆயுசு, பலம், காந்தி,புத்தி யோசனை கவனம்,, முதலியன உண்டாக்கும்.

    லாஹீ சூரணம் :-சுத்திசெய்த கெந்தி 1/4-பலம், பாதரசம் 1/8-பலம், இவைகளை தொந்தித்துஅத்துடன் திரிகடுகு வகைக்கு 1-தோலா பஞ்சலவணம் வகைக்கு 1 1/2 தோலா, பொரித்தபெருன்f காயம், சீரகம், கருஞ்சீரகம் இவைகள் வகைக்கு 1-தோலா இவற்றின் மொத்தஎடையில் நாலிலொன்று கஞ்சாயிலை சேர்த்து சூரணித்து வேளைக்கு 1/8-தோலா எடைசூரணம் நாலுதோலா மோரில் கொடுத்தால் சங்கிரஹணி நீங்கும்.

    சந்நிபாத சங்கிரஹணிக்கு முஸ்தாதி சூரணம் :- கோரைக்கிழங்கு, அதிவிடயம், விலவபழம், வெட்பாலைவிரை இவைகளை மைப்போல் சூரணித்து தேனுடன் கொடுத்தால் திரிதோட கிரகணி
    கள், அதிசாரங்கள், சுரங்கள் முதலியன நீங்கும்.

    இலவங்காதி சூரணம் :-இலவங்கம், தக்கோலம், சந்தனம், வெட்டிவேர், நீலோத்பலம், கருஞ்சீரகம்,ஏலக்காய், கிருஷ்ணா கரு, கரசனாங்கண்ணி, சிறுநாகப்பூ, திப்பிலி, சுக்கு,ஜடாமாஞ்சி, குறுவேர், பச்சை கர்ப்பூரம், ஜாதிக்காய், மூங்கிலுப்பு,பச்சைப்பயறு, இவைகள் சமஎடை சூரணித்து கொடுத்தால் பேதி, அக்கினிதீபம்,வலுவு, வீரிய புஷ்டி இவைகள் உண்டாகும். திரிதோஷங்கள், மூலவியாதி,மலபந்தம், விக்கல், இருமல், அருசி,
    க்ஷயங்கள், ஜலுப்பு, கிரகணி, அதிசாரம், ரத்தக்ஷயம், பிரமேகம், குன்மம் இவைகள் நீங்கும்.

    பாடாதி சூரணம் :-அதிவிடயம், வெட்பாலைவிரை, வெட்பாலை பட்டை, கோரைக்கிழங்கு, கடுகுரோகணி,காட்டாத்துப்பூ, ரசாஞ்சனம், சுக்கு இவைகளை யாவையும் சமஎடையாகச் சூரணித்துகழுநீர் தேன் கலந்து சாப்பிட்டால், கிறாணி, அதிசாரம், குதரோகம்,ரக்தாதிசாரம், மூலவியாதி இவைகள் நாசமாகும்.

    சுண்டீ கிருதம் :-நெய்யில் சுக்கு கல்கத்தை கலந்து அடுப்பேற்றி பக்குவமாக காய்ச்சிவாதானுலோமன கிரியைச் செய்தால் கிரகணி, பாண்டுரோகம், பிலீகம் காசம், சுரம்இவையாவும் போகும்.

    பஞ்சமூல கிருதம்:- வில்வவேர், முன்னைவேர், ஈச்சுரமூலி, பாதிரிவேர், பெருமர வேர்பட்டை,வெட்டிவேர், திரிகடுகு, திப்பிலிமூலம், இந்துப்பு, சித்தரத்தை,சர்ஜக்ஷ¡ரம், யவாக்ஷ¡ரம், சீரகம், வாய்விளங்கம், கிச்சிலிக்கிழங்கு இவையாவையும் கல்கம் செய்து அத்துடன் நெய், கொடிமாதுளம் பழசரம், இஞ்சி ரசம்,காய்ந்த முள்ளங்கி கியாழம் உலர்ந்த இலந்தைப்பழ கியாழம் சுக்கான்கீரை ரசம்,மாதுளம் பழசரம், மோர், தயிர் மேல் தேட்டை இவைகளை முறைப்படிச் சேர்த்துகாய்ச்சி நெய் பதமாக்கிக் கொடுத்தால், சூலை, குன்மம், உதரம்,கிரகணி,பிலீகம், வாதரோகம் இவைகளை நாசமாக்கும். அக்கினிபுஷ்டியும்உண்டாகும்.

    பித்தகிராணிக்கு சந்தனாதி கிருதம் :-சந்தனம், தாமரைத்தண்டு வெட்டிவேர், வட்டத்திருப்பி, பெருங்குரும்பை,திரிகடுகு, கருவசம்பு, விஷ்ணுகிரந்தி, வாழைக்கிழங்கு, சிற்றாமுட்டி,பேய்ப்புடல், ஆலம்பட்டை, அத்தி, இத்தி, அரசம்பட்டை, விலவப்பழம்,கடுகுரோகணி, கடுக்காய்பிஞ்சு, கோரைக்கிழங்கு, வேம்பு இவைகள் வகைக்கு2-பலம், இவைகளைப் பொடித்து 256-பலம் ஜலம்விட்டு நாலில் ஒரு பாகமாய்சுண்டக் காய்ச்சி அதில் 20-பலம் நெய்யை வார்த்து நிலவேம்பு, வெட்பாலை,பெரிய தண்ணீர்விட்டான் கிழங்கு திப்பிலி, நீலோத்பலம் இவைகள் தனித்தனி ஒருதோலா கல்கம் செய்து சேர்த்து நெய் பக்குவமாக காய்ச்சி கொடுத்தால்பித்த கிரஹனி நீங்கும்.

    பில்வாக்கினி கிருதம் :-வில்வவேர், சித்திரமூலம், செவ்வியம், இஞ்சி, சுக்கு இவைகள் சமஎடையாகக்கியாழமிட்டு இதற்கு சம எடையாக நெய், ஆட்டுப்பால் சேர்த்து நெய்பதமாககாய்ச்சிக்கொடுத்தால் கிரஹணி, சோபை, அக்கினிமந்தம், அருசி, இவைகல்நிவர்த்தியாகும்.

    சாங்கேரி கிருதம் :-வட்டத்திருப்பி, நெரிஞ்சல், சுக்கு, திப்பிலி, சமஎடையாகச் சூரணித்துசூரணத்திற்கு பதினாறு பாகங்கள் அதிகமாக ஜலம்வார்த்து நான்கில் ஒருபாகமாகச்சுண்டக்காய்ச்சி வடிகட்டி கியாழத்திற்கு சமமாக பசுநெய்யும், நெய்க்குசமமாக புளியிலை ரசமும், இந்த எடைக்கு மூன்று பங்கு அதிகமாக தயிரும்
    விட்டு அருகம்புல், திரிகடுகு, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திர மூலம்இவைகள் தனித்தனி இரண்டு பலம் பால்விட்டரைத்து சேர்த்து மந்தாக்கினியால்நெய்பக்குவமாக காய்ச்சி ஆறியபிறகு பாண்டத்தில் வைத்துக்கொள்ளவும். இதைக்கரண்டி அளவு கொடுத்து அன்னத்திலும் போட்டுச் சாப்பிடும்படிச் செய்யவும்.கிரகணி, அதிசாரம் இவைகள் நீங்கும். அக்கினிதீபனம், ருசஉண்டாகும்.

    மரீச்யாதி கிருதம் :-மிளகு, மோடி, சுக்கு, திப்பிலி, சேராங்கொட்டை, ஓமம், வாய்விளங்கம்,ஆனைத்திப்பிலி, பெருங்காயம், சவ்வர்ச்சலவணம், பிடாலவணம், சைந்தலவணம்,சமுத்திரலவணம், யவக்ஷ¡ரம், சித்திரமூலம், வசம்பு இவைகள் தனித்தனி1/2-பலம் எடை சூரணித்து நெய் 20-பலம், பால் 1-வீசை, தசமூல குடிநீர்20-பலம் இவைகளை சேர்த்து நெய்பதமாகக் காய்ச்சி பாண்டத்தில்வைத்துகொள்ளவும். இதில் வேளைக்கு 2 தேக்கரண்டி வீதம் அருந்திவர கிரஹணி,அஜீரணம், சரீரஸ்தம்பனம், ஆமம், துர்பலத்துவம், பிலீகை, வயிறுப்பல்இவையாவும் நாசமாகும்.

    சுண்டீ கிருதம் :-மேல்தோல் போக்கிய சுக்கு 12-பலம்,256-பலம் ஜலத்தில் போட்டு எட்டில் ஒருபாகமாகச் சுண்டக்காய்ச்சி அதில் பசும்நெய் 20-பலம், பசும்பால் 1-வீசைசேர்த்து நெய்பதமாகக் காய்ச்சி கொடுத்தால் கிரஹணி நீங்கும். அக்கினிதீபனம் உண்டாகும்.

    தாளிசாதி வடுகங்கள் :-தாளிசப்பத்திரி, மிளகு, செவ்வியம், இவைகள் வகைக்கு 1-பலம், திப்பிலி,திப்பிலிமூலம் இவைகள் தனித்தனி 2-பலம், சுக்கு 3-பலம், இலவங்கப்பத்திரி,இலவங்கப்பட்டை, சிறுநாகப்பூ, ஏலக்காய், வெட்டிவேர், இவைகள் தனித்தனி 1ரூபாய் எடை, இவைகள் யாவையும் சூரணித்து, சூரண எடைக்கு மூன்றுபாகம்வெல்லங்கலந்து வடகமாக செய்து 1/4-1/2 பலம் பிரமாண உருண்டைகள் செய்துஒவ்வொரு உருண்டை ஒரு நாளுக்கு கொடுத்து வந்தால் அசாத்தியகிரஹணி,வாந்திகள், காசங்கள், சுவாசங்கள், சுரம், அருசி, சோபை, குன்மம்,உதரவியாதி, பாண்டு முதலிய வியாதிகள் நீங்கும்.

    கிராணிக்கு சங்கு வடுகங்கள் :-புளிக்ஷ¡ரம் 4-ரூபாய் எடை, இந்துப்பு, பிடாலவணம், சூரத்து கருப்புப்புஇவைகள் வகைக்கு 4-ரூபாய் எடை, மேற்கூறியவைகளை எலுமிச்சம்பழச் சாற்றினால்அரைத்து கற்கம் செய்து, சங்கைசுட்டு மறுபடியும் சுட்டு இந்தப்பிரகாரம்தொட்டால் பொடி ஆகும்வரையிலும் சுட்டு ஆறியபிறகு அந்த சங்குசூரணம் 4-ரூபாய்எடை, பெருங்காயம், சுக்கு, மிளகு, திப்பிலி, பாதரசம், கெந்தி, நாபி,இவைகள் வகைக்கு 1/8 பலம் இவைகள் யாவையும் கலந்து அரைத்து உருண்டைகள்செய்து வைத்துக்கொள்ளவும்.தினத்திற்கு ஒரு உருண்டை வீதம் கொடுத்தால்க்ஷயரோகம், கிரஹணி, பக்கச்சூலை இவைகள் நீங்கும்.

    கிராணிகளுக்கு சூதாதாதி குடிகங்கள்:- பாதரசம், கெந்தி, லோகபஸ்பம், வசநாபி, சித்திரமூலம், இலவங்கப்பத்திரி,வாய்விளக்கம், காட்டுமிளகு, கோரைக்கிழங்கு, ஏலக்காய், மோடி, சிறு நாகப்பூ,திரிபலை, திரிகடுகு, தாம்பிரபஸ்பம், இவைகள் சமஎடைக்குஇந்த சரக்குகளைசூரணித்து இந்தஎடைக்கு இரண்டு பாகம் அதிகமாக வெல்லத்தைக் கலந்து மாத்திரைதிட்டம் ஆகும் வரையிலும் அரைத்து உருண்டை செய்து கொள்ளவும்,இதைக்கொடுத்தால் இருமல், சுவாசகாசம், க்ஷயங்கள், குன்மங்கள், பிரமேகம்,விஷசுரம், வாதம், கிராணி, அக்கினிமாந்தம், சூலை, பாரிசசூலை,இவைகள் நீங்கும். மேலும் கால்கைகளில் கூட நீங்கிவிடும்.

    கிராணி ரோகத்திற்கு சித்திரகாதி குடிகைகள்:- சித்திர மூலம், மோடி, சக்திக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், சமுத்திர லவணம்,இந்துப்பு, சூரத்து கருப்புப்பு, சுக்கு, மிளகு, திப்பிலி, பெருங்காயம்ஓமம், செவ்வியம், இவைகள் சமஎடைகள் சூரணம் செய்து அதை கொடிமாதுழம்பழச்சாற்றில் அரைத்து உருண்டைகள் செய்து வைத்துக்கொள்ளவும். இந்தமாத்திரையை வழங்க ஆமத்தைப்போக்கி அக்கினி தீபத்தை உண்டாக்கும்.

    கிராணிக்கு மதுபக்குவஹரிததி :-கடுக்காய் 100, கோமய நீரினால் மிருதுவாகிறவரையிலும் டோலாயக்திரத்தில்சமைத்து பிறகு அந்த கடுக்காய்களில் முள்ளுகளால் துவாரங்கள் செய்து அதைநெய் வைத்த பாண்டத்தில் வைத்து அதில் 400 தோலாஎடை தேன் வார்த்து தேன்வரளும்போதெல்லாம் தேனை வார்த்துக்
    கொண்டு தேன் இழுக்காமல் அப்படியே இருக்குமாகில் தேன் வார்க்கிறதைநிறுத்தவேண்டியது. இப்படி செய்வதால் கடுக்காயில் இருக்கும் துவர்ப்புநிவர்த்தியாகும். பிறகு அதில் திரிபலை கிராம்பு
    மூங்கிலுப்பு வகைக்கு ஒரு தோலா எடை சூரணித்து போட்டு இரண்டு நாள் ஆன பிறகுஇந்த மருந்தை மதுபக்குவஹரிதகி என்று சொல்லுவார்கள் இதை காலையில்கொடுத்தால் துட்ட வாதம், கிராணி ஆமம், துஷ்டரத்தம், ஜீரணசுரம், ஜலுப்புஅம்மைகள், கட்டிகள், வாயுசூலைகள், கிராணி முதலியரோகங்களை
    நிவர்த்திக்கும். அக்கினிதீபனம், பலம், காந்தி, இவைகள் உண்டுபண்ணும்.

    மகாகல்யாண குடம
    ்:- திப்பிலி, மோடி, சித்திரமூலம், ஆனைத்திப்பிலி, கொத்தமல்லி,வாய்விளக்கம், ஓமம், மிளகு, திரிபலை, குரோசானிரோகம், தாமரைக்கிழங்கு,சீரகம், இந்துப்பு, வளையலுப்பு, கடலுப்பு, பிடாலவணம், உப்பு, கொன்னைச்சதை,இலவங்கப்பத்திரி, ஏலரிசி, ஏலக்காய், சுக்கு, வெட்பாலைவிரை இவைகள் வகைக்கு
    1-தோலா, கரும் திரா¨க்ஷ 26-தோலா, சிவதை 32-தோலா, வெல்லம் 200-தோலா, எள்எண்ணெய் 32-தோலா, நெல்லிக்காய் ரசம் 64-தோலா இவைகள் யாவையும் சேர்த்துமந்தாக்கினியில் சமைத்து அத்திபழம் அல்லது நெல்லிக்காய் அல்லது இலந்தபழஅளவு மேற்கூறிய அவிழ்தத்தை உருண்டைகள் செய்து தேகவலிவை அறிந்து கொடுத்தால்கிராணி, மேகங்கள், குதரோகங்கள், பீனசம், துர்ப்பலம், அக்கினிமந்தம் இவைகள்நீங்கும்.

    திராக்ஷ¡சவம் :-திரா¨க்ஷ 400-தோலா, அதில் 1024-பலம் லத்தைகொட்டி சதுர்த்தாம்சமாக அதாவதுமூன்று பாகங்கள் சுண்டி ஒருபாகம் மீறும்படியாகக்காய்ச்சி அதில் தேன்100-தோலாகற்கண்டு 100-தோலா, காட்டாத்திப்பூ 60-தோலா, தக்கோலம், கிராம்பு,மிளகு, ஜாதிக்காய், ஏலக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, திப்பிலி,செவ்வியம், சித்திரமூலம், மோடி, காட்டு மிளகு, இவைகள் வகைக்கு 4-தோலாஇவைகளை சேர்த்து நெய்யில்
    ஊறின பானக்கு சாம்பிராணி, அகில், சந்தனம், தூபமிட்டு அதில் சிறிது பச்சைகற்பூரம் போட்டு மேற்கூறிய கியாழத்தை வார்த்து இரண்டு நாள் ஊறவைத்தால்சித்தமாகும். இதை சாப்பிட்டால் கிராணி, மூலவியாதி, உதாவர்த்தகம், குன்மம்,உதரரோகம், கிருமி,குட்டம், விரணங்கள், நேத்திர ரோகங்கள், சிரோ ரோகங்கள்,களரோகம், சுரங்கள், ஆமரோகம், பாண்டுரோகம், காமாலை இவைகளை நாசமாக்கும்.அக்கினிதீபனம் உண்டாகும்.

    பஞ்ச தீபாக்கினி லேகியம் :-சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் வகைக்கு பலம்-1, பசுவி பால் படி-2,பனைவெல்லம் பலம்-10, தேன் பலம்-5, நெய்பலம்-3 3/4.இவற்றுள் முதலில் கூறியஐந்து சரக்குகளையும் இளவறுப்பாய் வறுத்து இடித்து வஸ்திரகாயஞ்செய்துவைத்துகொள்க. பிற்கு பசும்பாலில் பனைவெல்லத்தைக் கரைத்து வடிகட்டிகடாயிலிட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து பாகுபதம் வருஞ்சம யத்தில்சூரணத்தைத் தூவிக் கிளறி, பின்பு நெய் தேன் சேர்த்து முறைப்படி லேகியமாகக்கிளறி எடுத்து வைத்துகொள்க.

    இதில் வேளைக்கு பாக்களவு வீதம் தினம் இருவேளையாக 1/2 அல்லது 1 மண்டலம்அருந்திவர பித்தவாய்வு, அசீரணம், அதிசாரம், கிரகணி, அஸ்திசுரம் முதலியனகுணமாகும்.

    வில்வாதிச் சூரணம் :-உலர்ந்த வில்வபழ சதை தோலா-1, உலர்ந்த மாதுளம்பட்டை தோலா-1,காய்ச்சுக்கட்டி தோலா-1, வெட்பாலை யரிசி தோலா-1, இவைகளை இடித்துச்சூரணித்து வைத்துகொண்டு வேளைக்கு 1/2 வராகனெடை வீதம் சமன் சர்க்கரை கலந்துதினம் இருவேளையாக நீர் அல்லது நெய்யில் அருந்தி
    வர சீதபேதி, அதிசாரம், கிரகணி முதலியன குணமாகும்.

    கிராணி கபாட சூரணம் :- காட்டாத்திப்பு,சுக்கு, அதிவிடயம், கோரைக்கிழங்கு, வட்டத்திரிப்பிவேர், உலர்ந்த வில்வம்பழசதை, வெட்பாலைப்பட்டை, வெட்பாலையரிசி, உலர்ந்த மாதுள பழ ஓடு, இலவங்கபட்டைவகைக்கு தோலா-1, இவைகளை இடித்துச் சூரணித்து வைத்துக்கொண்டு வேளைக்குதிரிகடிப் பிரமாணம்
    சர்க்கரை கலந்து நீரிலாவது அல்லது அரிசி கழுவிய சலத்திலாவது, தினம் 2அல்லது 3 வேளைவீதம் கொடுத்துவர கிரகணி, இரத்த மூலம், சீதபேதி, இரத்தபேதிமுதலியன குணமாகும்.

    கசகசா லேகியம்:- கசகசா பலம்-1 1/4, ஒரு சிறிய சாதிக்காய், ஒரு சிறிய மாசிக்காய், சுமார்15 அல்லது 20 புளியங்கொட்டை களின் மேல்தோல், இளவறுப்பாய் வறுத்தெடுக்கதிப்பிலி, கற்கடகசிங்கி வகைக்கு வராகனெடை-1, இவைகளைப் பொடித்துஅம்மிக்கல்லிட்டு பசும்பால் விட்டு மசிய அரைத்து கற்கம்போல் செய்துவைத்துகொள்க பிறகு 2 1/2 பலம் பனங்கற்கண்டை உழக்கு பசும்பாலில் கரைத்துவடிகட்டி ஓர் கடாயிலிட்டு, அதில் முன் சுத்தப்படுத்தி வைத்துள்ளகற்கத்தையும் சேர்த்துக் கலந்து அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்துஅடிபிடிக்காமல் கிளறிக்கொடுத்துக்கொண்டே வந்து சுண்டி லேகியபதமாகவரும்போது போதிய நெய் விட்டுக் கிளறி லேகிய பதமாகச் செய்துக்கொள்ளவும்.இதில் வேளைக்கு கொட்டைப்பாக்களவு வீதம் தினம் 2 வேளை வீதம் உட்கொள்ளசீதபேதி, ரத்தபேதி, அதிசாரம், கிரகணி முதலியன
    குணமாகும்.

    நாக பற்பம் :-இலுப்பை எண்ணெயில் உருக்கி சாய்த்து சுத்தி செய்த ஒரு பலம் நாகத்தைஇரும்பு கடாயிலிட்டு உலையில் வைத்து ஊதி நாகம் உருகிவருஞ் சமயத்தில், ஒருபலம் வெடியுப்பும் ஊமத்தன் இலையும் சேர்த்தரைத்த கற்கம் சிறு தேங்காய்பிரமாணம்எடுத்து அதில் சிறிது சிறிதாக போட்டு இரும்பு கரண்டிகொண்டுதேய்த்து வறுத்து வரவும். பிறகு சிவப்பு நாயுருவி இலையயும், கரிசாலைஇலையயும் தனித்தனியே முன்போல் கிராசங்கொடுத்துசுரண்டிக்கொண்டு தேய்த்துவரபற்பமாகும். ஆறினபின் இதை சீலையில் அரித்து திப்பியை நீக்கிவிட்டுபற்பத்தை மீண்டும் கல்வத்தி லிட்டு பொடுதலைச் சாறு விட்டரைத்து சிறுவில்லையாகச் செய்துலர்த்தி அகலிடக்கி சீலைமண் செய்து 15-20 விரட்டியில்புடமிட வும். இப்படியே பொடுதலை சாற்றில் அரைத்து மூன்று புடமிட நல்லபற்பமாகும். இதில் வேளைக்கு 1/2 குன்றிஎடை தினம் இருவேளை தேன், நெய்,அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்துவர அதிசாரம், கிரகணி, மூலம்,பெரும்பாடு, காசம் முதலிய நோய்கள் குணமாகும்.

    படிகலிங்கச் செந்தூரம் :-சுத்திசெய்த லிங்கம் வராசனெடை 1, படிகாரம் பலம்-1, படிகாரத்தைப் பொடித்துஓர் வாயகலமான ஓர் மண்சட்டியிலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்துவரபடி காரமானது உருகி பொங்கி எழும்பி எழும்பி அடங்கி பூர்த்துவர ஆறபிக்கும்.ஏறக்குறைய அரைபாகத்திற்கு மேல் பூர்த்து வருஞ்
    சமயத்தில் லிங்கத்தைத் தூள்செய்து படிகாரத்தின் மேல்தூவி, படி காரம்முற்றும் பூர்த்தபின்பு கீழிறக்கி ஆறினபின்பு கல்வத்திலிட்டு அரைத்துவைத்துகொள்க. இதில் வேளைக்கு 1-2 குன்றி எடை தினம் 2 வேளை நெய், தேன்அல்லது தக்க அனுபானங்களுடன் அருந்த சீதபேதி, ரத்தபேதி, அதிசாரம் முதலியனகுணமாகும்.

    வெங்காரலிங்கச் செந்தூரம்:- ஒருபலம் கற்பூரம், ஒருபலம் சாம்பிராணி இவை யிரண்டையும் சேர்த்துஅரைத்து எட்டு பாக மாகப் பங்கிட்டு, ஒவ்வொரு பாகத்தையும் ஒருபலம் லிங்கக்கட்டிக்கு மேலும் கீழும் வைத்து கொளுத்தவும். இப்படியே எட்டு பாகங்களையிசெய்து, லிங்கக் கட்டியைக் கல்வத்திலிட்டு ஒரு
    மணிநேரம் அரைத்து எடுத்து வைத்துகொள்க. பிறகு 10-பலம் வெங்காரத்தைபொடித்துக் கல்வத்திலிட்டு அரைத்து இத்துடன் முன்எடுத்து வைத்துள்ளலிங்கத்தூளைச்சேர்த்து கலக்கி நன்கு அரைத்து பத்திரப்படுத்துக. இதில்வேளைக்கு 1-2 குன்றிஎடை தினம் 2 வேளை தேன் நெய் முதலிய அனுபானங்களில்கொடுத்துவர பேதி,
    சீதபேதி, அதிசாரம், சுரத்துடன் கூடிய பேதி முதலியவைகள் குணமாகும். மற்றும்சன்னிபாதத்தில் காணும் பேதிக்கும், க்ஷயத்தில் காணும் பேதிக்கும் வழங்கமிக்க நன்மை பயக்கும்.

    சங்கிரகணி பத்தியங்கள் :-நித்திரை, வாந்திக்கு அவுடதங்கொள்ளல், லங்கணம், 60-நாள் பயிர்வைத்த பழையஅரிசி, வறுத்த அரிசியாலும் பொறியினாலும் செய்த பண்டங்கள், கஞ்சி, துவரை,பச்சைபயறு இவைகளின் ரசங்கள், கொஞ்சமாகிலும் வெண்ணெய் ஏடு இல்லாத மோர்கள்,பசு, ஆடு, செம்மரியாடு இவைகளது பால், தேன், தாமரைக்கிழங்கு, மஞ்சள்,தித்திப்பு புளிப்புள்ள மாதுளம் பழம், வாழைப்பூ, வாழைக்காய்ச்சல்,வில்வம், சிங்காடக்காய், சுக்கான்கீரை, விளாம்பழம், வெட்பாலை, சீரகம்,கிச்சிலிக்கிழங்கு, அத்திக்காய், நல்ல மோர், ஜாதிக்காய், நாவல்பழம்,கொத்தமல்லி, அதிவிடயம், முயல், மான், பக்ஷ¢ தினுசுகள் இவைகளின் சூப்பு,சிறிய மச்சங்கள், துவர்ப்பான பதார்த்தங்கள், இவைகள் கிராணி ரோகங்களுக்குபத்தியமுள்ளவை யென்று அறிய வேண்டியது.

    சங்கிரகணிரோகத்திற்கு அபத்தியங்கள் :-ரத்தத்தை வெளியிடுதல், விழித்தல், குளிர்ந்தநீரை அடிக்கடி அருந்தல்நீராடுதல், மாதரின் புணர்ச்சி, சீக்கிரமான நடை, நசியஞ்செய்தல், கண்ணுக்குஅஞ்சனமிடல், வியர்வை வாங்குதல், புகைபிடித்தல், விருத்தமான அன்னங்கள்புசித்தல், வெய்யிலில் திரிதல், கோதுமை மொச்சை, பட்டாணி, உழுந்து,யவதானியம், மல்துவரை, காரா மணி, சோரைக்கீரை, சர்க்கரைவர்த்திகீரை,மணத்தக்கள்ளி, பூசினி காய், சுரக்காய், முருங்கை, கருணைக்கிழங்கு,தாம்பூலம், கரும்பு இலந்தம்பழம், மாம்பழம், வெள்ளரிக்காய், பாக்கு,பனினீர், பால் வெல்லம், தயிர் மீதுதேட்டை, தேங்காய், சாரணை, முள்ளங்கத்திரி
    வில்வம்பழம், கீரைதினுசுகள், வியாதியுடைய பசுவின் பால், கஸ்தூரி சாரங்கள்,க்ஷ¡ரங்கள், சாரமுள்ள திரவியங்கள், திரா¨க்ஷ, புளிப்பு தித்திப்புஇவைகளின் ரசங்கள், பழையது கொட்டைப்பாக்கு இவைகள் கிராணி ரோகிக்குஅபத்தியமானவை யென்று அறியவேண்டியது.


    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum