ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்)

  Go down

  வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்) Empty வேளாண்மையில் ஒர் அணுகுண்டு ஒப்பந்தம் (இந்திய - அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம்)

  Post by மருத்துவன் Sun 20 Feb 2011, 5:59 pm

  சுதந்திர இந்தியாவின் வயது 60-ஐ தாண்டியுள்ளது.
  இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 57 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
  சுதந்திரம் மற்றும் குடியரசு தினங்களில் கொடியேற்றி உரையாற்றும்
  தேசத்தலைவர்கள் வறுமையை ஒழிக்க உறுதி ஏற்கின்றனர்.

  தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பலதுறைகளில் இந்தியா பல மடங்கு முன்னேறியுள்ளதாக கூற/நம்பப் படுகிறது.

  இத்தகைய
  பெருமை வாய்ந்த இந்தியாவில்தான், அரை மணிக்கு நேரத்திற்கு ஒரு விவசாயி
  தற்கொலை செய்துக் கொள்ளும் அவல நிலை நிலவுகிறது. மத்திய அரசு அமைப்பான
  தேசிய குற்றத்தகவல் ஆவண மையம் (National Crime Record Bureau) அளிக்கும்
  தகவலின்படி கடந்த 1997 முதல் 2006ம் ஆண்டு வரையான 10 ஆண்டுகளில் 1 லட்சத்து
  66 ஆயிரத்து 304 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அரசுத்துறை
  புள்ளி விவரம் அளிக்கும் தகவல் இது என்றால் உண்மையான புள்ளிவிவரத்தை நாமே
  அனுமானித்துக்கொள்ள வேண்டியதுதான்.

  இந்த நிலையில்தான் புதிய ஒரு அணு குண்டாக, [You must be registered and logged in to see this link.]அறிமுகம் ஆகியுள்ளது.

  இந்திய
  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் புஷ்-உடன் கூட்டாக கடந்த
  2005 ஆம் ஆண்டு இந்தியா அமெரிக்கா இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்களுக்கான
  கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
  [You must be registered and logged in to see this image.]
  அவற்றில்
  இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மட்டுமே இடதுசாரிகள் உள்பட பல
  அரசியல் கட்சிகளும், செய்தி ஊடகங்களும் எதிர்த்தும், ஆதரித்தும் பேசி
  வந்தன.

  ஆனால் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு சற்றும் குறையாமல் நாட்டின்
  உணவு இறையாண்மையையும், பல கோடி விவசாயிகளின் வாழ்வையும் கேள்விக்குறி
  ஆக்கியிருக்கும் “இந்திய -அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்த”த்தை,
  பற்றி யாரும் சிறு மூச்சுகூட விட்டபாடில்லை.

  “இந்திய-அமெரிக்க
  வேளாண்மைக் கல்வி, ஆராய்ச்சி, சேவை மற்றும் வணிகதொடர்பிற்கான அறிவு
  முனைப்பு” (INDIA-UNITED STATES KNOWLEDGE INITIATIVE ON AGRICULTURAL
  EDUCATION, RESEARCH, SERVICE, AND COMMERCIAL LINKAGES) என்கிற இந்த
  ஒப்பந்தம் முதலாம் “பசுமைப் புரட்சியின்” (GREEN REVOLUTION) வெற்றியை(!?)
  தொடர்ந்து “என்றென்றும்-பசுமைப் புரட்சியை” (EVERGREEN-REVOLUTION)
  ஏற்படுத்துவதற்காக வரையப்பட்டுள்ளது.

  ஆனால் பழைய பசுமைப் புரட்சி
  போல முற்றிலும் அரசே ஏற்று நடத்தாமல், இந்தப்புதிய “என்றென்றும்-பசுமைப்
  புரட்சி”யானது தனியாருக்கும் இடம் கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  அவ்வகையில் வால்-மார்ட் (WAL-MART), மான்சான்டோ (MON SANTO) போன்ற அமெரிக்க
  பன்னாட்டு நிறுவனங்கள் முதல், நம்நாட்டு ரிலையன்ஸ் (RELIANCE) நிறுவனம்
  வரை இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன.

  விவசாயத்தோடு மட்டும்
  நில்லாமல் மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு போன்றவற்றிலும் தொடரும் இந்த
  ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகளாக இரண்டு அம்சங்களைக் கூறலாம்: ·
  மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் (GENETIC ENGINEERING) பயன்பாட்டை விவசாயம்,
  மீன் வளர்ப்பு, கால் நடை வளர்ப்பு போன்ற துறைகளில் அதிகப்படுத்துதல்

  · வேளாண்மையில் அறிவுசார் சொத்துரிமையை அதிகப்படுத்துததல்.

  விதையற்ற பழங்கள், குஞ்சு பொரிக்காத முட்டைகள், மலட்டு விதைகள் மற்றும் விஷமாக பூக்கும் பருத்தி
  என பல சாதனைகள்(?!) படைத்திருக்கும் மரபணுமாற்று தொழில்நுட்பத்தை மையமாக
  கொண்டு இந்த ஒப்பந்தம் தீட்டப்பட்டுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள்,
  பட்டினிச் சாவுகள் போன்றவற்றை மரபணுமாற்று தொழில்நுட்பத்தினால்
  தடுத்துவிடலாம் எனவும் இவ்வொப்பந்தம் மறைமுகமாக நமக்கு ஆசை காட்டுகிறது.

  இயற்கைவளங்களை கொள்ளைபோக அனுமதித்தல்

  உலகில்
  வேறு எங்கும் காண முடியாத அரிய குணங்கள் படைத்த பல கோடி தாவரங்கள்,
  மூலிகைகள், உயிரினங்கள் இந்தியாவில் உள்ளன. நம்முடைய மூதாதையர்கள்
  இக்குணங்களை கண்டறிந்து காலகாலமாக பலவிதங்களில் பயன்படுத்தி வந்து
  உள்ளனர்..
  [You must be registered and logged in to see this image.]
  இதுபோன்ற
  இயற்கைவளங்கள் “முதலாம் பசுமைப் புரட்சி” காலகட்டங்களில் அமெரிக்காவால்
  திட்டமிட்டு கொள்ளை அடிக்கப்பட்டன. ஆராய்ச்சி என்ற பெயரில் இந்தியாவின்
  பாரம்பரிய தாவர வளங்களை எடுத்துச்சென்ற அமெரிக்கா, பின்னர் மஞ்சள், வேம்பு,
  புளி, பாசுமதி போன்றவற்றுக்கு காப்புரிமை கோரியதை இதற்கு சான்றாக கூறலாம்.

  மூன்றாம்
  உலக நாடுகளிருந்து இயற்கைவளங்கள் கொள்ளை போவதை தடுப்பதற்கும்,
  இயற்கைவளங்கள் மீதான ஆராய்ச்சிகளை முறைப்படுத்தவும் 1992 ஆம் ஆண்டு ஐக்கிய
  நாடுகள் அவை (UNITED NATIONS) தலைமையில் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஒரு
  நாட்டின் இயற்கைவளங்களை மற்றொரு நாடு ஆராய்கின்ற போது கடைப்பிடிக்க வேண்டிய
  வழிமுறைகளை உள்ளடங்கிய பல்உயிரின ஒப்பந்தம் (CONVENTION FOR BIODIVERSITY)
  ஒன்று அந்த மாநாட்டில் வரையறுக்கப்பட்டது.

  இன்று வரை இந்த
  ஒப்பந்தத்தை ஏற்காத அமெரிக்காவிடமிருந்து, இந்தியா எப்படி தன்னுடைய வளங்களை
  காக்க போகிறது என்பதை காலம்தான் கூற வேண்டும்.

  பல்உயிரின
  ஒப்பந்தத்தின் அடிப்படையில் நம் நாட்டின் இயற்கை வளங்களையும்
  மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களையும் (TRADITIONAL KNOWLEDGE)
  பாதுகாத்திட, உயிரினவகை வேறுபாட்டு சட்டம் (BIOLOGICAL DIVERSITY ACT,2002)
  இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் சிறப்பம்சங்களாக இரண்டினை கூறலாம்:

  · நம்நாட்டு இயற்கைவளங்களுக்கு அறிவுசார் சொத்துரிமை வழங்குவதை முழுவதுமாக தடைசெய்வது.
  ·
  நம் மூதாதையர்களின் அறிவுச்செல்வங்களை ஆராய நினைப்பவர்கள் இந்த சட்டத்தின்
  கீழ் அமைந்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற வேண்டும். இப்படி அனுமதி பெற்று
  ஆராய்ந்து கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் மூலம் பெறப்படும் லாபத்தில்
  குறிப்பட்ட பகுதியை இந்த செல்வங்களை இதுநாள் வரை பாதுகாத்து வந்த மக்களிடம்
  பகிர்ந்துகொள்ள வேண்டும் (BENEFIT SHARING).

  மறைமுகமாக இந்த சட்டம்
  நம் இயற்கைவளங்கள் கொள்ளை போவதை அனுமதித்தாலும் குறைந்தபட்சம் மக்களுக்கு
  இழப்பீடு என்ற கருத்தையாவது ஏற்றுக்கொண்டுள்ளது. இவ்விரு முக்கிய
  அம்சங்களையும் கண்டுகொள்ளாத இந்திய-அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தம்
  குறைந்தபட்ச இழப்பீடு கூட மக்களுக்கு கொடுக்க மறுக்கிறது.

  இந்திய
  அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் முக்கிய பகுதியாக இரு நாடுகளை சார்ந்த
  பல்வேறு பல்கலைக்கழகங்கள் கூட்டாக சேர்ந்து இயற்கைவளங்களின் உயிரியல்
  மரபணு(GENE)வை ஆராய போகின்றன. அமெரிக்காவின் இயற்கை வளங்களை இந்தியப்
  பல்கலைக்கழகங்கள் ஆராய்வதற்கான வழிகள் எதுவும் ஒப்பந்தத்தில் இல்லாத
  நிலையில் இந்தியாவின் இயற்கைவளங்களே ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படும் என்பதை
  கூறத் தேவையில்லை.

  இந்த ஆராய்ச்சி செய்கின்ற போது கடைபிடிக்க
  வேண்டிய வழிமுறைகளை கொண்ட பல்உயிரின ஒப்பந்தத்தைப் பற்றி ஒரு வரி கூட
  இந்திய அமெரிக்க வேளாண்மை ஒப்பந்தத்தில் இல்லை.

  இப்படி நம்நாட்டு
  சட்டங்கள் மற்றும் பன்னாட்டு ஒப்பந்தகளுக்கு எதிராக இயற்கை வளங்களை எளிதில்
  ஆராய்ச்சி செய்ய அனுமதி அளிப்பதன் மூலம் காலம்காலமாக இவற்றை பாதுகாத்து
  வரும் நம் மக்களிடமிருந்து இவற்றை அமெரிக்கா கொள்ளையடிக்க இந்த ஒப்பந்தம்
  துணைபோகிறது. அது மட்டுமல்லாமல் இப்படி ஆராய்ந்து(!?) கண்டுபிடிக்கப்படும்
  பொருட்களுக்கு காப்புரிமை வழங்குவதன் மூலம் தற்போது பொதுச்சொத்தாக உள்ள
  இயற்கை வளங்களை, அமெரிக்க மற்றும் பன்னாட்டு தனியார் நிறுவனங்களின்
  தனிச்சொத்தாக மாற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதியளிக்கிறது.

  நிறுவனமயமாகும் வேளாண்மை

  இந்திய-அமெரிக்க
  வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் வேளாண்மை துறையை வணிகமயமாக்க,
  அறிவுசார் சொத்துரிமையின் தேவையை முன்வைக்கிறது. குறிப்பாக வேளாண்மை
  துறையில் காப்புரிமையின் அவசியத்தை கட்டாயமாக்குகிறது.

  இது குறித்த விவரங்களை, “மாறும் சட்டங்களும் விவசாயிகளின் பறிபோகும் உரிமைகளும்” பகுதி ஆகிய பதிவுகளில் தெரிந்து கொள்ளலாம்.

  இந்திய-அமெரிக்க
  வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் நம் நாட்டு வேளாண்மை விஞ்ஞானிகளுக்கு
  அமெரிக்கா மரபணுமாற்று தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயம் செய்ய
  மட்டுமல்ல; எப்படி காப்புரிமை பெறுவது என்பதையும் கற்றுக் கொடுக்க போகிறது.
  காப்புரிமை பெறுவது மட்டுமல்ல அதனை பன்னாட்டு மற்றும் இந்நாட்டு
  நிறுவனங்களிடம் எப்படி விற்பது என்பதையும் கற்றுக் கொடுக்கப்போகிறது.


  இதற்காக
  அமெரிக்காவில் மட்டுமல்லாமல், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மையம்(INDIAN
  COUNCIL FOR AGRICULTURAL RESEARCH)கூட அறிவு சொத்துரிமைக்கான மேலாண்மை
  (INTELLECTUAL PROPERTY MANAGEMENT) என்ற சிறப்புப் பிரிவை
  ஏற்படுத்தியுள்ளது. மேலும் காப்புரிமை உள்ளிட்ட அறிவு சொத்துரிமைச்
  சட்டங்கள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்க இந்தியா அமெரிக்கா இடையே ஒரு
  தனி ஒப்பந்தமும் (MEMORANDUM OF UNDERSTANDING) 2006 ஆம் ஆண்டு கையெழுத்து
  ஆகியுள்ளது.

  ஆக, இந்திய விஞ்ஞானிகள், நம்நாட்டு விதைகளை எடுத்து
  அதன் மூலக்கூறுகளை ஆராய்ந்து புதிய பொருட்களை கண்டறிந்து, அதற்கு
  காப்புரிமை பெற்று அமெரிக்க நிறுவனங்களிடம் விற்பதற்கான இந்த
  ஒப்பந்தத்திற்கு, நம் நாட்டு மக்களிடம் பெற்ற வரிப்பணம் சுமார் 650 கோடி
  ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முற்றிலும் தகுதி- திறமையின் அடிப்படையில்
  பயின்ற இந்த விஞ்ஞானிகளின் தேசப்பற்றை நிச்சயம் நாம் இந்த இடத்தில்
  நன்றியோடு நினைக்க வேண்டும்.


  முடிவுரை

  இந்த
  ஒப்பந்தம், வேளாண்மை நிறுவனமயமாவதற்கு மட்டுமே உதவும். மரபணுமாற்று
  பயிர்களை பெரு நிறுவனங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் பயிரிட்டு
  ரிலையன்ஸ் பிரஷ், வால்-மார்ட் போன்ற விற்பனை கூடங்களுக்கு விற்பனைக்கு
  வைக்கபோகின்றன. பல மாதங்கள் ஆனாலும் கெடாமல் இருக்க செயற்கையாக
  நிறமூட்டப்பட்ட இந்த காய்கறிகளைத்தான் இனி நாம் உண்ணப்போகிறோம். இந்த
  விவசாய சிறப்பு பொருளாதார மண்டலங்களின் விவசாயம் செய்ய புதிய வகை விவசாய
  கூலிகளையும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தபோகிறது.

  காப்புரிமை பெற்ற
  இப்பயிர்களை விவசாயிகள் அதிக விலைகொடுத்து பயிர் செய்யவேண்டும், மேலும்
  மலட்டுதன்மை மிக்க இந்த பயிர்கள் மீது விவசாயிகளுக்கு எந்த உரிமையும்
  இருக்க போவதில்லை. ஆக உணவு உற்பத்திக்கே நாம் இனி நிறுவனங்களை தான்
  நம்பியிருக்க வேண்டும்.

  இத்தகைய புரட்சிகரமான இந்திய-அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தத்தின் இந்திய அரசுத்தரப்பு கவுரவ ஆலோசகர் (Honorary Adviser) எம். எஸ் சுவாமிநாதனுக்கும் ஒரு சிறப்பு நன்றியை கூறிக்கொள்வோம்.


  -மு. வெற்றிச்செல்வன்
  ([You must be registered and logged in to see this link.])
  நன்றி -[You must be registered and logged in to see this link.]

  மருத்துவன்
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 110
  Points : 280
  Reputation : 2
  Join date : 06/12/2010

  Back to top Go down

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum