ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    கறுப்பு மூலிகை

    Go down

    கறுப்பு மூலிகை Empty கறுப்பு மூலிகை

    Post by Admin Tue 12 Oct 2010, 11:17 pm

    மூலிகைகள் இயல்பாக இருக்கும் நிறத்திலிருந்து மாறுபட்டு கறுப்பு வண்ணத்தில் அவற்றை வளர்த்து அதைக் கற்பமுறையில் உண்டால், நீண்ட நாள் வாழலாம் என்பது சித்தர்களின் கருத்தாக இருக்கிறது.

    இரண்டாள் மட்டம் குழியில் நிறையச் சேங்கொட்டையைப் போட்டு மூடி, அதன்மேல் கரு நெல்லி, கருநொச்சி, கஞ்சா, கொடி வேலி வைத்து வளர்க்க அவை கருத்து வளரும். அவற்றை முறையாக உண்ண கற்பமாகும்.

    இடுப்பளவு குழியில் சேங்கெட்டை இரண்டு முழ உயரம் கொட்டி, மண்போட்டு மூடி, நீர் பாய்ச்சி நன்றாக அழுகச் செய்து மூன்று திங்களுக்குப் பின்,

    குமரி, ஓமம், கஞ்சா, வல்லாரை, கரிசாலை, செருப்படி, நீலி, வீழி, பொற்றலை, நொச்சி, கரந்தை, மத்தை, தும்பை, கொல்லன் கோவை, வாழை ஆகியவற்றைப் பதியமிடவும். அவை நன்றாக வளர்ந்து காய்ந்த பின் அவ்விதைகளை முன்போலவே சேங்கெட்டை யிட்டுப் பாத்திக் கட்டி, வளர்த்துஇவ்வாறு நான்கு முறை வளர்த்தால் சிறப்பான கருப்பு மூலிகையாகும். இவ்வகை மூலிகைகைளை மலைதோறும் சித்தர்கள் வளர்த்துள்ளார்கள். அவ்வகை இலையைக் கசக்கி, கொக்கின் இறகில் பூச, அவ்விறகு காக்கை நிறம் போலாகும். அவ்விலைகளைத் தின்றால் காய சித்தி அடைந்து பல்லாண்டு வாழலாம். மேற்கண்டவாறு வளர்க்கப் பெற்ற கறுப்பு மூலிகை களை உண்டு காயசித்தி பெற்ற சித்தர்கள் வருமாறு:

    மச்சமுனி வல்லாரை பலர் குமரி

    கமலமுனி கொடுவேலி காலாங்கி ஓமம்

    பிரமமுனி செறுப்படை சிவயோகமுனி இராமதேவர் கரிசாலை

    வாசமுனி பொற்றலை பிரமமுனி நீலி

    கோரக்கர் கஞ்சா/பொற்றலை கஞ்சமலைச் சித்தர் வீழி

    கொங்கணர் கரிசாலை பதஞ்சலி கரந்தை

    சொரூபாநந்தர் திருமேனி நந்தீசர் கோவை

    போகர் கொல்லங் கோவை

    மேற்கண்டவர்கள் மூலிகைகளை முறைப்படி உண்டு காயசித்தி பெற்று நீண்ட நாள் வாழ்ந்திருந்ததாக அறியப்படுவதனால் மூலிகையின் சிறப்புகள் அறியப்படும்.

    மூலிகைகளைப் பற்றிய அறிவு சித்தர்களிடையே மிகுந்திருந் தற்குச் சான்றாகக் கீழ்க்கண்ட பாடல் விளங்கக் காணலாம்.

    "" போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு

    புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்

    வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்

    மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு

    நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்

    நொடியிலே காயசித்தி கிடைக்கு மப்பா

    போக்கான பூ பூத்த மற்றாநாள் பழமாம்''

    என்று, கிளிமூக்கு மரம் அதன் காயின் வடிவத்தால் ஆகுபெயராய் அம்மரத்திற்குப் பெயர் அமைந்துள்ளது. இலையின் வடிவம், பூ பூத்த மறுநாளே பழம் பழுக்கும் என்னும் அரிய செய்தியுடன்,அதன் பழத்தை உண்ட உடனே காய சித்தி கிடைக்குமென்று கூறுவதைக் காணும் போது, மூலிகைகளைச் சித்தர்கள் நுட்பமாக ஆராய்ந்திருந்ததை உணரலாம்.

    போக்கான கிளிமூக்கு மரம தொன்று

    புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்

    வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்

    மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு.

    என்று, பிறநூல்களும் ஒத்த பாடல்களால் அம்மரத்தைப் பற்றி கூறக் காணலாம்

    இந்தியா முழுவதும் ஏறக்குறைய 8,000 மூலிகைகள் பல்வேறு மருத்துவப் பயன்பாடுகளில் பயன்படுத்தப் படுகின்றன. சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் ஒவ்வொன்றிலும்,சராசரியாக 1700 முதல் 1900 மூலிகைகள் வரை பயன்படுத்தப் படுகின்றன. இவை தவிரவும், கிராமிய மருத்துவ முறைகளில் (ஊணிடூடு டஞுச்டூt tணூச்ஞீடிtடிணிண) பயன் படுத்தப்படும் மூலிகைகளின் எண்ணிக்கை அதிகமானதாக உள்ளதைப் பெங்களூரைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் பாரம்பரிய மருத்துவ மறுமலர்ச்சி அறப் பேரவை தகுந்த ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15,000 பூக்கும் வகைத் தாவரச் சிறப்பினங்களில் பாதியளவு தாவரங்கள் மருத்துவப் பயன்பாடு உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தைப் பொறுத்த அளவில், ஏறக்குறைய 2000 தாவரங்கள் பல்வேறு மருத்துவ முறைகளில் பயன்படுத்தப் படுகின்றன. இதில் பல தாவரங்கள் தமிழகத்தில் விளையாமல், பத்து சதவீதம் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டு, கச்சா மருந்துகளாகக் கிடைக்கின்றன என்று மருத்துவ மூலிகை ஆய்வறிஞர் முனைவர். என். லோகநாதன் தெரிவிக்கிறார்.’’

    இவற்றிலிருந்து மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் உண்மையான நிலைமை புலப்படும். ஆனால், சித்த மருத்துவ நூல்களில், மருத்துவத்துக்காகப் பயன்பட்ட மூலிகைகளின் முழு விபரங்கள் காணப்படவில்லை. காரணம், அவ்வாறான நூல்கள் அருகி விட்டன போலும்.

    சென்னை, அரும்பாக்கத்தில் செயல்படும் இந்திய மருத்துவத் துறை வெளியிட்ட குணபாடம்மூலவர்க்கம் நூலில் ஏறக்குறைய 800 மூலிகை இனங்களின் பெயர்களும், அவற்றின் மாற்றுப் பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளன.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum