என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்
உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்
உடல் உஷ்ணத்தை குறைத்து தாதுக்களை வலுப்படுத்தும் -கூஷ்மாண்ட லேஹ்யம்
(ref-பைஷஜ்யரத்னாவளி – ரக்த பித்தாதிகாரம்)
தேவையான மருந்துகளும் செய்முறையும்:
[You must be registered and logged in to see this image.]
தோல், கொட்டை நீக்கிச் சொர சொரப்பான கண்களை உடைய சல்லடையில் தேய்த்து எடுத்த பூசணிக்காயின் வெண்ணிறமான கதுப்பு 5.000 கிலோ கிராமை நீராவியில் வேகவைத்துப் பிழிந்து, சிறிது வெய்யிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் பசுவின் நெய் (க்ருத) 800 கிராம் சேர்த்து அகலமான பாத்திரத்திலிட்டு தேன் போன்ற நிறம் வரும் வரை வறுக்கவும். பிறகு அதில் கற்கண்டு 5.000 கிலோ கிராம் பொடித்துச் சேர்த்து நன்கு கிளறி கைவிரல் ரேகை பதியும் அளவு கெட்டியாகிப் பாகம் வந்தவுடன் அத்துடன்,
1. திப்பிலி – பிப்பலீ 100 கிராம்
2. சுக்கு – சுந்தீ 100 “
3. சீரகம் – ஜீரக 100 “
4. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் 25 “
5. ஏலக்காய் – ஏலா 25 “
6. இலவங்கப்பத்திரி – லவங்கபத்ரி 25 “
7. மிளகு – மரீச்ச 25 “
8. கொத்தமல்லி விதை – தான்யக 25 “
இவைகளைப் பொடித்துச் சலித்துச் சேர்த்துத் திரும்பத் திரும்பக் கிளறி பத்திரப்படுத்தவும்.
ஆறியபின் தேன் (மது) 400 கிராம் சேர்க்கவும்.
குறிப்பு:
மேலே
கூறிய முறைப்படி லேஹ்யம் செய்தால் சில நாட்களிலேயே லேஹ்யத்தில் பூர்ணம்
பூத்துவிடுகிறது. எனவே சம்பிரதாயத்தில் செய்முறை சிறிது மாற்றப்படுகிறது.
பூசனிக்காயைத்
தோல் கொட்டை நீக்கிச் சொரசொரப்பான கண்களை உடைய சல்லடையில் தேய்த்துக்
கேஸரமாக்கிப் பிழிந்து இட்டிலி செய்வது போன்று ஆவியில் வேகவைக்கவும்.
மேற்படி கேஸரத்தில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றில் செய்முறையில் கூறியுள்ள
சர்க்கரையைக் கரைத்துச் சூடாக்கி வரவும்.
வெந்த
கேஸரத்தை சுத்தமான துணி அல்லது பாய் இவைகளில் தகடுபோல் பரப்பி வெய்யிலில்
நன்கு உலர்த்தவும். உலர்ந்த பின்னர் அவற்றை எடுத்து செய்முறையில்
கூறியுள்ளபடி நெய்யைச் சிறிது விட்டு வறுத்து மற்ற சரக்குகளுடன் பொடித்துச்
சலித்துச் சித்தமாக்கவும். பின்னர் மேலே கூறிய சாறு, சர்க்கரை
இவற்றின் கலவையை வடிக்கட்டிக் கொதிக்க வைத்துப் பதத்தில் மீதமுள்ள
நெய்யைச் சேர்த்துப் பின்னர் சலித்த சூரணத்தைத் தூவி கலந்து ஆறிய பின் தேன்
சேர்த்து பத்திரப்படுத்தவும்.
அளவும் அனுபானமும்:
5 முதல் 10 கிராம் வரை சூடான பாலுடன் இரு வேளைகள்.
தீரும் நோய்கள்:
[You must be registered and logged in to see this image.]
இருமல் (காஸ), இரைப்பு (அ) இழைப்பு (ஸ்வாஸ), இளைப்பு (க்ஷய (அ) கார்ஸ்ய), பலவீனம் (பலக்ஷய (அ) அசக்த), நாட்பட்ட காய்ச்சல் (புராண ஜ்வர), ரத்தம் துப்புதல் (உரக்க்ஷத (அ) க்ஷதக்ஷய), குருதியழல் (ரத்த பித்த), வெள்ளைப் போக்கு (ஸ்வேதப்ரதர), மூலம் (அர்ஸஸ்), குருதி யொழுகு மூலம் (ரக்தார்ஷ), இதய நோய் (ஹ்ருத்ரோக).
உஷ்ணமும் இளைப்பும்
கூடிய நிலையில் ஒரு நாளைக்கு இரு வேளை தரவும். வெள்ளை போக்கில் ப்ரதராந்தக
ரஸத்துடன் தரப்படுகிறது. ரத்தமூலத்தில் ப்ப்பூலாரிஷ்டத்துடன்
தரப்படுகிறது.
நல்லதொரு பலவிருத்திச் செய்கை வேண்டின் சிறிது கஸ்தூரி, தங்கபற்பம் (அ) வெள்ளிபற்பம் (அ) மகரத்வஜ (அ) பூரணச் சந்திரோதயத்துடன் சேர்த்து அருந்தவும்.
கோடையில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளவும், பலவிருத்தி செய்கை வேண்டியும் எல்லோரும் உட்கொள்ளலாம்.
காமவிருத்தி செய்கை (வாஜீகரணம்) வேண்டின் இதனுடன் சாலாப்மிஸ்ரி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, அக்ரோட், சாரைப்பருப்பு, நீர்முள்ளி வித்து, நெருஞ்சில் வித்து போன்றவற்றின் சூரணத்தையும் சேர்த்துண்ண வேண்டும்.
தெரிந்து கொள்ளவேண்டியவை
- வெண் பூசணியில் செய்யப்படும் இந்த லேஹியம் -உடல் எடை கூட பயன்படுத்தபடுகிறது
- பெண்களின் வெள்ளை படுதில் -முசலிகதிராதி கஷாயத்துடன் சாப்பிட நல்ல பலன் தரும்
- உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த மருந்தே எனது முதல் சாய்ஸ்
- பொதுவாக தினமும் சாப்பிட -உடல் வன்மை பெருகும் ,ஆண் பெண் மலட்டு தன்மை நீங்கும்
- சித்த மருத்துவத்தில் கிடைக்கும் வெண் பூசணி லேஹியம் இதுவும்
குணத்தில் ஒன்றே ஆனாலும் தயாரிக்கபடும் முறை ,சேர்கின்ற மூலிகைகளில்
வித்தியாசம் உள்ளது (பல கம்பெனிகள் -ஒரே மருந்தென்று லேபிளை மட்டும் மாற்றி
விடுவர் ) - புளி தவிர்த்து இந்த மருந்தை உண்பது நல்லது ..
Similar topics
» ச்யவன ப்ராஷ லேஹ்யம் செய்வது எப்படி ?
» எலும்பை வலுப்படுத்தும் ,இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் -லாக்ஷா சூர்ணம்
» ஆண்மை சக்தியை அதிகரிக்குமா ? அஸ்வகந்தா லேஹ்யம்
» லேஹ்யம் செய்வது எப்படி ?
» கிருமிகளை விரட்டும் -மாணிபத்ர லேஹ்யம்
» எலும்பை வலுப்படுத்தும் ,இரத்தம் சார்ந்த நோய்களை குணமாக்கும் -லாக்ஷா சூர்ணம்
» ஆண்மை சக்தியை அதிகரிக்குமா ? அஸ்வகந்தா லேஹ்யம்
» லேஹ்யம் செய்வது எப்படி ?
» கிருமிகளை விரட்டும் -மாணிபத்ர லேஹ்யம்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆயுர்வேத மருந்துகள் அதன் பயன்கள் & மருந்து செய்யும் முறைகள் -AYURVEDIC PHARMACY
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum