ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ரக்த பித்த ரோகதிர்க்கு சிகிச்சைகள்

    Go down

    ரக்த பித்த ரோகதிர்க்கு சிகிச்சைகள்  Empty ரக்த பித்த ரோகதிர்க்கு சிகிச்சைகள்

    Post by Admin Mon 18 Oct 2010, 5:17 pm

    ரத்த பித்த சிகிச்சை

    ரத்த பித்த உபசாரங்கள் :- ரத்த பித்த ரோகம் உண்டான மனிதனுக்கு வாதபித்த சிலேஷ்மமானது பிரகோபித்தாலும் பலம், மாமிசம் இவைகள் மாத்திரம் கொடாமல் இருந்தால் உபசாரங்கள் மாத்திரம் செய்தல் நலம். ரத்த பித்தமானது வாயினால் வந்தால் விரேசனத்தைக் கொடுக்கவேண்டும். கீழ்முகமாகிய குதஸ்தானத்
    திலிருந்து விழுந்தால் வாந்திக்கு கொடுக்கவேண்டியது. வலிவுடன் கூடிய மனிதன் இந்த ரோகம் ஜனித்த பொழுதேதகுதியான சிகிச்சை செய்யாமல் போவானாகில் அவனுக்கு இருதயநோய், கிரகணி, பாண்டு, பீலிகை, குன்மம், உதரரோகம் முதலிய நோய்களை யுண்டாக்கும்.

    மாமிஷம், பலம், ஷீணித மனிதர்களுக்கும், பிள்ளைகளுக்கும் கிழவர்களுக்கும்,கபலவீனமுடையவர்களுக்கும்,ரத்தபித்த ரோகத்தில் வாந்தியாவதற்கும் பேதியாகிறதற்கும் ஒளஷிதங்களை கொடுக்கக்கூடாது. உபச்சாரம் மாத்திரம் செய்யவேண்டியது.

    ரத்தபித்தம் அதோமுகமாக வெளியாகும் ரோகிக்கு கஞ்சி முதலியது கொடுத்து ரத்தாதிசார உபச்சாரங்களை செய்ய வேண்டியது. அதாவது ஆறிய பால் மாமிசரசங்கள், கஞ்சி, அரிசி, மாவுரொட்டி, பித்தசமன பதார்த்தங்கள், சிறுகடலை, பச்சைப்பயறு கடலை தண்ணீர்விட்டான்கிழங்கு துவரை இவைகளின் ரசங்கள், கட்டுகள் முதலியவைகளை கொடுக்கலாம்.

    இரத்தபித்தத்திற்கு திரிபலாதி கியாழம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கொன்னைவேர் இவைகள் சமஎடையாக கியாழம் வைத்து தேன் சர்க்கரை கலந்துச் சாப்பிடவும். இதானால் நானாவிதங்களான ரத்தபித்தங்கள் அதிக அனலுடன் கூடிய பித்த சூலைகள் இவைகள் நீக்கும்.

    சந்தனாதி கியாழம் :- குருவேர், அல்லித்தண்டு, கொத்தமல்லி சந்தனத்தூள், அதிமதூரம், சீந்தில்கொடி, வெட்டிவேர், ஆடாதோடை, இவைகள் சமபாகம் கியாழம் வைத்து தேன் சர்க்கரை கலந்து கொடுத்தால் கோரமான ரத்தபித்தம், சுரம், தாகம், இவைகளை நிவர்த்திக்கும்.

    இஷ்வாதி கியாழம் :- மேல்தோல் சீவிய கரும்புத்துண்டு கள், கருமல்லி சமூலம், வெள்ளைத்தாமரை, புஷ்ப இதழ்கள், அதிமதூரம், தாமரைத்தண்டு, ஆலம்விழுது முனைகள், திரா¨க்ஷகர்ஜீரம் இவைகள் சமஎடையாக கியாழம் வைத்து தேன் சர்க்கரை கலந்துச் சாப்பிட்டால் பிரமேகத்துடன் கூடிய ரத்தபித்தம், நிவர்த்திக்கும்.

    சந்தனாதி கியாழம் :- சந்தனம், வெட்பாலை, வட்டத்திருப்பி கடுகுரோகணி, பூனைக்காஞ்சொரி, சீந்தில்கொடி, குருவேர், லோத்திரம் இவைகள் சமஎடை கியாழம் வைத்து இத்துடன் திப்பிலி சூரணம் போட்டு தேன் கலந்து கொடுத்தால் கபயுக்தமான ரத்தபித்தம்தாகம், இருமல், சுரம் இவைகளைப் போக்கும்.

    உசீராதி கியாழம் :- வெட்டிவேர், சந்தனம், சுக்கு, அதிமதூரம், திரா¨க்ஷ, இவைகள் சமஎடை கியாழம் வைத்து இத்துடன் திப்பிலி சூரணம் போட்டு தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தபித்தம், நிவர்த்திக்கும்.

    அமிருதாதி கியாழம் :- சீந்தில்கொடி, அதிமதுரம், கர்ஜீரம், ஆனைத்திப்பிலி இவைகள் சமஎடை கியாழம் வைத்துச் சாப்பிட்டால் ரத்தபித்தம் நீங்கும்.


    முத்காதி கியாழம் :- பச்சைபயறு, நெல்பொரி, யவதானியம், திப்பிலி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, சந்தனம், சிற்றா முட்டி இவைகள் சமஎடை எடுத்து இடித்து முன்னாளில் ஜலம் வார்த்து ஊறவைத்து மறுநாள் கியாழங் காய்ச்சி சாப்பிட கஷ்டமான ரத்தபித்தம் நீங்கும்.


    அதிமதுரக் கியாழம் :- அதிமதுரத்தை பாலில்போட்டு காய்ச்சி ஆறவைத்து சர்க்கரை தேன் கலந்துகொடுத்தால் ரத்தபித்தம் நிவர்த்தியாகும்.


    ஆடரூஷாதி கியாழம் :- ஆடாதோடை ரசம், தினை அரிசி, ரசாஞ்சனம், லோத்திர சக்கை இவைகள் சமஎடை கியாழம் வைத்து சர்க்கரை தேன் கலந்துகொடுத்தால் ரத்தபித்தம் நீங்கும்.


    வாசாதி கியாழம் :- ஆடாதோடை, கருஅல்லித்தண்டு, தினை அரிசி, லோத்திர சக்கை, அதிமதுரம், தாமரைப்பூ இவைகள் சமஎடை கியாழம் வைத்து சர்க்கரை தேன் கலந்துகொடுத்தால் அதிவேகத்துடனிருக்கும் ரத்தபித்தம் நீங்கும்.


    ரத்தபித்தகுடார ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கந்த கம், பவழபற்பம், சுவர்ணமாக்ஷ¢கபற்பம், நாகபற்பம், சிங்கிபற்பம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு சந்தனம், தாமரை, சண்பக மொக்கு, ஆடாதோடை இலை, கொத்தமல்லி, ஆனைத்திப்பிலி, தண்ணீர்விட்டான்கிழங்கு, இலவன் இலை, ஆலம்விழுது, சீந்திகொடி, இவைகளின் ரசங்களினால் தனித்தனி மூன்றுமுறை அரைத்து சிமி ழில் வைத்துக்கொண்டு வேளைக்கு 2-குன்றிஎடை வீதம் ஆடாதோடை இலைரசம், தேன் இவைகளுடன் கலந்து சாப்பிட்டால் ரத்தபித்தம் நீங்கும். ரத்தபித்தரோகிகளுக்கு இதற்கு சமமான ஔஷதம் வேறு கிடையாதென்று அறியவேண்டியது.


    சதாநிதி ரசம் :- சுத்திசெய்த கெந்தி, பாதரசம், சுவர்ணமாக்ஷ¢க பற்பம், லோஹபற்பம் இவைகள் சமஎடை திரிபலை கியாழத்தினால் அரைத்து இரும்பு பாத்திரத்தில்வைத்து மாத்திரைசெய்து இரவில்
    கொடுத்தால் ரத்தபித்தம் நீங்கும்.


    ரத்தபித்தத்திற்கு கர்ஜீராதி ரசாயனம் :- கர்ஜீரபழம் 40-பலம், ஒரு மரக்கால் ஜலத்தில்விட்டு கியாழம் காய்ச்சி அதில் 40-பலம், சர்க்கரை கலந்து பசும்பால் 40-பலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து பாகுபதம் வரும்போது அதில் நன்னாரிவேர், குடசப்பாலைவேர், திரிகடுகு, திரிசாதங்கள், ஜடாமாஞ்சி, திரிபலை,
    கொத்தமல்லி, சதாப்பிலை, கிச்சிலிக்கிழங்கு, காட்டுமிளகு, கோரைக்கிழங்கு, சந்தனம், கிருஷ்னாகரு, கண்டுபாரங்கி, தக்கோலம், வெட்பாலை, கிறாம்பு, கருஞ்சீரகம், வெட்டிவேர், குருவேர்,கோஷ்டம் விலாம்பழம், திரா¨க்ஷ, குங்குமப்பு, பருத்திவிரைப்பருப்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, இவைகள் வகைக்கு 2 பலம் சூரணம் செய்து
    போட்டு பசுநெய் 20 பலம் விட்டு கிண்டி கீழிறக்கி, ஆறினபின்பு 40 பலம் தேன் கலந்து லேகியபாகமாக கிளரி தானியபுடமிட்டு வைத்துக் கொள்ளவேண்டியது.


    இதில் வேளைக்கு நெல்லிக்காய் அளவு வீதம் தினம் இருவேளையாக ஒரு மாதம் அல்லது மூன்று மாத காலம் வரையிலும் சாப்பிட்டுவந்தால் ரத்தபித்தம், ஆமிலபித்தம், சிரொப்பிரமணபித்தம் பீடகபித்தம், ஸ்போடகபித்தம், இரண்டு வித பைத்தியங்கள், இருமாதம், அக்கினிமாந்தம், உன்மாதசூலை, தாபம், அசீரணம், அரிசி தாகம் இவைகளை நீக்கும்.


    ரத்தப்பித்தத்திற்கு உதிராதி சூரணம் :-நன்னாரிவேர்ப்பட்டை மரமஞ்சள், லோத்திரப்பட்டை, ஞாழல், ஜாதிக்காய், தாமரைத் தண்டு, சந்தனம் இவைகள் சமஎடையாகச் சூரணித்து சர்க்கரை கலந்து கழுநீரில் சாப்பிட்டால் ரத்தபித்தம், தாகம் இவைகளை நீக்கும்.


    மிருத்விகாதி சூரணம் :- திரா¨க்ஷ, சந்தனம், லோத்திரப்பட்டை, ஞாழல்பூ இவைகள் சமஎடையாகச் சூரணித்து தேன் ஆடாதோடை இலை ரசம், இவைகளுடன் கலந்து சாப்பிட்டால் முகம், குதம், யோனி, லிங்கம் இவைகளிலிருந்து வேகமாக வெளியாகும் ரத்தபித்தம் நீங்கும்.


    மேலும் உடலில் ஆயுதங்களினால் உண்டாகும் ரத்தவாகத்திற்கு இம்மருந்தை மேலுக்கு தடவினால் உடனே ரத்தம் நின்று விடும். லிங்கத்திலிருந்த்து ரத்தம் அதிகமாக வெளிவந்தால் இம்மருந்தை வஸ்திகர்மஞ்செய்ய வேண்டியது.


    சந்தனாதி சூரணம் :- சந்தனம், ஜடமாஞ்சி, லோத்திரம், வெட்டிவேர், தாமரைப்புஷ்ப இதழ்கள், சிறுநாகப்பூ, வில்வம்பழம், கோரைக்கிழங்கு, சர்க்கரை, குருவேர், வட்டத்திருப்பி வெட்பாலை விரை, அல்லித்தண்டு, சுக்கு, அதிவிடயம், காட்டாத்திப்பு, மாங்கொட்டைப்பருப்பு, அதிமதூரம், நாவல்பருப்பு, சீந்தில் சர்க்கரை கரும் அல்லித்தண்டு, மஞ்சிஷ்டி, ஏலக்காய், மாதுழம்பழத்தோல்இவைகளுடன் சாப்பிட்டால் அதிசாரம், வாந்தி, மாதர்களுக்கு அதிரத்தம் வடிதல், கருப்பசிராவம், ரத்தபித்தம் இவைகள் நீங்கும்.s


    பத்திரகாதி சூரணம் :- தாளிசபத்திரி 2 பலம், தாள் சின்னி 4 பலம், ஏலக்காய் 6 பலம், கெந்திதகரம் 8 பலம், சந்தனம் 10 பலம் கருஞ்சிவதை 12-பலம், சுக்கு 14-பலம், அதிமதுரம் 16-பலம், அல்லித்தண்டு 18-பலம், நெல்லித்தோல் 20-பலம், ஆடாதோடை 22-பலம் இவைகள் யாவையுஞ் சூரணித்து சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட்டால் சுரம், ரத்தபித்தம், காசம், க்ஷயம், ரத்தமூத்திர கிருச்சிரம், ரத்த வாந்தி, தேக இளைப்பு, தாபம், பிரமை, ஊர்த்துவ வாதம், இரைப்பு, விக்கல், இருதயரோகம், மனதுபாதம், சரீர தாபம், யோனிரோகம், பெரும்பாடு, மேற்புறம் கீழ்ப்புறம் வெளி யாகும் ரத்தம், குதம், மூக்கு, ஆண்குறி, பெண்குறி இவைகளால் மிகவும் ரத்தத்தைவெளியில் தள்ளும் ரத்தபித்தம் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.


    கர்ப்பூராதி சூரணம் :- பச்சைக்கர்ப்பூரம் 1-பலம், கங்கோலம் 2-பலம், ஜாதிக்காய் 3-பலம், ஜாதிப்பத்திரி 4-பலம், கிராம்பு 5-பலம், மிளகு 6-பலம், திப்பிலி 7-பலம், சுக்கு 8-பலம், இவைகளை மைப்போல் சூரணித்து இவைகளுக்குச் சமம் சர்க்கரை கலந்து கொடுத்துவர ரத்தபித்தம், பீனசம், சுவாசம், இருமல், அருசி,
    இருதயரோகம், இவைகளை நிவர்த்திக்கும். அக்கினிதீபனத்தை உண்டாக்கும்.


    கூஷ்மாண்டாதி லேகியம் :- பழுத்த பெரியகலியாணபூசினி காயைக் கொண்டுவந்து அதன்மேல் உள்ள தோல் விரை இவைகளை எடுத்துவிட்டு கண்டசதையை சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
    இந்தத் துண்டுகள் 200-பலம் ஜலத்தில்ப்போட்டு பேர்பாதி ஜலம் மீறும்படியாக வேகவைத்து அது ஆறியபிறகு அந்தத் துண்டுகளை எடுத்து வஸ்திரத்தில் மூட்டைக்கட்டி செவ்வையாய் பிழிந்து அந்த கியாழத்தை அப்படியே வைத்துக்கொண்டு அந்தத் துண்டுகளை தாம்பிர பாத்திரத்தில் வைத்துலர்த்தி 16-பலம் நெய் கலந்து தேன்
    வர்ணம் வருகிறவரையிலும் சிவக்க வறுத்து அந்தக் கியாழத்தை அதில் வார்த்து 100-பலம் சர்க்கரை சேர்த்து பாகுபிடித்து அதில் திப்பிலி, சீரகம், சுக்கு இவைகளின் சூரணம் தனித்தனி 2-பலம், கொத்தமல்லி, சாதிப்பத்திரி, மிளகு, தாள்சின்னி இவைகள் வகைக்கு 1/2-பலம் சூரணமும் தேன் 8-பலம், சர்க்கரை தேன் எடைக்கு அதிக மாகவாவது அல்லது பேர்பாதி எடையாவது சேர்த்துக்கொள்ளலாம். திரா¨க்ஷ 4-பலம், இலவங்கசூரணம் 2-பலம், பச்சைகர்ப்பூரம் 1/4-பலம் இவைகள் யாவும் சேர்த்து லேகியபக்குவமாக கிளறி
    வைத்துக்கொள்ளவும். இந்த லேகியத்தை அக்கினி பலாபலத்தை அறிந்து சாப்பிடவும். இது ரத்தபித்தம், க்ஷயம், காசங்கள், சுவாசங்கள், வாந்திரோகம், தாகரோகம், சுரங்கள் இவைகளை நிவர்ததிக்கும். வீரியவிருத்தி, தைரியம், பலம், மேனி, புஷ்டி முதலியது உண்டுபண்ணும்.


    கண்டகூஷ்மாண்ட லேகியம் :- கலியாணபூசினி ரசம் 100 பலம், பசும்பால் 100பலம், நெல்லிக்காய்த் தோல் சூரணம் 8 பலம் இவைகள் யாவையும் சேர்த்து மந்தாக்கினியால் களிபோல் ஆகிற வரையிலும் வேகவைத்து சர்க்கரை 8 பலம் சேர்த்து லேகிய பதமாக கிளறி வைத்துக்கொண்டு 1/2 பலம் விகிதம் சாப்பிட்டால் ரத்த பித்தம், ஆமலபித்தம், எறிவு, தாகம், காமாலை இவைகள் நீங்கும்.


    வாசாகண்டாதிலேகியம் :- ஆடாதோடை 100 பலம் 800 பலம் ஜலத்தில் போட்டு 200 பலம் ஜலம் மீறும்படியாக சுண்டக்காய்ச்சி 256 பலம் கடுக்காய்ச் சூரணம் கற்க்கண்டு 100பலம் சேர்த்து லேகிய பக்குவமாக கிளறி ஆறிய பிறகு தேன் 8 பலம் மூங்கிலுப்பு 4 பலம், திப்பிலிச்சூரணம் 2 பலம், சாதுர்சாத சூரணம் 1 பலம் இவைகள் யாவையும் கலந்து 1/4 பலம் வீதம் சாப்பிட்டால் ரக்தபித்தம், காசங்கள், சுவாசங்கள், கஷயங்கள், வித்திரதி
    குன்மம், தாகம், இருத்ரோகம், இவைகள் நீங்கும். இதற்கு இச்சா பத்தியம்.


    சுண்டகாவலேகியம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு, சிவ கரந்தை, சிற்றாமுட்டி, சீந்தில்கொடி, இவைகள் வகைக்கு 1 பலம் தாள்சின்னி, புஷ்கரமூலம், கண்டுபாரங்கி, ஆடாதோடை கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, கருங்காலிவேர் இவைகள் வகைக்கு 5 பலம் வீதம் சதைத்து மாஷீசபஸ்பம் 12 பலம், சுவர்ணபஸ்பம் 12 பலம், லோஹபஸ்பம் 12 பலம், கற்கண்டு 16 பலம், நெய் 16 பலம் இவைகள் யாவையும் சேர்த்து கலந்து லோக பாத்திரத்தில் லேகிய பக்குவமாக சமைத்து பிறகு தவரிஷீரி, வாய்விளக்கம், சீரகம், கருஞ்சீரகம், கடுக்காய், கடுக்காய்ப்பூ கொத்தமல்லி, மிளகு, திப்பிலி, சிறுநாகப்பூ இவைகள் வகைக்கு 1 பலம் சூரணித்து கலந்து மேற்கூறிய லேகியத்தில் ஊறிய பாண்டத்தில் வைத்து தானியபுடமிட்டு காலையில் 1/8 பலம் வீதம் சாப்பிட்டு உடனே பசும்பால் குடித்து சாப்பாடு சாப்பிட்டால் ரத்தபித்தம், ரக்தபிரவாஹிகம், ரக்தசூலை, ரக்தாதி
    சாரம், ரத்தபிரமேகம், பகந்தரம், மூலவியாதி, வீக்கம்
    ஆமலபித்தம், கஷயம், குன்மம், குஷ்டம், வாதரக்தம், பிரமேகம், சீத ரத்தம், வாந்தி, கிருமி, பாண்டுரோகம், பீலிகை, உதரம், அநாகம் மூத்திரகிருச்சிரம் இவைகள் யாவையும் நிவர்த்தியாக்கும்.


    நேந்திரங்களுக்கு ஹீதம், புஷ்டி, சந்தோஷம், ஆரோக்கியம் புத்திரோற்பத்தி, காமம், அக்கினிபலம், சம்பத்துவம் லேசத்து வம் இவைகளை யுண்டாக்கும். ஆடு புறா மான் இவைகளின் மாமி சங்கள் கொடுக்கலாம்.


    காமதேவ கிருதம் :- அமுக்கிறாக்கிழங்கு, நெருஞ்சில், சிற்றா முட்டிவேர், சீந்தில்கொடி, நிலக்கடம்பைவேர், வெள்ளை நிலப்பூசனி வேர், தண்ணீர்விட்டான் கிழங்குவேர், வெள்ளைசாரனை, அரசன் வேர், பூசினிபழம், தாமரைவிரை, உளுந்து இவைகள் வகைக்கு 10-பலம் சேர்த்து 1024-பலம் ஜலத்தில் போட்டு நாலிலொன்றாக சுண்டக்காய்ச்சி அதில் ஜீவநீயகணம், கோஷ்டம், தாமரைத்தண்டு, ரக்த சந்தனம், இலவங்கபத்திரி, திப்பிலி, திரா¨க்ஷ, பூனைகாஞ் சொரிவிரை, கரும் அல்லி, சிறுநாகப்பூ, நன்னாரி, குடசப்பாலை, பேராமுட்டி, சிற்றாமுட்டி இவைகள் வகைக்கு 1/4-தோலா விகிதம் ஒன்றாய்ச் சேர்த்து கல்வஞ்செய்து அதில்போட்டு சர்க்கரை 2-பலம்
    கரும்புரசம் 80-பலம், நெய் 80-பலம் சேர்த்து அடுப்பிலேற்றிமிருது அக்கினியால் கிருதபக்குவமாக காய்ச்சவும். இதை கொடுத்தால் ரத்தபித்தம், உரக்ஷதம், பாண்டுரோகம், வர்ணபேதம், சுரக்ஷயம், வாதரத்தம், மூத்திர கிருச்சிரம், பாரிசசூலை, காமாலை, மார்பில் எறிவு இவைகளை நிவர்த்தியாகும். மாதர்களுக்கு கர்ப்பமும், புருஷர்களுக்கு வீரிய விருத்தியும் உண்டாகும்.


    துர்வா கிருதம் :- அறுகம்புல்வேர், தாமரைபுஷ்ப இதழ்கள் மஞ்சிஷ்டி, குறுவேர், கடுக்காய்பிஞ்சி, லோத்திரவேர், வெட்டி வேர், கோரைகிழங்கு, சந்தனம், தாமரைத்தண்டு, இவைகள் தனித்தனி ஒரு தோல சூரணித்து கல்கஞ்செய்து 16-பலம் நெய்யில் போட்டு தண்டுலோதகம் ஆட்டுப்பால் இவைகள் நெய்க்கு நாலுபங்கு அதிகமாய் சேர்த்து மந்தாக்கினியால் கிருதபக்குவமாய்க்காய்ச்சி இறக்கிவைத்துக் கொள்ளவும்.


    இது கொடுத்தால் ரத்த வாந்தி நிவர்த்தியாகும். இதைநசியஞ் செய்தால் நாசிகையிலிருந்து ரத்தம் வருதலை நிவர்த்திக்கும்.


    செவிகளில் விட்டால் செவிகளிலிருந்து வடியும் ரத்தத்தைநிவர்த்திக்கும். நேத்திரத்திற்கு விட்டால் நேத்திர சிராவர்த்தகம் நிவர்த்தியாகும்.


    வஸ்திகர்மஞ் செய்தால் லிங்கம், குதம், இவைகளிலிருந்து வடி யும் ரத்தத்தை நிவர்த்திக்கும். சகல ரத்தபித்தங்கள் நீங்கும்.


    துர்வா தைலம் :- அறுகம்புல்வேர், அதிமதுரம், மஞ்சிஷ்டி, திரா¨க்ஷ, கருப்புரசம், சந்தனத்தூள், நன்னாரிவேர், கோரைக்கிழங்கு, மரமஞ்சள் இவைகள் வகைக்கு பலம்-1/2, நல்லெண்ணெய் 20-பலம், தைலத்திற்கு நான்கு பங்கு அதிகமாக பால் இவைகள் யாவையுஞ் சேர்த்து தைலபாகமாய் காய்ச்சி அப்பியங்கனம் செய்
    தால் ரத்தபித்தம், வாதம் இவைகளை நிவர்த்திக்கும். பலத்தையும் காந்தியையும் உண்டாக்கும்.


    ஆடாதோடை சுரசம் :- ஆடாதோடை சுரசம் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் கடூரமான ரத்தபித்தம் நிவாரணமாகும்.


    மத்வாதிபேயம் :- தேன், ஆடாதோடை இலை ரசம் சமபாக மாய்ச்சேர்த்து காலையில் சாப்பிட்டால் அதி கடூரமான ரத்தபித்தம் சலத்தினால் அக்கினி எப்படி அழிகிறதோ அப்படி மேற்கூறிய ரோகங்கள் நாசமாகும்.


    சதாவரியாதிபேயம் :- தண்ணீர்விட்டான்கிழங்கு, சிற்றாமுட்டி சிற்றரத்தை, பூசினி, ஈச்சு இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால், ரத்தபித்தம் சூலை இவைகள் நாசமாகும்.


    ஹரித்தக்கியாதி நசியம் :- கடுக்காய்த்தோல், மாதுளம்பூக்கள் திப்பிலி இவைகளை சலத்தினால் அரைத்து நசியஞ்செய்தாலும் சர்க்கரை பால் கோதுமைமாவை சேர்த்து நசியஞ்செய்தாலும் நாசியினின்று காணும் ரத்தப்போக்கை நீக்கும்.


    தாடிமீபுஷ்பாதி நசியம் :- மாதுழம்பூரசம் அல்லது அருகம் புல் ரசம் அல்லது மாங்கொட்டைப்பருப்புரசம், அல்லது வங்காய ரசம் இவைகளை நசியஞ்செய்தால் மூக்கிலிருந்து வெளியாகும் ரத்தம் சமனப்படும் .


    அர்த்திதகாதி நசியம் :- இஞ்சி, காவிக்கல், காட்டாத்திப்பு கடுக்காய்த்தோல், அதிமதூரம் இவைகளை முலைப்பால் விட்டரைத்து இவைகளை நசியஞ்செய்தால் மூக்கிலிருந்து வடியும் ரத்தம் நிவர்த்தியாகும்.


    ரத்தபித்தகர வமணங்கள் :- கோரைக்கிழங்கு, அதிமதூரம் வெட்பாலை, பால், தேன் இவைகளை அரைத்து சாப்பிட்டால் வாந்தியாகிற ரத்தபித்தங்கள் சமனமாகும்.


    ஆரக்வதரதிரேசனம் :- ரத்தபித்தத்திற்கு விரேசனத்திற்காக முன்னைசதை, நெல்லிவற்றல், கடுக்காய்பிஞ்சு, இவைகளில் ஏதாவது ஒன்றை கியாழத்தில் வைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து கொடுக்கவேண்டியது.


    இரத்தபித்தத்திற்கு மருந்து :- சீந்திற்தண்டு, அதிமதூரம்,சீரகம், சிறுநாகபூ, நெல்லிவற்றல், ஏலம் வகைக்கு பலம் 1/4 சீனா கற்கண்டு பலம் 1/2 இவைகளைப்பொடித்து பால் விட்டரைத்து ஒரு படி ஆவின் நெய்யில் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து வண்டல் மெழுகு பதம் வரும்போது கிருதபதத்தில் கீழிறக்கி, ஆறிய பின்பு வடித்து வைத்துக்கொள்க.


    இதில் 1, 2 தேக்கரண்டி வீதம், தினம் இரு வேளையாகத் தனியாகவாவது அல்லது சிங்கிபற்பம், சீந்தில்சர்க்கரை
    பொரித்த வெங்காரம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு நன்கு அரைத்து வைத்துள்ளதில் வேளைக்கு பணவெடை வீதம் சேர்த்தாவது அருந்திவர ரத்தபித்த ரோகங்கள் குணமாகும். சிறப்பாக வாயினின்று ரத்தம் வருதல் குணமாகும்.


    வெள்ளளெருக்குக் கிருதம் :- பசும்பால் படி-2, பசுநெய் படி-1, வெள்ளருக்குச்சாறு ப்டி-1, இவைகளை ஒன்றுக்கூட்டி ஓர் தைலபாண்டத்திலிட்டு அதில் ஏலம், விலாமிச்சவேர், மஞ்சிஷ்டி, செவ்வியம், சீசாசெங்கழுநீர் கிழங்கு, தாமரைவளையம், பேரிச்சை, முத்தக்காசு, குமிழம்பழம், சீனி, கோஷ்டம், மதுரம், இலவங்கம், இலவங்கப்பட்டை, நன்னாரிவேர் வகைக்குக் கழஞ்சி ஒன்றுவீதம் இளநீர், விட்டரைத்துக் கலக்கி அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து கிருதப்பக்குவமாய்க் காய்ச்சி வடிக்கவும்.


    இதில் வேளைக்கு ஒரு கரண்டி வீதம் தினமிருவேளையாக உண்டுவர வாயால் ரத்தம் விழுதல் தீரும். இதை மூக்கில் நசியமிட மூக்கிலிருந்து ரத்தம் வடிதலும், காதில் துளிக்க காதிலிருந்து ரத்தம் வடிதலும் குணமாகும். ரத்தபித்த ரோகத்தைப் போக்கும்.


    ரத்தபித்தத்திற்கு பத்தியங்கள் :- ரத்தபித்தம், கீழ்முகமாக வெளியாகிறவனுக்கு, வாந்திக்கும், மேல்முகமாக வெளியாகிறவனுக்கு, பேதிக்கும் கொடுக்கவேண்டியது. மற்றும் மிதமான உணவும் இதமான ஒய்வும், குளிர்ந்த நீர் அதிக உஷ்ணமில்லாத உணவு முதலியவைகளைக் கொடுத்தல் வேண்டும்.


    இரண்டிலும் அதாவது வாயினாலும், குதஸ்தானத்தினாலும் ரத்தம் ஒழுகும் ரோகிக்கு, லங்கணம், 60 நாள் பயிராகிற பழைய அரிசி, தினை, யவதானியம், பச்சைபயறு, சிறுகடலை, துவரை,
    காட்டுப்பயறு, பெரிய மீன்கள், முயல்கறி, ஊக்குருவி மாமிசம், மான் இறைச்சி, கிளைமான்கறி, புறாக்கறி, கொக்குகறி, செம்மறி யாட்டுக்கறி, க்ஷ¡ய வர்க்கங்கள், பசு, ஆடு இவைகளின் பால், நெய், வெள்ளாட்டு நெய், பலாப்பழம், சாரப்பருப்பு, வாழைப்பழம், சிறுகீரை, புடலங்காய், இஞ்சி, கலியாணப் பூசினிக்காய்,
    பனம்பழம், நுங்குகள், அதின் ஜலம், ஆடாதோடை, மாதுளம்பழம், கர்ஜீரபழம், நெல்லிபழம், சதாப்பிலை, தேங்காய், கோரைக்கிழங்கு, விளாம்பழம், சாதிக்காய், வேப்பன்பூ, வெட்பாலை, பொரி மாவு, திரா¨க்ஷ, சர்க்கரை, தேன், கரும்பு, குளிர்ந்தஜலம், ஊற்று நீர் நீராடுதல், நூறு தகுதி சுத்திசெய்த நெய்யுடன் குளிக்குதல், குளிர்ந்த இடத்தில் சஞ்சரித்தல் குளிர்ந்த காற்று, சந்தனம், நிலா விசித்திரமான கதைகளை கேழ்க்குதல், குளிர்ந்த வீடு, வைடூரியம், முத்து, முதலிய மணிகள் தரித்தல், சிகப்பு நீலோத்பலம், தாமரை இவைகளது இலைகள் மீது படுக்கை, வெண்மை வஸ்திரம், குளிர்ந்திருக்கும் உத்தியான வனங்கள், சந்தனம், பூசிக்கொண்ட மாதரை
    ஆலிகனஞ்செய்தல், ஏரிகள், நதிகள், சந்திரோதயம், பனித்தாரைகள் இவைகளில் திரிதல், செடியின்மீது நின்ற ஜலம், பச்சை கற்பூரம், இவைகள் ரத்தபித்த ரோகங்களுக்கு பத்தியமென்று அறியவேண்டியது.


    ரத்தபித்த ரோகத்திற்கு அபத்தியங்கள் :- அதிகமாக சஞ்சரித் தல், வேகநடை, வெய்யிலில் திரிதல், சூரிய கிரணங்கள், மலமூத்திரம் பந்தித்தல், குதிரைகள், ஆனைகள் இவைகள் இருப்பிடத்திற்கு யேகுதல், வியர்வை, புகைபிடித்தல், புணர்ச்சி, கோபம் வெல்லம், கத்தரிக்காய், உளுந்து, எள்ளு, கடுகு, தயிர், பால் கிணற்றுசலம், தாம்பூலம், ஊற்றுசலம், கள்ளு, வங்காயம், விருந்த அன்னம், காரம், புளிப்பு, உப்பு, உஸ்ன பதார்த்தங்கள் இவைகள் யாவும் ரத்தபித்த ரோகத்திற்கு அபத்தியங்கள் என்று அறிய வேண்டியது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum