என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்

Go down

குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம் Empty குழந்தைகளுக்கு ஹோமியோ மருந்துகள் -இது ஒரு ஹோமியோ பீடியாட்ரிசீயன் முழு விளக்கம்

Post by ஜவாஹிரா on Mon 29 Nov 2010, 11:48 pm

ஒரு பிறந்த குழந்தை சராசரியாக 20 அங்குலம் நீளமும் 7.5 பவுண்டு எடையுடனும் இருக்கும். ஆனால் பெண் குழந்தை ஆண் குழந்தையைவிடச் சற்றுச் சிறியதாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்கு முன் பிறக்கும் குழந்தையைக் குறை மாதத்தில் பிறந்தது என்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும்போது 5.5 பவுண்டுக்குக் குறைவாக இருந்தால் அந்தக் குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்கிறார்கள். அதன் கர்ப்பத்தில் இருந்த காலத்தைப் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இவ்வாறு குறை மாதத்தில் பிறந்த குழந்தை சில ஆண்டுகளில் சாதாரண குழந்தைகளுக்குள்ள எடையைப் பெற்றுவிடுகின்றது.

பிறந்த உடனே குழந்தை சில செயல்களைச் செய்கிறது. அழுதல், கை கால்களை மடக்கி நீட்டுதல் ஆகியனவாகும். இச்செயல் அதன் வெப்பநிலை தொடர்ந்து இருக்கவும், மூச்சு சீராக விடவும் துணை புரிகிறது. ஒரு பிறந்த குழந்தையின் எடை அதன் 6-வது மாதத்தில் இரண்டு மடங்காகவும், ஒரு வருடத்தில் ஏறத்தாழ மூன்று மடங்காகவும் இருத்தல் நலம். ஒவ்வொரு வருடத்திற்கும் ஆறு பவுண்டு எடை கூடலாம். உயரமும் முதல் வருடத்தில் 20 அங்குல முதல் 30 அங்குலமாகவும் வளர்வது நலம். சராசரியாக உயரம் ஒரு வருடத்திற்குச் சுமார் 2 அங்குலம் வீதம் வளர்கிறது. சாதாரணமாக 10வது மாதத்திலோ 18வது மாதத்திலோ நடக்கும். 6 அல்லது 7 மாதக் குழந்தையை இரண்டு அக்குள்களிலும் பிடித்து கொண்டு நடக்க வைக்க முயற்சிக்கலாம். முதலாண்டுத் தொடக்கத்தில் வழக்கமாக ஊர்ந்து செல்லல், தவழுதல், உட்கார்ந்தவாறே நகர்ந்து செல்லல், ஒரு பக்கமாகக் கையை ஊன்றி ஊர்ந்து செல்வதைக் காணலாம்.

குழந்தைகள் நடக்க முற்படுமுன்பே பேச்சை அறிய முற்படுகிறது. எட்டாவது மாதத்தில் பரிசோதனை ஒலியும், உறுமலும் எழுப்பும், ஒரு வருடத்தில் பொதுவாகச் சில வார்த்தைகளை பேசுவது, இரண்டாவது வருடத்தில் பேச்சின் அபிவிருத்தி பொதுவாகத் தாமதப்படுகிறது. காரணம் என்னவெனில் நடக்கவும் எதையாவது பிடித்து ஏறவும், உண்ணவும், தானே தன் உடுப்பை உடுத்திக் கொள்ளவும், முதலியவகைகளில் கவனம் செலுத்துவதாலேயே மேற்கொண்டவாறு ஏற்பட ஏதுவாகிறது. பெரும்பாலான குழந்தைகள் அதிக வார்த்தைகளைப் பேசுவதோடு, சிறிய வாக்கியங்களையும் பேசுகின்றன. 2 வயதுக்கும் 5 வயதுக்கும் இடையில் உள்ள ஒரு குழந்தை, குடும்பச் சூழ்நிலை, பெற்றோர்களின் அறிவிற்கேற்பத் தன் பேச்சை, அறிவை, பேச்சுப் பரிமாற்றங்கள் மூலம் வெளியிடும் வாய்ப்பைக் பெறுகிறது. அப்படியில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தை தனக்குள்ளேயே புரியாமலே தானே பேசிக் கொள்ளும். அதனுடைய பேச்சு நீள ாது. பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வதுண்டு. அக்கதைகளைக் கேட்ட குழந்தை, கதைகளைக் கேட்காத குழந்தையை விடப் பேச்சின் நீளம் அதிகமாக வாய்ப்புண்டு.

மூன்று அல்லது நான்காவது வயதில் அதிகமான வார்த்தைகளை அறிந்திருக்கும். ஐந்தாவது வயதில் வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்கும், தகுதியான கதைகளைச் சொல்லவும், மகிழ்ச்சி, கோப உணர்வுகளை வெளியிடவும், பொருளின் நிறம், அமைப்பு ஆகியவைகளை விவரிக்கவும் செய்கிறது. ஒரு குழந்தைக்குப் பேசும் ஆற்றல் தாமதமானால் அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. பேரறிஞரும் விஞ்ஞானியுமான ஐன்ஸ்டீன் அவர்கள் தனக்கு மூன்று வயதானபோது கூட அவர் பேசவில்லை. அதற்குப் பிறகுதான் பேசினார் என்று வரலாறு கூறுகின்றது. அவ்வாறு சிறுவயதில் பேசாதிருந்தவர்தான் உலகமே வியக்கத்தக்க அறிவும் ஆற்றலும் பெற்றவராகத் திகழ்ந்தார் என்பது யாவரும் அறிந்ததே. இரண்டு வயதாகியும் ஒரு குழந்தை பேசவில்லை; ஏதோ கோளாறு உள்ளது என்று பெற்றோர் கருதினால் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்க அணுகலாம். பெற்றோர்களோ, மற்றவர்களோ தாங்கள் பெற்ற அறிவைக் கொண்டு குழந்தைகளிடம் அதே அறிவைச் சீக்கிரம் அடைய எதிர்பார்க்கக்கூடாது. உடலாலும் மனத்தாலும் ஆகிய குணங்களைக் குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பெறுகின்றனர். இதைப் பெற்றோரின் பரம்பரைப் பிறவிக் குணம் என்கிறோம். பெற்றோர்களின் குரோமோசோம்கள் குழந்தைகளின் முடி, கண்களின் நிறங்கள் ஆகியவை மூலம் அறியலாம்.

தான் பெற்ற இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி குணங்களையும், எண்ணங்களையும் கொண்டிருக்காது. அதனால் அவர்களின் தன்மைக்கேற்ப நடத்த வேண்டும். தன் எண்ணத்தை அழுகையின் மூலம் குழந்தை தன் தாய்க்குத் தெரிவிக்கின்றது. சில நேரங்களில் காரணமில்லாமலும் அழும், அதனால் அதைப் புறக்கணிக்கலாகாது. குழந்தை பசிக்காக அழுகிறதா, வலியால் அழுகிறது. அல்லது தன்படுக்கை சரியில்லை, இடுப்பில் கட்டப்பட்டுள்ள துணி சிறுநீர் கழித்து ஈரமானதால் அழுகின்றதா, என்று அழுகையின் தன்மையையும் குரலின் வித்தியாசத்தையும் ஒரு தாய் அறிந்து கொள்ளலாம்.

குழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்த உணவாகும். ஊட்டச்சத்து நிறைந்தது. குழந்தைக்குத் தாய்ப்பால் சரியான வெப்ப நிலையில் கொடுக்கப்படுகிறது. புட்டிப்பால் சரியான வெப்பநிலையில் கொடுக்கப்படுவதில்லை. புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் தாய்பபால் குடிக்கும் குழந்தைகளைவிட வயிற்றுக் கோளாறுகள் அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம் தாய்ப்பாலில் கிருமிகள் இருக்காது. புட்டிப்பால் குடிக்கும் குழந்தை ஒரு வேலைக்கு எவ்வளவு பால் குடிக்கிறது என்பதைப் புட்டியிலுள்ள அளவைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். ஆனால் தாய்ப் பால் குடிக்கும் குழந்தை எவ்வளவு பால் குடிக்கிறது என்பதை அறிய முடியாது. பால் புட்டிகளையும், சூப்பான்களையும் கொதிக்கும் நீரில் ஒவ்வொரு முறையும் பால்கொடுக்கும் போது கழுவிப் பயன்படுத்தவேண்டும். குழந்தைகளை அதிகமாக உண்ணுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவர்கள் பருக்க வழிவகுத்துவிடும். அதனால் எடை கூடி மார்பு மற்றும் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட ஏதுவாகும். அதிகமாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால் நாளடைவில் குறைக்க முற்படுவதில் சிரமம் ஏற்படும்.

குழந்தைகளுக்குப் பால் பற்கள் சுமார் 5 அல்லது 6 மாதத்தில் கீழ்த்தாடையில் முளைக்கும். 7 அல்லது 8வது மாதத்தில் மேல் பற்களும், 9 அல்லது 10வது மாதத்தில் மேலும் 4 பற்களும் இப்படியே பால்பற்கள் தோன்றுகின்றன. பால் பற்கள் முளைக்கும் காலத்தில் சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் வருவதில்லை. பற்கள் வலியின்றிச் சுலபமாக வளர்கின்றன. குழந்தையின் பிறப்பு முதல் எழுதுவதானால் பக்கம் பக்கமாக எழுதலாம். இயற்கையின் எதிர்ப்புச் சக்தி குறைவதால், நோய் தாக்குவது சுலபம். ஆகையால் குழந்தைப் பருவத்தில் எதிர்ப்புச் சக்தி பெற, செயற்கை முறையில் தயாரான தடுப்பு மருந்துகளை ஊசி மற்றும் சொட்டுகள் மூலம் அளிக்கிறார்கள். காலரா, டிப்தீரியா, இன்புளுவன்சா, மீசில்ஸ், மம்ஸ், பிளேக், டெடானஸ், டீயூபர் குளோசிஸ், டைபாய்டு, ஊப்பிங்காப் ஆகிய நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் அளிக்கிறார்கள். இந்நோய்கள் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுநோய்க் கிருமிகளால் பரவுகின்றன என்கின்றனர். (ஆங்கில தடுப்பு மருந்துகளின் பக்கவிளைவு, பின் விளைவு காரணமாக அவற்றுக்கு மாற்றாக ஹோமியோபதி தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது - ஆசிரியர்) இவைகள் அல்லாமல் மற்ற நோய்கள் தண்ணீர், உணவு, எலி, பால், மூட்டைப்பூச்சி, கால்நடைகள், கொசு, கரப்பான் பூச்சிகள் மற்றும் நோயுள்ளவருடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளவருக்கும் ஏற்படும்.

பெரியவர்களுக்கு நோய் வந்தாலும் நோயின் தன்மையைப் பற்றி தெளிவாகவும், விளக்கமாகவும் தெரிவிப்பார். குழந்தைகளால் அவ்வாறு இயலாது என்பது யாவரும் அறிந்ததே. குழந்தைகளுக்குச் சிகிச்சை செய்வதுதான் கடினமான ஒன்றாகும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் பெரும்பாலும் தொண்டை நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வெளியில் சுத்தமற்று விற்கும் ஐஸ், மிட்டாய், பழங்கள் ஆகியவைகளை வாங்கி உண்ணுவதால் இருமல், நெஞ்சுச்சளி, மூச்சுத் திணறல், தொண்டைக்கம்மல், வலி, கரகரப்பு ஆகியவைகள் ஏற்படுகின்றன. சத்துள்ள கொழுப்பு உணவுகளை உண்ணும் போது வாந்தி வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஏற்பட ஏதுவாகிறது. வாந்தியுடன் தலைவலி, மயக்கம், கழுத்துப்பிடிப்பு ஏற்படலாம். அணியும் துணி, தூசி, சுற்றுப்புறச் சூழ்நிலை, சிலவகை உணவு ஒவ்வாமை ஆகிய காரணங்களால் மூச்சுக் குழல் அழற்சி யால் ஆஸ்த்மா போன்ற நோய்கள் வரலாம். குழந்தைகள் திடீரெனக் கத்தும். எதனால் என்று சொல்ல முடியாது. ஏற்கனவே குறிப்பிட்ட காரணங்களின்றி வயிற்று வலியால், காதில் சீழ்ப் பிடித்ததால் ஏற்பட்ட வலியாலோ, சிறுநீர்க் கழிக்கமுடியாததாலோ, மலச்சிக் கலாலோ என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. வயிற்று வலி என்றால் அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாலோ சாப்பிடும்போது அதிக உணர்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஏற்படலாம். காதுவலி என்றால் வலியால் பாதிக்கப்பட்ட காதுப் பக்கம் நம்மைத் தொட விடாது. சிறுநீர்க் கழிக்கும் முன்போ, கழிக்கும் பொழுதோ, கழித்த பின்போ, வலியாலோ, எரிச்சலாலோ கத்தலாம். இதைத் தவிர, தேள்கடி, வண்டுகள், பூச்சிகள் கடித்ததினாலும் அழலாம். பயத்தாலும் வீறிட்டுக் கத்தலாம்.

பத்து வயதும் அதற்குக் கீழ் உள்ளவர்களை மருத்துவத்துறையில் குழந்தைகள் பட்டியலில் சேர்க்கின்றனர். குழந்தைகளின் வளர்ச்சிக்குத் திட்டமிட்ட நல்உணவு தேவை. பற்கள், எலும்புகள் திடகாத்திரமாக இருக்க அதிக அளவில் சுண்ணாம்புச் சத்து தேவை. பால், வெண்ணெய், மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள் மூலமாக ஊட்டச்சத்து உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் நோயின்றி, நலமாக இருக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்க்குறிகளும் அதற்கான மருந்துகளும் என்ன என்று காண்போம் :1. பிறந்தவுடன் குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - அகோனைட்

2. குழந்தை சிறுநீர் கழிக்காமல் இருந்தால் - ஹெலிபோரஸ்

3. இருமல் வருமுன் கத்துதல் - ஆர்னிகா, அபிஸ்

4. நடக்கத் தாமதம் - நேட்முர், கல்கார்ப், காஸ்டிகம்

5. நடக்கவும் பேசவும் தாமதம் மற்றும் மூளைக் கோளாறினால் - அகாரிகஸ்

6. நடக்கும்போது தடுமாற்றமும், கீழேயும் விழுந்தால் - காஸ்டிகம்

7. வளர்ச்சி குன்றியதால் பேசவும், நடக்கவும் தாமதம் - பாரிடாகார்ப்

8. தன்னைக் கொஞ்சவேண்டும் என்ற எண்ணமும், பரபரப்பாகவும் இருக்க விரும்புதல் - பல்சடில்லா

9. பல் முளைக்கும் காலத்தில் குழந்தையின் மூளையில் எரிச்சல் உண்டாக்கும் உணர்வால் தூக்கமின்மை - சிமிசிபியூகா

10. விளையாட விருப்பமில்லாமை - பாரிடாகார்ப்

11. தாய்ப்பால் மறந்ததனால் தூக்கமின்மை - பெல்லடோனா

12. திட்டினாலோ, தண்டித்தாலோ ஏற்படும் கோளாறுகள், பல பொருள்களுக்காக அழுகிறது, கொடுத்தால் பெற மறுக்கின்றது - ஸ்டாபிஸôக்ரியா

13. மூளையின்அதிக உணர்வினால் இரவில் எழுந்து சிரித்து விளையாடும். பிறகு நோய் வரும் - சைபிரிடியம்

14. தூங்கும்போது முன் கைகளில் உள்ள தசைகள் சுண்டும். சொல்படி கேட்காது. அமைதி அற்று இருக்கும். பார்க்கும் பொருளை வேண்டும் என்று கேட்கும். கொடுத்தால் எறியும். வலியைப் பொறுக்காது. கோபத்தால் குணமிழந்து அநாகரிகமாய் நடந்து கொள்ளும் - சாமோமில்லா

15. தொடர் வாந்தி - மெர்க்.டல்சிஸ், ஜரிஸ்வெர்

16. தன்னைத் தூக்கவோ, உயரத் தூக்கவோ விரும்பாது - பிரையோனியா

17. பல்முளைக்கும் காலத்தில் மலச்சிக்கல் - மெக்மூர்

18. பிடிவாதமான மலச்சிக்கல் - பாரஃபின்

19. மிகக் குளிர்ந்த காலத்தில் மலச்சிக்கல் - விராட்.ஆல்

20. சாதாரண மலச்சிக்கல் - அலுமினா, கோலினஸ், சோரினம்

21. செயற்கைப் பால் குடித்ததால் மலச்சிக்கல் - அலுமினா, நகஸ்வாமிகா

22. குழந்தை உரத்த கூச்சலுடன், உடல் முழுவதும் நடுக்கத்துடனும், தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுதல் - இக்னேசியா

23. குழந்தை தேம்பித் தேம்பிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கதறி அழும். அழுகை நின்ற பின்னும் தேம்பிப் பெருமூச்சு விடும் - இக்னேசியா

24. மன ஏக்கமும் பிடிவாதக் குணமுள்ளவை - அகாரிகஸ்

25. தொண்டை வேக்காடு - அகோனைட்

26. சிறுவர் விரைகளில் நீர்க்கோர்வை, வீக்கம் - ஹிபார்.சல்ப், அப்ரோடேனம்

27. தொப்புளிலிருந்து இரத்தம் கசிதல் - அப்ரோடேனம், கல்.பாஸ்

28. குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்புகள் - ஆம்ராகிரிசா

29. மூக்கிலிருந்து இரத்தம் கொட்டுதல் - அப்ரோடனம், பெர்ரம், சிலிகா

30. பால் ஒத்துக் கொள்ளாது - எதுசாசைனாபியம்

31. திடீர் என்று கடுமையான வாந்தி - எதுசாசைனாபியம்

32. அன்பாகப் பேசினால் கத்தி அழும் - சிலிகா

33. ஆசனவாய்ப் பிதுக்கம் - போடோபில்லம்.

34. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்பட்டால் உறுப்பைப் பிடித்துக் கொண்டு கத்துதல் - அகோனைட்

35. சிறுவர்களின் காலரா - எதுசாசைனாபியம், விராட்ஆல்பம், சரசபரில்லா, காம்பர்

36. பிறந்த குழந்தை மூச்சு விடமுடியாமல் திக்குமுக்கு ஆடல்- ஆண்டிடார்ட், காம்பர், லாராசரஸ்

37. ஆஸ்துமா - சாமோமில், இபிகோ, நேட்சல்ப், பல்சடில்லா, சாம்புகஸ், வைபூர்ணம்

38. காசநோய் இருமல் - பாரிடாமுர்

39. சீக்கிரம் வளருதல் - பாஸ்பரஸ், ஆசிட்பாஸ்

40. ஆசனவாயில் அரிப்புடன் பிதுக்கம் - பெர்ரம்மெட்

4.1. குழந்தை குறட்டை விடல் - சின்கோனா

42. தொப்புள் ஹெரினியா - நக்ஸ்வாமிகா

43. கொதித்த பால் குடித்தால் வயிற்றுப் போக்கும் சீக்கிரம் களைப்பும் ஏற்படல் - செபியா

44. காமாலை - லுப்புலஸ், மைரிகா

45. நாடாப்பூச்சியை அகற்ற - கௌசோ, பிலிக்ஸ்மாஸ்

46. தன்னைத் தொடவோ, எடுக்கவோ பிடிக்காது - சீனா

47. ஆசனவாய் அரிப்பு - டுகுரியம்

48. வயிற்றில் கீரிப்பூச்சிகள் - நேட்.பாஸ், சபாடில், நாப்தா

49. குழந்தைக்குப் பேசினாலோ, அசைந்தாலோ இருமல் வந்திடுமோ என்ற பயம் - சீனா

50. கக்குவான் இருமல் - நாப்தலின்,டிரோசீரா, கொராலியம், காக்கஸ், டெர்பின், ஹைட்ரேட்

51. குழந்தையைத் தூக்கும்போது தாதியைப் பிடித்துக் கொள்ளும் - போரக்ஸ், ஜெல்சிமியம்

52. காது சம்பந்த நோய் - பல்ஸ், சாமோமில், ஜீங்கம்

53. வாய்ப்புண் - போரக்ஸ், மெர்க், சோல், சல்-ஆசிட்

54. மூக்கடைப்பு - நகஸ்வாமிகா, லைகோபோடியம்

55. வயிறு சம்பந்த நோய் - பாரிடா கார்ப், கல், கார்ப், காஸ்டி, சல்பர், அமிக்டலிஸ்பர்

56. வயிற்றின் கீழ் ஹெர்னியா - ஆரம்மெட்

57. மூலம், வலியால் தொடமுடியாமை - மூரியாடிக் ஆசிட்

58. வயிற்றுப்போக்கு - எதூசா, கல்-கார்ப், கல்-சல்ப், சாமோமில்லா, இகொ, பிமக் முரி, மெர்க், போடோபில், ரீயம், சிலிகா, ஸ்டிரமோன், சல்ப், சோரினம்

59. சொன்னால் கேட்காது முக்கியமாக இரவில் தொல்லை வரும் - லேக்கானினம்

60. “புராங்கோ நிமோனியா” - டியூபர்குலின், ஸ்குல்லா

61. பள்ளி செல்லும் குழந்தைக்குத் தலைவலி - நேட்.மூர், கல்காரியா பாஸ்

62. நாட்பட்ட சளி மூக்கில் ஒழுகுதல் - மெடோரினம்

63. எவரும் தன் பக்கத்தில் வருவதைப் பொறுக்காது - குப்.மெட்

64. இருமலின் போது கைமுட்டியைக் கொண்டு முகத்தைத் தேய்த்துக் கொள்ளும் - ஸ்குல்லா, பல்ஸ், காஸ்டிகம்

65. தனியாகப் படுக்கச் செல்லாமல் கத்தும் - காஸ்டிகம்

66. இருமல் வரும்போது தூக்கிக் கொள்ளாவிட்டால் கடுமையான இருமலால் பாதிக்கும் - நிக்கோலம்

67. பயங்கரப்பசி - நிக்கோலம்

68. பலமற்ற குழந்தை - சைனா

69. என்னவென்று தெரியாமலேயே பல பொருளை விரும்பிக் கேட்கும்; கொடுத்தால் மறுக்கும் - சீனா

70. தூக்கமின்மை - ஜிங்கம், வலேரினம்

71. பால் கொடுத்து, தயிர் போல் வாந்தி எடுத்தபின் மீண்டும் குடிக்க விரும்பாமை - ஆன்டி.குருட்

72. பகலில் குடிக்க விரும்பும், இரவில் மறுக்கும்-அபிஸ்மெல்

73. மூளையில் நீர்க்கோர்வையால் மயக்கமுடன் கை, கால்களைத் தானாக அசைத்தல் - அபோசினம்

74. திறந்த வாயுடன், வாய்வழியே மூச்சுவிட்டுக் கொண்டு வருதல் - பாரிடாமூர்

75. முக்கியமாகக் கால்களில் மட்டும் பலமற்று இளைப்பு ஆரம்பம் - அப்ரோடேனம்

76. தூக்கிக் கொள்ளச் செல்லும் - அசிடிக் ஆசிட்

77. தலையைத் தொட அனுமதிக்காது - அசிட்டிக் ஆசிட்

78. கோடை காலத்தில் நீர்ப்போன்ற வயிற்றுப்போக்கு - அகோனைட்

79. முட்டாள்தனம் - எதுசாசைனதபியம்

80. பல் முளைக்கும் காலத்தில் கோளாறு - எதுசாசைனதபியம்

81. வலி ஏற்படும் போது கண்கள் கீழ்நோக்கிச் சொருகுதலுடன் வாயில் நுரை வருதல் - எதுசாசைனதபியம்

82. சத்தான உணவு இல்லாததால் தலையை நிமிர்த்த முடியாது - எதுசாசைனதபியம்

83. தயிர்போல் வாந்தி எடுத்தல் - எதுசாசைனதபியம்

84. பரிட்சை பயம் - அனகார்டியம்

85. பரிட்சையில் தோற்றுவிடுவோமோ என்ற பயம் - பிக்ரிக் ஆசிட்

86. பரிட்சை என்றாலே மனமுடைதல் எதுசா - சைனாபியம்

87. படிப்பிலோ, படிக்க முயற்சி செய்யும் போதோ எண்ணத்தை நிலை நிறுத்தாமை - அபிஸ், ரேம்னஸ் கலிபோர்னிகா

88. சட்டி போல் வயிறுள்ள குழந்தைகளுக்கு வயிற்றுவலி - ஸ்டாபிஸôகரியா

89. பகலில் நன்றாக இருந்துவிட்டு இரவில் தொல்லை தரும்- ஜலப்பா

90. காசநோய் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - ஆர்ச ஐயோடைட்

91. சிபிலிஸ் உடல்வாகுள்ள குழந்தைக்கு எடை கூட - காலி ஐயோட், ஆரம்மெட்

92. வயிற்றுப்போக்கு பச்சை நிறம் - மெர்க்.சோல், மெர்க்.கரோ

93. வயிற்றுப்போக்கு, பசலைக் கீரை நிறம் - இபிகாக்

94. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம், ஆதங்கம், பரபரப்பு, தாகம் - அகோனைட்

95. வயிற்றுப்போக்கு, பச்சை நிறம் அதிக இனிப்பு உண்டாதல் - அர்ஜ்.நைட்

96. வயிற்றுப்போக்கு, பச்சைநிறம் வயிற்றைத் தொடவிடாது- பெல்லடோனா

97. தன் நிழலைக் கண்டுபயப்படுதல் - லைக்கோபோடியம்

98. தூங்கும்போது காதுகளைக் குடையும் - சிலிகா

99. வயிற்றுப்போக்கால் உடலில் நீர் வறட்சி - சைனா

100. இரத்தசோகை - பெர்ரம்மெட், பல்ஸ்

101. பாலை ஜீரணிக்க முடியாமை - மெக்மூர்

102. இருமும் போது தொண்டையைப் பிடித்துக்கொள்ளும் - ஐயோடைம்

103. உடலில் புளிப்பு வாடை இருத்தல் - மெக்.கார்ப்

104. தூங்கி எழுந்தவுடன் மூடியகையைக் கொண்டு கண், மூக்கு தேய்த்தல் - சானிகுலா

105. குழந்தைகளின் எடை கூட, மனம் உடல் நலம் பெற - ஆல்பால்பா.

106. தூக்கத்தில் நடத்தல் - காலி புரோம்

107. வளர்ச்சி குன்றல் - லைகோ.போடியம்

108. பயத்துடன் குதித்துக் கொண்டு, அலறிக்கத்தும் - சல்பர்

109. உணர்வைத் தூண்டும் தின்பண்டங்களைத் தாய் சாப்பிட்டதால் குழந்தைக்கு வயிற்றுவலி-நக்ஸ்வாமிகா

110. நோயுள்ள குழந்தை கவலை, பயத்தால் பகலிலும்இரவிலும் கத்தும் அல்லது பகலில் நன்றாகவும்,விளையாடிக்கொண்டும் இரவில் அழுது கொண்டு இருத்தல் - சோரினம்

111. பகலில் நன்கு தூங்கி, இரவில் விழித்துக் கொண்டு சொன்னால் கேட்காமல், திட்டவும் உதைக்கவும் செய்யவும், தாயைப் பிடித்துக் கொண்டு தொல்லை தரும். -லைகோபோடியம்

112. தோளின் குறுக்கே தூக்கி வைத்துக் கொள்ள விரும்பும் - ஸடேனம்

113. இரவில் போர்வையை உதைத்துத் தள்ளும் - சானிகுலா

114. நகங்களைக் கடித்தல் - ஆர்சி.ஆல், அகோனைட்

115. மூக்கில் விரல் விட்டு இரத்தம் வரும் வரை குடைதல் - ஆரம்டிரிப்

116. தலைவலியின் போது கையைத் தலையின் பின் பக்கமாக வைத்துக் கொண்டு வலியால் கத்தும் - ஆரம்டிரிப்

117. அதிப் பிடிவாதம், அடஙகாமை - ஆரம்டிரிப்

118. பாலு உணர்வு - ஆலோ

119. பிறர் முன் சிறுநீர் கழிக்க வெட்கப்படுதல் - ஆம்பிரா

120. இனிப்பு மேல் ஆவல் - அர்ஜெண்ட்.நைட்

121. தன்னையே வருத்திக் கொண்டு, முடியை இழுத்துக் கொள்ளும் - ஆர்ச்.ஆல், பெல்லடோனா

122. தூக்கத்தில் தூக்கிப் போடுதல் - பெல்லடோனா

123. காலராவில் உடல் சூடாயிருத்தல் - பிஸ்மத்

124. சூடான தலை - போரக்ஸ்

125. மிருகம் மற்றும் புதியவர்ளைப் பார்த்தால் பயம் - புபோ

126. தூங்கும் போது மூச்சு அடைக்கும் - கல்.பாஸ், போரக்ஸ்

127. இரவு பகல் அழுதல் - ஓபியம்

128. பல்முளைக்கும் காலம், தண்டனைக்குப் பின், பயத்திற்குப் பின் தினம் குறிப்பிட்ட நேரத்தில் வரும் இசிவு - இக்னேசியா

129. பலவீனமான குழந்தை அதிகமாக விளையாடினாலோ, சிரித்தாலோ இசிவு வரும் - கபியா

130. முடியைப் பிடித்து இழுக்கும், தலையில் அடித்துக் கொள்ளும் - டுபர்குளினம்

131. மூக்கு அழுக்கு நிறைந்து இருக்கும் - மெர்க்குரியஸ்

132. தூங்க ஆரம்பித்தும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் - கிரியோசோட், செபியா

133. 16 மாதமாகியும் பிறர் உதவியின்றி நிற்கவோ, நடக்கவோ முடிவதில்லை - சானிகுலா

134. தனக்கு எட்டக்கூடிய எந்தப் பொருளையும் வாயில் வைத்தல் - சல்பர்

135. இருட்டைக் கண்டால் பயம் - ஸ்டிரமோனியம்

136. சிறுநீரோ, மலமோ கழிப்பதில்லை - ஸ்டாபி சாகிரியா, லேடம்

137. பிறந்தவுடன் கத்துதல், பிறந்ததில் இருந்து கத்திக் கொண்டே இருத்தல் - சிபிலினம்

138. கைகள் சும்மா இருக்காமல் துறுதுறு என்று ஏதாவது செய்தல் - டாரன்டுலா

139. தலையைச் சுவரில் தானாகவே முட்டிக் கொள்ளுதல் - சிபிலினம், மில்லிபோலியம்

140. கோபப்படும் போது மூச்சு அடைத்தல் - ஆர்னிகா

141. குழந்தையின் தலையை மூடினால் பிடிக்காது - பெர்ரம்பாஸ்

thanks to -thulzan

ஜவாஹிரா
உதய நிலா
உதய நிலா

Posts : 305
Points : 909
Reputation : 2
Join date : 16/11/2010

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum