ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    புகை பிடிப்பதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது

    Go down

    புகை பிடிப்பதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது Empty புகை பிடிப்பதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது

    Post by Admin Thu 18 Nov 2010, 6:38 pm

    நாகரீகம் என்றுசொல்லிக்கொண்டு தற்போது பலருக்கு பல உள் மற்றும் புறநோய்களை எளிதாக தந்துக்கொண்டுஇருக்கும் புகை பிடிக்கும் பழக்கத்தினை பற்றி கருத்துக்களை நாம் இங்கு காண்போம்.

    விசுவாசங்கொண்டோரே..!உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி, (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாகஅல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாகஇருக்கின்றான். திருக்குர்ஆன் 4:29

    புகை மற்றும் போதைபழக்கமானது நம்மை நாமே கொலை செய்து கொள்வதற்கு சமமாகும் என்பதினை தான் மிகவும்அழகாக மேற்கண்ட இறைவசனமானது குறிப்பிடுகிறது என்பதினை நாம் அறியலாம். செல்வங்களைதவறான முறையில் செலவு செய்து வீண் விரயமாக்கும் அனைத்து மனிதர்களுக்கும்அச்சமூட்டக்கூடிய அளவிலும் அந்த இறைவசனம் உள்ளது.

    அபாயகரமானதுஎன்றும், புகை பிடிப்பவர்களையும், புகை பிடிப்பவர்களின் பக்கத்தில் இருப்பவர்களையும் நோய்க்கு ஆளாக்க கூடியதுஇப்பழக்கம் தான் என்றால் மிகையாகாது. சிகரெட்டிலிருந்து வெளிவரும் ஒரு வகைநஞ்சானது இருவரையும் எளிதாக தாக்கக்கூடியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றுகூறுவது என்னவென்றால், புகை பிடிப்பவர்களை விட பக்கத்தில்இருப்பவர்கள் தான் அந்த கொடிய நஞ்சு கிருமி நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டுஇறக்கிறார்கள்.

    புகை பிடிப்பதால், வாய்புற்றுநோய் இதய நோய் மனஅழுத்தம் மன வேதனை மன கஷ்டம் சிறுநீரக கோளாறுகள்இரத்த அழுத்தம் சர்க்கரை நோய் போன்ற இன்னும் பல தொடர்புடைய நோய்கள் வர அதுவேகாரணமாகி விடுகின்றன. இந்த நூற்றாண்டில், ஒரு பில்லியன்மக்கள் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் இறக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்இருப்பதாக உலக சுகாதார அமைப்பானது தன்னுடைய ஆய்வில் வெளியிட்டு உள்ளது.

    ஒரு மனிதன்எப்படி வாழ வேண்டும், எவ்வாறு இருக்க வேண்டும், எந்த வகையில் பொருள்களை செலவு செய்ய வேண்டும், யாரை நண்பர்களாகஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனிதகுலம் அனைத்திற்கும் அறிவுரை வழங்கக்கூடியதாகவும்அவர்களை நேர்வழியின்பால் வழி நடத்திச்செல்லக்கூடியதாகவும் திருக்குர்ஆன் உள்ளது.

    அவனேவானங்களிலும், பூமியிலும் (வணக்கத்திற்குரிய) அல்லாஹ், அவன் உங்களுடைய இரகசியத்தையும்,உங்களுடைய பரகசியத்தையும்நன்கறிவான், இன்னும் (நன்மையோ, தீமையோ செய்து) நீங்கள் சம்பாதிப்பவைகளையும் அவன் நன்கறிவான். திருக்குர்ஆன்6:3

    அல்லாஹுதஆலாமனிதனின் அனைத்து தவறுகளையும் மற்றும் அறியாமைக்காலத்து பாவங்களையும் மன்னித்துஅருள் செய்பவன். ஆனால் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை செய்தால் இறைவன்மன்னிக்க மாட்டான். அந்த வரிசையில் புகை பிடித்தலையும், மற்றும் குடிப்பழக்கத்தினையும் கூறலாம்.

    புகைக்க, மதுக்குடிக்க செலவிடும் பணத்தினை கொண்டு நல்ல உணவுபொருட்களையும், நல்ல ஊட்டச்சத்தான பழங்களையும் வாங்கி உண்ணலாம். புகை பிடிப்பதால் மனிதனுக்குஎன்ன பயன்.? அல்லாஹுதஆலா மனிதனுக்கு கொடுத்த அவனுடையபணத்தினையும்;, பொன்னான நேரங்களையும் காலங்களையும் இதனால்வீணாக்கிறான். ஒரு சிகரெட்டினை ஊதி தள்ள ஒரு மனிதனுக்கு குறைந்தது ஐந்தோ அல்லதுபத்து நிமிடமோ எடுத்துக் கொள்வான். அந்த நேரத்தினை ஏதேனும் பயனுள்ள காரியத்திற்குஎடுத்துக்கொண்டால் அவனுடைய நேரமும் மற்றும் காலமும் பயனுள்ளதாக அமையும்.

    சிகரெட் மற்றும்போதைப்பொருட்களை விற்பனை செய்யும் பல ஆதிக்க சக்தி கொண்ட நிறுவனங்கள் பல நாடுகளில்உள்ள பல மில்லியன் மக்களை பல்வேறு சூழ்நிலைகளால் கொலை செய்கிறார்கள். மற்றும் பலகோடிகளை விளம்பரங்களுக்காகவும் மற்றும் பிரசுரங்களுக்காகவும் வீண் விரயம்செய்கிறார்கள். அத்துடன் குடிப்பழக்கம் நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்றுபெருமையாக சிகரெட் அட்டையிலும், மற்றும் மதுபானப்பாட்டிலிலும் போட்டுஇருப்பார்கள். போட்டு என்ன பயன்..?முதலில் போதை தரும் எந்தவஸ்துவாக இருந்தாலும் அதனை அந்தந்த அரசாங்கங்கள் உற்பத்தி செய்யவே கூடாது. இதனைஅவர்கள் கண்டிப்பாக செயலுக்குக் கொண்டு வர வேண்டும்.

    ஒரு பொருள்சந்தைக்கு வந்தால் தான் மக்கள் வாங்குவார்கள். சந்தைக்கே வரவில்லை என்றால் எங்குபோய் வாங்குவார்கள். போதை பொருள்களுக்காக செலவு செய்யும் இத்தகைய பணங்களை புற்றுநோய் புனரமைப்பு இயக்கத்திற்கும்,பல தொண்டு நிறுவனங்களும், குழந்தைகள் நல காப்பங்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும் கொடுத்தால் அதன்மூலமாக பலர் பயன் பெறுவார்கள்.

    ஆதமுடையமக்களே..! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் (ஆடைகளினால் உங்களுடைய அலங்காரத்தைஎடுத்துக்கொள்ளுங்கள், மேலும், (அல்லாஹ்உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாக) உண்ணுங்கள், மேலும், பருகுங்கள். (ஆனால்) வீண் விரயமும்செய்யாதீர்கள், ஏனென்றால், நிச்சயமாகஅல்லாஹ் வீண் விரயம் செய்வோரை நேசிக்கமாட்டான். திருக்குர்ஆன் 7:31

    புகை பிடிப்பதால்பல சாலை விபத்துகள் பலகோணங்களில் ஏற்படுகின்றன. வாகனசெலுத்துபவர்கள் ஸ்டைலாக ஒருகையில் சிகரெட்.. ஒரு கையில் ஸ்டெரிங் என்ற தோரணையில் வாகனத்தினை ஓட்டுவார்கள்.ஆனால் ஒரு நொடியில் மரணம் என்பதினை அவர்கள் எங்கே அறிய போகிறார்கள். சாலைவிபத்துகளால் நாட்டில் பல பேர்கள் இறந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதினைஊடகங்களை படிப்பவர்கள் அறிவார்கள். அத்துடன், மறதியின் காரணமாகபுகைபிடிப்பவர்கள் சிகரேட் புகையினை அணைக்காமல் விட்டு விடுவதால் இரவு நேரங்களில்இல்லங்களில் தீ விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்பினை உண்டாக்கி விடுகிறது இந்தபுகைப்பழக்கம்.

    புகைப்பிடிப்பதால்சுற்றுப்புற சூழல் மாசுஅடைகிறது. மாசுக்கள் அதிகமாக படிவதால் தூய்மையான காற்றானதுஅசுத்தமாக மாறி விடுகிறது. ஒரு வெள்ளைத்துணியினை எடுத்து சிகரெட் புகையினை அதில்ஊதிப்பாருங்கள்.. மஞ்சளாகக் கறை ஒன்று படிந்து போய் இருக்கும். அதைப்போல்புகைப்பிடிப்பவர்கள், புகைப் பிடிப்பதால் இதயத்திலும் கொஞ்சம்கொஞ்சமாக கறை படிந்து வரும்.

    புகைப்பிடிப்பவர்கள், அவர் ஏழையாக இருந்தாலும் ஜகாத் வாங்குவதை இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கிறது.ஏனெனில் ஜகாத் என்பது புனிதமான ஒன்றாகவும், ஜகாத் பணத்தினைகஷ்டப்படும் ஏழைகளுக்கு கொடுங்கள் என்றும் இஸ்லாம் கூறுகிறது. புகைப்பிடிப்பவனிடமோஅல்லது குடிப்பழக்கம் உள்ளவனிடமோ ஜகாத் பணத்தினை கொடுத்தால் அவன் அதனை குடிக்கவும்மற்றும் புகைக்கவும் பயன் படுத்தி அந்த புனிதத்தினை கெடுத்து விடுவான்.

    புகைப்பிடிக்கும்பழக்கமானது 500 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் என்ற நாட்டிலிருந்து தோன்றியதாககருதப்படுகிறது. அங்கு தோன்றிய இந்த கலாச்சார சீரழிவானது கொஞ்சம் கொஞ்சமாக பலநாட்டு மக்களை பிடித்து ஆட்டுகிறது. 100 வருடங்களுக்கு முன்பு வரை தான் இந்தபுகைப்பழக்கமானது இஸ்லாமிய நாடுகளை முற்றுகையிட்டது எனலாம்.

    தற்போது வளைகுடாநாடுகளில் அதிகமான இடங்களில், சிஸா (Shisha – Hubbly bubbly - உக்கா) அதாவதுகண்ணாடி குடுவைகளில் வைத்து புகை இழுக்கும் பழக்கமானது அரேபியஆண்களிடமும்அரேபியப்பெண்களிடமும் ஒரு கெட்ட பழக்கமாக ஆகி விட்டது. அந்த சிஸாவினை ஒரு தடவைஇழுத்தால் 10 சிகரெட்டினை பிடித்தால் என்ன மாதிரியான உடல் உபாதைகள் வருமோ அதனை விடஅதிகமான பாதிப்புகள் அதில் உள்ளன. இதனால் வாய்ப்புற்று நோய்கள் வருவதற்கும்வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. இதனை பற்றித்தெரிந்தும் போதை அதிகம் வேண்டும்என்பதற்காக இரவு வேளைகளில் அதிகமாக இங்குள்ளவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.

    வளைகுடாஅரசாங்கங்கள் சமீபத்தில், பேருந்து நிலையம், வணிக வளாகம், உணவு விடுதிகள், மருத்துவமனைமற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகை பிடிப்பதினை தடை செய்து உள்ளது.மற்றும் 18 வயதிற்கு குறைந்தவர்கள் கடைகளில் சிகரெட் வாங்கினால் அதனை அவர்களுக்குவிற்கக்கூடாது என்றும் அப்படி மீறி விற்பனை செய்தால் கடையின் உரிமம்ரத்துச்செய்யப்படும் என்றும் கடுமையான சட்டங்களையும் பிறப்பித்துள்ளது.

    துரதிஷ்ட்டவசமாகபுகை மற்றும் போதை பொருட்கள் உட்கொள்ளும் பழக்கமானது இஸ்லாமியர்களாக இருக்கக்கூடியநம்முடைய சமுதாயத்தினரை ஆட்க்கொண்டு விட்டது. அல்லாஹ் நாடினால் இனி வரும்நாள்களில் நாம் இத்தகைய சூழ்நிலைக்கு அடிமைப்படாமலும், நம்முடைய சந்ததியினரும் அடிமைப்படாமலும் இறைவன் நம்மை பாதுகாத்து அருளவேண்டும்.

    STUB OUT THOSECIGARETTES, PLEASE..!



    Do not killyourself. Allah is Merciful unto you
    (4:29)

    The dangers ofcigarette and even ‘Shisha’ smoking are undeniable. Tobacco smoke affects boththe smoker and the people around them who cannot escape the toxic plumes asthey exit the smoker’s lungs. New research ahs proven that second-hand smoke isoften more deadly then actually smoking cigarettes first- hand. Second handsmoke is a carcinogen and is equivalent to other deadly carcinogens likeArsenic and Radon. Some of the disease caused by smoking cigarettes includelung cancer, respiratory disease, infertility, cancers of the mouth, emphysema,tuberculosis, hypertension, heart disease and a slew of kidney disease. As withall human affairs, the Holy Quran serves as a guide for all humans throughoutall the ages. And the vice of smoking tobacco is no exception.

    Allah Almightlysays in the Holy Quran: .. he allows them as lawful At Tayyibaat (that is, allgood and lawful as regards things, deeds, belief, persons and foods), andprohibits them as unlawaful as regards things, deeds, beliefs, persons andfoods).

    Allah forbidshumans all things, which can harm us or others like tobacco smoking, illicitdrugs or alcohol. Humans are allowed things, which are lawful and of benefit tous like fresh foods and medicines that can cure us from infections etc.,

    Smoking tobacco isof no benefit to humans. It is a waste of time and money. It is harmful to ourbodies. It is harmful to those around us. The cigarette industry is responsiblefor generating billions of dollars worth of income per annum. Just imagine ifthat money were allocated for something else like cancer research or the WorldFood Program. By eliminating this one single vice, we could eradicate severalharmful by products of like in this workd in one fell swoop! Clearly. The onlyway smoking can benefit society is if it is wiped out once and for all.

    Islam also forbidsextravagance in all of our affairs. The Muslim should lead a life a simplicityin humbleness to Allah for his boutry. Sitting around in a “Shisha” bar smokingwhile trading gossip until the wee hours of the morning, for example, is a luxurythat many a Muslim indulges in on a daily basis.

    Allah Almighty saysin the Holy Quran : .. “and eat and dring but waste not by extragance, certailyHe (Allah) like s not Al Musrifoon (those who waste by extravagance) “ (7:31)

    Tobacco smoking isalso an unnecessary distraction. How many car accidents have been causedbecause the driver was busy puffing on his cigarette while trying to steer withone hand? How many homes have been burnt to the ground because some one fellasleep with a cigarette in his or he mouth or left a lit “butt” unattended?Smoking is an evil vice that has often led man into desperation and despair.Smoking is not worth losing your health or your wealth.

    The Islamicviewpoint is so strict about smoking that smoker are not allowed to receiveZakat, or poor alms. If the smoker can afford cigarettes and manage to wastewhat little money the have on them then they are ineligible to receive pooralms for food and other essentials.

    Tobacco smoking hasabsolutely no basis in Islam. Historically, it is not even a part of the Muslimworld. The Spanish discovered it more than 500 years ago and the filthy habit only reached the Muslim world 100 years after the initial discovery. Unfortunately, many Muslims areafflicted with an unhealthy addiction to smoking. It is only thought truerepentance and supplication to Allah that this unhealthy habit can be kickedonce and for all. Forget about expensive nicotine patches, pills or evenanti-smoking gum. Trust in Allah to break free from the “butt”!

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum