என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

சந்நிபாத சுர சிகிச்சைகள்

Go down

சந்நிபாத சுர சிகிச்சைகள் Empty சந்நிபாத சுர சிகிச்சைகள்

Post by Admin on Sun 03 Oct 2010, 7:16 pm

சந்நிபாத சுர சிகிச்சைகள்

சந்நிபாத சிகிச்சை

சந்நிபாத தினப் பிரமாணங்கள் :- சந்திகசந்நிக்கு 7-நாள்,அந்தகசந்நிக்கு 10-நாள், ருக்தாஹசந்நிக்கு 20-நாள், சித்த விப்ரம சந்நிக்கு 25-நாட்கள் அல்லது 7-நாட்கள், கண்டகுப்ஜ சந்நிக்கு 3-நாட்கள், கர்ணிகசந்நிக்கு 90-நாட்கள், புக்னகேந்திர சந்நிக்கு 8-நாட்கள், ரக்தோஷ்டக சந்நிக்கு 10-நாட்கள், பிரலாப சந்நிக்கு 14-நாட்கள், ஜிம்மிகசந்நிக்கு 16-நாட்கள், அபிக்ஞாச சந்நிக்கு 15-நாட்கள் இந்தப்பிரகாரம் சந்நிபாதங்களின் பிரமாணங்களைத்தெரிந்துகொள்ள வேட்டியது.

தற்காலத்தில் 3, 5, 7, 10, 12, 21 இந்த நாடகள் கடந்தால் சந்நிபாதங்கள் சாத்தியமென்று அறியவேண்டியது.

சந்நிபாதத்தில் 7, 14, 9, 18, 11, 22 இந்த நாட்களில் மேற் படி சந்நிபாதங்கள் விடுகிறதற்கும் அல்லது கொன்றுவிடுகிறதற்கும் பிரமாண நாட்களென்று அறியவேண்டியது.

சந்நிபாதசுரத்தால் வாதம் பிரகோபித்து தாதுபாகமடைந்திருந்தால் 10-நாட்க ளென்றும், பித்தபிரகோபத்தில் தாதுபாக மடைந்திருந்தால் 12- நாட்க ளென்றும், கபபிரகோபத்தில் தாது பாகமடைந்திருந்தால் 7-நாட்க ளென்றும் இவைகள் தான் மரண பிரமாண நாட்க ளென்று அறியவேண்டியது.

இப்படியே வாதபித்த கபபிரகோபத்தில் மலபாகமடைந்து மேற்கூறியபடி முறையே வாதத்தில்-10, பித்தத்தில்-12, கபத்தில்-7 நாட்கள் கடந்தால் ஜீவிப்பானென்று அறியவேண்டியது.

தாதுபாக லக்ஷணம் :- தூக்கம்பிடியாமை, மாரடைப்பு, மல மூத்திரபந்தம், சரீ ரஜடத்துவம், அருசி, எதிலும் இச்சையில்லாமை பலயீனம் இந்த லக்ஷணங்களுடையது தாதுபாகமென்று அறிய வேண்டியது.

மலபாக லக்ஷணம் :- மேற்கூறிய பாககுணங்களுக்கு மாறாக யிருந்தல் அதாவது அனுகூலத்திற்குவருதல், சுரம், தேகம் இவை கள் இலேசாயிருக்குதல், இந்திரியங்கள் சுகமாயுரிக்குதல் இந்த லக்ஷணங்களுடையது மலபாகமென்று அறியவேண்டியது.

சந்திகசந்நிக்கு கியாழம் :- பேராமுட்டி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், சித்தரத்தை, பெருங்குமிழி இவைகள் சம எடை கியாழம்வைத்து கொடுத்தால் சந்திகசந்நி நீங்கும்.

அந்தகசந்நிபாத கியாழம் :- சித்திரமூலம், நெரிஞ்சல், நொச்சி, பேய்ப்புடல், செவ்வியம், திப்பிலிமூலம், திரிகடுகு, கடுகு இதை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் அந்தகசந்நி நீங்கும்.

ருக்தாஹசந்நிபாத கியாழம் :- கடுவிருஷம், வெள்ளை உப்பிலாங்கொடி, கருப்பு உப்பிலாங்கொடி, திப்பிலிமூலம், சித்திரமூலம், பர்ப்பாடகம், சுக்கு இவை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் ருக்தாஹ சந்நிபாதம் தீரும்.

சித்தவிப்பரமசந்நி கியாழம் :- நொச்சி, முள்ளங்கத்திரிபழ விரை, மிளகு, வெங்காயம், திப்பிலி, கரசனாங்கணி, சுக்கு இவை சமஎடை கியாழம்காய்ச்சி கொடுத்தால் சித்தவிப்பரமசந்நி நீங்கும்.

சீதாங்கசந்நிக்கு கியாழம் :- பஞ்சகோலங்கள், திரிகடுகு, கற்றாழை, பேய்ப்புடல், பற்பாடகம் இவை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் சீதாங்கசந்நி நீங்கும்.

தாந்திரிகசந்நி கியாழம் :- பஞ்சகோலங்கள், அமுக்கிறாகிழங்கு, குங்கிலியம் இவைகளை சமஎடை கியாழம்காய்ச்சி தூபம் போட்டு கொடுத்தால் தாந்திரிகசந்நி நீங்கும்.

கண்டகுப்ஜசந்நி கியாழம் :- வில்வவேர், பெருங்குமிழ், முன்னை பேய்ப்புடல், செவ்வியம், பர்ப்பாடகம், கண்டங்கத்திரி, சுக்கு இவை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் கண்டகுப்ஜசந்நி நீங்கும்.

கர்ணிகசந்நி கியாழம் :- சிற்றாமுட்டி, பேராமுட்டி, நாகமுட்டி, திரிகடுகு, கண்டங்கத்திரி, சித்திரமூலம், திப்பிலிமூலம், பாலை, எருக்கன்வேர் இவைகள் சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் கர்ணிகசந்நி நீங்கும்.

புக்னநேத்திர சந்நிகியாழம் :- நெரிஞ்சில், நொச்சி, திப்பிலி மூலம், கோரைக்கிழங்கு, பர்ப்பாடகம், சுக்கு, எருக்கன்வேர்,இவைகள் சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் புக்னநேத்திர சந்நி நீங்கும்.

ரக்தோஷ்ட சந்நிகியாழம் :- திரிபலை, பர்ப்பாடகம், பேய்ப் புடல், சித்திரமூலம், பாதிரி, சுக்கு, எருக்கு இவைகளை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் ரக்தோஷ்ட சந்நிபாதம் நீங்கும்.

பிரலாப சந்நிகியாழம் :- அங்கோலம், சித்திரமூலம், மரமஞ்சள், பேய்ப்புடல், சுக்கு, சீந்தில்கொடி, திப்பிலிமூலம், இவைகளை சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் பிரலாப சந்நி நீங்கும்.

ஜிம்மிக சந்நிகியாழம் :- வெள்ளை உப்பிலாங்கிழங்கு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, பேராமுட்டி, சிற்றாமுட்டி, நாகமுட்டி, இவைகளை சமஎடை கியாழம்வைத்து அந்த கியாழத்தில் திப்பிலி சூரணம் போட்டுக் கொடுத்தால் ஜிம்மிக சந்நிநிவர்த்தியாகும்.

அபிந்நியாச சந்நிகியாழம் :- வெள்ளை உப்பிலாங்கொடி, கரும் உப்பிலாங்கொடி, கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, பேராமுட்டி, சிற்றாமுட்டி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், வசம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், செவ்வியம், சித்திரமூலம், சுக்கு இவைகள் சமஎடை கியாழம்வைத்து கொடுத்தால் அபிந்நியாச சந்நிபாதம் நிவர்த்தியாகும்.

பதின்மூன்று சந்நிகளுக்கு கியாழம் :- திப்பிலி, முன்னைவேர், நிலவேம்பு, வசம்பு, ஓமம், சுக்கு, பேய்ப்புடல், பற்பாடகம், இவைகளை சமஎடையாக கியாழம்வைத்து கொடுத்தால் 13-வித சந்நிகளும் நீங்கும்.

தசமூல கியாழம் :- பேராமுட்டிவேர், முன்னைவேர், கண்டங்கத்திரிவேர், முள்ளங்கத்திரிவேர், பெருங்குமிழிவேர், வில்வவேர், பாதிரிவேர், பெரும்வாகைவேர்,சிற்றாமல்லிவேர், நிலகடம்பு,
சுக்கு, இவைகளை சமஎடையாக கியாழம்வைத்து கொடுத்தால் சகல சந்நிகளும் நீங்கும்.

சந்திகசந்நிக்கு பூதபைரவ ரசம் :- பாதரசம், கெந்தி, தாம்பிர பஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் இரண்டுஜாமம் அரைத்து வஜ்ஜிர மூசையில் வைத்து வாலுகாயந்திரத்தில் ஒருநாள் எரித்து பூனை, நரி இவைகளது பிச்சினால் இரண்டுஜாமம் அரைத்து அரைமுதல் ஒரு குன்றிஎடை அனு
பான விசேஷத்தில் கொடிக்க சந்திகசந்நி நீங்கும்.பத்தியம், தயிர்சாதம் சாப்பிட்டு தாகத்திற்கு இளநீர் குடிக்க
வேண்டியது.

அந்தகசந்நிக்கு விஜயபைரவ ரசம் :- சுத்திசெய்த ரசம்,நாபி, வங்கபஸ்பம், நாகபஸ்பம், அப்பிரகபஸ்பம், இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு திரிகடுகு கியாழத்தால் ஒரு நாள் அரைத்து வஜ்ரமூசையில் வைத்து வாலுகாயத்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து பெண்நாய் பித்தத்தால் அரைத்து குன்றி
பிரமாணம் இள்நீரில் உட்கொண்டால் அந்தகசந்தி தீரும்.இச்சாபத்தியம்.

ருத்தாஹசந்நிக்கு சங்கரபைரவ ரசம் :- தாம்பிரபஸ்பம்,லோஹபஸ்பம், சக்திஹாஷாரம், யாவாக்ஷ¡ரம், சர்ஜஹாக்ஷ¡ரம், பாதரசம் இவைகளை சுத்திசெய்து சமஎடை கல்வத்திலிட்டு பஞ்சலோக கியாழத்தால் ஒரு நாள் அரைத்து இந்த கியாழத்திலேயே தோலாயந்திரத்தில் ஒரு சாமம் எரித்து கோழி பிச்சியில் அரைத்து குன்றி எடை திப்பிலி சூரணம் தேன், இந்த அனுபானத்தால் கொடுத்தால் ருத்தாஹசந்நி நீங்கும்.

சித்தவிப்பிரமசந்நிக்கு மதனபைரவ ரசம் :- சுத்தி செய்த ரசம், மனோசிலை, கெந்தி, சைந்தவலவணம், தாம்பிரபஸ்பம், இவை சமஎடை கல்வத்திலிட்டு முள்ளங்கத்திரி பழச்சாற்றில் அரைத்து குளிகை
செய்து வஜ்ரமூசையில் வைத்து பூப்புடமிட்டு, ஆறிய பிறகு எடுத்து பசுவின் பித்தாத்தால் அரைத்து குன்றி பிரமாணம் இள்நீரிலாவது அல்லது திரிகடுகு கியாழத்திலாவது கொடுத்தால் சித்த விப்பிரம சந்நி நீங்கும். பத்தியம் தயிர்சாதம் கொடுத்தல் வேண்டும்.

சீதாங்கசந்நிக்கு ஆனந்தபைரவரசம் :- சுத்திசெய்த வெங்காரம், லிங்கம், கெந்தி, பாதரசம், தாளகம், லோகபஸ்பம், வங்க பஸ்பம், தாம்பிரபஸ்பம், ஈயபஸ்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு திரிபலைக்கியாழத்தால் அரைத்து பற்பாடக கியாழத்தால் தோலாயந்திரத்தில் ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து வாலுகாயந்திரத்தில் ஒருநாள் எரித்து கழுதை பித்தத்தில் அரைத்து குன்றி எடை தேனில் கொடுத்தால் தாந்திரிக சந்நி நீங்கும்.

கண்டகுப்ஜசந்நிக்கு சுவச்சந்த பைரவ ரசம் :- கெந்தி, பாதரசம், வெங்காரம், நாபி, வங்கபஸ்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு திரிபலைக்கியாழத்தால் மூன்று நாள் அரைத்து திரிபலைக்கியாழத்திலேயே துலாயந்திரமாக, ஒரு ஜாமம் மந்தாக்கினியால் எரித்து ஆறிய பிறகு எடுத்து பன்றி பித்தத்தில் அரைத்து குன்றி எடை இஞ்சி சுரசத்தில் கொடுத்தால் கண்டகுப்ஜசந்நி நீங்கும்.

கர்ணிக சந்நிக்கு கல்யாண பைரவ ரசம் :- கெந்தி, பத்தியம் நாபி, வங்கபஸ்பம், ஈயபஸ்பம், திப்பிலி இவைகள் சமஎடை ஒரு நாள் சித்திர மூல கியாழத்தில் அரைத்து குளிகை செய்து வஜ்ர மூசையில் வைத்து வாலுகாயந்திரத்தில் ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து மீன் பித்தத்தில் அரைத்து கடலை பிரமாணம் அனுபானத்துடன் கொடுத்தால் கர்ணிக சந்நி நீங்கும். இதற்கு பத்தியம் பால்சாதம் சர்க்கரையுடன் சாப்பிட்டு கரும்புத்துண்டுகளை சாப்பிடவேண்டியது.

புக்னநேத்திர சந்நிக்கு விதாரணபைரவ ரசம் :- பாதரசம், தாம்பிரபஸ்பம், வங்கபஸ்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு எருக்கன் பாலால் அரைத்து தோலாயந்திரத்தில் அந்த பாலிலேயே ஒரு ஜாமம் எரித்து மான் பித்தத்தில் அரைத்து திரிகடுகு அனுபானத்துடன் கொடுத்தால் புக்னநேத்திர சந்நி நீங்கும்.

ரக்தோஷ்டசந்நிக்கு சந்நிபாத பைரவம் :- பாதரசம், நாபி, அப்பிரகபற்பம், கெந்தி, ஈயபற்பம், வெண்காரம் இவைகல் சம எடை கல்வத்திலிட்டு ஆலம்பாலினால் அரைத்து ஒரு நாள் தோலாயந்திரத்தில் ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து, மீன், மயில் இவைகளது பிச்சியினால் மூன்று நாள் அரைத்து ஒரு குன்றி எடை
திப்பிலி கக்ஷ¡யத்தில் கொடுத்தால் ரத்த தோஷ்ட சந்நிநீங்கும்.

பிரலாபசந்நிக்கு காருணிய பைரவ ரசம் :- சுத்திசெய்த பாத ரசம், அப்பிரகபஸ்பம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து வஜ்ரமூசையில் வைத்து வாலுகாயத்திரத்தில் ஒருஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து காட்டுப்பன்றிமயில் இவைகளின் பித்தத்தால் அரைத்து அனுபானயுத்தமாய் 1/4 1/2 குன்றி எடை கொடுத்தால் பிரலாபசந்நி முதல் சகல ரோகங்களும் நீங்கும். இதற்குப் பத்தியம் மோர் சாதம் சாப்பிட்டு இளநீர் கொடுக்க வேண்டியது.

ஜிம்மிகசந்நிக்கு சித்தபைரவரசம் :- பாதரசம், தாளகம்
இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு கற்றாழை சாற்றினால் அரைத்து கற்றாழை சாற்றில் தோலாயந்திரமாய் ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து, மீன் பித்தத்தால் அரைத்து குன்றி பிரமாணம் திப்பிலி சூரணம், தேன் இந்த அனுபானத்தில் கொடுத்தால் ஜிம்மிகசந்நி நீங்கும்.

அபிந்நியாச சந்நிக்கு கரவாழபைரவரசம் :- ரசம், பெருங்காயம், சக்திக்ஷ¡ரம், யாவக்ஷ¡ரம், சர்ஜாக்ஷ¡ரம், திரிகடுகு, கெந்தகம் பஞ்சலவணம், சித்திரமூலவேர், எருக்கன்வேர், குழிப்பூசணி, நெல்லி வற்றல், திரிபலை, நாபி இவை சமஎடை கல்வத்திலிட்டு எருக்கன்வேர் கியாழத்தில் இரண்டு நாள் அரைத்து மூசையில் வைத்து வாலுகா யந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து, பெண்நாய் பித்தத்தால் அரைத்து குன்றி எடை இளநீரில் கொடுத்தால் அபிந்நியாச சந்நி நீங்கும். இதற்குப்பத்தியம் தயிர் சாதம்.

சந்நிபாதங்களுக்கு வீரவிக்கிரம ரசம் :- ரசம், வெங்காரம், கெந்தி, பூசனிவிரை, சைந்தவலவணம், திப்பிலி, சுட்டப்பெருங்காயம் இவைகள் சமஎடை சூரணித்து தோலாயத்திரத்தில் ஒருஜாமம் எரித்து ஆறிய பிறகு பன்றி பித்தத்தால் ஒரு நாள் அரைத்து அனுபான யுக்தமாக கொடுத்தால் சகல சந்நிபாதங்கள் அந்த க்ஷணமே நீங்கும்.

சந்நிபாதங்களுக்கு திரி விக்கிரம ரசம் :- பாதரசம், நாபிதாளகம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு இரண்டு ஜாமங்கள் கரிசனாங்கண்ணி சாற்றினால் அரைத்து வஜ்ரமூசையில் வைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து, சூரணித்து இரண்டு அரிசி எடை நொச்சியிலை சாற்றில் கொடுத்தால்
சகல சந்நிபாதங்கள் தீரும்.

சந்நிபாதங்களுக்கு ஜயவிக்கிரம ரசம் :- நாபி, மனோசிலை, தாளகம், கெந்தி, வெங்காயம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் மூன்றுநாள் அரைத்து இந்த ரசத்தில் தானே தோலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து மீன் பித்தத்தால் ஒரு நாள் அரைத்து குன்றிபிரமாணம் அனுபான விசேஷத்துடன் கொடுத்தால் சகலமான சந்நிபாதங்களும் நீங்கும்.

சந்நிபாதங்களுக்கு மஹேந்திர ரசம் :- சுத்திசெய்த நாபி, ரசம், மனோசிலை, தாளகம், தொட்டிபாஷாணம், இவைகள் சமஎடை கல் வத்திலிட்டு ஊமத்தன் இலை சாற்றில் அரைத்து அந்த சாற்றி லேயே தோலாயந்திரத்தில் மந்தாக்கினியாக ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து சூரணித்து குன்றி எடை அனுபான விசேஷ
மாய் கொடுத்தால் சந்நிபாதங்கள் நீங்கும்.

சந்நிபாதங்களுக்கு லொகேஸ்வர ரசம் :- தாளகம், லிங்கம், ரசம், நாபி இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு நிலவேம்பு ரசத்தால் அரைத்து உருண்டை செய்து வஜ்ர மூசையில் வைத்து சீலை மண் செய்து வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் மந்தாக்கினியாக எரித்து ஆறிய பிறகு எடுத்து ஆட்டு பிச்சியால் அரைத்து குன்றி எடை அனுபான விசேஷமாய் கொடுத்தால் சந்நிபாதங்கள் நீங்கும்.

சகல சந்நிபாதங்களுக்கு மஹாபைரவ ரசம் :- இரசபஸ்பம் தாம்பிரபஸ்பம், லோஹபஸ்பம், அப்பிரகபஸ்பம், காந்தபஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு செருப்படை சாற்றினால் அரைத்து காசி குப்பியில்வைத்து சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் ஒரு நாள் எறித்து ஆறிய பிறகு எடுத்து பன்றி பித்தத்தில் அரைத்து குன்றி எடை அனுபான விசேஷத்துடன் கொடுத்தால் சகல சந்நிபாதங்கள் நாசமாகும்.

சகல சந்நிகளுக்கு மிருத்யுஞ்செய ரசம் :- அப்பிரகபஸ்பம், தாம்பிரபஸ்பம், தாளகம், ரசம், கெந்தி, கடல்நுரை இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு கலப்பைகிழங்கு ரசத்தில் அரைத்து மூசையில் வைத்து ஒரு கஜபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மயில், ஆடு,பாம்பு, மீன் இவைகளின் பிச்சியினால் நாலுஜாமம் அரைத்து அரிசி எடை தக்க அனுபானத்துடன் கொடுத்தால் பதின்மூன்று சந்நிகளும் நீங்கும்.

சந்நிகளுக்கு பிரளயாநல ரசம் :- ரசம், நாபி, லிங்கம், வெங்காரம், சத்திக்ஷ¡ரம், யவாக்ஷ¡ரம், சர்ஜக்ஷ¡ரம், பஞ்சலவணங்கள், ஓமம், கருஞ்சீரகம், உருக்குபஸ்பம், தாம்பிரபஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு திரிகடுகு கியாழத்தில் அரைத்து மூசையில்வைத்து வாலுகாயந்திரத்தில் ஆறு ஜாமங்கள் எரித்து ஆறியபிறகு எடுத்து பாம்பு பிச்சியினால் அரைத்து குன்றி எடை அனுபானததுடன் கொடுத்தால் பதின்மூன்று சன்னிகளும் நாசமாகும்.

பதின்மூன்று சந்நிகளுக்கு ரோகவிதாரண ரசம் :- ரசம், நாபி வெங்காரம், ஹேமமாக்ஷ¢கம், திப்பிலி, தாளகம், கெந்தி, அப்பிரகம் உல்லிபாஷாணம், கெளரீ பாஷாணம், தொட்டி பாஷாணம், சைந்தவலவ ணம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு கரிசனாங்கண்ணி சாற்றினால் மூன்று ஜாமங்கள் அரைத்து குன்றி எடை அனுபானவிஷேசமாய் கொடுத்தால் பதின்மூன்று சந்நிகள் நீங்கும். இதற்குப்பத்தியம் தயிர் சாதமும். தாகத்திற்கு குளிர்ந்த ஜலமும்.

பதின்மூன்று சந்நிக்கு இராஜராஜேஸ்வரி ரசம் :- ரசம், கெந்தி, தாளகம், ஹேமமாக்ஷ¢கம், திரிஷாரங்கள் ஒமம், பெருங்காயம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு திரிபலை கியாழத்தால் மூன்று நாள் அரைத்து மூசை
யில் வைத்து வாலுகாயந்திரத்தில் ஒருநாள் எரித்து சாந்தசீதளத்தில் இறக்கி மீன், எருமை, மயில் ஆடு இவைகளின் பித்தத்தினால் அரைத்து குன்றி எடை அனுபானவிஷேசமாய் கொடுத்தால் சகல சந்நிபாதங்கள்
நாசமாகும். இதற்குப்பத்தியம் தயிர் சாதமும். தாகத்திற்கு இளநீரும் கொடுக்கவேண்டியது.

சந்நிகளுக்கு மிருகசஞ்சீவினி ரசம் :- ரசம், நாபி, கெந்தி, லிங்கம், கடுகுரோகணி, இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு கரிசனாங்கண்ணி சாற்றினால் மூன்று ஜாமங்கள் அரைத்து குன்றி எடை மாத்திரைகள் செய்து அதில் ஒரு மாத்திரை இஞ்சிரசத்தில் கொடுத்தால்சந்நிகள் நீங்கும்.

சந்நிகளுக்கு தன்வந்திரி ரசம் :- ரசம், நாபி, அப்பிரகபஸ்பம் சுவர்ணபஸ்பம், லோகபஸ்பம், முத்துபஸ்பம், திரிஷாரங்கள், பொன்நிமிளை, வங்கபஸ்பம், லிங்கம், திப்பிலி, திப்பிலிமூலம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சித்திரைமூல கியாழம், செருப்படை இலைச்சாறு, எருக்கனிலை கியாழம், கரிசனாங்கண்ணி இலை ரசம், பஞ்சகோலகியாழம், இந்த கியழங்களொவ்வொன்றிலும் மும்மூன்று நாள் அரைத்து காசி குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் மூன்று ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து, மீன், எருமை, மயில் ஆடு காடுப்பன்றி இவைகளது பித்தத்தினால் அரைத்து உளுந்து பிரமாண அனுபானயுக்தமாக கொடுக்க சந்நிபாதங்கள் நீங்கும்.

சகல சந்நிகளுக்கு பணிபூஷண ரசம் :- தாளகம் லிங்கம் வங்கபஸ்பம், ஈயபஸ்பம், அப்பிரகபஸ்பம் இவைகளுக்கு சமஎடை சுத்தி செய்த ரசம் இவைகளை கல்வத்திலிட்டு நொச்சி இலை சாற்றினால் அரைத்து மூசையில்வைத்து வாலுகாயந்திரத்தில் மந்தாக்கினியாக இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறியபிறகு எடுத்து பிறகு மீன், எருமைகடா, ஆமை, காட்டுபன்றி, மயில் இவைகளது பிச்சியில் தனித்தனி அரைத்து பயறளவு அனுபான விசேஷமாய் கொடுத்தால் பதின்மூன்று சந்நிகள் நீங்கும்.

சந்நிகளுக்கு சந்நிபாத தாவாநல ரசம் :- தாளகம், ஈயபஸ்பம், வங்கபஸ்பம், இரசம், வெண்காரம், மூன்றுக்ஷ¡ரங்கள், பஞ்சலவ ணங்கள், கௌரிபாஷாணம், நாபி இவைகளை சமஎடை கல்வத்தி லிட்டு வேப்பிலை ரசத்தில் அரைத்து மூசையில்வைத்து வாலுகாயந்திரத்தில் காடாக்கினியாக ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து
மயில், பாம்பு, ஆடு இவைகளின் பிச்சத்தால் அரைத்து குன்றி எடை அனுபான விசேஷமாய் கொடுத்தால் சந்நிகள் தோஷங்கள் நீஙகும். பத்தியம் தயிர்ச்சாதம்.

சந்நிகளுக்கு ரோகபஞ்சன ரசம் :- ரசபஸ்பம், அப்பிரக பஸ் பம், தாம்பிரபஸ்பம், நாபி இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் மூன்று ஜாமங்கள் அரைத்து பழச்சாற்றில் தோலாயந்திரமாக ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து மயில்பிச்சி யினால் அரைத்து குன்றிஎடை அனுபானத்துடன் கொடுத்தால் சந்நிபாதங்கள் நாசமாவதுடன் சகலரோகங்களும் நிவர்த்தியாகும்.

சந்நிகளுக்கு தோஷசுரத்திற்கு காலபைரவ ரசம் :- தாளகம், கெந்தி, தாம்பிரபஸ்பம், ரசம், வெண்காரம், மூன்றுக்ஷ¡ரங்கள், சைந்தவலவணம், வாலேந்திர போளம், மிளகு இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு சூரணித்து துலாயந்திரத்தில் ஒருநாள் எரித்து ஆறியபிறகு எடுத்து பன்றி, எருமைகடா, ஆமை இவைகளின் பித்தத்தால் ஒருநாள் அரைத்து குன்றிஎடை இஞ்சி ரசத்தில்கொடுத்தால் சந்நிபாதங்கள் நீங்குவதுடன் அனுபான விசேஷங்க ளால் கொடுத்தால் தோஷசுரங்கள் முதல் சகல ரோகங்களும் நீங்கும். இதற்கு பத்தியம் தயிர்ச்சாதம் அல்லது மோர்ச் சாதங்கொடுத்து தாகத்திற்கு இளநீர் அல்லது பானகம் கொடுக்கவேண்டும்.

சகல சந்நிகளுக்கு பிராணாக்கினி குமார ரசம் :- சுத்திசெய்த ரசம், நாபி, கெந்தி, அப்பிரகபஸ்பம் இவைகளை சமஎடையாகக் கல்வத்திலிட்டு பற்பாடக கியாழத்தால் அரைத்து வஜ்ர மூசையில் வைத்து மணல் மறைவில் சிறுபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு மீன்பிச்சி, ஆட்டுபிச்சி, மயில்பிச்சி இவை
களால் தனித்தனியாக அரைத்து குன்றிஎடை அனுபானயுக்தமாக கொடுத்தால் சகல சந்நிகளும் நீங்கும்.

சகல சந்நிகளுக்கு சுதிவ்வியாக்கினி குமார ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தில் அரைத்து வஜ்ரமூசையில் வைத்து வாலுகாயந்திரத்தில் வைத்து
ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து, மறு நாள் திரிகடுகு கியாழத்தால் அரைத்து அதில் நாலில் ஒரு பாகம் சுத்தி செய்த நாபி சேர்த்து அவுரியிலை ரசத்தில் அரைத்து குன்றி எடை அனுபான யுக்தமாக கொடுத்தால் சகல சந்நிகளும் நீங்கும்.

சகல சந்நிகளுக்கு உத்தமாக்கினி குமார ரசம் :-
சுத்திசெய்த நாபி, ரசம், அப்பிரகபஸ்பம், காந்தபஸ்பம், லோகபஸ்பம், காந்த பஸ்பம், தாம் பிர பஸ்பம், நாபி இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு செருப்படைசாற்றினால் அரைத்து காசி குப்பியில் வைத்து சீலை மண் கொடுத்து வாலுகாயந்திரத்தில் ஆறு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து, நன்கு அரைத்து சூரணித்து உளுந்து அளவு அனுபான விஷேசங்களினால் கொடுத்தால் சகல சந்நிபாதங்கள் தீரும். இச்சாபத்தியம் கரும்பை மெல்ல செய்து தாகத்திற்கு இளநீர் பானம் கொடுக்க வேண்டியது.

சந்நிசுர தோஷங்களுக்கு வுஸ்வம்பர ரசம் :- சுத்திசெய்த நாபி, ரசம், அப்பிரகபஸ்பம், லிங்கம் தாளகம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு செருப்படை சாற்றினால் மூன்று நாள் அரைத்து குக்குடபுட மிட்டு
ஆமை, பன்றி, மீன் இவைகளின் பித்தத்தினால் பிரத்தியேகமாய் மூன்று நாள் அரைத்து குன்றி எடை அனுபானத்துடன் கொடுத்தால் தோஷசுரங்கள், சந்நிபாதசுரங்கள், தீவிரசுரங்கள் இவைகள் நீங்கும்.
இச்சாபத்தியம் இட்டு கரும்பு துண்டுகளை கொடுக்கவேண்டியது. தாகத்திற்கு இளநீர் பானம் கொடுக்க வேண்டியது.

அசாத்திய சந்நிகளுக்கு மஹாருத்திர ரசம் :- லிங்கம், தாளகம் வெங்காரம், மனோசிலை, கெந்தி, ரசம், இவைகளை சமஎடையாக எடுத்து, இவைகளுக்கு சமமாக நன்கு சுத்திசெய்த நாபி சேர்த்து பொடித்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் நான்கு ஜாமங்கள் அரைத்துகடுகு பிரமாணம் மாத்திரை செய்து நிழலிலுலர்த்தி அனுபானத்துடன் கொடுத்தால் அசாத்தியமான சந்நிபாதங்கள் நிவர்த்தியாகும்.

இதற்குப்பத்தியம் தயிர் சாதமும். தாகத்திற்கு இளநீர். கரும்பு துண்டுகள் கர்ஜீரம், திரா¨க்ஷ, மாதுளம்பழம் கொடுக்க வேண்டியது. குங்குமப்பூ, அகர்ப்பூ, பச்சைக்கற்ப்பூரம், சந்தணம் இவைகளை தேகத்திற்கு லேபனஞ்செய்யவேண்டியது.

ரோகிக்கு ஹிதமான உபச்சாரங்களை செய்யவேண்டியது.இம்மருந்தைக் கொடுத்துவரும்போது இத்துடன் ஜன்னிபாதங்களுக்காக கூறப்பட்ட குடிநீர்களில் ஏதேனும் ஒன்றையும் கொடுத்து வரலாம்.

சந்நிகளுக்கு யோகநாத ரசம் :- ரசம், கெந்தி, பால்துத்தம்மனோசிலை, நாபி, ஹேவமாஷிகம், விஷம், லிங்கம், அப்பிரகம் லோஹபஸ்பம், தாம்பிரபஸ்பம் இவைகள் சமஎடை கல்வத்தி லிட்டு புங்கன், நொச்சி, கரசலாங்கண்ணி இவைகளின் சாற்றினால்மூன்றுநாள் அரைத்து உளுந்து பிரமாணம் மாத்திரைசெய்து நிழலிலுலர்த்தி அனுபான யுக்தமாக கொடுத்தால் சகல சந்நிபாதங்களும் நாசமாகும்.

சந்நிகளுக்கு விஷமசூசிகா ரசம் :- ரசம், நாபி, கெந்தி இவை கள் சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன் இலைச்சாற்றினால் அரைத்து ஊசியால் எடுத்தால் எவ்வளவு வருமோ அந்த அளவு கொடுத்தால்
சகல சந்நிகள் நீங்கும்.

சந்நிகளுக்கு சந்நிபாத குலாந்தக ரசம் :- ரசம், நாபி, கெந்தி திரிகடுகு இவைகள் ஒரு பாகம், சங்குபஸ்பம் இரண்டு பாகங்கள் இவைகளை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து உளுந்தளவு மாத்திரைகள்செய்து நிழலிலுலர்த்தி தக்க அனுபானங்களில் கொடுத்தால் பதின்மூன்று சந்நிகள் நிவர்த்தியாகும்.

சந்நிகளுக்கு பஞ்சவக்கிர ரசம் :- ரசம், நாபி, கெந்தி, மிளகு, திப்பிலி, வெங்காரம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன் இலைச்சாற்றினால் ஒருநாள் அரைத்து குன்றிஎடை மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி எருக்கன்வேர் கியாழத்தில், சுக்கு, திப்பிலிமிளகு சூரணம்போட்டு ஒரு மாத்திரையை கொடுத்தால் சகல சந்நிகள் நீங்கும்.

பைரவாஞ்சனம் :- பெருங்காயம், சைந்தவலவணம், திப்பிலி இவைகள் சமஎடை பசுநெய்யினால் அரைத்து கண்களுக்கு கலிக்க மிட்டால் சந்நிபாதங்கள் நீங்கும்.

திரிமூர்த்திச் செந்தூரம் :- சுத்திசெய்த லிங்கம் வராகனெடை-8, சுத்திசெய்த ரச செந்தூரம் வராகனெடை-4, சுத்தி
செய்த வீரம் வராகனெடை-2 இவற்றைப் பொடித்துக் கல்வத்தி லிட்டு முலைப்பால் விட்டு ஒரு ஜாமம் அரைத்து உலர்த்தவும். மறுநாள் மீண்டும் முலைப்பால் விட்டு ஒரு ஜாமம் அரைத்து உலர்த்தவும். இப்படி 5-நாள் அரைத்து உலர்த்தி பத்திரப்படுத்துக.

இதில் வேளைக்கு 1/2 குன்றிஎடை தினம் 2-வேளை தேனில் கொடுக்க எத்தகைய கடினசுரம் சன்னிகளும்விரைவில் குணமாகும். மற்றும் வாதநோய்கள், சீதள சைத்தியத்தினால் ஏற்பட்ட பிணிகள்
முதலியவைகளும் தீரும். இம்மருந்தை தொடர்ந்து மூன்று நாட்க ளுக்குமேல் கொடுக்ககூடாது.

சண்முகச் செந்தூரம் :- சுத்திசெய்த லிங்கம் வராகனெடை-1, சுத்திசெய்த வீரம் வராகனெடை-1, சுத்திசெய்த பூரம் வராக னெடை-1, சுத்திசெய்த தாளகம் வராகனெடை-2, சுத்திசெய்த கௌரி வராகனெடை-1, சுத்திசெய்த வெடியுப்பு வராகனெடை-1, இவைகளைப் பொடித்து கல்வத்திலிட்டு முட்டை வெண்கருவிட்டு
இரண்டு ஜாமம் நன்கு அரைத்து பொடித்து காலியான் ஓர் முட்டைக்குள் செலுத்தி, மேலே ஓர் முட்டை ஓட்டை மூடிச்சீலைமண் செய்யவும். அவ்வாறு சீலைமண் செய்யும் போது முட்டை யின் மேல் பாகத்தில் ஒரு தம்படி அளவுக்கு முட்டை ஓடு தெரியும் படிவிட்டு மற்ற பாகங்களை யெல்லாம் மறையும் படி சீலை மண் செய்ய
வேண்டும். இது உலர்ந்த பின்பு ஓர் வாயகலமான சட்டியில் இரண்டு விரற்கடை உயரத்திற்கு மணற்கொட்டிப் பறப்பி அதன் நடுவில் சீலை செய்து வைத்துள்ள முட்டையில் வைத்து முட்டையின் முக்கால் பாகம் மறையும் படி மணலை கொட்டி, அசையாமல் அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து வரவும். மேலே தெரியும் முட்டை ஓடானது
வெந்து கம்பியால் தொட்டுப்பார்க்க துவாரம் விழுவதாக இருப்பின் அதுவே தக்கபதமென ஓர் இரும்பு கம்பியை முட்டையின் உள்ளே செலுத்தி துழவிப்பார்க்க மருந்துகள் உருவி கட்டியிருக்கும், அச்சமயம் கீழிறக்கி ஆற விட்டு முட்டையின் உள்ளே உள்ள மருந்தை மட்டும் அரைத்து பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு 2 அரிசிப் பிரமாணம் தினம் 2 வேளை தேனில் கொடுக்க சுரம், சந்நிகபசுரம், சுவாசகாசம் முதலியன குணமாகும்.

அக்கினிகுமாரமாத்திரை :- வலை ரசம், சுத்திசெய்த கந்தகம், பொரித்த வெங்காரம் , சங்குபற்பம், பலகரை பற்பம், வகைக்கு வராகனெடை 1, சுத்திசெய்த நாபி வராகனெடை 3, வெள்ளை மிளகு வராகனெடை 8, இவைகளை கல்வத்திலிட்டு பழச்சாறு விட்டரைத்து மிளகளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு ஒரு மாத்திரை வீதம் தினம் இரு வேளையாக தக்க அனுபானங்களில் கொடுக்க சுரம், சன்னி, சூலை,வாதரோகங்கள் முதலியன குணமாகும். இது சந்நிபாதசுரத்திற்கு சிறந்தது.

இராஜராஜேஸ்வரம் :- இரசம், பால்துத்தம் லிங்கம், கந்தகம் நாபி, மனோசிலை, இந்த ஆறு சரக்குகளையும் முறைப்படி நன்கு சுத்திசெய்து வகைக்கு ஒரு வராகனெடையாக எடுத்து கல்வத்திலிட்டு
வேப்பிலையீர்க்குக் குடிநீரிட்டு 2 ஜாமம் அரைத்து உலர்த்தி அகலிலிட்டு சீலைமண் செய்து நீரிலும் குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி பத்திரப்படுத்துக. இதில் ஒரு மாத்திரை வீதம் திரிகடுகு கியாழத்தில் கொடுக்க பதின்மூன்று சந்நிகளும்குணமாகும்.

விஷ்ணுசக்கர மாத்திரை :- இரசம், லிங்கம், கந்தகம், காந்தம் துத்தம், பலகரைபற்பம், நாபி, மனோசிலை, முதலிய ஒன்பது சரக்குகளையும் முறைப்படி சுத்திசெய்து சமஎடையாகத்தூக்கிப் பொடித்துக் கல்வத்திலிட்டு வேப்பம்பட்டைச்சாறு அல்லது பழச்சாறுவிட்டு இரண்டு ஜாமம் நன்கு அரைத்து சிறு குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுர்த்தி பத்திரப்படுத்துக. இதில் ஒரு மாத்திரை திரிகடுகு சூரணத்துடன் சேர்த்து தேனும்
இஞ்சிச்சாறும் கூட்டிக் கொடுக்கவும். இதனால் சுரம், பக்கவாதம், சூலை, பதின்மூன்றுவகை சந்நிகள், மூர்ச்சை முதலியன குணமாகும்.

பிரமாநந்த வயிரவம் :- வெங்காரம், கந்தகம், மனோசிலை, அரிதாரம், நாபி, சுக்கு, லிங்கம், இவைகளை சுத்திசெய்து ச்மஎடை யாகக் கல்வத்திலிட்டு இஞ்சிச்சாறு விட்டு இரண்டு ஜாமம் நன்கு அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து நிழலிலுர்த்தி பத்தி ரப்படுத்துக. இதில் ஒரு மாத்திரை வீதம் தினம் இரண்டு வேளை
தேன் இஞ்சிச்சாறு முதலியவற்றுடன் கொடுத்துவர சந்நிசுரங்கள் குணமாகும்.

தூபங்கள் :- சாம்பிராணி, குங்கிலியம், மயிலிறகு, தர்ப்பை,ஓமம், வேப்பிலை, காட்டுத்துளசி, சந்தனம் இவைகளை பொடித்துக்கரி நெருப்பிலிட்டு தூபமிட சந்நிகள் சாந்தமடையும்.

நசியங்கள் :- அகத்திகீரைசாற்றில் வெல்லம், சுக்கு, திப்பிலி இவைகளை சூரணித்துக் கலந்து நசியமிட்டால் சித்தவிப்பிரமசந்நி நீங்கும்.

திப்பிலியை நாயுருவி இலை ரசத்தில் சேர்த்து நசியமிட்டாலும் அல்லது திரிகடுகு பேய்ச்சுரை இவைகளையரைத்து அந்த ஜலத்தைநசியஞ்செய்தாலும் கண்டகுப்ஜசந்நி நீங்கும்.

மிளகு, திப்பிலி, இந்துப்பு இவைகளது சூரணத்தை வெந்நீரில் அரைத்து நசியஞ்செய்தால் கர்ணிகசந்நி நீங்கும்.

மிளகு, அமுக்கிறாகிழங்கு, திப்பிலி, இந்துப்பு, வெள்ளைப்பூண்டு, இலுப்பைபிசின், முருக்கன்வேர், இஞ்சி இவைகளை ஒன்றாக கலந்து நீர்விட்டு அரைத்து நசியமிட்டால் புக்கினநேத்திர சந்நி நீங்கும்.

மாதுளம்புஷ்ப இரசத்தையாவது அல்லது அருகம்புல் ரசத்தில் திரிபலை சூரணத்தை சேர்த்தையாவது நசியமிட்டால் ரக்த ஸ்டீவி சந்நிபாதம் நிவர்த்தியாகும்.

நாபி 1-பாகம், மிளகு 3-பாகம், காட்டுஎரு சாம்பல் 16-பாகம்இவைகளை சூரணித்து சிறிது நசியஞ்செய்தால் சந்நிகள் நீங்கும்.

காட்டுஎரு சாம்பல் 1-பாகம், எருக்கன்பாலைவிட்டு அரைத்து இதற்கு நாலிலொன்று மிளகு சூரணம் கலந்து அரைத்து நசியமிட்டால் சந்நிபாதங்கள் நிவர்த்தியாகும்.ஈச்சுரமூலிவேர், ஈச்சுரமூலிவிதை இவையிரண்டையுஞ்சூரணித்து இதில் பாதி மிளகு சூரணஞ்சேர்த்து கலந்து நசியமிட சந்நிபாதங்கள் நிவர்த்தியாகும்.Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum