ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Today at 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  +3
  Admin
  meenavijay
  தோழன்
  7 posters

  Page 1 of 2 1, 2  Next

  Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:34 pm

  நான் ஒரு கல்லூரி மாணவி. என் மார்புப் பகுதியில் கட்டிகள் மாதிரி இருக்கிறது.காம்புகள் உள் நோக்கி இருக்கின்றன. புற்று நோயாக இருக்குமோ என பயப்படுகிறேன். வீட்டில் சொல்லவும் பயமாக இருக்கிறது. மார்பகப் புற்று நோய்க்கு எங்கேசிகிச்சை அளிக்கிறார்கள்? எவ்வளவு செலவாகும்? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி

  தாமதிக்காமல் முதலில்மருத்துவரை அணுகுங்கள். அது புற்று நோய்தானா அல்லது வெறும் நீர்க் கட்டிகளாஎனப்பாருங்கள். நீர்க் கட்டிகளாக இருந்தால், அவற்றைஅகற்றுவது சுலபம். புற்றுநோய் என நீங்கள் சந்தேகப்படும்பட்சத்தில் உடனடியாக வீட்டில் விஷயத்தைச்சொல்லி சிகிச்சை மேற்கொள்ளுங்கள். தாமதித்தால், அதுபரவி, மார்பகங்களையேஅகற்றும் நிலை ஏற்படலாம். மகப்பேறு மருத்துவரை முதலில் போய் பாருங்கள்.எல்லா மருத்துவமனைகளிலும் இன்று இதற்கான சிறப்பு மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:35 pm

  என் வயது 30. உறவு குறித்து எனக்கு நிறையசந்தேகங்கள் உள்ளன.என் கணவர் ஆபாச ஆங்கிலப் படங்களை டி.வியில் போட்டுக் காட்டி அதன்படி உறவு கொள்ள என்னையும்வற்புறுத்துகிறார். அதெல்லாம் அறுவருப்பானதில்லையா? உடல்நலத்தைப்பாதிக்காதா? நான் கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்ப காலத்தில்எந்தெந்த மாதங்களில் உறவு கொள்ளலாம்? செக்ஸ் உணர்வுஅதிகரிக்க எப்படிப்பட்ட உணவுகள் உட்கொள்ள வேண்டும்? - வ. குயிலி, தூத்துக்குடி.

  உறவு அலுத்துப் போகாமலும், நெருக்கம் அதிகரிக்கவும்உங்கள் கணவரை மாதிரி செக்ஸில் புதுமைகளைக் கையாள்பவர்கள் உண்டு.அதில் உங்கள் இருவருக்கும் விருப்பம் இருக்கிற பட்சத்தில் தவறேதுமில்லை.உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. அதற்கு உடன்படுவதும், மறுப்பதும்உங்கள் தனிப்பட்ட விருப்பம். கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும்ஏழாவது மாதம் முதல் பிரசவம் வரை உறவைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. இடைப்பட்டமாதங்களிலும் பக்க வாட்டு, பின் பக்க நிலைகளில் வயிற்றுக்கு அதிக அழுத்தம்கொடுக்காத போஸ்களில் உறவு கொள்வதே பாதுகாப்பு. உடலுறவு என்பது மனம்சம்பந்தப்பட்ட விஷயம். எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவும் ஆரோக்கியமான செக்ஸுக்குஉதவும். அதிகக் கலோரிகள் உள்ளவற்றைத் தவிர்க்கவும். மனம் ஆரோக்கியமாகஇருந்தால், உறவும் நன்றாக இருக்கும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:35 pm

  என் வயது 38. கர்ப்பப்பை அறுவை செய்து மூன்று மாதங்கள் ஆகிறது. லேசாகத்தொட்டாலே வயிறு வலிக்கிறது. வெள்ளையாக சீழ் போலக் கசிகிறது. நான் பஞ்சாலையில்பணிபுரிகிறேன். மீண்டும் வேலைக்குப் போகலாமா? இந்த அறுவைக்குப் பிறகு உடல் பலவீனமாகிவிடும் என்பதும், எடை ஏறும் என்பதும் உண்மையா? - ராஜி, பழனி.

  கர்ப்பப்பை அறுவையால் உடல் பலவீனமாகாது.நீங்கள் குறிப்பிட்டிருக்கிற அறிகுறிகளைப் பார்த்தால் தையல் போட்டஇடத்தில் இன்பெக்ஷன் ஆகியிருக்குமோ எனத் தோன்றுகிறது. அதனால்கூட வயிற்றுவலி இருக்கலாம். பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சைஎடுத்துக் கொள்ளுங்கள். இந்த அறுவை சிகிச்சைக்கும், உடல்எடை ஏறுவதற்கும்கூட எந்தத் தொடர்புமில்லை.அது உங்கள் உடல்வாகைப் பொறுத்தது. நடைப்பயிற்சி நல்ல தீர்வு தரும்.நீங்கள் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள், கீரை, வைட்டமின் அதிகமுள்ளஉணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆஸ்துமா மாதிரியான சுவாசக்கோளாறுகள் இல்லாத பட்சத்தில் நீங்கள் வேலையைத் தொடர்வதில் பிரச்சினைஇருக்காது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:36 pm

  என் வயது 28. மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார். மார்பகங்களைப் பெரிதாக்க ஏதேனும் மருந்தோ, சிகிச்சையோ இருந்தால் சொல்லுங்கள். வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுங்கள். - நிர்மலா தேவி, ரத்தினபுரி.

  மார்பகங்களின் அளவு என்பது பரம்பரை வாகு, உடலமைப்புபோன்ற பல விஷயங்களைப் பொறுத்தது. மார்பகங்கள் என்பவை வியர்வைசுரப்பிகள் மாதிரி ஒரு வகை சுரப்பிகள் என்பதை உங்கள் கணவரிடம் சொல்லுங்கள்.சரியான அளவுள்ள பிரா, உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்கள் பிரச்சினைக்குஉதவும். மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள்போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அவையெல்லாம்ஆபத்தானவை. கணவரிடம் பொறுமையாகப் பேசிப் புரிய வையுங்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:36 pm

  என் வயது 25. இன்னும் திருமணமாகவில்லை. பிறந்தது முதல் நான் ஒருகிட்னியுடன்தான் வாழ்கிறேன். அதனால் மாதவிலக்குப் பிரச்சினைகள், கை, கால் வீக்கம், வெள்ளைப்படுதல் போன்றவைஏற்படுகின்றன. ஒரு கிட்னியுடன்உள்ள நான் கல்யாணம் பண்ணலாமா? உடலுறவிலோ, கர்ப்பம் தரிப்பதிலோ பாதிப்பிருக்குமா? பிறக்கப்போகும் குழந்தையும் ஒருகிட்னியுடன் பிறக்க வாய்ப்புண்டா? - எஸ்.பிரியா, திருச்சி.

  நீங்கள் திருமணம்செய்து கொள்ளக் கூடாது என்றில்லை. உங்களை ஏற்றுக் கொள்ளும் நல்ல கணவர்கிடைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளலாம். ஒரு கிட்னியுடன் இருந்தாலும், ஆரோக்கியமாகஇருக்கிறீர்களா என்பது தான் முக்கியம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும்மற்ற பிரச்சினைகளுக்கு சரியான சிகிச்சைகளின் மூலம் தீர்வுகாணலாம். ஒரு கிட்னியுடன் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையிலோ, கர்ப்பம்தரிப்பதிலோ பாதிப்பிருக்காது. ஆனால் உங்களுக்குப் பிறக்கும்குழந்தையும் ஒரு கிட்னியுடன் பிறக்க ஐம்பது சதவிகிதம் வாய்ப்புகள்உண்டு.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:37 pm

  என் வயது 18. பூப்பெய்தி நான்கு வருடங்கள்ஆகிறது. என்மார்பகங்களில் காம்புகள் உள்ளே இழுத்த படி உள்ளன. நாளுக்கு நாள் மார்பகங்கள் சிறுத்துக் கொண்டேபோகிறது. தீர்வு சொல்வீர்களா? -சுகன்யா, கோவை.

  இது இன்வர்ட்டட்நிப்பிள்ஸ் எனச்சொல்லக் கூடிய பிரச்சினையாக இருக்கலாம். அப்படியிருப்பின்நீங்கள் கல்யாணமாகி, கர்ப்பம்தரிக்கும்போது மார்பகங்கள் பெரிதாகிற சமயத்தில் இந்தப்பிரச்சினை தானாகச் சரியாகும். மற்றபடி மார்பகங்களில் ஏதேனும் வீக்கம்இருக்கின்றனவா எனப் பாருங்கள். கட்டிகள் ஏதேனும் இருக்கின்றனவா எனத்தெரியவேண்டும். நல்ல மகப்பேறு மருத்து வரை நேரில் கலந்தாலோசியுங்கள். வலிஇருந்தாலும் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம். பிரசவத்துக்குப்பிறகு, குழந்தைதாய்ப்பால் குடிக்கிறபோது சரியாகும். கவலை வேண்டாம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:38 pm

  என்வயது 14. வயதுக்கு வந்து 2 ஆண்டுகளாகிறது. மார்பகங்கள்பெருத்துத் தொங்கிக் காணப்படுகின்றன. என்ன தீர்வு? - பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகி.

  உடற்பயிற்சி ஒன்றுதான்ஒரே தீர்வு. மார்பகங்களில் உள்ளவை வெறும் கொழுப்புத் திசுக்கள். மார்பகக்கீழ் தசைகளுக்கான பயிற்சிகளைச் செய்தால் ஓரளவு சரியாகும். சரியான அளவுள்ள, பட்டைவைத்த பிரா அணிவதும் அவசியம். அளவைக் குறைக்கிற சிகிச்சைகள்அறிவுறுத்தத் தக்கவையல்ல.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:38 pm

  என் வயது 21. கணவருக்கு 28. திருமணத்தன்றே தலைவலி ஆரம்பித்து விட்டது.பத்து வருடங்களாக சுய இன்பப் பழக்கம் இருந்ததால் என் கணவரால் முதலிரவன்றே உறவில் ஈடுபட முடியவில்லை. இன உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார்.எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விடலாமா? அல்லது அவரைக் குணப்படுத்த முடியுமா? - பெயர் வெளியிட விரும்பாதநாகர்கோயில் வாசகி.

  கல்யாணச் சடங்குகளாலும், அதனால்ஏற்படுகிற களைப்பாலும் பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவுமுழுமையான இரவாக அமைவதில்லை. கல்யாணத்தன்றே உடல் சங்கமம் நடந்தாக வேண்டும்என்றில்லை. உடலும், உள்ளமும் சகஜ நிலைக்குத் திரும்பிய பிறகு உறவில்ஈடுபடலாம். உங்கள் விஷயத்திலும் அப்படி நிகழ்ந்திருக்கலாம். கணவரின் சுயஇன்பப் பழக்கத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.மனம்தான் காரணம். தன் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா, ஆண்மையைநிரூபிக்க முடியுமா என்கிற பயத்தால்கூட உங்கள் கணவர் உறவைத் தவிர்க்கலாம்.அவருக்குத்தைரியம் சொல்லுங்கள். செக்ஸ் மருத்துவர் அல்லது மனநலமருத்துவரிடம் அழைத்துச் சென்று கவுன்சலிங் செய்யலாம். அவராலும் ஆரோக்கியமானசெக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட முடியும் என நம்பிக்கை அளியுங்கள். உறுப்புகளில்வலி இருப்பதாகச் சொல்வதற்கும் மருத்துவரிடம் சரியான சிகிச்சை பெற்றுதீர்வு காணலாம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:39 pm

  என் வயது 22. திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது கட்டி, கட்டியாக ரத்தம் வெளியேறுகிறது.இதனால் பாதிப்பு ஏதும்உண்டா? - எம். மனோன்மணி, டி.எம்.பாளையம்.

  அளவுக்கதிக இரத்தப்போக்கு இருக்கிறதா என்றும் பாருங்கள். பொதுவாக இது ஒரு பெரிய பிரச்சினையேஇல்லை. கழிவுத் திசுக்கள் அதிகமிருந்தால், இப்படிகட்டி, கட்டியாகஇரத்தம் வெளிறேலாம். கர்ப்பப்பையில் கட்டி ஏதேனும் இருந்தாலும் இப்படிஇருக்கலாம். ஹார்மோன் கோளாறு உள்ளதா என்றும் பார்க்கவும். இது எல்லாமேகுணப்படுத்தக் கூடியவையே. இரத்தம் அதிகம் வெளியேறினால் இரத்த சோகை ஏற்படவாய்ப்புகள் அதிகம். எனவே இரும்புச்சத்து, ஃபோலிக்அமிலம், வைட்டமின் ஏபோன்றவை அதிகமுள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம். பயப்படவேண்டிய அவசியமில்லை.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:39 pm

  என் வயது 43. கணவருக்கு 50. ஏழு மாதங்களுக்கு முன்பு அவருக்கு முதல் முறையாகமாரடைப்பு வந்தது. இந்த வயதிலும் அவருக்கு இல்லற வாழ்க்கை ஈடுபாடு குறையவில்லை. மாரடைப்பு வந்ததால் நான்தான் பயப்படுகிறேன். மாரடைப்புவந்தவர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன். குழப்பம் தீர்க்கவும். - தேவி, வளவனூர்.

  மாரடைப்புக்கும், இல்லறவாழ்க்கை ஈடுபாட்டுக்கும் நீங்கள் பயப்படுகிற அளவுக்கு தொடர்பில்லை.இன்னும் சொல்லப்போனால் பலரும் இந்த மாதிரி தேவையற்ற பயங்களின்காரணமாக, இயல்பான உணர்வுகளைக்கூட அடக்கி வாழப் பழகுகிறார்கள். அப்படி அடக்கிக் கொள்கிறபோது அதுமாரடைப்பில் கொண்டு போய்விட வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்காவது இந்த ஆர்வத்துக்குவடிகாலாக வழிகள் உண்டு. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இருதயக்கோளாறுகளால் பாதிக்கப்படுகிற பல பெண்களின் வரலாறை ஆராய்கிறபோது இப்படிஇயல்பான உணர்வுகளை அடக்குவது காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது. கணவன்- மனைவியானஉங்களுக்குள் இந்த விஷயத்தில் கட்டுப்பாடு வேண்டாம். கணவரின் உணவுவிஷயத்தில் கவனமாக இருங்கள். நெய் மற்றும் எண்ணெயை அறவே தவிர்க்கவும். குறிப்பாகஉறையும் தன்மை கொண்ட எண்ணெய்களைத் தொடவே வேண்டாம். நல்லெண்ணெய் அளவோடுசேர்த்துக் கொள்ளலாம். காய்கறி, கீரைகள் நிறைய இருக்கட்டும். பதப்படுத்தியஉணவுகளை சாப்பிட வேண்டாம். ருசிக்காக சாப்பிடுவதைத் தவிர்த்து, ஆரோக்கியத்துக்காகசாப்பிடப் பழக வேண்டும். மாரடைப்பு ஒரு முறை வந்தால்மீண்டும் வந்துதானாக வேண்டும் என்றில்லை. மேற்சொன்ன விஷயங்ளில் கவனமாகஇருக்கிற பட்சத்தில் அது வருவது தள்ளிப் போகவோ, வராமலேபோகவோ கூடும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:39 pm

  எனக்குத் திருமணமாகிஒரு வருடம் ஆகிறது. குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் குழந்தையே வேண்டாம் என முடிவுசெய்திருக்கிறோம். சித்த மருத்துவத்தில் குழந்தையில்லாமல் செய்ய சிகிச்சை ஏதும் உண்டா? - பெயர் வெளியிட விரும்பாத செஞ்சி வாசகி.

  நீங்கள் நினைக்கிற மாதிரி குழந்தையே பிறக்காமலிருக்கச்செய்ய சிறப்பு சிகிச்சைகள் ஏதும் கிடையாது. பாதுகாப்பான நாட்கள்என்று சொல்லக் கூடிய நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது ஒன்றுதான்இதற்கான வழி. அதாவது மாதவிலக்கான ஒன்பதாம் நாள் முதல் பதினெட்டாம்நாள் வரை தாம்பத்திய உறவைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பத்தைத் தள்ளிப்போடமாத்திரைகள் உண்டு. அவையெல்லாம் ஒன்றிரண்டு மாதங்கள் சாப்பிடத்தானேதவிர, நீண்டகாலத்துக்கு எடுத்துக் கொள்கிற பட்சத்தில் பக்க விளைவுகளைஉண்டாக்கும். கரு உருவாகாமல் பாதுகாப்பாக இருக்கப் பாருங்கள். உண்டானபிறகு அதை அழிக்க நினைக்காதீர்கள். என் மருத்துவ அனுபவத்தில் முதல் குழந்தைவேண்டாம் என அதை அபார்ஷன் செய்தார் ஒரு பெண். அதன் பிறகு அவருக்குக்கருக்குழாய் அடைப்பு ஏற்பட்டு பத்தாண்டுகளாகியும் இன்னும் குழந்தைதங்காமல் சிகிச்சையில் இருக்கிறார். இப்போது குழந்தையே வேண்டாம் என நினைக்கிறநீங்கள் பிற்காலத்தில் மனம் மாறலாம். குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதிக்குஇப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட்டால்? எனவேமுடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். திருமணமான ஒரே வருடத்தில்செய்யக் கூடிய முடிவில்லை இது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:40 pm

  என் வயது 26. ஒரு குழந்தை உண்டு. கடந்த சில நாட்களாக எனக்கு சிறுநீரை அடக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நிமிடம் கூட அடக்க முடியவில்லை. சில சமயங்களில் உடை நனைந்து தர்ம சங்கடத்தை உண்டாக்குகிறது. இதைக்குணப்படுத்த முடியுமா? - விஜிலா, நெல்லை.

  திடீரென உங்களுக்குஏற்பட்ட மன உளைச்சல், பிரச்சினைகளைக் குறித்த பயம் போன்றவை இதற்குக்காரணமாக இருக்கலாம். சர்ககரை நோய்க்கான சோதனையைச் செய்து பாருங்கள்.உங்களுடைய உணவு எப்படிப்பட்டது எனத் தெரியவில்லை. அதில் எல்லா வைட்டமின்கள்மற்றும் புரோட்டீன் மற்றும் தாதுப் பொருட்கள் இருக்கிற மாதிரிப்பார்த்துக் கொள்ளுங்கள். பருப்பும், முட்டையும்தினம் சேர்த்துக் கொள்ளவும். காய்கறி, கீரை, பழம்மூன்றும் தினசரி மெனுவில் இருக்கவேண்டும். பாலில்தண்ணீர் விடாமல் காய்ச்சி அப்படியே குடிக்கவும். ச்யவனபிராஷ் லேகியம்சாப்பிடலாம். மருத்துவரிடம் நேரடிப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, அவரதுஆலோசனையின் பேரில் காலையிலும், மாலையிலும் அஷ்வ கந்தா மாத்திரை ஒவ்வொன்றுசாப்பிடலாம். மாலை நேரத்தில் கைப்பிடியளவு பொட்டுக் கடலையும், ஒருஆப்பிளும் சாப்பிடவும். இந்தப் பிரச்சினைக்கென்றே பிரத்யேக யோகாசனங்கள் உள்ளன.அவற்றையும் மருத்துவர் அல்லது யோகாசன நிபுணரின் ஆலோ சனையின் பேரில் செய்யலாம்.மனத்தை ஒரு முகப்படுத்தும் தியானப் பயிற்சி இந்தப் பிரச்சினைக்குமிக அருமையான சிகிச்சை. முடிந்தால் தினம் வாக்கிங் செல்வதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். மன ஆரோக்கியம்தான் இப்பிரச்சினைக்கான முதல் சிகிச்சை.எந்தப் பிரச்சினைக்கும் டென்ஷன் ஆகாமல், தைரியமாகசந்திக்கப் பழகுங்கள். உணவே மருந்து என வாழப் பழகுங்கள், மருந்தேஉணவு என்ற நிலை ஆபத்தானது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:40 pm

  எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 30. எனக்கு முகம், கை, கால் என உடலெங்கும் ரோமவளர்ச்சி மிக அதிகமாகஇருக்கிறது. இதனாலேயே எனக்கும், என்கணவருக்கும் ஒத்துப் போகாமல் அவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். என் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வே கிடையாதா? -பெயர் வெளியிட விரும்பாத நாகப்பட்டிணம் வாசகி.

  பரம்பரைத் தன்மை, முறையற்றமாதவிலக்குக்காக எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள், ஹார்மோன்கோளாறு போன்ற ஏதேனும் ஒன்றுதான் இப்படிப்பட்டரோம வளர்ச்சிக்குக் காரணம். செயற்கை மணம் மற்றும் குணம் நிறைந்தஉணவை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கும் இப்படி ஹார்மோன் கோளாறு உண்டாகி, ரோமவளர்ச்சி அதிகரிப்பதாக ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. தேவையற்ற ரோமங்களைஅகற்ற வாக்சிங் செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சைமற்றும் கிளிசரினின் கலவையே வாக்ஸ். இது சருமத்தை பாதிக்காது.கெமிக்கல் கலந்த கிரீம்களை உபயோகிக்காதீர்கள். குளிப்பதற்குசோப்புக்குப் பதிலாக பயத்தம் மாவுஉபயோகிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கஸ்தூரி மஞ்சளையும்அத்துடன் சேர்த்து அரைத்து உபயோகிக்கலாம். இத்துடன் எலுமிச்சை சாறுஅல்லது தேன் இரண்டை யும் மாற்றி மாற்றி சேர்த்து புருவங்களில்படாமல் தேய்த்துக்குளிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் கோரைக் கிழங்கு என்று கிடைக்கும்அதை வாங்கி அரைத்து அப்படியே உடம்புக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், ஆறுமாதங்களில் ரோம வளர்ச்சி நன்கு குறையும். வாரம் ஒரு முறை உப்பில்லாதவெண்ணையை முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்கள் ஊறிக் கழுவவும். முகம்பட்டு போலாகும். வீட்டுப் பெரியவர்களிடம் விஷயத்தைச் சொல்லி, கணவரிடம்பேசி சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யச் சொல்லுங்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:41 pm

  என் வயது 26. மிகவும் ஒல்லியாக இருப்பதால் திருமணம் தள்ளிப் போகிறது. உடல்இளைக்க மாத்திரைகள் இருப்பதைப்போல், குண்டாக்க ஏதேனும் சிகிச்சைகள் இருந்தால் சொல்லுங்களேன். - மாலா, நெற்குன்றம்.

  குண்டான உடலைக் குறைப்பதுதான் இப்போது பலபெண்களுக்கும் பிரச்சினையே. குண்டாக விரும்புவோர் உணவின் மூலமே அதை சாத்தியப்படுத்தலாம்.அரைக்கிலோ உடைத்த கடலை, கால் கிலோ சர்க்கரை இரண்டையும்பொடி செய்து, அதில் கால் கிலோ நெய் சேர்த்து சின்னச் சின்ன லட்டுகளாகப் பிடித்து தினம் ஆறு அல்லது ஏழு சாப்பிடவும். அமுக்கராக் கிழங்குசூரணம் ஒரு சிட்டிகையை நெய்யில் குழைத்து தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும்.ச்யவன பிராஷ் லேகியம் தினம் மூன்று வேளைகள் சாப்பிடவும். தினம்சிறிது தேங்காயைப் பச்சையாக சாப்பிடவும். உணவிலும் தேங்காய் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். தினம் இரு வேளை ஐந்து பாதாம், ஒருமுட்டை சாப்பிடவும். தினம் நான்கு டம்ளர் பால் குடிக்கலாம்.வாரம் ஒரு முறை ஆட்டிறைச்சி சேர்த்துக் கொள்ளவும். மேற்சொன்ன உணவுகள்செரிக்க தினம் ஒரு கீழா நெல்லி மாத்திரை சாப்பிடவும். காபி, டீயைக்குறைக்கவும். ராத்திரியில் கைப்பிடியளவுகொண்டைக்கடலையை மண் சட்டியில் ஊற வைத்து காலை யில் சாப்பிடலாம்.இவற்றையெல்லாம் செய்து பாருங்கள், மூன்றே மாதங்களில் வியப்பான மாற்றம்காண்பீர்கள.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:41 pm

  நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். கர்ப்பம் உறுதியான நாள் முதல் ஆளாளுக்கு ஒரு ஆலோசனை சொல்லி பயமுறுத்துகிறார்கள். ரொம்பவும்ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் அபார்ஷன் ஆகிவிடும் என்கிறார்கள். அபார்ஷன் எந்தெந்தக் காரணங்களால் ஏற்படும்? - கே.எஸ்., திண்டிவனம்.

  அபார்ஷன் எனப்படுகிற கருச்சிதைவுக்குமூன்று முக்கிய காரணங்கள் உண்டு. கருத்தரிக்கும் ஆற்றல் உள்ளஉயிரணுக்கள் குறைந்திருந்து நீங்கள் கருத்தரித்திருந்தால்.- முதல் மூன்றுமாதங்களில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதல், நீண்டதூரப் பயணம் மேற்கொள்தல், அளவுக்கதிகடென்ஷன் போன்றவற்றால்.- காரமான உணவுகளை அதிகம் உண்பதால்.கோழி, பப்பாளி, அன்னாசி, பலாபோன்றவற்றை முதல் 90 நாட்களுக்குத் தவிர்க்கவேண்டும். உணவில் காரத்தையும், புளிப்பையும் குறைத்து செயற்கை மணம்மற்றும் நிறத்தைத் தவிர்த்து உண்ணவும். இயற்கையான பழம், காய்கறிகள், ஜூஸ்சாப்பிடவும். தினம் 3 முதல் 4 டம்ளர்பால் கட்டாயம் குடிக்கவும். கர்ப்பத்தில்எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லை என்ற பட்சத்தில் அடிக்கடி ஸ்கேன்செய்வது தவிர்க்கப்பட வேண்டும். 14-வது வாரம் ஸ்கேன் செய்தால் போதும்.இப்படியெல்லாம் இருந்தாலே உங்களுக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கும். கவலைவேண்டாம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:42 pm

  எனக்குப் பதினேழு வயதில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்தநான்கு வருட காலமாக வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கிறது. இதனால் எப்போதும் தர்ம சங்கடமாகவே உணர்கிறேன். என்னதான் தீர்வு? - வி. சங்கீதா, சென்னை-30.

  அதிக சூடுதான் வெள்ளைப்படுதலுக்குக் காரணம். உணவில் உப்பு, காரம்தவிர்க்கவும். வாரம் ஒரு முறை புளித்த கீரை சேர்த்துக் கொள்ளவும். தினம்ஒரு பெரிய நெல்லிக்காயும், கொஞ்சம்உலர்ந்த திராட்சையும் சாப்பிடவும். அடிக்கடி பொன்னாங்கண்ணிக்கீரை சேர்த்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை வேக வைத்த தண்ணீரைக்குடிக்கவும். வாழைத் தண்டும், பயத்தம் பருப்பும் வேக வைத்து கூட்டுமாதிரி சமைத்து சாப்பிடவும். நீர்மோர் நிறைய குடிக்கவும். ஊறுகாய் பக்கமேபோகாதீர்கள். உணவில் காய் கறிகள், பழங்கள், கீரைமூன்றும் அதிக மிருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். அமுக்கராக்கிழங்கு மாத்திரையை வேளைக்கு ஒன்றாக தினம் மூன்று சாப்பிடவும். மாதுளம்பழத்தின் ஓட்டைக் காய வைத்துப் பொடித்து ஒரு சிட்டிகையை தண்ணீரில் கலந்துமூன்று வேளைகள் குடிக்கவும். அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினம் இரண்டு வேளைகள் உள்ளாடைகளை மாற்றவும். காட்டன்உள்ளாடையையே அணியவும். மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட் என்றுகிடைக்கும். அதில் சிட்டிகையை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்துஅந்தரங்க உறுப்பை சுத்தம் செய்யவும். போதிய அளவு ஓய்வு, சரிவிகிதஉணவு என எல்லாம் இருந்தும் தொடர்ச்சியாகவெள்ளைப்படுகிற பட்சத்தில் ஸ்கேன் செய்து பார்க்கலாம.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:42 pm

  என் வயது 25. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை இல்லை.எனக்கு மாதவிலக்கு எப்போதும் பத்து, பனிரெண்டு நாட்களுக்கு நீடிக்கிறது. இதனால் எங்களுக்குள் இல்லற வாழ்க்கை என்பதே அபூர்வமாகி விட்டது.இந்நிலையில் நான் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டால் குழந்தை உண்டாக வாய்ப்பு உண்டா? - விஜி, சென்னை.

  மாதவிலக்கு என்பதுஇப்படி பத்து, பனிரெண்டு நாட்களுக் கெல்லாம் வரக் கூடாது. அது இரத்தசோகையில் கொண்டு விடும். முதலில் உங்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் உதிரப்போக்கு தொடர்கிறது என இரத்தப் பரிசோதனை செய்து பாருங்கள். பெண்களுக்குமாதந்தோறும் ஏற்படும் இரத்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் போஷாக்கான ஆகாரம்உட்கொள்ள வேண்டும். தினம் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைஎன ஏதேனும் ஒரு பழம் சாப்பிட வேண்டும். பேரிச்சம் பழம் சாப்பிடலாம்.இரண்டு வகை காய், கறிவேப்பிலை, முருங்கைக்கீரை மற்றும் முட்டை அடிக்கடி சாப்பிட வேண்டும். இவைமாத விலக்கின் போது உதிரப் போக்கில் உடல் இழக்கும் இரும்புச் சத்தை ஈடுகட்டி, எதிர்ப்புசக்தியைத் தரும். முதல் வேலையாக மருத்துவரை சந்தித்து இத்தனைநாட்கள் உதிரப் போக்கு வராமலிருக்க சிகிச்சை மேற்கொள்ளுங்கள். கவனிக்காமல்விட்டால் விரைவில் நோயாளி மாதிரி ஆகி விடுவீர்கள். இப்பிரச்சினையைசரி செய்த பிறகு குழந்தைப் பேற்றைப் பற்றி யோசிக்கலாம். பொதுவாகஉதிரப் போக்கு இருக்கிற நாட்களில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுவது என்பதுஅசவுகரியமாக இருக்கலாம். தொற்றுக் கிருமிகள் பரவவும் அது காரணமாக அமையும்.தாமதிக்காமல் சிகிச்சையைத் தொடங்குங்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:43 pm

  எனக்கு சமீபத்தில் தான் திருமணமானது. என் வயது 21. எடை 61 கிலோ. எனக்கு மார்பகங்கள், தொடைகள் போன்ற இடங்களில் கோடுகள் காணப்படுகின்றன.அவற்றைப் பார்த்து என் கணவர் என் நடத்தையில் சந்தேகப்படுகிறார். நான்திருமணத்துக்கு முன்பு எந்தத் தவறும் செய்ததில்லை. இருந்தும் எனக்கு ஏன் இப்படிஇருக்கிறது? எப்படி சரி செய்யலாம்? - பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

  21
  வயதில் 61 கிலோஎடை என்பது கொஞ்சம் அதிகம்தான். அளவுக்கதிக எடையின்காரணமாகவே உங்களுக்கு மார்பகங்கள் மற்றும் தொடைகளில் கோடுகள்விழுந்திருக்கின்றன. உடலின் எடை முழுவதையும்உங்கள் குதிகால்கள் தாங்குகின்றன. அதன் விளைவே இந்தக் கோடுகள். வாழைத்தண்டு சாற்றில் சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து அடிக்கடி குடிக்கவும்.வாரம் இரண்டு முறை வாழைத் தண்டும், பயத்தம்பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிடவும். தினசரி உணவில்கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு, மிளகுஅதிகம் உள்ளபடி பார்த்துக் கொள்ளவும். வாரம் இருமுறை கொள்ளு வேகவைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துக் குடிக்கவும். சாதம் ஒருகப், காய்கறிகளும், கீரையும்இரண்டு கப் என சாப்பிடவும். தினம் மூன்று முதல்ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடக்கவும். இதையெல்லாம் செய்து வந்தாலே உங்கள்உடலின் ஊளைச் சதைகள் குறைந்து, வரிகளும் காணாமல் போகும். கணவரிடம் இதைவிளக்கமாக எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். எடையைக் குறைத்து, அதை நிரூபிப்பதுஇன்னும் சிறந்தது.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:44 pm

  என் வயது 27. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. மாத விலக்கு நான்கைந்துமாதங்களுக்கொரு முறை தான் வரும். இந்நிலையில் குழந்தையும் இல்லாததால், டி அண்ட் சி செய்தால் மாத விலக்கு சுழற்சியும் சரியாகும், கர்ப்பம்தரிக்கவும் வாய்ப்புண்டு என என் தோழி சொன்னதைக் கேட்டு இரண்டு முறைகள் அதையும் செய்து கொண்டேன். இப்போது எனக்குப் புதிதாக உடலெங்கும்ரோம வளர்ச்சி அதிகமாக ஆரம்பித்திருக்கிறது. டி அண்ட் சி செய்ததுதான் தவறா? ரோம வளர்ச்சி இப்படியேஅதிகரிக்குமா? நிறுத்த வழி உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

  ரொம்பவும் பயந்திருக்கிறீர்கள்.மாதவிலக்கை முறைப்படுத்த நீங்கள் உட்கொண்ட மருந்துகள்தான் உங்களுடைய இந்தப் புதிய பிரச்சினைக்குக் காரணம். ஸ்டீராய்டுமருந்துகள் செய்த வேலை தான் எல்லாம். அவற்றைத் தொடர்ந்து உட்கொள்வதுகூடாது. கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை பெருங்காயம் சேர்த்துமாதவிலக்கான முதல் இரண்டு நாட்களுக்குக் குடியுங்கள். அதற்கடுத்த மாதம்மாதவிலக்காகிற முதல் இரண்டு நாட்களுக்கு வெற்றிலை, பத்துமிளகு, ஐந்துபற்கள் பூண்டு சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவும். அதற்கும்அடுத்த மாதவிலக்கின் போது வேப்பங்கொழுந்து சாப்பிடவும். இதெல்லாம் உங்கள்மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்தும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்கோரைக் கிழங்கை அரைத்து சோப்புக்குப் பதில் உடலுக்குத் தேய்த்துக்குளிக்கவும். அதிகப்படியான ரோமத்தை நீக்க, வாக்சிங்செய்து கொள்ளலாம். சர்க்கரை, எலுமிச்சைமற்றும் கிளிசரின் கலவை அது என்பதால் சருமத்தையும்பாதிக்காது. மாத விலக்கு சுழற்சி சரியானாலே, ரோமவளர்ச்சி குறையும். கருத்தரிக்கும் வாய்ப்புகளும் கூடும். கவலைவேண்டாம்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:44 pm

  என் வயது 29. சமீப காலமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட அடுத்த சில நாட்களில்எனக்கு பயங்கரமான நீர்க் கடுப்பு உண்டாகிறது. எதனால் இப்படி? சிகிச்சைஉண்டா? - சி. ஜானகி, மேட்டூர்.

  மண்பானை செய்கிறவர்களிடம்சுத்தமான களிமண் வாங்கி, அதைத் தேங்காய் ஓட்டில் போட்டு சுடுநீரில்குழைத்து இரவு படுக்கும் முன்பாக தொப்புளைச் சுற்றித் தடவிக் கொண்டு, காலையில்குளித்து விடவும். இதை வாரம் மூன்று முறைகள் செய்யலாம். முள்ளங்கிவேக வைத்த தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் குடியுங்கள். உணவில் அடிக்கடிபயத்தம் பருப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடலாம்.முடிந்தால் மண் சட்டியில் சமைத்து சாப்பிடவும். தினம் காலையில்கைப்பிடியளவு கொத்த மல்லித் தழையை பச்சையாக சாப்பிடவும். நாட்டு அவரைக்காய், பீன்ஸ், முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:45 pm

  என் வயது 24. திருமணமாகி இரண்டு வருடங்களாகிறது. திருமணமான ஆறேமாதங்களில் கருத்தரித்தேன். அப்போது குழந்தை வேண்டாமென அதை அபார்ஷன்செய்துவிட்டேன். அதன் பிறகு எனக்குக் கர்ப்பம் தங்கவே இல்லை. மருத்துவர்ஒருவரின் ஆலோசனையின் பேரில் இப்போது ஹார் மோன் மாத்திரைகள் சாப்பிடுகிறேன்.இதனால் கருத்தரிக்குமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

  முதல் கர்ப்பத்தைக் கலைப்பது மிகப்பெரிய தவறு. குழந்தை வேண்டாம் என நினைத்த நீங்கள் அதற்கேற்ப இல்லற வாழ்வில்ஈடுபடுகிற போது பாதுகாப்பாக இருந்திருக்கலாம். அதைத் தவிர்த்து ஆறேமாதங்களில் உண்டான கர்ப்பத்தைக் கலைத்திருக்கக் கூடாது. உங்களுக்கு சினைப்பைகளில்தொற்றோ, கருக்குழாய்அடைப்போ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.முதல் வேலையாக நீங்கள் ழளுழு எக்ஸ் ரேவும், பெல்விக்ஸ்கேனும் செய்ய வேண்டும். ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடுவதைஉடனடியாக நிறுத்துங்கள். அவற்றால் உண்டாகிற பக்க விளைவுகள் பயங்கரமானதாகஇருக்கும். தவிர, உங்கள் கணவருக்கும்விந்தணுச் சோதனை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் பார்த்து தான் உங்களுக்கானசிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:45 pm

  என் வயது 21. இப்போது நான் இரண்டு மாதக் கர்ப்பம். கர்ப்பமாகஇருக்கிறபோது இல்லற வாழ்வில் ஈடுபட்டால் சுகப் பிரசவம் நிகழும் என்று கேள்விப்பட்டேன்.அது நிஜமா? எத்தனை நாட்கள் இடைவெளியில் ஈடுபடலாம்? அதனால் குழந்தைக்குபாதிப்பிருக்குமா? - எல். ராஜகுமாரி, அறந்தாங்கி.

  நீங்கள் கேள்விப்பட்ட விஷயம் ரொம்பவும் தவறானது.கர்ப்பம் தரித்த முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களில் இல்லறவாழ்க்கையில் ஈடுபடுவது ஆபத்தானது. இடைப்பட்ட மாதங்களில் கர்ப்பப் பைக்குஅழுத்தம் தராத வகையில் மென்மையாக உறவு கொள்ளலாம். அதுவும் கூட பிரசவமாவதில்எந்தச்சிக்கலும் இருக்காது என சொல்லப்பட்ட பெண்களுக்கு மட்டும்தான்.மற்ற பெண்கள் அதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் இல்லறவாழ்வில் ஈடுபடுவதால் தொற்றுக் கிருமிகள் அதிகம் தாக்க வாய்ப்புகள் உண்டு.பிறப்புறுப்பு சுகாதாரம் என்பது இந்த நாட்களில் மிக மிக முக்கியம். கர்ப்பகாலம் முழுவதுமே செக்ஸைத் தவிர்ப்பது என்பது ரொம்பவே நல்லது தான். சுகப்பிரசவத்துக்கு ஆரோக்கியமான உணவுதான் அடிப்படை. தினம் ஒரு பெரிய நெல்லிக்காய்சாப்பிடவும். இரவு உணவுக்குப் பிறகு வெற்றிலை, பாக்கு போடலாம்.கமலா ஆரஞ்சும், வாழைப் பழமும் தினம் சாப்பிடலாம். முருங்கைக் கீரையும், முட்டையும்சேர்த்து சமைத்து சாப்பிடலாம். தினம் மூன்று வேளை பால்குடிக்க வேண்டியது மிக முக்கியம். குதிகால் உயரமாக வைத்த ஹைஹீல்ஸ் செருப்புகளைத்தவிர்க்கவும். மருத்துவரின் ஆலோசனையை மட்டும் சரியாகப் பின்பற்றுங்கள்.மற்றவர்கள் சொல்கிற அனுபவங்கள், கேள்விப்படுகிற விஷயங்களை எல்லாம்காதில் வாங்காமல், பயமின்றி பிரசவத்தை எதிர் நோக்குங்கள்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:46 pm

  எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமான புதிதில் என் மேல் அன்பாக இருந்த கணவர், ஒரு குழந்தை பிறந்த பிறகு என்னை நெருங்குவதேஇல்லை. உணர்ச்சிகளை அடக்க நான் சுய இன்பம் செய்ய வேண்டியிருக்கிறது. கணவருக்கு என் மேல் மீண்டும் நாட்டம் வர சிகிச்சை உண்டா? -பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

  பொதுவாகவே திருணமானபுதிதில் செக்ஸ் வாழ்க்கையில் இருக்கிற ஈடுபாடு, காலத்துக்கும் அப்படியேஇருப்பதில்லை. உங்கள் கணவருக்கு அது ஒரேயடியாகக் குறைய என்ன காரணம்என முதலில் கண்டு பிடியுங்கள். ஒரு குழந்தை பெற்ற பிறகு தன்னை அழகாக, சுத்தமாகவைத்துக் கொள்கிற எண்ணம் பெரும்பாலான பெண்களுக்குப் போய் விடுகிறது.தினம் இரண்டு வேளைகள் குளியுங்கள். கஸ்தூரி மஞ்சள் தேய்த்துக் குளிப்பதால், அதுகணவரை இல்லற வாழ்க்கைக்கு ஈர்க்கும். நீங்கள் அணிகிற உடைகள்மற்றும் உள்ளாடைகள் அழுக்கின்றி, வியர்வை நாற்ற மின்றி சுத்தமாக இருக்கட்டும்.படுக்கையறையை சுத்தமாக வைத்திருங்கள். தினம் காலையில் கணவருக்குக்கைப்பிடியளவு பச்சைப் புதினாவை சாப்பிடக் கொடுங்கள். கருணைக் கிழங்குமற்றும் பசலைக் கீரை அதிகம் சமைத்துக் கொடுங்கள். முருங்கைப்வை நெய்யில்வதக்கிக் கொடுங்கள். இரவு படுக்கும் முன்பாக வெற்றிலை, பாக்குடன், சிறிதுஜாதிக்காய் சேர்த்துக் கொடுங்கள். இதெல்லாம் கணவருக்குத் தாம்பத்தியஈடுபாட்டை அதிகப்படுத்தும். படுக்கையறையில் வீட்டுப் பிரச்சினைகள்பேசாதீர்கள். சுய இன்பம் என்பது எப்போ தாவது ஒரு மாறுதலுக்குச்செய்யலாம். நாளைக்கே உங்கள் கணவர் மீண்டும் உங்களிடம் நெருக்கமாகும்போது உங்களின் அந்தப் பழக்கம் அவருக்கு நெருடலை உண் டாக்கும்.ஜாக்கிரதை.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:46 pm

  என் வயது 19. எனக்கொரு விசித்திரமான பிரச்சினை. அந்த ரங்கஉறுப்பிலிருந்து எப்போதும் துர்வாடை வீசுகிறது. தர்மசங்கடமான இந்தப்பிரச்சினைக்குத் தீர்வு சொல்லுங்கள். -எம்.கே., நெல்லை.

  மருந்துக் கடைகளில் பொட்டாசியம் பர்மாங்கனேட்என்று கிடைக்கும். அதில் சிட்டிகை எடுத்து வெதுவெதுப்பான தண்ணீரில்கலந்து, பிறப்புறுப்பைதினம் நான்கைந்து முறைகள் கழுவவும். டாய்லெட்மற்றும் அங்கே வைத்திருக்கிற பக்கெட், மக்போன்ற எல்லாம் சுத்தமாக இருக்க வேண்டும். அவை சுத்தமாக இல்லாமல் பாசிப்பிடித்து இருந்தால் கூட அதன் மூலம் தொற்றுக் கிருமிகள் பரவி, இம்மாதிரி பிரச்சினைகள் வரலாம். வெள்ளைப்படுதல் இருந்தால் வைட்டமின் சி மாத்திரை உட்கொள்ளவும். உணவில் பொன்னாங்கண்ணிக்கீரை, பெரியநெல்லிக்காய், ஆரஞ்சு அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.காபி மற்றும் டீயைக் குறைத்து, திக்கான பாலில் பாதாம் பருப்பைப் பொடிசெய்து கலந்து குடிக்கவும். பழங்கள், பால், முட்டைஇந்த மூன்றும் தினசரி சாப்பிட வேண்டியவை. போஷாக்கான ஆகாரம்தான்இப்பிரச்சினைக்கான முதல் தீர்வு. உபயோகிக்கிற உள்ளாடைகள் காட்டனாக, சுத்தமாகஇருக்கட்டும். தினம் அவற்றை இரண்டு வேளைகள் மாற்றவும். மாதவிலக்கு நாட்களில்அதிகப் படியான சுத்தத்தைக் கடைப் பிடிக்கவும். குறிப்பிட்டநேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்றவும்.இவற்றையெல்லாம் செய்தாலே உங்கள் பிரச்சினைகள் சரியாகும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by தோழன் Sat 20 Nov 2010, 11:46 pm

  எனக்குத் திருமணமாகி குழந்தை பிறந்த பிறகு சிறுநீரை அடக்க முடியாத நிலைஉண்டாகி விட்டது. சிரித்தால், தும்மினால், இருமினால் கூட சிறுநீர்கசிகிறது. சிகிச்சை உண்டா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

  நிறைய பெண்களுக்கு இப்பிரச்சினை இருக்கிறது.பிரதான காரணம் இரத்த சோகை. உலக அளவில் இந்தியப் பெண்கள்தான் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்று. வெளி வேலை, வீட்டுப் பொறுப்பு என இரட்டைச் சுமைசுமக்கிற பெண்கள் பெரும்பாலும் அதற்கேற்ற சரிவிகித உணவை உட்கொள்வதில்லை.மீந்து போன உணவு, முதல் நாள் சமைத்ததை சாப்பிடுவது என உடம்பைப்பாழாக்கிக் கொள்கிறார்கள். இரத்த சோகையைக் குணப்பபடுத்திக் கொண்டாலேஇப்பிரச்சினை சரியாகும். ஈஸ்னோஃபிலியா இருந்தாலும் இப்படி இருக்கலாம்.அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை தவிர சிறுநீரகத்தசை நார்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கும் இப்படி இருக்கலாம். எனவேஉங்களுக்கு எதனால் இப்படியிருக்கிறது என்பதை நேரில் பார்த்துதான் சரியானசிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.

  தோழன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 421
  Points : 899
  Reputation : 4
  Join date : 27/10/2010

  Back to top Go down

  Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு Empty Re: Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு

  Post by Sponsored content


  Sponsored content


  Back to top Go down

  Page 1 of 2 1, 2  Next

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum