என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சிரிப்பினால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் -இது சிரிப்பல்ல
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES
Page 1 of 1
சிரிப்பினால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் -இது சிரிப்பல்ல
பிறரை வசீகரிக்கச் செய்வது சிரிப்பு. சில குறிப்பிட்ட சமயங்களில் இது தானாக எழுவதே தவிர, நாமாக யோசித்து வருவது அல்ல. மூளையின் செயல்பாட்டால் உண்டாகக்கூடியதாக இருந்தாலும் உணர்வுகளால், நினைவுகளால் தூண்டப்படக்கூடியது. சிரிக்கும் போது வாய் மட்டுமல்ல, கை-கால்களின் தசைகளும் இயக்கப்படுகிறது.
முதல் சிரிப்பு சுமார் மூனறை முதல் நான்கு மாத வாக்கில் ஆரம்பிக்கிறது. அழுகையைப் போலவே தாய் மற்றும் பிறரது கவனத்தை ஈர்க்க குழந்தை சிரிப்பையும் கையாளுகிறது.
பெரும்பாலான சிரிப்புகள் ஜோக் அடிப்பதால் வருவதாக நாம் நினைக்கிறோம். அப்படியல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும், பேசும்போதும் இயல்பாக சிரிப்பு வருகிறது. இது சமூகப் பிணைப்பின் அடையாளம் என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.
சிரிப்பினால் பேச்சு தடைபடுவதில்லை... அதே சமயம், ஒரு நிறுத்தற் குறி மாதிரி சிரிப்பு பயன்படுகிறது.
சிரிப்பின் முன்னோடி
மனித சிரிப்பின் முன்னோடி நமது மூதாதையரான குரங்குகள் பல்லை விரித்துக்காட்டுமே.. அதுதான் என்கிறார்கள். எல்லா விலங்குகளுமே விளையாடும் போது வித்தியாசமான ஒலி எழுப்பத்தான் செய்கின்றன. அதாவது சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் அந்தச் சிரிப்புகள் அனைத்தும் மனித சிரிப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இதனால் அவற்றை சிரிப்பாக நாம் எடுத்துக் கொள்வதில்லை.
சிரிப்பு விளையாட்டோடு தொடர்புடையது. நாம் குஷி மூடில் இருந்தால் தான் சிரிப்போம்... இல்லாவிட்டால் உம்மென்றுதான் இருப்போம். நமக்கும் விளையாட்டுக்கும் இடையில் தூரம் அதிகம் என்பதால் தான், பெரியவர்களை விட சிறுவர்களே அதிகமாக சிரிக்கிறார்கள். இதுதான் உண்மை என்கின்றன ஆய்வுகள்.
சிரிப்பை பற்றி இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், சிரிப்பைக் கூட பிரித்துப் பார்க்கலாம்.. யாரைப் பார்த்து சிரிக்கிறோம்.. யாருடன் சிரிக்கிறோம் என்பதிலிருந்து நமது சிரிப்பின் தன்மை தெரியவரும்.
அசட்டுச்சிரிப்பு என்பது, இக்கட்டான நிலையில் நாமாக வலிய சிரிப்பது, நாம் பிறரை தவிர்க்க முனைதல். ஏளனச் சிரிப்பு இருக்கிறது, அடுத்தவர்களை மட்டம் தட்டுவதற்கு இதை பயன்படுத்துகிறோம். கர்வச்சிரிப்பு இருக்கிறது,தன்னைத்தானே உயர்வாக நினைப்பதைக் குறிக்கிறது. இதைபோல் இளநகை, குரு நகை, குரூர நகை என சிரிப்பை நாமாக வேறுபடுத்திக்கொள்ளலாம்.
இயல்பான சிரிப்பில் இரண்டு வகைகள் உள்ளன. தானாக வருவது, நகைச் சுவையால் வருவது, அதாவது உடல் ரீதியான சிரிப்பு, உளம்சார்ந்த சிரிப்பு.
நாம் எதையாவது நகைச்சுவையான ஒன்றைப் பார்த்தால் சிரிக்கிறோம். நமக்கு வித்தியாசமாகத் தெரிவதைப் பார்த்து சிரிக்கிறோம். ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வயதினருக்கு வித்தியாசமாகப்படும். சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தினமும் பதினேழு முறை சிரிக்கிறார்கள்.
மருத்துவப் பலன்கள்
வாய் விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள். மனஇறுக்கத்திற்குக் காரணமான ஹார்மோனைக் கட்டுப்படுத்தி மனத்தை தளர்த்துகிறது. கடுமையான நோய்களையும் எளிமையாக மாற்றுவது சிரிப்பு.
மரம் அறுக்கும் வேலையில் ஈடுபடும் பத்து நிமிட உழைப்பிற்கு ஈடானது நூறு முறை சிரிப்பது என்கிறார்கள். சிரிப்பதால் உதரவிதானம், நுரையீரல், வயிறு, கால்கள், முகம், முதுகு போன்ற அனைத்து உறுப்புகளுக்கும் பலன் கிட்டுகிறது. நமது மன நலனை மேன்மையுறச் செய்கிறது. பயம், கோபம் போன்ற எதிரிடை எண்ணங்களை மாற்றுகிறது.
சிரித்தே நோயைப் போக்கலாம் என்பதற்காக மும்பையில் சிரிப்பு கிளப் ஆரம்பிக்கப்பட்டு பல கிளைகளுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறது.
சிரிக்கத் தெரியாதவனை மிருகம் என இகழும் உலகம் சிரிக்கத் தெரிந்தவன், வாழ்க்கையை ஜெயிக்கப் பிறந்தவன் எனப் போற்றுகிறது. நீங்கள் எப்படி?

Re: சிரிப்பினால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் -இது சிரிப்பல்ல
நல்ல தகவல்கள் சார் ..உங்கள் பணி சிறக்கட்டும் ..
தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
Similar topics
» தொந்தியினால் ஏற்படும் பயன்கள்
» மதுவினால் ஏற்படும் கஷ்டங்கள்
» உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்
» இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம்
» இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகள் -பொதுவான கட்டுரை
» மதுவினால் ஏற்படும் கஷ்டங்கள்
» உபதம்ச (ஆண்குறியில் ஏற்படும்) ரோக சிகிச்சைகள்
» இயற்கை உணவினால் நம் சுவாசத்தில் ஏற்படும் மாற்றம்
» இதயத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைகள் -பொதுவான கட்டுரை
ஆயுர்வேத மருத்துவம் :: இது உங்கள் பகுதி -IT IS FOR U :: மருத்துவம் சார்ந்த நகைச்சுவைகள்-MEDICAL JOKES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum