ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -1

    Go down

    புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -1  Empty புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -1

    Post by Admin Fri 05 Nov 2010, 9:28 pm

    அத்தியாயம் : 76
    76-மருத்துவம்1
    பாடம் : 1
    அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.
    5678 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை.2
    இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    பாடம் : 2
    ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் சிகிச்சையளிக்கலாமா?
    5679 ருபய்யிஉ பின்த் முஅவ்வித் பின் அஃப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நாங்கள்(மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புனிதப் போரில் கலந்து கொண்டோம். (போரின்போது) மக்களுக்கு தண்ணீர் புகட்டிக் கொண்டும் அவர்களுக்குப் பணிவிடைகள் புரிந்து கொண்டும், கொல்லப் பட்டவர்களையும் காயமுற்றவர்க(ளுக்கு மருந்திட்டு அவர்க)ளையும் மதீனாவுக்கு எடுத்துச் சென்று கொண்டும் இருந்தோம்.3
    பாடம் : 3
    மூன்றில் நிவாரணம் உண்டு
    5680 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. தேன் அருந்துவது, இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தீயால் சூடிட்டுக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றுமாகும். (ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டாமென என் சமுதாயத் தாருக்கு நான் தடை விதித்கிறேன் என்று கூறினார்கள்.4
    மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது என வந்துள்ளது.
    5681 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு. இரத்தம் வெளியேற்றும் கருவியால் (உடலில்) கீறுவது, தேன் அருந்துவது,நெருப்பால் சூடிட்டுக்கொள்வது ஆகியனவே அந்த மூன்றும். (இருப்பினும்,) நான் என் சமுதாயத் தாருக்கு நெருப்பால் சூடிட்டுக்கொள்ள வேண்டாமெனத் தடை விதித்கிறேன்.
    இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    பாடம் : 4
    தேனால் சிகிச்சையளிப்பதும், தேனில் மக்களுக்கு நிவராணம் உள்ளது எனும் (16:69ஆவது) இறைவசனமும்.5
    5682 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் இனிப்புப் பொருட் களையும் தேனையும் விரும்பி(ச் சாப்பிட்டு) வந்தார்கள்.6
    5683 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    உங்கள் மருந்துகளில் ஒன்றில் நன்மை ஏதேனும் இருப்பதாயிருந்தால்' அல்லது இருக்கிறதென்றால்' நோயின் தன்மைக்கு ஏற்றபடி இரத்தம் உறிஞ்சும் கருவியால் (உடலில்) கீறுவது, அல்லது தேன் அருந்து வது, அல்லது நெருப்பால் சூடிடுவதில்தான் அது உள்ளது. (ஆயினும்,) சூடிடுவதை நான் விரும்பவில்லை.
    இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.








    5684 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் சகோதரர் வயிற்று வ-யால் சிரமப்படுகிறார் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று சொன்னார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ருந்து தேன் ஊட்டிய தில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது என்று கூறி)டவே, மீண்டும் நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று சொன்னார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர நபி (ஸல்) அவர்கள் அப்போதும்,அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று சொன்னார்கள். பிறகு (நான்காம் முறை அவர் வந்து), (தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால், குணமாகவில்லை) என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தேனில் நிவாரணம் இருப்பதாகக் குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான்; உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது;அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று சொன்னார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். அதையடுத்து அவர் குணமடைந்தார்.
    பாடம் : 5
    ஒட்டகப் பாலால் சிகிச்சையளிப்பது
    5685 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    (மதீனா வந்த உக்ல்' மற்றும் உரைனா' குலத்து) மக்கள் சிலருக்கு நோய் ஏற்பட்டது. அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு அடைக்கலம் அளித்து உணவும் அளியுங்கள் என்று கேட்டனர். (அவ்வாறே அவர்களுக்கு அடைக்கலம் தந்து உணவும் அளிக்கப் பட்டது. பசிப் பிணி நீங்கி) அவர்கள் நலம் பெற்றபோது மதீனா(வின் தட்ப வெப்ப நிலை) எங்களுக்கு ஒத்து வரவில்லை என்று கூறினர். அவர்களை நபி (ஸல்) அவர்கள் பாறைகள் நிறைந்த அல்ஹர்ரா' எனும் இடத்தில் தம் ஒட்டகங்கள் சிலவற்றுடன் தங்கச் செய்து, இவற்றின் பாலை அருந்துங்கள் என்று கூறினார்கள். அவர்கள் குணமடைந்த போது நபி (ஸல்) அவர்களு டைய (ஒட்டக) மேய்ப்பாளரைக் கொன்று விட்டு அவர்களுடைய ஒட்டகங்களை இழுத்துச் சென்றுவிட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அந்த ஆட்களைப் பின் தொடர்ந்து செல்லும்படி (ஒரு படைப் பிரிவை) அனுப்பி (அவர்களைப் பிடித்து வரச் செய்து கொடுஞ்செயல்கள் புரிந்த) அவர்களுடைய கால்களையும் கைகளையும் துண்டித்து அவர்களுடைய கண்களில் சூடிட்டார்கள். அவர்களில் ஒருவன் இறக்கும் வரை தனது நாவால் தரையை நக்கியபடி இருந்ததை நான் பார்த்தேன்.7
    (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சல்லாம் பின் மிஸ்கீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    அனஸ் (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் நபி (ஸல்) அவர்கள் வழங்கிய தண்டனைகளிலேயே கடுமையான தண்டனை எது என்று எனக்குத் தெரிவியுங்கள் எனக் கேட்டதாகவும், அப்போது இந்த ஹதீஸை அவரிடம் அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்த தாகவும் எனக்குத் தகவல் எட்டியது. ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்களுக்கு இச்செய்தி கிடைத்த போது (ஹஜ்ஜாஜ் இதைத் தமக்குச் சாதமாக்கிக்கொள்வார் என்பதால்) அவருக்கு இதை அனஸ் (ரலி) அவர்கள் தெரிவிக்காமல் இருந்திருக்க வேண்டுமென நான் விரும்பி னேன் என்று சொன்னார்கள்.
    பாடம் : 6
    ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சையளிப்பது
    5686 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    (உரைனா' குலத்தைச் சேர்ந்த) மக்கள் சிலர், மதீனாவின் தட்ப வெப்ப நிலை தங்களுக்கு ஒத்துவரவில்லை என்று கருதினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அந்த மக்களைத் தம் ஒட்டக மேய்ப்பரிடம் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் குடிக்கும்படி பணித்தார்கள். (அதன்படி) அவர்கள் அந்த ஒட்டக மேய்ப்பரிடம் சென்று ஒட்டகங்களின் பாலையும் அவற்றின் சிறு நீரையும் குடித்தார்கள். அவர்களுக்கு உடல் நலம் ஏற்பட்டதும் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அவர்களைத் தேடி(ப் பிடித்து) வர (ஆட்களை) அனுப்பி வைத்தார்கள் நபி (ஸல்) அவர்கள். அவர்கள் பிடித்துக் கொண்டுவரப்பட்டனர். அவர் களுடைய கைகளையும் கால்களையும் நபி (ஸல்) அவர்கள் துண்டித்தார்கள். அவர் களுடைய கண்களில் சூடிட்டார்கள்.8
    கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள், இது, (கொலை, கொள்ளைக்கான) தண்டனைச் சட்டங்கள் அருளப்பெறுவதற்கு முன்னால் நடந்த சம்பவம் என்று கூறினார்கள்.
    பாடம் : 7
    கருஞ்சீரகம்9
    5687 கா-த் பின் சஅத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    எங்களுடன் ஃகா-ப் பின் அப்ஜர் (ரலி) அவர்கள் இருக்க நாங்கள் (பயணம்) புறப் பட்டோம். வழியில் ஃகாலிப் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டார்கள். அவர்கள் நோயாளி யாக இருக்கும் நிலையிலேயே மதீனாவுக்குச் சென்றோம். ஃகா-ப் (ரலி) அவர்களை இப்னு அபீ அ(த்)தீக் (ரலி) அவர்கள் உடல் நலம் விசாரிக்க வந்தார்கள்.
    அப்போது அவர்கள் எங்களிடம் (பின்வருமாறு) கூறினார்கள்: இந்தச் சின்னஞ்சிறு கறுப்பு வித்தை (கருஞ்சீரகத்தை) நீங்கள் பயன்படுத்துங்கள். இதிலிருந்து ஐந்து அல்லது ஆறு வித்துகளை எடுத்துத் தூளாக்கி (எண்ணெய் பிழிந்து) அவருடைய மூக்கில் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் (அதன்) எண்ணெய்ச் சொட்டுகளை விடுங்கள். ஏனெனில்,ஆயிஷா (ரலி) அவர்கள் என்னிடம், நபி (ஸல்) அவர்கள் இந்தக் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் நிவாரணமாகும்;சாமை'த் தவிர என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன் எனத் தெரிவித்தார்கள். நான், சாம் என்றால் என்ன? என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் மரணம் என்று பதிலளித்தார்கள்.
    5688 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருஞ்சீரக விதையில் சாமை'த் தவிர மற்ற எல்லா நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்று கூறினார்கள்.
    இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
    சாம்' என்றால் மரணம்' என்று பொருள். அல்ஹப்பத்துஸ் ஸவ்தா' என்றால், (பாரசீகத்தில்) ஷூனீஸ்' (கருஞ்சீரகம்) என்று பொருள்.
    பாடம் : 8
    நோயாளிக்குத் தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுப்பது.10
    5689 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் நோயாளிக்கும், இறந்துபோனவரை எண்ணி வருந்துபவருக்கும் தல்பீனா' (பால் பாயசம்) தயாரித்துக் கொடுக்கும்படி பணித்துவந்தார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,தல்பீனா நோயாளி யின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்கும். கவலைகளில் சிலவற்றைப் போக்கும்' என்று கூறக் கேட்டுள்ளேன் என்பார்கள்.11
    5690 உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    ஆயிஷா (ரலி) அவர்கள், தல்பீனா (பால் பாயசம்) தயாரிக்கும்படி பணிப்பார்கள். மேலும், அது (நோயாளிக்கு) வெறுப்பூட்டக் கூடியது; (ஆனால் அவருக்குப்) பயனளிக்கக் கூடியது என்று சொல்வார்கள்.
    பாடம் : 9
    மூக்கில் (சொட்டு) மருந்திடல்
    5691 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுப்பவருக்கு அவருடைய ஊதியத்தைக் கொடுத்தார்கள். மேலும், தமது மூக்கில் (சொட்டு)மருந்து விட்டுக் கொண்டார்கள்.12
    பாடம் : 10
    வெண்கோஷ்டம் மற்றும் செய்கோஷ்டம் ஆகியவற்றால் வாசனை பிடிப்பது.13
    (கோஷ்டம் என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) குஸ்த்' எனும் சொல் ளீகூளுõடுúமுõ, ளீகூறுõடுúஸீõ (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறை களிலும் ஆளப்படுகிறது; காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல்ளீகூளுóளீழுõணூúசுõளீகூறுóளீழுõணூúசுõ கி (காஃபூர், ஃகாஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. (வானம் அகற்றப்படும் போது எனும் 81:11ஆவது குர்ஆன் வசனத்தின் மூலத்தில் குஷிதத்' எனும் சொல்லை) ளுõணுöமுóஸீú கி றுõடுöமுóஸீú (குசிதத், ஃகுஷிதத்) என இரு முறைகளிலும் ஓதப்பட்டுள்ளது. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ளுõணுöமுóஸீú (ஃகுஷிதத்) என ஓதினார்கள்.
    5692 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வ-க்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
    இதை உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள்அறிவிக்கிறார்கள்.
    5693 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நான் (பாலைத் தவிர) வேறு (திட) உணவு சாப்பிடாத என்னுடைய ஆண் குழந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் குழந்தையைத் தமது மடியில் உட்கார வைத்தார்கள்.) அப்போது குழந்தை அவர்கள் மீது சிறுநீர் கழித்துவிட்டது. உடனே தண்ணீர் கொண்டுவரச் சொல்லி (சிறுநீர் பட்ட) அந்த இடத்தில் தெளித்தார்கள்.14
    பாடம் : 11
    (குருதி உறிஞ்சு கருவி மூலம்) எந்த நேரத்தில் குருதி உறிஞ்சி எடுக்கலாம்?15
    அபூமூசா (ரலி) அவர்கள் இரவில் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள்.
    5694 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.16
    பாடம் : 12
    பயணத்திலும் இஹ்ராமுடைய நிலையிலும் குருதி உறிஞ்சி எடுப்பது.
    இதை(ப் பற்றி) நபி (ஸல்) அவர்களிடமி ருந்து அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.17
    5695 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள்.18
    பாடம் : 13
    நோயின் காரணத்தால் குருதி உறிஞ்சி எடுப்பது.
    5696 அபூஉபைதா ஹுமைத் அத்தவீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    அனஸ் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூதய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ஸாஉ' உணவு கொடுத்தார்கள். மேலும், அபூதய்பாவின் எசமானர்களுடன் நபி (ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள்.
    மேலும், நபி (ஸல்) அவர்கள், நீங்கள் எவற்றால் சிகிச்சை பெறுகிறீர்களோ அவற்றி லெல்லாம் சிறந்தது குருதி உறிஞ்சி எடுப்பதும், வெண்கோஷ்டமும்தான்.19 மேலும், உங்கள் குழந்தைகளை (அவர்களுடைய) அடிநாக்கு அழற்சியைப் போக்க (தொண்டையில்) குத்தித் துன்புறுத்தாதீர்கள். நீங்கள் அவசியம் கோஷ்டத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொன்னார்கள்.20
    5697 ஆஸிம் பின் உமர் பின் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் முகன்னஉ பின் சினான் (ரஹ்) அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். பிறகு, நீங்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொள்ளாத வரை நான் (திரும்பிச்) செல்லமாட்டேன். ஏனெனில்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதில் நிவாரணம் உள்ளது' என்று சொல்வதை நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.
    பாடம் : 14
    தலையில் குருதி உறிஞ்சி எடுப்பது21
    5698 அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா செல்லும் சாலையிலுள்ள லஹ்யீ ஜமல்' எனும் இடத்தில் வைத்துத் தமது தலையின் நடுவே குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.22


    5699 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள்.
    பாடம் : 15
    ஒற்றைத் தலைவ- மற்றும் பொதுவான தலைவ-க்காகக் குருதி உறிஞ்சி எடுப்பது.23
    5700 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியி ருந்த நிலையில் தமக்கேற்பட்ட (ஒற்றைத் தலை) வ-யின் காரணத்தால் ஒரு நீர் நிலையின் அருகில் தமது தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். இந்த நீர்நிலை லஹ்யு ஜமல்' என்றழைக்கப்பட்டு வந்தது.




    5701 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கேற்பட்ட ஒற்றைத் தலைவ-யின் காரணத்தால் தமது தலையில் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். அப்போது அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தார்கள்.
    5702 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மையேதும் இருக்குமானால் தேன் அருந்துவது, அல்லது குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக்கொள்வதில்தான் அது இருக்கும். (ஆயினும்,)நான் சூடிட்டுக் கொள்வதை விரும்பவில்லை.
    இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.24

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum