என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
குழந்தைகளின் காய்ச்சல் -பொதுவான கட்டுரைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: பெண்கள் & குழந்தைகள் நலம் - STHREE ROGAM & KOWMARA BRUTHYAM
Page 1 of 1

[You must be registered and logged in to see this image.]
நமது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதுதான் காய்ச்சல் அல்லது ஜுரம். மூளையில் உள்ள சில நரம்புகள்தான், நம் உடலின் வெப்பநிலையை ஒரே சீரான நிலையில் வைத்திருக்கின்றன. ரத்தத்தின் வெப்ப நிலையையும், சுற்றுச்சூழல் வெப்பநிலையையும் பொறுத்து உடல் வெப்ப நிலை மாறும்.காய்ச்சல் ஏற்படக் காரணம்
காய்ச்சல் வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
நுண் கிருமிகள் தாக்குதல் (பாக்டீரியா, வைரஸ், காளான் போன்றவை). புற்றுநோய்க்காகப் பயன்படுத்தும் சில மருந்துகள், தடுப்பூசிகள், தசை மற்றும் மூட்டுப் பாதிப்புகள், நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் சில மாற்றங்கள், அழற்சி, சல மரபணுக்கோளாறுகள், உடலில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் காய்ச்சல் வரலாம்.
இந்த இடத்தில் ஒன்றை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். குழந்தைக்குப் பல் முறைப்பதாலோ, எதையாவது பயந்துபோனாலோ ஒரு போதும் காய்ச்சல் வராது. அதனால், காய்ச்சல் என்றால் உடனே டாக்டரிடம் காட்டி சிகிச்சை அளிக்க வேண்டும்.
காய்ச்சலின் நன்மையும், தீமையும் காய்ச்சல், அதாவது உடலின் வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்குள் புகுந்த நுண் கிருமிகள் மேலும் பரவாமலும், அவற்றால் பாதிப்பு ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது. ஆனால், வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கும், ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கும் காய்ச்சல் அதிகமாகும்போது வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
மேலும், காய்ச்சல் அடிக்கும்போது உடல் திசுகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும். திசுக்களில் நடைபெறும் ரசாயனச்
செயல்பாடுகளும், இதயத்துடிப்பும் கூட அதிகரிக்கும். இதனால், குழந்தை மிகவும் சோர்ந்துவிடும். நுரையீரலோ, இதயமோ பாதிக்கப்பட்டகுழந்தைகளுக்கு, காய்ச்சலால் அவை மேலும் செயலிழந்துபோகும் அபாயம் ஏற்படலாம்
வெப்பநிலை மாறுபாடுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான உடல் வெப்பம் இருக்கும் என்று சொல்ல முடியாது. நபருக்கு நபர் இதுமாறும். மேலும், ஒருவருக்கேகூட ஒரே மாதிரியான உடல் வெப்பநிலை இருக்காது. அதிகாலையில் மிகக் குறைவாகவும், மாலையில் மிக அதிகமாகவும் இருக்கும். இந்த வேறுபாடு ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம்.
உடற்பயிற்சி செய்த முப்பது நிமிடங்களுக்கும், சாப்பிட்ட ஒரு மணி நேரம் வரைக்கும், சூடான உணவு சாப்பிட்ட பிறகும் உடல் வெப்பம் அதிகமாக இருக்கும்.
உடல் வெப்பத்தை அளவிடும் முறை
பாதரசம் உள்ள வெப்பமானியை ஆசன வாயிலில் வைத்து அளக்கப்படும் உடல் வெப்பநிலைதான் சரியாக இருக்கும். இதுதவிர, வாய், அக்குள், காதுப் படலம் போன்றவற்றிலும் வெப்பத்தை அளவிடலாம்.
குழந்தையின் காதுப் படலத்தின் மூலம் உடல் வெப்பத்தைப் பார்க்கும் முறை எளிதாகவும், குழந்தைக்கு எந்தக் கஷ்டமும் இல்லாததாகவும், சீக்கிரம் முடிந்துவிடுவதாகவும், குழந்தையின் ஒத்துழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாததாகவும் இருப்பதால், இந்த முறைதான் மிக அதிக அளவில் பின்பற்றபப்படுகிறது.
டிஜிட்டல் வெப்பமானி, லிக்விட் டிஜிட்டல் ஸ்டிரிப் போன்றவற்றின் மூலமும் உடல் வெப்பத்தைக் கணக்கிடலாம்.
பெற்றோர்கள் கவனத்துக்கு…
காய்ச்சல் எவ்வளவு நாள்களாக இருக்கிறது.
ஒரு நாளில் எப்போது காய்ச்சல் மிக அதிகமாக இருக்கிறது.
தொடர்ந்து காய்ச்சல் இருக்கிறதா அல்லது மூன்று, நான்கு நாளுக்கு ஒருமறை விட்டுவிட்டு வருகிறதா
காய்ச்சல் இருக்கும்போது உடல் நடுங்கிறதா
காயச்சல் அதிகரிக்கும்போது வலிப்பு வருகிறதா
குழந்தைக்குத் தொண்டை வலி, காதில் சீழ் வடிதல், வயிறு வீக்கம் அல்லது வலி, மூச்சுவிடுவதில் சிரமம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், பல் ஈறுகளில் ரத்தக் கசிவு, மலம் கறுப்பாக வெளியேறுதல், கொசுக்கடி போல் உடலில் சிவப்பு நிறப் புள்ளிகள் தோன்றுதல், உடலில் எங்காவது ரத்தம் உறைந்திருக்கிறதா, மூட்டு வீக்கமோ, வலியோ இருக்கிறதா என்பதைப் பெற்றோர்கள் கவனமாகப் பார்க்க வேண்டும்.
குழந்தைக்குக் காய்ச்சல் எவ்வளவு இருக்கிறது பார்க்க வேண்டும். 41 டிகிரிக்கு மேல் இருந்தால், மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.அதனால், கவனமாக இருக்க வேண்டும்.
அபாய கட்டம்
* இரண்டு மாதக் குழந்தைகள்
* 41 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருத்தல்
* ஆசுவாசப்படுத்த முடியாமல் குழந்தைகள் அழுவது
* உடலில் எந்த இடத்தைத் தொட்டாலோ அல்லது தூக்கினாலோ குழந்தை அழுவது
* குழந்தை மிகவும் சோர்வாகவோ, நீண்ட நேரம் தூங்கிக்கெண்டோ இருப்பது, எழுவதற்குச் சிரமப்படுவது
* கழுத்து விறைப்பாக இருத்தல்.
* தோலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உண்டாவது
* மூச்சுவிடுவதற்குக் கஷ்டப்படுவது
* சாப்பிட முடியாமல் மிகவும் சோர்வாக இருப்பது
* காக்காய் வலிப்பு நோயால் (திவீts) பாதிக்கப்பட்ட குழந்தை
* குணமாகாமல் நீண்ட நாள்களாகக் காய்ச்சல் இருப்பது போன்றவை, சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் மிகவும் ஆபத்தான அறிகுறிகளாகும்.
உடனடி சிகிச்சை அளிக்க வேண்டிய அறிகுறிகள்.
* 3 முதல் 12 மாதம் வரை உள்ள குழந்தைகள்
* 40 டிகிரிக்கு மேல் உள்ள காய்ச்சல்
* சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி அல்லது பிறப்புறுப்பில் வீக்கம்
* தொடர் இருமல், சளி, காதுவலி அல்லது சீழ்வடிதல், சிறுநீர் கழிப்பதில் பிரச்னைகள் என எந்தக் காரணமும் இல்லாமல் 24 மணி நேரத்துக்கு
நீடிக்கும் காய்ச்சல்
* 24 மணி நேரத்துக்குள் விட்டுவிட்டு வரும் காய்ச்சல்
* மருந்து கொடுத்தும் குறையாமல் இருக்கும் காய்ச்சல்.
பொதுவான சிகிச்சைகள்
* வெதுவெதுப்பான தண்ணீரில் துணியை நனைத்து உடல் முழுவதையும் மூட வேண்டும்.
* நான்கு அல்லது ஆறு மணி நேரத்துக்கு ஒருமறை, காய்ச்சலைக் குறைக்கும் அசிடமினோபென், பாரசிடமால மருந்துகளைக் கொடுக்க வேண்டும்.
* அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தண்ணீர் கொடுக்க வேண்டும்.
* எளிதில் ஜீரணமாகக்கூடிய, சத்தான உணவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும்.
* தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்குக் காய்ச்சல் இருந்தாலும், தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்கவேண்டும்.
* ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலோ, குழந்¬ மிகவும் சோர்ந்துபோனாலோ, உடனே டாக்டரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010
Similar topics
» குழந்தைகளின் நகம் வெட்ட டிப்ஸ் -பொதுவான கட்டுரைகள்
» குழந்தைகளின் வாந்தி காரணம் என்ன -பொதுவான கட்டுரைகள்
» குழந்தைகளின் வளர்ச்சி -பொதுவான கட்டுரை
» குழந்தைகளின் தூக்கம் -பொதுவான கட்டுரை
» பச்சிளங் குழந்தைகளின் ஏற்படும் நோய்களை எப்படி அறிவது-பொதுவான கட்டுரை
» குழந்தைகளின் வாந்தி காரணம் என்ன -பொதுவான கட்டுரைகள்
» குழந்தைகளின் வளர்ச்சி -பொதுவான கட்டுரை
» குழந்தைகளின் தூக்கம் -பொதுவான கட்டுரை
» பச்சிளங் குழந்தைகளின் ஏற்படும் நோய்களை எப்படி அறிவது-பொதுவான கட்டுரை
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: பெண்கள் & குழந்தைகள் நலம் - STHREE ROGAM & KOWMARA BRUTHYAM
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum