ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    கொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…

    Go down

    கொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்… Empty கொளுத்தும் கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்…

    Post by Admin Fri 11 Mar 2011, 11:38 pm

    கொளுத்தும்
    கோடையை சமாளிக்க இதோ சில டிப்ஸ்






    * வெயில் நேரத்தில்
    பிரிட்ஜில்வைத்த காஸ்நிரப்பியுள்ள
    குளிர்பானங்களை அருந்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழ வகைகளை அதிகம்
    சாப்பிடலாம்.






    * தற்போதுள்ள
    விலைவாசியில்
    20 ரூபாய்க்கு குறைந்து
    எந்த பழரசமும் கிடைப்பதில்லை. தர்பூசணி
    , வெள்ளரி, கிர்ணிப்பழம்
    ஆகிய வற்றை மொத்தமாக வாங்கி
    , பழரசம் தயாரித்து
    பருகலாம்.






    * உடலில் உண்டாகும்
    வியர்வையை உறிஞ்சிடவும்
    , வியர்குரு வருவதை
    தவிர்க்கவும் உன்னத வழி கதராடைகள் அணிவதுதான்.
    60 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரையிலும் கதர் ரெடிமேட் சட்டைகள்
    விற்கப்படுகின்றன.






    * ஓட்டையாகிப்போன
    ஓசோன் படலத்தின் வழியாக அதிகமான
    அல்ட்ரா வைலட்
    கதிர்கள் பாய்ந்து
    கண்நோய் உண்டாக்குவதும் இந்த மூன்று மாதங்களில்தான். எனவே
    , “ஆட்டோ நிப்லக்ஸன் கிளாஸ்அணிவதால் கண் நோயிலிருந்து காப்பாற்றிக்
    கொள்ளலாம்.






    * இளநீர்
    குடிப்பதால் உடல் சூடு
    , காமாலை நோய்,
    தோல்நோய் ஆகியவை வராமல்
    தடுக்கலாம். மேலும்
    , சிறுநீர்
    கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் தவிர்க்கலாம்.






    * உடல் சூட்டை
    தவிர்க்கும் உன்னத பழம் என்று தர்பூசணியை கூறலாம். நுங்கு மற்றும் வெள்ளரி கோடை காலத்தில்
    உடலுக்கு மிகவும் உகந்தது.






    * குளிக்கும்போது,
    எலுமிச்சம் பழத்தை
    அரிந்து
    , அதனுடன் சிறிது
    உப்பை தடவி கழுத்து
    , அக்குள் உள்ளிட்ட
    பகுதிகளில் தேய்த்து வந்தால் வியர்வை நாற்றம் ஓடிவிடும்.






    * வெள்ளரி, கிர்ணிப்பழம் தொடர்ந்து சாப்பிட்டால் கோடையில்
    ஏற்படும்
    அக்கி அம்மை
    நோய் அண்டாது.





    * இரவில் படுக்க
    செல்லும் முன்
    , வட்டமாக அரிந்த
    வெள்ளரியை கண்கள் மீது வைத்துக் கொள்ளலாம். சுத்தமான விளக்கெண்ணெயை இரண்டு சொட்டு
    கண்ணில் விட்டுக் கொண்டால் கண்கள் குளிர்ச்சியடையும். அழுக்குகளும் அகற்றப்படும்.



    * வாழைப்பழம்
    உண்டால் சீதபேதி
    , மலச்சிக்கல்
    இருக்காது.






    * ரோஜாப்பூ,
    குல்கந்து (தேனில் ஊற
    வைத்த ரோஜா இதழ்) சாப்பிட்டால் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.






    * குடிநீரில் வெட்டிவேர்போட்டு வைத்தால் குடிநீர் மணமாக இருப்பதோடு,
    உடல் சூட்டையும்
    தணிக்கும்.






    குளிர்பானம்
    கூடாது






    பன்னாட்டு
    நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் குளிர்பானங்களால் எந்தப் பயனும் இல்லை. அவைகள்
    குளிர்ச்சியான உணர்வைத் தோற்றுவித்தாலும்
    , உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும், எதிர்
    விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். எனவே அத்தகைய குளிர் பானங்களைத் தவிர்ப்பதே நலம்.
    உஷ்ணத்தால் ஏற்படும் நீர் கடுப்பு
    , சிறுநீரகத்தில்
    கல்
    , மஞ்சள் காமாலை போன்ற உடல்
    உபாதைகளுக்கு
    , பக்க விளைவுகள்
    எதையும் ஏற்படுத்தாத சித்த மருந்துகள் பல அரசு மருத்துவமனைகளில் உள்ளன. நெரிஞ்சில்
    ,
    நீர்முள்ளி கசாயங்கள்,
    வெண்பூசனி லேகியம்
    உள்ளிட்ட பல மருந்துகள் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களுக்கு நல்ல மருந்தாகும்.
    பெரும்பாலும் தகிக்கும் வெயிலில்
    , வெளியில் செல்வதைத்
    தவிர்ப்பதே நல்லது






    நல்லா குளிங்க!
    அடிக்கடி குளிப்பதன் மூலம் உடலை சூட்டிலிருந்து காக்கலாம். ஆனால்
    அலுவலகம் செல்வோர் அடிக்கடி
    குளிப்பதுசாத்தியமில்லாத விஷயம். அதுவும் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படும் சென்னையில் அடிக்கடி
    குளியல்நடக்கவே முடியாத காரியம்.


    காலையில் ஒருமுறை குளித்து விட்டு அலுவலகம் போன பிறகு, மீண்டும் மாலையில் வீடு திரும்பியதும்சின்னதாக ஒரு குளியல் போடலாம். குளித்தால் மட்டும் வெயிலிலிருந்து தப்பி விட முடியும்
    என்று நினைத்துவிடக் கூடாது. வியர்வை
    நாற்றத்தால் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் தடுக்க இது உதவும்.
    அவ்வளவுதான்.


    அடிக்கடி குடிங்க!

    [You must be registered and logged in to see this image.]வெளியே செல்லும்போது கையில் வாட்டர் பாட்டிலை வைத்துக் கொள்வது நல்லது.
    கெளரவம்
    பார்க்காமல்
    இதைச்செய்ய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வழியில் தாகம்
    ஏற்பட்டு தவிக்க நேரிடும்.

    5 நிமிஷம் கூட தொடர்ந்து நடக்க முடியாத நிலை இப்போது சென்னையில். கால்கள்
    தளர்ந்து விடும்
    , நாக்குவறண்டு விடும். உடல் முழுவதும் சூடு பரவி உடலே
    மரக்கட்டையாகி விட்டது போன்ற உணர்வு
    ஏற்படும்.இதைத் தவிர்க்க அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
    வெளியில்
    கிடைக்கும்
    தண்ணீர் நன்றாக இல்லாவிட்டால்காலரா போன்ற ஏதாவது வந்து விடலாம்.
    எனவே கூடவே வாட்டர் பாட்டிலை கொண்டு
    சென்றால் நல்லது.


    வெறும் தண்ணீரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, அதில் கொஞ்சம் குளுக்கோஸ் அல்லது எலுமிச்சம்பழத்தை பிழிந்து எடுத்துச் செல்லலாம். சூட்டைக் குறைத்து,
    உடலில் நீர்ச்சத்து வறண்டு விடாமல் பாதுகாக்கும்.

    நடக்காதீங்க!

    வெயிலில் நீண்ட தூரம் நடப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் நடந்தால் உடம்பு தளர்ந்து விடும், மயக்கம்வரலாம். பஸ்சில் போவது நல்லது. பஸ் கிடைக்காவிட்டால் அதற்காக நீண்ட நேரம் பஸ் ஸ்டாப்பில் காத்துக்கொண்டிருக்காமல், ஆட்டோ அல்லது வேறு ஏதாவது வாகனங்களில் லிப்ட் கேட்டாவது போய் விட வேண்டும்.

    நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், சன் ஸ்டிரோக் வரலாம். அது ஆபத்து. வயதானவராக
    இருந்தால்ரத்தக் கொதிப்பு கூடி விடும்.
    வெயிலில் அதிக நேரம் இருப்பதால்
    நரம்புத் தளர்ச்சியும் வரலாம் என்றுகூறுகிறார்கள். எனவே நீண்ட நேரம் வெயிலில் இருப்பதை முடிந்தவரை தவிர்க்க
    வேண்டும்.


    குடை பிடிங்க!

    [You must be registered and logged in to see this image.]வெளியில் செல்லும்போது மறக்காமல் குடையை எடுத்துக் கொள்வது நல்லது.
    மழைக்கு மட்டுமல்ல குடை
    ,வெயிலுக்கும் பயன்படுத்தலாம்.

    கலர் குடைக்குப் பதிலாக கருப்புக் குடையை வைத்துக் கொள்வது நல்லது. கலர் குடைகள் வெளிச்சத்தை ஊடுறுவவழி
    வகுக்கும் என்பதோடு
    , சூரியக் கதிர்களையும் உள்ளுக்குள் அனுமதிக்கும். இதனால்,
    கலர் குடைகளால்வெயிலிலிருந்து தப்ப முடியாது. அழகுக்கு மட்டுமே அவை
    பயன்படும்.


    மாறாக, கருப்புக் குடைகள் வெயிலை குடைக்குள் ஊடுறுவாமல் தடுக்கும். வெயிலிலிருந்தும் தப்பலாம்.(மனைவிக்கு மட்டுமல்லாது,
    நம்மைக் காத்துக் கொள்வதற்கும் கூட குடை பிடிக்கலாம்.)

    தொப்பி போடுங்க!

    [You must be registered and logged in to see this image.]நடந்து செல்லும்போது, வெறும் தலையுடன்
    போகாமல் ஏதாவது ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டுசெல்லலாம்.


    தொப்பி மூலம் பெரிய அளவில் வெயில் கொடுமையிலிருந்து தப்ப முடியாவிட்டாலும்
    கூட
    , தலை வேகமாகசூடாகமல் காக்க முடியும்.
    அதற்காக தோலால் ஆன தொப்பியோ அல்லது
    பிளாஸ்டிக் தொப்பியோ போடக்கூடாது. அது வெயிலை உள்ளேயே வைத்துக்
    கொண்டு
    தலையைப் பதம் பார்த்து விடும்.

    துணிகளால் செய்யப்பட்ட தொப்பிகள் இப்போது சாதாரணமாக புழக்கத்தில்
    உள்ளது. அவற்றைப்பயன்படுத்தலாம்.
    குழந்தைளுக்கு மட்டும்தான் அந்தத் தொப்பிகள் என்று இல்லை.
    பெரியவர்களும்
    கூடபயன்படுத்தலாம்.

    குழந்தைகளைத் தவிர்க்கலாமே!

    ஒரு நிமிஷம் இதை வேறு மாதிரியாக நினைத்து விடாதீர்கள். வெயிலில் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டுசெல்வதைத் தவிர்க்கலாமே
    என்றுதான் சொன்னோம்.


    வெயிலில் குழந்தைகள் நடப்பதும், பயணிப்பதும்
    கொடுமையான விஷயம். அவர்களால்
    வெயிலின்கொடுமையைத் தாங்க முடியாது. தோல் சுருங்கி, பல வியாதிகள் வரவும் வாய்ப்பு உள்ளது. எனவேகுழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதாக
    இருந்தால்
    மாலைக்கு மேல்
    கூட்டிச் செல்லலாம். அப்படியேஅவசரமாக பகலில்தான் கூட்டிச்

    செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் ஆட்டோ
    அல்லது டாக்சியில்
    கூட்டிச்செல்லுங்கள்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum