ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    3 posters

    Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

    Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:13 pm

    77 வயதில்திருமணம்!

    மாஸ்டர்ஸ்ஏற்கெனவே திருமணமானவர். வர்ஜீனியா ஜான்சனும் ஏற்கெனவே திருமண பந்தத்தில்இருந்தவர். ஆனால், மாஸ்டர்ஸ§ம் வர்ஜீனியா ஜான்சனும் பல வருடங்களாக இணைந்துசெக்ஸ் பற்றி செய்த ஆராய்ச்சி, அவர்களுக்குள்நெருக்கத்தை ஏற்படுத்தி விட்டது. தங்கள் முதல் துணைகளை இருவருமே விவாகரத்துசெய்துவிட்டு, 1969-ம் ஆண்டு திருமணம்செய்து கொண்டனர். அப்போது மாஸ்டர்ஸ§க்கு 53 வயது.அதன் பிறகு 23 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த அவர்கள், கடந்த 92-ம்ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு பிரிந்த னர். அதோடு அவர்களது ஆராய்ச்சி, சிகிச்சை எல்லாமே முடிவுக்கு வந்துவிட்டது. ‘‘செக்ஸ் ஆராய்ச்சி செய்து பல குடும்பங்களில்படுக்கை அறையில் சந்தோஷம் நிலவ காரணமான ஜோடி இது. இவர் களாலேயே சேர்ந்து வாழமுடியவில்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்? திருமண அமைப்பின்மீதே சந்தேகம் வரும் அல்லவா?’’ என அப்போது பலசெக்ஸ் நிபுணர்கள் வெளிப்படையாகவே கவலைப்பட்டார்கள். ஆனால், அந்த 77 வயதில் மூன்றாவதாக ஜெரால்டின் என்றபெண்மணியைத் திருமணம் செய்து கொண்ட மாஸ்டர்ஸ் 85 வயதில் இறக்கும் வரை அந்தப்பெண்ணோடு வாழ்ந்தார்.

    நம்ப முடியாதஉண்மை!

    கர்ப்பம்’ - இந்த வார்த்தையை உச்சரிக்கவும், ஒரு கர்ப்பிணியை டி.வி-யில் காட்டவும்அமெரிக்காவில் தடை இருந்தது. லூசில்லே பால் அமெரிக்காவின் புகழ்பெற்ற டி.வி.நடிகை. கடந்த 53-ம் ஆண்டு இவர் தயாரித்து நடித்த ஐ லவ் லூசிஎன்ற தொடர் பரபரப்பாக போய்க் கொண்டிருந்தபோதுஇவர் கர்ப்பமானார். தொடரை நிறுத்த விரும்பாமல், இவரது கேரக்டரேகர்ப்பமாவது மாதிரி கதையை மாற்றினார் டைரக்டர். ஆனால், ‘கர்ப்பம்என்ற வசனமும், கர்ப்பிணியின் திரைத் தோற்றமும் ஆபாசமானதுஎன்று தடை செய்தார்கள் டி.வி. நிலையத்தினர். பாதிரியார்கள், யூத மதகுருக்கள் பலரை சந்தித்து, ‘கர்ப்பம் என்பது ஆபாசமான விஷயம் இல்லை. இது மதநம்பிக்கைகளுக்கு எதிரானதும் இல்லை. இதை தாராளமாக டி.வி-யில் காட்டலாம்என லூசில்லே பால் விளக்கம் கொடுத்தார். இதைதொடர்ந்து லூசில்லேவுக்கு ஆதரவாக கருத்து சொன்னார்கள் - பாதிரியார்களும் மதகுருமார்களும். இதன்பின் லூசில்லே கர்ப்பிணியாக தோன்றுவதற்கு அனுமதித்த டி.வி.நிலையம், ‘கர்ப்பம்என்ற வசனத்தைமட்டும் சென்ஸார் செய்துவிட்டது. அதற்கு பதிலாக, ‘நான்எதிர்பார்த்துக்கிட்டு இருக்கேன்என்ற வசனத்தைபயன்படுத்தச் சொன்னது. அதை திக்கித் திக்கி பேசி காமெடி ஆக்கினார் அவர். உலகிலேயேடி.வி-யில் தோன்றிய முதல் கர்ப்பிணி அவர்தான்!

    கிட்டத்தட்டபதினான்காயிரம் ஆண்களிடம் இன்டர்வியூ நடத்தி, அவர்களதுபழக்கவழக்கங்களைத் தொகுத்து, ஆண்களின் செக்ஸ்பழக்கம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஒரு புத்தகத்தை எழுதினார், டாக்டர் ஆல்ஃபிரட் சார்லஸ் கின்ஸி. ‘Sexual behaviour in HumanMale’ என்ற அந்தப் புத்தகம்1948-ல் வெளிவந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:13 pm

    கின்ஸி அதில்சொல்லியிருந்த எல்லாமே வெடிகுண்டு சமாசாரங்கள். புத்தகம் வெளியான அடுத்த நொடி, அமெரிக்காவே பற்றி எரிந்தது.

    நான் பேசிய அத்தனைஆண்களில் 95 சதவிகிதம் பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுயஇன்பம் அனுபவித்ததாகஒப்புக்கொண்டார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேர் அவசரமாக, ‘சேச்சே! எனக்கு அப்படி எந்த பழக்கமும் இல்லைஎன்று மறுத்தார்கள். அநேகமாக, அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றுதான் எனக்குத்தோன்றுகிறது’.
    அதேபோலவே ஆண்களில்பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வுகளைத் தரும் என ஒருதடவையாவது முயற்சித்துப் பார்த்ததாகச் சொன்னார்கள். இதுதவிர, அமெரிக்க ஆண்களில் பத்து சதவிகிதம் பேர்பெரியவர்கள் ஆனதும், ஓரினச்சேர்க்கைப்பிரியர்களாக இருக்கிறார்கள்.

    ஆண்களில் எண்பத்தைந்துசதவிகிதம் பேர் கல்யாணத்துக்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள்.தங்கள் மனைவி கற்போடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் இவர்கள் அப்படி இல்லை.

    முப்பது முதல்நாற்பத்தைந்து சதவிகித ஆண்கள் திருமணத்துக்குப் பிறகு மனைவியைத் தவிர வேறுபெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்.
    & யாருக்கும் தெரியக்கூடாது என்று மனசுக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்த அழுக்கான ரகசியங்கள் வெளியேதெரிந்தால் அளவிட முடியாத கோபமும், அதிர்ச்சியும்பொங்கி வழியும்! அப்படித்தான் ரியாக்ட் செய்தது அமெரிக்க சமுதாயம்.

    இப்போதுபோலஅமெரிக்கர்கள் அப்போது எதையும் டேக் இட் ஈஸிஎன அலட்சியப்படுத்தும் மனோபாவத்தில் இல்லை.இரண்டாம் உலகப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. போரில் லட்சக்கணக் கானவர்கள்இறந்து போயிருக்க, குடும்பப் பிணைப்பு, அன்பு, பாசம் என எல்லாஉணர்வுகளும் உச்சத்தில் இருந்த நேரம் அது!
    அதோடுகாலம்காலமாக செக்ஸ் விஷயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் தளராமல் அப்படியேஇருந்துவந்தது. செக்ஸைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே பாவ காரியமாக கருதப்பட்டநேரம் அது! கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நிகழும் தாம்பத்ய உறவைத்தவிர, யாரும் எதையும் தப்பாக செய்வதில்லை... சமுதாயம்நேர்மையான பாதையில் போய்க்கொண்டிருக்கிறதுஎன பொதுவானநம்பிக்கை இருந்த காலம்!

    அந்த சமயத்தில்போய் அவர்களின் அசிங்கமான மறுபக்கத்தை அம்பலப்படுத்தி, ‘உங்கள் புருஷன் கல்யாணத்துக்கு முன்பும் சரி, பின்னாலும் சரி, உங்களிடம்உண்மையாக இல்லை. அது மட்டுமில்லை... அவர் சுய இன்பம் அனுபவித்தார். ஓரினச்சேர்க்கை அனுபவத்துக்கும் அவர் ஆசைப்பட்டார்என்று சொன்னால்எப்படி இருக்கும்?
    அமெரிக்காவேஆத்திரத்தில் பொங்கியது. கின்ஸிசெய்திருக்கும் வேலை அமெரிக்காவில் குடும்ப அமைப்பையே சிதைத்துவிடும். அவர்ஒழுக்கக் கேட்டை பரப்புகிறார். காலம்காலமாக இருந்துவரும் ஒழுக்க மதிப்பீடுகளை ஒரேநொடியில் தகர்த்துத் தரை மட்டமாக்கி விட்டார். இளைய சமுதாயத்தைத் தவறான பாதையில்திருப்பி விடுகிறார். கலாசார சீரழிவை தொடங்கி வைக்கிறார்என்றெல்லாம் அவரைத் திட்டினார்கள். அவர் இறந்துஐம்பது வருஷங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும்கூடஅவரைத் திட்டுபவர்கள் உண்டு. குழந்தைகளைக்கூட சிதைக்கும் செக்ஸ் வக்கிரம், எய்ட்ஸ் என்ற எமன்... இப்படி அமெரிக்காவைஇப்போது அச்சுறுத்தும் பல விஷயங்களுக்கும் அவரைக் குற்றம்சாட்டும் மனோபாவம்குறிப்பிட்ட சதவிகித மக்களிடம் இருக்கிறது.

    கின்ஸி, அடிப்படையில் ஒரு விலங்கியல் ஆராய்ச்சி யாளர்.அவர் செக்ஸைப் பற்றி ஆராய வந்ததே தனிக் கதை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே அவரைஈர்த்த விஷயம் அது! பள்ளியில் அவர் சாரணர் படையில் சேர்ந்தார். அதில் சேரும்விடலைப் பள்ளிப் பையன்களுக்கு ஒரு ஒழுக்கக் கையேடு கொடுப்பார்கள். அதில் ஒரு பாராஅவரைக் குழப்பியது.

    மீசை அரும்பும்வயதில் பையன்கள் தப்பான வழிகளில் போகக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும் கையேடுஅது! அதில், ‘பையன்கள் விடலைப்பருவத்தைத் தொடும் சமயத்தில் கடவுள் அவர்களுக்கு ஓர் அற்புதமான திரவத்தைப்பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடம்பில் சுரக்க ஆரம்பிக்கும். அவர்கள்வேகமாகவும், உயரமாகவும் வளர்ந்துதிடகாத்திரமான வாலிபன் ஆவதற்கு, இந்தத்திரவம்தான் உதவுகிறது. அதை எந்த வழியிலும் வீணாக்காமல் பத்திரமாக சேமித்துவைத்தால், மட்டுமே அவர்கள் வளரமுடியும். அதை வீணாக்குபவர்களைகடவுள் தண்டித்து விடுவார்என்றிருந்தது.

    வளர்ந்துகல்லூரிக்குப் போனபிறகு அதுபற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார் கின்ஸி. ஆனால், விலங்குகளின் செக்ஸ் உறுப்புகள், பழக்கங்கள் பற்றிய புத்தகங்கள்தான் அவருக்குக்கிடைத்தன. மனிதர்கள் பற்றிய புத்தகங்களைத் தேடிய அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    ப்ளூமிங்டன்நகரில் இருக்கும் இண்டியானா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பேராசிரியராக வேலைக்குசேர்ந்தபிறகு, அவர் தனது பாடத்துக்குவெளியிலும் ஆர்வம் காட்டத் தொடங்கினார். திருமணம் மற்றும்குடும்ப உறவுஎன்ற தலைப்பில் செக்ஸ்உணர்வுகள் பற்றி அவர் கொடுக்கும் உரை, இண்டியானாபல்கலைக்கழகத்தில் ரொம்ப பாப்புலர். மாணவர்கள் மட்டுமின்றி, வெளிநபர்களும்கூட வந்து கேட்குமளவு அவரது உரைசுவாரஸ்யமானது. தனது உரையைக் கேட்க வருகிறவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசிஅவர்களது செக்ஸ் அனுபவங்களை விசாரிப் பார் கின்ஸி. அப்போதுதான் அவருக்கு அந்தஉண்மை புரிந்தது. முறைகேடான செக்ஸ் உறவுகள் பற்றி மக்கள் நினைப்பதற்கும், நிஜமாக நடப் பதற்கும் இடையே ஏகப்பட்ட இடைவெளிஇருந்தது.

    ராக்ஃபெல்லர் அறக் கட்டளைஅப்போது செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி களுக்குநிதியுதவி செய்து கொண்டிருந்தது. தனது ஆராய்ச்சி குறித்து அந்த அறக் கட்டளைக்குஎழுதி நிதியுதவி கேட்டார் கின்ஸி. உடனே அது கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் தலைவர்ஹெர்மன் வெல்ஸ் அனுமதி கொடுக்க, ஆராய்ச்சியைஆரம்பித்து விட்டார் கின்ஸி. 1938&ம் ஆண்டுதொடங்கிய அந்த ஆராய்ச்சி அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:14 pm

    கின்ஸியின்ஆராய்ச்சி,மாஸ்டர்ஸ் செய்ததைப் போலபரிசோதனைக்கூட செக்ஸ் இல்லை. அவரது காலத்தில் அதைச் செய்திருக்கவும் முடியாது.அவர் மனிதர்களின் செக்ஸ் மனோபாவத்தை அம்பலப்படுத்த விரும்பினார். அதனால் முழுக்கஇன்டர்வியூக்கள்தான்!

    அதற்கு முன்நடந்த செக்ஸ் சர்வேக்கள் வேறுவிதமாக இருந்தன. ஆராய்ச்சியாளர் ஆணாக இருந்தால், பெண்களை முகத்துக்கு நேரே பார்த்து அந்தரங்கமானகேள்விகள் கேட்க கூச்சப்படுவார். ஆண்களிடமே ஆண்கள் கேட்கத் தயங்கும்சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்காக பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து, அதில் டிக்அடிக்கச்சொல்வார்கள். இப்படி பலரும் டிக்அடித்துக் கொடுக்கும் படிவங்களை வைத்துஆராய்ச்சி இறுதி செய்யப்படும்.

    ஆனால், கின்ஸிக்கு இந்த டைப் ஆராய்ச்சியில் விருப்பம்இல்லை. அவர் ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேரே பார்த்துக் கேள்விகள் கேட்டு தகவல்திரட்ட விரும்பினார். இப்படிப்பட்ட நேரடி இன்டர்வியூக்களில் யாரும் பொய்சொல்லமாட்டார்கள் என அவர் நம்பினார். மொத்தம் 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை அவர்வடிவமைத்தார். அதில் முந்நூறு கேள்விகள் செக்ஸ் தொடர்பானவை... மற்றவை, தகவல் கொடுப்பவர் பற்றிய தகவல் குறிப்புகள்.தகவல் தரும் யாருடைய பெயரையும் அவர் பதிவு செய்யவில்லை. வயது, இனம், தொழில், குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்... என்கிறமாதிரி தகவல்களாகத்தான் அவை இருக்கும். இப்படி ரகசியம் காக்கப்படும் என நம்பினால்தான்அவர்கள் உண்மை பேசுவார்கள் என்பது கின்ஸிக்கு தெரியும் (இண்டியானாபல்கலைக்கழகத்தில் கின்ஸி ஆராய்ச்சி நடத்திய மையம் இன்னமும் கின்ஸி செக்ஸ், பாலினம் மற்றும்மகப்பேறு ஆராய்ச்சி நிலையம்என்ற பெயரில்இயங்கிவருகிறது. அங்கு இந்த எல்லா படிவங்களும் பொக்கிஷம் போலபாதுகாக்கப்படுகின்றன. யார் வேண்டுமானாலும் போய் இவற்றைப் படிக்கலாம்).

    ஒரு நபரிடம்இன்டர்வியூவை முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. இந்த வேகத்தில் போனால், இந்த ஒற்றை ஆராய்ச்சியை முடிக்கவே தன் வாழ்நாள்போதாது என்பதை உணர்ந்த கின்ஸி மூன்று உதவியாளர்களை செலக்ட் செய்து, அவர்களுக்கும் பயிற்சி கொடுத்துத் தன்னைப்போலவே இன்டர்வியூ செய்ய சொன்னார்.

    கின்ஸி ஒருநாளில்பதினாறு, பதினேழு மணி நேரம் உழைக்கிற டைப்.பல்கலைக்கழகத்துக்கு தேடிவரும் நபர்கள் குறைவாக இருந்ததால், அவர் அமெரிக்கா முழுக்க சுற்றி பலரைசந்தித்தார். குறிப்பாக சிறைக்கைதிகள். செக்ஸ் தொடர்பான குற்றங்களுக்காக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்த பலரை அவர் சந்தித்து இன்டர்வியூ செய்தார். அதோடு ஆண்செக்ஸ் தொழிலாளர்களையும் விட்டு வைக்கவில்லை. அவரது டீம் எடுத்த மொத்தஇன்டர்வியூக்களில் இருபத்தைந்து சதவிகிதம் கைதிகளுடையது. ஐந்து சதவிகிதம் செக்ஸ்தொழிலாளிகளுடையது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:15 pm

    இது தவிர பலகல்லூரிகளுக்கு சென்று உரை நிகழ்த்துகிற பழக்கம் அவருக்கு இருந்தது. ஆனால், இந்த உரைகளுக்காக கட்டணம் எதையும் அவர்வாங்கியதில்லை. அதற்கு பதிலாக அதைக் கேட்கும் மாணவர் களையும் மற்றவர்களையும் வந்துதங்கள் அனுபவங்களைச் சொல்லும்படி அழைப்பு விடுத்தார்.

    இவ்வளவுஅனுபவங்களையும் அவர் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்ட போதுதான் அமெரிக்கா பற்றிஎரிந்தது. அது தடிமனான புத்தகம்... சாதாரண ஆசாமிகள் படித்தாலே கொட்டாவி வருகிறஅளவுக்குக் கடினமான மருத்துவ பாஷை. பல பக்கங்களை புள்ளிவிவர வரைபடங்கள் அடைத்துக்கொண்டிருந்தன. இவ்வளவும் இருந்தும் அந்தப் புத்தகம் ஐந்து மாதங்களில் இரண்டுலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. இதன் விற்பனை வேகம் அதிகரித்த அதே அளவுக்குஎதிர்ப்புகளும் அதிகரித்தன.
    ஆனால், முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி அசரவில்லை.ஆண்களை அம்பலப்படுத்திய அவர், அடுத்துக்குறிவைத்தது அமெரிக்க பெண்களை!
    முந்தைய விவகாரம்அணுகுண்டு என்றால் இது ஹைட்ரஜன் குண்டு...

    கின்ஸி, ஆண்களைப் போலவே அமெரிக்கப் பெண்களைப் பற்றியும்ஆராய்ச்சி செய்கிறார் என்ற தகவல் பரவியதும், நாடு முழுக்கப்பதற்றம் தொற்றிக் கொண்டது. தங்கள் தாயின், மனைவியின், மகள்களின் அந்தரங்க வாழ்க்கையை கின்ஸிகிளறுவதாகப் பலரும் உணர்ந்தனர். பெண்கள் இயக்கங்கள், சமூக அமைப்புகள், மதவாதிகள் என பலரும் அவருக்கு எதிராகக்கொடிபிடித்தனர்.

    கின்ஸிவேலைபார்க்கும் இண்டியானா பல்கலைக்கழகத்துக்கு எதிராக அவர்கள் கொதிக்க, பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹெர்மன் வெல்ஸ்கவலையோடு கின்ஸியைக் கூப்பிட்டுப் பேசினார். இனிமேல் எந்தஆராய்ச்சி செய்தாலும் அதைப் புத்தகமாக வெளியிட வேண்டாம்என்று கேட்டுக் கொண்டார். அந்தக்
    கல்விநிறுவனத்துக்கு அரசு வழங்கும் நிதியுதவியை ஒட்டுமொத்தமாக நிறுத்தவும் பலர் முயற்சிசெய்தார்கள்.

    இண்டியானாகத்தோலிக்க பெண்கள் அமைப்பு, கின்ஸிக்குஎதிராகக் காட்டமாக அறிக்கை விட்டது. ஆராய்ச்சி என்றபெயரில் தப்புத்தப்பாக எதையோ செய்கிறார் கின்ஸி. இதனால் எங்கள் பெண்கள்கெட்டுப்போக வாய்ப்பிருக்கிறது. அவர் அந்த ஆராய்ச்சியை நிறுத்திவிட்டு, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால்தான்எங்கள் பெண்களை அங்கு படிக்க அனுப்புவோம்என்று அறிவித்தது, அந்த அமைப்பு. ஆனால், இதற்கு கின்ஸி அசரவில்லை. கடைசியில் போராட்டம்பிசுபிசுத்துப் போனது.

    ஆனால், அவருக்கு அடுத்த சோதனை, அமெரிக்க கஸ்டம்ஸ் ரூபத்தில் வந்தது. செக்ஸ்தொடர்பான ஓவியங்கள், புத்தகங்கள், வரைபடங்கள் என பலவற்றை பல நாடுகளிலிருந்துவரவழைத்துத் தன் ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்திருந்தார்

    கின்ஸி. 1950&ம் ஆண்டு அவரது ஆராய்ச்சிக் கூடத்தை அமெரிக்ககஸ்டம்ஸ் அதிகாரிகள் ரெய்டு செய்தனர். அவர் ஆபாசமான பொருட்களை சேகரித்துவைத்திருப்பதாகச் சொல்லி, எல்லாவற்றையும்அள்ளிக்கொண்டு போய்விட்டனர் (கின்ஸி பொங்கி எழுந்து கஸ்டம்ஸ் மீது வழக்குபோட்டார். ஏழு ஆண்டுகள் சட்டப் போராட்டத்துக்குப் பிறகு, ‘அவை ஆராய்ச்சி நோக்கில் கொண்டு வரப்பட்டவை.ஆபாச எண்ணம் இல்லை. அதனால் எல்லாப் பொருட்களையும் திருப்பிக் கொடுங்கள்என கோர்ட் உத்தரவிட்டது. அவை திரும்பிவரும்போது கின்ஸி உயிருடன் இல்லை!).

    எரிவதைப் பிடுங்கினால்கொதிப்பது நிற்கும்என கணக்குப் போட்டனர், கின்ஸிக்கு எதிரானவர்கள். இந்த ஆராய்ச்சிக்குநிதியுதவி செய்யும் ராக்ஃபெல்லர் அறக்கட்டளைக்கு எதிராகவும் அவர்கள் பிரச்னை செய்ய, அந்த அறக்கட்டளை கின்ஸியின் ஆராய்ச்சிக்குநிதியுதவி தருவதை நிறுத்தியது. ஆனால், அதற்குள் கின்ஸிஆராய்ச்சியை முடித்துவிட்டார்.

    சுமார் ஆறாயிரம்பெண்களிடம் இன்டர்வியூ செய்து முடித்த அவரது குழு, புத்தகத்தைத்தயாரிக்கும் வேலையில் இறங்கியது. ஆனால், அதற்குவேட்டுவைக்கும் விதமாக ஒரு காரியம் நடந்தது. கின்ஸி தனதுஆராய்ச்சியை முடித்து விட்டார். அவரது கணிப்பின்படி பல பெண்கள் விதம்விதமான தப்புசெய்கிறார்கள். அமெரிக்க பெண்களின் மோசமான நடத்தை பற்றி ஷாக்தகவல்கள் அடங்கியஅவர் புத்தகம் விரைவில் வரப் போகிறதுஎன்கிறரீதியில்பயங்கரமான யூகங்களை பல பத்திரிகைகள் விதம்விதமாக அள்ளிவிட்டுக் கொண்டிருந்தன.இப்படி ஒவ்வொரு செய்தி வரும்போதும் பெண்கள் அமைப்புகள் கோபத்தில் கொதித்தன.

    இதை இப்படியேவிட்டால், தன் புத்தகமே வரவிடாமல் செய்து விடுவார்கள்என்பதை உணர்ந்த கின்ஸி, முன்னணிப் பத்திரிகைகளின்நிருபர்களை ஒருநாள் தன் ஆராய்ச்சிக் கூடத்துக்குக் கூப்பிட்டார். ஆராய்ச்சி முடிவுகளை உங்களிடம் வெளிப்படையாகச்சொல்கிறேன். அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் பார்க்கலாம். இதை அடிப்படையாக வைத்துநீங்கள் அதிகபட்சம் ஐயாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதிக் கொள்ளலாம்.ஆனால், புத்தக ரிலீ்ஸுக்கு ஒருநாள் முன்னதாகத்தான்உங்கள் கட்டுரை வெளியாக வேண்டும்என நிபந்தனைகளைவிதித்தார். உஷாராக அதை அப்படியே ஒரு ஒப்பந்தமாக டைப் அடித்து அவர்களிடம்கையெழுத்தும் வாங்கிக் கொண்டார். அதன்பிறகே பத்திரிகைகள் அந்த ஆராய்ச்சி பற்றியயூகங்களை எழுதுவதை நிறுத்தின.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:15 pm

    1953&ம் ஆண்டு செப்டம்பர் 14&ம் தேதி. ‘Sexual behaviour in Human Female’’என்ற அந்தப் புத்தகம் வெளிவந்தது. பெண்களும் திருமணத்துக்கு முன்பே செக்ஸ்அனுபவங்களைத் தேடுகிறார்கள். திருமணமான அமெரிக்க பெண்களில் இருபத்தைந்து சதவிகிதம்பேர் தங்கள் கணவனுக்கு உண்மையாக இல்லை. திருமண பந்தத்துக்கு வெளியே அவர்கள் வேறுயாரோ ஓர் ஆணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்என்றஅதிரவைக்கும் உண்மையை சொன்னது, அந்தப் புத்தகம்.அதோடு மட்டுமில்லை... அமெரிக்க பெண்களில் 62சதவிகிதம் பேர் திருமணத்துக்கு முன்போ, திருமணமானபின்னரோ சுயஇன்பம் அனுபவித்து இருக்கிறார்கள். கணிசமானவர்கள் இதைத் தொடர்ச்சியானபழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஓரினச்சேர்க்கையில் நாட்டமுள்ள பெண்களும் நிறையபேர் உண்டுஎன்பதையும்அம்பலப்படுத்தினார் கின்ஸி. குறிப்பாக, அதிகம் படித்தபெண்கள்தான் விதம்விதமான செக்ஸ் அனுபவங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றார்கின்ஸி. சுயஇன்பம் அனுபவிக்க அவர்கள் பயன்படுத்திய முறைகள் குறித்தும் கின்ஸிசதவிகித வாரியாக பட்டியலிட்டு விலாவாரியாக எழுதியிருக்க, அமெரிக்க சமூகம் கோபத்தின் உச்சிக்கே போனது.அமெரிக்கா மட்டுமில்லை... அவரது ஆராய்ச்சி முடிவுகள் பல நாடுகளுக்கும் போக, அமெரிக்க மக்கள் தாங்கள் அவமானப்படுவதாகஉணர்ந்தனர். புகழ்பெற்ற பிரிட்டன் பத்திரிகையான தி பீப்புள்’& கின்ஸியின் புத்தகம் வெளியானதும் அவசரமாக ஒருசர்வே எடுத்தது. பதினெட்டு முதல் ஐம்பது வயது வரையிலான பிரிட்டன் பெண்கள் ஆயிரம்பேரிடம் எடுக்கப்பட்ட சர்வே அது! தனது சர்வே முடிவுகளை வெளியிட்ட அந்தப் பத்திரிகை, ‘அமெரிக்க பெண்களைப் போல பிரிட்டன் பெண்கள்மோசமானவர்கள் இல்லை. நம் பெண்கள் இன்னமும் ஒழுக்கத்தோடுதான் இருக்கிறார்கள்.குடும்ப அமைப்பு, கற்புநெறி போன்றபாரம்பரியமான மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கணவனுக்குவிசுவாசமாக இருக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் கன்னித்தன்மையைக் காக்கிறார்கள்என்று எழுதி, எரிகிறஅமெரிக்கக் கொள்ளியில் எண்ணெய் வார்த்தது.

    கம்யூனிசசெல்வாக்கோடு வல்லரசாகி அமெரிக்காவை ரஷ்யா மிரட்டிக் கொண்டிருந்த சமயம் அது!கம்யூனிச தத்துவம் அமெரிக்க ஆட்சியாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்காவிலும்அந்த சித்தாந்தம் நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயம் அமெரிக்காவை ஆட்டிப்படைத்தது. அப்போது அரசுக்கு எதிராகச் செயல்பட்ட பலரையும் கம்யூனிஸ்ட்கள் எனசந்தேகித்து, கேள்வி கேட்காமல்சிறையில் அடைக்கும் பழக்கம் இருந்தது. ஜோ மெக்கார்தி என்ற செனட்டருக்கு இதுதான்வேலை. கின்ஸியின் ஆராய்ச்சி அவரை கொதிக்க வைத்தது. ‘‘கின்ஸியைஆராய்ச்சி செய்ய வைத்தது கம்யூனிஸ்ட்கள்தான். அமெரிக்க சமூகத்தை அழிக்கதிரைமறைவில் கம்யூனிஸ்ட்கள் செய்த சதிதான் இது’’ என்றார் அவர். ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாரையாவது கின்ஸிதற்செயலாக எப்போதாவது ரோட்டில் பார்த்து சும்மா ஹலோசொன்னார்என செய்திகிடைத்திருந்தால்கூட போதும்... கின்ஸியை சிறையில் தள்ளி கொன்றே போட்டிருப்பார்கள்.ஆனால், கின்ஸியை சிறையில் அடைக்கும் அளவுக்குமெக்கார்திக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் கின்ஸி தப்பித்தார்.

    இருந்தாலும் மதத்தலைவர்கள் அவரை சும்மா விடவில்லை. ஏற்கெனவேஒழுக்கக் கேடு மலிந்திருக்கும் நாட்டில், இந்தப்புத்தகங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்என கொதித்தார்கள். கின்ஸி அவர்களை அலட்சியம் செய்தார். ‘‘என்னுடையஆராய்ச்சியை விமரிசனம் செய்யும் தகுதி உங்களுக்கு இல்லை. விஞ்ஞானிகள் சமுதாயம் அதைமதிப்பீடு செய்யட்டும். அவர்கள் என் ஆராய்ச்சியில் தவறு இருப்பதாக சொன் னால் நான்ஏற்றுக் கொள் கிறேன்’’ என்றார்.
    மார்கரெட் மீட்என்ற பெண்மணி அந்த சமயத்தில் அமெரிக்காவே மதித்த மானுடவியல் அறிஞர். அவர்தான்அறிஞர் சமூகத்திலிருந்து முதன்முதலாக கின்ஸிக்கு எதிராகக் குரல் கொடுத் தவர்."கின்ஸியின் புத்தகங் களை தடை செய்ய வேண்டும்.அதற்காக நான் போராடுவேன்"என அவர்குரல்கொடுக்க,
    பெண்கள்அமைப்புகள், தங்களுக்கு வலுவான ஆதரவுகிடைத்த தெம்பில் இன்னும் ஆக்ரோஷம் காட்டின.

    மார்கரெட்கூடகின்ஸியின் புத்தகங்களில் புள்ளிவிவரக் குறைகளையோ, அறிவியல் ரீதியானதவறுகளையோ சொல்லவில்லை. சமுதாயத்தில் தவறான பழக்கங்களை இது வளர்த்துவிடும்என்றுதான் அவர் கவலைப்பட்டார். ‘‘நிறைய பெண்கள்தப்பு செய்யலாம். நான் இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்கள் பயந்துகொண்டுதான் தப்பு செய்கிறார்கள்.மற்ற பெண்கள் எல்லாம் கற்புநெறியோடு வாழும்போதுநான் மட்டும் ஏன் இப்படி மாறிவிட்டேன்என்ற குற்றஉணர்ச்சி தப்பு செய்யும் பெண்களை அடிக்கடி முள்ளாகக் குத்துகிறது. இதனால் அவர்கள்காலப்போக்கில் திருந்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தப் புத்தகம்அந்த குற்ற உணர்ச்சியைப் போக்கிவிடும்.

    கணவனை விட்டுஅடுத்த ஆணுடன் முறைகேடான தொடர்பு வைத்திருக்கும் ஒவ்வொரு பெண்ணும், ‘நான் மட்டுமா தப்பு செய்கிறேன்? அமெரிக்க பெண்களில் நான்கில் ஒருத்தி செய்யும்அதே விஷயம்தானே இது!என நினைக்க ஆரம்பித்துவிட்டால், அவ்வளவுதான்... அமெரிக்காவில் குடும்ப அமைப்பேஉடைந்து சிதறிவிடும். இதைத்தான் கின்ஸி விரும்புகிறாரா?’’ என்று கேள்வி எழுப்பினார் மார்கரெட்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:16 pm

    ஆனால் கின்ஸிதெளிவாக இருந்தார். ‘‘அமெரிக்கர்களைஅசிங்கப்படுத்தவோ, குடும்ப அமைப்பைசிதைக்கவோ நான் ஆசைப்படவில்லை. நானும் அன்பான மனைவி, மூன்றுகுழந்தைகள் என இனிமையான குடும்ப வாழ்க்கை நடத்தும் அமெரிக்கன்தான். ஆனால், குடும்பம் வேறு... ஆராய்ச்சி வேறு. சமூகத்தில்அமைதியாக நிகழ்ந்து வரும் மாற்றங்களையும், அவலங்களையும்கண்டும் காணாமல் விட்டு, ‘எல்லோரும்ஒழுக்கமான பாதையில் போகிறார்கள்என்று குருட்டுத்தனமாக நம்புவது, அறிஞர்களின் வேலை இல்லை.மக்கள்தொகை கணக்கில்லாமல் பெருகுவது, புதிது புதிதாகபால்வினை நோய்கள் வருவது, இளம் வயதிலேயேபெண்கள் கர்ப்பமாவது, பிஞ்சுக் குழந்தைகள் மீதுசெக்ஸ் சித்ரவதை என ஏராளமான விஷயங்கள் தப்புத்தப்பாக நடக்கின்றன. எதிர்காலத்தில்இவை இன்னும் மோசமாகலாம். இதற்கெல்லாம் என்ன காரணம்... யார் குற்றவாளி... இந்தத்தவறுகளை தவிர்க்க என்ன வழி என ஆராய்ச்சி செய்யாமல் விட்டால், இன்னும் சில தலைமுறைகள் தாண்டி உலகமேவெறியர்களின் கூடாரமாகி விடும். மனிதர்களின் செக்ஸ் பழக்கங்கள் பற்றிஆராய்ந்தால்தான் இதன் பின்னணி புரியும். அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நன்மைசெய்யும் ஆராய்ச்சியைத்தான் நான் செய்தேன்’’ என்றார் அவர்.

    செக்ஸாலஜியின்தந்தை என்று இப்போது கின்ஸி புகழப்படுகிறார். பக்தர்கள் புண்ணியத் தலங்களுக்குயாத்திரை போவதுபோல, உலகெங்கும் இருக்கும்செக்ஸாலஜி நிபுணர்கள் வாழ்க்கையில் ஒரு தடவையாவது போக நினைப்பது, அவர் நிறுவிய கின்ஸி ஆராய்ச்சிநிலையத்துக்குதான்! அமெரிக்க சமூகம் பற்றி அவர் சொன்ன எல்லாமே, உலகத்துக்கே பொருந்தும் உண்மை என்பது ஐம்பதுஆண்டுகள் கழித்து இப்போது புரிகிறது.

    ஆனால், அவர்மீது செக்ஸ்வெறிபிடித்த மனநோயாளி’, ‘குழந்தைகளைசெக்ஸ் கொடுமைக்கு ஆளாக்கியவர்என ஏகப்பட்டகுற்றங்களை பலர் சுமத்த, இன்றைய தேதிவரைஅதற்கெல்லாம் பதில் சொல்லியபடி இருக்கிறது கின்ஸி நிலையம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:16 pm

    எல்லாஎதிர்ப்புகளையும் சமாளிக்கிற ஒருவர், அவரது குடும்பம்தாக்கப்படும்போது நிலைகுலைந்து போவார். கின்ஸியை அப்படித்தான் அழிக்கப்பார்த்தார்கள்.
    ‘‘செக்ஸைப் பற்றி இவ்வளவுஅருவருப்பான ஆராய்ச்சியை கின்ஸி செய் யக் காரணம் இருக்கிறது. அடிப்படையில் அவர்செக்ஸ் பற்றிய விபரீதமான கற்பனைகளைக் கொண்ட ஒரு மனநோயாளி. அவருக்கு எந்நேரமும்செக்ஸைப் பற்றிய நினைப்புதான். திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தாலும், அவர் ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தார்.அதனால்தான் அமெரிக்கர்கள் எல்லாம் அதே பழக்கம் உள்ளவர்களாக அவருக்குத்தெரிந்தார்கள். அது மட்டுமில்லை... தன் மனைவியையே விநோதமான செக்ஸ் உறவுகளில் ஈடுபடவைத்து, ஆபாசப்படம் எடுக்க முயன்றார் கின்ஸி. இதனால்அவருக்கும் அவருடைய மனைவிக்கும் சரியான உறவு இல்லாமல் போனது. தன் உதவியாளர்கள்சிலரையும் கூப்பிட்டு, ‘உன் மனைவியோடு செக்ஸ்உறவில் ஈடுபடுவதை ஆராய்ச்சிக்காகப் படமெடுக்க வேண்டும்என்று கட்டாயப்படுத்தினார் கின்ஸி. இதனால் பலர்அவரிடமிருந்து விலகிவிட்டார்கள்!’’

    இப்படி ஒருவதந்தி திட்டமிட்டுக் கிளப்பப் பட்டது. இது பத்திரிகைகளில்கூட செய்தியாகவெளியானது. கின்ஸியிடம் இதுபற்றி சிலர் கேட்டனர். ‘‘விலங்குகள்எப்படி உறவு வைத்துக் கொள்கின்றன என்பது பற்றிய படங்கள்தான் இப்போது உள்ளன.மனிதர்கள் உறவு கொள்வது பற்றிய டாகுமென்டரி படங்களை எடுப்பது சாத்தியமில்லை.உறவுக்காட்சிகள் பற்றிய சில புகைப்படங்கள்தான் என்னிடம் உள்ளன. அதுகூட வேறுசிலர்எடுத்துக் கொடுத்தது’’ என்று வெளிப்படையாகப்பதில் சொல்லி இந்த வதந்தியை சாகடித்தார் கின்ஸி.

    ஆனால், அமெரிக்காவில் சமூக ஒழுக்கத்தைக் காக்கும் ஓர்அமைப்பை நடத்திவரும் ஜூடித் ரீஸ்மேன் என்ற பெண்மணி, கின்ஸி பற்றிஎழுப்பி வரும் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது, கின்ஸி நிலையம். ஆர்.எஸ்.வி.பி. (Restoring Social Virtue and Purity in America) என்ற அமைப்பின்தலைவராக இருக்கிறார் ரீஸ்மேன். ‘‘நடுத்தரவர்க்கத்தின் மனோபாவத்தைக் களங்கப்படுத்த அறிவியலை ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொண்டார் கின்ஸி. முறைகேடான செக்ஸ் உறவுகளை அமெரிக்க மக்களுக்கு அறிமுகம் செய்தவர்அவர்தான். அமெரிக்காவில் செக்ஸ் தொடர்பான கலாசார நம்பிக்கை, சட்டங்கள், குற்றங் கள்எல்லாமே மோசமானதற்கு காரணம் அவர்தான். திருமணத்துக்கு முன்பே இளம்பெண்கள்கர்ப்பமாவது, இளம் குழந்தைகள் செக்ஸ்வெறியர்களால் சிதைக்கப் படுவது என எல்லா செயல்களுக்கும் காரணமான நரகத்தின் கதவுகளைஅமெரிக்காவில் திறந்துவிட்டவர் கின்ஸி’’ என கடுமையாகக்குற்றம் சாட்டினார் அவர். மற்றவர்கள் மாதிரி வெறுமனே அவர் பேச்சோடு நிற்கவில்லை.கின்ஸியின் ஆராய்ச்சி குறித்து இரண்டு புத்தகங்கள் எழுதினார். கின்ஸி செய்தஆராய்ச்சியைக் குற்றவியல் நோக்கோடு பார்த்தன அந்தப் புத்தகங்கள். ஆனால், அவை வெளிவந்தபோது கின்ஸி உயிரோடு இல்லை. அதனால்கின்ஸிக்குப் பிறகு அவரது நிலையத் தின் இயக்குநராகப் பணிபுரிந்த பால் கெப்பார்ட், அவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்குஆளானார். ஆண்கள் தொடர்பான தன்னுடைய செக்ஸ் ஆராய்ச்சி முடிவுகளில், ஆண் சிறுவர்கள் பற்றிய விவரங்களையும்குறிப்பிட்டு இருந்தார் கின்ஸி.

    இதைத்தான்ரீஸ்மேன் வகையாகப் பிடித்துக் கொண்டார். ‘‘இந்தப்பட்டியலில் 317 சிறுவர்களைப் பற்றிய விவரங்கள் இருக்கின் றன. இதில் சில நிகழ்வுகளைநிமிடக் கணக்கில் விவரிக்கிறார் கின்ஸி. பக்கத்திலேயே கடிகாரத்தோடுஉட்கார்ந்துகொண்டு கணக் கெடுத்தால் தவிர, இவ்வளவுதுல்லியமாக இதை எழுத முடியாது. அந்த சிறுவர்களின் உணர்வுகளை விவரிப்பதும்பக்கத்தில் இருந்து பார்த்தால்தான் சாத்தியம். கின்ஸி இந்தக் குற்றத்தைச்செய்திருக்கிறார்’’ என்று தன் புத்தகத்தில்கடுமையாகத் தாக்கி எழுதினார் ரீஸ்மேன்.

    அதே சமயத்தில்அமெரிக்காவில் இருக்கும் குடும்ப ஆராய்ச்சி கவுன்சில் என்ற அமைப்பு, வீடியோ படம் ஒன்றை எடுத்து, கின்ஸி மீது தாக்குதல் தொடுத்தது. பிரிட்டனில்இருக்கும் யார்க்ஷயர் டெலிவிஷன்

    நெட்வொர்க், ‘கின்ஸியின் குழந்தை செக்ஸ் வெறியர்கள்என்ற பெயரில் பரபரப்பான டாகுமென்டரி படம் ஒன்றைஎடுத்து ஒளிபரப்பியது.

    இந்த எல்லாகுற்றச்சாட்டுகளுக்கும் தெளிவாகப் பதில் சொன்னது கின்ஸி நிலையம். கின்ஸி பல சிறுவர்களை இன்டர்வியூ செய்தபோதுகூடஅந்த சிறுவர்களின் பெற் றோர்கள் முன்னிலையில்தான் செய்தார். அது மட்டுமில்லை... பலஆண்கள் தங்களது சிறுவயது அனுபவங்களை அவரிடம் சொன்னார்கள். அதுவும் இதில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சில தகவல்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் தாங்கள் நேரடியாகப் பார்த்தசிறுவர்களைப் பற்றிச் சொன்னவை.

    இதுதவிர, ஒன்பது குற்றவாளி கள் தாங்கள் சிறுவர்கள் மீதுமேற்கொண்ட செக்ஸ் வன்முறை களைப் பற்றி சொன்னார்கள். இதில் மிஸ்டர் கிரீன்என்றுபுனைப்பெயர் தரப்பட்ட ஒருவன், தன் டைரியைகின்ஸியிடம் கொடுத்தான். அவன் 1917ல் ஆரம்பித்து 48ம் ஆண்டு வரை கிட்டத்தட்டஎண்ணூறு சிறுவர் களிடம் செக்ஸ் உறவு கொண்டான். அந்த எல்லா உறவுகளையும் ஆரம்பத்தில் இருந்து முடிக்கும் வரை நேரத்தைக் குறிப்பிட்டுத் துல்லியமாக வர்ணித்துஇருந்தான். கின்ஸி அவனது செயலை மன்னிக்க முடியாத குற்றம் என கண்டித்து இருக்கிறார்.அந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப் பட்டுதான் அவன் சிறையில் இருந் தான். அவன்கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவன் பெயரை மட்டும் மறைத்தார் கின்ஸி. தன்னுடையஆராய்ச்சி முடிவுகளில் அவர் சொல்லியிருந்த பெரும்பாலான விஷயங்கள் "மிஸ்டர்கிரீன்" சொன்னதுதான்என்றுவிலாவாரியாக விளக்கியது கின்ஸி நிலையம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:17 pm

    அடுத்ததாகஇன்னொரு விஷயம் கிளம்பியது. இரண்டாம் உலகப் போரின்போது போலந்து நாட்டை ஹிட்லரின்ஜெர்மன் படை ஆக்கிர மித்து இருந்தது. அந்த சமயத்தில் போலந்து மக்கள் கடும்சித்ரவதைக்கு ஆளானார்கள். இந்த சித்ரவதை படையில் இருந்த ஜெர்மன் தளபதி ஒருவர், கிட்டத்தட்ட 800 போலந்து சிறுவர்களை பாலியல்பலாத்காரம் செய்தார். கின்ஸியின் ஆராய்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர், தனது அனுபவங்களை எழுதி அனுப்பி வைத்தார். அதைப்படித்த கின்ஸி அவருக்கு, ‘உங்கள் அனுபவக்குறிப்புகள் என் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. அவற்றைப் படித்து மகிழ்ச்சிஅடைந்தேன்என பதில் எழுதியதாகஅடுத்தக் குற்றச்சாட்டு. சிறுவர்கள்செக்ஸ் சித்ரவதைக்கு ஆளானதைப் படித்து மகிழ்ச்சி அடையும் ஒரே ஆள் இந்த உலகத்தில்கின்ஸியாகத்தான் இருக்க முடியும்என்றனர் எதிர்ப்பாளர்கள்.

    கின்ஸி நிலையம், அந்தத் தளபதிக்கு கின்ஸி எழுதிய கடிதத்தின்பிரதியை வெளியிட்டது. உங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றதுஎன வெறும் ஒப்புகை வாசகம் மட்டுமே அதில்எழுதியிருந்தார் கின்ஸி. அதோடு இந்தக் குற்றச்சாட்டு பிசுபிசுத்தது.

    கடைசியாக இன்னொருவிஷயமும் சொல்லப்பட்டது. கின்ஸிஇன்டர்வியூ செய்ததில் 25 சதவிகிதம் குற்றவாளிகள், ஐந்து சதவிகிதம்செக்ஸ் தொழிலாளிகள். இப்படி சமூகத்தில் ஒழுக்கக்கேடானவர்களை விசாரித்து, அவர்கள் சொல்வதை வைத்து ஒட்டுமொத்தஅமெரிக்கர்களின் பழக்கம் இதுதான் என்று எப்படி வரையறுக்க முடியும்? அவர் சந்தித்த நபர்களில் கிராமத்து மக்கள், படிக்காதவர்கள் என யாருமே இல்லை. சமூகவிரோதிகள்செய்யும் தவறுகளை அமெரிக்கர்களின் ஒட்டுமொத்த பழக்கமாக அவர் காட்டிவிட்டார்என்றார்கள் அவரை எதிர்ப்பவர்கள்.

    இதற்காககின்ஸியின் ஆராய்ச்சிப் படிவங்களை சுத்தம் செய்யும்வேலையில் இறங்கினார், கின்ஸி நிலைய இயக்குநரான பால் கெப்பார்ட்.1979ம் ஆண்டு இப்படி திருத்தப்பட்ட கின்ஸியின் ஆராய்ச்சி அறிக்கை வெளியானது.சிறைக்கைதிகள் கொடுத்த வாக்குமூலங்களை அகற்றிவிட்டு, மற்றவர்களின்தகவல்களை மட்டும் வைத்துப் புள்ளிவிவரங்களைத் தொகுத்தபோது ஆச்சர்யம்தான். கின்ஸிஏற்கெனவே சொல்லியிருந்த புள்ளிவிவரங்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவேஇப்போது வித்தியாசம் வந்தது. அதாவது, சிறைக்கைதிகளாகஇருக்கட்டும் அல்லது அமெரிக்க மக்களாக இருக்கட்டும்... செக்ஸ் மனோபாவம் என்பதுஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது என்பதை பால் கெப்பர்ட் உறுதிப்படுத்தினார்.

    கின்ஸியின்வாழ்க்கை, நாவலாக வந்தது. கடந்த 2004ம் ஆண்டு கின்ஸிஎன்ற பெயரிலேயேஹாலிவுட் படமாகவும் வெளியானது. அப்போது இதே பழைய சர்ச்சைகள் மறுபடியும் விஸ்வரூபம்எடுத்தன. தங்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதோ, அட்வைஸ் செய்வதோயாருக்குமே பிடிக்காது. அந்த வகையில் அமெரிக்கர்களுக்கு கின்ஸியைப் பிடிக்காமல்போனதில் ஆச்சர்யமில்லை.

    ஆனால், இன்றைக்கு... அறியாமைஎன்ற எதிரியை வீழ்த்த அறிவு ஆயுதத்தோடு போராடியபோராளியாக அவர் உலகெங்கும் செக்ஸாலஜி நிபுணர்களால் கருதப்படுகிறார்.

    கின்ஸி சந்தித்ததாக்குதல்களே பரவாயில்லை என்கிற அளவுக்கு அவருக்கு முன்னதாக சித்ரவதைகளைஅனுபவித்தார், இன்னொரு ஆராய்ச்சியாளரானமாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட். ஹிட்லரின் எதிரியாக ஒருவர் கருதப்பட்டால், அவருக்கு என்னென்ன சித்ரவதைகள் நேரும்என்பதற்கு ஆராய்ச்சியாளர் பட்ட வேதனைகள்தான் உலக உதாரணம்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:17 pm

    ஹிட்லர் வாழ்ந்தகாலத்தில் அவரைவிட பாப்புலராக ஒருவர் ஜெர்மனியில் இருக்க முடியுமா? அப்படி இருந்தவர்தான் மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட்.தற்போதைய போலந்து நாட்டின் கோல்பெர்க் நகரம் அப்போது ஜெர்மனியின் ஒரு பகுதியாகஇருந்தது. அங்கு 1868&ல் பிறந்தவர்ஹர்ஷ்ஃபீல்ட்.

    அவர்அடிப்படையில் ஒரு டாக்டர். முறுக்கு மீசையோடு தோற்றம் தந்தாலும், பெண்மைத்தன்மை மிகுந்த ஆணாக அவர் இருந்தார். டிரான்ஸ்வெஸ்டிசம்எனப்படும் கோளாறு அவருக்கு இருந்தது. அதோடுஅவர் ஹோமோ செக்ஸ் பிரியராக வேறு இருந்தார். (ஆண்களுக்கு பெண்களின் உடைகளை அணியவேண்டும் என ஆசை வருவது... இதேபோல பெண்களுக்கு ஆண்கள் உடைகளின் மீது நாட்டம்வருவது... இந்த செக்ஸ் கோளாறுக்குதான் டிரான்ஸ்வெஸ்டிசம்என்று பெயர். ‘Transvestism என்ற இந்த வார்த்தையை அறிமுகம் செய்தவரேஹர்ஷ்ஃபீல்ட்தான். அதற்கு முன்புவரை இப்படி உடை மாற்றி அணிபவர்களை அலிகள்எனப்படும் அரவாணிகளாகவே பலரும் கருதி வந்தனர். ஆனால், ‘அரவாணிகளுக்கு ஹார்மோன் பிரச்னைகளும் சேர்ந்துஇருக்கிறது. டிரான்ஸ்வெஸ்டிசக் கோளாறு வெறுமனே மனதளவில் இருக்கும் பிரச்னைதான்.இதை யும் அதையும் சேர்க்கக் கூடாதுஎன்றுவிளக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட். அதோடு ஹோமோசெக்ஸ் உணர்வுள்ளவர் களையும் இந்த வகையில்சேர்த்து பலர் குழப்பிக் கொண்டி ருந்தார்கள். அதுவும் தப்பு என்பது ஹர்ஷ்ஃபீல்டின்வாதம்! மூன்றுமே தனித்தனியான குறைபாடுகள்... ஒருவருக்கே இதில் இரண்டு குறைபாடுகள்சேர்ந்து வரலாம் என்பது அவர் கட்சி!).

    எனக்கு ஏன் இப்படிப்பட்டஉணர்வுகள் தோன்றுகின்றன? மற்ற ஆண்கள்எல்லோரும் மிடுக்காக கோட் சூட் அணிய, எனக்கு ஏன்பெண்களின் ஆடைகளை அணிய வேண்டும் என ஆசை வருகிறது? பெண்களைப்பார்த்தால் எந்த உணர்வும் ஏற்படாமல், ஆண் களைப்பார்த்தால் பரவசம் ஏற்படுகிறது?’ என அவருக்குள்எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்தான் அவரை செக்ஸ் ஆராய்ச்சி பக்கம்திருப்பிவிட்டது. அப்போது ஜெர்மனி, ரஷ்யப் பேரரசின்அங்கமாக இருந்தது. உலகின் மற்ற முன்னேறிய நாடுகளை விட ஜெர்மனியில்தான் அந்தசமயத்தில் செக்ஸ் ஆராய்ச்சி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. இந்த ஆராய்ச்சிகளின்முடிவுகள் உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தடாக்டர்கள்கூட ஜெர்மனியை உன்னிப்பாகக் கவனித்தனர்.

    இதில் முதல்பரபரப்பு சிக்மண்ட் ஃபிராய்டு. அடிப்படையில் நரம்பியல் நிபுணரான ஃபிராய்டு, உளவியல் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருபவராகசீக்கிரமே மாறினார். வியன்னா நகரில் இருந்தபடி அவர் தந்த சிகிச்சைகளும், அவர் சொன்ன தத்துவங்களும் பலத்த சர்ச்சைக்குஆளாகின. கனவுகளின் அர்த்தங்கள், ஆழ்மனதின்வேட்கைகள் என பல விஷயங்களைச் சொன்ன ஃபிராய்டு, செக்ஸ் பற்றியும்அதிர வைக்கும் கருத்துகளைச் சொன்னார்.

    ‘‘குழந்தைப்பருவத்திலிருந்தே செக்ஸ் உணர்வுகள் தலைதூக்கி விடுகின்றன. தாயின் மார்பில்பால்குடிக்கும் குழந்தைக்கு செக்ஸ் உணர்வு இருக்கிறது. வளரவளர பெற்றோர் மீதுகுழந்தை காட்டும் அன்பும் இந்த திசையில்தான் போகிறது. பெண் குழந்தை அப்பா மீதும், ஆண் குழந்தை அம்மா மீதும் பாசம் காட்டும்.இப்படி எதிர்ப்பாலை நாடி பாசம் காட்ட அடிப்படைக் காரணம் செக்ஸ்தான். நான்குழந்தையிலிருந்தே என் அம்மா மீது பாசத்தோடும், அப்பா மீதுவெறுப்பு காட்டியும்தான் வளர்ந்தேன். உலகம் முழுக்க இப்படித்தான் நடக்கிறது என்பதுஎன் ஆய்வில் தெரியவந்தது’’ என்றார்ஃபிராய்டு.

    என்ன இது? பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றி அவர் இப்படிசொல்கிறாரேஎன சமூக அமைப்புகள் பலகொந்தளித்தன. ஃபிராய்டை ஒரு தலைசிறந்த டாக்டராக ஏற்றுக் கொண்டவர்கள்கூட அவரதுஇந்தக் கருத்துகளைக் கேட்டு முகம் சுளித்தனர். ஆனால், அவர் பழங்கால வரலாறுகளில் இப்படி நடந்த சம்பவங்களைஆதாரமாகச் சொல்லி, தன் கருத்தில் உறுதியாகஇருந்தார். அதோடு, ‘‘சிறு வயதில்ஏற்படும் அனுபவங்களைப் பொறுத்துதான் ஒருவர் இயல்பான செக்ஸ் பழக்கம் கொண்டவராகவோஅல்லது ஹோமோசெக்ஸில் நாட்டமுள்ள நபராகவோ ஆகிறார். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எந்தஆμம் ஹோமோசெக்ஸ் பழக்கத்தில் ஈடுபடவாய்ப்பிருக்கிறது’’ என்று வேறு சொல்லி எரிகிறகொள்ளியில் எண்ணெய் வார்த்தார் அவர்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:18 pm

    ஃபிராய்டுகிளப்பிய பரபரப்புக்கு மத்தியில் ஹென்றி ஹேவ்லாக் எல்லிஸ் என்ற பிரிட்டன் டாக்டர் செக்ஸ் உளவியல்என்ற தலைப்பில்ஏழு பாகங் களைக் கொண்ட ஒரு புத்த கம் வெளியிட்டார். அந்த சமயத்தில் டாக்டர்கள்செக்ஸைப் பற்றி தெரிந்து கொள்ள உதவிய ஒரே உருப்படியான புத்தகமாக இது இருந்தது. ‘‘வாழ்க்கையின் ஆணிவேரே செக்ஸ் தான். அதுபற்றிசரியான புரிதல் இல்லாத எவரும் முழுமை பெற்ற மனிதர்கள் ஆவதில்லை’’ என்றார் அவர்.

    ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம் அனுபவித்தல்போன்ற பல விஷயங்கள் மோசமான செக்ஸ் பிரச்னைகளாகக் கருதப்பட்ட காலம் அது! அவற்றுக்குஉளவியல் நிபுணர்கள் சீரியஸான சிகிச்சை தந்து கொண்டிருந்தனர். சில நாடுகள் இந்தப்பழக்கங்களை சட்டவிரோதமாகக் கருதி தண்டனைகளும் தந்து வந்தன. அந்த சமயத்தில் எல்லிஸ், ‘‘இதெல்லாம் செக்ஸ் பிரச்னைகளே கிடையாது.அவர்களின் செக்ஸ் பழக்கங்கள் வழக் கத்துக்கு விரோதமானதாக இருக்கிறது...அவ்வளவுதான்! இதை பெரிய விஷயமாக நினைக்கக் கூடாது. இதெல்லாம் நோயும் கிடையாது.சட்டவிரோதமும் கிடையாது’’ என்று அதிரடியாகசொன்னார்.

    ‘‘குற்றவியல், செக்ஸ் அறிவு ஆகிய இரண்டையும் அறிவியலின் ஒருஅங்க மாக ஆக்கி, பல்கலைக்கழகங்களில்கற்றுத் தர வேண்டும். செக்ஸ் சிரிக்கக்கூடிய விஷ யமோ, ஆபாசமோ, அருவருப்பானதோஇல்லை. அது அறிவியல்’’ என்றார் அவர். குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வியை போதிக்கவேண்டும். அப்போதுதான் வருங்கால சமுதாயம் நன்றாக இருக்கும்என்று சொன்ன முதல் ஆராய்ச்சியாளரும் அவர்தான்.

    இப்படிசர்ச்சைக்குரிய கருத்துகளைச் சொல்லி வந்ததால் அவரை பிரிட்டன் அரசாங்கத்துக்குப்பிடிக்கவில்லை. அவரது புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அவர்ஜெர்மனியில் உள்ள நண்பர்களோடு தொடர்புகொண்டு தன் புத்தகங்களை அங்கு அனுப்பினார்.ஜெர்மனியில் அவை அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்தன. இதனால் அவர் பிரிட்டனைவிடஜெர்மனியில்தான் பாப்புலர். அவரது புத்தகங்கள் பிரிட்டனுக்குக் கள்ளத்தனமாகக்கடத்தப்பட்டன. அங்கு அவற்றை விற்ற கடைக்காரர்கள், வாங்கியவர்கள் எனஎல்லோரும் கைது செய்யப்பட்டார்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:19 pm

    செக்ஸ்மனநோயாளிகள் சிலருக்கு ஒரு பழக்கம் உண்டு. தன் உடம்பை கண்ணாடியில் பார்த்து ரசித்தால்தான்அவர்களுக்கு செக்ஸ் உணர்வு கிளர்ந்து எழும். இந்த மனநோய்க்கு நார்ஸிசிஸம்என பெயர்வைத்தவர் எல்லிஸ்தான். சிறுவயதிலிருந்து ஒருவர் வளரும் குடும்பச் சூழல்தான் இந்தமனநோய் வருவதற்கு காரணமாக அமைகிறது என்றார் அவர்.

    நார்சிஸஸ்என்பவன் கிரேக்க காவியங்களில் வரும் ஒரு ஹீரோ. எக்கோ என்ற தேவதை அவனைக்காதலித்தாள். ஆனால், நார்சிஸஸ் அவளிடம்நாட்டம் காட்டவில்லை. இதனால் அவனை சபித்துவிட்டாள் எக்கோ. நீர் நிலைகளில் தன்னுடையநிர்வாண பிம்பத்தை தானே ரசிக்கும் மனநோயாளியாக அவன் மாறிப்போனான். இதுதான் சாபம்.பின்னாளில் நார்சிஸஸ் ஒரு அழகிய மலராக உருவெடுத்தான் (இன்றைக்கும்கூட இந்தநார்சிஸஸ் மலர் இருக்கிறது). அவன் பெயரிலிருந்தே தன் உடலைத் தானே ரசிக்கும்நோய்க்கு பெயரைச் சூட்டினார் எல்லிஸ்.

    வில்ஹெம் ரீக், ஆல்பர்ட் மால் என பல நிபுணர்கள் அடுத்தடுத்துஆராய்ச்சி புத்தகங்களை எழுதிக் குவித்தனர். கருத்தரங்குகள், விவாதக் கூட்டங்கள் என செக்ஸ் பற்றியவெளிப்படையான பேச்சுகள் சகஜமான விஷயங்கள் ஆயின. அதேபோல அவர்களுக்கு எதிர்ப்புகளும்வளர்ந்தன.

    இவர்கள்எல்லோரையும்விட ஹர்ஷ்ஃபீல்டை அதிகம் கவர்ந்தவர், ரிச்சர்டு வான்கிராஃப்ட் எபிங் என்பவர்தான். ஜெர்மனியின் புகழ்பெற்ற உளவியல் நிபுணரான இவர்சிக்மண்ட் ஃபிராய்டின் ஆசிரியர். இவர் எழுதிய பல மருத்துவ புத்தகங்களில் செக்ஸ் மனநோய்’ (லத்தீன் மொழியில்எழுதப்பட்ட அதன் பெயர் ’Psychopathia sexualis’) என்ற புத்தகம் இன்றைக்கும் மதிக்கப்படும்ஒன்று.

    ஹோமோசெக்ஸ் பழக்கம்கொண்ட பல ஆண்களை யும், லெஸ்பியன் உறவில்ஈடுபடும் பெண்களையும் இன்டர்வியூ செய்த அவர் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தார். ‘‘ஓரினச் சேர்க்கைப் பிரியர்கள் மனதளவில்பாதிக்கப்பட்ட செக்ஸ் நோயாளிகள் இல்லை... அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியகுற்றவாளிகளும் இல்லை. அது உடல்ரீதியான ஒரு குறைபாடு. அவர்கள் கருவில் உருவாகும்போதே தீர்மானிக்கப்படும் விஷயம் அது. மூளையில் செக்ஸ் உணர்வுகளைத் தீர்மானிக்கும்பகுதியில் ஏற்படும் குறைபாடுதான் அவர்களை இப்படி ஆக்கிவிடுகிறது.

    அவர்களையும் மற்றமனிதர்களைப் போல நார்மலான ஆசாமிகளாகவே கருத வேண்டும். உடல்ரீதியாக ஏற்பட்ட ஒருகுறைபாட்டுக்கு பாவம்... அவர்கள் என்ன செய்வார்கள்? அதை ஒரு வகைஊனமாகத்தான் கருத வேண்டும். ஊனமுற்றவர்கள் மீது கருணை காட்டுவது போல இவர்கள்மீதும் இரக்கம் காட்ட வேண்டும்’’ என்றார் அவர்.

    ஆனால், சட்டங்கள் வேறுவிதமாக இருந்தன.

    ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் எல்லோரும் வக்ரமான மனசு படைத்த ஆசாமிகள் என காலம்காலமாகஇருந்துவந்த நினைப்பை அடியோடு நிராகரித்த எபிங்கின் கருத்து, ஹர்ஷ்ஃபீல்டுக்குப் பிடித்திருந்தது.துரதிர்ஷ்டவசமாக அப்போது ஆசிரியர் எபிங்கைவிட அவருடைய மாணவர் ஃபிராய்டுதான் செக்ஸ்விஷயங்களில் ஜாம்பவானாக இருந்தார். ஓரினச்சேர்க்கைக்கு மனசுதான் காரணம்என ஃபிராய்டுசொன்னதுதான் பாப்புலராக இருந்தது. எபிங் சொன்னதை எல்லோரும் மறந்துவிட்டார்கள்.ஹோமோசெக்ஸ் பிரச்னைக்கு மருத்துவரீதியான தீர்வு தேடும் முயற்சியில் இறங்கும் நாம், எபிங் போட்டுக்கொடுத்த பாதையில்தான் போகவேண்டும் என முடிவெடுத்தார் ஹர்ஷ்ஃபீல்ட். 1908ல் உலகிலேயே முதன்முதலாக செக்ஸ்அறிவியலுக்காக மாத இதழ் ஒன்றை ஆரம்பித்தவர் ஹர்ஷ்ஃபீல்ட். புகழ்பெற்ற பலநிபுணர்களைத் தேடி வெளிநாடுகளுக்குக் கூடச் சென்று அவர்களின் கட்டுரைகளை வாங்கிஅதில் பிரசுரம் செய்தார். ஆனால் ஒரே ஆண்டில் அதை மாக்ஸ் மார்க்யூஸ் என்பவரிடம்கொடுத்துவிட்டு ஹோமோ செக்ஸுவல்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் அவர்.அப்போதைய ஜெர்மனியின் சூழல் மிக இறுக்கமானதாக இருந்தது. 1871ல் வில்ஹெம் மன்னர்ஜெர்மன் கிரிமினல் சட்டத்தைப் புதுப்பித்தார். இதன்படி ஹோமோசெக்ஸ், இயற்கைக்கு விரோதமான கிரிமினல் செயலாகக்கருதப்பட்டது. அந்த சட்டத்தின் 175ம் பாரா இதைத் தண்டனைக்குரிய குற்றமாகஅறிவித்தது. குற்றத்தில் ஈடுபடும் நபரின் பின்னணிக்கு ஏற்ப சிறைத் தண்டனை ஒரு நாள்என்ற குறைந்த அளவிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை விதிக்கப்படலாம்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:22 pm

    ஒரு அறைக்குள்தாழிடப்பட்ட கதவுக்குப் பின்னே இரண்டு ஆண்கள் மேற்கொள்ளும் உறவை போலீஸ் எப்படிமோப்பம் பிடிக்கும் என்ற சந்தேகம் பலருக்கு எழுந்தாலும்கூட, ஹோட்டல்கள், நடன அரங்குகளில்நிறைய பேர் கையும்களவுமாக சிக்கினார்கள். தங்களுக்குப் பிடிக்காத இளைஞர்கள் பற்றிஅக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் துப்பு கொடுத்தார்கள். பெர்லின் நகரில் மட்டும்ஒரு ஆண்டுக்கு சராசரியாக ஐந்நூறு பேர் இப்படி கைதானார்கள். அதைவிட பெரியகொடூரம்... பலர் தற்கொலை செய்து கொண்டது. பிரபலங்கள் பலரது ஹோமோசெக்ஸ் பழக்கத்தைஎப்படியோ தெரிந்துகொண்ட கிரிமினல்களும், போலீஸாரும்அவர்களை அடிக்கடி பிளாக்மெயில் செய்து பணம் பறித்தார்கள். இதனால் சஞ்சலப்பட்டுஅவர்களில் பலர் தற்கொலை செய்து கொண்டனர்.

    நான் ஹோமோசெக்ஸ் பழக்கம்உள்ளவன்தான். நான் இரவில் படுக்கையில் பெண்களோடு படுக்காமல் ஆண் தோழர்களோடுதான்படுக்கிறேன்என வெளிப்படையாக ஒருவர்

    அறிவித்துக்கொள்வது என்பது, ஏதோ பல்லவன் பஸ்ஸில்பர்ஸ் அடித்தவன் குற்றத்தை ஒப்புக்கொண்டு தர்மஅடி வாங்குவது போன்ற விஷயமாகஇருந்தது.
    ஹோமோ பிரியரானஹர்ஷ்ஃபீல்ட், இதைப் பார்த்துக்கொதித்தார். ஹோமோவுக்கு எதிரான கெடுபிடிகளை எதிர்த்து முதலில் புனைப்பெயரில் எழுதஆரம்பித்தார். ரேமியன் என்ற புனைப்பெயரில் அவர் 1896ல் வெளியிட்ட சில துண்டுப்பிரசுரங்கள் உணர்ச்சிகரமானவை. பழங்கால கிரேக்க பெண் கவிஞரான சாஃபோ (பிளாட்டோவின்ஆசிரியராக இருந்தவர்), தத்துவமேதை சாக்ரடீஸ்போன்ற பிரபலங்கள் ஹோமோசெக்ஸ் மற்றும் லெஸ்பியன் காதல் பற்றி எழுதிய கவிதைகள், கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துத் துண்டுப்பிரசுரங்கள் ஆக்கினார் ஹர்ஷ்ஃபீல்ட்.

    இவை, பரபரப்பான ஒரு அடித்தளத்தைப் போட்டுக் கொடுக்க, அடுத்த ஆண்டே ஹோமோசெக்ஸ் ஆண்களைதண்டனையிலிருந்து பாதுகாக்க, ‘விஞ்ஞானமனிதாபிமானிகள் சங்கம்’ (Scientific Humanitarian Society) என்ற அமைப்பை ஆரம்பித்தார் அவர்.

    ‘‘எப்படி பெரும்பாலானவலதுகை பழக்கமுள்ள மனிதர்களுக்கு மத்தியில் சிலர் இடதுகை பழக்கம் உள்ளவர்களாகஇருக்கிறார்களோ, அப்படி பல இயல்பான செக்ஸ்விரும்பிகளுக்கு மத்தியில் சிலர் ஓரினச் சேர்க்கையாளர்களாக இருக்கிறார்கள். இதுஅவர்களின் தவறு இல்லை. அவர்கள் வக்ரமான உணர்வு கொண்ட செக்ஸ் வெறியர்களும் இல்லை.இது பிறவிக் கோளாறு. அவர்களது உணர்வுகளுக்கும், பழக்கங்களுக்கும்உடல்ரீதியான மாறுபாடுகள்தான் காரணம். இதை அறிவியல்ரீதியாக அμக வேண்டும். அதைவிட்டு அவர்களை கிரிமினல்கள்மாதிரி நடத்தக் கூடாது. அறிவியல்தான் அவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும்’’ என அந்த கமிட்டி சார்பாக முழக்கமிட்டார் அவர்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:23 pm

    அதோடுமட்டுமில்லை... ஆண்கள், பெண்கள் என இரண்டு இனமாகமனித குலத்தை பிரிக்கக் கூடாது. இவற்றைப் போலவே ஓரினச் சேர்க்கை உணர்வு கொண்டவர்களைமூன்றாவது இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

    ஜெர்மனியைஅதிரவைத்த அமைப்பு அது. வெறும் எழுபது பேர்தான் அதில் உறுப்பினர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான பிரபலங்களின் அனுதாபத்தைத்தங்கள் பக்கம் திரட்டி, சட்டத்தையே மாற்ற அவர்முயற்சித்தார். அதோடு செக்ஸ் ஆராய்ச்சியையும் அவர் விட்டுவைக்கவில்லை. அதுதான் செக்ஸ் அறிவியலின் ஐன்ஸ்டீன்என்ற பெயரை அவருக்கு வாங்கிக் கொடுத்தது.அதேசமயம், ஹோமோசெக்ஸுக்கு ஆதரவான அவரது போராட்டத்துக்குஅடி, உதைதான் பரிசாகக் கிடைத்தது. ஹர்ஷ்ஃபீல்ட் உதைவாங்கியது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அப்போதைய ஜெர்மன்சூழலைப் புரிந்து கொள்வது முக்கியம்.

    தொழிற்புரட்சிஅப்போதுதான் துவங்கியிருந்தது. கிராமங்களைப் புறக்கணித்துவிட்டு மக்கள்சாரிசாரியாக நகரங்களை நோக்கி நகர ஆரம்பித்திருந்தார்கள். ஜெர்மனியின் தலைநகரானபெர்லின் அப்போது லண்டனுக்கு இணையான பெருநகரமாக வளர்ந்தது... 1895-வாக்கில்பெர்லின் நகர மக்கள் தொகை இருபத்தைந்து லட்சம்.

    இப்படி நிகழ்ந்தமக்கள் தொகைப் பெருக்கம் செக்ஸ் விஷயத்திலும் எதிரொலித்தது. கிராமங்களில்தனிமையில் இருந்த ஹோமோசெக்ஸ் நபர்கள் புதிய தோழர்களைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பாகஇது அமைந்தது. ஹர்ஷ்ஃபீல்ட் ஆரம்பித்த பிரசாரத்தின் விளைவாக இவர்களுக்கு நெருக்கடிதருவதையும் போலீஸ் நிறுத்திக் கொண்டது. பெர்லினில் மட்டும் ஹோமோசெக்ஸ் ஆண்களுக்காகஎன்று நாற்பது பார்கள் இருந்தன. இதுதவிர இரண்டாயிரம் ரகசிய சந்திப்பு இடங்கள்இருந்ததாக ஒரு கணக்கு சொல்கிறது. ஹோட்டல்கள், நாடக அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நடன அரங்குகள்... என பலவிதமான இடங்கள்!ஆண்களும், ஆண்களும் ஜோடியாகக் கட்டித் தழுவியபடி ஆடும்நடன அரங்குகளும் அங்கு உண்டு.

    ஹர்ஷ்ஃபீல்ட்தலைசிறந்த பேச்சாளர். ‘‘என் பேச்சை ஒரு தடவைகேட்கும் ஜெர்மன் மக்கள், ஹோமோசெக்ஸ்குற்றம் இல்லை என்பதை உணர்வார்கள். அவர்கள் மீது பரிதாபம் காட்ட ஆரம்பிப்பார்கள்.இதற்கு தண்டனை தரலாமா என பொதுமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினால், அவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் என் கருத்தைஆதரிப்பார்கள்’’ என நம்பிக்கையோடு அவர்சொல்வார். அது ஒருவகையில் உண்மையும்கூட. ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதுஅவர் பேசிய அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தங்கள் செக்ஸ் பிரச்னைகளைஅவரிடம் சொல்லித் தீர்வு தேட பலர் க்யூவில் நின்றார்கள். தங்கள் வீட்டு விழாக்கள், பார்ட்டிகளில் அவர் கலந்துகொள்வதை ஜெர்மனியின்கனவான்கள் பெரிய கௌரவமாக நினைத்தார்கள்.

    ஜெர்மனியின் பலஅரசியல் கட்சிகள் அப்போது ஹோமோசெக்ஸுக்குத் தண்டனை தருவதை எதிர்த்தன.

    குற்றவியல் சட்டத்தையேதிருத்தினால் என்ன?’ என்கிறரீதியில் பலவீடுகளிலேயே விவாதிக்க ஆரம்பித்தார்கள்.

    இதற்காகபேசுவதோடு மட்டுமில்லாமல், ஒரே ஆண்டில்சுமார் முந்நூறு புத்தகங்களை வெளியிட்டது, அவரது விஞ்ஞான மனிதாபிமானிகள் சங்கம்.அந்த சங்கத்தின் சார்பாக ஒரு பத்திரிகையும்வெளிவந்தது. ஹோமோசெக்ஸ் ஆண்களின் மருத்துவ மற்றும் சட்டப் பிரச்னைகளைப் பற்றியகட்டுரைகளுக்கு இது முக்கியத்துவம் கொடுத்தது. இந்தவகையில் முதல் பத்திரிகை, உலகிலேயே இதுதான்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:24 pm

    இப்படி ஒருபுறம்ஹோமோசெக்ஸ் நபர்களுக்காகப் போராடினாலும், விஞ்ஞானி மற்றும்ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுவதையே பெரிய அங்கீகாரமாக அவர் நினைத்தார். செக்ஸ்பிரச்னைகளுக்காக அவரிடம் ஓரினச் சேர்க்கையாளர்கள் மட்டுமின்றி, எல்லோரும் வந்தனர். தன்னிடம் இப்படி ஆலோசனைக்குவந்த ஆண்கள் மற்றும் பெண்கள் முப்பதாயிரம் பேரிடம் 130 கேள்விகள் அடங்கிய ஒருபடிவத்தைக் கொடுத்து அவர் சர்வே நடத்தினார். செக்ஸ் விஷயத்தில்தம்பதிகள் ஒளிவுமறைவில்லாமல் இருப்பதுதான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்ததுஎன்பது அவர் இந்த சர்வே மூலம் கண்டுபிடித்துச்சொன்ன கருத்து.

    இந்தஆராய்ச்சிகளை வைத்து அவர் எழுதிய செக்ஸ்நோயறிவியல்என்ற மூன்று பாகங்கள்கொண்ட புத்தகம், இன்றளவும் பலரைப் பிரமிக்கவைக்கும் ஒன்று. இதேபோல செக்ஸ் அறிவுஎன்ற ஐந்து பாகங்கள் கொண்ட இன்னொருபுத்தகத்தையும் அவர் எழுதினார்.

    இந்த இரண்டுமேசாதாரண வாசகர்கள் படித்துக் கிளர்ச்சி அடைவதற்காகப் படைக்கப்பட்ட ஆபாசஇலக்கியங்கள் இல்லை. டாக்டர்கள் செக்ஸ் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு தங்களிடம்வரும் நோயாளிகளுக்குத் தீர்வு தர வேண்டும் என்ற அக்கறையில் எழுதப்பட்ட பாடபுத்தகங்கள். ஆனால், வெறும் புத்தகங்களைப்படித்து டாக்டர்கள் சிகிச்சை தருவது கஷ்டம் என அவர் நினைத்தார். எனவே டாக்டர்கள்பிராக்டிக்கலாக பயிற்சி பெற ஒரு ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பிக்க விரும்பினார்.அவரது அந்தக் கனவு, 1919-ம் ஆண்டு ஜூலை 6-ம்தேதி நிஜமானது. பெர்லினில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தனது மாளிகையை அந்த நிலையத்துக்காகக்கொடுத்தார். ‘Institut e of Sexual Science’ என்ற பெயரோடு துவக்கப்பட்ட இது, உலகின் முதல்செக்ஸ் ஆராய்ச்சி மையமாக அமைந்தது.

    ‘‘வெறுத்து ஒதுக்க வேண்டியஅருவருப்பான பொருளாகவோ, மூடி மறைக்க வேண்டியரகசியமாகவோ செக்ஸை இனியும் கருத வேண்டாம். அதை அறிவியலின் ஒரு அங்கமாக்கிஆராய்ச்சிக்கு உட்படுத்தி, பிரச்னைகளுக்குத்தீர்வு காண்போம். செக்ஸ் பிரச்னைகளை மூடிமறைத்து இனி எந்த குடும்பமும்சிதைந்துவிடக் கூடாது’’ என்றார் அவர்.

    ஆனால், இந்த ஆராய்ச்சி நிலையம்தான் அவரது உயிருக்குஎமனாக அமைந்தது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:25 pm

    ஹர்ஷ்ஃ பீல்டின்ஆராய்ச்சி நிலையம் செக்ஸ் தொடர்பான எல்லா விஷயங் களையும் டீல் பண்ணியது. செக்ஸ்உறுப்புகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு சிகிச்சை தருவது, செக்ஸ் மன நோயாளிகளுக்கு சிகிச்சை, திருமணத்துக்கு முன்பே கவுன்சிலிங் கொடுத்து--செக்ஸ் உறவு பற்றிய சந்தேகங்களைக் களைவது, முதலிரவு பற்றியபயத்தைத் தெளியவைப்பது (இப்படி கவுன்சிலிங் தருவதை ஹர்ஷ்ஃபீல்ட்தான் ஐரோப்பாவில்முதலில் ஆரம்பித்து வைத்தார்.), பாலியல்நோய்களுக்கான சிகிச்சை, செக்ஸ் ஆராய்ச்சி... எனஎல்லாம் அங்கு நடந்தது.

    அந்த நிலையத்தின்ஒருபகுதியில்தான் உலகின் முதல் செக்ஸ் நூலகம்ஆரம்பிக்கப்பட்டது. செக்ஸ் தொடர்பாகப் பலமொழிகளில் எழுதப்பட்ட இருபதாயிரம் அரிய புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டன. இதுதவிர 35,000 புகைப்படங்கள், பிரபலமானஓவியர்கள் வரைந்த செக்ஸ் ஓவியங் கள், சிலைகள் எனஎல்லாம் அங்கு இருந்தன. தங்கள் செக்ஸ் பழக்கங் களை விலாவாரியாக விவரித்துப் பலர்எழுதிய உணர்ச்சிகரமான கடிதங்களும் அங்கு பாதுகாக்கப்பட்டன.

    இங்கு வரும் ஒருவர்உலகத்தின் ஒவ்வொரு நாட்டு மக்களும் செக்ஸ் பற்றி என்ன அபிப்பிராயம்வைத்திருந்தார்கள், ஒவ்வொரு நாட்டிலும்வெவ்வேறு கட்டத்தில் மக்கள் என்னவிதமான செக்ஸ் உறவுகளில் நாட்டம் காட்டி னார்கள்என்பதையெல்லாம் புரிந்து கொள்ளலாம். இங்கு ஆராய்ச்சி செய்ய பல நாடுகளிலிருந்துவிஞ்ஞானிகள் வந்தார்கள். உலகிலேயே புதுமையான முயற்சி என்பதால் சும்மாபார்த்துவிட்டுப் போகவே பல நாடுகளிலிருந்து பிரபலமான நபர்கள் வந்தார்கள்.
    அமெரிக்காவில்போய் வெள்ளை மாளிகைக்கு அட்ரஸ் கேட்க வேண்டியதில்லை என்பார்கள். அப்படி பெர்லினில்மிகப் பிரபலமான இடமாக இருந்தது இந்த நிலையம்! இதன் பெருமையை உணர்ந்து, அரசே இந்த நிலையத்தைத் தன் பொறுப்பில்ஏற்றுக்கொண்டது. அது மட்டுமில்லை... இந்த நிலையத்துக்கு மாக்னஸ் ஹர்ஷ்ஃபீல்ட் அறக்கட்டளைஎன பெயர் வைத்தது.

    இது வெற்றிகரமாகசெயல்படும் திருப்தியில் மீண்டும் ஹோமோசெக்ஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினார்ஹர்ஷ்ஃபீல்ட். பிரபல டைரக்டர் ரிச்சர்ட் ஆஸ்வால்ட் இயக்கத்தில் "டிஃபரென்ட்ஃப்ரம் அதர்ஸ்" (Different from others) என்றதிரைப்படத்தைத் தயாரித்தார். மற்றவர்களிலிருந்துவேறுபட்டதுஎன்ற பொருள் கொண்ட இந்தப்படம் பரபரப்பாக வெளியானது. ஹோமோசெக்ஸ் பழக்கமுள்ள ஒரு

    பியானோ இசைக்கலைஞன்... அவன் இப்படி உறவு கொள்வ தைப் பார்த்துவிட்டு பிளாக்மெயில் செய்கிறது ஒருகும்பல். அதனால் மன நிம்மதி இழந்து அவன் தற்கொலை செய்து கொள்வதைக் கதையாகச் சித்திரித்து இருந்தது அந்தப்படம். ஹோமோசெக்ஸை மையக் கருத்தாக வைத்து வெளியான முதல் திரைப்படம் அதுதான்! அந்தப்படம் ஐரோப் பிய நாடுகள் பலவற்றிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. துரதிர்ஷ்டவசமாகஅதுதான் ஹர்ஷ்ஃபீல்டுக்கு பெரும் பிரச்னை யாக அமைந்தது. இந்த மாபெரும் வெற்றிஹிட்லரின் கவனத்துக்குப் போகவே பல்வேறு பிரச்னைகளை சந்தித்தார் ஹர்ஷ்ஃபீல்டு.

    ஹிட்லருக்குஇரண்டு கும்பல் களை சுத்தமாகப் பிடிக்காது. ஒன்று யூதர்கள்... இன்னொன்றுஹோமோசெக்ஸ் ஆண்கள். சோதனையாக அந்த சமயத்தில் ஜெர்மனியில் செக்ஸ் ஆராய்ச்சியில்பிரபலமாக இருந்த பலரும் யூதர்கள். ஹிட்லரின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் ஃபிராய்டுஉட்பட அவர்களில் பலர் ஜெர்மனியை விட்டே ஓடினார்கள்.
    ஹர்ஷ்ஃபீல்டுயூதராக மட்டுமில் லாமல், ஹோமோசெக்ஸுவலாகவும் இருந்தார். அதனால் தவிர்க்க முடியாமல் ஹிட்லரின் முக்கியஇலக்காகிவிட்டார்.

    ஹிட்லரின் நாஜிஇளைஞர் கும்பல், இந்தப் படம் ஓடியதியேட்டர்களில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டது. கல் எறிவார்கள்... புகை கக்கிபயமுறுத்தும் நாட்டு வெடிகுண்டுகளை வீசுவார்கள். வியன்னாவில் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களைக் கண்மண் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டனர். யாரும் சாகவில்லைஎன்றாலும்,நிறையபேருக்குப் பலத்தகாயம். படம் பார்க்கப் போவதே உயிருக்கு ஆபத்தான விஷயம் என்றால், யார் தியேட்டருக்கு வருவார்கள்? ஒருவழியாகப் படம் பெட்டியில் சுருண்டது.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:25 pm

    அடுத்தகட்டமாக, ஹர்ஷ்ஃபீல்ட் பேசும் கருத்தரங்குகளைக்குறிவைத்தனர். மியூனிச் நகரில் 1920-ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அவ ரது உதடுகளைக் குதறிஎடுத்து விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்... இனி ஹோமோ செக்ஸில் ஈடுபடும்போது தனது சீடர்கள்யாரையும் இவர் முத்தமிட முடியாது’.

    சளைக்காமல், சில மாதங்கள் கழித்து வாய் சரியானதும் அதேமியூனிச்சில் பேசப் போனார் அவர். இம்முறை அவரைக் கூட்ட அரங்கிலிருந்து வெளியே
    இழுத்துவந்து தடிகளால்தாக்கினர். அடித்த அடியில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. எப்படியும்செத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரை பிளாட்பாரத்தில் போட்டு விட்டு அவர்கள்போனார் கள். உறைபனியில் பேச்சு மூச்சற்றுக் கிடந்த அவரை யாரோ காப்பாற்றினார்கள்.

    இனியும் ஜெர்மனியில் இருந்தால்தன் உயிருக்கு ஆபத்துஎன்பது அவருக் குப்புரிந்தது. செக்ஸ் தொடர்பான கருத்தரங்கு களில் பேச அவர் உலகச் சுற்றுப்பயணம்கிளம்பி னார். அந்த சமயத்தில் ஹிட்லர் விஸ்வரூபம் எடுத்தார்.

    உலகத்தில் வேறெங்கும் இல்லாத அரிய படைப்புகளைக் கொண்ட ஹர்ஷ்ஃபீல் டின் ஆராய்ச்சி நிலையமும், நூலகமும் ஜெர்மனிக்கே அவமானம் தேடித் தருவதாகஹிட்லர் நினைக்க, செக்ஸ் ஆராய்ச்சிக்குஎதிரான முதல் நெருப்பு அங்கே பற்ற வைக்கப் பட்டது.

    இதற்காக அவர்குறித்த நாள், 1933-ம் ஆண்டு மே 6-ம்தேதி.

    அன்று நடந்தசம்பவங்களை நேரில் பார்த்த நிருபர் ஒருவரின் நேரடி வர்ணனை இதோ...

    ‘‘ஜெர்மானியர்களின்உணர்வுகளுக்கு எதிரான நூலகங் களை அழித்து நாட்டை சுத்தப்படுத்தும்பணியைச் செய்யு மாறு அன்று காலை நாஜிஇளைஞர்களுக்கு ஹிட்லர் உத்தரவிட்டார். இந்த தகவல் ஹர்ஷ்ஃபீல்டின் உதவியாளர்களுக்குஎப்படியோ தெரிந்துவிட்டது. அவர்கள் அங்கிருந்த அரிய புத்தகங்கள் சிலவற்றையாவதுவெளியே எடுத்துச் சென்று பாதுகாக்க முயன்றனர். ஆனால், முதல்நாள் இரவிலிருந்தே நூலக வாசலில் போலீஸ்காவல் இருந்தது.

    புத்தகங்களைவெளியே எடுத்துச் செல்ல முயன்ற நூலக ஊழியர்களைத் திருட்டுக் குற்றம் சாட்டி கைதுசெய்த போலீஸ், அந்தப் புத்தகங்களைபழையபடி நூலகத்தில் பத்திரமாகவைத்தது.

    காலை ஒன்பதரைமணி. பெர்லின் ஜிம்னாஸ் டிக்ஸ் அகாடமியிலிருந்து நூறு இளைஞர்கள் லாரிகளில்ஏறிவந்து, நூலகத்தின் முன்னால் இறங்கினர். ஏதோ ராμவ அணிவகுப்பு போல அவர்கள் நூலகத்தின் வாசலில்அணிவகுத்தனர். அவர்களுடனே வந்திருந்த ஒரு பேண்டு இசைக்குழு, வாசலில் நின்று நாராசமான இசையை எழுப்பியபடிஇருக்க, அந்த இளைஞர்கள் கதவை உடைத்துக் கொண்டு எல்லாஅறைகளுக்கும் சென்றனர். சுவர்களில் மாட்டியிருந்த ஓவியங்கள், புகைப்படங்கள், வரைபடங்களை சிலர்பிடுங்கி ஜன்னல் வழியாகத் தூக்கி ரோட்டில் எறிந்தனர். எல்லாம் கந்தரகோலமாயின.

    இன்னொருகுழுவினரிடம், ‘எந்தெந்த புத்தகங்கள்மிகவும் ஆபாசமானவைஎன்ற கறுப்புப் பட்டியல்இருந்தது. அதை வைத்து சில நூறு புத்தகங்களை அவர்கள் பறிமுதல் செய்து ஜன்னல் வழியேதூக்கி எறிந்தனர். அவை அவர்கள் வந்த லாரிக்குள் பத்திரமாக அடைக்கலமாயின.

    உடலில்எங்கெல்லாம் ஹார்மோன் சுரப்பிகள் இருக்கின்றன என்பதை மாணவர்களுக்கு விளக்க உதவும்ஆளுயர மாடல் பொம்மை ஒன்று ஹாலில் இருந்தது. வெள்ளைக் களிமண்ணால் ஆன அந்தப் பொம்மை, ஆடைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. ஆபாசமானஅந்தப் பொம்மையைமாடியிலிருந்து தூக்கி எறிய... அது சிதறி தூள்தூளானது. அதைப் பார்த்து அவர்கள்வெற்றிக் களிப்பில் சிரித்தார்கள்.

    ஹர்ஷ்ஃபீல்டின்மார்பளவு வெண்கலச் சிலை ஒன்று அங்கே இருந்தது. அதைக் கையோடு எடுத்துக்கொண்டார்கள். அதுதவிர, விதம்விதமான செக்ஸ்உறவுக் காட்சிகளை விளக்கும்விதமாக அங்கிருந்த சிலைகள் பலவற்றையும் அந்தக் கும்பல்பறிமுதல் செய்தது. ஏராளமான பொதுமக்கள் திரண்டு நின்று வேடிக்கை பார்க்க, மதியம் பன்னிரண்டு மணிவாக்கில் இந்த சுத்தப்படுத்தும்பணி முடிந்தது. அவர்கள் கிளம்பினார்கள்.

    இன்னமும்புத்தகங்கள் மிச்சமிருந்தன. இதையாவதுவிட்டார்களேஎன நூலக ஊழியர்கள்பெருமூச்சு விட்டனர். ஆனால், மதியம் மூன்றுமணிவாக்கில் ஏழெட்டு லாரிகளில் ஆட்கள் வந்து இறங்கினர். இம்முறை அவர்களோடு போலீஸ்அதிகாரிகளும் வந்தனர்...

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:26 pm

    ‘‘காலையில் வந்தவர்களுக்கு நேரம் போதாததால்சரியாக சுத்தம்செய்யமுடியவில்லை. நாங்கள் நிதான மாக செய்கிறோம்’’ என்றபடி அவர்கள்உள்ளே நுழைந்தார்கள். நூலகத்தில் இருந்த எல்லா புத்தகங்களையும் எடுத்து லாரிகளில்ஏற்றினர். இரண்டு லாரிகள் நிரம்பின.

    நூலகம் காலியானபிறகு அந்தக் கும்பலின் தலைவன் அங்கிருந்த ஊழியர்களிடம், ‘‘ஹர்ஷ் ஃபீல்ட் எங்கே போயிருக்கிறார்... எப்போதுவருவார்?’’என அதட்டலாகக் கேட்டான்.

    ‘‘அவருக்கு மலேரியாகாய்ச்சல். சிகிச்சைக்காக வெளிநாடு போயிருக்கிறார்’’ என சன்னமானகுரலில் சொன்னார் ஓர் ஊழியர்.

    ‘‘அவரைத் தூக்கிலிட்டோ, கல்லால் அடித்தோ சாகடிக்க நாங்கள்ஆசைப்பட்டோம். எங்கள் உதவி இல்லாமலே அவர் செத்து விடுவார் போலிருக்கிறதே!’’ என்றபடி அவன் சிரிக்க, கூட வந்தவர்கள் எல்லோரும் அந்த சிரிப்பில்கலந்தபடி கிளம்பிப் போனார்கள்.

    மறுநாள், நூலகத்துக்கு நேர்ந்த கதி சர்வதேசபத்திரிகைகளில் வெளியாக, பல நாடுகள் கவலைஅடைந்தன. செக்ஸ் சீர்திருத்தத்துக்கான உலக கமிட்டி’& ஜெர்மன் கல்வி அமைச்சகத்துக்கு அவசரமாக ஒருதந்தி கொடுத்தது. அந்தப் புத்தகங்களில்பலவும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமானவை. அவற்றை எரித்து விடாதீர்கள்என்று கேட்டுக் கொண்டது.

    ஆனால், மே பத்தாம் தேதி மாலை... கையில் தீப்பந்தம்ஏந்திய ஓர் இளைஞர் கும்பல், ஊர்வலமாக ஓபராசதுக்கத்தை நோக்கி சென்றது. அந்த ஊர்வலத்தில் முன்னால் சென்றவனின் கையில்ஹர்ஷ்ஃபீல்டின் வெண்கலச் சிலை இருந்தது. நூலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட எல்லாப்புத்தகங்களும் லாரிகளில் வந்தன. அவற்றை எரித்த அந்தக் கும்பல், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில்ஹர்ஷ்ஃபீல்டின் சிலையைத் தூக்கிப் போட்டது.

    விஷத்தைப் பரப்பி வந்தயூதர் ஹர்ஷ்ஃபீல்டின் ஆபாச நூலகம் சுத்தம் செய்யப்பட்டதுஎன மறுநாள் நாஜி அரசு செய்திக்குறிப்புவெளியிட்டது.
    இதற்குப் பிறகுஹர்ஷ்ஃபீல்ட், ஜெர்மன் திரும்பவில்லை.ஃபிரான்ஸில் தஞ்சம் புகுந்தார்.

    தங்கள் அரசின்சாதனைகளை செய்திப் படங்களாகத் தயாரித்து இருந்தார் ஹிட்லர். அவை நாஜிஅடக்குமுறையின் வேதனையான அடையாளமாக பல ஐரோப்பிய நாடுகளில் திரையிடப்பட்டன.ஹர்ஷ்ஃபீல்டின் நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரியும் காட்சிகளும் இப்படிசெய்திப் படமானது. தான் சிரமப்பட்டு சேகரித்த

    நூல்கள்எரிக்கப்படும் காட்சியை பாரீஸில் ஒரு தியேட்டரில் பார்த்தார் ஹர்ஷ்ஃபீல்ட். அந்தவேதனையோடு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்தார். பெர்லினில் இருந்ததைப் போலவேஃபிரான்ஸில் ஓர் ஆராய்ச்சி நிலையமும், நூலகமும்ஆரம்பிக்க வேண்டும் என்ற அவரது கனவும் நிராசையானது (பெர்லினில் ஹிட்லர் ஆட்களின்ரெய்டுக்குப் பிறகு மூடியிருந்த அந்த ஆராய்ச்சி நிலையக் கட்டடம், இரண்டாம் உலகப் போரின்போது குண்டுவீச்சில்சேதமடைந்தது. பாழடைந்து புல் முளைத்திருக்கும் அந்தக் கட்டடத்தை சீரமைத்து, ஹர்ஷ்ஃபீல்ட் பெயரில் அங்கு ஆராய்ச்சி நிலையம்அமைக்கும் பணியில் இப்போது சிலர் ஈடுபட்டுள்ளனர்).

    ஹர்ஷ்ஃபீல்டின்ஆராய்ச்சி நிலையத்தையும், நூலகத்தையும்ஹிட்லர் திட்டமிட்டுக் காலி செய்ததற்கு இன்னொரு காரணமும் சொல்லப் பட்டது. நாஜி தலைவர்கள் பலரே ஹோமோசெக்ஸ் நபர்கள்.அவர்கள் ஹர்ஷ்ஃபீல்டிடம் சிகிச்சை பெற்றவர்கள். அவர்களைப் பற்றிய ஆவணங்கள் அந்தநூலகத்தில் இருந்தன. அவை ஆட்சிக்கே ஆபத்து விளைவிக்கும் அபாயம் இருந்ததால்அவற்றைக் குறி வைத்துதான் ஹிட்லர் தாக்குதல் தொடுத்தார்என்றும் சொல்லப்படுகிறது.

    ஹோமோசெக்ஸைஅடியோடு வெறுத்த ஹிட்லர், தனது அமைப்பினரைஎப்படி அந்தப் பழக்கத்தில் ஈடுபட அனுமதித்தார்? அதற்கு காரணம்எர்னஸ்ட் ரோம். ஹிட்லரின் கலகப் படையின் தலைவராக இருந்தவர் இந்த ரோம். பழுப்புச் சட்டைராணுவம்எனப்படும் இந்த அமைப்புதான் ஹிட்லரின்வலதுகரமாக இருந்தது. நகர்ப்புற சேரிகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட ஆட்களைக்கொண்ட குண்டர்படை இது. அரசியல் எதிரிகள், யூதர்கள், தன்னை விமர்சனம் செய்பவர்கள் என பலரைத்தீர்த்துக்கட்ட வும், கலகங்கள் செய்யவும் இந்தஅமைப்பைத் தான் பயன்படுத்தினார் ஹிட்லர். படிப்பறிவில் லாத, முரடர்கள் நிறைந்த இந்தப் படையில் பலர் ஹோமோசெக்ஸ் பார்ட்டிகள். ரோம்கூட இந்தப் பழக்கத்துக்கு அடிமை!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:27 pm

    இதெல்லாம் ஹிட்லருக்குத் தெரியும். ஆனால், ரோமின் படையில்ஒரு லட்சம் பேர் இருந்தார்கள். ஹிட்லரின் அதிகார நாற்காலியின் நான்கு கால்களாகவும்அவர்கள்தான் இருந்த னர். ரோமைச் சீண்டி னால் அத்தனை பேரும் தனக்கு எதிரிகள் ஆவார்கள் என்பதால் அவர் அமைதிகாத்தார்.

    ரோமின் படைபலம் 1932வாக்கில் ஐந்து லட்ச மாக உயர்ந்தபோதுதான்ஹிட்லருக்குப் பயம் வந்தது. ஒரு தளபதியின் கட்டுப்பாட்டில் இவ்வளவு பேர் இருப்பது, தன் ஆட்சிக்கே ஆபத்து என்பது ஹிட்லருக்குப் புரிந்தது. இதையடுத்து, கலகப் படையில் இருக்கும்ஹேமோசெக்ஸ் பார்ட்டிகள் மீது அவருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வெறுப்பு வளரஆரம்பித்தது. அது பெரிதாக வளர்ந்து, 1934&ம் ஆண்டு ஜூன் 30&ம் தேதி மாபெரும் படுகொலையில் முடிந்தது. ரோம்உட்பட அந்த கலகப் படையில் இருக்கும் ஹோமோசெக்ஸுவல்கள் இருநூறு பேரும் ஒரு இடத்தில்தங்கள் படுக்கைத் தோழர்களோடு மெய்மறந்த நிலையில் இருந்தபோது, ஹிட்லரின் விசுவாசப் படையால் சத்தமில்லாமல்சாகடிக்கப் பட்டனர்.

    இந்தக்களையெடுப்பு வெளியில் தெரிந்தால், ராணுவத்தின்எல்லா மட்டங்களிலும் இருக்கும் ஹோமோசெக்ஸ் வீரர்கள் தனக்கு எதிராகக் கலகம்செய்வார்கள் என பயந்தார் ஹிட்லர். அதனால் சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானவீரர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

    ஹிட்லரின் கட்சிஹோமோசெக்ஸுக்கு எதிராக வெளியிட்ட பிரகடனத்தில் இப்படி சொல்லியிருந்தது. நீங்களும், நாங்களும்சேர்ந்து வாழவேண்டும் என்பது தேவையில்லை. ஜெர்மன் மக்கள்தான் வாழ வேண்டும்.உங்களது பழக்கம் அசிங்கமானது. அசிங்கத்துக்கு எதிராகப் போராடினால்தான்ஜெர்மனியர்கள் வாழ முடியும். போராட்டம்தான் வாழ்க்கை. ஆண்மைத்தனம் இருந்தால்தான்போராட முடியும். செக்ஸ் விஷயத்தில் ஒழுக்கம் இருந்தால்தான் ஆண்மைத்தனம்கிடைக்கும். ஒழுக்கமற்ற, இயற்கைக்குமுரணான செக்ஸை நாங்கள் வெறுக்கிறோம். அப்படி இருக்கும் யாரும் ஜெர்மன் மக்களுக்குஎதிரிகள். அவர்களை வேரறுப்பது எங்கள் கடமை.

    செக்ஸுக்குஅறிவியல் முகம் கொடுத்து, அது தொடர்பானபிரச்னைகளுக்குத் தீர்வு தேட முயன்ற எத்தனையோ ஆராய்ச்சியாளர்களுக்கு, ஹர்ஷ்ஃபீல்டுக்கு நேர்ந்த அதேபோன்ற அவலமானமுடிவு வந்தது. இதற்கு மாறாக, தவறானவிஞ்ஞானிகள் கையில் அதிகாரம் கிடைத்து அவர்கள் விபரீத செக்ஸ் பரிசோதனைகளில் இறங்கி, நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுதீர்த்தபரிதாபங்களும் வரலாற்றுப் பக்கங்களில் நிறைய உண்டு. ஹிட்லரின் ஆட்சியில்ஜெர்மனியில் நடந்த சம்பவங்களே இதற்கு சாம்பிள்...

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:27 pm

    கார்ல்கிளாபெர்க், ஜெர்மனியின் புகழ்பெற்றமகப்பேறு மருத்துவர். கீல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலடாக்டர்களை உருவாக்கியவர். ஆனால், ஹிட்லருக்குப்பிடித்த அதே தேசிய வெறி இவருக்கும் பிடித்தது. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும்கடவுள் என்ற அந்தஸ்தில் இருந்தவர், அப்படியே தடம்மாறி கொலைகாரராக அவதாரம் எடுத்தார்!

    இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்களையும், நாடோடி இனமக்களையும் சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்திருந்தது, ஹிட்லரின் நாஜி ராணுவம். அப்படிப் பிடித்துவைத்திருந்தவர்களை மருத்துவ பரிசோதனைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஹிட்லர்அறிவித்ததும், பல டாக்டர்கள் அந்தமுகாம்களுக்கு ஓடினார்கள். தங்கள் இதயங்களைக் கழற்றிப் போட்டுவிட்டு இப்படி ஓடியடாக்டர்களில் கார்லும் ஒருவர்.

    மனிதகுலத்தைஅச்சுறுத்தி வந்த பல நோய்களுக்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நேரம் அது!புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் நிபுணர்கள் அவற்றைக் குரங்குகள், எலிகள், முயல்கள் என பலவிலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதனை செய்து பார்த்தனர். மருந்தை சாப்பிட்டு எதுவும் சாகவில்லைஎன்பது உறுதியானபிறகு, ரகசியமாக சில ஆசாமிகளுக்கும் கொடுத்துசோதித்துப் பார்ப்பார்கள். இப்படி இருந்த நிபுணர்களைக் கூப்பிட்டு, ‘‘இந்த ஆளுங்களை உன் கஸ்டடியில் எடுத்துக்கோ.எந்த மருந்தை வேண்டுமானாலும் கொடுத்து சோதனை செய்துக்கோ. இவர்கள் செத்தாலும்பரவாயில்லை’’ என்று கொடுத்தது நாஜிராணுவம். ஈவு இரக்கமற்ற டாக்டர்கள் பலர் இப்படி சோதனைகளை செய்தார்கள்.

    யூதர்கள், நாடோடிகள், நீக்ரோக்கள்ஆகியோரை ஹிட்லருக்கு சுத்தமாகப் பிடிக்காது. அந்த இனங்களையே ஒட்டுமொத்தமாகவேரறுத்துவிட்டு, உலகம் முழுக்கஜெர்மானியர்களால் நிரம்பி இருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் பேராசை. இந்த மூன்றுஇனத்தவர்களையும் ஆயிரக்கணக்கில் கைது செய்து சித்ரவதைக்கு உட்படுத்திக் கொன்றாலும், அந்தப் பேராசை அடங்கவில்லை.

    அந்த இனத்தவர்களை வேறுஏதாவது செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு ஆளாக்கி விட்டால் என்ன?’ என்ற கேள்வியோடு, ஹிட்லர்கூப்பிட்டு வரச் சொன்னது கார்லை.

    ஒரு முகாமில்அடைத்து வைக்கப்பட்டிருந்த யூத மற்றும் நாடோடிப் பெண்கள் மீது தன் பரிசோதனையைஆரம்பித்தார் கார்ல். முதல் சோதனை, அவர்களுக்கு ஊசிமூலம் ஆரம்பித்தது. பல ரசாயனங்களை ஒன்றுகலந்து நேரடியாக அவர்களது கருப்பைக்குள்செலுத்தினார் கார்ல். அவர்களது கருப்பையில் இதன்மூலம் மாற்றங்கள் நிகழ்ந்து, கருவை உருவாக்கும் சக்தியிழந்து போனது. அதோடுமட்டுமில்லை... நிறைய பேருக்கு வயிறு வீங்கியது. சிலருக்கு ஏராளமான ரத்தக்கசிவுஏற்பட்டது. எல்லோருமே வலியால் துடித்தனர். கடைசியில் ஜுரம் வந்து பலர் செத்துப்போனார்கள்.

    ஆனால், சிலர் வெறும் வலியோடு பிழைத்தனர். அவர்களது கருப்பையில் இந்த ரசாயனங்களை தாங்கும்சக்தி என்னவோ இருக்கிறது... அது என்ன என்று கண்டுபிடிக்க வேண்டும்என முடிவு செய்த கார்ல், அதன்பின் செய்ததுதான் கொடூரம். உயிர்பிழைத்தஅத்தனை பேரின் கருப்பைகளையும் வெட்டி எடுத்துவரச் சொல்லி, அவற்றைப் பரிசோதனைக் கூடத்தில் வைத்து ஆய்வுசெய்தார். முறையான ஆபரேஷனாக இல்லாமல் சகட்டுமேனிக்கு கருப்பையை வெட்டி எடுத்ததால், பலர் செத்துப் போனார்கள்.
    தனது ஆய்வுமுடிவுகள் வெளியில் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார் கார்ல். அதனால்பரிசோதனை முடிந்ததும், எலிகளாக பயன்பட்ட எல்லாப்பெண்களையும் கேஸ் சேம்பருக்கு அனுப்பி விட்டார் அவர். அங்கு விஷவாயு செலுத்தப்பட்டு அவர்கள் செத்துப் போனார்கள்.

    அடுத்தது எக்ஸ்ரேபரிசோதனை. இதில் ஆண்கள், பெண்கள் எனஇருதரப்பினர் மீதும் சோதனை நடந்தது. ஓர் அறையில் இரண்டு எக்ஸ்ரே மெஷின்கள்இருக்கும். அந்த அறைக்குள் இழுத்துச் செல்லப்படும் கைதியின் பிறப்பு உறுப்பில்எக்ஸ்ரே கதிர் பாய்ச்சப்படும். இப்படி தொடர்ச்சியாக சில நாட்கள் செய்தால், கதிரியக்கத்தின் பாதிப்பால் அந்த இடத்தில்கட்டி வரும். அது ஆறாத புண்ணாக மாறும். அதன்பிறகு அவரால் செக்ஸில் ஈடுபட முடியாது.அப்படியே புண் ஆறி செக்ஸ் உறவு வைத்துக் கொண்டாலும் குழந்தை பிறக்காது எனநினைத்தார் கார்ல்.

    ஆனால், அவருடைய உதவியாளர்கள் சிலர், 'குழந்தை பிறந்தாலும் பிறக்கும்' என்று சந்தேகம் கிளப்பினர். இதனால் கார்ல்குழப்பமானதில் கைதிகள் பாடுதான் திண்டாட்டமானது. புண் ஆறும் நிலையில் இருந்த பலகைதிகளின் பிறப்பு உறுப்புகளையும் அடி வயிற்றுப் பகுதியையும் வெட்டி எடுத்துச்சென்று ஆராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு செய்தார் கார்ல். இப்படி வெட்டியதிலேயே பலர்செத்துப் போக, சாகாமல் மிச்சமிருந்தவர்களை வழக்கம்போல விஷவாயு செலுத்தி கொல்ல வைத்தார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:28 pm

    கார்ல்கிளாபெர்க்கின் பரிசோதனைக் கூடம்...

    இவ்வளவு செய்தும்ஒரு சுலபமானகருத்தடை வழியை அவரால்கண்டுபிடிக்க முடிய வில்லை. அதற்குள்ளாகவே ஹிட்லரின் அடுத்த ஆணையை ஏற்று, வேறொரு பரிசோதனையில் இறங்கினார் அவர். அதுசெயற்கைக் கருவூட்டல் முறை. இப்போது கால்நடைகளுக்கு விந்தணுவை ஊசி மூலம் செலுத்திகருத்தரிக்க வைக்கிறார்களே, அதேபோன்ற ஒருபரிசோதனையைத்தான் அவர் செய்தார்.

    உலகமேஜெர்மானியர்களால் நிரம்பியிருக்க வேண்டும் என்பது ஹிட்லரின் கனவு. ஆனால், அப்போது ஜெர்மன் பெண்கள் குழந்தைபெற்றுக்கொள்வதில் சோம்பேறியாக இருந்தார்கள். ஏதாவது செயற்கைக் கருவூட்டல்முறையைக் கண்டுபிடிக்கலாம் என்பது ஹிட்லர் கண்டுபிடித்த கனவுத் திட்டம்.பண்ணைகளில் கோழிகளை உற்பத்தி செய்கிற மாதிரி வெள்ளைத் தோலும், செம்பட்டை முடியும், பச்சைக் கண்களும் கொண்ட அசல் ஜெர்மானியர்களைஉருவாக்க எடுத்த முடிவு அது!

    இதற்கானசோதனைக்கும் யூதப் பெண்களும், நாடோடிப்பெண்களும் பயன்படுத்தப்பட்டார்கள். அவர்களது கருப்பைக்குள் ஊசி மூலமாக விந்தணுவைச்செலுத்திய கார்ல், ‘‘இப்போ உங்களுக்குபோட்டிருக்கிறது பாதுகாக்கப்பட்ட விந்தணு. இது எல்லாமே விலங்குகளிலிருந்துஎடுக்கப்பட்டது. எந்த விலங்கோட விந்தணுவை யாருக்கு செலுத்தினேன்ங்கறது எனக்குமட்டுமே தெரிந்த ரகசியம். உங்க யாரோட வயித்துல என்ன விலங்கு பிறக்கப் போகுதோதெரியலை’’ என்று சொல்லி அவர்களைப் பயமுறுத்திஇருக்கிறார். பீதியில் அவர்கள், ‘இந்தவயிற்றுக்குள் என்ன மிருகமோஎன பெரிதாகும்வயிற்றைத் தடவியபடியே இருக்க, கர்ப்பம் கொஞ்சம்வளர்ந்ததும், அவர்களது கருப்பையைஅறுத்து எடுத்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வு அரைகுறையாக இருக்கும்போதுதான், ஹிட்லர் உலக நாடுகளிடம் தோற்றுப்போனார். கார்ல்கைது செய்யப்பட்டு விட்டார். ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து அப்படியேசெத்துப் போனார். கார்லைப் போலவே பல விஞ்ஞானிகள் செய்த பரிசோதனைகள் வெளியில்வராமலே போய்விட்டது.

    இது தவிர செக்ஸ் சுகாதாரம்பற்றி ஹிட்லருக்குத் தனிப்பட்ட கருத்துகள்இருந்தன. மியூனிச் பல்கலைக் கழகப் பேராசிரியரான மேக்ஸ்வான் குரூபெர் என்பவர் தான்நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட செக்ஸ் போதகராக இருந்தார். அவர் எழுதிய செக்ஸ் சுகாதாரம்என்ற புத்தகம்தான் நாஜிக்களின் வேத புத்தகம்ஆனது. மலிவுவிலைப் பதிப்பாக சுமார் மூன்றேகால் லட்சம் பிரதிகள் அச்சிட்டு, இது ஜெர்மன் முழுக்க விநியோகிக்கப்பட்டது.

    செக்ஸ் உறவு என்பதுதிருமண பந்தத்துக்குள்தான் நிகழ வேண்டும். மற்ற எந்த வகை செக்ஸ் உறவும் மன்னிக்கமுடியாத குற்றம். அவற்றை சமுதாயமும், அரசும் ஏற்றுக்கொள்ளாது. திருமணம் செய்துகொள்வதே குழந்தை பெற்றுக்கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும்தான். ஜெர்மனியின் தேசியவளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தம்பதியும் நான்கு குழந்தைகள் பெற்றுக் கொள்ளவேண்டும்என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தினார்அவர்.

    பெண்கள்சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள அரசு வற்புறுத்தியது. திருமணக் கடன்என்ற பெயரில்பெண்களுக்குக் கல்யாணம் செய்துகொள்ள கடன் தரப்பட்டது. அவர்கள் பெற்றுக்கொள்ளும்ஒவ்வொரு குழந்தைக்கும் கடனில் இருபத்தைந்து சதவிகிதம் தள்ளுபடி செய்யப்பட்டது.நான்கு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் பெண்கள், வாங்கிய கடனைத்திருப்பித் தரத் தேவையில்லை.

    லட்சக்கணக்கானபெண்கள் இப்படி கடன் வாங்கித் திருமணம் செய்து கொண்டனர். நவீனகால வரலாற்றில் எந்த அரசும் இவ்வளவுமோசமாகக் குடும்பங்களுக்குள் ஊடுருவி செக்ஸ் பற்றி அட்வைஸ் செய்ததில்லைஎன்று சொல்கிற அளவுக்கு இருந்தது ஹிட்லரின்ஆட்சி.

    ஆனால், மேற்கத்திய வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்பார்த்தால் அரசாங்கமும், மதமும் செக்ஸ்உறவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து மக்களை அடக்கி வைத்திருந்தது புரியும்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:28 pm

    முதலிரவுக்காகபயத்தோடு காத்திருப்பாள் அந்த இளம்பெண். பீதியில் அவளுக்கு அழுகையே வந்துவிடும். முன்பின் தெரியாத ஒரு ஆளுடன் அந்த அறைக்குத் தனியாக அனுப்புகிறார்களே... அங்கேஎன்ன நடக்கும்... அந்த ஆள் என்ன செய்வாரோஎன்றுதான் பயம்!அந்த அளவுக்கு செக்ஸ் பற்றிய உணர்வு இல்லாமல் பெண்கள் வளர்க்கப்பட்டனர்.

    அம்மாதான்ஆறுதலாக அட்வைஸ் செய்து அனுப்பு வாள். ‘‘பயப்படாதே! என்னசெய்யணும்னு உன் புருஷனுக்கு நல்லா தெரியும். நீ உள்ளே போனதும் கட்டிலில்படுத்துக் கண்ணை மூடிக்கிட்டு இங்கிலாந்து நாட்டோட எதிர்காலத்தைப் பற்றிநினைச்சிக்கணும். உன் புருஷன் என்ன செய்தாலும் தடுக்கக் கூடாது. உன் கவனத்தை வேறேஎதிலும் திருப்பக் கூடாது. வலிச்சாலும், பரவசமான உணர்வுவந்தாலும் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக் கூடாது!

    சுமார் நூறுவருஷங்களுக்கு முன்புவரை இங்கிலாந்திலும், பெரும்பாலானஐரோப் பிய நாடுகளிலும் பெண்கள் இப்படித்தான் நடத்தப்பட் டார்கள். இதற்கு காரணம்புரிய, காலச்சக்கரத்தில் பின்னோக்கிப் பயணிக்கவேண்டும்.

    காட்டுமிராண்டிகளாகத்திரிந்த மனிதர்கள் நாகரிகம் அடைந்து குடியேற்றங்களை நிர்மாணித்தபோதுதான் அரசாங்கம்உருவானது. காலப்போக்கில் அரசு மக்களை அடிமைத்தளையில் வைத்திருக்க ஆசைப்பட்டது. எல்லையில்லா சுதந்திரம்

    தந்தால்மனிதர்கள் அரசாங்கத்துக்கு கட்டுப்பட மாட்டார்கள்என அரசர்கள்நினைத்தார்கள். கடுமையான சட்டங்களைப் போட்டு மக்கள் மனதில் பயம், குழப்பம், பீதி போன்ற உணர்வுகள் எப்போதுமே இருக்கிறமாதிரி பார்த்துக் கொண்டார்கள். மக்கள் இந்த உணர்வுகளின் சுழலில்சிக்கியிருந்ததால், அரசர்கள் கவலை இல்லாமல் வாழ்ந்தார்கள்.மதங்களின் ஆதிக்கம் வலுத்த பிறகு அரசாங்கத்தின் மீது மதகுருக்கள் அதிகாரம் செலுத்தஆரம்பித்தனர். ஆரம்ப காலத்து அறிஞர்கள், ‘செக்ஸைக் குறைவாகவைத்துக் கொள்வது நல்லதுஎன்றே அட்வைஸ் செய்தார்கள். ஆனால், அப்போது செக்ஸ் விஷயத்தில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மேல்தட்டு ஆண்கள்எல்லை இல்லாத சுதந்திரத்தில் திளைத்தார்கள். ஏராளமான மனைவிகள், வேலைக்காரிகள், அடிமைகள், அடிமைகளின்மனைவிகள், போரில் பிணைக்கைதிகளாகப் பிடித்து வரப்பட்டஅந்நியப் பெண்கள்... என எல்லா வகைப் பெண்களையும் தங்கள் படுக்கை அறைக்குபயன்படுத்திக் கொண்டார்கள். பெண்களின் சம்மதத்தை யாரும் கேட்பதில்லை. அரசகுடும்பத்து ஆண்கள் எந்த அழகான பெண்ணை விரும்பினாலும், தங்கள் அந்தப்புரத்துக்குக் கொண்டு வந்து விடலாம். ஆணும் பெண்ணும் சந்தித்து, காதல் புரிந்து, தடைகளைத் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்றபரவசக் காட்சிகள் எல்லாம் அப்போது அதிகம் இல்லை.

    திருமணம் என்பதுபெரும்பாலும் சொத்து பரிவர்த்தனைக்காக நடந்தது. ஒரு பகுதியை ஆளும் பிரபு, தனக்கு அச்சுறுத்தலாகக் கருதும் எதிரி நாட்டை ஆள்பவனுக்கு தன் பெண்ணைத் திருமணம்செய்து கொடுத்து பகையைத் தவிர்ப்பதும் வழக்கமாக இருந்தது. வேண்டாவெறுப்பாக பலர்திருமண பந்தத்தில் சிக்கினர். இதனால் திருமண உறவுக்கு வெளியே ஆண்கள் சுகம் தேடஆரம்பித்தனர். பிரபுக்கள் குடியில் பிறந்த பலர் தங்களுக்கு சுகம் தர, ஊர் முழுக்க நூற்றுக்கணக்கில் வைப்பாட்டிகளை வைத்திருந்தது சகஜமாக இருந்தது.திருமணம் ஆகாத இளைஞர்கள் பலரும்கூட இப்படி பெண்களைப் பிடித்து வைத்திருந்தனர்.

    அமைப்புரீதியாகவளர்ந்த யூதர்களின் மதம்தான் செக்ஸ் விஷயத்தில் முதலில் கட்டுப்பாடுகளைபுகுத்தியது. செக்ஸ் என்பது திருமண வாழ்க்கையின் ஒருபகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். திருமணம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் மட்டுமே உருவான உறவுமுறைஎன்பது அவர்களின்போதனை. திருமணத்தைத் தவிர்த்துவிட்டு பிரம்மச்சாரிகளாக வாழ்கிறவர்கள், திருமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஆகியோரை ஏதோ ஊனமுற்றநபர்களைப் போல அன்றைய யூத சமுதாயம் பார்த்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவமதம் தழைக்க ஆரம்பித்த பிறகு, செக்ஸ் பற்றிய கட்டுப்பாடுகளும் வந்துசேர்ந்தது. ரோமப் பேரரசில் மக்கள் சமூக ஒழுங்கு எதுவுமின்றி வாழ்வதாக புனித பால்நினைத்தார். கிறிஸ்தவ மதத்தை ஆழமாக வேரூன்ற வைத்த அவர், அப்பட்டமாக பொது இடங்களில் செக்ஸில் ஈடுபட்ட ரோமானியர்களைக் கண்டித்தார்.செக்ஸுக்கான விதிகளை அவர்தான் வகுத்தார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:29 pm

    இல்லற சுகத்தைநிராகரித்து துறவற வாழ்க்கையில் பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பதே மேலான வாழ்க்கைஎன்றார் பால். ஆனால், ‘எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. கண்டபெண்களுடன் உறவு வைத்து நரகத்துக்குப் போவதை விட, கல்யாணம்செய்துகொண்டு மனைவியிடம் மட்டும் தாம்பத்ய உறவு வைத்துக் கொண்டால் பாவம் குறையும்என அட்வைஸ் செய்தார் அவர். அதன்பிறகு நான்காம்நூற்றாண்டில் புனித அகஸ்டின் இந்த விதிமுறைகளை இன்னும் கடுமை ஆக்கினார். அகஸ்டின்திருமணமாகி ஓர் ஆண் குழந்தையையும் பெற்றவர். அதன்பிறகு துறவறம் பூண்டு மதகுருஆனார். அதனால் செக்ஸ் உறவு பற்றி அறிந்தவர் என்ற முறையில் தெளிவாக இவர்கட்டுப்பாடுகள் போட்டார்.

    செக்ஸ் பற்றிய மோசமானநினைப்பை மனதில் கொண்டிருப்பதுகூட பாவம்என்ற இவர்தான், எப்படி கணவன்& மனைவி உறவு கொள்ளவேண்டும் என்ற பொசிஷனையும் தீர்மானித்தார். பெண் கீழே படுக்கவேண்டும்... ஆண் அவள் மீது கவிழ்ந்து படர வேண்டும்... இருவரின் செக்ஸ் உறுப்புகளும் சந்திக்க வேண்டும்... இதுதான் பொருத்தமான உறவு முறைஎன்றார் அவர் (பல்வேறு நாடுகளில் மக்கள்சந்தோஷத்துக்காக விதம்விதமான புணர்ச்சி முறைகளை வைத்திருந்தாலும்கூட, மதப் பிரசாரத்துக்காகப் போன பாதிரியார்கள் இந்தசெக்ஸ் உறவுமுறைதான் நாகரிகமானது என்று சொல்லித் தந்தனர். இதனால், இதற்கு மிஷனரி பொசிஷன்என்று பெயர்கூட உண்டு. இப்போது உலகம் முழுக்கஎழுபத்தைந்து சதவிகித மக்கள் இந்த முறையில்தான் செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர்!).

    ஆயிரம்ஆண்டுகளுக்கு மேல் இந்த விதிகள் புழக்கத்தில் இருந்து, மக்களைக் கட்டுக்குள் வைத்திருந்தன.பதின்மூன்றாம் நூற்றாண்டில் புனித தாமஸ் அக்யூனாஸ் இவற்றை இன்னும் கடுமைஆக்கினார். திருமண உறவுக்கு வெளியேவேற்று நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது குற்றம். செக்ஸ் உறவை குழந்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டுமே செய்ய வேண்டும். கருவுறுதலில் முடியாத செக்ஸ் உறவு பாவம்என்றார் அவர். ஹோமோசெக்ஸ், லெஸ்பியன், சுய இன்பம்அனுபவிப்பது என எல்லாமே மன்னிக்க முடியாத குற்றம் என்ற அவர் சொன்ன இன்னொரு விஷயம்அதிர்ச்சி தருவது... சுய இன்பம் அனுபவிப்பது, கற்பழிப்பைவிட மோச மான குற்றம்.கற்பழிப்பிலாவது குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது. சுய இன்பத்தில் அது இல்லைஎன்பதுதான் அது!

    காலம்காலமாகஇப்படி சொல்லப் பட்டு வந்த கருத்துகளை முதலில் எதிர்த்தவர் மார்ட்டின் லூதர். இவர்புராட்டஸ்டண்ட் பிரிவின் ஸ்தாபகர். துறவறம் பூண்டு மதச்சேவைக்கு வந்த பிறகும்செக்ஸ் உணர்வுகளால் அவதிப்பட்ட லூதர், திடீரென ஒருகன்னியாஸ்திரியை மணந்து கொண்டார். ஆறு குழந்தைகள் அவர்களுக்குப் பிறந்தன. துறவறம் என்பது இயற்கைக்கு எதிரான விஷயம்என கலகக் குரல் எழுப்பிய அவர், ‘‘பெண்ணுடன் இணைய வேண் டும் என்பதற்காகவே கடவுள்ஆண்களைப் படைத்திருக்கிறார். என் அப்பாவும், அம்மாவும் காதல்புரிந்ததால்தான் நான் பிறந்தேன். அப்புறம் நான் எப்படி துறவறம்தான் சிறந்ததுஎன போதிக்க முடியும்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

    இப்படி பலர் கட்டுப்பாடுகளைஎதிர்த்து கேள்வி எழுப்பினாலும்கூட, செக்ஸ் விதிகளைஇன்னும் கடுமையாக்கிய பலர் உண்டு. உதாரணமாக, அமெரிக்காவில்பிரபலமாக இருந்த மத போதகர் சில்வஸ்டர் கிரஹாம், ‘‘ஆண்கள் முப்பதுவயதுக்கு மேல்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் குழந்தைபெறும் தகுதியை அடைகிறார்கள். திருமணமான தம்பதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவைமட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண் டும்’’ என போதித்தார்.

    இப்படி மதம்மக்களுக்குப் போதித்த நற்செய்திகளில் கால்வாசி, செக்ஸைப்பற்றியதாகவே இருந்தது. அறிவியல்ரீதியான ஆராய்ச்சிகள் தலைதூக்கும் வரை இப்படிகட்டுப்பாடுகள் நீடித்தன. மேற்கத்திய நாகரிகம் ஆரம்ப காலத்தில் செக்ஸை பாவம் எனஎதிர்மறையான கண்ணோட்டத்தில் பார்த்த தால்தான் இவ்வளவு குழப்பமும்!
    ஆனால், இந்தியாவில் இந்தப் பிரச்னை இல்லை. நம்முன்னோர்கள் செக்ஸைப் பாவமாகக் கருதி ஒதுக்கவும் இல்லை. புனிதமாகக் கருதித்தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடவும் இல்லை. அதை வாழ்க்கையின் ஓர் அங்கமாகநினைத்தார்கள். செக்ஸைப் பற்றிய நமது பாரம்பரிய அறிவு கடவுள் கொடுத்தது என்பதுஇந்தியர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:30 pm

    மேற்கத்தியநாகரிகத்தில் இயல்பான வாழ்க்கையிலிருந்து செக்ஸைத் தனியாகப் பிரித்துப்பார்த்தனர். ஆனால், நம்மவர்கள் செக்ஸை வாழ்க்கையிலிருந்து அப்பாற்பட்ட விஷயமாக நினைக்கவில்லை. உணவு,உறக்கம் போல அதையும்வாழ்க்கையின் இயல்பான செயல்பாடுகளில் ஒன்றாகக் கருதினர். நம்மைப் பார்த்துமேற்கத்திய அறிஞர்கள் பிரமிப்பதற்கு இந்தப் பக்குவம்தான் காரணம்!

    செக்ஸை ஆபாசமானவிஷயமாகக் கருதாமல், ‘இலக்கி யம், மருத்துவம் போன்றமற்ற கல்விகளைப் போல அதையும் கற்றுக்கொடுக்க வேண்டும்என சொன்ன முதல் நாடு இந்தியாதான்! செக்ஸை வெறுமனே ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே இருட்டறையில் நடக்கிற அந்தரங்க விஷயமாகப் பார்க்காமல் அதன்சமூக, உளவியல் மற்றும் ஆத்மார்த்த பின்னணிகளைஇணைத்துப் பார்த்ததும் நம் முன்னோர்கள்தான்!

    நமது வாழ்க்கை முறை, உடல்நலன், நாம் வாழும் சூழ்நிலை, நமது நம்பிக்கைகள், சமூக பழக்கங்கள் என எல்லாமே நமது செக்ஸ்வாழ்க்கையைப் பாதிக்கின்றன. ஒவ்வொருவரது செக்ஸ் உணர்வின் வெளிப்பாடு களைப்பொறுத்தே அவர்களது உடல்நிலை மற்றும் மனநிலை அமையும்என அந்தக்காலமகான்கள் சொன்னார்கள்.
    இந்தியர்களைப்பொறுத்தவரை, செக்ஸைப் பற்றிய ஆரம்பக் கல்வியைக் கடவுளேநேரடி யாக அளித்ததாக நம்புகிறார்கள். வேதங்களும் இதை உறுதிசெய்கின்றன. பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுள் பிரஜாபதி, அதில் மனிதஇனத்தை யும் படைத்தார். அவர்கள் இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என்ற நெறிமுறைகளையும் அவரே உருவாக்கினார். மனிதர்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கம், பொறுப்பு, அமைதியான வாழ்க்கைமுறை என எல்லா விஷயங்களையும்பிரஜாபதி வரையறுத்தார். சிருஷ்டி ஸ்திதி பந்தனம்எனப்படும் இந்த நூலை அவர் கையால் எழுதவில்லை. வாய்மொழியாக முனிவர்களிடம்சொன்னார். இது ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட பிரமாண்டமான நூலாக இருந்தது.

    மனிதவாழ்க்கையின் குறிக்கோள்கள் என நான்கு விஷயங்களைச் சொல்வார்கள். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்ஆகியவைதான் அந்த நான்கும்!
    தர்மம் நியாயமானவாழ்க்கை முறையை பின்பற்றுவது! அர்த்தம் வாழ்க்கையில் புகழையும், செல்வத்தை யும் குவிப்பது! காமம் ஆசைப்படும் எல்லாவற்றையும் நேர்மையான வழியில்அடைந்து, சந்தோஷமான தாம்பத்ய வாழ்க்கையைப் பெறுவது!மோட்சம் தர்மப் படி வாழ்ந்தால், மரணத்துக்கு பிறகு கிடைப்பது! தர்மம், அர்த்தம், காமம் ஆகிய மூன்றும் நெறிப்படி இருந்தால், தானாகவே மோட்சம் கிடைக்கும். ஆகவே பிரஜாபதி, மோட்சத்தைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் உருவாக்கிய நூலின் ஒரு லட்சம் அத்தி யாயங்களும்மற்ற மூன்று விஷயங் களைப் பற்றியவைதான்!

    ஆனால், இவ்வளவு பெரிய நூலை சாதாரண மக்கள் படித்து உணர்ந்து கொள்வது இயலாத விஷயம்என்பதால், இவற்றின் சாரத்தை சுருக்கி சிறிய நூல்களாகமாற்ற முயற்சி நடந்தது. பிரஜாபதியின் நூலில் தர்மம் பற்றி சொல்லப்பட்டிருந்தபகுதியைத் தனியாக எடுத்து சுருக்கிய மனு, ‘தர்ம சாஸ்திரம்என்ற பெயரில் நூல் ஆக்கினார். இதேபோல தேவகுருவான பிரகஸ்பதி, அர்த்தம் பகுதியை அர்த்த சாஸ்திரம்என்ற பெயரில் சுருக்கமான நூல் ஆக்கினார். காமம் பகுதியை நந்திதேவர் சுருக்கி, ‘காம சாஸ்திரம்படைத்தார்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:30 pm

    இந்தக் காமசாஸ்திரமே ஆயிரம் அத்தியாயங்கள் கொண்டது. இதுவும் பெரிதாக இருக்கிறது என கருதியஸ்வேதகேது என்ற முனிவர், ஐந்நூறு அத்தி யாயங்கள் கொண்ட நூலாகசுருக்கினார்.

    இதுகூட சாதாரணஆட்கள் படிக்க முடியாத அளவுக்கு நீளமாக இருப்பதாக முனிவர்கள் கருதினர். இதைமீண்டும் சுருக்கும் பொறுப்பு பாஞ்சால தேசத்தில் (தற்போதைய பஞ்சாப்) வாழ்ந்தபாப்ரவியா என்ற முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் இதை நூற்றைம்பதுஅத்தியாயங்களாக சுருக்கினார். இந்த நூற்றைம்பது அத்தியாயங் களும் ஏழு பாகங்களாகப்பிரிக்கப் பட்டு இருந்தன. இதில் முதல் பாகம் சாதாரணம்’. வாழ்க்கைக் குறிக் கோள்கள் பற்றிய அறிமுக பாகம் இது! அடுத்தது, ‘சாம்ப்ரயோகிகம்’. செக்ஸில் ஈடுபடுவதற்கு முன்ன தாக ஆணும், பெண்ணும் செய்ய வேண்டிய தொடுதல், முத்தமிடுதல், கிள்ளுதல், கடித்தல், தழுவுதல் போன்றபரவசத்தைத் தூண்டும் ஆரம்ப விளையாட்டுக்கள் பற்றி விளக்கும் பாகம். மூன்றாவது, ‘கன்யா சம்ப்ர யுக்தம்’. எப்படி ஒரு பெண்ணைக் கவர்ந்து மனைவியாக அடைவதுஎன விளக்கும் பாகம். நான்காவது,‘பாரியாதி காரிகம்’. ஒரு நல்ல மனைவியின் கடமைகள்,உரிமை கள் என்னென்ன எனவிளக்கும் பாகம். ஐந்தாவது பாகம்,‘பாரதாரி கம்’. அடுத்தவர்களின் மனைவியைக் கவர்ந்து உறவு வைத்துக்கொள் ளும் விதங்கள் பற்றிவிளக்கும் பிரிவு இது! ஆறாவது பாகம், ‘வைசேஷிகம்’. தேவதாசிகளின் குணங்கள், அவர்கள் கற்று வைத்திருக்கும் கலை கள், அவர்களது சாகசங்கள் ஆகியவைப் பற்றி விலாவாரியாக சொல்லும் பாகம். ஏழாவது, ‘ஒளபநிஷதம்’. செக்ஸ் பிரச்னை களுக்கான சிகிச்சை, மந்திரங்கள் ஆகியவைப் பற்றிய பாகம் இது!

    பாப்ரவியாஉருவாக்கிய இந்தத் தொகுப்பு முழுமையானதாக இருந்தாலும், இதுவும் பெரிது என பலரும் கருதினர். இதனால் அதன்பின் பல முனிவர்கள் இதில்ஒவ்வொரு பாகத்தையும் தனியாக எடுத்து சுருக்கி, கோனார் உரைமாதிரி தனித்தனி குட்டி நூல்களாகப் படைத்தனர். யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும்எடுத்துப் படித்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றைத்தனித்தனியாகப் படிப்பவர்கள் முழுமையான செக்ஸ் அறிவு பெறமுடியாத பிரச்னை ஏற்பட்டது.

    இந்தஇடத்தில்தான் வாத்ஸாயனர் வருகிறார். இந்த எல்லா நூல்களையும் எடுத்து, அவற்றின் சாரம்சங்களை சுருக்கி,சாதாரண மனிதர்களும்புரிந்துகொள்கிற சுலபமான நடையில் அவர் படைத்ததுதான் காமசூத்திரம்’.

    ஆயுர்வேதசிகிச்சையில் ஒரு மருந்தை எடுத்து அனலில் காய்ச்சக் காய்ச்ச அது சுண்டி வீரியம்அதிகமாகும். அப்படி ஒரு லட்சம் அத்தியாயங்களில் கடவுள்

    சொன்னதை சுருக்கிமுப்பத்தாறு அத்தியாயங்களில் சொன்ன வீரியமான புத்தகம் காமசூத்திரம்!

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 8:31 pm

    பிரஜாபதியில்ஆரம்பித்து வாத்ஸாயனருக்கு முன்பு வரை காமம் பற்றி எழுதியவர்கள் வாழ்ந்த காலம்...அந்த நூல்கள் படைக்கப்பட்ட நேரம் போன்ற வரலாற்றுக் குறிப்புகள் எதுவும் இல்லை. அதுமட்டுமில்லை... அந்த நூல்களும் இப்போது இல்லை. கையால் எழுதி வைக்கிற பழக்கம்இல்லாத காலத்தவை என்பதால், காலப்போக்கில் அவை அழிந்துவிட்டன.

    துரதிர்ஷ்டவசமாகநம் முன்னோர்கள் இலக்கி யங்களைப் படைத்த அளவுக்கு வரலாற்றை எழுதி வைக்கவில்லை.அதனால் நூல்கள் எப்போது எழுதப்பட்டன... அவற்றை எழுதியவர்களின் குடும்பப் பின்னணிஎன்ன... எதற்காக அவர் அந்த நூலை எழுதினார்... அதற்கு எந்த மாதிரியான வரவேற்புகிடைத்தது... ஏதாவது சர்ச்சைகள் எழுந்தனவா? இப்படி எதையும்நாம் தெரிந்துகொள்ள வாய்ப்பின்றி போய்விட்டது.

    நல்லவேளையாக, வாத்ஸாயனர் காலத்திலிருந்து எழுதப்பட்ட நூல்கள் எல்லாமே இருக்கின்றன.எழுதியவர்களைப் பற்றிய தகவல்களும் ஓரளவுக்கு இருக்கின்றன. கி.பி. முந்நூறு முதல்நானூறாம் ஆண்டு வரையிலான காலத்தில்தான் வாத்ஸாயனர் வாழ்ந்ததாகச் சொல்கிறார்கள்.வாத்ஸாயனர் என்பது அவரது குடும்பப் பெயராம். இயற்பெயர் மல்லங்கஎன்கிறார்கள் சில பேர். வேறு சிலரோ மல்லினாகஎன்கிறார்கள்.

    அதேபோல அவர் பெண்வாசனை இல்லாத பிரம்மச்சாரியாக வாழ்ந்தார்என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் இதை நம்ப மறுக்கும் பலர், ‘இல்லவே இல்லை. அவர் பிரம்மச்சாரியாக இருந்தால் எப்படி தாம்பத்ய உறவின்உணர்வுகளைத் துல்லியமாக விவரித்து இருக்க முடியும்? அனுபவிக்காமல்அவரால் எழுதி இருக்கவே முடியாதுஎன்கிறார்கள்.

    அவர் அனுபவித்துஎழுதினாரோ அல்லது பலரது படுக்கை அறை அனுபவங்களைக் கேட்டு எழுதினாரோ... யாருக்கும்தெரியாது! ஆனால், சகல சாஸ்திரங்களையும் படைத்த மேற்கத்திய உலகில்காம சூத்திரம்மாதிரிதுல்லியமான ஒரு செக்ஸ் நூல், கடந்த பதினெட்டாம் நூற்றாண்டு வரைகூட இல்லை.சூத்திரம் என்றால் சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக, தெளி வாகச் சொல்வது என்று அர்த்தம். வாத்ஸாயனர் அதை சரியாக செய்திருக் கிறார்.அதனால்தான் உலக செக்ஸாலஜி நிபுணர்கள் இன்றைக்கும் இந்தியர்களைப் பொறாமை யோடுபார்க்கிறார்கள். செக்ஸின் பல்வேறு பரிமாணங்களை அலசி யிருக்கும் அவர், ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார். எந்த மாதிரியான உறவுகள் சரி... எது தப்புஎன தீர்மானிக்கும் நீதிபதியாக அவர் தன்னைக் கருதிக் கொள்ளவில்லை. இப்படி எல்லாம் உலகத்தில் நடக்கிறதுஎன பயணக்குறிப்பு எழுதுவது போல ஒரு பார்வையாளனின் மனநிலையோடு விவரித்து இருக்கிறார்.நல்லது எது, கெட்டது எது என தீர்மானிக்கும் பொறுப்பை அதைப்படிக்கிறவர்கள் கையில் கொடுத்து விடுகிறார்.

    உதாரணமாக, ‘பாரதாரிகம்என்ற பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களின் மனைவிகளை எப்படிக் கவர்ந்து, அவர்களோடு செக்ஸ்வைத்துக்கொள்வது என்ற யுக்தியைக் கற்றுத்தரும் பிரிவு இது! வாத்ஸாய னருக்கு முன்புஇருந்த முனிவர்கள் எழுதியதை சுருக்கி அவர் கொடுத்திருந் தார். சகலமும் அறிந்த முனிவர்கள் நல்ல கருத்துகளைத்தானே போதிக்க வேண்டும். இதுபோன்றமோசமான விஷயங்களைக் கற்றுத் தரலாமா?’என்ற கேள்வி உங்களுக்குஎழலாம்.

    இதற்கு பதிலாகஇதை வேறு கோணத் தில் பாருங்கள். இதைப் படிக்கும் ஒவ்வொரு ஆணையும், ‘இதோ பாருப்பா! இந்த உலகம் ரொம்ப மோச மானது. நிறைய ஆம்பளைங்க அடுத்தவன்பொண்டாட்டியை எப்படி கவுக்கலாம்னு திரியறா னுங்க... அவனுங்க இந்த இந்த மாதிரிடெக்னிக்குகளைப் பயன்படுத்து வானுங்க. உன் வீட்டுப்பக்கம் இப்படி யாராவதுஉலாத்தினா, நீ உஷாரா இரு. உன் மனைவியை எவனும் கவுத்துடாமபார்த்துக்கோ!என வாத்ஸாயனர் எச்சரிப்பதாக ஏன்எடுத்துக்கொள்ளக் கூடாது? இது தான் காமசூத்திரத்தின் சிறப்பு.

    இன்னமும்கூட காமசூத்திரத்தைஆபாச நுலாகக் கருதி அதற்கு அட்டை போட்டு மறைத்து, ரகசியமாகப்படிப்பவர்கள் நிறைய பேர். அந்தக் காலத்தில் இதை எப்படி பார்த்தார்கள்?

    வாழ்க்கைரகசியங்களைச் சொல்லித்தரும் வேதங்களே கூட, காமத்துக்குமரியாதை கொடுத்தன. வேதங்களில் தலையாயது என ரிக் வேதத்தைச் சொல்வார்கள். இந்தவேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129-வது சூக்தம் நான்காவது மந்திரம் இப்படிச்சொல்கிறது. காமம்தான் உலகில் முதலில் பிறந்தது. காமம்தான்மனசுக்கு முதல் வித்து. அந்த மனசை வைத்து ரிஷிகள் தவத்தின் மூலம் இருத்தலுக்கும், இல்லாமல் இருத்தலுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தினர்என்கிறது அந்த மந்திரம்.
    அதர்வ வேதமும், ‘உலகத்தில் முதலில் பிறந்தது காமம்தான்என்கிறது. அதர்வவேதத்தின் ஒன்பதாவது காண்டம் இரண்டாவது சூக்தம் 19 மற்றும் 21வது மந்திரங்கள்இதைச் சொல்கின்றன. உலகத்தில் முதலில் தோன்றிய காமம் சக்திவாய்ந்தது. கடவுளோ, முன்னோர்களோ, மனிதர்களோ அதற்குநிகர் கிடையாது. ஓ காமமே! எல்லையற்ற பேரளவு கொண்டவன் நீ... எல்லா உயிர்களிலும் நீநிறைந்திருக்கிறாய்... சூரியன், சந்திரன், காற்று, அக்னி ஆகிய எல்லா தேவர்களையும்விட நீ மேலானவன்... எப்போதுமே நீ மேலானவன்என்று காமத்தை வணங்குகின்றன அந்த மந்திரங்கள்.

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர் - Page 1 Empty Re: டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum