என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» சந்தேகத்தை தெளிவுபடுத்தவும்...
by romeocruz Sat 21 May 2016, 2:34 am

» கருநெல்லி மரம்
by dgbabu Sun 24 Jan 2016, 10:00 pm

» Homoeopathic Management of Renal calculi
by Admin Fri 10 Jul 2015, 5:23 pm

» High Sensitive Troponin assay reveals heart attack
by Admin Fri 10 Jul 2015, 5:21 pm

» health a to z
by Admin Fri 10 Jul 2015, 5:17 pm

» Ayurveda Cure for ED (Erectile Dysfunction) - CURE ED IN 30 DAYS
by Admin Fri 10 Jul 2015, 5:10 pm

» KAI PALAKAM..
by kalaisoft Sun 05 Jul 2015, 12:36 am

» suyainbam seidhadhu karanama
by kaniforyou Sun 14 Jun 2015, 12:51 pm

» அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்?
by ptkannan Mon 08 Jun 2015, 5:15 pm

» ஆண் குறியின் மேல் தோலை எப்படி உறிப்பது
by Ragav Sun 07 Jun 2015, 11:45 pm

» small penis
by anand anand Mon 01 Jun 2015, 4:12 pm

» நல்ல ஒரு வைத்திய நூல் ஜீவரட்சனி என்னும் நல்ல புத்தகம்
by prem_csb Tue 26 May 2015, 10:29 pm

» வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
by t.ainnar Fri 15 May 2015, 7:55 pm

» நான் காமத்திற்கு அடிமையாகி விட்டதாக கருதுகிறேன். என்னை தெளிவு படுத்தவும்.
by romeocruz Sat 02 May 2015, 11:12 pm

» கேள்விகளை போனில் கேட்பது நல்லதா அல்லது மெயிலில் கேட்பது நல்லதா?
by ronith Sat 02 May 2015, 2:56 pm

» EAR related issue
by Sakthivel2237 Mon 27 Apr 2015, 12:39 pm

» ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
by vbrvlr Thu 09 Apr 2015, 8:37 pm

» ஆஸ்துமாவிற்கு சூப்பர் லேஹியம் -அகஸ்திய ரஸாயனம்
by malathy1 Sat 28 Mar 2015, 4:12 pm

» தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
by ravisshankar Wed 25 Mar 2015, 11:13 pm

» பன்றி காய்ச்சல் தடுப்பூசி -பக்க விளைவுகள் உள்ளதா ?
by yasar arafath Tue 03 Mar 2015, 1:11 am

» சாதாரண பேஸ் மாஸ்க்கால் பன்றி காய்ச்சல் வைரசை தடுக்க இயலாது
by yasar arafath Tue 03 Mar 2015, 1:09 am

» எட்டு மணி நேரம் வெளிக்காற்றில் எளிதாக வாழும் பன்றிகாய்ச்சல் வைரஸ் -H1 N1.
by yasar arafath Tue 03 Mar 2015, 1:06 am

» விந்து முந்துதலை தவிர்க்கும் ஆண்மை பெருக்கும் மூலிகை-part 4-ஜாதிக்காய் ,ஜாதி பத்ரி (படங்களுடன்)
by matheshu Wed 25 Feb 2015, 5:00 pm

» ISLAMIC WAY OF PRACTICING YOGA-full details-my project work
by mumzee Fri 30 Jan 2015, 2:58 pm

» புதியவர்களை வரவேற்கிறோம்
by kraja29 Tue 27 Jan 2015, 6:52 pm

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆரோக்கியம் ஆனந்தம்

View previous topic View next topic Go down

ஆரோக்கியம் ஆனந்தம்

Post by தோழன் on Sun 12 Dec 2010, 9:40 pm

ஆரோக்கியம்ஆனந்தம்
உலகை மாற்ற உணவைமாற்று
உலகை மாற்ற உணவைமாற்று
-திருமதி ரதிலோகநாதன்

இன்றைய உலகம்அழிவுப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.நாளுக்கு நாள் குற்றங்களும், இயற்கை சீற்றங்களும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? மனித குலம் எங்கோ பெரும் தவறு செய்துகொண்டிருக்கிறது. என்ன தவறு? போர், நீதி நூல்கள், காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றால் நீதியை நிலைநாட்ட முடியவில்லை. போரினால் அழிவே அதிகம்.நீதி நூல்களால் உலகம் திருந்தும் என்றால், திருக்குறள்எழுதியபோதே, உலகம் திருந்தியிருக்கும். அதுவும்திருந்தவில்லை. காவல்துறையும், நீதிமன்றமும் துவங்கினால் உலகம்திருந்தியிருக்கும் என்றால், இப்போது ஒரு குற்றமும் நடக்கக் கூடாது. ஆனால்அதுவும் நடக்க வில்லை. வெறும் சட்டத்தினாலும், கட்டுப்பாடுகளினாலும்உலகை திருத்த முடியாது. சரி, உலகை மாற்ற என்ன செய்யவேண்டும்.

உலகை மாற்ற உணவை மாற்று
ஆம், உலகை மாற்ற உணவை மாற்ற வேண்டும். வெறும் உணவை மாற்றினால் உலகம் மாறிவிடுமா? ஆமாம். நம்புங்கள் நண்பர்களே. உணவை மாற்றினால், கட்டாயம் உலகம்மாறிவிடும். நீங்கள் உங்களைக் கொண்டே சோதித்துப் பாருங்கள். பத்து நாளில்மாற்றத்தை உணருவீர்கள்.

சரி. உணவை எப்படிமாற்றுவது. சமைக்காத உணவை சாப்பிட வேண்டும். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும்சமைத்து சாப்பிடுவதில்லை. இந்த விடயத்தில்தான், மனித இனத்தில்மாபெரும் தவறு நடக்கிறது. மனித சமுதாயம் செய்த மிகப்பெரும் தவறு, உணவை சமைத்து சாப்பிட ஆரம்பித்தது தான். மனிதன் மட்டும் உணவை சமைத்துண்ணும்பழக்கத்துக்கு அடிமையாகமல் இருந்திருந்தால், பரிணாமவளர்ச்சிப்படி தெய்வ நிலையை அடைந்திருப்பான்.


மனிதன் சைவமா? அசைவமா?

பரம்பரைபரம்பரையாக அசைவ உனவு எடுத்துக் கொள்பவர்களின் நடவடிக்கைகளை கவனித்தால், எளிதாக உணர்ச்சி வயப்படுதலும்,மூர்க்கத்தனமும் இருப்பதைகவனிக்கலாம். மேலும் பரிணாம வளர்ச்சி தத்துவப்படி நாம் குரங்கிலிருந்து வந்ததாககூறப்படுகிறது. குரங்குகள் பழங்களையே விரும்பி உண்கின்றன. குரங்கைப் போலவே ஏறத்தாழநாமும் உடல் உறுப்புகளை கொண்டுள்ளோம். எனவே, நாமும் சைவப்பிராணிதான். நமக்கு வேட்டையாடும் விலங்குகளைப்போல மாமிசத்தை கிழித்து சாப்பிடகோரைப்பற்கள் இல்லை. உணவை நன்கு மென்று சாப்பிட கடைவாய் பற்களே உள்ளன. மேலும்அசைவப் பிராணிகள் நீரை நக்கி குடிக்கும். சைவப் பிராணிகள் நீரை உறிஞ்சிக்குடிக்கும். நாம் எந்த வகை என்பதை நாமே முடிவு செய்துகொள்ளலாம். மேலும் அசைவபிராணிகளுக்கு குடலின் நீளம் குறைவாக இருக்கும். சைவப் பிராணிகளுக்கு குடல் நீளமாகஇருக்கும். இவை அனைத்தும் மனிதன் சைவம் என்பதை உறுப்படுத்துகின்றது.


எது சரியான உணவு?

நாம் சைவ உணவுஉண்ண வேண்டியவர்கள் என்பதை கவனித்தோம். சைவ உணவிலும் சமைத்த உணவுகள், சமைக்காத உணவும் என இரு வகைகள் உள்ளன. இதில் நம்முடைய உணவு என்ன என்பதைஅறிந்து கொள்வோம்.

1. நிலக்கீழ்உணவுகள்
நிலத்திற்கு கீழ்விளையும் கிழங்கு வகைகள் எலி, பன்றி போன்ற கீழ்வகை விலங்குகளுக்கானவை. பூண்டு, வெங்காயம் மற்றும் ஏனைய கிழங்கு வகைகளும் இதில் அடங்கும். இத்தகையவிலங்குகளின் மூக்கு அதற்கேற்ற தன்மையில் அமைந்துள்ளதை காணலாம்.

2. நிலமேல்உணவுகள்
நிலத்திற்கு மேல்விளையும் செடி வகைகள் ஆடு, மாடு மற்றும் குதிரை போன்ற மேயும் தன்மை கொண்டவிலங்குகளுக்கானவை. அவற்றின் ஜீரண மண்டலம் உணவை அசை போட்டு உண்ணுவதற்கேற்பஅமைந்துள்ளது. அரிசி, பருப்பு போன்ற

3.தானிய உணவுகள்
அரிசி, பருப்பு, சோளம் போன்ற தானிய உணவுகள் பறவைகளுக்கானவை.அவற்றின் மூக்கு மற்றும் வாய் தானியங்களை கொத்தி உண்பதற்கேற்ப அமைந்துள்ளதைக்காணலாம்.

4. பழங்கள்மற்றும் கொட்டை பருப்புகள் (Fruitsand nuts)
மனிதர்களின்கையும் முகவாய் அமைப்புகள் பழங்கள் மற்றும் கொட்டை பருப்புகள் (Fruits and nuts) உண்பதற்கேற்ப அமைந்துள்ளதை காணலாம். அதுவும்தென்னை, பனை, வாழை, பப்பாளி போன்ற மரங்கள் புவியீர்ப்பு விசையை எதிர்த்து ஒரே கிளையாக மேல் நோக்கிவளர்வதால் அவற்றில் கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு உயிராற்றல் மிகவும் அதிகம்.அதன்பிறகு வருவன பல கிளைகளுடன் கூடிய மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்கள்.மனிதனின் உணவு, இந்த வகை உணவுகளே.


உணவுகளின் வகைகள்
1. ஒரு கிளைமரங்கள்: தென்னை, பனை, வாழை, பப்பாளி.
2. பல கிளைமரங்கள்: மா, பலா, சப்போட்டா போன்றன
3. செடிகள்கொடிகள்: திராட்சை, மாதுளை போன்றன
4. காய் வகைகள்:புடல், பீர்க்கன், பாகல், முருங்கை
5. புவி கீழ்உணவுகள்: சேனை, உருளை, பீட்ரூட், முள்ளங்கி போன்ற பூமிக்கடியில் விளையும் கிழங்குகள்
6. பால்பொருட்கள், முட்டை
7.வெள்ளிறைச்சி-(White Meat)- மீன் வகைகள்
8.செவ்விறைச்சி-(Red Meat): ஆடு, மாடு, பன்றி கோழி போன்ற இறைச்சி வகைகள்.

இதில் நாம் எந்தநிலையில் உள்ள உணவுகளை உண்ணுகிறோமோ அதற்கேற்பவே நமது எண்ணங்களும் செயல்பாடுகளும்இருக்கும்.

தவறான உணவு:

அசைவம் உண்பதுதவறானது என்றும் கெடுதலானது என்றும் இன்று மக்களிடையே ஓரளவு விழிப்புணர்வு உள்ளது.ஆனால் பால், முட்டை போன்ற உணவுகள் அதிக கால்சியம், புரதச்சத்துக்கள் கொண்ட ஒரு முழுமையான உணவு என்றும் அதை கண்டிப்பாக உணவில்சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து ஆங்கில மருத்துவர்களலால் பரவலாககூறப்படுகிறது. மக்களும் அதை நம்பி,அவற்றை அதிகம் உணவில்சேர்த்துக் கொள்கிறார்கள். இதில் இரண்டு கருத்துக்களை சிந்தித்துப் பார்த்தால், சந்தேகமின்றி அவை தவறான உணவுகள் என புலப்படும்.

மாடுகள் பால்கறப்பது நமக்காக இல்லை. அவற்றின் கன்றுக்குட்டிகளுக்காகத்தான். மாட்டுப்பால், கன்றுக்குட்டியின் ஜீரண மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்றவாறான தன்மையையேகொண்டிருக்கிறது. கன்றுக்குட்டிக்கான பாலை, நாம் திருடிஉண்பது நிச்ச்யம் இயற்கை அல்ல. குழந்தைகளுக்கு ஏற்றது மாட்டுப்பால் அல்ல.தாய்ப்பால்தான்.

மேலும் பாலில்இருப்பதாகக் கூறப்படும் கால்சியம்,புரதச்சத்து மாட்டுக்குஎப்படி கிடைத்தது? இலை, தழைகளை உண்பதால்அவற்றுக்கு கிடைத்தது. நாமே அத்தகைய உணவுகளை நேரடியாக எடுத்துக் கொள்ளலாமே.குழந்தைகளுக்கு, பால் புகட்டுவதை நிறுத்தினால் சளி தொந்தரவுகள்குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இயற்கை உணவுஉண்டால் பலம் குறைவு என்பவர்கள்,யானையை சிந்தித்துப்பார்க்க வேண்டும். யானை யாருடைய பாலையும் திருடி உண்பதில்லை. முட்டையை ஆம்லெட்போட்டு சாப்பிடுவதில்லை. சைவ உணவுகளுக்கு தள்ளும் சக்தி (Pulling Strength) உண்டு. அசைவ உணவுகளுக்கு கொல்லும் தன்மைதான்(killing strength) உண்டு. மனிதன் போரினால், தனது இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் முட்டாளாக வாழ்ந்து வருகிறான்.

இயற்கை உணவுஎவ்வாறு செயல்படுகிறது?

சைவ உனவு வேறு, இயற்கை உணவு வேறு என்பதை நாம் முதலில் உணர வேண்டும். சைவ உணவு என்பது செடி, கொடி, மரங்களிடம் இருந்து கிடைக்கும் உணவுப்பொருட்களை அடுப்பிலேற்றி சமைத்து உண்பது. சமைக்கும் போது உணவு செத்துவிடுகின்றது.உயிராற்றல் இழந்த உணவுகளை உண்பதாலேயே, நாமும் அல்பஆயுளில் போய் விடுகிறோம்.. வீதிக்கொரு மருத்துவமனை, சந்துக்கொருமருந்துக் கடை என பெருகி வருகிறது. இதில் சிலர், பால் மற்றும்முட்டையையும் சைவ உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். இவை அனைத்தும் உணவுகளே இல்லை.இயற்கை உணவு என்பது, இயற்கை அன்னை தரும் பழங்களும் கொட்டைபருப்புகளுமே. நாமாக எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே நன்றாக மென்று சாப்பிடுவதுதான் சிறந்த உணவு.

ஒரு சுத்தமானசக்தி நம் உடலில் சேரும்போது நம் உடல் தூய்மை அடைந்து அழுக்குகள் வெளியேறுகிறது.அந்த சுத்த சக்தி என்பது வெயில்,மழை, பழங்கள், பச்சை தண்ணீர் என பல விதங்களில் நமக்குகிடைக்கிறது. மழையில் நனைந்தால் சளி பிடிப்பது, வெளியில்சென்றால் தலை வலிப்பது, பச்சை தண்ணீர் குடித்தால் காய்ச்சல் வருவது, பழங்கள் உண்டால் வயிற்றலைச்சல்,வாந்தி, சளி பிடிப்பது ஆகியன கழிவுகள் வெளியேற்றமே ஆகும். இயற்கை உணவு உண்ணும்போதுஇத்தகைய குறிகள் தோன்றினால், நாம் மகிழ்ச்சியடையவே வேண்டும். மருத்துவமனைக்குச் செல்லவேண்டியதில்லை. இதற்கு மருத்து சாப்பிட்டால், கழிவுகள் வெளியேறாமல் உடலிலேயே தங்கி விடும். இயற்கை உணவு உண்டால், நோய்கள் முதலில் குணமடைய ஆரம்பிக்கும். பிறகு மனநிலையும் சிறிது சிறிதாகமாற்றம் அடையும். கோபம், காமம், பொறாமை போன்ற தீயகுணங்கள் மறைந்து அன்பு, காதல், சகிப்புத்தன்மைபோன்ற நல்ல குணங்கள் வளர ஆரம்பிக்கும்.

ஒவ்வொருவரும்இயற்கை உணவிற்கு மாறினால் நாளை உலகம் எப்படி மாறும் என்பதை நாம் எண்ணிப்பார்க்கலாம்.பெறுபவர்களை விட கொடுப்பவர்கள் அதிகமானால், உலகில்துன்பமேது.

இயற்கை உணவுக்குமாறுவது எப்படி?

முழு இயற்கை உணவைஉண்டு இன்னும் நம்மில் பெரும்பாலோனோர் பழகவில்லை. எனவே, தீராத வியாதிகள் வந்து உயிருக்கு போராடுபவர்கள் மட்டும், எடுத்த எடுப்பில் முழு இயற்கை உணவுக்கு மாறவேண்டும்.

மற்றவர்கள்சிறிது சிறிதாக ஆரம்பிக்க வேண்டும். நம்மிடம் உள்ள காபி, டீ குடிப்பது, பீடி சிகரெட் குடி, போதை போன்ற பழக்கங்கள் நம்மிடம் சிறிது காலம் மட்டுமே உள்ளவை. அவற்றை மாற்றவேபெரிதும் சிரமப்படுகிறோம். ஆனால் மனிதன் சமைத்துண்ணும் பழக்கத்தை ஆரம்பித்துஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டது. எனவே அவை நம் உடலில் பழக்கமாக பதிந்துவிட்டது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை வரும் போது, சமைத்துண்ணும்பழக்கம் வழிவழியாக வந்த ஒன்றாகும். எனவே இதை மாற்ற மிகுந்த தெளிவும் மன வலிமையும்வேண்டும். முதலில் ஒரு வேளை உண்ணலாம். பிறகு சிறிது சிறிதாக இயற்கை உணவைஅதிகரித்து சமையலுணவை குறைத்து, இயற்கை உணவுக்கு மாற வேண்டும்.

சமையலுணவின் மேல்ஏக்கம் ஏற்படவே செய்யும். அதிலிருந்து மீண்டு வர யோகா, தியானம், மூச்சு பயிற்சி மற்றும் அக்கு பிரஷர் போன்றனஉதவும். இவை யாவும் ஒன்றுக்குகொன்று உதவும் தன்மையன. இயற்கை உணவு, யோகா, தியானத்திற்கு தேவையான மன ஒருமைப்பாட்டையும்உடல் நெகிழ்வு தன்மையையும்(Flexibility)தரும். யோகா மற்றும்தியானம் சமையலுணவின் மேல் ஏக்கம் வராமல் இருக்க உதவும். மன வளக்கலை மன்றங்களில்சொல்லித்தரப்படும் எளிய முறை உடற்பயிற்சிகள் மிகுந்த பயனளிப்பனவாக உள்ளன. முன்புகுறிப்பிட்ட உணவு அட்டவணையில் உள்ள உணவில் கீழிருந்து மேலாக நாம் ஒவ்வொரு உணவையும்விட முயல வேண்டும்.

இயற்கை உணவு அதிகசெலவு பிடிக்குமா?

இயற்கை உணவைஉண்ணுங்கள் என்று யாருக்கேனும் சொன்னால், அவர்கள் கேட்கும்முதல் கேள்வி, அதிக செலவாகுமா? என்பதேயாகும். வெளி விதிஎனப்படும் space Law என்னசொல்கிறதென்றால், எங்கு என்ன பொருள் கிடைக்குமோ, அங்கு அதை சாப்பிடவேண்டும். மனிதர்களைத்தவிர வேறு எந்த மிருகமும் உணவைஇறக்குமதி செய்வதில்லை. அவை வாழும் பகுதியிலேயே கிடைக்கும் உணவை உண்டு ஆரோக்கியமாகவாழ்ந்து வருகிறது. நாமும் அதையே பின்பற்றலாம். நம் நாட்டில் சகாய விலைக்குகிடைக்கும் தேங்காயும், வாழைப்பழமுமே முழுமையான இயற்கை உணவாகும். மற்றபழங்களை அவரவர் வசதிற்கேற்ப வாங்கி உண்ணலாம்.

இயற்கை உணவுக்குமாறிவிட்டால், பால், சர்க்கரை, அரிசி, மளிகைப்பொருட்கள், காப்பி, டீ தூள், கேஸ் தேவைஇருக்காது. முக்கியமாக மருந்து செலவு குறைகிறது. சிறிது நாட்களில் மருந்தின் தேவைஇல்லாமலேயே போகிறது. மன நிலையில் நல்ல மாற்றங்கள் வந்து ஆடம்பர மோகம் குறைந்து, எளிமையான வாழ்வையே மனம் விரும்புகிறது. மேலும் எண்ணைய், சோப்பு, அலங்கார பொருட்கள், ஷாம்பு, கிரீம் போன்றன நாளடைவில் தேவையில்லாமல்போகிறது. சருமம் இயற்கையாகவே பொலிவடைந்து விட்டால், அழகு சாதனப்பொருட்கள் தேவையில்லையே.

இயற்கை உணவைதயார்செய்வது மிகவும் எளிமையான செயலாகும். சமைக்கும் நேரத்தில் கால் பங்கு நேரம்கூட தேவையில்லை. கணவன் மனைவி இருவரும் பணிக்கு செல்லும் குடும்பங்களில், காலை நேர போராட்டம் முற்றாக மாறிவிடும். சமைத்துண்ணும் உணவை விட, இயற்கை உணவுக்கு செலவு குறைவுதான் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள இயலும்.


ஜீவ காருண்யம்:

இறந்த விலங்குகளைஉண்டு, மொபைல் சுடுகாடாக நம் உடலை மாற்றிக் கொண்டுள்ளநிலையில், ஜீவ காருண்யம் என்பது சிரிப்பையே வரவழைக்கும்.ஆனால் இன்று செடி கொடிகளுக்கும் உயிரும், உணர்ச்சியும்உள்ளது என்பது விஞ்ஞானிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் பழ உணவை உண்ணூம்போது எந்த மரத்தையும் அழிப்பதில்லை. கீரைக்காகக் கூட நாம் அந்த செடியையேஅழிக்கிறோம். ஆனால் பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி இயற்கையன்னை நமக்கு தரும் பழங்களை நாம் உண்ண, நாம் அந்த மரத்தை அழிக்க வேண்டியதில்லை. மேலும் நாமும் உண்டுவிட்டு எறியும்கொட்டையினால் ஒரு உயிர் உருவாகிறது. ஆனால் நாம் சமைத்துண்ணும் போது நாம் மூச்சுவிட உபயோக்கும் போது ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடாக மாறி சுற்றுச்சூழலைகெடுப்பதுடன் காற்றில் நம் கண்களுக்கு தெரியாமல் உள்ள எண்ணிலா உயிரினங்களைஅழிக்கிறோம். எனவே உண்மையான வள்ளலாரின் ஜீவ காருண்யம் நாம் பழ உணவை உண்பதிலேயேஉள்ளது.

உலக பிரச்சினைகள்அனைத்துக்கும்
ஒரே தீர்வு:இயற்கை உணவு

இயற்கை உணவு நம்உடலுக்கு என்ன செய்கிறது என்பதை காண்போம். மேலும் அது மனதுக்கு என்ன செய்கிறதுஎன்றும் உலகுக்கு என்ன செய்யும் என்பதையும் காண்போம். நம் உடலும் மனமும்ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. நாம் நன்கு தூங்கி எழுந்து காலையில் மலர்ச்சியுடன்இருப்பதும் பணிகளுக்குப் பிறகு மாலையில் அயர்ச்சியுடன் இருப்பதும் நம் அன்றாடவாழ்வில் நடப்பதாகும். அயர்ச்சியும் அலுப்பும் இருக்கும்போது நாம் எளிதில் கோபம், வெறுப்பு, எரிச்சல் போன்ற உணர்வுகளுக்கு ஆளாவோம். இதனால், நம் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் உள்ள தொடர்பை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

இயற்கை உணவு நம்மன நலனுக்கு என்ன செய்கிறது? முதலில் நம் உடல் நோய்கள் குணமாகத்தொடங்குகின்றன. உடல் நோய்கள் குணமாக, குணமாக நாம்மனதளவில் வலிமை உடையவர்களாக மாறுகிறோம்.

வெறுப்பு à அன்பாகவும்,
காமம் à காதலாகவும்,
பிடிவாதம் à வைராக்கியமாகவும்,
பொறுமையின்மை à நிதானமாகவும்,
கோபம் à சகிப்புத்தன்மையாகவும்,
ஆடம்பரம் à எளிமையாகவும்,
உலக ஆசைகள் à தெய்வீகமாகவும்

மாற்றம்அடைகின்றன. நம் எண்ணங்கள் வலிமை அடைகின்றன. தனி மனிதனுக்கு இத்தனை நன்மைகள்செய்யும் இயற்கையன்னை உலகுக்கு என்ன செய்யும் என்பதையும் காண்போம்.

நாம் அனைவரும்இயற்கை உணவுக்கு மாறிவிட்டால்
1. உலகில் போர், வன்முறை, தீவிரவாதம், இன, மத, சாதி, நாடுகளுக்கிடையேயானமோதல்கள் குறைந்து, பிறகு இல்லாமல் போய்விடும்.
2. மேற்கண்டதுநடந்து விட்டால், பிறகு காவல் துறை, நீதி, சட்டத்துறைகளுக்கு தேவை இருக்காது. எந்தமிருகமும் சட்டம் போட்டு, சட்டப்படி வாழ்வதில்லை.
3. பெண் விடுதலைகிடைக்கும். ஆண்களின் மனநிலையில் ஏற்படும் மாறுதலால் அவர்கள் பெண்களை அடிமை என்றுஎண்ணாமல், அவர்களையும் ஒரு உயிராக கருதி மதிப்பு தருவர்.இல்லறம் நல்லறம் ஆகிவடும். திருமண முறிவுகள் குறைந்து விடும். ஏன் விவாகரத்துகள்இல்லாமல் கூட போய்விடும். பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்து அவர்களின்நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கும் சமையம் தொழிலிலிருந்து விடுதலை கிடைக்கும்.
4. உணவுப்பஞ்சம்: ஆப்பிரிக்க நாடுகள் உணவு பஞ்சத்தால் குழந்தைகள் கூட உயிரிழப்பதைகாண்கிறோம். அதே சமயம் உலகில் உணவில்லாமல் இறப்பவர்களைவிட உணவுண்டு நோயால்இறப்பவர்களே அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. உணவால் ஒரு பக்கமும், உணவில்லாமல் ஒரு பக்கவும் மக்கள் அழிவது இந்த உலகில் நடந்து கொண்டுதான்இருக்கிறது. ஆனால் இயற்கை உணவு உட்கொள்ள ஆரம்பிக்கும் போது, அதிக உணவு தேவையிருப்பது போல் தோன்றும். பிறகு நம் உடல் நலம் அடைந்த பிறகுஉணவின் அளவு பெருமளவு குறைந்து விடுகிறது. சிறிது சிறிதாக குறையும் உணவின் அளவு, 3 (அ) 4 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 2 வேளை என்று வந்து விடும். இது நாம் எந்தஅளவு மன வலிமையுடன் கடைபிடிக்கிறோம் என்பதை பொறுத்தது. நமது உணவின் அளவு குறையக்குறைய நம்முடைய உணவு மற்றவர்களுக்குப் போய்ச் சேரும். ஒருவர் உண்ணும் உணவை மூவர்உண்ணலாம். பிறகு உலகில் உணவுப்பஞ்சம் ஏது? அமெரிக்கா போன்றநாடுகள், பிறர்க்கு கொடுக்க மனமில்லாது, உணவுப் பொருட்களை கடலில் கொட்டும் அவலம் இனி நடக்காது.
5. சுற்றுப்புறசீர்கேடு: நாம் அனைவரும் இயற்கை உணவுக்கு மாறினால், சுற்றுப்புறத்தைபாதுகாக்க சங்கம் அமைத்துப் போராட வேண்டியதில்லை. சுற்றுச் சூழல் தானாகவே தூய்மைஅடைந்து விடும்.
6. பிளாஸ்டிக்:பழங்கலை பேக் செய்ய வேண்டியதில்லை. அப்படியே கடைகளிலிருந்து வாங்கி வந்துபயன்படுத்தலாம். எனவே கேரி பேக்,டின் ஃபுட் போன்றவற்றால்உருவாகும் மக்காத குப்பைகள் முற்றிலும் ஒழிந்து விடும். எனவே மண்ணை விஷமாக்கும்பிளாஸ்டிக்கில் இருந்து உலகுக்கு விடுதலை அளிக்கலாம்.
7. மண் அரிப்பு, வெள்ளம்: நாம் காடுகளை அழிப்பதாலேயே மண் அரிப்பு ஏற்படுகிறது. மரங்கள் போதியஅளவு இல்லாததாலேயே வெள்ளத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. நாம்இயற்கை உணவுக்கு மாறினால், இயற்கை பழ உற்பத்திக்கு விவசாயிகளும்பொதுமக்களும் மாறிவிடுவர். பிறகு மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் தானியஉற்பத்தி செய்யும் வயல்கள் கனிகள் தரும் சோலையாகிவிடும். மண் அரிப்பு, வெள்ளம் தடுக்கப்படும். பிராண வாயு, வளிமண்டலத்தில்அதிகரித்து நமக்கு சுவாசிக்க அதிகமான காற்று கிடைக்கும் சுவாசக் கோளாறுகள்நெருங்காது.
8. புவிவெப்பமடைதல்: இன்று வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் நச்சுக்காற்றினால் உலகம் வெப்பமடைந்து, துருவ பனிக்கட்டிகள் உருகி, உலகம் நீரில் மூழ்கி விடும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவிஞ்ஞானிகள் கூறுகின்றனர். இயற்கை உணவினால் இயற்கையாகவே இதற்கு தீர்வு உண்டாகும்.வீடுகளில் அடுப்பே தேவையில்லை எனும்போது எவ்வளவு எரிபொருள் மிச்சமாகும் என்பதைகற்பனை செய்யுங்கள்.உலகம் சோலைகளானால் வெப்பமாவது தவிர்க்கப்படும். மேலும்சமைக்காததால் பிராணவாயு காக்கப்படுகிறது.
9. நில நடுக்கம்:நிலநடுக்கங்கள், நாம் அணைகளில் தண்ணீர் சேமித்து வைப்பதால்ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நாம் சோலைகளுக்கு மாறிவிட்டால், விவசாயத்திற்கு தண்ணீர் பெருமளவில் தேவைப்படாது. இலைகள் கீழே விழுந்துமக்குவதால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். அதிக நீர் தேவைப்படாது. சிறியதடுப்பணைகளே போதும். இதற்கு வழிகாட்ட இயற்கை விவசாயிகள் பெருகி வருகின்றனர்.
10. இயற்கைவேளாண்மை: தற்போது உரம், மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள்லல் மண்மலடாகி வருகிறது. நாம் உணவுடன் இராசாயனத்தையும் சேர்த்து உண்டு, நம் உடலையும் விஷமாக்கி வருகிறோம். கருவில் இருக்கும் குழந்தைக்குக் கூட நோய்வரும் அளவுக்கு நாம் சுற்றுச் சூழல் கெட்டு விட்டது. ஆனால் நம்மாழ்வார் போன்றஇயற்கை விஞ்ஞானிகள், இயற்கை வித்தால் செலவில்லாமல் லோ பட்ஜெட்முறையில் விவசாயம் செய்யமுடியும் என்றுசாதித்துக் காட்டியுள்ளனர்.


உலகிற்கு அவசர, அவசிய தேவைகள்

தற்போது உலகைஅழிவிலிருந்து காக்க உலகிற்கு அவசர/அவசிய தேவைகள் மூன்று.
1) இயற்கை உணவைபின்பற்றி அறிந்து கொண்டு தானும் பின்பற்றி மற்றவர்களுக்கும் இதை கொண்டு செல்வது.
2) பழ மரங்கள்நட்டு வளர்ப்பது
3) சுற்றுச்சூழல் கெடாமல் இருக்க பெட்ரோல், டீசல், எல்.பிஜிபோன்றவற்றின் பயன்பாட்டைக் குறைத்து சூரிய ஆற்றலை பயன்படுத்துவது. அதற்குரியதொழில்நுட்ப ஆராய்ச்சியில் இறங்குவது. மனிதனின் அத்தியாவசிய தேவையயகிய உணவு, உடை இருப்பிடத்துக்கு இவற்றைச் செய்தாலே போதும். மற்றவை எல்லாம் மனிதனின்பேராசைக்கானவை.
nandri -திருமதி ரதிலோகநாதன்-aarokiyam-anandham.blogspot

தோழன்
உதய நிலா
உதய நிலா

Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum