ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள் படங்களுடன்

    2 posters

    Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள் படங்களுடன்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:04 pm

    வள் இதழ்
    ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
    தண் கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
    செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை,
    உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், 65
    எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
    வடவனம், வாகை, வான் பூங் குடசம்,
    எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை,
    பயினி, வானி, பல் இணர்க் குரவம்,
    பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 70
    விரி மலர் ஆவிரை, வேரல், சூரல்,
    குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி,
    குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம்,
    போங்கம், திலகம், தேங் கமழ் பாதிரி,
    செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், 75
    கரந்தை, குளவி, கடி கமழ் கலி மா,
    தில்லை, பாலை, கல் இவர் முல்லை,
    குல்லை, பிடவம், சிறுமாரோடம்,
    வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல்,
    தாழை, தளவம், முள் தாள் தாமரை, 80
    ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி,
    சேடல், செம்மல், சிறுசெங்குரலி,
    கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை,
    காஞ்சி, மணிக் குலைக் கள் கமழ் நெய்தல்,
    பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், 85
    ஈங்கை, இலவம், தூங்கு இணர்க் கொன்றை,
    அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி அவரை,

    பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி,
    வஞ்சி, பித்திகம், சிந்துவாரம்,
    தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, 90
    நந்தி, நறவம், நறும் புன்னாகம்,
    பாரம், பீரம், பைங் குருக்கத்தி,
    ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை,
    நரந்தம், நாகம், நள்ளிருள் நாறி,
    மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், 95
    அரக்கு விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்,

    thanks to karkanirka.wordpress

    Last edited by தோழன் on Sun 02 Jan 2011, 10:40 pm; edited 1 time in total

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 1-10 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:08 pm

    1.காந்தள் kāntaḷ

    n. prob. காந்து-. [M. kāntal.] 1. Malabar glory lily, red or white species, m. cl., Gloriosa superba;kāntaḷkāntaḷ, the flower sacred to Skanda; முருகக்கடவுளுக்குரிய காந்தளைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை

    [You must be registered and logged in to see this image.]
    காந்தள்- kaanthal

    2. ஆம்பல் āmpal :

    n. 1. [K. ābal, M. Tu. ām- bal.] Water-lily, nymphaea lotus; அல்லி. (பிங்.)

    [You must be registered and logged in to see this image.]
    ஆம்பல்_aambal

    3.அனிச்சம் aṉiccam

    , n. prob. a-nitya. Flower
    supposed to be so delicate as to droop or even perish when smelt;
    மோந்தால் வாடும் பூ வகை. மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90).

    4.குவளை kuvaḷai

    Purple Indian water-lily. See செங்கழுநீர். விளக்கிட் டன்ன கடிகமழ் குவளை (சீவக. 256)

    Purple Indian water-lily, Nymphaea odorata; கொடிவகை. கண்மலர் செங் கழுநீர் (திருக்கோ. 108).

    Kuvalai also means Karunkuvalai , but that flower is ther in this list, Hence taking the meaning of Kazhuneer.
    [You must be registered and logged in to see this image.]
    குவளை-Kuvalai

    5. குறிஞ்சி kuṟiñci :

    conehead  - Strobilanthes; பூடுவகை. (L.)

    பெருங்குறிஞ்சி peru-ṅ-kuṟiñ  -   A species of conehead, m. sh., Strobilanthes consanguineus typica; பூடுவகை. (பிங்.)

    Square-branched conehead, m. sh., Strobilanthes kunthianus; மரவகை.
    [You must be registered and logged in to see this image.]
    குறிஞ்சி_Kurunji

    6. வெட்சி veṭci :

    1. Scarlet ixora, m. sh., Ixora coccinea; செடிவகை. செங்கால் வெட்சிச் சீறிதழ் (திருமுரு. 21).

    [You must be registered and logged in to see this image.]
    வெட்சி vetchi :

    7. செங்கொடுவேரி ceṅ-koṭu-vēri

    See செங்கொடிவேலி. குறிஞ்சி வெட்சி செங்கொடு வேரி (குறிஞ்சிப். 64).

    செங்கொடிவேலி ceṅ-koṭi-vēli  -   Rosy-flowered leadwort, m. cl., Plumbago rosea; ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை. (யாழ். அக.)

    [You must be registered and logged in to see this image.]
    செங்கொடுவேரி_Sengoduveri

    8.தேமா tē-mā (தேமாம்பூ)

    n. < தேம் + மா. 1. [M. tēṇ- māvu.] Sweet mango, 1. tr., Mangifera indica; மாமரவகை. பன்றிக்கூழ்ப் பத்தரிற் றேமா வடித் தற்றால் (நாலடி, 257).

    [You must be registered and logged in to see this image.]
    தேமாம்பூ_themampoo

    9. மணிச்சிகை maṇi-c-cikai

    Crab’s-eye. See குன்றி, 1. செங்கொடுவேரி தேமா மணிச்சிகை (குறிஞ்சிப். 64).

    குன்றி - 1. Crab’s eye, m. cl., Abrus precatorius;

    [You must be registered and logged in to see this image.]
    மணிச்சிகை_manichikai

    10.உந்தூழ் untūḻ

    உந்து- + ஊழ்-. Large bamboo. See பெருமூங்கில். உரிதுநா றவிழ் தொத் துந்தூழ் கூவிளம் (குறிஞ்சிப். 65).

    பெருமூங்கில் -  Large bamboo, 1. tr., Bambusa arundinaca; மூங்கில் மரவகை. (குறிஞ்சிப். 65, உரை.)
    [You must be registered and logged in to see this image.]
    உந்தூழ்_untul

    [You must be registered and logged in to see this image.]
    உந்தூழ்_untul

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 11 -20 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:21 pm

    11.கூவிளம் kūviḷam
    kuvil. [M. kūvaḷam.] 1. Bael. See வில்வம். (குறிஞ்சிப். 65.)  -  Bael, m. tr. Aegle marmelos; மரவகை.[You must be registered and logged in to see this image.]
    கூவிளம்_kuvilam

    12. எறுழ் eṟuḻ   ( எறுழம்பூ)
    A hill tree with red flowers; செந்நிறப்பூவுடைய குறிஞ்சிநிலத்து மரவகை. காலெறுழொள்வீ (ஐங்குறு. 308).
    13.சுள்ளி cuḷḷi :
    Ceylon ebony, 1. tr., Diospyros ebenum; ஆச்சாவகை. எரிபுரை யுறழுஞ் சுள்ளி (குறிஞ்சிப். 66)[You must be registered and logged in to see this image.]
    சுள்ளி_Sulli

    14. கூவிரம் kūviram

    (flower of) A  mountain tree; மலைமரவகை. (குறிஞ்சிப். 66.)
    15. வடவனம் vaṭa-vaṉam
    n. < vaṭa - Indian banyan - Ficus benghalensis L.

    [You must be registered and logged in to see this image.]
    வடவனம்_vadavanam

    16. வாகை vākai
    [K. Tu. bāge, M. vāga.] Sirissa, Albizzia; மரவகை.[You must be registered and logged in to see this image.]
    வாகை_vaagai

    17. குடசம் kuṭacam :
    n. < kuṭaja. 1. See குடசப்பாலை, 1. வடவனம் வாகை வான்பூங் குடசம் (குறிஞ்சிப். 67)
    n. < kuṭaja +. 1. Conessi bark, s. tr., Holarrhena anti- dysenterica; கசப்புவெட்பாலை. (பதார்த்த. 235.)[You must be registered and logged in to see this image.]
    குடசம்_kudasam

    18. எருவை eruvai :
    European bamboo reed. See கொறுக்கச்சி. (குறிஞ்சிப். 68, உரை.)
    கொறுக்கை¹ koṟukkai -, n. 1. European bamboo reed, 1. sh., Arundo donax; நாணல் வகை. (மலை.)[You must be registered and logged in to see this image.]
    எருவை- eruvai

    19. செருவிளை ceru-viḷai
    செறு + விளை-. White-flowered mussel-shell creeper. See வெள்ளைக்காக்கணம். (குறிஞ்சிப். 68.)
    வெள்ளைக்காக்கணம் - White-flowered mussell-shell creeper, s. cl., Clitoria ternatea-albiflora; கொடி வகை. (W.)
    [You must be registered and logged in to see this image.]
    செருவிளை_seruvilai - வெண்காக்கணம்_venkaakanam

    20. கருவிளம் karu-viḷam :
    2. Mussell-shell Creeper. See காக்கட்டான், 1. (மலை.)
    காக்கட்டான் kākkaṭṭāṉ - , n. 1. Mussell-shell creeper, s. cl., Clitoria ternatea typica; கொடிவகை. [You must be registered and logged in to see this image.]
    கருவிளம்_karuvilam

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 21-30 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:22 pm

    21.பயினி payiṉi 
    (flower of) n. [Tu. pāini.] A kind of tree peculiar to hilly tracts; குறிஞ்சிநிலத்து உண்டாம் ஒருவகை மரம். (குறிஞ்சிப். 69.)
     
    22. வானி vāṉi :  
    (flower of) A tree; மரவகை. பயினி வானி பல்லிணர்க் குரவம் (குறிஞ் சிப். 69). 
     
    23. குரவம் kuravam
    n. < குரா. 1. cf. kura- va. Common bottle-flower. See குரா. பலகுரவ மழனகுவன (சூளா. தூது. 2)
    குரா kurā – n. cf. kurava. Bottle-flower, s. tr., Webera corymbosa; குராமரம். குராநற் செழும்போது கொண்டு (திவ். இயற். 2, 31).
     [You must be registered and logged in to see this image.]
    குரவம்_kuruvam

    24. பசும்பிடி pacu-m-piṭi :
     
     n. < பசு-மை +. Mysore gamboge. See பச்சிலை
    பச்சிலை - [K. paccāri.] Mysore gamboge, l. tr., Garcinia xanthochymus; மரவகை.
     [You must be registered and logged in to see this image.]
    பசும்பிடி_pasumpidi

     [You must be registered and logged in to see this image.]
    பசும்பிடி_pasumpidi
    [You must be registered and logged in to see this image.]
    பசும்பிடி_pasumpidi

    25.  வகுளம் vakuḷam :
    n. < vakuḷa. Pointed-leaved ape flower. See மகிழ்³. பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா (குறிஞ்சிப். 70).
    மகிழ்³ - n. < makula. Pointed-leaved ape-flower, l. tr., Mimusaps elangi; மரவகை. மகிழ்மாலைமார்பினன் (திவ். திருவாய். 4, 10, 11).
     [You must be registered and logged in to see this image.]
    மகிழம்பூ (வகுளம்) _ Magil (vagulam)

    26.காயா kāyā 
    n. 1. Ironwood tree, s. tr., Memecylon edule; காசாமரம். (திவா.)
     [You must be registered and logged in to see this image.]
    காயா_kaya
    [You must be registered and logged in to see this image.]
    காயா_kaya

    27. ஆவிரை āvirai
    n. Tanner’s senna, 1. sh., Cassia auriculata; செடிவகை. (தொல். எழுத். 283.)
     [You must be registered and logged in to see this image.]
    ஆவிரம்_aviram

    28. வேரல் vēral
    n. perh. வேர்¹. 1. Small bamboo; சிறுமூங்கில். நுண்கோல் வேரல் (மலைபடு. 224).
    சிறுமூங்கில்- Swollen node-ringed semi-solid medium bamboo, Dendrocalamus strictus; மூங்கில்வகை. (L.)
     [You must be registered and logged in to see this image.]
    சிறுமூங்கில் (வேரல்)_sirumoongil (veral)

     [You must be registered and logged in to see this image.]
    சிறுமூங்கில்_sirumoongil

    29. சூரல் cūra
     2. Oblique-leaved jujube. See சூரை. விரிமல ராவிரை வேரல் சூரல் (குறிஞ்சிப். 71)
    சூரை - Oblique-leaved jujube, Zizyphus oenoplia; செடிவகை. கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து (மணி. 6, 81). 
     [You must be registered and logged in to see this image.]
    சூரை_soorai

     [You must be registered and logged in to see this image.]சூரை_soorai

    30. சிறுபூளை ciṟu-pūḷai : 
    A common wayside weed, Aerua lanata; நடைவழியில் முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று (சிலப். 9, 43).
     [You must be registered and logged in to see this image.]
    சிறுபூளைப்பூ _ sirupullai

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 31-40 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:27 pm

    31.  குறுநறுங்கண்ணி kuṟu-naṟu-ṅ-kaṇṇi 
    Crab’s eye. See குன்றி. குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி (குறிஞ்சிப். 72).
    குன்று-. [M. kunni.] 1. Crab’s eye, m. cl., Abrus precatorius; குன் றிச்செடி.
    மணிச்சிகை(flower 9 in the list) also has same meaning , probably they are two variants of the same species.
     [You must be registered and logged in to see this image.]
    குறுநறுங்கண்ணி _ kurunarungkanni
    [You must be registered and logged in to see this image.]
    குறுநறுங்கண்ணி_kurunarungkanni
     
    32. குருகிலை kurukilai
     (flower of)A tree; ஓர் மரம். பெய்ய முழங்கத் தளிர்க்குங் குருகிலை (நான்மணி. 37).
     
    33. மருதம் marutam 
    1. See மருது. கரைசேர் மருதமேறி (ஐங்குறு. 74).
      மருது -1. Arjuna. See நீர்மருது. 2. Black winged myrobalan. See கருமருது. 3. Flowering murdah. See பூமருது.
    Arjuna, 1. tr., Terminalia arjuna; மருதமரவகை. (L.)
     [You must be registered and logged in to see this image.]
    மருதம்_marutam
    [You must be registered and logged in to see this image.]
    மருதம்_marutam 

    34.கோங்கம் kōṅkam : 
    . See கோங் கிலவு. முறியிணர்க் கோங்கம் (ஐங்குறு. 366).
    கோங்கிலவு - n. < id. + இலவு. False tragacanth, m. tr., Cochlospermum gossy- pium; மரவகை. (L.)
     [You must be registered and logged in to see this image.]
    கோங்கம்_Kongam

    35. போங்கம் pōṅkam :
    A variety of red-wood; மஞ்சாடிமர வகை. (குறிஞ்சிப். 74.)
    மஞ்சாடி- n. [T. manḍzādi, K. mañjāḍi.] 1. Red-wood, m. tr., Adenanthera paronina; மரவகை. 
     [You must be registered and logged in to see this image.]
    போங்கம்_pongam

     [You must be registered and logged in to see this image.]
    போங்கம்_pongam

    36. திலகம் tilakam : 
    Barbados pride; மஞ் சாடிமரம். மரவமு நாகமுந் திலகமு மருதமும் (சிலப். 13, 152).
    Barbados pride -Caesalpinia gilliesii 
     [You must be registered and logged in to see this image.]
    திலகம்_thilagam

    37. பாதிரி pātiri
    n. < pāṭali. [T. pādiri, K. pādari.] 1. Yellow-flowered fragrant trumpet- flower tree, 1. tr., Stereospermum chelonoides; பொன்னிறமுள்ள பூவுடைய மரவகை. (L.) பாதி ரிப்பூச் சேர்தலால் புத்தோடு (நாலடி, 139). 
     [You must be registered and logged in to see this image.]
    பாதிரி_Paathiri
    [You must be registered and logged in to see this image.]
    பாதிரி_Paathiri

    38. செருந்தி cerunti
    Panicled golden-blossomed pear tree. See சிலந்தி¹, 1. செருந்தி காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே (தேவா. 40, 9). 
    சிலந்தி² cilanti - , n. < šilīndhra. 1. Panicled golden-blossomed pear tree, s. tr., Ochna squarrosa; மரவகை. 
     [You must be registered and logged in to see this image.]
    செருந்தி (சிலந்தி) -serunthi (cilanti)

    39. அதிரல் atiral 
    n. prob. அதிர்¹-. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சிலப். 13, 156, அரும்.) 
    காட்டுமல்லிகை –   < id. + mallikā. Wild jasmine, m. cl., Jasminum angustifolium; மல்லிகைவகை. 
     [You must be registered and logged in to see this image.]
    அதிரல்_athiral

    40. சண்பகம் caṇpakam 
     n. < campaka. Champak, l. tr., Michelia champaca; மரவகை. மல்லிகை மௌவன் மணங்கமழ் சண்பகம் (பரிபா. 12, 77).
     [You must be registered and logged in to see this image.]
    சண்பகம்_sanbagam

    nandri-karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 41-50 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:31 pm

    41. கரந்தை karantai :
    Fragrant Basil. See திருநீற்றுப்பச்சை. 
    திருநீற்றுப்பச்சை tiru-nīṟṟu-p-paccai –   , n. < id. +. Sweet basil, m. sh., Ocinum basili- cum; செடிவகை.
     [You must be registered and logged in to see this image.]
    கரந்தை_karanthai

    42. குளவி kuḷavi : 
     Wild jasmine. See காட்டுமல்லிகை. கரந்தை குளவி கடிகமழ் கலிமா (குறிஞ்சிப். 76)
    4. Indian cork. See மலைமல்லிகை. கூதளங்கவினிய குளவி (புறநா. 168, 12).
     மலைமல்லிகை -Millingtonia hortensis
    Also known as காட்டுமல்லி kāṭṭu-malli
    This word means two types of
    flowers. Indian cork is locally called as kāṭṭu-mallii , since Atiral
    also means Wild Jasmine , I assume that th poet would have mentioned
    Indian cork here since he has already mentioned atiral in the poem.
    So I go on to give pictures of Indian cork below.
     [You must be registered and logged in to see this image.]
    குளவி(மலைமல்லிகை)_Kulavi (malaimalliagai)

    43.மாமரம் mā-maram (மாம்பூ)
    (flower of )Mango. See மாமரம்.-Mango tree, Mangifera indica; மாமரம்.
     [You must be registered and logged in to see this image.]
    மாம்பூ_maampoo

    44. தில்லை tillai :
    Blinding tree, s. tr., Excoecaria agallocha; மரவகை. தில்லையன்ன புல்லென் சடையோடு (புறநா. 252).
     [You must be registered and logged in to see this image.]
    தில்லை_thillai

    45. பாலை pālai
    Paalai is very broad category. Many flowers may be denoted by Paalai . Please see Paalai disambiguation.
    I am giving the photo for the following meaning ,
    . Blue-dyeing rosebay. See வெட்பாலை, 1. (L.) 14. Woolly dyeing rosebay. See வெட்பாலை,
     [You must be registered and logged in to see this image.]
    பாலை_Paalai

    46. முல்லை mullai
    n. [T. molla, K. molle, M. mulla.] 1. Arabian jasmine, m. sh., Jasminum sambac; கொடிவகை. முல்லை வைந்நுனை தோன்ற (அகநா. 4).
    Mullai can mean lot of Jasmine varitey flowers. Please see the disambiguation page for Mullai.[You must be registered and logged in to see this image.]
    முல்லை_mullai

     47. கஞ்சங்குல்லை kañcaṅ-kullai 
    White-Basil, m. sh., Ocimum album; நாய்த் துளசி.[You must be registered and logged in to see this image.]
    47.கஞ்சங்குல்லை_kancanakullai

    48.பிடவம் piṭavam
    குட்டிப்பிடவம் kuṭṭi-p-piṭavam – , n. < குட் டி¹ +. Bedaly emetic-nut, s. tr., Randia malabarica;
     [You must be registered and logged in to see this image.]
    பிடவம்_pidavam

    49.செங்கருங்காலி ceṅ-karuṅkāli
    n. < id. +. Red catechu, m. tr., Acacia catechu-sundra;

     [You must be registered and logged in to see this image.]
    49.செங்கருங்காலி_Sengkarunkaali

    50. வாழை vāḻai
    n. < id. [K. bāle, M. vāla, Tu. vāre.] Plantain, Musa paradisiaca; மர வகை. கொழுமடற் குமரிவாழை (சீவக. 2716).[You must be registered and logged in to see this image.]
    வாழை_vaazhai

    nandri .karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 51-60 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:34 pm

    51. வள்ளி vaḷḷi

    A plant, Convolvulus batatas; கொடிவகை. (W.)
    [You must be registered and logged in to see this image.]
    51.வள்ளி_valli

    52. நெய்தல் neytal

    1. [K. neydal.] White Indian water-lily, Nymphaea lotus alba; வெள்ளாம்பல். பல் லிதழ் நீலமொடு நெய்த னிகர்க்கும் (ஐங்குறு. 2).
    [You must be registered and logged in to see this image.]
    நெய்தல்_neytal

    53. தாழை tāḻai

    Spathe of the coconut tree; தெங்கம்பாளை. தாழை தளவ முட்டாட் டாமரை (குறிஞ்சிப். 80).

    தெங்கம்பாளை –  n. < id. +. 1. Coconut flower with the integument covering it; தென்னம்பூ உள்ளடங்கிய உறை.
    [You must be registered and logged in to see this image.]
    தாழை_thaazhai

    54. தளவம் taḷavam

    n. prob. id. 1. Golden jasmine. See செம்முல்லை. முல்லையொடு தளவமல ருதிர (ஐங்குறு. 422).

    Golden jasmine, m. sh., Jasminum humile; முல்லைவகை
    [You must be registered and logged in to see this image.]
    தளவம்_thalavam

    55.தாமரை tamarai

    n. < tāmarasa. 1. Lotus, Nelumbium speciosum; கொடிவகை. தாமரைக் கண்ணா னுலகு (குறள், 1103).
    [You must be registered and logged in to see this image.]
    தாமரை_thaamarai

    56. ஞாழல் ñāḻal :

    1. Orange cup-calyxed brasiletto-climber wagaty. See புலிநகக்கொன்றை. குவியிணர் ஞாழல் (பதிற்றுப். 51, 5).

    புலிநகக்கொன்றை puli-naka-k-koṉṟai, n. < id. +. Fetid cassia, m. sh., Cassea sophera; புலிநகம்போன்ற பூக்களையுடைய கொன்றைவகை. (யாழ். அக.)
    [You must be registered and logged in to see this image.]
    ஞாழல்_nyaazhal

    57. மௌவல் mauval

    n. 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81).
    one more wild jasmine variety (already two varieties Atiral and Kuzhal have been mentioned) .

    I am going on to give same image I have used for Atrial – but it
    can be assured Atiral and Mauval are two varieties of wild jasmine.

    [You must be registered and logged in to see this image.]
    மௌவல் - mauval

    58.  கொகுடி kokuṭi

    n. A variety of jasmine creeper; முல்லைக்கொடிவகை. குவிமுகையன கொகுடி (சூளா. தூது. 4).
    One more jasmine variety. I am not able to get scientific name.
    Hence I am not posting a photo. Wondering how many jasmine varieties
    were there.

    59.  சேடல் cēṭal

    Night-flowering jasmine. See பவளமல்லிகை. (குறிஞ்சிப். 82.)

    பவளமல்லிகை - Night-flowering jasmine, s. tr., Nyctanthes arbor-tristis

    [You must be registered and logged in to see this image.]
    சேடல்_Sedal

    60. செம்மல் cemmal

    Large-flowered jasmine. See சாதிப்பூ. (குறிஞ்சிப். 82.)

    சாதிப்பூ - Flower of Jasminum grandiflorum; முல்லைப்பூ வகை.
    [You must be registered and logged in to see this image.]
    செம்மல்_semmal

    nandri.karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 61-70 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:36 pm

    61.சிறுசெங்குரலி ciṟu-ceṅ-kurali

    A mountain creeper; கருந்தாமக்கொடி. சேடல் செம்மல் சிறுசெங்குரலி (குறிஞ்சிப். 82).
    62.கோடல் kōṭal

    கோடை³. White species of Malabar glory-lily. See வெண் காந்தள். கோடன் முகையோடு (பு. வெ. 8, 16).

    வெண்காந்தள் veṇ-kāntaḷ

    n. < வெண்- மை +. White species of Malabar glory lily, m. cl., Gloriosa superba; செடிவகை. (புறநா. 90, உரை.)
    I am just posting image of   Gloriosa superba – which i found to be close to white colour – Unable to get sceintific name of this variety.

    [You must be registered and logged in to see this image.]

    63. கைதை kaitai

    n. < kaitaka. [M. kaidā.] Fragrant screw-pine. See தாழை.

    n. < தாழ்¹-. 1. [K. tāḻe.] Fragrant screw-pine, l. sh., Pandanus odoratissimus; செடிவகை.

    [You must be registered and logged in to see this image.]
    தாழம்பூ(கைதை)_ thazhampoo(kaithai)

    64. வழை vaḻai

    n. perh. வழுவு-. 1. Long-leaved two-sepalled gamboge. See சுரபுன்னை.

    சுரபுன்னை cura-puṉṉai

    n. < id. +. Long-leaved two-sepalled gamboge, m. tr., Ochrocarpus longifolius; புன்னைவகை. கரையன சுரபுன் னையும் (பரிபா. 11, 17).
    [You must be registered and logged in to see this image.]
    வழை_vazhai

    .

    65. காஞ்சி kāñci

    n. 1. River portia. See ஆற்றுப்பூவரசு. குறுங்காற் காஞ்சிக்கொம்பர் (சிறுபாண். 179).

    ஆற்றுப்பூவரசு āṟṟu-p-pūvaracu

    n. < id. +. River Portia, m. tr., Trewia nudiflora; மரவகை. (மூ. அ.)
    [You must be registered and logged in to see this image.]
    காஞ்சி_Kaanji

    .

    66. கருங்குவளை karu-ṅ-kuvaḷai – கருங்குவளை (மணிக் குலை)

    n. < id. +. 1. Blue Nelumbo, Pontederia monochoria- vaginalis; குவளைவகை.

    [You must be registered and logged in to see this image.]
    கருங்குவளை(மணிக்குலை) _ karungkuvalai(manikkulai)

    67. பாங்கர் pāṅkar

    n. Tooth brush tree. See உகா, 1. (குறிஞ்சிப். 85.)

    உகா ukā

    n. 1. Tooth-brush tree, s. tr., Salvadora persica; ஓமை. (பிங்.) 2. [M. uha- maram.] Sandpaper-tree, l. tr., Dillenia indica; உவாமரம். (மலை.)
    [You must be registered and logged in to see this image.]
    பாங்கர்_pangar

    .

    68. மரவம் maravam

    2. Seaside Indian oak; வெண்கடம்பு. மரவம் பூப்ப (ஐங்குறு. 357).

    வெண்கடம்பு veṇ-kaṭampu

    n. < வெண்- மை +. Seaside Indian oak, l. tr., Barringtonia racemosa; மரவகை. வெண்கடம்பு பந்தணிந் தவே (சீவக. 1650)
    [You must be registered and logged in to see this image.]
    மரவம்_maravam

    [You must be registered and logged in to see this image.]
    மரவம்_maravam

    69. தணக்கம் taṇakkam

    n. < தணக்கு. See தணக்கு, 1. பல்பூந் தணக்கம் (குறிஞ்சிப். 85).

    தணக்கு taṇakku

    n. 1. Small ach root, s. cl., Morinda umbellata; நுணா என்னுங் கொடி.
    [You must be registered and logged in to see this image.]
    தணக்கம்_thanakkam

    [You must be registered and logged in to see this image.]
    தணக்கம்_thanakkam

    .

    70. ஈங்கை īṅkai

    n. cf. ஈங்கு². 1. Species of sensitive-tree, l. sh., Mimosa rubicaulis; இண் டஞ்செடி. ஈங்கைப் பைம்புத லணியும் (ஐங்குறு. 456).
    [You must be registered and logged in to see this image.]

    ……nandri-karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 71-80 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:39 pm

    71. இலவம் ilavam

    n. < இலவு. [M. ilavam.] 1. See இலவு.

    இலவு¹ ilavu

    n. Red-flowered silk-cotton tree, 1. tr., Bombax malabaricum; மரவகை.
    [You must be registered and logged in to see this image.]
    இலவம்_ilavam

    72. கொன்றை koṉṟai 

    n. 1. Indian laburnum. See சரக்கொன்றை. பொலனணி கொன்றையும் (ஐங் குறு. 435).

    சரக்கொன்றை

    n. < sara +. Indian laburnum, m. tr., Cassia fistula; சரஞ்சரமாகப் பூக்கும் கொன்றைவகை. (பதார்த்த. 204.)
    [You must be registered and logged in to see this image.]
    கொன்றை_kondrai

    .

    73. அடும்பு aṭumpu

    n. [K. Tu. aḍumbu, M. aṭumbu.] Hare leaf. See அடம்பு. அடும்பிவ ரணியெக்கர் (கலித். 132).

    அடம்பு aṭampu, n. [M. aṭampu.] Hare-leaf, m. cl., I pomaea biloba;L.)

    [You must be registered and logged in to see this image.]
    அடுப்பம்_aduppam

    ஆத்தி³ ātti, n. 1. Common mountain ebony, s.tr., Bauhinia racemosa; மரவகை.
    [You must be registered and logged in to see this image.]
    ஆத்தி_aathi

    75.  அவரை avarai

    n. [K. M. Tu. avara.] Field-bean, cl., Dolichos lablab; கொடிவகை. (மலைபடு. 110.)
    [You must be registered and logged in to see this image.]
    அவரை_avarai

    76. பகன்றை pakaṉṟai

    2. Indian jalap. See சிவதை. பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி (குறிஞ்சிப். 88). (பிங்.)

    சிவதை civatai, n. perh. švētā. Indian jalap, l. cl., Ipomaea turpethum; கொடிவகை.

    [You must be registered and logged in to see this image.]
    76.பகன்றை_pagandrai

    77. பலாசம் palācam

    4. Palas-tree, m. tr., Butea frondosa; புரசமரம். (பிங்.) (குறிஞ்சிப். 88.)

    Butea frondosa

    [You must be registered and logged in to see this image.]
    பலாசம்_palasam

    78. பிண்டி piṇṭi

    n. < piṇḍipuṣpa. Asoka tree. See அசோகு. (பிங்.)

    அசோகு acōku , n. < id. 1. Ašōka tree, m. tr., Saraca indica; பிண்டி. பூமலி யசோகின் புனைநிழல் (நன். 56).
    [You must be registered and logged in to see this image.]
    பிண்டி_pindi

    79. வஞ்சி vañci

    2. Glabrous mahua of the Malabar coast. See ஆற்றிலுப்பை.

    ஆற்றிலுப்பை āṟṟiluppai

    n. < ஆறு¹ + இலுப்பை. Glabrous mahua of the Malabar coast. m. tr., Bassia malabarica; மரவகை. (L.)

    [You must be registered and logged in to see this image.]
    வஞ்சி_vanchi

    80.  பித்திகம் pittikam

    n. cf. id. 1. See பித் திகை, 3. (குறிஞ்சிப். 89.)

    3. Large flowered jasmine. See சாதிமல்லிகை

    பிச்சி¹ picci , n. cf. பித்திகை. 1. Large-flowered jasmine. See சாதிமல்லிகை.

    [You must be registered and logged in to see this image.]
    பிச்சி(பித்திகம்) _ picchi (piththigam)
    nandri-karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 81-90 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:52 pm

    81. சிந்துவாரம் cintuvāram

    2. Three-leaved chaste-tree. See கருநொச்சி. வஞ்சி பித்திகஞ் சிந்துவாரம் (குறிஞ்சிப். 89).

    [M. karunocci.] Three-leaved Chaste tree, s. tr., Vitex trifolia; செடிவிசேடம்.
    [You must be registered and logged in to see this image.]
    சிந்துவாரம்_cintuvāram

    82. தும்பை tumpai

    தும்பை¹ tumpai , n. [T. tumma, K. tumbe.] 1. White dead nettle, Leucas; செடி வகை. (பதார்த்த. 557.) 2. Bitter toombay, a common weed, Leucas aspera; செடிவகை.
    [You must be registered and logged in to see this image.]
    தும்பை_tumpai

    83. துழாய் tuḻāy

    n. cf. tulasī. Sacred basil. See துளசி. கமழ்குரற் றுழாஅ யலங்கற் செல்வன் (பதிற்றுப். 31, Cool.

    துளசி tuḷaci , n. < tulasī. 1. Sacred basil, m. sh., Ocimum sanctum; திருத்துழாய்.
    [You must be registered and logged in to see this image.]
    துழாய்_tuzhai

    84. தோன்றி tōṉṟi

    தோன்றி tōṉṟi , n. < id. 1. Malabar glory lily. See செங்காந்தள். கொய்ம்மலர தோன்றி போற் சூட்டுடைய சேவலும் (சீவக. 73). 2. The white species of Gloriosa superba; வெண் காந்தள். (பிங்.)
    [You must be registered and logged in to see this image.]
    தோன்றி_thondri

    85. நந்தி nanti

    See நந்தியாவட்டம். நந்தி நறவ நறும்புன்னாகம் (குறிஞ்சிப். 91)

    நந்தியாவட்டம் nantiyāvaṭṭam, n. < nandyāvarta. East Indian rosebay, 1. sh., Tabernaemontana coronaria; செடிவகை. அலர்ந்த காலை நந்தியாவட்ட நாறு நகைமுடி யரசனாயின் (சீவக. 1287).
    [You must be registered and logged in to see this image.]
    நந்தி_nanti

    86.  நறவம் naṟavam

    A creeper. See நறை, 6. நந்தி நறவம் நறும்புன் னாகம் (குறிஞ்சிப். 91)

    நறை naṟai

    A fragrant creeper; வாசனைக்கொடிவகை. நறை நார்த்தொடுத்த வேங்கையங்கண்ணி (புறநா. 168).
    87. புன்னாகம் puṉṉākam

    n. < punnāga. 1. See புன்னை. (பிங்.) (பரிபா. 11, 16.)

    2. Kamela. See குரங்குமஞ்சணாறி

    n. < id. +. Kamela, s. tr., Mallotus philippinensis; ஒருவகைச் சிறுமரம். (L.)

    Since Punnai is already mentioned by Kapilar I assume the second meaning (Kamela) is the flower he mentioned in the poem.
    [You must be registered and logged in to see this image.]
    புன்னாகம்_punnaakam

    88. பாரம் pāram

    2. Indian cotton plant. See பருத்தி. பாரம் பீரம் பைங்குருக் கத்தி (குறிஞ்சிப். 92).

    பருத்தி parutti, n. prob. பரு-. [K. parti, M. parutti.] 1. Indian cotton-plant, m. sh., Gossypium herbaceum; பஞ்சு உண்டாகுஞ் செடிவகை. 2. Cotton; பஞ்சு. பருத்தி நூற்கிறான். Loc.
    [You must be registered and logged in to see this image.]
    பாரம்_pāram

    [You must be registered and logged in to see this image.]
    பாரம்_pāram

    89. பீரம் pīram

    பீரம்¹ pīram , n. < பீர்¹. 1. Sponge-gourd. See பீர்க்கு. பொன்போற் பீரமொடு (நெடுநல். 14).

    பீர்க்கு pīrkku, n. [T. bīrakāya.] Sponge gourd, strainer-vine, s. cl., Luffa acutangula; கொடிவகை. (திவா.)
    [You must be registered and logged in to see this image.]
    பீரம்_pīram

    [You must be registered and logged in to see this image.]
    பீரம்_pīram

    90. குருக்கத்தி kurukkatti ,

    n. Common delight of the woods, m. cl., Hiptage madablota; மாதவிக்கொடி. குடந்தைக் கிடந்த கோவே குருக் கத்திப்பூச் சூட்டவாராய் (திவ். பெரியாழ். 2, 7, 7).

    [You must be registered and logged in to see this image.]
    குருக்கத்தி_kurukkatti
    nandri -karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty 91-99 பூக்கள்

    Post by தோழன் Sun 02 Jan 2011, 9:55 pm

    91.  ஆரம் āram

    ஆரம்¹ āram , n. cf. ஆர்¹-. 1. Sandal-wood tree; சந்தனமரம். (பெரியபு. தடுத்தாட். 94.)

    Sandalwood tree, s. tr., Santalum album;
    [You must be registered and logged in to see this image.]
    ஆரம்_āram

    [You must be registered and logged in to see this image.]
    ஆரம்_āram

    92. காழ்வை kāḻvai , n. < காழ்². Tiger’s-milk. See அகில். ஆரங் காழ்வை கடியிரும் புன்னை (குறிஞ் சிப். 93). (M.M. 892.)

    அகில் akil , n. < agaru. [M. akil, Heb. ahalim, Gr. agallochon.] 1. Eagle-wood, 1. tr., Aquilaria agallocha;tūpa-varkkam, q.v.; தூபவர்க்கங்களூ ளொன்று. (சீவக. 534).
    [You must be registered and logged in to see this image.]
    91.அகில்_ahil

    [You must be registered and logged in to see this image.]
    அகில்_ahil

    93. புன்னை puṉṉai , 

    n. < punnāga. Mast-wood, m. tr., Calophyllum inophyllum; மர வகை. புன்னை வாலிணர்ப் படுசினை (பதிற்றுப். 30, 3).

              [You must be registered and logged in to see this image.]
    புன்னை_punnai

    94.  நரந்தம் narantam

    நரந்தம்² narantam, n. < nāraṅga. Bitter orange. See நாரத்தை. நரந்தமு நாகமும் பரந் தலர் புன்னையும் (மணி. 3, 162).

    நாரத்தை nārattai , n. cf. nāraṅga. 1. Orange, Citrus aurantium; மரவகை. (பதார்த்த. 746.) 2. Seville orange. See கடாரநாரத்தை. 3. Loose-skinned orange, s.tr., Citrus Aurantium- nobilis; கொழிஞ்சிவகை.

    நரந்தம் Narandam   ->  Citrus aurantium L.

    [You must be registered and logged in to see this image.]
    நரந்தம்_narantam

    [You must be registered and logged in to see this image.]
    நரந்தம்_narantam

    95. நாகப்பூ nāka-p-pū ,

     n. perh. id. +. Iron wood of Ceylon. See சிறுநாகப்பூ. (L.)

     சிறுநாகப்பூ. - Ironwood of Ceylon, 1. tr., Mesua ferrea;

    [You must be registered and logged in to see this image.]
    நாகப்பூ_naagappoo

    96.  நள்ளிருணாறி naḷḷiruṇāṟi :

    n. Tuscan jasmine; இருவாட்சி. (தமிழ்விடு. முகவுரை, பக். 4.)
    Jasminum sambacflore- manoraepleno

    jasminum sambac var. ‘Grand Duke Of Tuscany’

    [You must be registered and logged in to see this image.]
    95.நள்ளிருணாறி_naḷḷiruṇāṟi

    97.  குருந்தம் kuruntam

    n. prob. kunda. See குருந்து². குருந்தமொன் றொசித்தானொடுஞ்சென்று (திவ். பெரியாழ். 4, 4, 7).

    குருந்து² kuruntu , n. prob. kunda. 1. Wild lime, Atalantia; புனவெலுமிச்சை. (பிங்.)

    [You must be registered and logged in to see this image.]
    குருந்தம்_kuruntam

    98.  வேங்கை vēṅkai

    2. East Indian kino tree, l. tr., Pterocarpus marsupium; நீண்ட மரவகை. சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180).
    [You must be registered and logged in to see this image.]
    வேங்கை_venkai

    [You must be registered and logged in to see this image.]
    வேங்கை_venkai

    99.  புழகு puḻaku

    2. Palas tree; புனமுருங்கை. (குறிஞ்சிப். 96, உரை.)

    புனமுருங்கை

    புரசு² puracu , n. 1. East Indian satin-wood, m. tr., Chloroxylon swietenia; மரவகை.
    [You must be registered and logged in to see this image.]
    புழகு_puzhaku
    nandri -karkanirka.wordpress

    தோழன்
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 421
    Points : 899
    Reputation : 4
    Join date : 27/10/2010

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty Re: குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள் படங்களுடன்

    Post by Dr.S.Soundarapandian Wed 23 Apr 2014, 3:22 pm

    Exclamation Exclamation Exclamation Exclamation
    Dr.S.Soundarapandian
    Dr.S.Soundarapandian
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 55
    Points : 83
    Reputation : 0
    Join date : 12/03/2013
    Age : 74
    Location : Chennai - 33

    http://ssoundarapandian.blogspot.in

    Back to top Go down

    குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள்  படங்களுடன்  Empty Re: குறிஞ்சிப்பாட்டில் உள்ள 99 பூக்கள் படங்களுடன்

    Post by Sponsored content

    Sponsored content

    Back to top Go down

    Back to top

    - Similar topics
    » மூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )
    » மூலிகையில் இதய அடைப்பு -முழுமையாக நீங்கிட (படங்களுடன் )
    » சதை அமைப்பு தெரிந்து மூட்டு வலிக்கு சூப்பர் மசாஜ் -படங்களுடன்
    » சரகர் சொன்ன ஆஸ்துமாவிற்கான பத்து சூப்பர் மூலிகைகள் -படங்களுடன்
    » கல்லை கரைக்கும் மூலிகைகள் (விரைவாக -மூன்றே நாளில் )-படங்களுடன்

    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum