ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-3)

    Go down

    மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-3) Empty மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-3)

    Post by மருத்துவன் Sun 20 Feb 2011, 5:49 pm

    மரபணு தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு
    (Genetic Engineering Approval Committee)

    மரபணு
    மாற்றப்பட்ட பயிர்களை கண்காணிக்கவும் அவற்றை முறைப்படுத்தவும் மத்திய
    சுற்றுச்சூழல் அமைச்சரவைக்கு கீழ் இயங்கும் ஒரு அமைப்பே, மரபணு
    தொழில்நுட்பத்திற்கான அங்கீகரிப்பு குழு(GEAC).

    இந்தக்குழு, மரபணு
    மாற்றப்பட்ட பயிர்களை சோதித்து அனுமதி அளித்தபின்பே அவற்றை சந்தையில் விற்க
    முடியும். சோதனை முறையாக நான்கு ஆண்டுகள் மரபணு மாற்றப்பட்ட பயிர்வகைகள்
    பயிரிடப்பட்டு அதன் விளைவுகளை ஆராய்ந்து இக்குழு அவற்றுக்கு அனுமதி அளிக்க
    வேண்டும். இதுபோன்ற சோதனைகளை தனியார் நிலங்களில் மேற்கொள்ளலாம் என்ற நிலை
    இந்தியாவில் உள்ளது.

    ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பல
    ஐரோப்பிய யூனியன் நாடுகளில் மரபணு மாற்ற சோதனைகளை சாதாரண விவசாய நிலங்களில்
    சோதனை அடிப்படையில் பயிரிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆய்வுப்பணிக்கென
    ஒதுக்கப்பட்ட நிலங்களில் மட்டுமே இத்தகைய பரிசோதனைகளை நடத்தமுடியும். [You must be registered and logged in to see this image.]

    இந்தியாவிலோ,
    நில உரிமையாளருக்கும், விவசாயிக்குமகூட தெரியாமல் மரபணு மாற்றப்பயிர்கள்
    சோதனை அடிப்படையில் பயிரிடப்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில்
    சோதனைக்கூட எலி, முயலை வைத்து நடைபெறும் பரிசோதனைகள், இந்தியாவி்ல்
    மனிதர்களை வைத்து நடைபெறுகின்றன, அதுவும் அரசின் அனுமதியோடு.

    மரபணு
    மாற்றப்பட்ட பயிர்களை முறைப்படுத்துவதில் ஐரோப்பிய யூனியன் பல கடுமையான
    சட்டங்களை இயற்றியுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட
    பயிர்களை, அவற்றை தயாரிக்கும் நிறுவனத்தின் நிலங்களிலேயே சோதனை
    செய்யவேண்டும் என்ற முறை பின்பற்றப்படுகிறது. மேலும், மரபணு மாற்றப்பட்ட
    உணவு வகைகளை மக்களுக்கு விற்பனை செய்யும்போது மரபணு மாற்றப்பட்டது
    என்ற முத்திரையை (LABELLING) கட்டாயம் இடவேண்டும் என்று அந்நாட்டு சட்டம்
    வலியுறுத்துகிறது. இதன்மூலம் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் குறித்த
    முழுவிபரங்களையும் அறிந்து கொள்ளும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான
    உணவினை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை ஐரோப்பிய நாடுகள்
    வழங்கியுள்ளன. இதுபோன்ற உரிமை இந்தியாவில் வழங்கப்பட வில்லை என்பது
    வேதனைக்குரிய செய்தியாகும்.

    மரபணு மாற்றப்பட்ட பயிர்களை உலக வர்த்தக
    நிறுவனம் ஆதரிப்பதால் இவற்றை தடைசெய்வது உறுப்பு நாடுகளுக்கு இயலாத
    காரியம். மரபணு மாற்றப்பட்ட உணவினால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக்
    கூறி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு வகைகளுக்கு கடந்த
    1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இதை எதிர்த்து அமெரிக்கா, உலக
    வர்த்தக கழகத்தில் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உலக
    வர்ததக கழகம், ஐரோப்பாவின் தடை நடவடிக்கைகள் உலக வர்ததக கழக
    நெறிமுறைகளுக்கு எதிரானது என்று கூறி தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.

    அமெரிக்காவில்
    உற்பத்தியான மரபணு மாற்றப்பயி்ர்களை தடை செய்ய ஐரோப்பிய நாடுகளாலேயே
    முடியவில்லை என்றபோது இந்தியா போன்ற ஏழை நாடுகளின் நிலையை சொல்லத்
    தேவையில்லை.






    தாவர வகைகள் பாதுகாப்பு மற்றும் உழவர்களின் உரிமைக்கான சட்டம் (PROTECTION FOR PLANT VARIETIES AND FARMERS RIGHTS ACT) 2001

    [You must be registered and logged in to see this image.]இச்சட்டத்தின் பெயரிலேயே கூறப்பட்டுள்ளதை[You must be registered and logged in to see this image.]ப்போல
    தாவரவகைகளையும், உழவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று கூறி
    இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தாவரங்களுக்கு அவற்றின் இயல்பான தன்மையில்
    காப்புரிமை வழங்க முடியாத சூழ்நிலையில் அந்த தாவரங்களை பதிவு செய்வதற்காக
    கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், ஏறக்குறைய காப்புரிமை சட்டத்தின் மறு
    வடிவமாகவே உள்ளது.

    [You must be registered and logged in to see this image.]இந்த சட்டத்தின் கீழ் ஒரு தாவரத்தை பதிவு செய்ய, அத்தாவரம் முன்பே தெரிந்த
    எந்த ஒரு தாவரத்தின் குணாதிசயங்களையும் பெற்றிருக்கக் கூடாது. ஒரே ஒரு
    மாறுபட்ட குணாதிசயத்தை அந்த தாவரம் பெற்றிருந்தாலும் இந்த சட்டத்தின் கீழ்
    அந்த தாவரத்தை பதிவு செய்ய முடியும்.

    முன்பே தெரிந்த ஒரு பயி்ர் வகையின் மூலக்கூறை அறிவியல் வளர்ச்சியின்[You must be registered and logged in to see this image.] மூலம் சிறிது மாற்றம் செய்தாலே அதை இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து அந்த தாவரத்தை தனி உடைமை ஆக்கிக்கொள்ளலாம்.

    இந்த
    சட்டத்தின் கீழ் ஒரு தாவரவகையை பதிவு செய்து கொண்டால் 15 ஆண்டுகாலம் அவரே
    அதற்கு முழு உரிமை பெறுகிறார். அவற்றின் உற்பத்தி, விற்பனை போன்றவை அந்த
    உரிமையில் அடங்கும்.



    காப்புரிமை
    சட்டம் போலவே இந்த சட்டத்தின் கீழும் COMPULSORY LICENSING முறை உள்ளது.
    ஆனால் இந்த சட்டம் விதைகளை வணிக நோக்கில் உற்பத்தி செய்யும் BREEDER
    எனப்படும் உற்பத்தியாளர்களுக்கே அதிக பாதுகாப்பு அளிக்கிறது. காப்புரிமை
    சட்டத்தைப்போலவே இந்த சட்டத்திலும் தாவரம் பதிவு செய்யப்பட்டு 3
    ஆண்டுகளுக்கு பிறகே COMPULSORY LICENSING-ல் பதிவு அனுமதிக்கப்படுகிறது.
    மேலும் PLANT BREEDER விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் கூடுதலாக 12 மாத
    அவகாசம் பெற்றுக்கொள்ளலாம். காப்புரிமை சட்டத்தில் உள்ளது போலவே COMPULSORY
    LICENSING பெறுபவர் தாவரத்தை பதிவு செய்தவருக்கு அளி்க்க வேண்டிய
    இழப்பீட்டுத் தொகையை காப்புரிமை பெற்றவரே நிர்ணயம் செய்வார்.



    -மு. வெற்றிச்செல்வன்
    (vetri@lawyer.com)
    நன்றி -http://www.makkal-sattam.org

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-1)
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-2 )
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (பகுதி-4)
    » மாறும் சட்டங்களும், விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்...! (நிறைவு பகுதி )
    » கண்புரை -அறுவை சிகிச்சை இல்லாமல் ஹோமியோவில் மாறும்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum