ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சித்த மருத்துவம்

    Go down

    சித்த மருத்துவம் Empty சித்த மருத்துவம்

    Post by Admin Tue 05 Oct 2010, 4:01 pm

    மருத்துவம் போற்றுதலுக்குரிய அருந்தொழில். தன்னலம் கருதாதது, பொதுநலம் கருதிச் செய்கின்ற தொண்டிற்கு உரிய தொழில். மருத்துவம், தொன்று தொட்டுத் தொடர்ந்து வரும் பண்பாட்டு மரபுகளைப் போல் மனித வாழ்வோடு இரண்டறக் கலந்தது.
    நோயுற்ற துன்பமும் நோயற்ற இன்பமும் பிறரால் தனக்குக் கிடைப்பதில்லை. மனிதன், தானே தனக்குத் தேடிக் கொள்வது என்றறிந்தான்.

    மனிதனுக்குப் பிறர் செய்வது என ஒன்றில்லை; தனக்கு வந்துற்ற நோய்க்கும் அந்நோய்க்குரிய மருந்தும் தானே அறிந்திடல் வேண்டும் என்னும் தன்னுணர்வுடன் வாழத் தலைப்பட்டான். மனிதன், தன் நோய்க்குத் தானே மருந்து என வாழத் தொடங்கியதால், வாழ்க்கை வளமும் நாகரிகச் செழிப்பும் பண்பாட்டில் உயர்நிலையும் பெறத் தொடங்கினான்.

    தமிழ் மருத்துவம்

    பண்டைய காலத் தமிழர்கள் தங்கள் வாழ்வில் நேர்ந்த பட்டறிவினாலும், முதிர்ச்சியினாலும், தெளிவினாலும் கண்டறிந்து, நடைமுறைப் படுத்தி, பாதுகாத்துக் கொண்டிருந்த மருத்துவ முறை தமிழ் மருத்துவம் என்பதாகும்.

    சித்த மருத்துவம்

    தமிழர்கள் மேற்கொண்டிருந்த உணவு முறையாலும் மருந்து முறையாலும், ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ எனக் கண்டறிந்து, அவ்வகையான உணவு முறைகளை உள்ளடக்கியது "சித்த

    மருத்துவம்’.

    “சித்த மருத்துவ நூல்கள் தமிழில் மட்டுமே அதிகமாகக் காணக் கிடைப்பதனாலும், சித்த மருத்துவமுறை பண்டைய நாள் முதல் இன்றுவரை தமிழ் நாட்டிலேயே பயிலப்பட்டு வருவதனாலும் சித்த மருத்துவத்தைத் தமிழ் மருத்துவம்’’ என்பர். தமிழ் மொழியிலும் தமிழ் மக்களின் வாழ்க்கையிலும் தமிழர்களால் போற்றிப் பாதுகாக்கப் படுவதனாலும், ‘சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம்’ என்பதற்குரிய அடிப்படையாகக் கொள்ளலாம்.

    சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமே

    சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதற்குச் சில அடிப்படை ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழக நிலத்துக்கு உரிமையுடைய மூலிகை வகைகள், மலைப் பகுதிகளிலும், காடுகளிலும், நீர்ப் படுகைகளிலும் காணப்படுகின்ற செடி, கொடி, மரவகைகள், சித்த மருத்துவத்தின் அடிப்படை மருந்துப் பொருள்களாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சித்த மருத்துவத்தின் ‘மூலச் சுவடிகள்’ அனைத்தும் தமிழில் அமைந்திருப்பதுடன் அவை தமிழகத்திலேயே வழங்கியும் வருகின்றன.

    தமிழ்நாட்டு, தென்னாட்டு மருத்துவமுறை வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவர்கள் சித்தர்கள். அவர்கள் தங்கள் மனத்தின் ஆற்றலை வளர்த்துக் கொண்டு, அந்த ஆற்றலின் பயனால் ‘உருவாக்கம்’ எனும் முறைகளால் மருத்துவத்தை வளர்த்தனர் என்பதனால், ‘சித்த மருத்துவம்’ எனப் பெயர் கொள்ளலாயிற்று.

    இயற்கை மருத்துவ முறைகளோடு மூலிகை மருத்துவம், யோகாசன முறை மருத்துவம், வாதமுறை மருத்துவம், கற்பமுறை மருத்துவம், வர்ம முறை மருத்துவம் ஆகிய முறைகள் அனைத்தும் தமிழ் நாட்டவரால் உருவாக்கப்பட்டுத் தமிழ் நாட்டவரால் பாது காக்கப்பட்டு வருகின்றன என்பவை, சித்த மருத்துவம், தமிழ் மருத்துவம் என்பதற்கு அடிப்படையான சான்றுகளாகும்.

    சித்த மருத்துவம் மூலிகை மருத்துவமா ?

    அறுவை முறையால் செய்யப்படும் மருத்துவம் அறுவை மருத்துவம், மகளிர்க்குச் செய்யப்படும் மருத்துவம் மகளிர் மருத்துவம். விலங்களுக்குச் செய்வது விலங்கு மருத்துவம் என வழங்கப் படுவதைப் போல, சித்தர்களால் செய்யப்பட்ட மருத்துவம் ‘சித்த மருத்துவம்’ என வழங்கலாயிற்று. சித்த மருத்துவத்தில் மூலிகையின் பங்கு அதிக அளவில் காணப்படுவதனால், ‘மூலிகை மருத்துவமே, சித்த மருத்துவம்’ எனவும் வழங்கிவரக் காணலாம்.

    “மூலிகை மருத்துவம் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியே யன்றி அதுவே முழுமையானதன்று. உணவுப் பழக்கத்தில் உலகின் வேறு எங்கும் இல்லாத வகையில் இந்தியா, குறிப்பாகத் தமிழகம் விளங்குகிறது. காரணம், அன்றாட உணவே (அறுசுவை) மருந்துச் சரக்குகளோடு கூடியவை. நோய் வராமல் தடுக்கும் முறையில் மேற்கொள்ளப்படும் உணவு முறை சித்த மருத்துவத்தில் அடங்குகிறது. கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், கொத்துமல்லி, பெருங்காயம், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை இவ்வாறான பல பொருள்கள், மருந்தாக அன்றாட உணவில் சேர்க்கப்படுகின்றன. நோய் வந்தால் இவற்றையே சூரணம், கசாயம், இரசம், உப்பு, உலோகம், பாசாணம் போன்றவை யாகவும், நிறைவாக இரத்தினங்களாகவும் ஆக்கி வழங்குவர்’’ என்னும் கருத்துகளால், மூலிகை மருத்துவம் மட்டுமே சித்த மருத்துவம் என்னும் கருத்து வலுவற்றதாகிறது. சித்த மருத்துவம் ஒரு முழுமையான மருத்துவக் கல்வி என்ற நிலைக்கு வளர்த்துப் போற்றப்பட்டு வருகிறது.

    சித்த மருத்துவக் கல்வி

    சித்த மருத்துவத்தை மேற்கொண்ட சித்தர்கள், தாங்கள் கற்று ஆராய்ந்து அறிந்த உண்மைகளைப் பயனுடையவர்களுக்கும்,

    பக்குவ மடைந்த பயனீட்டாளர்களுக்குமே கற்பிக்க வேண்டுமென்று கருதினர்.

    சித்த மருத்துவம், குரு சீட பரம்பரையாக அனுபவப் பக்குவத் தினால் கற்றறியப்படுகிறது. மருந்தின் குணம், நோயின் குணம் ஆகிய இவற்றை நன்குணர்ந்து பின் விளைவுகள், முறிப்பான்கள் போன்றவற்றைத் தெளிவாக உணர்ந்தாக வேண்டும். பக்குவமற்ற மருந்துகள் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே மருந்து காலையில் உட்கொண்டால் ஒரு பலனும், மாலையில் உட்கொண்டால் வேறொரு பலனும் தரும். ஒரே நேரத்தில் அனுபானத்தை (துணைப்பொருள்) மாற்றிக் கொடுத்தால், மாற்றுப் பலனைத் தரும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் இடம் பெறுகின்றன. சான்றாக, தூதுவளைக் கற்பம் நெய்யில் உண்டால் உடல் பெருக்கும். தேனில் உண்டால் உடல் மெலியும். வெண்ணெயில் உண்டால் தாது உற்பத்தியாகும்.

    இப்படிச் சாதாரணமாகப் பயன்படும் கீரை, மருத்துவப் பண்பினால் சூழல், உட்கொள்வோர் வயது, காலம், உடன் உண்ணும் துணைப் பொருள் போன்றவற்றால் வேறுபட்ட பலன்களைத் தரும். இது போன்ற மருந்துகள் சித்த மருத்துவத்தில் இடம் பெற்றுள்ளன. சித்தர்கள் வகுத்துள்ள மருந்துவக் கொள்கை கடினமான முறைகளினால் வகுக்கப் பெற்றது. சித்த மருத்துவ முறைகள் (இரகசிய) மந்தண அளவில் பரிபாஷை, சங்கேதம் போன்றவற்றால் காக்கப் பெற்றன. அனுபவ மற்றோர் சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்துவதைத் தடைப் படுத்துவதே இதன் நோக்கமாக இருந்த போதிலும் பின்னாளில் அவை பிறரால் அறிய முடியாமலேயே மறைந்து போவதற்கும் காரணமாக அமைந்து விட்டது. என்று கருத்துரைக்கப் பட்டிருப்பதிலிருந்து, சித்த மருத்துவக் கல்வி எளிய முறையினால் உருவானதல்ல என்பதும் அதன் முறைகள் எல்லோருக்கும் சென்றடையாத நிலையில் ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடக்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது என அறியலாம்.

    சித்த மருத்துவக் கல்விக்குத் தகுதி

    சித்த மருத்துவ முறைகள் உணவின் அடிப்படையைக் கொண்டது என்றால், அதன் முறைகள் ஒருசிலரிடமே முடங்கிக் கிடக்கிறது என்னும் கூற்று உடன்பாட்டிற்கு உகந்ததாக அமையவில்லை. என்றாலும், சித்த மருத்துவ நூல்களை எல்லாருக்கும் காட்டக் கூடாது என்றும், மருந்துமுறைகளைக் கூறக்கூடாது என்றும் குறிப்பிடுவது காணப்படுகிறது.

    “ மற்றுள்ளோர்க் கிந்நூலை யீந்தா யானால்

    மாண்டிடுவாய் மகத்தான சாப மெய்தே’’

    என்னும் கடுஞ்சொற் கட்டளையும் சாபமும் இடப்படுவதை அறியலாம். மேற்கண்ட கருத்தைக் கூறும் இந்நூல் ஒரு ரசவாத நூல். ரசவாதம் என்பது உலோகங்களைத் தங்கமாக மாற்றும் கலையுடன் தொடர்புடையது. இக்கலையை எல்லாரும் அறிய நேர்ந்தால் மருத்துவம் செய்வதை விட்டு விட்டு எல்லாரும் தங்கம் செய்யும் தொழிலைச் செய்ய முற்படுவர். அத்தகைய நிலை ஏற்படுவது சரியன்று என்பதை உணர்ந்தே சித்தர்கள், தாங்கள் கூறிய ரசவாத முறைகள் வேறு நோக்கத்துக்காக தவறாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்று கருதி இவ்வாறு உரைத்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

    “ என்மகனே என் மேலே ஆணை ஆணை

    புல்ல ரென்ற புல்லரிடம் நூல் காட்டாதே''

    என்று அகத்தியர் தன் மாணாக்கனிடம் கூறுவதைக் காண்கிறோம்.

    “கை முறைகள் காட்டாதே கருச்சொல் லாதே’’

    என்று ரோமரிஷி சூத்திரத்தில் உரைக்கின்றார். மற்ற சித்தர்களைப் போலப் பாடல்களைக் காட்டக் கூடாது என்று கூறாமல், கை முறைகள்,கரு ஆகியவற்றைச் சொல்லாதே என்கிறார்.

    சித்த மருத்துவ நூல்கள் பெரும்பாலும் பரிபாஷைச் சொற்களால் இயற்றப் பெற்றிருக்கும் என்பர். பரிபாஷை எல்லாருக்கும் தெரியக் கூடியதல்ல. பாவிகள் எனப்படுவோர், சித்தர்கள் கூறுகின்ற ஒழுக்க முறைகளுக்கு உட்படாமல் இருப்பவர்கள் பாவிகளாவர். அவர் களுக்குத் தெரியக் கூடாது என்பதற்கே பரிபாஷைச் சொற்கள் பயன் படுத்தப்படுகின்றன. அவர்களால், மருந்துப் பொருள்களும், மருத்துவமும், மருத்துவத்துக்குரிய நற்பெயரும் அழியக் கூடாது என்பதைக் கருத்திற் கொண்டே அவ்வாறு உரைத்துள்ளனர்.

    சித்த மருத்துவத்தை மறைவாகக் கூறாவிட்டால், அதன் சிறப்பினால் இறந்தவனும் உயிர் பெற்றிடக் கூடும். அவ்வாறு, செத்தவன் எல்லாம் திரும்பி வந்தால், உலகம் இடங்கொள்ளாமல் போகும். சித்த மருத்துவத்தை எவன் முறையாகக் கற்க வேண்டுமென்ற விதி அமைந்திருக்கிறதோ அவன் வந்தால், சித்தர்கள் தாங்களே முன்வந்து அவனுக்கு மருத்துவக் கல்வியைக் கற்றுத் தந்து விடுவார்கள் என்று சித்த மருத்துவத்தின் இரகசியத்தைக் கூறுகின்றார்.

    சித்த மருத்துவத்தைக் கற்கும் தகுதியாளர் யார் எனத் தெளிவு படுத்தப் பட்டிருக்கிறது. சித்தர்கள் ஒருவருக் கொருவர் செய்முறை களையும் கருத்துகளையும் பரிமாறிக் கொள்வதும் இயற்கை. சிவயோகிக்கும், மெய்ஞ்ஞானிக்கும் இந்நூலைச் சொன்னதாகக் கூறினர். சிவயோகியும், மெய்ஞ்ஞானியும் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து கிடப்பவர்கள். அவர்களுக்கு மருந்து செய்யவும், பொருள்களைச் சேகரிக்கவும், மருத்துவம் பார்க்கவும் பொழுது வேண்டுமே! பன்னிரண்டு ஆண்டுகள் தொண்டு செய்து பணிந்திருக்கும் மாணவன், கல்வியறிவுள்ள கல்வியாளர் ஆகியோர்களே சித்த மருத்துவக் கல்விக்குத் தகுதியானவர்கள் என்பது பெறப்படுகிறது. மாணவன், செய்முறைப் பயிற்சியினாலும், பக்குவத்தினாலும் சிறந்தவனாகும் போது மருத்துவ முறை வழுவாது பாதுகாக்கப்படும் எனக் கருதியுள்ளனர்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum