ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மூலிகைகள்-

    Go down

     மூலிகைகள்- Empty மூலிகைகள்-

    Post by Admin Tue 12 Oct 2010, 11:12 pm

    தாவர இனங்களில் மூலிகைகள் தலை சிறந்தவை. உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் தாவரங்களைச் சார்ந்து வாழ்ந்திருப்பதைப் போல, மருத்துவ முறைகள் நேர் முகமாகவோ மறைமுகமாகவோ மூலிகைகளைச் சார்ந்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக சித்த மருத்துவம் மூலிகைகளையே மூலப் பொருளாகக் கொண்டுள்ளது. இயற்கை வழி அமைந்த இலக்கியங்களும், மருத்துவமும் இயற்கைப் பொருளான மூலிகைகளின் குண நலன்களை அறிந்து அவற்றின் பண்புகளையும், மருத்துவக் குணங்களையும் தம்முள் சேர்த்துக் கொண்டுள்ளன.

    தமிழ் மருத்துவ நூலார் அவற்றின் குணங்களை அறிந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தனர். மண்ணில் தோன்றிய பல்லாயிரக் கணக்கான தாவரங்கள் அனைத்தையும் மருத்துவம் ஏற்றுக் கொள்ளா விடினும், அறிந்தவற்றைப் பயன்படுத்தத் தக்கவை என்றுணர்ந்த வற்றை மூலிகை எனப் பெயரிட்டுப் பயன்படுத்தி வருகிறது.

    "" மூலி யனேக மூவாயிரத்து முன்னூ ரெனினுங்

    காலியின் வேகங் கடற் சூழ்ந் தகில காட்ட கத்திற்

    பாலினம் நீரினம் நீரில்லா வேரினம் படரினமுஞ்

    ஜோலிய தாட்டம் வாதத்தின் மூலியுஞ் சொர்ணமிதே.''

    கடல் சூழ்ந்த நில உலகத்திலுள்ள காடுகளில் பாலினம், நீரினம், வேரினம், படரினம் எனும் வகைப்படுத்தப் பெற்ற மூலிகைகள் 3300 என்பர். இதனால் இத்தனை மூலிகைகளைச் சித்தர்கள் அறிந்திருந்தனர் எனக் கருதலாம்.

    "" சொன்னதொரு மூலிகையின் தொகுப்புக் கேளு

    சுளுக்காக நானூற்று யெழுபத்து மூன்று''

    என்று, 473 மூலிகைகளின் பெயர்கள் பட்டியலிட்டுக் காட்டப் பட்டுள்ளன. இதனால், இந்நூலாசிரியர் தொகுத்த மூலிகை 473 எனக் கொள்ள வேண்டும். திருவருட்பாஉரைநடைப் பகுதியில், சீந்தில் தொடங்கி துளசி ஈறாக 485 மூலிகைப் பெயர்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மருந்தாகும் மூலிகைகளாக இருக்கக் காணலாம். அவை, வடலூர் இராமலிங்க வள்ளலார் அறிந்திருந்த மூலிகைகள் எனக் கருதலாம்.

    இந்தியாவில் சுமார் 2000 வகை மூலிகைத் தாவரங்கள் உள்ளன. அதில் 500 வகைகள் நாட்டு மருத்துவத்திலும் 100 வகை ஆங்கில மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன என்பர். இது, இந்நூலாசிரியர் அறிந்திருந்த செய்தியாக இருக்கலாம். என்றாலும், இவர் 300 வகை மூலிகைகளின் பெயர்களைத் தான் பட்டியலிட் டுள்ளார். எனவே, அவரவர் தொகுத்த காலத்திற்கு ஏற்ப மூலிகைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்கக் காண்கிறோம்.

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஏலாதி, திரிகடுகம், சிறுபஞ்சமூலம் என்பவை மருத்துவ மூலிகையின் தொகுப்பு பெயர் பெற்று விளங்கக் காணலாம்.

    ஏலாதி : சுக்கு, இலவங்கம், சிறுநாவல் பூ, மிளகு, திப்பிலி, ஆகிய ஆறு மருந்துப் பொருள்களும் முறையே 1,2,3,4,5,6 என்ற எடை அடிப் படையில் கலந்ததற்கு ஏலாதி எனப்பெயர்.

    திரிகடுகம் : சுக்கு, மிளகு, திப்பிலி இம்மூன்றும் சேர்ந்தது திரிகடுகம் எனப்படும்.

    சிறுபஞ்சமூலம் : கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெரிஞ்சில்நெரிஞ்சில் இவ்வைந்தின் வேர்கள் சிறுபஞ்ச மூலமெனக் கருதப்பெறும்.

    இவ்வாறு தொகுப்பு மூலிகைகளாகக் காணப்படுபவை, திரிகண்டம், திரிஏலம், திரிகந்தம், திரிகாயம், திரிகாரசிகம், திரிகுமரி, திரிசாதம், திரிநிம்பம், திரிபலை, திரிபழம், திரிமஞ்சள், திரிமதம், திரிமூலம் எனவும்,

    இரு ஓமம், இருகரந்தை, இருகுமிழ், இருசங்கன், இருசண்பகம், இரு சந்தனம், இரு சீரகம், இருதொட்டி, இரு நன்னாரி, இரு நாபி, இரு நிம்பம், இரு நெரிஞ்சில், இரு நொச்சி, இருபகம் எனவும்,

    பஞ்ச கந்தம், பஞ்சகமம், பஞ்சகற்பம், பஞ்சகசாயம், பஞ்ச காயம், பஞ்ச காரகம், பஞ்ச கோலம், பஞ்ச சருக்கரை, பஞ்ச சீதம், பஞ்ச தரு, பஞ்ச நிக்தம், பஞ்ச திரவியம், பஞ்ச தீபாக்களி, பஞ்ச நிம்பம், பஞ்ச பட்டை, பஞ்ச பத்திரம், பஞ்ச லோதகம், பஞ்ச பாணப்பூ, பஞ்ச பூதமூலம், பஞ்ச பூடணம், பஞ்ச முட்டி, பஞ்ச மூலம், இடைப்பஞ்ச மூலம், பெரும் பஞ்ச மூலம், புற்பஞ்சமூலம், பஞ்ச மூலிகற்பம், பஞ்ச மூலிக் குடிநீர், பஞ்ச மூலித்தைலம், பஞ்ச லோகச் சாயம், பஞ்ச வர்க்கம், பஞ்ச வலக்கம், பஞ்சவாசம், பஞ்ச வில்வம், பஞ்சாக்கினிக் கொடி, பஞ்சாமிலம் எனவும் மருத்துவத் தொகையகராதி தெரிவிக்கக் காணலாம்.

    ""மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் மெய்வேறு வகிர்களாகக்

    கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும் படைக் கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்

    மீண்டேயும் தம்உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர

    ஆண்டு ஏகி, கொணர்தி என அடையாளத் தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்''

    எனக் கம்பன் உரைக்கக் காணலாம். மாண்டாரை உய்விப்பதும், உடலை இரு வேறாக வகிர்ந்தாலும் பொருந்துவிக்கச் செய்வதும், படைக்கலங் களைக் கிளர்ச்சி செய்யச் செய்வதும், இழந்த உருவத்தை மீளச் செய்வது மாகிய மருந்து மூலிகையாகும் என்றதனால் மூலிகையின் சிறப்பு விளங்கச் செய்யும்.

    தமிழ் மருத்துவத்தில் இடம் பெற்ற இருவேலி வேலூர்ப்பாளையச் செப்பேட்டிலும், ‘வழுதிலையைச் சேலம் மாவட்டம் தாரமங்கலம் செப்பேட்டிலும் காண முடிகிறது. செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை எனப்படுகின்ற செங்கழுநீர் சமயத்தோடு தொடர்புடைய மூலிகையாகும். இதனை நடுவதற்கு அரசிடம் உரிமை பெற வேண்டும் எனவும், இதை உரிமை மலர் என்று தேவாரமும், தாரமங்கலம், செங்கம் இடங்களிலுள்ள சோழர் கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. செங்கழுநீர் சிவனுக்கு உகந்த மலர் என்பதால், இதற்கு வழங்கப்பட்ட வரி குவளைக் காணம் எனப்பட்டது. அதே போல், மருத்துவக் குணமிக்க நீலமலர் வளர்க்க குவளை நடுவரியும், கண்ணோய், ஆஸ்துமா, காமாலை, இரத்தக் குறைபாடு முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும் கரிசலாங்கண்ணிக்கு கண்ணிட்டுக் காணம் என்னும் வரி செலுத்தி வளர்க்க வேண்டும் என்று, பல்வேறு வரி முறைகள் முடியாட்சிக் காலத்தில் மூலிகைகளுக்கு இருந்ததை அறியலாம். மூலிகைகளின் சிறப்பினையும் அதன் தன்மையையும் கருத்திற்கொண்டு, மூலிகைகளைக் கடவுளோடு இணைத்துக் கொண்டனர்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum