என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ரீஃபைன்டு ஆயிலால் இதயத்திற்கு கேடு ?
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: ஆரோக்கிய உணவுகள் -FOOD & NUTRITION
Page 1 of 1
ரீஃபைன்டு ஆயிலால் இதயத்திற்கு கேடு ?
இப்போது எல்லாருடைய வீடுகளிலும்பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்துவது ஆயில் என அழைக்கப்படும்சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்தான். ஒருமுறை அல்ல, இரண்டுமுறை சுத்திகரிக்கப்பட்ட ஆயில்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன.
எண்ணெய்களைச் சுத்திகரிப்பதற்காகப்பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் உடல்நலத்திற்கு மிகவும் பாதிப்பைஏற்படுத்துபவை.
இன்றைய காலத்தில் பரவலாக இருக்கும்புற்றுநோய், மூட்டுவலிபோன்றவற்றிற்கு இந்தச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் ஒருகாரணம்" என்கிறார் ஈரோடு சத்தியம் ஏஜென்சி மற்றும் என்விரோ ஈகோசிஸ்டஸ்டம்ஸைச் சேர்ந்த எஸ்.மூர்த்தி சத்யராஜ். டெக்ஸ்டைல் டெக்னாலஜி கற்ற அவர்மூலிகை ஆராய்ச்சியிலும் நிபுணர். மூலிகைகளைக் கொண்டு சமையல் எண்ணெய்களைச்சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ள அவரிடம் பேசினோம்.
இப்போது எல்லாரும் ரீஃபைன்ட் ஆயிலையேபயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்க அதைப் பயன்படுத்தக் கூடாது என்றுசொல்கிறீர்களே?
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமதுநாட்டில் அல்சர், புற்றுநோய்போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் 40சதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது. இதற்குக் காரணம் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும்ரீஃபைன்ட் ஆயில்கள்தாம்.
சமையல் எண்ணெயை எப்படிச் சுத்திகரிக்கிறார்கள்என்று பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும்.
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ளநிறத்தையும், அதன் கொழகொழப்புத்தன்மையையும், கொழுப்புச் சத்தையும்நீக்குவதையே சுத்திகரிப்பது என்கிறார்கள்.
இதற்கு அவர்கள் சோப்புத்தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர்கந்தக அமிலம், பிளிச்சிங் பவுடர்போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள்.
காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ளகொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றிவிடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியேநீக்கிவிடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்கவே பிளிச்சிங் பவுடர்.
இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நாங்கள்எண்ணெயில் இருந்து முற்றிலும் நீக்கிவிடுவோம் என்று ரீஃபைன்ட் ஆயில்தயாரிப்பவர்கள் சொன்னாலும், சிறிதுவேதிப் பொருள்கள் நிச்சயம் தங்கி இருக்கவே செய்யும்.
அதுமட்டுமல்ல, உடலுக்குநல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு எண்ணெயிலிருந்து நீக்கிவிடும்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில்தங்கியுள்ள கந்தக அமிலம் மனித உடலில் உள்ள எலும்பைப் பலவீனம் அடையச் செய்துவிடும்.நமது முன்னோர்களுடைய எலும்பின் வலுவை விட நமது எலும்புகள் வலுக்குறைவானவை. உடலில்கலக்கும் இந்த அமிலம் உடலின் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால்அல்சர், புற்றுநோய்ஏற்படுகிறது. இப்போது பதினைந்து வயதுள்ள ஒருவரின் முடி நரைத்து விடுகிறது.முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது.
மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுகிறது.மூட்டுவலி ஏற்படுகிறது.
நமது மக்கள் ரீஃபைன்ட் ஆயில்களைப்பயன்படுத்திப் பழகிவிட்டார்கள். ரீஃபைன்ட் ஆயில் என்றால் அது சுத்திகரிக்கப்பட்டஆயில்; சுத்திகரிக்கப்பட்டஆயில் என்றால் அது சுத்தமான ஆயில் என்று நினைக்கிறார்கள். அதனால் மனித உடலுக்குஇந்த ஆயில்கள் செய்யும் கேடுகள் பற்றித் தெரிவதில்லை. கவலைப்படுவதுமில்லை.
சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களில் நிறையகொழுப்புச் சத்து இருக்கிறது. உடலுழைப்புக் குறைந்துவிட்ட இக்காலத்தில்சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களைப் பயன்படுத்தினால் இதய நோய்கள் வந்துவிடாதா?
சுத்திகரிக்கப்படாத இயற்கைமுறையில்எடுக்கப்பட்ட சமையல் எண்ணெய்களால் மனித உடலுக்குக் கேடு எதுவும் இல்லை. நமதுமுன்னோர்கள் காலங்காலமாக இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தி நல்ல உடல் ஆரோக்கியத்தோடுஇருந்தார்கள். "முன்னோர்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள்; எனவேஅவர்களுக்கு இயற்கை முறை எண்ணெய் எதுவும் செய்யாது" என்று பலர்நினைக்கிறார்கள்.
இன்றைய நாளுடன் ஒப்பிடும் போது முன்புஉடல் உழைப்பு அதிகம்தான். உடல் உழைப்புக் குறைவு என்பதற்காக இப்போது இயற்கையானசமையல் எண்ணெய்களைப் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.
உதாரணமாக கடலை எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
கடலை எண்ணெயைச் சமையலுக்குப்பயன்படுத்தினால் அது உடலுக்குத் தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
உடலுக்குத் தேவையான கொழுப்பைத்தருகிறது. உடல் எடை அதிகரிப்பதில்லை. புற்றுநோய், புற்றுநோய்க்கட்டி போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவர் ஒரு நாளைக்கு15 - 20மி.லி. கடலை எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதேபோல் நல்லெண்ணையும் உடலுக்கு மிகவும் உகந்தது.
ரீஃபைன்ட் ஆயிலில் உள்ள லினோலிக் ஒமேகா 6என்கிற பொருள் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தை அழித்துவிடுகிறது. இதனால்பல்வேறு உடல்நலக் கேடுகள் உருவாகின்றன.
கடலை எண்ணெயைச் சமையலுக்குப்பயன்படுத்தினால் கொழுப்பு அதிகரிக்கும் என்று பயப்படத் தேவையில்லை. கடலை எண்ணையில்தயாரிக்கும் உணவுப் பொருள்களில் புளி சேர்த்துக் கொண்டால் அது கொழுப்பைக்கரைத்துவிடும். புளியை அளவாகச் சேர்த்துக் கொள்வதால் எந்தக் கெடுதலும் இல்லை.புளிப்புச் சுவையும் உடலுக்குத் தேவைதானே? உதாரணமாகபுளிக்குழம்பு வைக்கும் போது வெந்தயம் போடுவார்கள். வெந்தயம் கசப்புச்சுவையுள்ளது. புளியின் தீமைகளை வெந்தயம் எடுத்துவிடும்.
அப்படியானால் பெரும்பாலான மக்கள்ரீஃபைன்ட் ஆயிலைப் பயன்படுத்துவது ஏன்?
இதற்கு என்ன சொல்வது? மக்கள்ரீஃபைன்ட் ஆயிலுக்குப் பழகிவிட்டதால்தான் அதைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.தெளிவாக, கொழகொழப்பாக இல்லாமல், வண்ணம்குறைந்து இருப்பதுதான் நல்ல எண்ணெய் என்று கருதுவது தவறு. எண்ணெய் என்றால்அதற்குரிய நிறம், குணம், மணத்துடன்இருக்க வேண்டும்.

தோழன்- உதய நிலா
- Posts : 421
Points : 899
Reputation : 4
Join date : 27/10/2010
ஆயுர்வேத மருத்துவம் :: மருத்துவம் -மருத்துவம் சார்ந்த துறைகளும்-MEDICINE RELATED FIELD :: ஆரோக்கிய உணவுகள் -FOOD & NUTRITION
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum