செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...

Go down

 செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ... Empty செக்ஸ் உணர்வை வளர்க்கும் ஆயுர்வேத சைவ உணவுகள் ...

Post by Admin on Thu 09 Dec 2010, 11:34 pm
[You must be registered and logged in to see this link.]


பொதுவாக ஒருவன் உண்ணும் உணவே அவனை வளர்க்கும் ..நல்ல ஆஹாரமே சப்த தாதுக்களின் ஆதாரம் ..கடைசி தாது விந்துவின் பலம் ஆகராரத்தை நம்பியே உள்ளது ..ஆயுர்வேதம் சொல்கிறது ..இன்று சாப்பிட்ட ஆகாரம் விந்துவாக மாற முப்பது நாட்கள் ஆகிறது ..எனவே சரி விகித உணவே தாதுக்களின் பலம் ..


கீழே உள்ள உணவுகள் -சைவ உணவுகள் -இந்த சைவ உணவுகளில் ஆண்மை பெருகும்,செக்ஸ் உணர்வு பெருகும் .. ..எளிதாக வீட்டிலேயே செய்து விட முடியும் ...கீழே உள்ள உணவுகளை செய்து பாருங்கள் ..பலன் பெறுங்கள் ..


ஆண்மை அளிக்கும் நெய்

செய்முறை -

 1. ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,கீரைபாலை ,ஓரிலை ,மூவிலை ,பேரீச்சை ,அதிமதுரம் ,திராஷை ,அரிசி திப்பிலி ,சுக்கு ,ஸ்ருங்காடகம் ,பால் முதுக்கன் கிழங்கு -இவற்றில் ஒவ்வொன்றிலும் சம அளவு ஒரு பலம் (நாற்பத்தி எட்டு கிராம் ) எடுத்துகொள்ள வேண்டும்
 2. அதிலே -பதினாறு பலம் பால் ,அறுபத்தினாலு பலம் தண்ணீர் ,அறுபத்தினாலு பலம் பால் அனைத்தையும் எடுத்து காய்ச்சி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும்
 3. அதில் நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும்
உபயோகிக்கும் முறை • உணவு செரிக்கும் திறன் தெரிந்து அருபதான்குருவை சோற்றோடு பயன்படுத்த வேண்டும்
பயன் • ஆண்மை வளர்க்கும்
 • வலிமை ,நிறம் -இவற்றை கொடுக்கும்
 • நல்ல குரலை தோற்றுவிக்கும்
 • உடலை கொழுக்க வைக்கும்
ஆதாரம் • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு ,பாடல் -21-23
-------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் பானகம்

செய்முறை -

 1. அதிக புளிப்பில்லாத ,குறை இல்லாத ,ஆடையோடு கூடிய தயிரை எடுத்துகொள்ளவேண்டும்
 2. அதில் சர்க்கரை ,தேன் ,சிறிதளவு மிளகு ,மூங்கிலுப்பு ,சிற்றேல அரிசி -போன்றவற்றை போதிய அளவு சேர்க்க வேண்டும்
 3. இவற்றை மென்மையான ஆடையில் வடிகட்டி புதிய மண் பாண்டத்தில் சேர்த்து வைக்க வேண்டும் .
பயன்படுத்தும் முறை


 • நெய்யோடு சேர்ந்த அறுபதாங் குறுவை அரிசி சோற்றை பயன்படுட்ட வேண்டும் -பின் இந்த பானகத்தை தக்க அளவு குடிக்க வேண்டும்
பயன்


 • நிறம்,குரல் ,வலிமை ,விந்து-வளர்ச்சி பெரும்
ஆதாரம்

 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
-----------------------------------------------------------------------------------------------------------------------ஆண்மை அளிக்கும் பால் சோறு


 • பால் சர்க்கரை தேன் இவற்றோடு கூடிய அறுபதாங் குறுவை அரிசி சோற்றை உண்பவன் -காளையை போன்ற ஆண்மை உடையவன் ஆகிறான்
ஆதாரம்

 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் -அத்தியாயம் இரண்டு ,பாதம் இரண்டு -பாடல் 24-26
----------------------------------------------------------------------------------------------------------------------------------ஆண்மை அளிக்கும் ஐவகை பால்

 1. ஜீவநீய கன கூட்டுப்பொருள் (ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,மகா மேதா ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து ,கீரைபாலை ,அதிமதுரம் )
 2. விந்துவை வளர்க்கும் கூட்டு பொருள் ,(ஜீவகம் ,ரிஷபகம் ,காகோலி,க்ஷீர காகோலி ,பயறு ,உளுந்து,மேதா,தண்ணீர்விட்டான் கிழங்கு ,சடாமஞ்சில் ,கர்கடஸ்ருங்கி )
 3. வலிமை அளிக்கும் கூட்டு பொருள் (காட்டு வெள்ளரி ,பூனைகாலி,தண்ணீர்விட்டான் கிழங்கு ,காட்டு உளுந்து ,பால் முதுக்கன் கிழங்கு ,அமுக்கிரான் கிழங்கு ,ஓரிலை ,கடுகு ரோகினி ,சிற்றாமுட்டி ,பேராமுட்டி )
 4. பால் வளர்க்கும் கூட்டு பொருள் ,(விலாமிச்சை வேர்,சம்பா தானியம் ,அறுபதாம் குறுவை ,நீண்ட கனுவுள்ள கரும்பு ,தர்ப்பை,நாணல் ,குருவி கரும்பு வேர் ,கரும்புல்,செங்கரும்பு ,காவட்டம்புல் )
 5. உடலை வளர்க்கும் கூட்டு பொருள் (பால் முதுக்கன் கிழங்கு ,கண்டங்கத்தரி ,அமுக்கிராக் கிழங்கு ,காகோலி ,க்ஷீர காகோலி ,வெண் சிற்றாமுட்டி ,மஞ்சள் சிற்றாமுட்டி ,காட்டுபருத்தி ,முடுக்கன் கிழங்கு )
மேலே கூறிய ஐவகை கூட்டுபொருளில்-தயார் செய்யப்பட்ட பாலில்,நெய்யில் வறுக்கப்பட்ட கோதுமை மாவை கலந்து அதில் சர்க்கரை ,நெய் ,தேன் ,இவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும் ..இதனால் குறைவில்லாத விந்து வளர்ச்சியை ஒருவன் பெற முடியும்

-----------------------------------------------------------------------------------------------------------------------
மக்கட்பேறு அளிக்கும் பால்


செய்முறை -

 • மேதா ,க்ஷீர காகோலி ,கீரை பாலை ,பால்முதுக்கன் கிழங்கு ,கண்டங்ககத்தரி ,நெருஞ்சில் ,மூங்கிலுப்பு ,உளுந்து ,கோதுமை ,சம்பா அரிசி ,அருபாதாங் குறுவை அரிசி-இவற்றில் ஒவ்வோன்றிலும் ஒரு தோலா எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்
 • இதனில் முப்பத்தி இரண்டு பலம் பசுவின் பாலும் ,முப்பத்தி இரண்டு பலம் நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்
 • பால் மட்டும் எஞ்சிய போது வடிகட்டி தேன் ,நெய் ,சர்க்கரை -இவற்றோடு சேர்த்து பருக வேண்டும்
பயன் -


 • எழுபது வயது முதியரும் பல மக்களை தோற்றுவிக்கக்கூடிய ஆற்றலை அளிக்கும்
 • முதியவரும் வாலிபனை போன்று மகிழ்ச்சி அடைவர்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அரிசி திப்பிலி பால்


 • முப்பது அரிசி திப்பிலி துண்டுகளை மைய்ய பொடி செய்து நான்கு தோலா நெய்யும் ,நன்கு தோலா எண்ணையும் சேர்த்து வறுத்த தூளில் தேன் சர்க்கரை இவற்றை கலக்க வேண்டும் ..இதை பால் கறக்கும் பாத்திரத்தில் வைத்து கறந்து(பால் கறக்கும் பசுவுக்கு -காட்டு உளுந்து இலை,கரும்பு ,மருத இலை இவற்றை உணவாக கொடுக்க வேண்டும் -பசு பருத்த காம்பும் ,தாய்பசுவின் நிறம் உடையதும் ,சிவப்பு அல்லது கருப்பு கன்றை முதலாக ஈன்றதும் -சாதுவானதும் )..இப்பாலை -தரை மேல் வைக்காமல் வலுவிற்கு ஏற்றவாறு பருக வேண்டும் ,பசி எடுத்த பின் அற்பதாங் குறுவை சோற்றை பால் நெய்ய்டுடன் பருக வேண்டும்
பயன்


 • இவ்வாறு பருகுவதால் ஒரு இரவு முழுவதும் பெண்ணுடன் செய்தாலும் -ஆணுக்கு தளர்ச்சி (ஆண் குறி தளர்ச்சி அடையாது )அடையாது ..விரைவில் வெளிவராது ..
--------------------------------------------------------------------------------------------------------------------


ஆண்மை அளிக்கும் பாயாசம் ..செய்முறை

 • நெருஞ்சில் ,பால் முதுக்கன் கிழங்கு இவற்றின் சாறில் நான்கு மடங்கு முன்பு கூறிய பசுவின் பாலை சேர்த்து அதில் உளுந்து அறுபதாங் குறுவை அரிசி இவற்றை போட்டு வேக வைத்து பாயசாமக்கி கொள்ளவேண்டும்
பயன்

 • இதனில் மிகுதியான நெய் சேர்த்து பருகினால் -விந்து அதிகமாக வளர்ச்சி பெரும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை அளிக்கும் அடைகள்..செய்முறை

 • ஜீவனிய கனத்தை சேர்ந்த உயிரூட்ட கூடிய மனதிற்கு பிடித்தமான சுவையை உண்டு பண்ணக்கூடிய பழங்களில் நான்கு பலமும் ,பூனை காலி விதையில் நான்கு பலமும் ,எள்ளுபொடியில் எட்டு பலமும் ,பயற்றின் மாவு எட்டு பலமும் ,கோதுமை ,சம்பா அரிசி இவற்றின் மாவுகள் நான்கு பலமும் சேர்த்து நான்கு பலம் நெய் ஊற்றி பிசைந்து பாலையும் சேர்த்து கலந்து அடை தட்ட வேண்டும்
பயன் -


 • தட்டிய அடைகளை நெய்யில் வறுத்து உண்டால் -ஆண்மை பெருகும் ..பல மனைவியரை கொண்டவரும் சந்தோஷம் அடைவான்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை வளர்க்கும் தண்ணீர் விட்டான் கிழங்கின் நெய்


 • பதினாறு பலம் நெய் தண்ணீர் விட்டான் கிழங்கு நான்கு பலம் ,நூற்றைம்பது பலம் பாலில் கலந்து காய்ச்சி முறை படி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும் ..
 • இந்த நெய்யில் சர்க்கரை ,அரிசி திப்பிலி பொடி தேன் இவற்றை சேர்த்து பருக விந்து வளர்ச்சி பெரும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை தரும் அதிமதுர மருந்து


 • ஒரு தோலா அதிமதுர சூர்ணதைச் சம அளவு நெய் தேன் இவற்றோடு சேர்த்து பருக வேண்டும் ..அதன் பிறகு பால் பருக வேண்டும் ..இதனால் சிற்றின்ப வேட்கை குறையாமல் இருக்கும்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
பால் நெய் பயன்படுத்துவதன் பயன் ..


 • நாள் தோறும் நெய்யும் பாலும் பருகுபவன் பயமற்று நோயற்று இளமையோடு நாள் தோறும் புணரலாம்
 • காளை போன்று பெண்களை புணரும் ஆற்றலை பெறலாம் ..

மேலே கூறிய அனைத்திற்கும் ஆதாரம் ..

 • சரக சம்ஹிதை -சிகிச்சா ஸ்தானம் ,அத்தியாயம் இரண்டு ,பாதம் மூன்று ,பாடல் -3-20
குறிப்பு -ஒரு பலம் =நாற்பத்தி எட்டு கிராம் ,
ஒரு தோலா =பன்னிரண்டு கிராம் ---ஆயுர்வேத முறைப்படி

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum