ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அஜினோமோட்டோ என்னும் அரக்கன்

    3 posters

    Go down

    அஜினோமோட்டோ என்னும் அரக்கன்  Empty அஜினோமோட்டோ என்னும் அரக்கன்

    Post by தோழன் Sun 05 Dec 2010, 10:58 pm

    [You must be registered and logged in to see this image.]



    நீங்கள் வாய்க்கு ருசியாக சாப்பிடவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.
    அதற்காக குட்கா, அபின் போன்ற போதைப்பொருளை, உணவில் சேர்த்து சாப்பிட விரும்புவீர்களா? பாக்கெட் உணவுகளை அதிகம் ருசிப்பவரா? தாகம் எடுக்கிறது என்பதற்காக பிளாஸ்டிக் டப்பாவை உடைத்து "மொடக்"குபவரா?வேண்டாமே, இந்த விபரீதம், நாம் அமெரிக்காவை போல உயரலாம், அதற்காக, அவர்கள் "கேடுகெட்ட" உணவுப் பழக்கத்தை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமா? மிளகிலும், சுக்கிலும், திப்பிலியிலும் அரிய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்று அவர்கள் பின்பற்றத் துவங்கிவிட்டனர். ஆனால், அவர்கள் விட்டொழித்த "டப்பா" உணவுகளை நாம் ஏதோ ஆசைக்கு வாங்கி சாப்பிடலாம். அதற்காக வாழ்க்கையே டப்பா உணவாகி விடலாமா? நாம் சமையல் அறைகள் என்ன ரசாயன தொழிற்கூடமா? உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் எல்லாம் நமக்கு அவசியம் தானா?

    நாம் இதையெல்லாம் யோசிக்க மறுக்கிறோம்? அது மட்டுமல்ல, நம் அந்தஸ்த்து, ஸ்டேட்டஸ் என்று எல்லாம் பார்த்து, பார்ட்டி என்ற பெயரில், நாள்தோறும் கண்ட கண்ட தின்பண்டங்களை சாப்பிட்டு, நாம் குழந்தைகளையும் சாப்பிட வைத்து எதிர்காலத்தில் அவர்களை அவஸ்தைப்பட வைக்க நினைப்பவரா?

    * நீங்கள் சாப்பிடும் எந்த ஒரு டப்பா உணவிலும், டப்பா குளிர்பானங்கள், மது வகைகளிலும், சீஸ், பர்ஜர் என்ற சமாச்சாரங்களிலும் அசைவம் சேர்ந்திருக்கிறது.

    * நீங்கள் சைவமாக இருக்கலாம். அதில் பிடிவாதமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் சாப்பிடும் இறக்குமதி சாக்லெட் முதல் எல்லாமே, மாட்டிறைச்சி, மீன் கொழுப்பு என்று ஏதாவது சேர்த்துத்தான் இருக்கும்.

    * நாம் சமையலில் பயன்படுத்தும் பல பாக்கெட் சமாச்சாரங்களிலும் இப்படிப்பட்ட "ப்ளேவர்" கூட்டும் ரசாயனங்கள் இல்லாமல் இல்லை.

    * நம்மில் சிலர் பயன்படுத்தும் "டேஸ்ட்" தருவதற்கான அஜினோமோட்டோவில் கூட முழுக்க ரசாயனம் தான். அதை பயன்படுத்தி வந்த சீனர்களும், அமெரிக்கர்களும் அதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.


    ஆம், இப்படி நாம் எப்போது உலகமயமாக்கலில் கவனம் செலுத்தி, இப்போது மூழ்கி விட்டோமோ, அப்போதே நம் வாழ்க்கையில் சர்வதேசத்தனம் ஊடுருவத் துவங்கிவிட்டது. அதன் மூலம் தான் நம் சைவ உணவு பொருட்கள் கூட, இறக்குமதிகளால், ரசாயனம், அசைவம் சேர்ந்து வரத்துவங்கி விட்டது. பாக்கெட் உணவுகளால் ஆபத்தில்லை. ஆனால், நாம் அதிக அளவில் அதை பின்பற்றக்கூடாது என்பது தான். பலரும் அதிலேயே மூழ்கி விட்டது தான் ஆபத்து தருவதாகும்.

    அஜினோமோட்டோ, இதன் உண்மையான பெயர் எம்.எஸ்.ஜி., என்பது தான். மோனோ சோடியம் க்ளூட்டாமேட் என்பது தான் இதன் முழு ரசாயனப்பெயர். கெச்சப்பாகட்டும், மஷ்ரூம் அயிட்டங்களாகட்டும், சிக்கன் சமாச்சாரங்களாகட்டும் எதிலும், இந்த எம்.எஸ்.ஜி., இருக்கும். நம்மூர் சோடா உப்பு போல் தான். இந்த எம்.எஸ்.ஜி., தான் நம்மில் அஜினோமோட்டோ என்று பிராண்ட் பெயரில் அழைக்கப்படுகிறது.

    இந்த எம்.எஸ்.ஜி., தரும் பிளேவர், டேஸ்ட் பெயர் தான் "யுமாமி" என்று அமெரிக்கர்களும், ஜப்பானியர்களும் கூறுகின்றனர். சீனாவிலும், இது கொடிகட்டிப் பறக்கிறது. ஆனால், அமெரிக்காவில் கடந்த பத்தாண்டுக்கு முன்பே பெரும்பாலும் குறைக்கப்பட்டுவிட்டது. எம்.எஸ்.ஜி., இல்லாத உணவு என்றே சில ஓட்டல்களில் தனி அயிட்டங்கள் உண்டு. ஜப்பானிலும் குறைந்து விட்டது.

    அமெரிக்கா உட்பட பல பணக்கார நாடுகளும், உடல் ஆரோக்கியத்துக்கு எதெல்லாம் கெடுதல் என்று அறிந்து, அதை குறைத்து விட்டனர். ஆனால், நம் தலையில் கட்டி வருகின்றனர். அஜினோமோட்டோ பற்றி மத்திய சுகாதாரத்துறை இன்னமும் உறுதியான விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. குறிப்பிட்ட சதவீதம் வரை பயன்படுத்தினால், உடலுக்கு கேடில்லை என்று மற்ற ரசாயன பொருட்கள் விஷயத்தில் கடைப்பிடிக்கும் கொள்கையே கடைப்பிடித்து வருகிறது.

    மொத்தத்தில் அஜினோமோட்டோ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதை பயன்படுத்தும்போதும் தவிர்ப்பது நில்லது. ஏனென்றால், நிம் இயற்கையான தானியங்களில், மூலிகைகளில் இல்லாத பிளேவரா அதில் இருக்கப்போகிறது?

    ஆனால், இதை நாம் உணர வேண்டுமானால், அதையும் அமெரிக்க நிபுணர்கள் தான் சொல்ல வேண்டும். அதுவரை நாம் அவர்கள் ஒதுக்க விரும்பும் "கேடுகெட்ட" ரசாயன உணவுகளை தான் சாப்பிடுவோம். அவர்கள் குறைக்க விரும்பிய கொழுப்பை நாம் ஏற்றத்தான் செய்வோம். முப்பது வயதில் வாக்கிங் போகும் நிலை இப்போது இருப்பது போய், குழந்தைப் பருவத்திலேயே வாக்கிங் போக வேண்டிய நிலை வரும்.அஜினோமோட்டோ கண்டுபிடித்தது யார்?: பலருக்கும் அஜினோமோட்டோ என்றால், அதை சீனர்கள் தான் கண்டுபிடித்தனர் என்று தெரியும். சீனர்களின் பாரம்பரிய உணவுப்பொருள் என்று நினைக்கின்றனர். உண்மை என்னவென்றால், இதை கண்டுபிடித்தது சீனர் அல்ல, ஒரு ஜப்பானிய மருத்துவ நிபுணர் கண்டுபிடித்தார்.

    அவர் பெயர் கிகுனே இகடே. கடந்த 1908ம் ஆண்டு இதை கண்டுபிடித்தார். டோக்கியோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தார். ஜப்பானிய சூப்பில் இருந்து பல உணவுகளிலும் அஜினோமோட்டோ சேர்க்கப்பட்டது. அங்கெல்லாம் இதன் பெயர் எம்.எஸ்.ஜி., தான்.

    இதுவரை நான்கு சுவை; இத்தோடு ஐந்தாவது சுவை: பல நு‘று ஆண்டுகளாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளது நான்கு சுவைகள் தான். அவை, இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு. ஆனால், ஜப்பானிய நிபுணர், கண்டுபிடித்த சுவைதான் "யுமாமி" ஜப்பானிய மொழியில் இப்படி அழைக்கப்படுகிறது. நாம் பிளேவர், கமகம என்ற பெயர்களால் அழைத்துக் கொள்கிறோம்.

    அஜினோமோட்டோ, இப்போதெல்லாம் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. உடலுக்கு எதுவும் பண்ணாது தான். எப்படி குட்காவோ, அதுபோல, உடலில் போனால், விர்ர்ர்...என்று சுவை கூட்டும். நாக்கில் வைத்தாலே டொமேட்டோ கெச்சப், சப்பு கொட்ட வைக்கிறதே, அந்த டேஸ்ட் தருவது எம்.எஸ்.ஜி., என்ற அஜினோமோட்டோ தான்.

    காலப்போக்கில் இது நரம்பு மண்டலங்களை தாக்கும் ஆபத்து உள்ளது. அதனால், அதிக அளவில் சேர்க்கக் கூடாது என்று சர்ச்சை எழுந்தது. இருபதாண்டு அமெரிக்க சர்ச்சை, இன்னும் உலக முழுக்க தொடர்கிறது.

    அவசியமா? ஆபத்தா? அரசு சொல்ல வேண்டும்: மும்பையில் பல பெரிய ஓட்டல்களில் அஜினோமோட்டோ பயன்படுத்தி, பிளேவர் தந்தனர். அது கொடிகட்டிப் பறந்தது. அதனால் சர்ச்சைக்குரிய இந்த அஜினோமோட்டோ விஷயத்தில் அரசு கட்டுப்பாடுகளை கொண்டுவந்தால் நல்லது.அரசு செய்யாவிட்டாலும், நாம் முடிவெடுப்பது நல்லது. ருசி தேவைப்பட்டால், நமக்கு இயற்கையாக கிடைக்கும் லவங்கம் பட்டை, சோம்பு என்பதை விட்டு, இப்படி ரசாயன கலவையை உடலில் ஏற்றிக்கொள்ள வேண்டுமா? சிந்தியுங்கள்.

    nandri -koodal

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    அஜினோமோட்டோ என்னும் அரக்கன்  Empty Re: அஜினோமோட்டோ என்னும் அரக்கன்

    Post by மருத்துவன் Wed 22 Dec 2010, 10:20 am

    மிக அருமையான விளக்கம் -நன்றி

    மருத்துவன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 110
    Points : 280
    Reputation : 2
    Join date : 06/12/2010

    Back to top Go down

    அஜினோமோட்டோ என்னும் அரக்கன்  Empty Re: அஜினோமோட்டோ என்னும் அரக்கன்

    Post by C.Devaraj Wed 22 Dec 2010, 9:25 pm

    அன்புள்ள ஐயா
    அருமையான விளக்கம் கொடுத்து இன்றைய அஜினோமோடோ எனும் இரசாயன சுவை தரும் தீய அரக்கனை சரியாக மக்களுக்கு எடுத்து கூறியுள்ளீர்கள்
    மிக்க நன்றி

    C.Devaraj

    Posts : 4
    Points : 4
    Reputation : 0
    Join date : 20/12/2010

    Back to top Go down

    அஜினோமோட்டோ என்னும் அரக்கன்  Empty Re: அஜினோமோட்டோ என்னும் அரக்கன்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top


     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum