ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம்

    3 posters

    Go down

    மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம் Empty மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம்

    Post by THAMIZHAVEL Mon 18 Apr 2011, 7:52 pm

    மண்டைச்
    சளி – மார்புச் சளி நீங்க....



    நமது
    உடலின் அதிக சூட்டை சமாளிக்கவும் தேவையற்ற – நச்சுப் பொருட்களைத் தடுக்கவும் உடல்
    தனது தேவைக்காக உருவாக்கிக் கொள்வதே சளி எனும் நீர் மூலகத் திரட்சி.



    இது
    இயல்பாக முறையாக வெளியேறும் போது நன்மையானதே. நமது அறியாமையால் பழக்கவழக்கங்களும்,
    வாழ்க்கை முறையும் உடல் இயற்கைக்கு எதிராகும் போது; இந்த சளி அளவு அதிகமாவதாலும்,
    இயல்பாக வெளியேற்றும் வழிகள் தடுக்கப்படுவதால் சளி கட்டிபட்டு - உடல் அதை
    வெளியேற்ற கடும் முயற்சிகள் எடுக்க வேண்டியதாகிறது.



    கட்டிபட்டுப்போன
    சளியை - வெளியேற்றும் முயற்சியின் விளைவே, இருமல், தும்மல், ஈளை, இளைப்பு என
    பலவாறான துன்பத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.



    நீங்கள்
    பார்க்கலாம் வீட்டுச் சுவற்றில் ஒட்டிய சளித் திவலையை அடுத்த நாள் பார்த்தால்,
    அந்த இடத்தில் பளபளப்பாகத் தெரியும். கையை வைத்து தடவிப் பார்த்தாலும் ஒன்றும்
    தெரியாது ஆனால் சிறிது நீர் பட்டால் அது உப்பிப் பெரிதாகி இருப்பதைக் காணலாம். இது
    போன்ற நிலைதான் சளியால் பாதிக்கப்பட்ட உடல் கருவிகளுக்கும். உடல் சூடு
    அதிகரிக்கும் போது உடலுடன் ஒட்டி பின் உடல் தன்னிலை அடைந்து வெளியேற்றும் ஆற்றல்
    சீராக்கப் பெறும் போது சளி சுகமாக வெளியேறுகிறது. ஆனால் நாள்பட்ட கட்டிபட்ட சளியை
    வெளியேற்ற உடல் மிகவும் துன்பமடைகின்றது.



    எதிர்முறைய
    மருந்து வணிகர்கள் இதை தனது வியாபாரத்திற்கு அடித்தளமாக பயன்படுத்துகின்றனர்.
    அவர்களை நம்பும் மனிதர்களை நிரந்தர நோயாளிகளாக்கத் தேவையான எல்லா பத்திய
    முறைகளையும் அவர்கள் மீது திணிக்கின்றனர். எதிர்முறையர்களின் மருந்துகளும்,
    வாழ்க்கை முறைகளும் உடலின் வெளியேற்றும் ஆற்றலை தடுத்து அழித்து விடுகிறது மேலும்
    உடலைச் சூடாக்கி சளி உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதனால்,



    வெளியேற்றும்
    போது ஏற்பட்ட துன்பம் தெரியாத நிலையில் – சிறிது காலம் தொல்லை இல்லாது
    இருக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள் ஆனால், இதற்காக பயன்படுத்தப் பட்ட
    மருந்துகளினால் ஏற்பட்ட விளைவுகளாகிய புதிய நோய்களாலும்-மருந்துகள் உருவாக்கிய
    சூட்டால் அதிகரிக்கும் சளியாலும்
    நோயின் தன்மை மேலும் மோசமடைகிறது.


    குழந்தைகளை
    சளித் தொல்லைக்காக எதிர்முறைய மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது அவர் என்ன
    கூறுகிறார்.



    குளிர்ச்சியான
    உணவுகளைத் தவிருங்கள், தலைக்கு தண்ணீர் ஊற்ற வேண்டாம், சூடான தண்ணீர் மட்டும்
    கொடுங்கள், வாரம் அல்லது பத்து நாட்களுக்கோர் முறை சுடுநீரில் குளித்தால் போதும்,
    பழங்களைத் தவிர்த்து விடுங்கள், காதுகளை நன்கு மூடிவையுங்கள் (சென்னையில் இந்த
    வெயிலிலும் காது மூடிகள் பயன்படுத்தும் ஆட்களை பார்க்க முடிகிறது) என பல
    பத்தியங்களோடு போதையூட்டும் டானிக்குகளையும், சளி வெளியேற்றாது தடுக்கும் மருந்து,
    மாத்திரைகளையும் கொடுத்து விடுகிறார்கள். உடலுடைய ஆற்றலை தடுக்க முடியாததால்
    பிரைமரி காம்ப்ளக்ஸ் என பெயரிட்டு பல ஆண்டுகள் வைத்தியம் பார்க்கிறார்கள். பின்
    உடலின் ஆற்றல் மிக பலவீனமாகி அதன் காரணமாக வெளியேற்றும் முயற்சி நின்ற பின் அந்த டாக்டர்
    தான் கஸ்டப்பட்டு குணப்படுத்தினார் எனப் பேச ஆரம்பிக்கிறார்கள்.



    ஆனால்,
    விரைவில் இளைப்பு, ஈளை (வீசிங் டிரபுள், ஆஸ்துமா, டி.பி) என்ற புதிய பெயரில் சில
    ஆண்டுகளுக்குள் அதே அல்லது புதிய டாக்டரையோ தேடிப்போய் வாழ்நாள் முழுவதும்
    வைத்தியம் பார்க்கிறார்கள். நினைத்துப் பாருங்கள் நமது கண்களுக்கு தெரிந்த இந்த
    காட்சிகள் மிக மலிந்துள்ளன நம் நாட்டில். டி.பி இது - இந்தியன் காமன் டிசிஸ் என
    முத்திரையும் கொடுத்திருக்கிறார்கள்.



    சளி -
    இதிலிருந்து விடுபட முடியாதா?



    முடியும்.
    மிக எளிதாக, சுகமாக விடுபட முடியும்.



    எப்படி?


    நமது உடல்
    இயற்கையை புரிந்துகொண்டு நமது முன்னோர் வகுத்த பாதையில் மிக எளிதாக, சுகமாக
    அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட்டு நலமாய் வாழலாம். உங்கள் ஞாபகத்துக்காக,


    <p class="MsoListParagraphCxSpFirst" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">1.
    இரவு சூரியன் மறைவதற்கு முன் உணவை முடித்துக்
    கொள்ளுதல்.
    (தற்காலத்தில் உடன் அந்த பழக்கங்கள் முடியாவிடில் இரவு 8.30குள்
    உணவை முடிப்பது சிறப்பு)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="margin-top:12.0pt;mso-add-space:
    auto;text-indent:-.25in;line-height:115%;mso-list:l0 level1 lfo1">2. இரவு கண்களுக்கு அதிகம் வேலை
    கொடுக்காதிருத்தல்.

    (இரவு 8 மணிக்கு மேல் தொலைக்காட்சி, படிப்பு,
    கம்யூட்டர் பயபடுத்தல் கூடாது. தேவைஎனில் அதிகாலை 3 மணிக்கு மேல் படித்தல் நன்று.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">3.
    இரவு உணவை மிதமாக கொள்ளுதல் நன்று. ( சில நேரம்
    தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமாக சாப்பிட்டால் பழ உணவுகள் மட்டும்
    சாப்பிடலாம்.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">4.
    இரவு விரைவாக படுக்கைக்கு செல்லுதல் - தூங்குதல். (மனம்
    சமாதானம் அடைந்தால்தான் தூக்கம் வரும். எனவே இறைவனிடம் பொறுப்புகளை
    ஒப்படைத்துவிட்டால்- மன அமைதியுடன் நன்கு தூங்கலாம்)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">5.
    அதிகாலை விரைவாக துயில் எழுதல் நல்லது.(அதிகாலை 3 மணிக்கு எழுதல்
    மிகச் சிறப்பான நன்மை தரும். காலையில் படித்தல் ஞாபகசத்தியை அதிகரிக்கும்)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">6.
    காலைக் கடன்களை 6 மணிக்குள் முடித்துக்கொள்க. (இரவு பணியில் ஈடுபட்டு இரவு
    நீண்ட நேரம் தூங்காமலிருக்க நேர்ந்தாலும் கூட இது அவசியம் தேவைப்பட்டால் காலை
    உணவுக்குப் பின் சிறிது தூங்கிச் சமாளிக்கலாம்.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">7.
    பல் துலக்குதல், ஐயத்தூய்மை பழகுக. (வெறும்
    விரலால் - நன்கு ஈறுகளை மென்மையாக அழுத்தி விடுதல் நல்லது. பின், கைப் பெருவிரலால்
    உள்நாக்கிருக்கும் இடத்தில் மெல்ல சுழற்ற நன்கு சளி வெளியேறும். பின் மா,வேம்பு,
    ஆல் இவற்றின் குச்சிகள் அல்லது வெறும் பிரஸ் கொண்டு லேசாக பல் இடுக்குகளில் உள்ள
    அழுக்குகளை நீக்கிக் கொள்க.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">8.
    நல்ல குளிர்ந்த நீரில் தலை முழுகுதல்-குளித்தல்
    வேண்டும்
    .(குளிர்நாடுகளில் உள்ளவர்கள் அறை வெப்பநிலையில் உள்ள நீரைப்
    பயன்படுத்துக.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">9.
    இயற்கையான நறுமணப்பொருள்களை பயன்படுத்தல் வேண்டும். (சோப்பு,
    சாம்பு, சிகைக்காய் இவை உடலைச் சூடாக்கும். மேலும் உடலில் உள்ள வியர்வைத் துளைகளை
    அடைத்து உடல் சுவாசிப்பதைத் தடுக்கும்- கழிவு வெளியேற்றத்தை தடுக்கும்.எனவே
    இவற்றைத் தவிருங்கள்.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">10.
    வாரம் இரு முறை எண்ணெய் குளியல் வேண்டும். (எண்ணெய்
    குளியல் சித்தர்களின் அரிய அறிவியல் உடல் தன்மைக்கேறப பல தைலங்களை பயன்படுத்தலாம்
    அல்லது நல்லெண்ணெய் சிறப்பு. பயன்படுத்திப் பாருங்கள் - சுகத்தை)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">11.
    காலை 7 முதல் 8.30 மணிக்குள் உணவு கொள்ள வேண்டும். (நமது உடற்
    கடிகாரத்தின் படி காலை 7 முதல் 9 வரை இரைப்பைக்கு சத்தி சிறப்பாக கிடைக்கும்
    நேரம். 9முதல் 11 வரை தண்ணீர் கூட கூடாது. அது மண்ணீரல் தன்னை
    முறைப்படுத்திக்கொள்ளும் நேரம்.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">12.
    உணவுக்கு முன் இனிப்பான பழங்கள் சாப்பிடுதல் நல்லது. (மூன்று
    வேளையுமே உணவுக்கு முன் பழங்கள் சாப்பிடுவது நல்லது.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">13.
    மதிய உணவு பசி வரும் பொழுது எடுத்துக் கொள்க. (இரண்டு வேளை
    உண்பவன் போகி என்பர் சான்றோர். பசித்துப் புசிப்பதே சிறப்பு. மக்களின் பழக்கத்தை
    ஒட்டி எழுதுகிறேன்.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">14.
    பசியறிந்து உண்ணுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட
    முக்கியம் -தாகம் உணர்ந்து தேவையான அளவு குளிந்த நீர் குடித்தல் வேண்டும்.
    (எதிர்முறையர்களின்
    அளவுகள் மிகத் தவறானது நமது உடலுக்கு மதிப்பளிப்போம் படைப்பாற்றல் நமக்கு
    அளித்திருக்கும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். உதாரணம் பசி, தாகம் போன்றன.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">15.
    கழிவுகளை கட்டுப்படுத்தல் கூடாது. காலை, மாலை கழிவு
    வெளியேற்றப் பழக்க வேண்டும்.
    (உடலது தேவைகளுக்கு உதவ்வேண்டியது
    அறிவின் கடமை அந்த அளவே நலவாழ்வுக்கு போதுமான அடிப்படை அறிவாகும்.)


    <p class="MsoListParagraphCxSpMiddle" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">16.
    மாதம் ஓர் முறை மென்மையான பேதி மருந்துகள் எடுத்தல்
    நல்லது.
    ( இப்போதுள்ள உணவு மற்றும் சூழல் எதிர்முறையர்களின் வணிக
    அறிவால் மாசுபட்டுள்ளது. அதனால் மாதம் ஓர்முறை மென்மையான பேதிமருந்துகளால்
    உடல்தூய்மை செய்வது சிறப்பு. குடலைக்கழுவி உடலைத் தேற்றென்பர் பெரியோர்.)


    <p class="MsoListParagraphCxSpLast" style="text-indent:-.25in;line-height:115%;
    mso-list:l0 level1 lfo1">17.
    மாலையும் ஓர்முறை நன்கு தலைக்கு குளித்தல் மிகவும்
    நல்லது.
    (இப்போதய சூழல் மாசிலிருந்து தப்ப - மாலை அல்லது இரவும்
    மீண்டும் ஓர்முறை குளிப்பது நல்லது.)



    முன்
    கூறியபடி பழக்கவழக்கங்களைச் சீர்செய்து கொள்ள, உடலின் கழிவு வெளியேற்றம் சீராகி
    உடல் நலம் பெருகும்.



    உடல்நலம்
    என்பது மிக எளிதான ஒன்று தான் நாம் நமது உடலியற்கையை அறிந்து உடலுக்கு உதவினால்
    எல்லாம் சுகமே. மேலும் நம்மைப்படைத்த படைப்பாற்றல் – இறைவன் எப்பொழுதும் நம்மை
    காக்க துணை வரும்.



    நம்முள்
    இருக்கும் படைப்பாற்றலின் தன்மை அறிந்து - தன்னை உயர்த்திக் கொள்வது மனிதப்
    பிறப்பின் தேவை.



    நான்
    இங்கு எழுதியுள்ளது நமது முன்னோர்கள் வழிகளே. ஏதேனும் சந்தேகமோ, பயமோ, அல்லது
    உதவியோ தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் என்னை அணுகலாம்.



    மேலும் நீண்டகாலத் தவறுகளைச்
    சரி செய்யும் பொழுது ஏதாவது உடல் துன்பம் ஏற்பட்டால் வினாடிகளில் இறைவழி மருத்துவத்தால் துன்பங்களை
    நீக்கி உங்களுக்கு உதவ இயலும். நீங்கள் இந்த அகிலத்தின் எந்தப் பகுதியில்
    இருப்பினும் இறைவழி மருத்துவத்தால் உங்களது சுகத்தை உறுதிப்படுத்த முடியும்.



    என்னைத்
    தொடர்பு கொள்ள மின்னஞ்சல் செய்க. மிகவும் தேவையெனில் எனது கைபேசி எண்; 93458
    12080.



    நன்றி.


    ந.
    தமிழவேள்
    .

    THAMIZHAVEL

    Posts : 3
    Points : 7
    Reputation : 0
    Join date : 18/04/2011

    Back to top Go down

    மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம் Empty இறைவழி மருத்துவம்

    Post by krthik83 Thu 02 Jun 2011, 9:55 pm

    இறைவழி மருத்துவத்தை பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகின்றேன். அதைப்பற்றி மேலும் தகவல் தெரிவிக்கவும். அக்குபஞ்சர், அக்குடச், தெய்வீக மருத்துவம் பற்றி எனக்கு ஈடுபாடு உண்டு இதற்கும் இறைவழி மருத்துவத்திற்கும் தொடர்பு உண்டா?

    நன்றி
    கார்த்திகேயன், சென்னை

    krthik83

    Posts : 1
    Points : 1
    Reputation : 0
    Join date : 02/06/2011

    Back to top Go down

    மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம் Empty Re: மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம்

    Post by M.J.SYED ABDULRAHMAN Sun 19 Jun 2011, 7:00 pm

    இந்த நேரம் இந்தியாக்க இல்ல உலஹில் எங்குமா

    M.J.SYED ABDULRAHMAN

    Posts : 3
    Points : 3
    Reputation : 0
    Join date : 15/06/2011

    Back to top Go down

    மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம் Empty Re: மண்டைச்சளி மார்புச்சளி நீங்க இறைவழி மருத்துவம்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum