ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சித்த மருத்துவத்தில் நோய்த் தேர்வு முறை

    Go down

    சித்த மருத்துவத்தில் நோய்த் தேர்வு முறை Empty சித்த மருத்துவத்தில் நோய்த் தேர்வு முறை

    Post by Admin Tue 05 Oct 2010, 4:23 pm

    நோய்த் தேர்வு

    சித்த மருத்துவத்தில் ‘நோய் நாடி’–நோயைக் கண்டறியும் தேர்வுமுறை சிறந்து காணப்படுகிறது. நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு முன் நோயைக் கண்டறிய வேண்டும் என்பதே மருத்துவக் கொள்கை. நோயைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் முறை ‘நோய்த் தேர்வு முறை’ எனப்படும்.

    நோயைக் கண்டறிவதற்காக ஒவ்வொரு வகை மருத்துவத்திலும் வெவ்வேறு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சித்த மருத்துவத்தில் காணப்படும் நோய்த் தேர்வு முறை, பிற மருத்துவ முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் சிறந்த தேர்வு முறையாகவும் கருதலாம்.

    எண்வகைத் தேர்வு முறை

    சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படும் தேர்வு முறைகள் எட்டுவகைப்படும். அவை நாடி, பரிசம், நாக்கு, நிறம், மொழி, விழி, மலம், மூத்திரம் என்பன. இவை எட்டும் மருத்துவனின் கருவிகளாகக் கூறப்படுகின்றன.

    "" நாடிப்பரிசம் நாநிறம் மொழிவிழி

    மலம் மூத்திரமிவை மருத்துவ ராயுதம்''

    என்றும்,

    “மெய்க்குறி நிறந்தொனி விழிநா விருமலம் கைக்குறி’’ என்றும் குறிப்பிடுவர்.

    எண்வகைத் தேர்வு என்பது பிணியை அறியும் முறையைக் குறிக்கிறது. உடலைப் பிணிப்பது நோய் என்பதனால், நோயைப் பிணி என்னும் சொல்லாலும் குறிப்பிடுவர். நோயறிதல் என்பது, நோயைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முறை எனலாம்.

    நாடி

    நாடி, தாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடி, வாதம், பித்தம், ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும்.

    சுருங்கக் கூறின், நாடியைக் குறிக்கும் தாது, உடலில் உயிர் தங்கி யிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும்.

    தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று புரிகளாகக் கருதப்படு கின்றன. அவையே வாதம், பித்தம், ஐயம் எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்பு, எழுவகைத் தோற்றம், எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும் என்பர்.

    நாடிகளின் தொகை

    உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.

    நாடிகளின் எண்ணிக்கை

    நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலை, பிங்கலை, சுழிமுனை, காந்தாரி, குகு, சங்கினி, அசனி, அலம்புடை, புருடன், சிங்குவை என்பன.

    இப்பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலை, பிங்கலை, சுழு முனை என்பன.

    நாடிகளும் இயங்கும் இயக்கமும்

    நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.

    1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.

    2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.

    3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.

    4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.

    5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.

    6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.

    7. அசனி – வலது காதில் நிற்கும்.

    8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.

    9. சங்குனி – குறியில் நிற்கும்.

    10. குகு – அபானத்தில் நிற்கும்

    என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    வாயுக்கள்

    நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போல, வாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால், நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.

    வாயுக்கள் பத்து வருமாறு

    பிராணன், அபானன், வியானன், உதானன், கூர்மன், தேவதத்தன், சமானன், நாகன், கிரிகரன், தனஞ்செயன் என்பனவாகும்.

    வாயுக்களின் இயக்கம்

    நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.

    வாயுக்களின் இயக்கம் விபரம்

    1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலை, பிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டி, மூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.

    2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.

    3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.

    4. உதானன் – கழுத்தில் நின்று உணவு, நீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.

    5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.

    6. தேவதத்தன் – கொட்டாவி, உடம்பு முறுக்கலை உண்டாக்கும்.

    7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.

    8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.

    9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.

    10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.

    பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்று, சிரசில் முட்டி, நெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும். மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்; வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.

    இவ்வாறு, பிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும். இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்.



    உயிர்த்தாதுகள்

    நாடிகள், வாயுக்கள் போலத் தாதுகள் உடலை இயக்கும் ஆற்றல்களாக அமைந்துள்ளன. இத்தாதுகள் உடலில் குறைந்தால் உடலின் இயக்கத்தில் குற்றம் நேரும் என்பதால் இவை உயிர்த்தாதுகள் என அறியப்படும். அவை, இரசம், இரத்தம், தசை, கொழுப்பு, என்பு, மச்சை, விந்து என்பன வாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையாக உடலில் இயங்குகின்றன.

    1. இரசம் – உடலுக்கும் உள்ளத்துக்கும் நிறைவு தரும்.

    2. இரத்தம் – உயிரைக் காக்கும்.

    3. தசை – உடலைத் தாங்கும், அசைவு, பலந்தரும்.

    4. கொழுப்பு – உடலிலுள்ள தசைச் சந்துகளையும் என்புச் சந்துகளையும் தூர்த்து நிரப்பும். நெய்ப்பசை யூட்டும்.

    5. என்பு – உடலை உயர்த்தி நிறுத்தித் தாங்கும்.

    6. மச்சை – என்புத் துளைகளில் நிரம்பும்.

    7. விந்து – இனப் பெருக்கத்தை ஏற்படுத்தும்.

    என்று ஏழு தாதுக்களின் இயக்கம் உரைக்கப்பட்டது. இவற்றினால் தாதுகள் உடலுக்கு எந்த அளவுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன என்பது விளங்கும்.

    நாடி, வாயு, தாதுஇவற்றுக்குள்ள தொடர்பு

    நாடிகள் பத்துள் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறப்புடையன. வாயுக்களை மேற்கண்ட மூன்று நாடிகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

    இடகலை வாத நாடியாகவும், பிங்கலை பித்த நாடியாகவும், சுழுமுனை ஐய நாடியாகவும் குறிப்பிடப்படும். வாயுக்கள் பத்துள் அபானன், பிராணன், சமானன் ஆகிய மூன்றும் வாதம், பித்தம், ஐயம் ஆகிய நாடிகளுடன் இணைந்திருக்கும். அதேபோல, தாதுகள் ஏழின் குணங்களையும் நலன்களையும் அறிய வேண்டுமானால், வாத பித்த ஐய நாடிகள் எவ்வாறு இயல்பாகவும் இயல்புக்கு மாறாகவும் இயங்குகின்றன என்பதைக் கொண்டே அறிந்திட இயலும்.

    எனவே, நாடி, வாயு, தாதுகள் ஆகியவை உடலை இயக்கவும், காக்கவும், தாக்கவும், அழிக்கவும், ஆக்கவும் காரணிகளாக அமைகின்றன என்பது பெறப்படுகிறது. இவற்றின் இயக்கம் சீராகவும், முறையாகவும் அமைந்தால் உடல் நோயற்று இருக்க வகையேற்படும். அவை சீராக அமையாமல் முறை தவறினால் நோயோ நோய்க்குரிய பிற குற்றங்களோ உடலுக்கு நேர வழியேற்படும்.

    நாடிகளில் மூன்று

    நாடிகளில் வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. இம்மூன்று நாடிகள் உடலுக்கு உற்ற நோய்த் துன்பத்தினைக் கணித்தறிய உதவும்.

    "" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

    வளிமுதலா எண்ணிய மூன்று''

    என்னும் திருக்குறள், மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று உரைக்கக் காண்கிறோம். அவ்வாறே, மருத்துவ நூல்களும் வாதம் முதலாக உடைய மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.

    மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளே யன்றி, நோய்களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும், வெறியேற்றமும், தனித்தும், பிற தாதுகளோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்; உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர்; தசைகளின் மழமழப்பான இயக்கத்திற்கு உயவு நெய் போல் பயன் படுவது ஐயம். இவை, உணவின் செயல்களினாலும், ஒவ்வாமையாலும், இயற்கை மாறுபாட்டினாலும், மிகுதலும், குறைதலும் நேரும் பொழுது, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

    மேலை நாட்டு மருத்துவர்கள் வாதம் முதலிய மூன்று நாடி களையும் இரத்தம் (ஞடூணிணிஞீ), ஐயம் (ணீடடூஞுஞ்ட்), பித்தம் (ஞிடணிடூஞுணூ), கரும்பித்தம் (ட்ஞுடூச்ணஞிடணிடூஞுணூ) என நால்வகை நீரகங்களாகப் (டதட்ணிணூண்) பகுப்பர் என்றதனால், மேலை நாட்டு அறிஞர்களும் மருத்துவ வல்லுநர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் சித்த மருத்துவ முன்னோர்களால் நாடிமுறைகள் அறியப்பட்டிருக்கின்றன.

    நாடிகளின் செயல்கள்

    நாடிகள் மூன்றும் உடலைக் காக்கவும், அழிக்கவும் செய்ய வல்லன என்பதை மருத்துப் பாரதம் விளக்குகிறது.

    வாதம் படைப்புத் தொழிலுக்கும், பித்தம் காக்கும் தொழிலுக்கும், ஐயம் அழிக்கும் தொழிலுக்கும் உடையன

    "" சூழ்ந்தது சுக்கிலத்திற் சுரோணிதங் கலக்குமன்று

    பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திய குமிழி போல''

    என்று, மூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

    மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்து, ஆராய்ந்து, நோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகிறது. அவை மறைவிடம், குதிக்கால், சந்து, உந்தி, கை, மார்பு, கழுத்து, புருவமத்தி,காது, மூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் நடந்து கொண்டிருப்பதனால், அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை

    ஆராயலாம் என்றுரைக்கப்படுகிறது.

    நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும், ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால், கைகளில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால், ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது, நுட்பமான அறிவியல் உண்மையாகும்.

    நாடிகளை ஆராயும்போது, கையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்க, முதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும், இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும், மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.

    நாடி வேளை நேரம்

    வாதம் பகலும் இரவும் 6 10 மணி

    பித்தம் பகலும் இரவும் 10 2 மணி

    கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 6 மணி

    என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப் பட்டுள்ளன. இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் தொந்தமானாலோ, மாறுபட் டாலோ நோயோ மரணமோ உண்டாகு மென்று உணர்த்தப்படுகிறது.

    நாடிகளும் காலமும்:

    "" காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்

    பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்

    மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''

    பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும், அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும், மாலை பத்து நாழிகை ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். அஃதேபோல், ஞாயிறு மறைவிற்குப்பின் முன்னிரவு பத்து நாழிகை வாதமும், அதன்பின் நல்லிரவு பத்து நாழிகை பித்தமும், பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். இதனை வாத, பித்த, ஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம்’’ எனவும் கூறுவர்.

    நாடிகளும் மாதங்களும்

    "" கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்

    கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்

    விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்

    விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்

    திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்

    சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்

    நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்

    நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''

    கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகைமாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்,

    நாடிபார்க்கும் மாதம், வகை:

    "" சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்

    அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்

    மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி

    வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''

    "" தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்

    மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்

    தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று

    நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''

    சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும், ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகையில் நண்பகலிலும், மார்கழி, தை, மாசியில் மாலை எற்பாடு வேளையிலும், பங்குனி, ஆவணி, புரட்டாசியில் இரவிலும் நாடி களைக் கணிக்க நவின்ற நேரமாகும் என்பதனால், இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. வாத, பித்த, ஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும், காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம். அதே போல,

    ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி ஆகிய திங்களில், வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய திங்களில், ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். அவ்வாறே, சிறு பொழுதான ஆறில், வைகறையில் வாதமும், நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும்.

    இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.

    நாடி தெரியாத பேர்கள்

    பெண்போகர், நீண்டகால நோயாளி, குதிரை ஏற்றம் செய்தோர், யானை ஏற்றம் செய்தோர், வழி நடைப்பயணி, பேருண்டி உண்டோர், போதைப் பொருள் கொண்டவர், நீர்ப்பாடு, நீரிழிவு, பெருநோய், வீக்கம் ஆகிய நோய்களுற்றோர், அத்தி சுரத்தால் இளைத்தவர், பயமுற்றோர், துன்பமுற்றவர், விடந் தீண்டியவர், ஓட்டமுற்றவர், அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர், சூல் கொண்ட பெண், மாதவிடாயான பெண், பெரும்பாடுற்ற பெண், அதிகம் தூங்கியோர், எண்ணெய் தேய்த்து முழுகியவர், சினங்கொண்டோர், மோகங் கொண்டோர், முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர், மதங்கொண்டோர், பெருத்த உடலினர், என்பு முறிந்தோர், சோகை நோயினர், பிணத்தைத் தொட்டோர், வாந்தி, விக்கல் எடுத்தோர், விரத மிருப்பவர், மழையில் நனைந்தோர், இசைப் பாடகர், களறி ஆடுவோர், நாட்டியமாடிக் களைப்புற்றோர், மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி நடையைக் கணித்தறிவது அரிதாம்.

    மேலே குறிப்பிடப் பட்டிருப்போரில் பெரும்பாலோர் மெய்ப் பாட்டுணர்ச்சியால் அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த வேளையில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும், கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த வேளையில் நாடித் தேர்வு நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால், நாடி தெரியதாக பேர்கள் எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

    பூத நாடி:

    வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல.

    “நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’

    என்பதற்கிணங்க, நாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.

    "" சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி

    தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''

    என்றதனால், ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும்.

    ஆராயுமிடத்து வாத, பித்த, ஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.

    இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்குச் சுக சன்னிமார்க்கமாகும். அவன் சாகான். காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.

    பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேருறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்து, நாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.

    குருநாடி:

    வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுறுவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும், காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும், சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும், இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலை, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாத, பித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலை, கனவு, உறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

    குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பது வெள்ளிடைமலை. ஆகவே, குரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணர வல்லன் அல்லன். யோக வல்லமையினால் தான் அறியமுடியும். குருநாடி, வாத, பித்த, ஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.

    "" தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்

    தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே''

    என்பதினால், குருநாடி வாத, பித்த, ஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. ‘தமரகம்’ எனும் ‘இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதே போல குரு நாடியானது வாத, பித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்றதனால், குருநாடி, நாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும், மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.

    நாடி நடை

    நோய் அற்றபோது ஒரு வகை நடையும், நோய் உற்ற போது ஒருவகை நடையும், நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரியிருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சி, புழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.

    வாத நாடி

    "" வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்''

    வாத நாடியானது இயல்பினில் அன்னம், கோழி, மயில், போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவை, மண்டூகம் தாவுவது போலும், ஓணான் போலும், பாம்பு, அட்டை, வேலிக்குருவி, ஆமை போலவும் நடக்கும்.

    பித்த நாடி

    "" ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்''

    பித்த நாடியானது இயல்பினில் ஆமை, அட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை, நாகரிகமான அன்ன நடை போலும், மயில் போலும், தாரா போலும், மாடப் புறா, ஊர்க்குருவி போலும் , கருடப் போத்து, சிங்கம், பாம்பு, பிள்ளை குதிப்பது போல, மதயானை போல, சிறு காக்கை தூங்குவது போல, நடக்கும்.

    ஐய நாடி

    "" போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே''

    ஐய நாடியானது இயல்பினில் தவளை, பாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடை, கொக்கினது உறக்கம், ஊர்க் குருவி, சிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும்.

    பாம்பு நடையெனப் பதுங்கியும், அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும்.

    பூத நாடி

    பூத நாடியானது இயல்பினில், கல்லெறிதல், ஆட்டுக்கிடா பாய்ச்சல், செக்கிடை திருகல், சீறுகின்ற மூஞ்சூறு, பந்தடித்து எழும்புதல், ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும்.இதிலிருந்து மாறுபடும் போது,

    பூனைபோல நடக்கும், வெள்ளெலி போல குன்றியும்

    வண்டுபோல ஊர்ந்தும் , பாம்பு போல நெளிந்தும்

    சங்கு போல ஊர்ந்தும், கார்வண்டு போல ஊர்ந்தும்

    பூதத்தைப் போல ஊர்ந்தும், தேரை போல தாண்டியும்

    காக்கைபோலக் குதித்தும் , நெருப்பு போல சுட்டும்

    செக்குபோலச் சுற்றியும் , நடக்கு மென்றறியலாம்

    என்பதனால், மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும், முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாக, வளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவி களுக்கு ஈடாக, விரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மை, நோயுற்ற காலம், முதிர்ச்சி, மரணத்தின் எல்லை என்பவற்றை யெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    »  சித்த மருத்துவத்தில் மருந்து மருந்துப் பொருள் விளக்கம்
    » சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
    » மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
    » குழந்தை மருத்துவத்தில் உதவும் நல்ல மருந்து -ச்ருங்கியாதி சூர்ணம்
    » சாப்பிடும் முறை

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum