ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST)

    Go down

    இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST) Empty இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST)

    Post by Admin Tue 08 Mar 2011, 11:16 pm

    இன்று நமது -கிளினிக்கில் -நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய ஆய்வு நிறுவனமும்
    -ஹிமாலயா ஹெல்த் கேர் நிறுவனத்துடன் இணைந்து -இலவச எலும்பு அடர்த்தி
    பரிசோதனை முகாம்(bone mineral density test) நடத்தினோம் ..


    எண்பதுக்கும் மேற்பட்ட -பயனாளிகள் பயன்பெற்றனர் -
    அவர்களின் எலும்பு அடர்த்தி கண்டறியப்பட்டு -இலவச ஆலோசனை .இலவச மருந்துகள் -வழங்க பட்டது ..

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST) Empty Re: இலவச எலும்பு அடர்த்தி பரிசோதனை (BONE MINERAL DENSITY TEST)

    Post by Admin Tue 08 Mar 2011, 11:17 pm

    எலும்புத்தேய்மானம்..
    ஆஸ்டியோ என்றால் க்ரீக்கில் எலும்பு. போரோஸ் என்றால் ஓட்டை உண்டாவது. ஒரு வீட்டின்
    மரக்கதவுகள்.
    , நிலைச்சட்டம்
    இவற்றில் இருக்கும் மரம் உள்ளுக்குள்ளே கரையான் அரித்து உளுத்துப்போய் விட்டால்
    வலுவிழந்து விடுவது போல் மனித உடலில் எலும்புகள் கால்சியம் குறைபாட்டால் அடர்த்தி
    குறைந்து விடுவதால் முறிந்துவிடுவதுதான் எலும்புத்தேய்மானம் என்ற ஆஸ்டியோ
    போரோசிஸ்.






    உடலுக்கு
    வடிவத்தையும் வலுவையும் தருவது எலும்புகள் கொலாஜென் இழைகள்
    மற்றும் கால்சியம், பாஸ்பேட் ஆகியவற்றின் உப்புகளால் ஆனவை. எலும்புகள் இயல்பில் கடின தன்மையைத்தான் பெற்றுள்ளன. ஆனால் எலும்பு தேய்வு
    நோயில்
    எலும்புகள் தேய்ந்து பஞ்சைப் போன்று மென்மையாக
    மாறுகின்றன
    . இந்த நோயை, மருத்துவ உலகம்
    ஆஸ்டியோ போரோசிஸ் என்று அழைக்கின்றது
    .

    எலும்புத் தேய்வு நோய்
    பிற நோய்களைப் போல
    அறிகுறிகளை வெளியே காட்டுவதில்லை
    . எனவேதான் இதை உடனடியாக
    கண்டறிய முடிவதில்லை
    . எலும்புகளில் உள்ள கால்சியம் சத்து எந்த விதமான அறிகுறிகளையும் காட்டாது
    குறைந்துவிடுகின்றது
    . இயல்பில் எலும்புகள்
    புதிதாக தோன்றும் பண்பைப் பெற்றுள்ளன
    . பழைய எலும்புகள் அகற்றப்பட்டு
    அதற்குப் பதிலாக புது எலும்புகள் உருவாவது நம்முடைய உடலில்
    தொடர்ந்து நடைபெறுகின்றது. உடல் இயக்கம் மற்றும் ஹார்மோன்கள் ஆகியவை எலும்புகள் தொடர்ந்து வளர்ந்திட உதவுகின்றன.








    எலும்பின்
    அடர்த்தி
    30 வயதுக்குப்
    பிறகு குறைய ஆரம்பிக்கிறது. எலும்புக்குள் இருக்கும் பல்ப் வயசு ஆகக் குறையும்.
    எனவே எலும்பின் அடர்த்தி குறைந்து வலுவிழக்க ஆரம்பிக்கிறது. இதில்



    1. ப்ரைமரி டைப் 1 மற்றும்


    2. ப்ரைமரி டைப் 2 மற்றும்


    3. செகண்டரி ஆஸ்டியோ
    போரோசிஸ் என மூன்று வகை உள்ளது.






    ப்ரைமரி ஆஸ்டியோ
    போரோசிஸ் டைப்
    1 என்பது போஸ்ட்
    மெனோபாஸுவல் ஆஸ்டியோ போரோசிஸ்.. அதாவது மாத விடாய் நின்ற பிறகு கிட்டத்தட்ட
    45 வயதில் வருவது. மேலும் கர்ப்பப்பை எடுத்த
    பெண்களுக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு காரணமாக இது வரும்.






    ப்ரைமரி ஆஸ்டியோ
    போரோசிஸ் டைப்
    2 அல்லது செனைல்
    ஆஸ்டியோ போரோசிஸ் என்பது
    75 வயது உள்ள
    பெண்களுக்கும் ஆண்களுக்குமே கூட
    2:1 என்ற சதவிகிதத்தில்
    வருவது.






    செகண்டரி ஆஸ்டியோ
    போரோசிஸ் என்பது எந்த வயதிலும் வரக் கூடியது. ஆண்.
    , பெண் இருபாலாரையும் பாதிக்கக் கூடியது. இந்த
    வகை வரக் காரணம் நாட்பட்ட நோய்க்காக எடுத்துக் கொள்ளும் சில மருந்துகள். ஆஸ்டியோ
    போரோசிஸ் வந்தால் நம் வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து எதற்கும் அடுத்தவரை
    எதிர்பார்க்கும் சூழலைக் கொண்டு வரும். வாழும் ஆவலைக் குறைக்கும். சந்தோஷத்தோடு
    வாழ்வதற்குப் பதில் வலியோடும்.
    , மாத்திரைகளோடும்
    வாழும் படி ஆகிவிடும். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது.






    சரியான ஆகாரம்
    எடுத்துக் கொள்ளாமலிருத்தல்.
    , அதனால் ஏற்படும்
    கால்சியம் குறைபாடு.
    , எக்சர்சைஸ்
    செய்யாமலிருத்தல்.
    , வெய்யில் நம்
    உடம்பில் படாமல் இருத்தல்.
    , இது எல்லாம் இதை
    உருவாகும் காரணங்கள்..






    கோலா போன்ற
    பானங்களை அதிகமாக எடுத்துக் கொள்வதும் உடலில் பொட்டாசியக் குறைவை ஏற்படுத்தி
    எலும்பு வலுவிழக்க காரணமாகிறது. அதனால் போன் டென்சிட்டி( எலும்பு அடர்த்தி)
    குறைந்து கூடு மாதிரி ஆகிவிடும். பீர்க்கங்காய்க் கூடு பார்த்திருப்பீர்கள் வெறும்
    நாராய்.. அது போல் ஆகிவிடும். லேசாக எங்காவது இடித்துக் கொண்டாலே ரொம்ப வலிக்கும்.
    சட்டென்று உடையக்கூடிய தன்மை இருக்கும். இருப்பது தெரியாமல் முறிந்தபின்தான்
    தெரியும்.
    , இது எலும்புத்
    தேய்மானம் என்று. இதுதான் சிம்ப்டம்.






    ஒபிசிட்டி
    எனப்படும் உடற்பருமனும் ஒரு காரணம். பெரியவர்களுக்கு உயரம் குறைவு ஏற்படுவதும்
    இதனால்தான்.
    , ஸ்பைனல் போன்
    ஷார்ட்டர் ஆவதால்தான். முக்கியமாக (
    WEIGHT BEARING PARTS ) ( இடுப்பு., கால் பாகம் ) இடுப்பெலும்பு ., கால் எலும்பு., மணிக்கட்டு எலும்பு இவற்றில்தான் ஏற்படுகிறது
    முறிவு.






    தொடர்ந்த
    இடுப்புவலி இருந்தால் பார்க்க வேண்டும். இதனால்தானா .
    , வேறு காரணமா என்று. கழுத்து வலி., மூட்டு வலி., குதிகால் வலி தொடர்ந்து இருந்தாலும் பார்க்க
    வேண்டும். பொதுவாக
    40 வயது
    ஆகிவிட்டாலே இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஹெல்த் செக்கப் செய்து கொள்வது நல்லது.








    இரண்டு
    டெஸ்ட்டுகள் செய்யப்படுகின்றன. (
    BMD TEST ) போன் மாஸ் டென்சிட்டி டெஸ்ட் ., ப்ளட்டில் கால்சியம் ., இரும்பு சத்து ஆகியவற்றின் அளவை சோதிக்கும்
    டெஸ்ட்.






    இது
    வந்துவிட்டால் அதிகம் படிகளில் ஏறாமலிருப்பது.
    , தசைகளை முறுக்கி செய்யும் எக்சர்சைஸுகளை
    செய்யாமலிருப்பது.
    , வெஸ்டர்ன்
    டாய்லெட் உபயோகிப்பது.
    , சமதரையில் சிறிது
    தூரம் நடப்பது.
    , நாற்காலியில்
    அமர்வது என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும்.






    ஆரம்ப நிலையில்
    வலி நிவாரண மருந்துகள்.
    , மூட்டுக்களை
    வலுப்படுத்தும் பிஸியோதெரபி.
    , பயிற்சிகள்
    தரப்படும். அடுத்த நிலையில் (
    KNEE CAPS., KNEE BRACE ) மூட்டுமேல் போடப்படும் உறைகள் போட்டுக் கொள்ள
    வேண்டும். முற்றிய நிலையில்தான் ஹிப் ரீப்ளேஸ்மெண்ட்.
    , நீ ரீப்ளேஸ்மெண்ட் ( HIP REPLACEMENT .,
    KNEE REPLACEMENT ) போன்ற அறுவை
    சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.






    பால்., சோயாபீன்ஸ்., மொலாசஸ்., முட்டைக்கோஸ்., லோ ஃபாட் மில்க்., அதிகம் நார்ச்சத்துக்கள் உள்ள அனைத்துக்
    காய்கறிகளும்.. கீரை மட்டுமல்ல.
    , எல்லா நிறக் காய்களும்.,
    ( பச்சை ., ஆரஞ்சு., சிவப்பு., மஞ்சள்) மற்றும் பழங்களும் முக்கியமா
    ப்ரோட்டீன் அதிகமுள்ள முளைவிட்ட பயறு வகைகள்.
    , முட்டை., காளான்., தானியங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.





    ஃபாட் ஃப்ரீ டயட்
    இருக்கணும். எண்ணெய் .
    , கொழுப்புச்சத்து
    குறைக்கணும். விட்டமின் கே மற்றும் டி மற்றும் கால்சியம் உள்ள உணவு வகைகள்
    அவசியம். அதிக உப்பு.
    , இனிப்பு
    குறைப்பது அவசியம். ட்ரை ஃப்ரூட்ஸ் நல்லது. காட் லிவர் ஆயிலும் சாப்பிடலாம்.






    ஆல்கஹால்
    அருந்தும் பழக்கம் .
    , சிகரெட்
    புகைக்கும் வழக்கம் இருந்தால் விட்டுவிடுவது நல்லது. ஆரோக்கியத்தை விலை கொடுத்து
    வாங்க முடியாது. முறையான உணவுப் பழக்கம்.
    , சரிவிகித உடற்பயிற்சி., நடைப் பயிற்சி.,
    கால்சியம்., விட்டமின் டி., கே உள்ள உணவு., சூரிய ஒளி நம்மேல் சிறிது நேரமாவது படுதல்.,
    நார்மல் வேலைகள்.,
    இவைகளை செய்து ஹெல்த்தி
    லைஃபை வாழ்வது நம் கையில்தான் உள்ளது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum