ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

  Go down

  நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்  Empty நின்று கொல்லும் நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்

  Post by தோழன் Sun 12 Dec 2010, 9:53 pm

  நின்று கொல்லும்நீரிழிவும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்


  பத்தும்பறந்திடும் பசி வந்தால் மறைந்திடும் என்பது வாழ்க்கையில் ஒவ்வொருவருமேஉணர்ந்திருக்கும் வாழ்வியல் யதார்த்தம். அதாவது மானம், கல்வி, அறிவு, தவம், தாளாண்மை, பலம், வன்மை, தானம், முயற்சி, காதல் என்பவையேபசியினால் பறந்திடும் பத்துமாகும். ஆனால் பசிக்கு அளவுடன் புசிக்காதுவிடின்பத்துடன் பதினொன்றாக அரிய உயிரையே பறிகொடுக்கும் பரிதாபம் நமக்கு ஏற்படும்.


  மனித வாழ்விலேசந்தோஷம் என்றாலே இனிப்பு என்பதே பொருள். ஆனால் அளவுக்கு மீறினால் அமர்தமும்நஞ்சு என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாறே இன்மையைக் கொடுக்கும் இந்த இனிப்பு நமதுஇரத்தத்தில் அதிகமாகும்போது அதுவே நமது உயிரைக் குடிக்கும் விஷமாக மாறுகிறது.இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருந்தால் தான் நமது உடலும் ஆரோக்கியமானநிலையில் இருக்கும்.


  நம் வயிற்றுப்பகுதியில், கல்லீரலுக்கு சற்று கீழே கணையம் எனப்படும்சுரப்பி காணப்படுகிறது. இதனால் சுரக்கப்படும் இன்சுலின் (Insulin) என்னும் சுரப்பினாலேயே இரத்தத்தில்சர்க்கரையின் அளவு சமநிலையில் பேணப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் மாச்சத்து (Carbohydrate) அதிகமாகும் போது அது குளுக்கோசாக மாறிஇரத்தத்தில் கலக்கும்போது இன்சுலினால் சர்க்கரை சமநிலை பேணப்பட மிகுதி சர்க்கரைநமது உடலில் கிளைக்கோசனாக (Glycogen)சேமித்துவைக்கப்படுகிறது. பிறகு உடலுக்குத் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இக்கிளைக்கோசன்குளுக்கோசாக மாறி சக்தியைத் தருகிறது. இந்தப் பணி சரிவர நடைபெற வேண்டுமென்றால்நமது கல்லீரலும் எந்தப் பாதிப்பும் இல்லாது நன்கு வேலை செய்ய வேண்டும்.


  நீரிழிவு நோய்இன்சுலின் அளவு குறைவதாலும் (InsulinDeficiency) கணையம், கல்லீரல் போன்றவை நோய்க்குட்பட்டு இருக்கும் நிலையில் சுரந்த இன்சுலின்சரிவர உபயோகப்படுத்தப் படாமல் இருப்பதாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவுஅதிகமாகிHyperglycemia என்ற நிலை ஏற்படுகிறது. இதையே நாம்சர்க்கரைநோய் அல்லது நீரிழிவு நோய் என்கிறோம்.

  நீரிழிவு நோயின்அறிகுறிகள்

  1. அடிக்கடிசிறுநீர் கழித்தல் (Polyaria)
  2. அடிக்கடிசிறுநீர் கழித்தலால் தாகம் அதிகரித்தல் (Excesssive Thirst)
  3. களைப்புத்தன்மை (Weakness)
  4. எடை குறைவு (Weight Loss)
  5. பசிஅதிகரித்தல் (Increasedappetite)
  6. நாவறட்சி (Dry mouth)
  7. காயம்ஏற்பட்டால் விரைவில் ஆறாமை.


  நீரிழிவுநோயினால் பாதிக்கப்படும் உறுப்புகள்
  ரெட்டினா பகுதிபாதிப்படைவதனால் கண் பார்வையை இழக்கும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்குடயபடிக் ரெட்டினோபதி (DiabeticRetinopathy) என்று பெயர். அதிகளவுசிறுநீர் கழிப்பதனாலும் சிறுநீரகங்களின் அதிகளவு செயற்பாட்டின் காரணமாகவும்சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. இதற்கு டயபடிக் நெவ்ரோபதி (Diabetic Nepropathy) என்று பெயர். இரத்தக்குழாய்கள்சுருக்கமடைவதினால் கை, கால் என்பனவற்றின் இழையங்களுக்குத் தேவையான போஷாக்குச்சரிவரக் கிடைக்கப் பெறாததினால் கலங்களுக்குத் தேவையான போஷாக்கின்மையால் கலங்கள்இறக்கத் தொடங்குகின்றன. இதன் அறிகுறியாக பாதிக்கப்பட்ட பகுதிகள் கறுத்தும்உணர்ச்சியற்றும் போகின்றன. இதுவே டயபடிக் கங்கரின் (Diabetic Gangrene) என்றழைக்கப்படுகிறது. இதனால் நாம்பாதிப்பேற்படும் உறுப்பை இழக்க வேண்டியும் வரலாம். இது மட்டுமின்றி மாரடைப்பு, இதய நோய்கள் என்பனவும் ஏற்படவும் வாய்ப்புண்டு. அத்துடன் சர்க்கரை வியாதி கை, கால் நரம்புகள், எலும்புகளையும் பாதிக்கின்றன. இது டயபடிக்நியூரோபதி (DiabeticNeuropathy) எனப்படும்.இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பிடிப்பு, வலி, எரிச்சல் மற்றும் மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தெரியும். நீரிழிவு நோய்உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் மாத்திரைகளை எடுத்தபின்னர் உணவு உட்கொள்ளத் தவறுவதும் அதாவது உண்பதில் நேரந்தவறாமைகடைப்பிடிக்கப்படாமையும், பயத்தினால் சர்க்கரையின் அளவை அளவிற்கு மீறிக்குறைப்பதும் கூட ஆபத்தை விளைவிக்கும். சர்க்கரையின் அளவு குறைந்தால் (Low Blood Sugar) மயக்கம், உடல் வியர்த்தல்போன்றவை ஏற்படும்.


  இந்நிலையைத்தவிர்க்க நீரிழிவு நோயாளிகள் எப்போதும் சர்க்கரையோ அன்றி இனிப்புகள் எதாவதோகைவசம் வைத்திருத்தல் அவசியம். சர்க்கரைக் குறைவை கவனித்து நிவர்த்தி செய்யவிடின்மேலும் குறைந்து கோமா (Coma) நிலை ஏற்படும் அபாயம் உண்டு.

  நமது உடலில்சர்க்கரை அதிகமானாலும் சரி, குறைந்தாலும் சரி பாதிப்பு நமக்குத்தான். எனவேநீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மூலிகைகள், உணவு முறைகள், உடற்பயிற்சி ஆகியவற்றை முறையாக மேற்கொள்வதன்மூலம் எந்தவிதமான பின்விளைவுகளும் இன்றி நன்றாக வாழலாம் என்பது உறுதி.


  தேவையானமூலிகைகள்
  வேப்பிலை, வில்வம், அத்தியிலை, முருங்கையிலை, அருகம்புல், நெல்லி, நாவல், சிறுகுறிஞ்சான், கீழாநெல்லி, மாவிலை, வெற்றிலை எல்லா இலைகளையும் நன்கு உலர்த்தி பொடி செய்து கொள்ளவும்.இதிலிருந்து இரண்டு தேக்கரண்டி தூள் எடுத்து நீரில் கலந்து காலை, மாலை இரவு உணவிற்கு முன்பாக உண்டுவர பலன் கிடைப்பது உறுதி.


  உணவு முறைகள்
  தானியங்கள், காய்கள், கொட்டை வகைகள், கீரைகள், பழங்கள் ஆகியவை உணவில் அதிகம் இடம் பெற வேண்டும். காய்களில் வெண்டை, வெள்ளரி, புடலங்காய், சுரைக்காய், கொத்தமல்லியிலை, வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கூடியளவு அவித்துச்சாப்பிடுவதைத் தவிர்த்து பச்சையாக உண்பதே சாலச்சிறந்தது. ஆரம்பத்தில் இயற்கைஉணவுகளை உண்பது சற்றுக் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பின்பற்றும் போதுசர்க்கரை வியாதி விரைவில் குணமடைய வாய்ப்புண்டு. இயற்கையுணவுகளினால் இன்சுலின்இயற்கையாக உடலில் அதிகம் உற்பத்தியாகும். மேலும் சர்க்கரை வியாதியினால் உண்டாகும்பக்க விளைவுகளான பார்வைக் கோளாறு,சிறுநீரகக் கோளாறு, இருதயப் பாதிப்பு, இரத்தக் குழாய்களில் பாதிப்பு, நரம்பு எலும்புகளில் பாதிப்பு என்பவையும் தடுக்கப்படும்.


  சாதாரணமாகவேமனிதனாகப் பிறந்த எவரும் கட்டுப்பாடுடன் வாழ்ந்தால் என்றும் நலமாக வாழலாம்.


  கட்டுப்பாடுஎன்பது உணவில், உடலில், உணர்வில் என்றுமூன்றிலும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக்கடைப்பிடிக்க வேண்டும்.


  1. அதாவதுமுதலில் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதாவது சுயக்கட்டுப்பாடு(Self Control). தமக்கு வந்திருக்கும் நோயைப் பற்றியேசிந்தித்துப் பயந்து இன்னும் நோயை அதிகரித்துக் கொள்ளாது இது நோயே கிடையாது, இதை என்னால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என உணர்தல் வேண்டும்.இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால் மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பும்தவிர்க்கப்படும்.


  2. தம்மை உணரப்பழகிக் கொள்ள வேண்டும். நம்மை உணர்தல் என்பது நம் அன்றாடப் பழக்க வழக்கங்களில்ஒரு முறைப்பாட்டை உண்டாக்கிக் கொள்ளல் என்று பொருள். அதாவது Systematic எதை எப்போது எப்படிச் செய்ய வேண்டும் என்பது.இதில் மருந்து பாவிக்கும் முறைகள்,உணவுமுறைகள் என்பனஅடங்கும்.

  3. தினமும்உடற்பயிற்சியை மேற்கொள்ளல்.


  4. மனம் ஒருகுரங்கு. எனவே அதை அடக்கியாளப் பழகுதல், அதாவது எதையும்சாதிக்கும் ஆர்வம் நம்மை நாம் தன்னம்பிக்கைக்குள் தோய்ப்பதிலிருந்தேஆரம்பிக்கின்றது. தன்னம்பிக்கையே எந்த ஒரு வெற்றிக்கும் உரமாக அமைகிறது. இதுவேநோயை வெல்வதற்குரிய சக்தியை வழங்குகிறது.


  5. மனவுறுதிஎன்பது அதாவது எதையும் தாங்கக் கூடிய இதயம். அது இயற்கையாகவே நம்மிடத்தில் அமைத்துக்கொள்ள நாம் பழகிக் கொள்ள வேண்டும்.


  இவையே நாம்நீரிழிவு நோயைக் கொண்டிருந்தால் கடைப்பிடிக்க வேண்டிய பயிற்சிகள் ஆகும். இத்தகுபயிற்சிகளை மேற்கொள்வதனாலேயே நாம் இந்த நோயிலிருந்து விடுபடும் உணர்வை (Relax) அடைவதோடு நோயிருப்பினும் நோயற்ற நூற்றாண்டுவாழ்வைப் பெற்றவர்களாவோம்.

  ஆகவே இவற்றைக்கருத்தில் கொண்டு நீரிழிவு நோய் வந்தாலும், அதனை ஒரு நோய்உபாதையாகக் கொள்ளாமல் நோயையே வென்று வாழ்வோமாக.


  சர்க்கரை நோயும்இரத்தக் கொதிப்பும் பாதிப்பும்


  இரத்தக்கொதிப்பு நோயை Silent Killer என்கிறார்களே அதன் காரணத்தைப் பார்ப்போம்.


  டைபாய்டு, மலேரியாவைப் போல ரத்தக் கொதிப்பு 200/120 இருப்பவர் கூட சர்வசாதாரணமாகத்தான் இருப்பார்கள். ஆனால் அவருடைய உடலில் விபரீத விளைவுகள் அமைதியாகநடந்து கொண்டிருக்கும். அது அவருக்குத் தெரியாது. முக்கியமாக ரத்தக்கொதிப்பினால் இதயம் வீங்கிவிடும். இதயச் செயலிழப்புக்கும் பாதை தரும். மூளையில்ரத்தக் குழாய் வெடித்து பக்க வாதம் வர வழிவகுக்கும். கண்களில் உள்ள விழித்திரையில்ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை இழக்க நேரிடும். இதயத்தமனி ரத்த நாளங்களில் அடைப்பைஉண்டாக்கி மாரடைப்பைத் துரிதப்படுத்தும்.


  சிறுநீரகத்தின்செயல்பாடு குறைந்து அது சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். நீரிழிவு நோய்க்குரியசிக்கல்களைத் துரிதப்படுத்தும். இத்தனை கொடிய விளைவுகளும் ஒரே நாளில்நிகழந்துவிடாது. சிறுகச் சிறுகத் தான் நிகழும். ஆனால் அது நோயாளிக்குத் தெரியாது.ஆகையினால் தான் இந்தப் பெயர்.


  மேலேசொல்லப்பட்ட அறிகுறிகள் ஒருவருக்குத் தென்பட்டால் அவருக்கு சர்க்கரை நோய்இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. உடனடியாக அவர் தனது மருத்துவரை கலந்து மருத்துவபரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியமாகும். மாறாக நூற்றுக்கு நாற்பது பேருக்கு இந்தஅறிகுறிகள் இல்லாமலேயே சர்க்கரை நோய் இருக்கலாம். அவர்கள் வேறு ஏதாவதுநோய்களுக்காக ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும் போது தான் தங்களுக்கு சர்க்கரைநோய் இருப்பதையும் அறிய முடியும்.


  ஆகையால்நடைமுறையில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா என்பதைத்தீர்மானிப்பது ரத்தப் பரிசோதனைதான், குளுக்கோஸ்டாலரன்ஸ் டெஸ்ட் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். ரத்தச் சர்க்கரை அளவும்இதற்கு உதவும். உணவு உட்கொள்ளாத நிலையில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 முதல்120 மில்லி கிராம் சதவீதமும், உணவு உட்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்துரத்தப் பரிசோதனை மேற்கொள்ளும்போது, சர்க்கரையின்அளவு 120 முதல் 160 மில்லி கிராம் சதவீதமும் இருக்க வேண்டும். இதற்குக் கூடுதலாகரத்தத்தில் சர்க்கரையின் அளவு இருந்தால் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது எனத்தீர்மானிக்கலாம்.


  பொதுவாகவே இந்தசர்க்கரை நோய் என்பது, பெற்றோர் இருவருக்குமே சர்க்கரை நோய்இருந்தால், தங்கள் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்பு 100சதவீதம். இவை தவிர உடல் பருமனாக இருப்பது, உடற்பயிற்சிஇல்லாதது, மனக்கவலை, உற்சாகமற்றவாழ்க்கை முறைகள், தொடர்ச்சியாக ஏற்படும் தொற்று நோய்கள், அடுத்தடுத்து கருத்தரிப்பது ஆகிய காரணங்கள் சர்க்கரை நோய் ஏற்படுத்தவாய்ப்பாகும். அவற்றில் இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய், இன்சுலின் சாரா சர்க்கரை நோய் என்று இரு வகைகள் உண்டு. முதலாவது வகைநோயாளிகள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும்.இரண்டாவது வகையினர் தேவைப்படும் காலங்களில் மட்டும் இந்த ஊசியை போட்டுக்கொள்ளலாம். மற்றபடி சர்க்கரை நோய் மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டாலே போதும்.அது கட்டுப்படுவதோடு பிற பிரச்னைகளையும் ஏற்படுத்தாது.


  முக்கியமாககொழுப்புச் சத்துள்ள உணவை குறைத்து உணவை கட்டுப்படுத்த வேண்டும். இனிப்புவகைகளையும், மாவுச்சத்து நிறைந்த உணவுகளையும் அளவோடு உண்டு, தினமும் நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல் சிறந்த பலனை அளிக்கும். உடற்பயிற்சியும்கூட முடிந்தால் காலை, மாலை என இருவேளைகளிலும் செய்தல் நல்லது.


  உடல் எடையைஉங்கள் வயதிற்கேற்ப கட்டுப்படுத்துங்கள். மனக் கவலைக்கு இடம் அளிக்காதீர்கள்.பழங்களை சாப்பிடும்போது கூட ஆரஞ்சு, ஆப்பிள், பப்பாளி, கொய்யா இவற்றில் ஏதாவது ஒன்றில் தினமும்மூன்று சுளைகள் சாப்பிடலாம். நாவின் ருசிக்கு ஆசைப்பட்டு அளவு கூடினால்ஆபத்துதான். பழங்களில் கூட வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் போன்றவற்றை விலக்க வேண்டும். புரதச் சத்து உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ளலாம். சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு தினமும் பச்சை காய்கறிகள், கீரை வகைகள் சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும். இடைவேளை நேரங்களில் சுண்டல், காய்கறி சூப் சாப்பிடலாம். காபியில் சர்க்கரையை குறைத்தல், நார்ச்சத்துள்ள காய்கறிகள், இனிப்பு குறைந்த எந்த வகை உணவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  நன்றியுடன்பகிரப்படுகிறது: றொசாரியோ ஜோர்ஜ்யின் ''வளமான வாழ்விற்குஉணவே மருந்து.''

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Back to top


   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum