என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

Go down

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma) Empty சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

Post by Admin on Sun 10 Oct 2010, 10:48 pm

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

(யதார்த்தமாய் நடைமுறை வழக்காடு முறையில் ஒரு கட்டுரை ..)


[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சுற்றுப்புற மாசுல்ல வெளி உலகம், மன அழுத்தத்தோடு வாழுகிற இயந்திர வாழ்க்கை முறைதான் பல கோடி ஆஸ்துமா நோயாளிகளை உருவாக்கிட்டிருக்கு. காசு கொடுக்காம கிடைக்கிற ஒரே விஷயம் காற்று, அந்த காற்று கூட நுரையீரல் முழுமையா செல்ல முடியாம தவிக்க வைக்கிற வியாதிதான் ஆஸ்துமா. வயிறுமுட்ட சாப்பிடத் தெரிஞ்ச நம்ம மனுஷங்க 5லிட்டர் காற்று போகிற நுழையீரல்ல ½ லிட்டர் காற்று கூட முழுமையா இழுக்காம போறதாலதான், ஒரு நிமிஷத்திற்கு 14 தடவை சராசரியா மூச்சு விடணும்னா நம்ம அரைகுறையாக 20 - 25 தடவை சுவாசித்து ரத்த சோகை முதல் பல்வேறு மூச்சு சம்பந்தமான நோய்க்கு காரணமாகிறோம். ஆயுர்வேதத்தில் ஆஸ்த்மாவிற்கு தமக சுவாசம் என்று பெயர்
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]


ஆஸ்துமாவுக்கு காரணம் என்ன?
ஒவ்வாமையை உண்டு பண்ணக் கூடிய தூசிகள், ஒட்டடை, பூனை, நாய், மாடு போன்ற மிருகங்களோட முடி, புகை, குளிர்ந்த பனிக்காற்று, பார்த்தியான (மூக்குத்தி குலை செடி) செடியிலிருந்து வரும் காற்று, நம்ம தலையணை படுக்கை பெட்ஷீட்டோடு இருக்கும் ‘டஸ்ட் மைட்’ என்ற கோடிக்கணக்கான நுண்பூச்சிகள் ,வேலை செய்கின்ற இடத்திலிருந்து வரும் புழுதிகள், அலர்ஜியை உண்டுபண்ற உணவுகளான மீன், இரால், நண்டு, தயிர், சாக்லேட் ,பச்சை வாழைப்பழம் ,வெண்டைக்காய், கெட்டுப்போன சாப்பாடு, குளிர்ந்த தண்ணீர் (Ice Water) ப்ரிட்ஜ்ல வைத்து சாப்பிடுகிற நாளான சமைத்த உணவு, நச்சுகலந்த குளிர் பானங்கள் (Soft Drinks) பீடி, சிகரெட், புகையிலை, இது போன்ற காரணங்களால வருகிறதை ஆங்கில மருத்துவத்தில் Atopic Asthma(ஆரம்ப நிலையில வருவது ) இதுக்கு மேல் சொன்ன அலர்ஜன்கள் (ஒவ்வாமையை உண்டுபண்ணக்கூடியவை) காரணமாக அமைந்து விடும் Non Atopic Asthma (தாமதமாக வருவதற்கு )வுக்கு பொதுவாக infection-ம் அதிகமான உடற்பயிற்சிகள். Fan-க்கு நேர் கீழேபடுப்பது, சில மருந்துகள்(like propanalal ), Air Condition Room ,மன அழுத்தம் சோகம் அதாவது அலர்ஜி இல்லாம கூட காரணமாக அமைகிறது. ஆஸ்த்மாவை அதனால் தான் Psychosomatic Disease (மனசும் உடம்பும் காரணமாக அமைகின்ற வியாதி) ன்னு சொல்கிறார்கள் .ஆயுர்வேதத்தில் ஆஸ்த்மாவுககு நுரையீரல் சம்பந்தப்பட்டதில்லாம வயிறுதான் மிக முக்கிய காரணம் சொல்கிறது
[You must be registered and logged in to see this link.]

ஆஸ்த்மாவால் என்ன கஷ்டம் வரும்
சுவாச நாளங்கள் சுருக்கமும் (Broncho Spasm),mass cell - லோட கிளர்வும், Histamin என்ற நொதி உருவாக்கமும் பொதுவாக மூச்சுவிடறதுக்கு சிரமம், தொண்டையில் அரிப்பு தொடர்ந்து வறட்டு இருமல் பூனைகத்துதல் மாதிரி இழுப்பு, நெஞ்சில் அழுத்தம், விடியல் காலையில் அலாரம் வச்சமாதிரி படுத்துகிடக்கிறவனை உட்கார வைக்கிற அளவுக்கு கஷ்டம், அதிகம் பேசகூட முடியாத அளவுக்கு சிரமம் போன்ற மரண அவஸ்தைகளும் கொடுக்கும் பொதுவாக பார்த்தோம்னா இளைப்பு நோயாளிகளுக்கு ஆரம்ப நாட்களல்ல செரிமானக் கோளாறு மலக்கட்டு அல்லது பேதி ,வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் (வயிறுகூட ஆஸ்த்மாவுக்கு காரணமானது) ,நாள்பட்ட இருமல் கூட இருந்திருக்கும்.

[You must be registered and logged in to see this link.]
எப்ப எப்ப வரும்
ஆஸ்த்மா எவ்வளவு நாளைக்கு ஒரு முறை எந்த வேகத்தில் வரும் என்பது ஒவ்வொருவரோடு உடம்பை பொறுத்தது. சிலருக்கு Episodic-க்கா, சிலருக்கு Mild Episodic-க்கா, நவம்பர் -லிருந்து பிப்ரவரி மாதம் வரைக்கும், சிலருக்கு Season-ல பனிமழை நாட்களிலும் , சிலருக்கு வறட்சியான கோடைகாலத்திலும் , AC Room விட்டு வெளியிலே வந்தாலும், சிலருக்கு AC Room -லையும் வரும் Episodic, Severe Acute Asthma (Status asthmaticus) Chronic asthma-என்று வருகிற வேகத்தை வைத்து அதை பிரிக்கலாம்.


[You must be registered and logged in to see this link.]

ஆஸ்த்மா இருக்கு - என்ன பண்ணலாம்?
முதல்ல எந்தெந்த காலங்கள்ல என்னென்ன காரணத்தில ஆஸ்த்மா வருதுன்னு ஆராயணும், பின்ன அதையெல்லாம் தவிர்கணும் நுரையீரலுக்கும் வயிற்றுக்கும் பலம் தரக்கூடிய மருந்துகளை முறையா சாப்பிடணும், உடம்போட எதிர்ப்பு சக்தியை கூட்டணும் வயிற்றில் ஆஸ்த்மா தொடங்கி நுரையீலை தாக்குவதால் வயிறுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும், வயிறை சுத்திப் பண்ணி பசியைத்தூண்டி (தீபனம்) அஜீரணத்தை போக்கி (பாசனம்) முறையாக மருந்துகளை எடுக்கணும்..

[You must be registered and logged in to see this link.]

சுவாசத்திற்கு பரிந்துரைக்கப்படும் ஆயுர்வேத - சாஸ்திர மருந்துகள்
கஷாயம்
1. தசமூலகடுத்ரயாதி கஷாயம்
2. நாயோபாயம் கஷாயம் (குருந்தொட்டி, ஜீரகம், சுக்கு)
3. பலாஜீரகாதி கஷாயம்
4. ஏலகனாதி கஷாயம்
5. வ்யாக்ரயாதி கஷாயம்

அரிஷ்டம்
6. கனகாசவம்
7. வாசாரிஷ்டம்
8. பார்தாத்யாரிஷ்டம்

லேகியம், க்ருதம்
9. அகஸ்தய ரசாயனம்
10. தஷமூல ரசாயனம்
11. சயவன ப்ராசம்
12. கூஷ்மாண்ட் ரசாயனம்
13. தாம்பூல ரசாயனம்
14. வ்யாக்ரி ஹரிதகி, தசமூல ஹரிதகி
15. கண்டகாரி அவலேஹம் ,கண்டகாரி கிருதம்
16. க்ஷீரஷட்பல க்ருதம், ராஸ்னா தஷமூலாதி க்ருதம்

சூரணம்

17. தாளிசாதி சூரணம், சீதோபலாதி சூரணம், ஷ்ருங்கயாதி சூரணம், ஏலாதி சூரணம், கற்பூராதி சூரணம், வ்யோஷாதி சூரணம், ஷட்யாதி சூரணங்கள்

குளிகை
18. சந்திரரோதயரசம், கபசிந்தாமணி ரசம், லக்ஷ்மிவிலாச ரசம், பிரவாள சந்திரோதயம், சுவாச காசசிந்தாமணி, ஸ்வர்ணமாலினி வசந்த ரசம், சுவாசகுடாரம், சுவாசானந்தம் ,த்ரைலோகிய சிந்தாமணி, வாயுகுளிகை, தான்வந்திரம் குளிகை, ப்ராபாகரவடி, வ்யோஷாதிவடி.
பஸ்மங்கள்
19. முக்தா பஸ்மம், பவள பஸ்ம, ஷ்ருங்கி பஸ்மம், மல்ல செந்தூரம், தாளக பஸ்மம்.

சரகர் சொல்கிற 55 மகாகஷாயங்களில்
சுவாசஹர மூலிகைகள் (சுவாசஹர மகா கஷாயம்)
பூலாங்கிழக்கு, புஷ்கர மூலம், புளி வஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப் பாலை, காட்டுக் கோரைக் கிழங்கு ஆகிய 10 மூலிகைகள்.

காசஹர மகா கஷாயம்
திராட்சை, கடுக்காய், நெல்லிக்காய், அரிசி திப்பிலி, காஞ் சொறி, கர்க்கட ஸ்ருங்கி, கண்டங்கத்திரி , வெள்ளை சாரணை, சிவப்பு சாரணை, கீழாநெல்லி ஆகிய 10 மூலிகைகள்.


ஆயுர்வேதம் சொல்கிற ஆதாரப்பூர்வமான அனுபவ வைத்திய முறைகள்

 • அகில் சூரணத்தை தேனில் சாப்பிடலாம் (சரக .சிகிச்சை. 17 129)


 • கொடம்புளியை சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம் (சரக .சிகிச்சை. 17 104)


 • இஞ்சி சாறை தேனில் கலந்து சாப்பிடலாம் (ஹரித சம்ஹிதை 312.38)


 • எருக்கம் பூவை, மிளகில் வைத்து அரைத்து அதனை பார்லியில் வேக வைத்து சாப்பிடலாம். (சுஸ்ருத உத்தர சி. 36.37)


 • சீமை அமுகரா சாம்பலை தேனில் குழைத்து சாப்பிடலாம் (சரக .சிகிச்சை.17.117)


 • சுக்கு, இந்துப்பு, சிறு தேக்குடன் 2 பங்கு சர்க்கரையுடன் வெந்நீரில் சாப்பிடலாம் (சரக .சிகிச்சை. 17. 109)


 • தான்றிக்காய் சூரணம் தேனுடன் சாப்பிடலாம் (அஷ்டாங்க ஹ்ருதயம் சிகிச்சை .3. 173)


 • சிறுதேக்கு, சுக்கு, மிளகுடன் யவக்ஷாரத்துடன் தேனுடன் (சரக .சிகிச்சை 17. 110 சுஸ்ருத உத்தர சி 39)


 • காரிசலாகண்ணியும் கடுக்காய் சேர்ந்த தைலம் (K.K..16. 11)


 • பரங்கி சாம்பிராணி, குக்குலு, அகில், தாமரையுடன் நெய் சேர்த்து புகை பிடிக்கலாம் (அஷ்டாங்க ஹ்ருதயம் சிகிச்சை.4.10)


 • பழைய நெய்யுடன் கடுக்காய் தோல் சேர்த்து உண்ணலாம். (சுஸ்ருத உத்தர சி. 51-16)


 • மஞ்சளுடைய சாம்பலை தேனுடன் (S.B. 4-370)


 • வயல் நண்டு - 20 எண்ணம் 5 மிளகோடு சேர்த்து பச்சையாக இடித்து சாறு பிழிந்து காலை வெறும் வயிற்றில் உண்ணுதல் நலம்.


 • கண்டங்கத்திரியும் சமஅளவு நெல்லிக்காயும் பாதி அளவு பெருங்காயமும் தேனுடன் சேர்த்து உண்ண 3 நாளில் குணம் தெரியும்.(சுஸ்ருத உத்தர சி. 51.55)


 • வெல்லத்துடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட கற்பூரம் (S.B. 4. 386)


 • கர்கட ஸ்ருங்கியுடன் காய்ச்சப்பட்ட கஞ்சி (சரக .சிகிச்சை.17.101)


 • வேலிப்பருத்தி வேர் முசுமுசுக்கை வேர் திப்பிலியுடன் தினமும் சாப்பிடலாம்.


 • கொள்ளு சூப் ஆஸ்துமாவுக்கு நல்லது. (சுஸ்ருத உத்தர சி.. 51-31)


 • ஜடாமன்ஜில் ஊமத்தை பூவில் வைத்து புகைக்கலாம். (சரக .சிகிச்சை 17-78)


 • மாதுளை இலையை எரித்து சாம்பலாக்கி அந்த நீருடன் வேம்பு பேய்புடல் சிறு பயிர், திடுகடுகு சாப்பிட (சரக .சிகிச்சை.17-97)


 • காசமர்த இலை கஷாயத்துடன் சேர்த்து சமைக்கப்படும் முள்ளங்கி, முருங்கை விதை (சரக .சிகிச்சை. 17-99)


 • நொச்சி இலை சாறுடன் காய்ச்சி தயாரிக்கப்படும் நெய் (சுஸ்ருத உத்தர சி. 32. அஷ்டாங்க ஹ்ருதயம் சிகிச்சை.3-57)


 • பூண்டு அல்லது வெங்காய வேர் தாய்ப்பாலுடன் கலந்து மூக்கிலிட விக்கல் மற்றும் இளைப்பு தீரும் (சரக .சிகிச்சை. 17.131)


 • திப்பிலி, அங்கோட்ட வேர் இந்துப்பு சேர்த்து t உண்ணலாம் (K.K.. 16-17)


 • ஏழிலம் பாலை பூ அல்லது சிரிஷம் (முன்னை பூ) உடன் திப்பிலி சேர்த்து தேனுடன் உண்ண ஆஸ்துமா தீரும். (சரக .சிகிச்சை. 17-114சுஸ்ருத உத்தர சி 51-36அஷ்டாங்க சங்க்ரகம் சிகிச்சை 6-35)


 • தாளிசபத்திரியுடன் ஆடாதொடை இலை சாறு ஆஸ்துமாவை குணமாக்கும் (சரக .சிகிச்சை. 17-145-148 சுஸ்ருத உத்தர சி 51-20 ஹரித சம்ஹிதை 3-10-27)


 • திரிபலாவை திப்பிலியுடன் சேர்த்து உண்ண ஆஸ்துமா குணம் தெரியும். (சாரங்க தர சம்ஹிதை 2-6-37)


வராமல் தடுப்பது எப்படி?


எது எது ஒத்துக்கொள்ளவில்லையென்று தெரிஞ்சு தவிர்க்கணும், மேலும் முறையான மூச்சு பயிற்சி, பிராணயாமம், தியானம், அமைதியான மனநிலை அவசியம். தயிர் ,பழைய சோறு, பிரிட்ஜ் உணவுகள், பச்சை வாழைப்பழம் எண்ணெயில் பொரித்த உணவுகள் தவிர்த்தல் நலம். இரவு மிக எளிதாக செரி,மானம் ஆகக்கூடிய உணவுகளையும், எப்பொழுதும் எல்லாவிதமான உணவுகளையும் சூடாகவே உட்கொள்ளணும். புகைப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்தணும். முறையான சிகிச்சை எடுக்கணும்..


ஆயுர்வேதத்தில் மிக எளிமையாக ,முழுமையாக ஆஸ்த்மாவை சரி செய்யலாம் .எனது அனுபவத்தில் இதனை மிக எளிமையாக செய்கிறோம் .நஞ்சறுப்பான் ,மற்றுமுள்ள சரகர் சொன்ன சுவாசஹர கசாயத்துடன் பவள பஸ்மம் +ஸ்ருங்கி பஸ்மம் சேர்த்து நாங்கள் மாத்திரைகளாகவும் ,பொடியாகாவும்,டானிக்காகவும் தந்து முழுமையாக சரி செய்திவிடுவோம்

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

View user profile http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma) Empty Re: சுவாசம் : (ஆஸ்த்மாவும் ஆயுர்வேதமும்) (Bronchial Asthma)

Post by மருத்துவன் on Wed 22 Dec 2010, 10:27 am

மிக அருமையான விளக்கம் -நன்றி

மருத்துவன்
உதய நிலா
உதய நிலா

Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum