என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

பெண்களின் நோய்க்கான எளிய மருந்துகள் -ஸ்திரீரோகசிகிச்சைகள்

Go down

பெண்களின் நோய்க்கான எளிய மருந்துகள் -ஸ்திரீரோகசிகிச்சைகள் Empty பெண்களின் நோய்க்கான எளிய மருந்துகள் -ஸ்திரீரோகசிகிச்சைகள்

Post by Admin on Sun 03 Oct 2010, 6:42 pm


ஸ்திரீரோகசிகிச்சைகள்

கருஞ்சீரககியாழம் :- கருஞ்சீரகம், ஓமம், சாதகுப்பை, மூங்கிலிலை, மாவிலிங்கப்பட்டை, பரங்கிச்சக்கை, சுக்கு, திப்பிலி, சித்திரை மூலவேர்ப்பட்டை, வகைக்கு வராகனெடை-1 இவைகளை நறுக்கி ஓர் மட்பானையிலிட்டு 1/2 படி சுத்த ஜலம்விட்டு ஆழாக்காக சுண்டக்காய்ச்சி வடித்து தினம் ஒரு வேளையாக காலையில் மூன்று நாட்கள் கொடுக்க பிரசவித்த ஸ்திரீகட்குண்டான உதிரச்சிக்கல் நீங்கும். மற்றும் இதை சாதாரணமாக மாதவிலக்ககாலங்களில் சூதகஞ் சரிவர வெளிப்படாத ஸ்திரீகட்கும் அச்சமயங்களில்
கொடுத்துவர சூதகத்தை ஒழுங்குபடுத்தும்.

சாமந்திக்கியாழம் :- சீமை சாமந்திப்பூ, சன்னலவங்கப் பட்டை வகைக்கு பலம் 1/2 இவைகளை நறுக்கி 1/2 படி ஜலம் விட்டு ஆழாக்காக சுண்டக்காய்ச்சி வடித்து வேளைக்கு 1/2 ஆழாக்கு விதம் தினம் இரு வேளையாக தனியாகவாவது அல்லது அத்துடன் 5 குன்றி எடை நாயுருவி சாம்பலை சேர்த்தாவது கொடுத்துவர சூதகச்சிக்கல் நீங்கும்.

மூங்கிலிலைக்கியாழம் :- மூங்கிலிலை, வாழையிலை சருகு முள்ளுக்கீரை தண்டு நாயுருவியிலை வகைக்கு 1/2 பலம் வீதஞ்சதைத்து ஓர் பழகின புதுச்சட்டியிலிட்டு 1/2 படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து ஆழாக்காக குடிநீரிட்டு வடித்து இரு வேளையாக பங்கிட்டு காலை மாலை கொடுத்துவரவும். இப்படி மூன்று
நாள்கள் கொடுக்க பிரசவித்தவர்கட்கு காணும் உதிரச்சிக்கல் நீங்கும்.

தும்மட்டிக்காய் மெழுகு :- ஆற்றுத்தும்மட்டிக்காய் சாறு படி- 2 பொரித்த பெருங்காயம் பலம்-2 பொரித்த வெங்காயம் பலம்-1/2 இந்துப்பு கடுகுரோகணி கருஞ்சீரகம் வால்மிளகு வகைக்கு பலம் 1/2 இவ்ற்றுள் தும்மட்டிக்காய்ச்சாறு நீங்கலாக மற்ற சரக்குகளை இடித்து வஸ்திராயஞ்செய்து வைத்துக்கொள்க. பிறகு தும்மட்டிக்காய் சாற்றை ஓர் பழகின புது சட்டியிலிட்டு அடுப்பி
லேற்றி சிறுதீயாக எரித்து பாதிபாகத்திற்குமேல் சுண்டி குழம்பு பதமாக வருஞ்சமயத்தில் வஸ்திரகாயஞ் செய்து வைத்துள்ள சூரணத்தைச் சேர்த்துக் கலக்கி மெழுகுபதத்திற்கு கிண்டி இறக்கவும். இதில் வேளைக்கி குன்றி அளவு வீதம் பனைவெல்லத்தில் வைத்து தினம் ஒரு வேளையாக காலையில் 3-நாள் கொடுக்க சூதகச்சிக்கல் சூதக வயிற்றுவலி, சூதவாயு முதலியன குணமாகும்.

பெருங்காய லேகியம் :- பொரித்த காயம், கிராம்பு, வால் மிளகு, சிற்றரத்தை, கோஷ்டம், அதுமதுரம், இலவங்கப்பட்டை, இலவங்கபத்திரி, ஏலம், செவ்வியம், கண்டுபாரங்கி, சடமாஞ்சில்,
வாய்விளங்கம், கடுஞ்சீரகம், சோம்பு, சதகுப்பை வகைக்குப் பலம்1/2, சுக்கு, மிளகு, திப்பிலி, திப்பிலிமூலம், தாளிசபத்திரி, கசகசா வகைக்குப் பலம்1/4, பரங்கிச்சக்கை பலம்-1, ஓமம் பலம்-21/2,ஜாதிக்காய் பலம்-1/8, இவைகளை இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து வைத்துகொள்க. பின்பு 20-பலம் பனைவெல்லத்தை ஜலம் விட்டுக் கரைத்து வடிக்கட்டி ஓர் கடாயிலிட்டு அடுப்பிலேற்றி எரித்துபாகுபத்தில் முன் தயார்செய்து வைத்துள்ள சூரணத்தைக் கொட்டிக் கிளறி, 5-பலம் நெய் சேர்த்துக் கிண்டி இறக்குக.

இதில் வேளைக்கு அரை தோலா வீதம் தினம் இருவேளையாக கொடுத்துவர பிரவித்த ஸ்திரீகளுக்கு காணும் உதிரச்சிக்கலை நீக்கி தகத் தடையினால் ஏற்படக்கூடிய நோய்கள் யாவும் வராதபடி தடுக்கும்.

மூசாம்பர மெழுகு :- சீமை மூசாம்பரம் பலம்-7, வாலேந்திர போலம் பலம்-4, பழையவெல்லம் பலம்-4, குங்குமப்பூ பலம்-2, பெருங்காயம் பலம்-2, கருப்பூரம் பலம்-1, இவைகளை முறைப்படிக்
கல்வத்திலிட்டுத் துளி துளியாகத் தேன்விட்டு மெழுகுபதத்திற்கு அரைத்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு தேற்றாங்கொட்டைப் பிரமாணம் தினம் இருவேளையாக பனைவெல்லத்தில் கொடுத்து, உடனே சோம்புத்தீநீர் அல்லது சோம்புகுடிநீர் 1/2 முதல் 1-அவுன்சு கொடுக்கவும். இப்படி மூன்றுநாட்கள் அருந்த பிரவித்த ஸ்திரீ கட்கு காணும் சூதகச் சிக்கலை நீக்கி கிரமமாக வெளிப்படுத்தும். மற்றும் இது சூதக சிக்கல், சூதக வயிற்றுவலி, சூதகவாயு, சூதககட்டி
முதலியவைகளையும் குணப்படுத்தும்.

சதாப்பிலைச் சூரணம் :- நிழலிலுலர்த்திய சதாப்பிலை, சீரகம், கருஞ்சீரகம், சதகுப்பை, சன்னலவங்கப்பட்டை, அதிமதுரம் வகைக்கு பலம்-1, தனியா பலம்-6, இவைகளை இடித்துச் சூரணித்து வைத்துக்கொண்டு வேளைக்குத் திரிகடிபிரமாணம் சமன் கற்கண்டுத்தூள் சேர்த்து தினம் இரண்டு அல்லது மூன்றுவேளை வீதம் கொடுத்துவர பெண்களுக்கு காணும் சூதகச்சிக்கல், சூதக வயிற்றுவலி முதலியன குணமாகும்.

பட்டுக்கறுப்பு :- வெள்ளைப்பாஷாணம் பலம் 1/2 இலிங்கம் பலம்-1, இரசம் பலம்-1, கந்தகம் பலம் 1/2, பூரம் பலம்1/2 வீரம் பலம் 1/2, காந்தம் பலம் 1/2, நாபி பலம் 1/2, கிராம்பு பலம் 1/2 இவைகளை முறைப்படி சுத்தி செய்து கல்வத்திலிட்டு பொடித்துச் சிற்றாமணக்கெண்ணெயைத் துளித்துளியாக விட்டு அரைத்து மெழுகு பதத்தில் உருட்டி எடுத்து அரக்கு பட்டுத்துணியைச் சுற்றி பட்டுநூலால் கட்டி அதன் மீது சித்திரமூலவேர்ப்பட்டையை நீர்விட்டு கட்டிபதமாக அரைத்தெடுத்த கற்க்கத்தை கவசித்து,சற்று சுரம் வரள உலர்த்தி ஓர் சட்டியில் பாதி மணல் கொட்டி நடுவில் மருந்தை வைத்து மேலும் மணல் கொட்டி மேலகல் மூடி சீலை மண் செய்து 50-60 விறட்டியில் புடமிட்டு ஆறின பின்பு கவசத்தை நீக்கி மருந்தை மட்டும் பொடித்துக் கொள்க. இதில் வேளைக்கு 1/2 முதல் 1 குன்றி எடைவீதம் தினம் இரு வேளையாக தேன் அல்லது தக்க அனுபானங்களில் கொடுத்து வர சூதகக்கட்டு, சூதக வாயு, சூதக வலி, சூத்கச்சன்னி, வாதரோகங்கள் முதலியன குணமாகும்.

சுழ்ற்சிமாத்திரை :-சுழற்ச்சி விதை சூரணம் பலம்-1 தாளித்த கற்க்கண்ணத்தூள் பலம்-1 இவையிரண்டையும் கல்வத்திலிட்டு சிறிது வெந்நீர் தெளித்து அரைத்து சிறு தேத்தாங்கொட்டையளவு மாத்திரை செய்து நிழலுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளையாக கொடுத்து வர பெண்களுக்கு மாதாந்த ருது காலத்தில் காணும் சூதக வயிற்றுவலி குணமாகும். மற்றும் இது ஆண்களுக்கு காணும் அண்டவாயு அண்டவீக்கம், முதலியவைகட்கும் பயன் தரும்.

அப்ளாகாரபற்ப்பம் :- அப்ளாகாரத்தை நீர் விட்டு கரைத்து வடிகட்டி அடுப்பிலேற்றி எரித்து குழம்பு பதமாக காய்ச்சி வெய்யிலில் வைத்து உலர்ந்தது பொடித்துக்கொள்க. இதில் வேளைக்கு 1-2 சிட்டிகை பிரமாணம் எடுத்து ஓர் எலுமிச்சம் பழத்தை பாதியாக அரிந்து ஓர் பாதியில் வைத்து மென்று திண்ணும் படிச்செய்யவும். இப்படி ஒருவேளை வீதம் மூன்று நாள் மாத விலக்கு வருஞ்சமயத்தில் கொடுத்துவர பெண்களுக்கு காணும் சூதக வயிற்றுவலி குணமாகி சந்தான விரித்தியும் ஏற்படும்.

மூசாம்பரமாத்திரை :- மூசாம்பரம், பொரித்தவெங்காயம் பொரித்த காயம், ன்னபேதிச்செந்தூரம், வகைக்கு சமனெடை யாக எடுத்து கல்வத்திலிட்டு கற்றாழைச்சாறு விட்டு அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தவும். இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இருவேளை கொடுத்துவர சூதக வயிற்றுவலி குணமாகும்.

ஜீரகாதி யரிஷ்டம் :- சீரகம் பலம்-8, கருஞ்சீரகம் பலம்-8, இவைகளை நான்குபடி நீர்விட்டு ஒருபடியாக சுண்டக் கியாழம் காய்ச்சி வடித்து ஆறினபின்பு அதில் 24-பலம் வெல்லத்தைக் கரைத்து அதில் காட்டாத்திப்பூ பலம்-1 1/4, சுக்கு வராகனெடை-1 1/2 ஜாதிக்காய், கோரைக்கிழங்கு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத் திரி, ஏலம், சிறுநாகப்பூ, ஓமம், இலவங்கம் வகைக்கு வராக னெடை-3/4 வீதம் இடித்த சூரணத்தைப் போட்டுக் கலக்கி ஓர் மட் பாண்டத்திலிட்டு வாய்மூடி சீலைசெய்து ஓர் மாதம் அப்படியே வைத்துவிடுக. பின்பு அதை வடித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 1/4 முதல் 1/2 அவுன்சு வீதம் தினம் 2 அல்லது 3 வேளை சிறிது நீருடன் கலந்து உணவிற்கு பின்பு அருந்திவரச் செய்யவும். இதை பிரசவித்த ஸ்திரீகட்கு வழங்கிவர பிரசவத்திற்குப்பின் காணும் சூதகத் தடை, வயிற்றுவலி, சுரம், முதலிய வராமல் தடுப்பதுடன் சூதகத்தை கிரமப்படுத்தி கெர்ப்பப்பைக்கு வலிவையுந் தரும்.

கலிங்காதி எண்ணெய் :- வரிக்கும் மட்டிக்காய் சாறு படி-1, வெள்ளை வெங்காயச்சாறு படி-1 எலுபிச்சம் பழச்சாறு படி-1, மலை வேப்பிலைச்சாறு படி-1, ஆமணக்கெண்ணெய் படி-1 இவைகளை ஓர் தைலபாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வண் டல் மெழுகுபதம் வருஞ்சமயத்தில் வடித்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1/4 முதல் 1/2 அவுன்சு வீதம் தேகத்திடத்திற்கு தக்க படி தினம் ஒரு வேளை காலையில் நீராகாரத்தில் கலந்து மாதாந்த ருதுகாலமாகிய மூன்று நாட்கள் கொடுத்துவரவும். இதனால் பேதி யாகும். ஒருகால் பேதி அதிகமாயின் அளவை சிறிது குறைத்துக் கொள்க பேதியாகவிடில் அளவைச் சிறிது அதிகப்படுத்திகொள் ளலாம். மருந்து சாப்பிடும் போது மூன்று நாட்களும் உப்பில்லா பத்தியமாய் இருந்து நான்காம் நாள் இச்சாபத்தியமாய் இருந்து பிற்கு ஸ்நானஞ் செய்வித்து எல்லாங் கூட்டவும். இப்படி 2-3 மாதாந்த ருது காலங்களுக்கு சாப்பிட்டு வரும்படிச் செய்ய ருது காலத்தில் காணும் வயிற்றுவலி, சூதககட்டி, ரத்தக்குன்மம், மலட்டுப் புழுவினால் ஏற்பட்ட உபதிரவம் முதலியன யாவும் நீங்குவ துடன் மலடுரோகமும் குணமாகும். ஆதிமலடு நீங்கலாக மற்ற மலடிகள் யாவுங் தீரும்.

பெரும்பாட்டிற்குச் சிகிச்சை :- அத்திப்பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி மோர் தெளித்து இடித்துப் பிழிந்தெடுத்த சாற்றில் வேளைக்கு 2-3 அவுன்சு வீதம் தினம் 2 அல்லது 3 வேளை யாக கொடுத்துவர பெரும்பாடு நீங்கும். நாவல்பட்டையை இடித்து சூரணித்து 1/2 தோலா எடை எடுத்து, அரை ஆழாக்கு கருங்குறுவை யரிசி மாவுடன் சேர்த்து ஜலம் தெளித்து பிசைந்து பிட்டலியலாக செய்து சர்க்கரை நெய் கூட்டிக்கலந்து அருந்திவர பெரும்பாடு சீதபேதி முதலியன குணமாகும்.

ஒருபலம் ஓதியபட்டயை சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு அரை படி ஜலம் சேர்த்து அடுப்பிலேற்றி எரித்து ஆழாக்காக சுண்டக் காய்ச்சி வடித்து வேளைக்கு இ அவுன்சு விதம் தினம் மூன்று வேளையாக கொடுத்துவர பெரும்பாடு குணமாகும்.

வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்தாவது அல்லது வாழைப் பூவைச் சதைத்து நீர்விட்டு குடிநீர் செய்தாவது எடுத்து அத்து டன் பசுமோர் கொடுத்து வர பெண்களுக்கு காணும் பெரும்பாடு வயிற்றுவலி முதலியனகுணமாகும்.

கற்றாழைச் சோற்றுடன் பசுவெண்ணெய் கூட்டி அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவு எடுத்து அதில் 5 குன்றி எடை பொரித்த படிகாரத்தூளைக் கூட்டித் தினமிரு வேளையாக கொடுத்து வர பெரும்பாடு வயிற்றுவலி முதலியனகுணமாகும்.

பூங்காவிச்செந்தூரம் :- சுத்தி செய்த பூங்காவி பலம்-1 பொரித்த படிகாரம் பலம்-1 இவைகளிரண்டையும் கல்வத்திலிட்டு அரைத்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 5 குன்றி எடை வீதம் தினம் இரண்டு அல்லது மூன்று வேளை வீதம் வெண்ணெய்யில் கொடுத்துவர பெரும்பாடு இரத்தபேதி, இரத்தமூத்திரம் முதலியன
குணமாகும்.

அயக்கறுப்பு :- கருவேலம் பிஞ்சுகளை இடித்துச் சாற பிழிந்து அதில் சுத்தி செய்த அயப்பொடியைப் போட்டு பிசறி அப்படியே ஐந்தாறு மாதங்கள் விட்டுவைத்து கல்வத்திலிட்டு ஒன்றாய் அரைத்து மெல்லிய சீலையில் வஸ்திராயஞ்செய்து வைத்துக் கொள்க. இது கருப்பாக இருக்கும். இதில் வேளைக்கு குன்றி எடை வீதம் தினம் இருவேளையாக நெய்யில் கொடுத்து வர பெரும்பாடு குணமாகும்.

கொம்பரக்காதிர் குடிநீர் :- கொம்பரக்குத்தூள் பலம்-1 லோத்திரப்பட்டை வராகனெடை 1/2 இவைகளை ஓர் மெல்லிய சீலை யில் முடிந்து ஓர் பாண்டத்திலிட்டு ஆழாக்கு கழுநீர் சேர்த்து
அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து நாலிலொன்றாக குடிநீரிட்டு கீழிறக்கி ஆறின பின்பு அரக்கு முடிச்சியை பிசைந்து பிழிந்தெரிந்து விட்டு குடிநீரை வடித்து வைத்து கொள்க. இதில் வேளைக்கு
1/2 அவுன்சு விதம் எடுத்து அத்துடன் இரண்டு வராகனெடை கற்கண்டு தூள் கூட்டித் தினம் இரு வேளையாக கொடுத்து வர பெரும்பாடு குணமாகும்.

நாவல் கிருதம் :- அத்திப்பட்டை, நாவல்ப்பட்டை, ஒதியம் பட்டை வகைக்கு பலம்-10, நெல்லிவற்றல் பலம்-5, இவைகளை நறுக்கி ஓர் பாண்டத்திலிட்டு 6-படி ஜலம்விட்டு 1/2 படியாகச் சுண்டக்காய்ச்சி வடித்து அதில் கரும்புச்சாறு ஆழாக்கு, எலுமிச்சம் பழச்சாறு ஆழாக்கு, நல்லெண்ணெய் படி-1/4, பசுநெய் படி-1/4 விட்டுக் கலக்கி தாளிசப்பத்திரி, ஏலம், கிராம்பு, ஜாதிக்காய், அதிமதுரம் சிறுநாகப்பூ, நிலபனங்கிழங்கு வகைக்கு வராகனெடை-1/2, பால்
விட்டரைத்து கற்கமாக்கி முன் திரவத்தில் சேர்த்து கரைத்து அடுப்பிலேற்றி சிறுதீயாக எரித்து வண்டல் மெழுகுபதம் வந்து நெய் பிரியுஞ் சமயத்தில் இறக்கி ஆறினபின்பு வடித்து வைத்துக்
கொள்க. இதில் வேளைக்கு 2-தேக்கரண்டி வீதம் தினம் இருவேளை கற்கண்டுதூள் சேர்த்து அருந்தும்படி செய்துவர பெரும்பாடு, வெள்ளை, வெட்டை முதலியன குணமாகும்.

பருத்திக் கிருதம் :- ஒரு படி பருத்திக்கொட்டையை ஓர் இரவு நீரில் ஊறப்போட்டு மறுநாள் உரலிலிட்டு இடித்துக் கல்லுரலி லிட்டு ஆட்டிப் பிழிந்தெடுத்து வடிகட்டிய பருத்திப்பால் படி-1, செவ்விள நீர் படி-1, பசுவின் பால் படி-1, பசுவின் நெய் படி-1, இவை கலை ஓர் லப்பாண்டத்திலிட்டு, அதில் அதிமதுரம், சண்பக மொட்டு, சிறுநாகப்பூ, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, கிராம்பு, கோஷ்டம், நெல்லிவற்றல், செங்கழுநீர்கிழங்கு வகைக்கு கழஞ்சு இரண்டு வீதம் இடித்து சூரணித்து பால்விட்டரைத்துக் கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகுபதம்
வருஞ் சமயத்தில் கீழிறக்கி ஆறினபின்பு வடித்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு இரண்டு தேக்கரண்டு வீதம் தினம் இருவேளை யாகச் சிறிது கற்கண்டுத்தூள் சேர்த்துக் கொடுத்துவர வெள்ளை, பெரும்பாடு, வெட்டை முதலிய உஷ்ணத்தினால் பிறந்த நோய்கள் யாவுந் தீருவதுடன் உடலுக்கு பலத்தையும் தரும்.

பாவன பஞ்சாங்கலத் தைலம் :- சிற்றாமணக்கு கொட்டை களை முன்நாள் வடித்த நீராகாரத்தில் ஓர் நாள் ஊறவைத்து மறுநாள் கழுவியுலர்த்தி, கற்றாழை சாற்றில் ஓர் நாள் ஊறவைத்து மறுநாள் அப்படியே கொதிக்கவைத்து வெந்தபின்பு கழுவியுலர்த்தி இடித்து ஓர் தைலப்பாண்டத்திலிட்டு, இதற்கு நான்கு பங்கு ஓடு முதிராத செவ்விளநீரை விட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்துபெருங் கொதியடங்கி தைலம் மேலே மிதக்கும் பக்குவத்தில் தைலத்தை வடித்து வைத்துக்கொள்க.

இதில் வேளைக்கு 1/4முதல்1/2அவுன்சு வீதம்தினம் ஒரு வேளையாக காலையில் மட்டும் அருந்திவர சப்த தாதுக்களைப் பற்றிய வெட்டை, கணச்சூடு, கர்ப்பச்சூடு, நீரெரிச்சல், சரீர உலரல், மலா வர்த்த வாதம், மருந்துகளின் உஷ்ணம், மலச்சிக்கல் முதலியன குணமாகும். மேலும் இதை கர்ப்பந் தரித்தமுதல் மாதந்தொடங்கி ஒன்பது மாதம் வரையில் (வெய்யில் காலத்தில்) கர்பஸ்திரீகள் அதிகாலையில் 1/2 பலம் வீதமும், இரவு படுக்கைக்கு போகும் போது 1/2 பலம் வீதமும்,அருந்திவர எத்தகைய நோயும் வராமல் தடுத்து நல்ல அழகும் அறிவுள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கச்செய்யும்.

க்ருப்ப விருத்தி எண்ணெய் :- சிற்றாமணக்கெண்ணெய் வீசை -1, நிலப்பனங்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, சத்திசாரணைக் கிழங்கு, மெருகன்கிழங்கு வகைக்கு 1, வெங்காயம் பலம்-5 தோல்சீவிகழுவிய குமரிச்சோறு பலம்-5, முடக்கத்தானிலை பலம்-5. இவற்றுள் முதலில் குமரிச்சோற்றையும், கிழங்கு வர்த்தங்களையும், சிறு துண்டுகளாக நறுக்கி எண்ணெய்யிலிட்டு சிறு தீயாலெரித்து, அவை சிவந்து வரும்போது வெங்காயத்தையும், முடக்கத் தானிலையும் அரிந்துப்போட்டு வெங்காயஞ்சிவந்து வந்த பதத்தில் கீழிறக்கி ஆறினபின்பு வடித்து வைத்துக் கொள்க.

இந்த எண்ணெய்யில் வேளைக்கு 2-3 தோலா எடை வீதம் தேகத்திடத்திற்கு ஏற்றவாறு தினம் ஒரு வேளை காலையில் மட்டும் அருந்திவர கர்ப்பஸ்திரீகட்கு காணும் மலச்சிக்கல்,நீர்சுருக்கு, வாயூபத்திரவம், கைகாலசதி, மேகத்தினால் சிசு சிதைதல் முதலிய குற்றங்கள் நீங்கி, நல்ல அழகுள்ள குழந்தைகள் பிணியொன்றுமின்றி பிறக்கும். இதை கர்ப்பஸ்திரீகள் முதல் மாதம் முதல் ஏழு மாதம் வரையில் ஒவ்வொரு மாதமும் மும்மூன்று முறை அரிந்துதல் நன்று. மருந்து கொள்ளும் தினத்தில் மட்டும் புளி நீக்கி இச்சாபத்தியமாக இருந்து வருதல் வேண்டும்.

குமரிலேகியம் :- மேல் தோல் சீவி நன்கு கழுவியெடுத்த சோற்றுக்கற்றாழை விசை-1, சீனாக்கற்கண்டு விசை-1, பசுவின் பால் படி1/2 8பலம் நன்னாரியை ஒரு படி ஜலத்தில் போட்டு ஆழாக்காக காய்ச்சி வடித்த கியாழம், 8 பலம் கசகசாவை ஜலம் விட்டரைத்து பிழிந்த பால் இவைகளை ஓர் கடாயிலிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து கற்றாழை நீர் சுண்டி பொன்னிறமாயும், சர்க்கரையானது பாகுபதமா கியும், வரும்சமயத்தில் சீமை முள்ளிவிதை சப்ஜாவிதை, சன்னலவங்கப் பட்டை, சீரகம், வால்மிளகு ஜாதிக்காய் வகைக்கு பலம் 1 வீதம் இடித்துச் சூரணித்து 10 பலம் நெய் விட்டு கீழிறக்கி ஆறின பின்பு கல்வத்திலிட்டு நெய் சேர்த்து இடித்து வைத்துக் கொள்க.

இதில் வேளைக்கு 1/2 தோலா வீதம் தினம் இரு வேளையாக இருபது நாள் அருந்த வெட்டைச்சூடும். அதனால் லுண்டான நோய்களும் தீரும். இதனைப் பெண்கள் அருந்திவர கருப்பாசயம் பலப்படு மாதவிடாயிலுண்டான பற்பல பிணிகள் நீங்கி சந்தான பாக்கியம் உண்டாகும்.

சுகுமார கிருதம் :- சத்திச்சாட்டரனை 12 1/2பலம், அமுக்கராக் கிழங்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, முதியார்கூந்தல், ஆமணக்கு வேர், கரும்புவேர், பேய்கரும்புவேர், நாணல்வேர், குசதர்ப்பை வகைக்கு பலம்10, பேராமல்லி, சிற்றாமல்லி, கறிமுள்ளி, கண்டங்கத்திரி, நெருஞ்சில், வில்வம், முன்னை, வாகை, நிலைக்குமிழ், பாதரி இவைகளின் மூலம் வகைக்குப் பலம்-1 இவைகளைத் தட்டிப்போட்டு 256 சேர் நீர்விட்டு 32 படியாக குடிநீரிட்டு வடித்து அதில் சிற்றாமணக்கு நெய் 4-சேர், பசுநெய் 8-சேர், பசும் பால் 8-சேர், திப்பிலி, திப்பிலிமூலம், அதிமதுரம், இந்துப்பு, திராட்சை, ஓமம், சுக்கு வகைக்கு இரண்டு பலம் வீதம் சூரணித்து பால் விட்டரைத்த கற்கம் முதலியவைகளைச் சேர்த்து முறைப்படி அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து கிருதபதமாக காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் தினம் இருவேளையாக பெண்கள் அருந்திவர கருப்பையைப்பற்றிய பல நோய்களையும் குணப்படுத்தி சந்தான விருத்தியை உண்டாக்கும். மற்றும் கருப்பையின் பலவீனம், அதனாலேற்படும் கரு அழிவு முதலியவைகளையும் தடுக்கும்.


Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum