உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Go down

உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள்  கேள்வி பதில்  Empty உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்

Post by Admin on Fri 03 Jun 2016, 3:11 am

கேள்வி : ஐயா என் வயது 37. உடலில் உஷ்ணம் அதிகமாக உள்ளது. கண் எரிச்சல், முகம், உடல் பூராவும் ‘கத கத’ என்று காந்தலாக இருக்கிறது.
சிறு நீர் சூடாகவும், மஞ்சலாகவும் போகிறது. வாரம் 2 முறை எண்ணெய் தேய்த்து குளிக்கிறேன். தும்மலும் ஜலதோஷமும் உள்ளது. இந்த உஷ்ணத்தை குறைக்க வழி சொல்லுங்கள்.
-கே. ராஜமாணிக்கம், கும்பகோணம்.
பதில் : உங்கள் நோயை நீங்கள் சரியாக கணித்து இருக்கிறீர்கள். கீழ்கண்ட தைலம் தயாரித்து ................... 2 நாட்கள் தலைக்கு தேய்த்துக்குளித்தால் உஷ்ணம் குறையும்.
சந்தனத்தூள், விளாமிச்சன் வேர், குரு வேர் எங்கிற வெட்டி வேர், ஜடாமாஞ்சி ஆகியவைகளை 100 கிராம் வாங்கி உரலில் போட்டு இடித்து ஒன்று பாதியாக சூரணம் செய்துக்கொள்ளவும்.
அதை 6 லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து, ஒரு லிட்டர் அளவுக்கு சுண்டியதும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு லிட்டர் நல் எண்ணையில் ஊற்றி அடுப்பு ஏற்றி சிறு தீயில் வைக்கவும். நீர் குறைந்து சிடுசிடுப்பு அடங்கிய பின் இறக்கி அதில் பச்சை கற்பூரம் 3 கிராம் பொடி செய்து போட்டு கலக்கி, மூடி வையுங்கள். நன்றாக ஆறிய பிறகு புட்டியில் அடைத்துக்கொள்ளுங்கள்.
இந்த தைலத்தை தலையில் தடவலாம். வாரம் 2 முறை தலைக்கு தேய்த்து குளிக்கவும். தும்மல் ஜலதோஷம் குணமாகும்.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

http://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum