ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சித்த மருத்துவத்தின் இயல்புகள்

    Go down

    சித்த மருத்துவத்தின் இயல்புகள் Empty சித்த மருத்துவத்தின் இயல்புகள்

    Post by Admin Tue 05 Oct 2010, 4:04 pm

    மருத்துவ நூலார் மருத்துவ நூல்களை எழுதுங்கால், அவ்வக் காலத்திலும் இடத்திலும் அங்கே வழங்கப்படும் மருத்துவ முறைகளைக் கைக்கொண்டே நூல் எழுதினர்.

    "" வண்கால தேசவர்த்த மானமறி பண்டிதர்க்குங்

    கண்காண் வழக்கமே கைமுறையாம் பெண்காணி

    ஆனாலுஞ் செல்வாக்கே யாதீன மப்படி நீ

    நானாலுஞ் சொல்லவறி நாள்.''

    காலம், இடம், வழக்கம் ஆகிய மூன்றையும் முறையாக அறிந்த மருத்துவர்க்கு, அவ்வவ்விடங்களில் நிகழும் வழக்கமே கைமுறை யாகக் கொண்டு வருவது வழக்கமாக அமையும். அதுவே மருத்து வர்க்குக் கண்ணாகவும் அமையும் என உரைப்பதனால், நிலத்தின் இயல்பினை உணர்ந்து அவற்றிற்கு ஏற்ப செய்யப்பட்டதே சித்த மருத்துவம் என்று அறியலாம்.

    மருத்துவ இயல்புகள்

    மருத்துவ இயல்புகள் என்பது, முன்னோர் மேற்கொண்ட முறைகளின் வழியே பின்னோரும் பின்பற்றி, அம்முறை தவறாமல் மருத்துவம் செய்வதைக் குறிக்கும். இவை, முறைப்படி வகுக்கப் பெற்ற வழிமுறைகள் என்று கூறலாம். வழிமுறை தவறிய மருத்துவச் செயல்களினால், மருத்துவத்தின் பயனும் தவறக் கூடும் என்பதனால் வழி முறை வகுத்துள்ளனர்.

    இயல்புகள்16

    1. வியாதி அறிதல், 2. அதன் காரண மறிதல், 3. அது நீங்கும் வழி தேர்தல், 4. பிணிக் காலங்களின் அளவை உணர்தல், 5. நோயாளி அளவு அறிதல், 6. உடலின் தன்மை அறிதல், 7. பருவம் நாடல், 8. வேதனைகளின் அளவு அ றிதல், 9. சாத்தியம் ஆய்தல், 10. அசாத்தியம் ஓர்தல், 11. யாப்பியம் உணர்தல், 12. மருந்து செய்தல், 13. பழைய மருத்துவர் முறையில் தவறாமை, 14. உதிரங்களைதல், 15. அறுத்தல், 16. சுடுதல் என்பன மருத்துவ இயல்புகளாகும்.

    நோயாளிக்கு வந்துற்ற நோய் எது எனத் தேர்வு முறையால் அறிந்து, அந்த நோய் வருவதற்குரிய காரணங்களைக் கண்டறிய வேண்டும். வந்துள்ள நோய் நீங்க வேண்டுமானால், மருத்துவத்தில் எந்த முறையைப் பயன்படுத்தினால் நீங்கும் என ஆராய்ந்து தேரவேண்டும். நோய் எத்தனை நாளாக இருக்கிறது என்பதைக் கேட்டு, நோயாளியின் உடலின் தன்மையை அறிந்து, வந்துற்ற நோய் நோயாளியால் தாங்கக் கூடியதா?ஏற்ற மருந்தைக் கொடுத்தால் உடல் தாங்குமா? என்பதை அறிந்து, நோய் வந்த காலத்தை அறிந்து, நோயாளி படுகின்ற துன்பத்தின் அளவைக் கொண்டு, நோய் நீங்கும்– நீங்கா தென்று கணித்து மருந்து செய்ய வேண்டும். மருத்துவம் பார்க்கும் போது, முன்னோர் மேற்கொண்ட முறையின்படி மருத்துவ விதி மேற்கொள்ளப்பட்டது.

    மேலே கூறப்பட்ட பதினாறு முறைகளையும் முற்றக்கற்று அதன் வழி மருத்துவம் செய்யத் தக்கவனே முறையான மருத்துவனாகக் கருதத்தக்கவன் என அறியலாம். இவற்றில் காணப்படும் அறுத்தல், சுடுதல், உதிரங்களைதல் என்னும் முறைகள் அறுவை மருத்துவ முறைகளாக இருக்கின்றன. மருந்து முறைகளோடு அறுவை முறைகளும் சேர்ந்து அமைந்தது சித்த மருத்துவ முறை என்பது தெரியவரும்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum