ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஸ்திரீ மலடு -ரோக நிதானம்

    Go down

    ஸ்திரீ  மலடு -ரோக நிதானம்  Empty ஸ்திரீ மலடு -ரோக நிதானம்

    Post by Admin Sun 03 Oct 2010, 6:08 pm

    ஸ்திரீரோக நிதானம்

    மலடு ரோகம்

    சுக்கில சுரோணிதங்களில் வாதாதிகளின் தோஷத்தினாலும் ஜன்மாந்த பாவத்தாலும் மலட்டுரோகம் உண்டாகும். அது ஆண் மலடு பெண் மலடு என இருவகைப்படும். இவற்றில் பெண் மலட்டில் ஆதி மலடு, காகமலடு, கதலி மலடு, கருப்ப மலடு என நான்கு பிரிவுகள் உண்டு. இது பெரும்பாலும் ஸ்திரீகட்கே விசேஷமாக காணப்படுதலால் இந்நோயை ஸ்திரீ ரோகத்தின் கீழ் கூறப்பட்டது.

    ஆண் மலடு :- ஆண்களின் விந்துவானது இனிப்பு இல்லாததும் சலத்தில் விட்டால் கரைந்து மிதப்பதும், உயிர்ப்பற்றதும், மூத்திரத்தில் நுரைகட்டுவதுமா யிருக்குமாயின் அதனால் கர்ப்பந்தரிக்கமாட்டாது.

    பெண் மலடு :- பெண்களுக்கு மாதாந்த ருதுகாலத்தில் வெளிப்படும் ரத்தமானது சிவந்தும், கருத்தும் வீழ்ந்து தேகத்தில்
    வாதகுணத்தை உண்டாக்கில் அது வாததோஷமென்றும், மஞ்சள் நிறமாயும் நீலநிறமாயும் தேகத்தில் பித்த குணத்தை யுண்டாக்கில் அது பித்ததோஷமென்றும், சீழைப்போல் வெளுப்பாக வீழ்ந்து மந்தாக்கினி முதலிய சிலேத்தும குணத்தை யுண்டாக்கில் அது சிலேத்தும தோஷமென்றும், பிரேத ரத்தத்தைப்போல் உருண்டை
    யுருண்டையாய் வீழின் அது ரத்தபித்த தோஷமென்றும், உதிரமானது கண்டு உடனே மறைந்தால் வாதபித்த தோஷமென்றும், மலமூத்திர நிறமாக வீழின் சந்நிபாத தோஷமென்றும் அறியவும்.இவற்றுள் வாதபித்த கப தோஷங்கள் சாத்தியம். தொந்த தோஷங் கள் கஷ்ட சாத்தியம். சந்நிபாத தோஷம் அசாத்தியமாம்.

    புருஷன் புணரும்போது அந்த ஸ்திரீக்கு தலைநோய் காணுமாகில் கருக்குழியில் பாரம் அல்லது பாசிபற்றி விளக்க மற்றிருக்கு மென்றும், அக்காலத்தில் அந்த ஸ்திரீக்கு சர்வாங்கத்திலும் நோய் காணுமாகில் கருக்குழியில் வாயுவு வியாபித்துருக்குமென்றும், நெஞ்சுவலி காணுமாகில் யோனி சுருங்கி தசை வளர்ந்திருக்கும் என்றும், முதுகு நோயுண்டாகில் யோனியில் கிருமி நிறைந்திருக்குமென்றும், கண்டசதை வலிக்குமாகில் யோனியில் ரத்தங் கட்டியிருக்குமென்றும், ஏப்பங் காணுமாகில் யோனிமதத்து கொழுப்படைந்திருக்குமென்றும், விந்து சேராமல் நஷ்டப்படுமாகில் பேயி னாலும், பயத்தினாலும், யோனிக்குள் வியாதிகள் யுண்டாயிருக்கு மென்றும், இவைகள் ம்லட்டு நோயைக் குறிக்குமெனவும் சில நூல் களில் கூறப்பட்டுள்ளன.

    1. ஆதிமலடு :- வயிற்றில் மூன்று மடிப்பு விழுந்து இடுப்பு பருத்து சரீரம் ஸ்தூலித்தால் கர்ப்பம் உண்டாகாது. இதுவே ஆதி மலடு எனப்படும்.

    2. காக மலடு : - முதலில் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுபிறகு இல்லாதிருப்பது காகமலடாம்.

    3. கதலி மலடு :- வாழை மரத்தில் உண்டாகும் தாறுபோல் ஒரு பிள்ளையை பெற்று மறுபடியும் கருப்பம் இல்லாதிருத்தலுக்கு கதலிமலடாம்.

    4. கருப்பமலடு :- வயிற்றிலே செத்து செத்து விழும் பிள்ளையை சாதாரணமாய் வருஷந்தோறும் பெறுவது கருப்ப மலடாம்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum