ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    வாதரோகசிகிச்சை-வாத ரோக மருந்துகளின் செய்முறை-1

    Go down

    வாதரோகசிகிச்சை-வாத  ரோக மருந்துகளின் செய்முறை-1 Empty வாதரோகசிகிச்சை-வாத ரோக மருந்துகளின் செய்முறை-1

    Post by Admin Sun 03 Oct 2010, 7:25 pm






    வாதரோகசிகிச்சை

    கோஷ்டகதவாதசிகிச்சை :- திரிகடுகு, கருப்புப்பு, சீரகம்,கருங்காய்ப்பிஞ்சு, உப்பு, வெங்காரம், சைந்தவலவணம், பிடாலவணம், நன்னாரி, முள்ளங்கத்திரி, சுக்கு, வெட்பாலைவிரை, சித்திர மூலம், இவைகளை சமஎடையாகச் சூரணித்து தயிர்நீர், புளித்தநீர்வெந்நீர், முதலிய அனுபானங்களில் மேற்சூரணத்தை கலந்து கொடுத்தால் கோஷ்டவாயு நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.

    ஜீரணசக்திஉண்டுபண்ணும்படியான ரசங்களினாலாவது அல்லதுஇதர ஒளடங்களினாலாவது மலமூத்திரங்கள் தாராளமாக வரும்படி செய்து பால் குடித்து வர கோஷ்டவாதம் நிவர்த்தியாகும்.

    ஆமாசயவாதகதசிகிச்சை :- ஆமாசவாய்யு நிவர்த்திக்க, பசி யுண்டாகவும், சீரணசக்தி யுண்டாகவும், ஒளடதங்களை கொடுத்தாவது, அல்லது வாந்தியாகவும் பேதியாகவும் ஒளடதங்களை கொடுத்து பச்சைப்பயறு, நவதானியம், பழைய அரிசி சாதம் இவைகளை பத்தியமிட வேண்டியது.

    பக்குவாதசய வாத சிகிச்சை :- பக்குவாசய வாயுவைப் போக்க அக்கினிதீபனம் உண்டாகும் படியான சிகிச்சையாகிலும் அல்லது உலர்ந்த வாயு நிவர்த்திக்கச் சொல்லிய உபசாரங்களையாவது செய்தல் வேண்டும்.
    வயிற்றில் இருக்கும் வாயுவு நிவர்த்திக்க தீபனகரமான க்ஷ¡ரங்கள் சூரணங்கள் இவைகள் கொடுக்கவேண்டியது.
    குஷிகத வாயு நிவர்த்திக்க சுக்கு, வெட்பாலைவிரை, சித்திர மூலம் இவைகளின் சூரணத்தை வெந்நீரில் சாப்பிடவேண்டியது.பக்குவாசய வாயுவை போக்க பேதியாக எண்ணெய்களை சாப்பிட வேண்டியது. லவனாதி சூரணத்தைப் புசிக்க வெண்டியது.

    சர்வாங்கவாத சிகிச்சை :- சர்வாங்கவாதம் அல்லது ஏகாங்க வாதம் இதை நிவர்த்தி செய்ய ஆமணக்கெண்ணெயை அப்பியங்கனம் செய்து வெந்நீரில் குளித்தல் நன்று.

    குதஸ்திவார சிகிச்சை :- குதவாததோஷம் நிவத்திக்க குதாவர்த்தத்தில் சொல்லிய சிகிச்சைகளைச் செய்யவேண்டியது.

    வஸ்தி, குக்ஷ¢, குதம் இவ்விடத்தில் பிரகோபித்த வாய்வு, சமனமாகும்படிக்கு தசமூல கியாழத்திலாவது அல்லது கொடி மாதுளம்பழ ரசத்திலாவது எண்ணெயைப்போட்டு சாப்பிட வேண்டியது.

    சோத்திராதி கதவாத சிகிச்சை :- செவி முதலிய இந்திரியத்தானத்தில் பிரகோபித்த வாதமானது நிவர்த்திக்க வாதநாச உபசாரங்கள் செய்து எண்ணை யிட்டுக்கொள்ளல் அப்பியங்கனம் பற்று ஒற்றடம், பூச்சு, புகை முதலியன செய்யவேண்டியது.

    ஜீரும்பவாத சிகிச்சை :- சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், இந்துப்பு இவைகளை சமனளவு எடுத்து சூரணித்து ஒன்றாய்க் கலந்து கொடுத்தால் அந்தக்ஷணமே ஜீரும்பவாதம் நாசமாகும்.

    பிரலாபகவாத சிகிச்சை :- கிரந்திதகரம், பற்பாடகம்,கொன்னை, கோரைக்கிழங்கு, கடுகுரோகணி, வெட்டிவேர், அமுக் கிறாக்கிழங்கு, துளசி, திரா¨க்ஷ, சந்தனம், தசமூலம், காக்கட்டான் இவைகள் சமஎடை கியாழம் வைத்துக் குடித்தால் பிரலாபகவாதம் சீக்கிரம் நீங்கும்.

    ரசாஞான சிகிச்சை :- உருசியின்மை முதலியவற்றுடன் நாக்கு மரத்திருந்தால் இந்துப்பு, மிளகு, திப்பிலி, சுக்கு, பலாசு விதை இவைகளை சூரணித்து நாக்கில் தேய்த்தாலும் அல்லது நெல்லிக்காய் புளிப்பு இது அகப்படவிட்டால் சுக்கான்கீரை கொடுத்தாலும் அல்லது சீமை நிலவேம்பு, கடுகுரோகணி, வெட்பாலைவிரை, வெட்பாலைப்பட்டை, பேயகத்தி, முருக்கன்விரை, கடுகு, கருஞ்சீரகம், திப்பிலி, மோடி, சித்திரமூலம், சுக்கு, மிளகு இவைகளைச் சூர
    ணித்து இஞ்சி ரசத்தினால் கல்கஞ்செய்து அடிக்கடி நாக்கில் தடவிக்கொண்டு வந்தாலும் நாக்கின் தடிப்பை எடுத்து லேசாக்கி ருசியின்மை முதலியவைகளை நிவர்த்திக்கச் செய்யும்.

    துவக்சூனியதசி சிகிச்சை :- சுப்தவாதம் நிவர்த்திக்க அடிக்கடி தேகத்திலிருந்து குருதிவாங்கல் சிகிச்சையையும் இந்துப்பு, கருதூபம் இவைகளை தயிலத்துடன் கலந்து தேகத்தின் மீது லேபனஞ் செய்தல் முதலியவைகளையும் செய்யவேண்டியது.

    சப்ததாதுகதவாயு சிகிச்சை :- சர்மத்தின் வாதகததோஷம் நிவர்திக்க சிநேகபானம், அப்பியங்கனம், வியர்வை வாங்கல் முதலிய கிரியைகளைச் செய்யவேண்டியது. ரத்தகதவாயுதோஷம் நிவர்த்திக்க சீதபேதனம், விரேசனம், இரத்தம் வாங்கல், முதலிய சிகிச்சைகள் செய்யவேண்டியது.

    ஸ்நாயுகத சிகிச்சை :- எலும்புவாயுதோஷம் நிவர்த்திக்க வியர்வை வாங்கல், உபநாஹகிரியை, சூடுபோடல், கட்டுகட்டல்,மர்த்தளம்செய்தல் முதலிய கிரியைகளை செய்தல் வேண்டும்.
    (ஸ்நாயு-எலும்பு).

    சந்நிகவாத சிகிச்சை :- ஆற்றுத்தும்மட்டிவேர், திப்பிலி இவைகளைச் சூரணித்து சமன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் சந்நிகவாதம் நீங்கும்.

    பித்தகபாசிரித பிராணாதித சிகிச்சை :- பித்தத்துடன் கலந்த வாயு நிவர்த்தியாக வாதபித்தஹரசிகிச்சைகள் செய்யவேண்டியது. அந்த வாயு கபத்துடன் மிசிரமானால் வாதசிலேஷ்ம ஹரசிகிச்சைகளைச் செய்யவேண்டியது.

    ஆகேஷபக வாயு சிகிச்சை :- சிற்றாமுட்டிவேர், தசமூலம், யவதானியம், இலந்தை, கொள்ளு இவைகளது கியாழம், பசும்பால் இவைகள் வகைக்கு 8 பாகம், எண்ணெய் 1 பாகம், அதிமதூரம் இந்துப்பு, அகில், குங்கிலியம், புஷ்கரமூலம், தேவதாரு, மஞ்சிஷ்டி தாமரைக்கிழங்கு, கோஷ்டம், இலவங்கப்பத்திரி, கெந்தி, சன்னமான நன்னாரிவேர், வசம்பு, தண்ணீர்விட்டான் கிழங்கு, அமுக்கிறாங்கிழங்கு, சோம்பு, வெள்ளைச்சாரணை இவைகள் வகைக்கு 1 பங்கு தோலா வீதம் எடுத்து பதினாலு பங்கு நீர் விட்டு, எட்டிலொன்றாக
    நீர்விட்டு முன் கியாழத்துடன் சேர்த்து தயிலம் காய்ச்சி வடித்து முறைப்படி அருந்திவர ஆகேஷபகவாயுகள் வாத வியாதிகள் நீங்கும். விக்கல், சுவாசம் அதிமந்தம், குன்மம், இருமல் முதலியன நாசப்படுத்தும். மேற்படி தயிலத்தை ஆறுமாதங்கள் தேகத்தில் தடவிக்கொண்டால் அண்டவிருத்தி நாசமாகும். கர்ப்பமாதர்களுக்கு அவர்களது பலாபலத்தை அறிந்து இதை பிரயோகித்தால் பிரசூதிரோகங்கள் நீங்கும். மலடிமாதர்கள் இதைச்
    சாப்பிட்டால் மலடித்தனம் நீங்கி கர்ப்பமுண்டாகும். க்ஷ£ணதாது வுடைய புருஷர்களுக்குக் கொடுத்தால் தாதுவிருத்தியுண்டாகும். வாயுவினால் க்ஷ£ணமானவனுக்கும், மர்மஸ்தானத்தில் அடுயுண்டவ
    னுக்கும் அதிக அலுப்பும் ஆயாசமுமடைந்த மனிதனுக்கும், அபி காதம் அடைந்தவனுக்கும் எலும்பு முதலியது உடைந்தவனுக்கும் இதை கொடுக்கலாம். அரசர்கள், மெல்லிய தேகமுடையவர்கள் சுகுமார முடையவர்கள், சுமாயிருப்போருங்கூட இதை உட் கொண்டால் மிகவும் சுகமாயிருப்பார்கள்.

    மஹாராஸ்னாதி கியாழம் :- சித்தரத்தை, ஆமணக்குவேர், சீந்தில்கொடி, வசம்பு, பச்சை, அழவணை, பேயாவரை, பற்பாடகள், கோரைக்கிழங்கு, கண்டுபாரங்கி, ஓமம், குராசானி ஓமம், சுக்கு, தேவதாறு, வாய்விளங்கம், கடுக்காய்ப்பூ, சிற்றாமுட்டி வேர், பெருங்குரும்பை, கடுகுரோகணி, மஞ்சிஷ்டி, வெள்ளை அதிவிடயம், கரும் அதிவிடயம், கிச்சிலிக்கிழங்கு, திரிபலை, திப்பிலி,யசக்ஷ¡ரம், சிகப்பு சந்தனம், கொண்ணைசதை, ஜாதிக்காய், வெட் பாலைப்பட்டை, தேள்கொடுக்குவேர், தசமூலங்கள் இவைகளை சம எடையாக நறுக்கி பதினாறுபங்கு நீர்விட்டு எட்டிலொன்றாய் கியாழம் வைத்து சாப்பிட்டால் ஏகாங்கவாதம், சர்வாங்கவாதம், சுவாச காசங்கள், வியர்வை, சைத்தியம், நமை, சூலை, களரோகம், தேக
    மெல்லாம் குத்தல், உதரல், கம்பவாதம், கல்லிவாதம், ஆனைக்கால், ஆமவாதம், கர்ப்பிணிரோகங்கள், சுப்திவாதம், ஜிம்மதம்பம், அபதானகம், குத்தல்வலி, வீக்கம், திமிர்வாதம், குப்ஜவாதம், அபதந்திரவாதம், அர்ஜிவாதம், குதவாதம், குடவாதம், அநுக்கிரக வாதம், பாதசூலை, வாதசிலேஷ்மம் வியாதிகள் முதலியன யாவும் நாசமாகும்.

    மஹாபில்வாதி கியாழம் :- சிற்றாமுட்டிவேர், சுக்கு இவை களின் கியாழத்தில் திப்பிலி சூரணம்போட்டு இரண்டு மூன்று நாள் சாப்பிட்டால் சீதவாதம், கம்பவாதம், தாகம் இவைகள் நீங்கும்.

    சர்வாங்கவாதத்திற்கு மாஷாதி கியாழம் :-உளுந்து, பூனைக்காஞ்சொரி, ஆமணக்குவேர், சிற்றாமுட்டிவேர் இவைகள் வகைக்கு ஒரு தோலா வீதம் சதைத்து அத்துடன் சுட்ட பெருங்காயம்-7 குன்றிஎடை இந்துப்பு-7 குன்றிஎடை, சீரகம் 28 குன்றிஎடைப்போட்டு கியாழம் வைத்து இருவேளையாக்கி குடித்தால் பக்ஷகாத
    வாதம் நாசமாகும்.

    கபிகச்வாதி கியாழம் :- பூனைக்காஞ்சொரி விரை, சிற்றாமுட்டி வேர், ஆமணக்குவேர், உளுந்து, சுக்கு இவைகள் சமஎடை கியாழம் போட்டு அத்துடன் இந்துப்பு கலந்து மூக்கில் நசியம் செய்தால் பக்ஷ¡காதம், சிரோரோகம் சந்நிவாதம் முதலிய வாதங்கள் நீங்கும்.

    வாதத்திற்கு ராஸ்னாதி கியாழம் :- சிற்றரத்தை, சீந்தில்கொடி சரக்கொன்றைப் புளி, தேவதாரு, சிறிய நெரிஞ்சில், ஆமணக்கு வேர், வெள்ளைச்சாரணை இவைகள் சமஎடை கியாழம் வைத்து அதில் சுக்கு சூரணத்தைப் போட்டு சாப்பிட்டால், தொடைகள்,முழங்கால், முதுகுதண்டு எலும்புக்கு கீழ்பாகம், பக்கங்கள் இவைக ளிடத்தில் இருக்கும் குத்தல், நோய் இதுகள் நீங்கும்.

    ஸ்வச்சந்த பைரவரசம் :- சுத்திசெய்த பாதரசம், லோஹபஸ் பம், சுவர்ணமாக்ஷ¢கபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, தாளகம், கடுக் காய்பிஞ்சி, ஆமணக்குவிரை, நொச்சி, சுக்கு, மிளகு, திப்பிலி, பொரித்த வெங்காரம், சுத்திசெய்த வசநாபி, இந்த பதின்மூன்று தினுசுகள் சம எடையாக நிறுத்திகொண்டு நொச்சியிலை சாற்றினால்
    ஒரு நாள் அரைத்த பிறகு சிவகரந்தை யிலைச்சாற்றினால் ஒரு நாள் அரைத்து மான்சிமிழியில் வைத்துக்கொள்ளவும். இதில் குன்றி எடைவீதம், சிற்றரத்தை, சீந்தில்கொடி, தேவதாரு, சுக்கு, ஆமணக்
    குவேர் இவைகளை கியாழம் விட்டு அதில் குங்கிலிய பற்பம் போட்டு இந்த அனுபானத்தில் மருந்தை கூட்டிச் சாப்பிட்டு வந்தால் வாதரோகங்கள் யாவும் நீங்கும்.

    சமீரபன்னக ரசம் :- அப்பிரக பற்பம் கெந்தி, வசநாபி, சுக்கு மிளகு, திப்பிலி, பாதரசம், வெண்காரம் இவைகள் சமஎடையாக சுத்திச்ய்து கல்வத்திலிட்டு கரிசாலை சாற்றினால் அரைத்து வெய்யிலில் உலர்த்தவும். இப்படி 7 முறை செய்து எடுக்கவும். இந்த மருந்தில் இரண்டு மூன்று குன்றி எடை பிரமாணம் இஞ்சி சுரசத்திலாவது அல்லது கற்கண்டுடனாவது கொடுத்தல் பிரபலமான வாதரோகங்கள் அந்த க்ஷணமே நீங்கும்.

    வாதரக்ஷ¡ச ரசம் :- இரச பஸ்பம், கெந்தி, காந்த பஸ்பம் அப்பிரகபஸ்பம், தாம்பிரபஸ்பம், இவைகளை சமஎடையாக நிறுத்திக்கொண்டு கல்வத்திலிட்டு அதை வெள்ளைச்சாரணை, சீந்தில் கொடி, சித்திரமூலம், துளசி இவைகளின் சுரசத்திலும், திரிகடுகு கியாழத்திலும், தனித்தனி மூன்று நாள் அரைத்து வில்லை செய்துலர்த்தி
    அகலிலடக்கி சீலைமண் வலுவாகச் செய்து நன்குலர்த்தி இலகு புட மாக விட்டு ஆறிய பிறகு மருந்தைப் பொடித்து வைத்துக்கொள்க. வாதரத்தம், காந்திபங்கம், ஆமவாதம், தனுர்வாதம், வேதனாவாதம் வாதசூலை, உன்மாதம் இவைகளை நாசமாக்கும். இதை அனுபான பேதங்களால் கொடுத்தால் 84 வாதங்களையும் குணமாக்கும்.

    வாதாரி ரசம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி2 பாகம், திரிபலை 3 பாகம், சித்திரமூலம் 4 பாகம், குங்கிலியம் 5 பாகம், இவைகள் யாவையும் கல்வத்திலிட்டு இரண்டு ஜாமம் அரைத்து பிறகு ஆமணக்கெண்ணெய் யால் அரைத்து வேளைக்கு 1, 2 வராகனெடை வீதம் தினம் ஒரு வேளை காலையில் சாப்பிட்டு பிறகு சுக்கு ஆமணக்குவேர் இவை கள் கியாழத்தை அருந்த பேதியாகும். பேதி அதிகமானால் மருந்தின் அளவை குறைத்துக் கொள்க. உஸ்ணமான போஜனம் செய்து காற்றில்லாத காற்றில்லாத இடத்தில் வசித்துக் கொண்டு புணர்ச்சியற்று ஒரு மாத காலம் சாப்பிட்டால் சகல வாதங்கள் நீங்கிவிடும்.

    சமீரகஜ கேசரீ ரசம் :- சுத்திசெய்த புதிய அபினி, நாவல் பட்டை குடிநீரில் நன்கு வேகவைத்து சுத்திசெய்து மேல்தோல் நீக்கிய எட்டிக்கொட்டை, புதியமிளகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து 1/2 முதல் 1 குன்றிஎடை சூரணத்தை கொடுத்து தாம்பூலம் போடச்செய்தால் குப்ஜவாதம், கஞ்சவாதம், சர்வஜவாதம், குருத்ரசிவாதம், அவபாஹீகம், வீக்கம், நடுக்கல், பிரதானக வாதம், பேதி, அருசி, அபஸ்மாரம் இவைகளைப் போக்கும்.

    மிருதசஞ்சீவினி ரசம் :- லிங்கம் 4-பாகம், நாபி 2-பாகம்,பொரித்த வெண்காரம் 1-பாகம், நேர்வாளம் 1-பாகம் இவைகளை முறைப்படி நன்கு சுத்திசெய்து கல்வத்திலிட்டு, 2-ஜாமம் இஞ்சி ரசத்தினால் அரைத்து பிறகு எருக்கன் பால், தண்ணீர்விட்டான் கிழங்கு ரசம், இவைகளைனாலும் அரைத்து குன்றிஎடை கொடுத்தால்
    வாதரோகம், ஊருஸ்தம்பம், ஆமவாதம், சங்கிரஹணி, மூலவியாதி, எட்டுவித சுரங்கள் இவைகள் நீங்கும். இதற்கு மிருதசஞ்சீவினி என்றும் ரசசாகரமென்றும் பெயர்.

    வாதகஜாங்குச ரசம் :- ரசபஸ்பம், லோஹபஸ்பம், கெந்தி, தாளகம், சுவர்ணமாக்ஷ¢க பஸ்பம், கடுக்காய், கடுக்காய்ப்பூ, வசநாபி, திரிகடுகு, நெல்லி, வெண்காரம் இவைகளை சமஎடையாக கல்வத்தி லிட்டு சிவகரந்தை, நொச்சி இந்த இரண்டு ரசத்திலும் தனித்தனி ஒவ்வொரு நாள் அரைத்து குன்றிஎடை சாப்பிட்டால் சகலவாதங்கள், சாத்திய அசாத்திய ரோகங்கள் யாவையும் நாசமாக்கும்.

    வியாதிகஜ கேசரீ ரசம் :- பாதரசம், கெந்தி, தாளகம், வசநாபி, திரிகடுகு, திரிபலை, வெங்காரம் இந்த தினுசுகள் வகைக்கு 1/2 தோலா நேர்வாளம் 1-தோலா இவைகளை மைப்போல் சூரணித்து கரசனாங்கண்ணி மணத்தக்காளி நொச்சி, ஒவ்வொன்றிலும் தனிததனி எவ்வேழு முறை அரைத்து மிளகு பிரமாணம் மாத்திரை
    செய்யவும்.

    வியாதிகளின் பக்குவா பக்குவங்களை அறிந்து மருந்தை பால் அனுபானத்தில் கொடுத்தால் எட்டுவித சுரங்களும், நொச்சியிலை, கோரைக்கிழங்கு இந்த இரண்டு தினுசு கியாழத்தில் கொடுத்தால் 84-வாதரோகங்களும், வெல்லத்துடன் கொடுத்தால் 40-வித பித்தரோகங்களும் நாசமாகும். அனுபான விசேஷங்களில் கொடுத்தால் சகல ரோகங்களும் நிவர்த்தியாகும்.

    சூரியபிரபா வடுகங்கள் :- சித்திரமூலம், திரிபலை, வேப்பம் பட்டை, பேய்ப்புடல், அதிமதுரம், மஞ்சள், சிறுநாகப்பூ, ஓமம், சீமைநிலவேம்பு, மரமஞ்சள், ஏலக்காய், கோரைக்கிழங்கு, பற்பாடகம், ரசாஞ்சனம், கடுகுரோகணி, கண்டுபாரங்கி, செவ்வியம், தாமரைக்கிழங்கு, குரோசானி ஓமம், திப்பிலி, மிளகு, நேர்வாளம், கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, புஷ்கரமூலம், வாய்விளங்கம், மோடி, சீரகம், தேவதாரு, இலவங்கப்பத்திரி, வெட்பாலைப்பட்டை சிற்றரத்தை, போயாவரை, சீந்தில்கொடி, சிவதைவேர், அல்லி
    விரை, தாளிசபத்திரி, இந்துப்பு, பீடாலவணம், வளையலுப்பு கொத்தமல்லி, சோம்பு, சுவர்ணமாஷிகம், சாதிகாய், யவக்ஷ¡ரம், சக்திஷாரம், மிளகு, இந்த தினுசுகள் வகைக்கு 4 தோலா வைத்து சர்க்கரை 20 பலம், நெய் 10 பலம் கலந்து இரசாயணமாக செய்து ரோகொணியின் பலாபலத்தை அறிந்து வேளைக்கு 1/2 முதல் 1 தோலா எடை வீதம் கொடுத்தால் வாதவியாதி, வூருஸ்தம்பம் அர்த்திதவாதம், குத்ரவாதம், வித்ருதி, ஆனைக்கால், குன்மம், பாண்டுரோகம். அநாகம், அஸ்மரிமேகம், பிரமேகங்கள் ரத்தபித்தம், காமாலை, வாதரோகங்கள், பித்தரோகங்கள், கபரோகங்கள், சந்நிபாதரோகங்கள், இவைகள் யாவையும் நாசப்படுத்தும். மற்றும்
    அக்கினிதீபனம் மனோவுல்லாசம், ஆயுசு விருத்தி, புஷ்டி இவைகளை யுண்டாக்கும்.

    லகுவாதவித்வம்ச மாத்திரை ரசம் :- பாதரசம், வெண்காரம், கெந்தி, பாக்ஷ¡ணபேதி, வசநாபி, பலகறைபஸ்பம், தாளகபஸ்பம் சுக்கு, மிளகு, திப்பிலி, இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன் யிலைச்சாற்றினால் அரைத்து 1/2, 1 குன்றி எடை பிரமாணம் மாத்திரை செய்து கொடுத்தால் சந்நிபாதங்கள் கபங்கள், வாதங்கள், சீதங்கள், அக்கினிமாந்தம், சுவாசங்கள், சூலைகள், கிறாணி இருமல் இவைகள் நீங்கும்.

    வந்ஹிகுமாரம் :- பொரித்த வெங்காரம், சுத்திசெய்த பாதரசம், கெந்தி, சங்கு, பஸ்பம், பலகறை பஸ்பம் இவைகள் சம எடை, வசநாபி 3 பாகம், மிளகு 8 பாகம் இவைகள் யாவையும் கல்வத்திலிட்டு கரிசாலை சாற்றினால் அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து கொள்ளவும் இதில் பிரதி தினம் காலையில் ஒரு மாத்திரை கொடுத்து வந்தால் சகல வாத ரோகங்கள், சுவாசரோகம் கபரோகம், அக்கினிமாந்தம், பீலிகம், இருமல், சூலை, இவைகள்
    நீங்கும்.

    வாதவித்வம்ச ரசம் :- பாதரசம் 1 பாகம், கெந்தி 1 பாகம்,வசநாபி 2 பாகம், தாம்பிரபஸ்பம் 1 பாகம், லோஹபஸ்பம் 1 பாகம மாக்ஷ¢க பஸ்பம் 1-பாகம், நேர்வாளம் 1-பாகம், தாளகம் 1-பாகம், திரிகடுகு 1-பாகம், இவைகள் யாவையும் சேர்த்து நொச்சி, கருணை, எருக்கன்பால், முன்னை, வெள்ளைச்சாரணை, ஊமத்தன் இவை களின் ரசத்தினால் தனித்தனி ஏழுமுறை அரைத்து குன்றிஎடை பிரமாணம் மிளகு சூரணத்தில் கொடுக்கவும்.

    முழங்கால், துடை, கண்டச்சதை, முதுகு, முதுகுதண்டு,பாதங்கள், உதடு, தலை, இந்த இடங்களில் நோய், தலைபெரிய நரம்புகள், தாடைகள், குதபிரதேசம், இவ்விடங்களில் தம்பித்தல், சுழ்கவாதம், ஜிம்மதம்பம், பாஹீதம்பம், பாததம்பம், அதோபாக ஜனிதவாயுவுகள் சகல வாதங்கள் இவைகள் யாவையும் குணமாக்கும்.

    கரசமசமீரபன்ன் :- பாதரசம், தாளகம், சவர்ணமாக்ஷ¢க பற்பம், லோஹபற்பம், கெந்தி, கடுக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, துளசிவேர், கடுக்காய்ப்பூ, வசநாபி, சுட்டவெண் காரம் இவைகள் சமஎடை எடுத்து துளசி, சிவகரந்தை, இந்த ரசங்களில் அரைத்து குன்றிஎடை மாத்திரைகள் செய்யவும். இந்துப்பு, சுக்கு, சித்திரமூலம், இவைகள் கியாழத்தில் கொடுத்தால் வாயுரோகங்கள் நீங்கும்.

    திரிகுணாக்கிய ரசம் :- கெந்தம் 8-பாகம் பொடித்து ஓர் மணணோட்டில் வைத்து அடுப்பிலேற்றிச் சிறிதீயாக எரித்து அதில் பாதரசம் 1-பாகம் சேர்த்து ஒரு க்ஷண பொழுது நெருப்பில் வைத்து எடுத்துக் கல்வத்திலிட்டு பொடித்து அத்துடன் அதற்கு சமம் கடிக்காய் சூரணம் கலந்து நன்குகலக்க அரைத்து வைத்துக்கொண்டு
    முதல்நாள் 7-குன்றிஎடை, இரண்டாவதுநாள் 8-குன்றிஎடை, இம் மாதிரியாக நாளுக்கு ஒவ்வொரு குன்றிபிரமாணம் விருத்திசெய்த 21-குன்றி ஆகிறவரையிலும் கொடுத்து பால், நெய் சர்க்கரை கலந்த அன்னத்தை புசித்து காற்றில்லாத இடத்திலிருந்தால் 3-பக்ஷங்களில் கபவாதம் நாசமாகும்.

    விதூமவாதத்திற்கு வாதாரி ரசம் :- சுத்திசெய்த பாதரசம் 8-பலம், கழிநீரில் மூன்றுநாள் ஊறவைத்து உலர்த்திய எட்டிக்கொட்டை 8-பலம், கெந்தி 8-பலம், சுக்கு, திப்பிலி, மிளகு, கடுக்காய்த்தோல், தானிக்காய்த்தோல், நெல்லிப்பருப்பு, சித்திரமூலம், இலவங்கப்பத்திரி, கோரைக்கிழங்கு, வசம்பு, அமுக்கிறாக்கிழங்கு,
    காட்டுமிளகு, சுத்திசெய்த நாபி, கோஷ்டம், திப்பிலிமூலம், இவை வகைக்கு 1-பலம் சூரணித்து யாவும் ஒன்றாய்ச் சேர்த்து 24-பலம் வெல்லம் கலந்து அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்யவும்.
    பசும்நெய், மிளகுசூரணம், இந்த அனுபானத்தில் ஒவ்வொரு மாத்விகிதம் கொடுத்தால் விதூமவாதம் குணமாகும்.

    ஏகாங்கவாதத்திற்கு ஸ்பரிசாரி ரசம் : - சுத்திசெய்த ரசம் 1 பாகம், சுத்திசெய்த கெந்தி 2 பாகம், முறுக்கன் விரை 2 பாகம் கழுநீரில் மூன்று நாள் ஊறவைத்து எட்டிக்கொட்டை 12 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு சூரணித்து தேன் விட்டு அரைத்து மெழுகு பதத்தில் நெய் வைத்திருந்த பானையில் போட்டு ஒரு மாதம் தானிய களஞ்சியத்தில் வைத்து சிறு குன்றியளவு விகிதம் கொடுத்து வர ஏகாங்கவாதம், கஞ்சவாதம் இவைகள் நீங்கும்.

    கபவாதாரி ரசம் : - ரசபஸ்பம், லோஹபஸ்பம், சுத்திசெய்த தாளகம், ஹேமமாஷிகபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, இவைகள் சம எடை கல்வத்திலிட்டு ஆமணக்குவேர், இஞ்சி, கரிசனாங்கண்ணி,மணத்தக்காளி, வெள்ளைகாக்கட்டான், இவைகளின் ரசங்களினால் பிரத்தியேகம் ஒவ்வொரு நாள் அரைத்து மாத்திரைகள் செய்து பாண்டத்தில் வைத்து சீலைமண் செய்து மந்தாக்கினியால் ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து கல்வத்திலிட்டு சூரணித்து அதற்கு திரிகடுகு, சித்திரமூலம், சுத்திசெய்தகெந்தி, சுத்திசெய்த நாபி கருணைக்கிழங்கு, கடுக்காய், சுட்ட வெண்காரம் இவைகளது சூரணத்தைச்சேர்த்து சிவகரந்தை, நொச்சி, கரிசனாங்கண்ணி, இவைகளின் சாற்றினால் மூன்று நாள் அரைத்து 4 குன்றி பிரமாணம் மாத்திரை செய்து தடவைக்கு ஒரு மாத்திரை வீதம் அனுபானத்துடன் கொடுத்தால் கபவாதம் நிவர்த்தியாகும்.

    ஜிம்மாங்கவாதாங்குரசம் :- சுத்திசெய்த பாதரசம் 5 பலம் தாம்பிரபஸ்பம் 5 பலம், சுத்திசெய்த கெந்தி 5 பலம் இவைகளை எலுமிச்சம்பழச்சாற்றினாலும், வெற்றிலை சாற்றினாலும் அரைத்து காசிக்குப்பியில்வைத்து சீலைமண் செய்து லகுபுடமிட்டு ஆறிய பிறகு எடுத்து கல்வத்திலிட்டு சூரணித்து அதற்குச் சரியாக திரிகடுகுச்சூரணச்சேர்த்து இரண்டு குன்றி எடை பிரமாணம் கொடுத்தால் ஜிம்மாங்க
    வாதம் நீங்கும்.

    ஸ்கந்தவாதத்திற்கு வாதமுத்கர ரசம் :- பாதரசம், நாபி சுட்ட வெண்காரம், கெந்தி, மனோசிலை, ஊமத்தன்விரை, இவைகளை சுத்திசெய்து சம எடையாக கல்வத்திலிட்டு செருப்படை சாற்றினால் அரைத்து உருண்டை செய்து குப்பியில் வைத்து மேல் மூடி சீலைமண் செய்து வாலுகாயந்திரத்தில் நாலுஜாமங்கள் எரித்து
    ஆறிய பிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு கள்ளிப் பால் விட்டு அரைத்து பிறகு மீன்பிச்சியினால் அரைத்து குன்றி எடைமாத்திரைகள் செய்து கொள்ளவும். இந்த மாத்திரையை அனுபான விஷேசங்களுடன் கொடுத்தால் ஸ்கந்தவாதம், கந்தரவாதம்இவைகள் நீங்கும்.

    பாதவாதத்திற்கு ஸ்வச்சந்தநாயக ரசம் :- ரசபஸ்பம், லோகபஸ்பம், சுத்திசெய்த கெந்தி, சுத்திசெய்த தாளகம், ஹேமமாஷிக பற்பம், கடுக்காய்த்தோல், கடுக்காய்ப்பூ, சுத்திசெய்த நாபி, திரிகடுகு சுட்ட வெண்காரம் இவைகள் யாவும் சம எடையாக கல்வத்திலிட்டு , சிவகரந்தை, நொச்சி, இவைகளின் சாற்றினால் ஒவ்வொரு நாளாக
    அரைத்து 3 குன்றி எடை பிரமாணம் மாத்திரை செய்து அனுபான பேதத்தில் கொடுத்தால் பாதவாதம் நிவர்த்தியாகும்.


    வஸ்திவாதத்திற்கு ஸ்வச்சந்தபைரவ ரசம் :- ரசம், சுத்தி ாபி, அப்பிரகபற்பம், சுத்திசெய்தலிங்கம், சுத்திசெய்த ந்தி, சுத்திசெய்த தாளகம் இவைகள் சமஎடையாக கல்வத்தி லிட்டு, செருப்படை ரசத்தால் மூன்றுநாள் அரைத்து குக்குடபுட மிட்டு ஆறியபிறகு எடுத்து கல்வத்திலிட்டு சூரணஞ்செய்து மீன்,
    ஆமை, காட்டுபன்றி இவைகளின் பித்தத்தினால் ஒவ்வொரு நாளாக அரைத்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் மிகவுங் குரூரமாகிய வஸ்திகாரம் நீங்கும்.

    சுருங்கலவாதத்திற்கு திரிகுணாக்கிய ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம், ஆமல வேதசம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை இலைசாற்றினால் இரண்டு நாள் அரைத்து காசி குப்பியில் வைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும் கல்வத்திலிட்டு மீன் பித்தத்தில் பாவனைச்செய்து இரண்டு குன்றிஎடை மாத்திரைச்செய்து ஒவ்வொரு மாத்திரை விகிதம் வசம்பு கியாழத்திலாவது அல்லது மிளகு கியாழத்திலாவது கொடுத்தால் சுருங்கலவாதம் நீங்கும். இதற்கு பத்தியம், பால்சாதம் அல்லது தேங்காய் பாலுடன் கூடிய அன்னத்தை புசிக்கவேண்டியது.

    சுக்கிலவாதத்திற்கு பணிபதி ரசம் :- சுத்திசெய்த பாதரசம், சுத்திசெய்த கெந்தி, அப்பிரகபற்பம், லோஹபற்பம், தாம்பிரபற்பம் இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு எலுமிச்சம் பழச்சாற்றினால் இரண்டுநாள் அரைத்து உருண்டைசெய்து காசிகுப்பியில் வைத்து சீலைமண்செய்து உலர்த்தி வாலுகாயந்திரத்தில் 6 ஜாமங்
    கள் எரித்து ஆறியபிறகு எடுத்து குன்றிஎடை மருந்தை மிளகு சூரணத்தில் நெய் கலந்துக் கொடுத்தால் சுக்கிலவாதம் நீங்கும்.

    நஷ்டேந்திரியத்திற்கு வாதாந்தக ரசம் :- சுவர்ணபற்பம்,
    காந்தபற்பம், லோஹபற்பம், தாம்பிரபற்பம், அப்பிரகபற்பம், இரசபற்பம், சுத்திசெய்த கெந்தி, வைகிறாந்தபற்பம், பிரவாளபற்பம், ரஜிதபற்பம், தாளகபற்பம், இவைகளை சமஎடையாக சுபமுகூர்த் தத்தில் கல்வத்திலிட்டு 4-ஜாமங்கள் சித்திரமூல கியாழத்தினால் அரைத்து பில்லை செய்து நிழலில் உலர்த்தி ஆறியபிறகு எடுத்து மைப்போல் சூரணித்து சூரணத்திற்கு பேர்பாதி இரசபற்பம், தாளகபற்பம், கலந்து சித்திரமூலம், இஞ்சி, நொச்சி, பெருங்குரும்பை, ஆடாதோடை, எலுமிச்சம்பழம் இவைகளின் ரசத்தினால் ஒவ்வொன்றிலும் ஏழுமுறை அரைத்து குன்றிஎடை மாத்திரைசெய்துக்கொள்ள வேண்டியது. திப்பிலி சூரணத்தில் நெய் அல்லது தேன் கலந்து வேளைக்கொரு மாத்திரை விகிதஞ் சாப்பிட்டால் சுப்தவாதம், வாதசூலை, வேதனையுடன் கூடியவாதம், சிநாயுவாதம், கம்ப வாதம், காத்திரபங்கவாதம், பக்ஷகாதவாதம், ஹனுக்கிரஹவாதம், தம் முதலிய 80-வாதங்கள், சகல ரோகங்கள் நிவர்த்தியாகும். மேலும் இம்மருந்தினால் மலடியும் கர்ப்பிணியாவாள். நஷ்ட வீரியமும் விருத்தியாகும்.

    சூதிகாவாதத்திற்கு படபானல ரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், தாம்பிரபஸ்பம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி 2-பாகம், திரிகடுகு 3-பாகம், சித்திரமூலம் 1-பாகம், கோஷ்டம் 1-பாகம், இவைகளை கல்வத்திலிட்டு துளசிரசத்தில் ஒருநாள் அரைத்து இலந்தன்விரை அளவு வடுகங்கள் செய்து வெள்ளைப்பூண்டு ரசத்தில்
    வேளைக்கொரு மாத்திரை விகிதம் கொடுத்தாலும் அல்லது பேயாவாரை வேர் ரசத்திலாவது அல்லது முள்விலாம்பட்டை ரசத்தில் மிளகுசூரணம் போட்டு அத்துடனாவது கொடுத்தாலும் பிரசூதி வாதம் நீங்கும்.

    சூதிகாவாதத்திற்கு வாதவித்வம்ஸி ரசம் :- சுத்திசெய்த ரசம், சுத்திசெய்த கெந்தி, நாகபஸ்பம், வங்கபஸ்பம், லோஹபஸ்பம், தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த அப்பிரகபஸ்பம், திப்பிலி, சுட்ட வெங்காரம், மிளகு, சுக்கு இவைகள் வகைக்கு 1-பாகம்,சுத்திசெய்த வசநாபி 4 1/2-பாகம், இந்த தினுசுகளை கல்வத்தி லிட்டு திரிகடுகு கியாழம். நிலபனங்கிழங்குரசம், சித்திரமூலரசம், கரசனாங்கண்ணி ரசம், கோஷ்டகியாழம் இவைகளால் தனித்தனி மூன்றுதடவையும், நொச்சி, இஞ்சி, ஆடாதோடை, கெஞ்சாஇலை,வேப்பிலை இவைகளின் சாற்றினால் தனித்தனி ஒரு தடவையும் அரைத்து குன்றிபிரமாணம் மாத்திரைகள் செய்து வைத்து கொள்ளவேண்டியது. வேளைக்கு 1-2 மாத்திரைகளாக அனுபானங்களுடன் சாப்பிட்டுவந்தால், வாதரோகம், சூலை, சிலேஷ்ம
    ரோகம், கிரஹணி, சந்நிபாதம், முகவாதம், அபஸ்மாரம், அக்கினிமந்தம், சீதபித்தம், பிலீகோதரம், குஷ்டரோகம், இந்தரோகங்கள்
    நீங்கும்.

    கடிவாதத்திற்கு வாதகேசரிரசம் :- சுத்திசெய்த லிங்கம், சுத்தி செய்த வசநாபி, கடுரோகணி, திரிகடுகு, வசம்பு இவைகள் சம எடை செய்து தோலாயந்திரத்தில் ஒருஜாமம் எரித்து 1-2 குன்றி வீதம் கொடுத்தால் கடிவாதம் நீங்கும்.

    ஊருஸ்தம்ப வாதத்திற்கு வாதகஜாங்குசம் :- சுத்திசெய்த பாதரசம் 8-பாகம், கழுநீரில் மூன்று நாள் ஊரவைத்த எட்டிக்கொட்டை 8-பாகம், சுத்திசெய்த கெந்தி 8-பாகம், திரிகடுகு வகைக்கு 3-பாகம், திரிபலை, வகைக்கு 3-பாகம், இவைகளை கல்வத்தி லிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து குன்றிஎடை மாத்திரைகளாகச் செய்துலர்த்தி வைத்துகொள்ளவேண்டியது.

    வேளைக்கு தேக தத்துவத்தை அறிந்து 1 முதல் 2 மாத்திரை களாக நெய் மிளகுச் சூரணம்சேர்ந்த அனுபானத்துடன் கொடுத்து வர ஊருஸ்தம்ப வாதத்துடன் 80 வாதங்களும் நாசமாகும்.

    கம்ப வாதத்திற்கு விஜயபைரவிரசம் :- இரச பஸ்பம், தாம்பிர பஸ்பம் இவைகள் இரண்டும் சம எடையாக கல்வத்திலிட்டு நெறிஞ்சல்வேர் ரசத்தில் அரைத்து உலர்த்தி, இம்மாதிரியாக 21-நாள் அரைத்து பிறகு குன்றி பிரமாணம் மாத்திரைகள் செய்து நிழலி லுலர்த்தி பேரரத்தை கியாழத்திலாவது அல்லது நெய் மிளகு சூரணத்துடன் கலந்தாவது ஆறு மாதங்கள் சாப்பிட்டால் கம்பவாதம் நடுக்கல் நீங்கும்.

    சீதவாதத்திற்கு அக்கினி குமார ரசம் :- இரசபஸ்பம், தாம்பிர பஸ்பம், சுத்திசெய்த வசநாபி இவைகள் தனித்தனி 1-பாகம், சுத்தி செய்த கெந்தி 2-பாகம், திரிகடுகு 1-பாகம், திரிபலை 1-பாகம், இவைகளை கல்வத்திலிட்டு நொச்சி இலை, கண்டங்கத்திரி வேர், சித்திர மூலம், சிவப்பு ஆமணக்கு வேர், காட்டுக்கொடி, பாகல், கரும் மணத்தக்காளி இவைகளின் ரசத்தினால் 21 முறை அரைத்து பாவனை செய்து உளுந்து அளவு மாத்திரைகள் செய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால், சந்நிபாதம், சீதாங்கவாதம், வாய்வுபிடிப்புகள் இவைகள் நீங்கும். சந்நிபாத சீதசுரத்தினால் மரணாவஸ்தையடைய சித்தமாயிருக்கும் ரோகியானது நடுநெத்தியில் மயிரை வாங்கிவிட்டு ஊசியால் இம்மருந்தை எடுத்து அவ்விடத்தில் குத்தி மருந்தையேற்றி ரத்தத்துடன் சேருகிற வரையிலும் கையினால் தேய்த்தால் சந்நி பாதம் நீங்கி சீவிப்பான் எனக் கூறப்படுகிறது.

    முகவாதத்திற்கு சதுர்முக ரசம் :- இரசபஸ்பம், அப்பிரக பஸ்பம், சுத்திசெய்த மயில்துத்தம், அஞ்சனக்கல், சுத்திசெய்தசிலாசத்து, சுத்திசெய்த குங்கிலியம், சுத்திசெய்த மனோசிலை இவைகள் சமஎடையாக தேன்விட்டு அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து கொடுத்தால் முகவாதம் குணமாகும்.

    அசீதிவாதத்திற்கு காலாக்கினி ருத்திர ரசம் :- ரசம், வச நாபி, கெந்தி இவைகளை சுத்திசெய்து இத்துடன் குரோசானியோமம், திரிபலை, சஜ்ஜக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், சித்திரமூலம். சைந்தல வணம், சீரகம், சவ்வர்ச்சலவணம், வாய்விளங்கம், சுட்ட வெண் காரம், திரிகடுகு இவைகளை சமஎடையாகச்சேர்த்து சூரணித்து இந்த சூரணத்திற்கு சமமாக சுத்திசெய்த எட்டிக்கொட்டை சூரணத் தைக் கலந்து கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் ஒருநாள் அரைத்து மிள

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum