ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை

    Go down

    மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை Empty மருத்துவர் / மருத்துவமனை நகைச்சுவை

    Post by Admin Thu 04 Nov 2010, 10:29 pm

    #



    டாக்டர் 12 மணிக்கு நீங்க சாப்பிட சொன்னமாத்திரையை 6 ம ணிக்கே சாப்பிட்டு விட்டேன்.

    அப்புறம்என்னாச்சு?

    கடிகாரத்தை 12மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.


    #




    டாக்டர் நேத்து நீங்க கொடுத்த டியூப்மாத்திரை பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்ட்டப்பட்டு எப்படியோ முழுங்கிட்டேன்

    அடப்பாவி டிகிரிபார்க்க வச்சிருந்த தர்மா மீட்டரை தூக்கிட்டு போய் முழுங்கிட்டயா?


    #




    என்னது காய்ச்சலுக்குன்னு போன உனக்குஆப்ரேஷன் நடந்துச்சா, கொடுமையா இருக்கே?

    அவங்க தர்மாமீட்டரை முழுங்கிட்டேன், அதான்.


    #




    நோயாளி டாக்டர் என் காதுக்குள் பல்லிபோயிருச்சி சார்?

    டாக்டர் ஏம்பாகாதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?

    நோயாளி எற்கனவேகரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னுபார்த்தேன்.


    #




    ஆப்ரேஷன் எப்ப டாக்டர்?

    கனவுதானேவருது...! அதனாலேன்ன?

    இல்லை டாக்டர்இடைஇடையே இந்த கனவை உங்களுக்கு வழங்குப வர்களுன்னு விளம்பரம்வேற வருதே.


    #




    மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறிகுதிக்கிறாறே ஏன்?

    டாக்டர் மருந்தைசாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தைகுலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.


    #




    டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க ஏங்க அப்படிசொல்றீங்க?

    ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனீங்க. இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துலஉட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.


    #




    எதுக்கு டாக்டர்...! நடிகைகள் சிம்ரன், ரம்பா, படத்தையெல்லாம் மாட்டி வச்சிருக்கீங்க?

    ஆன்னு வாயைத்திறக்க சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு, அதான்.


    #




    ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?

    மூக்குப் பொடிபோடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க சொ ன்னாருங்க அதான்.


    #




    இருமல், இருமல்னுடாக்டரிடம் போனியே, டாக்டர் என்ன சொன் னார்?

    இது இருமல்தான்னு அவரும் ஒப்புக்கிட்டார்.


    #




    என்ன டாக்டர் எனக்கு மூணு தடவை ஆப்ரேஷன்பண்ணிட்டீங்களா?

    யோய் மூணு தடவைமயக்க மருந்து கொடுத்தேன் கொடுத்த 5 நிமிஷத்துல எந்திரிச்சுகிட்டு இதே கேள்வியைகேட்டுக்கிட்டிருக்கே.


    #




    இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியைபார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?

    நீங்களாவதுபரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்தஎன்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.


    #




    அந்த டாக்டர் பேலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?

    கால்ல வெடிப்புபஇருக்குதுன்னே உள்ளே போனவர் கம் பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்டமுயற்சிக்கறாரு.


    #




    டாக்டர் நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ணஇருந்த பேஷண்ட் தப்பி ச்சு ஓடிட்டார்.

    சரி பரவாயில்லைவிடுங்க பிழைச்சு போகட்டும்.


    #




    இன்னிக்கு எங்களுக்கு ஆப்ரேஷன்

    போங்க டாக்டர்இன்னிக்தான் நர்ஸ் சிரிச்சு, சிரிச்சு பேசினாங்க. இப்படி சொல்லி என்னைகஷ்டப் படுத்திறீங்க.


    #




    டாக்டர் என் பையன் கை சூப்புகிறான். ஏதாவதுவைத்தியம் செய்ய முடியுமா?

    கவலைப்படாதீங்கபையன் வளர்ந்தால் சரியாகிவிடும்.

    பையன் சூப்புவதுஎன் கையாச்சே டாக்டர்.


    #




    வயிறு எரியுது டாக்டர்

    எப்போதிலிருந்து?

    உங்க நர்ஸ்பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்ததிலிருந்து டாக்டர்.

    வயிறு எரியுதுடாக்டர்

    எப்போதிலிருந்து?

    உங்க நர்ஸ்பக்கத்து பெட்டுக்காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்துடாக்டர்.


    #




    இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர்போட்டாவை பார்த்துகிட்டே இருக்கான்

    அவங்க அம்மாஇருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.


    #




    என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னுபோர்டு போட்டிருக்கார்!

    ஆமாங்க. அந்தடாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!


    #




    காலியான கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டுடாக்டரை பார்க்க போகிறார் ஏன்?

    கேஸ் பிராப்ளம்வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.


    #




    என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட்நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?

    அது பிள்ளையார்சுழியாம்....


    #




    டாக்டர் நான் செத்து போய்விடுவேனா டாக்டர்,

    இல்லை...!இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக் கு ஒன்பது பேர்தான் சாவாங்க...!நீங்கபொழச்சிப்பீங்க.


    #




    அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்புசாப்பிடுகிறார்.

    டாக்டர் இனிப்பைகண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம்.


    #




    டாக்டர். கொஞ்ச நாளா என் கணவருக்குதூக்கத்துல பேசற வியாதி இருக்கு...

    பகல்ல பேசறதுக்குகொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும்.


    #




    நர்ஸ் - டாக்டர் வெளிய ஒரு பேஷண்ட், மாத்திரை பெரிசா இரு க்குது எப்படி விழுங்கிறதுன்னு கேட்கிறார்?

    டாக்டர் - நான்காணேமன்னு தேடிக்கிட்டு இருக்கேன் முதல்ல பேப்பர் வெயிட்டை வாங்கிட்டு வா....


    #




    கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லைபுடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்?

    எங்க ஏரியா பல்டாக்டர்...!


    #




    டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்கசொல்லிட்டாரு

    நல்லாதூங்கணுமே... ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?

    ம்ஹும் ஆபிஸ்க்குலீவு போடாம போயிடுவேன்.


    #




    ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போதுஎதுக்கு டாக்டர் நி றைய புத்தகம் எடுத்துக்கிட்டு போறாரு?

    புத்தகம் படிச்சுபடிச்சு ஆப்ரேஷன் பண்ணுவாரு.


    #




    ஆஹா, நான்பிழைச்சுட்டேன் ஆப்ரேஷன் சக்ஸஸ்.

    யோவ் கத்தாத இதுஎமலோகம்.


    #




    வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன்டாக்டர்.

    இதிலொன்னும்தப்பில்லையே

    திருடப் போனவீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!


    #




    ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டுபோகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு

    அப்ப டோர்டெலிவரின்னு சொல்லு...!


    #




    டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?

    அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில் இருந்து நான் பிழைச்சிடுவேன்.


    #




    உங்களுக்கு எப்பயிலேர்ந்து தலைவலி அதிகமாஇருக்கு?

    உங்க பீஸ் பில்லைபார்த்ததிலிருந்து டாக்டர்.


    #




    டாக்டர் நோயாளியிடம் மருந்து கொடுத்தார்.நோயாளி டாக்டரிடம் டானிக் எந்த அளவு சாப்பிடனும் என்றார். டாக்டர் 1 மூடி, 2 வேளை சாப்பிடனும் என்றார்.

    மறுநாள் நோயாளிடாக்டரிடம் ஒருவேளை சாப்பிட்ட பின் எவ்வளவு டானிக் சாப்பிடனும் என்றார். டாக்டர்அதே 1 மூடி என்றார்.

    அதற்கு நோயாளிஅந்த மூடியை நேற்றே சாப்பிட்டேன். இன்று சாப்பிட மூடி இல்லையே சார் என்றார்.


    #




    டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?

    அப்படியா? சும்மாவா இருந்தீங்க..

    இல்ல டாக்டர்இருமிக்கிட்டே தான் இருந்தேன்.


    #




    ஒருவரை வாய் பொத்தி டாக்டரிடம்அழைத்துவந்தார்கள்.

    டாக்டர் - என்னஆச்சி? ஏன் அவர் வாயை அடைத்து கொண்டு வரு கிறீர்கள்?

    வந்தவர் - சார்இவர் வாயை திறந்தால் வாத்து மாதிரி கத்துவ ரர். அதனால்தான் வாயை பொத்தினோம்.

    டாக்டர் - எத்தனைநாளா இப்படி இருக்கு?

    வந்தவர் - 2வருடமா?

    டாக்டர் - அட ஏன்இவ்வளவு நாளா இவரு வாத்து முட்டை போட் டுகிட்டு இருந்தாரு 2 நாளா முட்டை போடவில்லைஅதான் உங்களி டம் அழைத்து வந்துள்ளோம்.

    டாக்கடர் - !!!!


    #




    டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்துஎனக்கு ஒரே தும்மலா வருது.

    அடடா...! என்னோடபொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?


    #




    ஒரு பருவப்பெண்னின் தகப்பனார் ஒரு டாக்டர்.அவர் மகளிடம் அவசரம் அவசரமாக பேசினார். அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால்செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள்.

    பெண் நிதானமாகசொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது.


    #




    டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?

    அப்பவாது அவர்பேசட்டும் விட்டுடுங்க...!


    #




    உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும்அதுக்காக இப்படி பயந்தா எப்படி?

    நான் பயப்படறதுநோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.


    #




    தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொல்றீங்கஆனா என்னால் முடியாது டாக்டர்

    ஏன்?

    எங்க கோழி வெள்ளைமுட்டைதான் போடும் டாக்டர்.


    #




    டாக்டர் என் வாழ்க்கை எப்படி போகுமொன்னு பயமாஇருக்கு.

    ஒரு வருஷம்டிரீட்மெண்ட் தர்றேன் ஃபீஸ் ஆயிரம் ரூபாய். ஆயிரம் கொடுத்தா உங்க வாழ்க்கைசரியாகிவிடும் என் வாழ்க்கை.


    #




    ஸ்பூனை ஏன் இரண்டாக உடைச்சீங்க...!

    அரை ஸ்பூன்மருந்து மட்டும் டாக்டர் சாப்பிடச் சொன்னாரே


    #




    வயிறு எரியுது டாக்டர்

    எப்ப இருந்து?

    பல்பைமுழுங்கினதுல இருந்து


    #




    நர்ஸ்! பேஷண்ட்டுக்கு சுகர் இருக்கா?

    இல்ல சார்.

    பீ.பி இருக்கா

    இல்லை சார்.

    அட, ஆச்சர்யமா இருக்கே!

    பேஷண்ட் செத்துஅரை மணி ஆச்சு சார்!


    #




    டாக்டர் நீங்க கொடுத்த மருந்துமாத்திரையெல்லாம் சாப்பிட் டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான்முழுங்க சிரமமா இருந்தது.

    அடப்பாவி பேப்பர்வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?


    #




    ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்!

    எது?

    நர்ஸை சிஸ்டர்னுகூப்பிடுறது!


    #




    உங்க வயித்துல நிறைய கேஸ் இருக்கு

    எத்தனை சிலிண்டர்ஆகும் டாக்டர்?


    #




    டாக்டர் என் மாமியார் கால்ல முள்குத்திடுச்சு

    முள்ளைஎடுக்கணுமா?

    முள் சின்னது.அதையேன் தொந்தரவு பண்ணணும்? காலை எடுத்துடுங்க.


    #




    ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்பபயங்கரமா வலிக்குது டாக்டர்?

    எனக்குத்தான்வலிக்காதுன்னு சொன்னே.


    #




    இரண்டு இட்லியை கூட என்னால் முழுசா சாப்பிடமுடியல டாக்டர் ...!

    என்னாலயும்முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது. புட்டு புட் டுதன் சாப்பிட முடியும்.


    #




    பகல் கனவு பலிக்குமா டாக்டர்...!

    பலிக்காது ஏன்கேட்கறீங்க...?

    நீங்க ஆபரேசன்செஞ்சு, நான் பிழைக்கிற மாதிரி கனவு கண்டேன்.


    #




    தம்பி உடையான் படைக்கு அஞ்சன். ஏன்?

    என்ன தம்பிஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்.


    #




    டாக்டர் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன்.

    ஏன் பேஷண்ட்யாரும் வர்றதில்லையா?

    இல்ல பேஷண்ட்யாரும் பிழைக்க மாட்டேங்கிறாங்கள்.


    #




    ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?

    உங்க மாமியார்பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்கமுடியாது.

    பாழாப் போனஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!


    #




    நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்

    எப்படி சொல்றீங்க?

    உங்களுக்குஏதாவது ஆப்ரேஷனா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க.


    #




    நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்குடாக்டர்

    டாக்டர் - ஏன்இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.

    நோயாளி - மறந்துபோச்சு டாக்டர்.


    #




    உங்களுக்கு அல்சராமே?

    அந்தவயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?


    #




    இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களைகாப்பாத்திட்டார்...!

    அப்படியா ...!எப்படி...!

    இன்னிக்கு நடக்கஇருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum