என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
வாத ரோக மருந்துகள் வாத ரோக சிகிச்சைகள் -2
2 posters
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
வாத ரோக மருந்துகள் வாத ரோக சிகிச்சைகள் -2
மாஷதைலம் :- உளுந்து 64 தோலா 256 தோலா எடையுள்ள ஜலத்தில் போட்டு நாலிலொன்றாக கியாழம் வைத்து அந்த கியாழத்திற்கு நாலு பங்கு பசும்பாலும் 64 தோலா எடை நல்லெண்ணெய்யும் சேர்த்து ஜீவநீயகணத்தில் சொல்லிய 8 சரக்குகள் அதாவது சோம்பு, இந்துப்பு, சிற்றரத்தை, அதிமதூரம், சிற்றாமுட்டி சுக்கு, மிளகு, நெரிஞ்சல், திப்பிலி இவைகள் வகைக்கு 1 தோலாவீதம் கற்கம் செய்து அதில் விட்டு தைலபக்குவமாகக்காய்ச்சவும் இந்த தைலத்தை உள்ளுக்கு குடித்தாலும் அல்லது மேலுக்கு தடவினாலும் அல்லது வஸ்திரகர்மஞ்செய்தாலும்பக்ஷகாதம், அர்தித வாதம், கர்ணசூலை, செவிடு, திமிர்ரோகம் சந்நிபாதரோகம், கைநடுங்கல், கைகள்சுழங்கித்தல், கழுத்துவலி இழுப்பு, முதலிய கழுத்துரோகங்கள் நீங்கும்.
சதாவரிநாராயணதைலம் :- சதாவரி, சிற்றாமல்லி, நிலக்கடம்பு கிச்சிலிக்கிழங்கு, சிற்றாமுட்டி, ஆமணக்குவேர், முள்ளங்கத்திரி கண்டங்கத்திரி, முதியார்கூந்தல், புங்கண், முள், அழவணை இவைகள் வகைக்கு 40-தோல, 5024-தோலாஎடை ஜலத்தில்ப்போட்டு கியாழம் நாலில் ஒருபங்கு மீறும்படிக் காய்ச்சி வடிகட்டி அதில் வெள்ளைச்சாரணை, வசம்பு, மரமஞ்சள், தண்ணீவிட்டான்கிழங்கு, சந்தனம், கிருஷ்ணாகரு, சிலாசத்து, கிரந்திதகரம், கோஷ்டம், கல்லுப்பு, ஏலக்காய், ஜடாமாஞ்சி, துளசி, சிற்றாமுட்டி, அமுக்கிறாக்கிழங்கு, இந்துப்பு, சிற்றரத்தை, மஞ்சிஷ்டி, கோரைக்கிழங்கு, கிரந்திதகரம், காட்டுமிளகு, ஞாழல் இந்த தினுசுகள் வகைக்கு 6-தோலா கற்கஞ்செய்து பசும்பால், ஆட்டுபால் இவைகள் தனித்தனி 2-சேர்கள் தண்ணீவிட்டான்கிழங்கு ரசம் 1-சேர், எண்ணெய் 1-சேர் இவைகள் யாவையும் சேர்த்து தைலப்பதமாகக் காய்ச்சி இறக்கிகொண்டு கிராம்பு, நகமென்கிற வாசனைதிரவியம், தக்கோலம், வாய்விளங்கம்,சீரகம், இலவங்கப்பட்டை, கடுகுரோகணி, பச்சைக்கற்பூரம், குங்கு மப்பூ, கஸ்தூரி இவைகள் யாவையும் சூரணித்து தைலத்தில் போடவும். இந்த தைலத்தை வாதரோகத்தால் பீடிக்கப்படும் குதிரைகளுக்கு, ஆனைகளுக்கு, மனிதர்களுக்கு தடவினால் சகல வாதங்கள்
நாசமாகும். மனிதர்கள் அதை உட்கொண்டால் தீர்க்காயுசு பலம் நிச்சயமாய் உண்டாகும். ஹிருதயசூலை, பாரிச்சூலை, ஒற்றை தலைநோய், கண்டமாலை, வாதரக்தம், காமாலை, அஸ்மரீ, பாண்டு, உன்மாதம் இவைகளை நீங்கும்.
பிரசாரீணீ தைலம் :- முதியார்கூந்தல் சமூலம் 300-தோலா, தண்ணீவிட்டான்கிழங்கு 400-தோலா, அமுக்கிறாக்கிழங்கு 400- தோலா, தாழம்பூ இதழ்கள் 400-தோலா, தசமூலம் பிரத்தியேகம்
400-தோலா, ஜலம் 102400-தோலா, இவைகளை 1024-தோலா கியாழன் மீரும்படியாக சுண்டக்காய்ச்சி அதில் கியாழத்திற்கு இரண்டு பாகம் அதிகமாக புளித்தசலம், தயிர்மூதுதேட்டை, பால், வெள்ளைக்
கரும்புரசம், ஆட்டுக்கரிரசம் இவைகள் பிரத்தியேகம் 1024-தோலாஎள் எண்ணெய் 1024-தோலா இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து பிறகு சேராங்கொட்டை, கிரந்திதகரம், சுக்கு, சித்திரமூலம், திப்பிலி, கிச்சிலிக்கிழங்கு, வசம்பு, முதியார்கூந்தல், மோடி, தேவதாரு, தண்ணீவிட்டான்கிழங்கு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, வெட்டிவேர், குங்குமப்பூ, மஞ்சிஷ்டி, கருப்புசேராங்கொட்டை, நகமென்கிற வாசனைதிரவியம், அகரு, பச்சைக்கற்பூரம், மஞ்சள், கிராம்பு, காமாக்ஷ¢புல், சந்தனம், தக்கோலம், நாயுருவி, கோரைக்கிழங்கு, மரமஞ்சள், கோஷ்டம், கிச்சிலிக்கிழங்கு, காட்டுமிளகு, சிலாரசம், கிருஷ்ணாகரு, தாழம்பூ, திரிபலை, கற்பூரகிச்சிலிக்கிழங்கு, புஷ்கரமூலம், க்ஷ£ரகாகோளி, காட்டுப்பச்சைபயறு, காட்டு உளுந்து, வெள்ளைத்தண்ணீவிட்டான்கிழங்கு, நிலப்பனை, சாரனை, சசமூலங்கள், போளம், ரக்தபோளம், நாககேசரம், ரசாஞ்சனம், கடுகு ரோகணி, பின்னங்காய் இவைகள் வகைக்கு 12-தோலா விகிதம் சேர்த்து கற்கஞ்செய்து மந்தாக்கினியால் தயிலபதமாகக் காய்ச்சிஅப்பியங்கனம் செய்தால் சருமரோகம் நீங்கும். பானம் செய்வதால் கோஷ்டகதவாதமும் அன்னத்துடன் கலந்து சாப்பிட்டால் குஷ்மநாடிகவாதமும், நசியம் செய்தால் ஊர்த்துவதகத வாதமும்வஸ்திகர்மம்செய்தால் பக்ஷ¡சிரிதவாயுவும், நிரோஹிகிரியை செய்தால் சர்வாங்கவாதமும் போம். வாதம், பித்தம், கபம், தொந்தம் சந்நிபாத சம்பந்தமான சுவஸ்தமாகும்.
விஷகர்ப்பதைலம் :- நொச்சி, கரிசனாங்கண்ணி, ஊமத்தன் இவைகளின் ரசங்கள் கோமூத்திரம் இந்த தினுசுகள் வகைக்கு 64 தோலா வசம்பு, கோஷ்டம், ஊமத்தம்விரை, காயபலம் இவைகள் வகைக்கு 2 பாகம் இவைகள் யாவையும் கற்கம் செய்து கலந்து கல்கத்திரவியங்களுக்குச் சமம் வசநாபியும் எள் எண்ணெய் 64தோலா எடையுஞ் சேர்த்து தைலபக்குவமாகக்காய்ச்சி மேலுக்கு தடவி பிடிக்கச்செய்தால் வாதவியாதி நிவர்த்தியாகும்.
இத்தைலத்தில் நாபி, ஊமத்தை, முதலிய கொடிய நஞ்சுச்சரக்குகள் சேர்ந்திருப்பதால் இந்தத்தைலம் வாயில் படாதபடி கவனிக்கவும்.
மஹாபலாதி தைலம் :- சிற்றாமுட்டிவேர், தசமூலங்கள், யவ தானியம், இலந்தை, கொள்ளு இவைகளை சமஎடையாகக் கொண்டு முறைப்படி எட்டிலொன்றாக காய்ச்சிய கியாழம் பசும்பால் இவைகள் வகைக்கு 8 பாகங்கள் இந்துப்பு, அகருகுங்கிலிய்ம் சரளதேவதாரு, தேவதாரு, மஞ்சிஷ்டி, சந்தணம், கோஷ்டம், எலக்காய்
இலந்தை, தண்ணீர்விட்டான்கிழங்கு, பன்னீர்கிழங்கு, சதாப்பிலை சாரணை இவைகளை சமஎடையாக கற்கஞ்செய்து கியாழத்தின் எடையில் எட்டிலொன்றை சேர்த்து தயிலபதமாகக்காய்ச்சி பொன்பாத்திரத்திலாவது
அல்லது வெள்ளிப்பாத்திரத்திலாவது அல்லது மண்பாத்திரத்திலாவது உபயோகித்தால் சகலவாதரோகங்கள் நிவர்த்தியாகும்.
சிசுவைப்பெற்றவளுக்கு தேகபலத்தை அறிந்து கொடுத்தால் பிரசவத்திலுண்டான ரோகங்கள் நீங்கும்.
மலடிக்கு கொடுத்தால் கர்ப்பிணியாவாள். புருஷனுக்கு கொடுத்தால் நஷ்டவீரியம் விரித்தியாகும். தேகதத்துவத்தை அறிந்து கொடுத்தால் ஷீணகாதம், மர்மகாதம், தண்டாகாதம், பீடை அஸ்திபங்கம், ஆஷேபகாதவாதங்கள் இவைகள் யாவும் நிவ்ர்த்தியாகும்.
சந்தனாதிக்தைலம் :- சந்தனம், தாமரைத்தண்டுகள், கோஷ்டம் வெட்டிவேர், தேவதாரு, சிறுநாகப்பூ, இலவங்கப்பத்திரி,ஏலக்காய், இலவங்கப்பட்டை, ஜடாமாஞ்சி, கிரந்திதகரம், வெட்டி
வேர், ஜாதிக்காய், கழற்சிக்காய், குங்குமப்பூ, ஜாபத்திரி, நகமென்கிற வாசனைதிரவியம், குங்கிலியம், கஸ்தூரி, ஓமம், இஞ்சிரசம், புஷ்க்கரமூலம், கோரைக்கிழங்கு, ரக்த சந்தனம், நன்னாரிவேர், கிச்சிலிக்கிழங்கு, பச்சைக்கற்பூரம், மஞ்சிஷ்டி, அரக்கு, அதிமதுரம், கடுகுரோகணி, பெரியசோம்பு, தண்ணீவிட்டான்கிழங்கு,
பெருங்குரும்பை, அமுக்கிறாக்கிழங்கு, சுக்கு, தாமரைப்பூ, கிருஷ்ணா கரு, காட்டுமிளகு, கிராம்பு, தக்கோலம், இவைகள் வகைக்கு 2-தோலா சேர்த்து கியாழம் வைத்தது 1-பாகம், தசமூல கியாழம் 6-பாகம், பால் 6-பாகம், நவதானியம், இலந்தை, கொள்ளு, சிற்றாமுட்டி இவைகளின் கியாழம் தனித்தனி 1-பாகம், இவைகளையாவும் ஒன்றாகச்சேர்த்து இதில் பதினாறிலொருபாகம் எண்ணெயை விட்டு தைலபதமாகக் காய்ச்சி, பாண்டத்திற்கு துபாதிவாசனை கொடுத்தி அதில் தைலத்தை வார்த்து வைக்கவும். இதை முடித்தைலமாகவும், பிடித்தைலமாகவும் உபயோகப்படுத்திவர 80-வாதங் கள், கருப்பினிரோகம், பாலரோகம், க்ஷ£ணவாதம், தாபயுக்தமான ஜீரணசுரம், சீதசுரம், விஷமசுரம், சோஷை, அபஸ்மாரம், குஷ்டரோகம், நமைச்சல், அதிஉஷ்ணம், வெள்ளைகுஷ்டம், இவைகள்நீங்கும். மலடிக்கு சந்தானமுண்டாகும். இன்னும் இதனால் தேஜசு, புஷ்டி இவைகள் உண்டாகும்.
ராஸ்னாபூதிக தைலம் :- தசமூலங்கள், சிற்றாமுட்டி, மரமஞசள், அமுக்கிறாக்கிழங்கு, தண்ணீர் விட்டான்கிழங்கு, ஆமணக்குவேர், நொச்சிவேர், முருங்கை வேர்ப்பட்டை, கரும்புவேர், அழவணை, சித்திரமூலம், புங்கன், முள்ளங்கி, சாரணை, நிலகாளான்,எருக்கன், பேயாவரை, சீந்தில்கொடி, எட்டிகொட்டை, சிகப்புஆமணக்கு வேர், ஜடாமாஞ்சி, செம்பருத்தி, நவதானியம், இலந்தை, கொள்ளு இவைகளுக்கு சமஎடை சித்தரட்தை இவைகள் யாவுக்கும் சமஎடை புங்கன்பட்டை இவைகளை கியாழம்க் காய்ச்சி எட்டில் ஒரு பாகமாக இறக்கிகொண்டு கக்ஷ¡யத்திற்கு நாலில் ஒரு பாகம் எண்ணெய் இதற்கு சமஎடை ஆட்டுப்பால் சேர்த்து குங்கிலியம், கிரந்திதகரம், ஜடாமாஞ்சி, திரிகடுகு, திரிபலை, இலவங்கப்பட்டை,இலவங்கப்பத்திரி, ஏல்க்காய், நாககேசரங்கள், கிச்சிலிக்கிழங்கு, வாய்விளங்கம், தேவதாரு, பெருங்காயம், சித்தரத்தை, வசம்பு, கடுகுரோகணி, அதிமதுரம், சுக்கு, சித்திரமூலம், ஞாழல், மோடி,சந்தனம், செவ்வியம், ஓமம், கிராம்பு, சம்பங்கி மொக்கு, கோஷ்டம், மஞ்சிஷ்டி, பெரிய சோம்பு, வெள்ளை கடுகு, ஜாதிக்காய், வாசனைப்புல், வெட்டிவேர் இவைகள் யாவையுஞ் சூரணித்து எண்ணைக்கு ஆறிலொருபாகமாக கற்கஞ்செய்துச்சேர்த்து மந்தாக்
கினியால் தைலப்பக்குவமாக காய்ச்சி வடிக்கவும். இதை பானம், லேபனம் சிரோவஸ்தி, முதலியவைகளாகப்பயன்படுத்த தனுர்வா தம், அந்தராயாமவாதம், குதவாதம், அவபஹீவாதம், ஆ§க்ஷபகவாதம், பிராணயாமவாதம், விசுவாசீவாதம், அபதந்திரிகாவாதம் ஆடியவாதம், ஹனுஸ்தம்பவாதம், சிராவாதம், அபதானகவாதம்தூம்ரதவாதம், சங்கவாதம், கர்ணவாதம், நாசாவாதம், பக்குவாதம் சர்வாங்கவாதம், ஏகாங்கவாதம், அர்த்திதவாதம், பாதஹாரிசாவாதம் பக்ஷகாதவாதம், ஊருஸ்தம்பவாதம், சப்தவாதம் இவைகள்
யாவும் நீங்கும்.
பலா தைலம் :- சிற்றாமுட்டி 8 பாகம், தசமூலங்கள் 8 பாகம், கொள்ளு, இலந்தைவிரைப்பருப்பு, இவைகள் வகைக்கு 8 பாகம் மேற்கூறியவைகளை 32 பாகம் ஜலத்தில் விட்டு எட்டில் ஒரு பாகமாக
கியாழம் விட்டு வடிகட்டிக்கொண்டு அந்தக்கியாழத்துடன் பால் 8 பாகம், எள் எண்ணெய் 1 பாகம், இவைகள் யாவையுஞ்சேர்த்து அதில் தண்ணீர்விட்டான்கிழங்கு, கோஷ்டம், தேவதாரு, அகரு, இந்துப்பு வசம்பு, வெள்ளைச்சாரணை, ஜடாமாஞ்சி, வெள்ளைநன்னாரிவேர், இலவங்கப் பத்திரி, பெரியசோம்பு, அமுக்கிறாக்கிழங்கு, ஏலக்காய், இவைகள்யாவையும் எண்ணெய்க்கு நாலில் ஒரு பாகமாக கல்கஞ்செய்து அத்துடன் கலந்து தைலபக்குவமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டியது.
இதை உபயோகித்தால் சகல வாத ரோகங்கள் நிவர்த்தியாகும். மலடிகள் இதைச் சாப்பிட்டால் புத்திரவதியாவார்கள் தாது க்ஷணமான புருஷன் சாப்பிட்டால் தாதுவிருத்தியாகும். மிகவும் ஆயாசத்தை உடையவர் தடவினால் ஆயாசம் நிவாரணமாகும்.
கிரீஸ்வதம்பாதி வாதத்திற்கு மாஷாதிதைலம் :- உளுந்து, யவதானியம், முள்ளங்கத்திரி, அகத்திவிரை, பூனைகாஞ்சொரிவிரை, அழவணை, நெரிஞ்சல், புணற்றண்டு, இவைகள் வகைக்கு
7 பலம் இவைகளை 224 பலஞ் சலத்தில் போட்டு சதுர்சாம்தமாக கியாழம் காய்ச்சி வடிகட்டி, பருத்திவிரையிலுள்ள பருப்பு, இலந்தை விரையிலுள்ள பருப்பு, கொள்ளு இவைகள் வகைக்கு 14 பலங்கள் விகிதம் காய்ச்சிவடிகட்டி ஆட்டுமாமிசம் 20 பலம் 64 பலம் சதூர் தாமிசமாக கியாழம் காய்ச்சி வடிகட்டி 20 பலம் எண்ணெய் இவைகள்
யாவையும் சேர்த்து சுக்கு, மிளகு, சிற்றரத்தை, சீந்தில்கொடி கோஷ்டம், வெள்ளைச்சாரணை, ஆமணக்குவேர், திப்பிலி, பெரிய சோம்பு, சிற்றாமுட்டிவேர், முதியார் கூந்தல், ஜடாமாஞ்சி,
கடுகுரோகணி, இவைகள் யாவையும் 1/2 பலம் வீதம் கல்கஞ்செய்து அதில் கலந்து சிறு தீயில் எரித்து தைலபதமாக காய்ச்சவும் . இதைத்தடவினால் கழுத்துநம்பவாதம், பாஹீகவாதம், அர்த்தாங்கவாதம் ஆஷேபகவாதம், அபதானகவாதம், ஹஸ்தபாதாதிசாகாகம்பம், சிரோகம்பம், விசுவாசீவாய்வு, அர்திதவாதம், இவைகள் யாவுங் குணமாவதுடன் சகல வாதங்களும் நாசமாகும்.
மாஷ தைலம் :- உளுந்து 4-சேர் பாண்டத்தில்போட்டு 32-சேர் ஜலம்விட்டு நாலில் ஒரு பாகமாகக் காய்ச்சி பால்கீரை, சிறிய சதாப்பிலை, திரிகடுகு, தும்பராஷ்டகம், அதிமதுரம், இந்துப்பு, பூனைகாஞ்சொரிவிரை இவைகள் 1/4 சேர் சூரணஞ்செய்து சேர்த்து நல்லெண்ணெய் 4-சேர், பால் 16-சேர் இவைகள் யாவையும் ஒன்
றாகச் சேர்த்து தைலபதமாகக் காய்ச்சி சரீரத்திற்கு தடவிப்பிடிக்க அஸ்திவாதம், நடுக்குவாதம், கம்பவாதம், பாதிரியரோகம் இவைகள் நீங்கும்.
ஆமலாதி வாதத்திற்கு விஷதிண்டுக தைலம் :-எட்டிக்கொட் டை 4-சேர், கழுநீர் 32-சேர் வார்த்து நாலில் ஒன்றாக சுண்டக்காய்ச்சி புதிய வஸ்திரத்தினால் வடிகட்டி அதில் எலுமிச்சம்பழச்சாறு 8-சேர் இவைகள் யாவும் ஒன்றாகக் கலந்து தைலப்பக்குவமாகக் காய்ச்சி சரீரத்திற்கு தடவிக்கொண்டிருந்தால் சர்வாங்கவாதம், சந்நிவாதம், அஸ்திவாதம், அமிலவாதம், கபவாதம், கோரமான வாதசூலைகள், ஊருதம்பவாதம், தனுர்வாதம் இவைகள் நீங்கும்.
கர்ணவாதத்திற்கு தசமூலாதி தைலம் :- வில்வம், பூசினி, முன்னை, பாதிரி, பெருவாகை, சிற்றாமல்லி, நிலக்கடம்பை, பெரிய முள்ளங்கத்திரி, நெரிஞ்சல், இவைகள் சமஎடையாகச் சேர்த்து
கியாழம்ப்போடு கியாழத்திற்கு சமஎடை ஆட்டுப்பால் சேர்த்து இந்த இரண்டுக்கு சமம் எண்ணெய் வார்த்து தயிலபதமாகச்சமைத்து காதில்விட்டால் செவிடு, சத்தமுண்டாகுதல் இவைகள் நீங்கும்.
சகல வாதத்திற்கு அர்க்காதி தைலம் :- எருக்கன்பால், ஆட்டுப்பால், நொச்சியிலைரசம், புளியிலை ரசம், எண்ணெய் இவைகள் சமஎடையாக பாண்டத்தில்ப்போட்டு தயிலப்பக்குவமாக காய்ச்சி சரீரத்திற்கு லேபனஞ்செய்தால் 80-வாதங்கள் நீங்கும்.
ஏரண்டபுட பாகம் :- ஆமணக்கு விரையிலுள்ள பருப்பை எடுத்துக்கொண்டு அதற்கு எட்டுபாகம் அதிகமாக பாலைவார்த்து அந்தப்பால் சுண்டுகிற வரையிலும் வேகவைத்து எடுத்து உலர்த்தி மைபோலரைத்து சிறிது நெய்விட்டு சிறுதீயால் வதக்கி ஆ ய பிறகு அதில் திரிகடுகு, இலவங்கம், ஏலக்காய், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, அமுக்கிறாக்கிழங்கு, ஜடாமாஞ்சி,சிற்றரத்தை, கருவசம்பு, காட்டுமிளகு விதைகள், தண்ணீர்விட்டான்கிழங்கு, லோகபஸ்பம், சாரணை, கடுக்காய், வெட்டிவேர், ஜாதிக்காய், ஜாபத்திரி, அப்பிரகபஸ்பம், இவைகளை சமஎடையாகச் சேர்த்துச் சூரணித்து இவைகள் யாவும் ஒன்றாகக் கலந்துமேற்கூறிய சகல சரக்குகளுக்கும் சமஎடையாக சர்க்கரைய பாகுபிடித்து அதில் சரக்குகளைப் போட்டு சகலமும் ஒன்றாக சேரும் படியாகத் திரட்டி எடுக்கவும். இம்மருந்தை காலையில் சாப்பிட்டு வந்தால் 80 வித வாதரோகங்கள், 40 வித பித்தரோகங்கள் 8 வித உதரரோகங்கள், 21 வித மேகசாட்டியங்கள், 60 விதங்களான நாடி விரணங்கள், 18 வித குஷ்டவியாதிகள், 7 விதமான க்ஷய ரோகங்கள், 5 வித பாண்டுரோகங்கள், 6 வித சுவாசரோகங்கள், 4 வித சங்கிரஹைகள், திருஷ்டிரோகங்கள், சகலவாதரோகங்கள் இவைகள் யாவும் நாசமாகும். இதனைச் சாப்பிடும்போது பத்தியமாகச் சாப்பிடவேண்டியது. இது அனுபவமானது.
ரசோன பாகம் :- வெள்ளைப்பூண்டு மேல்தோல் நீக்கியது 64 தோலா இதை மோரில் ஊறவைத்து மறுநாள் அரைத்து 246 தோலா பாலில் கரைத்து அடுப்பிலேற்றி காய்ச்சி கோவா ஆகும் படி கிளறிக்கொண்டு அதில் 16 தோலா நெய் விட்டு சிற்றரத்தை, தண்ணீர் விட்டான்கிழங்கு, ஆடாதோடை, சீந்தில்கொடி, கிச்சிலிக்கிழங்கு சுக்கு, தேவதாரு, திப்பிலி, மிளகு, ஓமம், சித்திரமூலம் பெரியசோம்பு, வெள்ளைச்சாரணை, வாய்விளக்கம் இவைகள் வகைக்கு 1 தோலா வீதம் சூரணித்துப் போட்டு ஆறிய பிறகு எடுத்து 16 தோலா தேன் கலந்து வைத்துக்கொள்ளவும். அதை சர்க்கரை அனுபானத்துடன் சாப்பிட்டால் ஆடியாவாதம் ஹதுக்கிரஹவாதம், ஆஷேபகவாதம், ஊருஸ்தம்பவாதம், ஹிருத்ரோகம், சர்வாங்கவாதம்சந்நிபாதவாதம் இவைகள் நீங்கும். சரீரகாந்தி, தேகபுஷ்டி ஆயுசுவிருத்தி, இவைகள் உண்டாகும்.
குபேர பாகம் :- சுமார் 50 தோலா எடையுள்ள சுழற்சிக்காயை ஒரு முடாஜலத்தில் ஒருநாள் பகலும் இரவும் ஊறவைத்து மறு நாள் காலையில் எடுத்து அதன் மேல் ஓட்டை எடுத்து விட்டு பருப்பை அரைத்து அதற்கு நாலு பங்கு அதிகமாக பாலும் நெய்யும் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பாலெல்லாஞ்சுண்டி ஈறமில்லாமல் இருக்கும் பதத்தில் ஆறிய பிறகு அதில் இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி சிறுநாகப்பு, ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி சோம்பு, சீரகம், கோரைக்கிழங்கு, இலவங்கம், சிற்றாமுட்டிவேர் மஞ்சள், மரமஞ்சள், இவைகளின் சூரணங்கள் வகைக்கு 2 தோலா லோஹ பஸ்பம், தாம்பிரபஸ்பம், வங்கபஸ்பம், இவைகளும் வகைக்கு 2 தோலா இவைகள் யாவையும் ஒன்றாய்ய்சேர்த்து போதிய அளவு
தேன்விட்டு இரசாயனம்போல் செய்து வைத்துக்கொண்டு தேகத்தின் பலத்தை அறிந்து கொண்டு 1/4 முதல் 1/2 தோலா வீதம் கொடுத்துவர சம்பூர்ணவாயு, அக்கினிமாந்தம், பலக்ஷயம், பிரமேகம், மூத்திர கிரிச்சரம், அஸ்மரீ, குன்மம், பாண்டு, பீனசம், கிறாணி, அதிசாரம், அருசி இவைகளை நிவர்த்திக்கும். காமவிருத்தி, தாதுவிருத்தி, காந்திபுஷ்டி பலம் இவைகளை யுண்டாக்கும்.
லசுனபாகம் :- 1024-தோலா பாலில் மேல்தோல் போக்கியவெள்ளைப்பூண்டு 64-தோலா போட்டு வேகவைத்து அதில்16-தோலா நெய்விட்டு தேன்நிறம் ஆகுறவரையிலும் காய்ச்சி 128-தோலா சர்க்கரையையும், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலரிசி, சிறுநாகப்பூ, மோடி, செவ்வியம், சித்திரமூலம், வாய்விளங்கம், மஞ்சள், மரமஞ்சள், சிவக்கரந்தை, புஷ்கரமூலம், ஓமம், இலவங்கம், தேவதாரு, சாரணை, நெருஞ்சில், வேப்பன், சித்தரத்தை, சோம்பு, தண்ணீர் விட்டான் கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, பேயாவரைவிரை,இவைகள் வகைக்கு 1-தோலா சூரணித்துப் போட்டு கலக்கி இரசாயணம்போல செய்து வைத்துக்கொண்டு நோயின் பலாபலத்தை அறிந்து வழங்கிவர சகல வாதரோகங்கள், சூலைகள், அபஸ்மாரங்கள், உரக்ஷதரோகம், குன்மம், உதரம், வாந்தி, பிலீகை, அண்ட விருத்தி, கிருமிகள், மலபந்தம், அநாஹவாதம், வீக்கம், அக்கினிமந்தம், பலக்ஷயம், விக்கல், இரைப்பு, இருமல், அபதந்திரகவாதம்,
தனுர்வாதம், அன்தராயாமவாதம், பக்ஷவாதம், அபதானகவாதம், அர்திதவாதம், ஆ§க்ஷபகவாதம், குப்ஜவாதம், ஹநுக்கிரஹவாதம்,சிரோகிரஹவாதம், விசுவாசீவாதம், கிருத்தசீவாதம், கல்லிவாதம், பங்குவாதம், சந்நிவாதம், பதிரத்துவம், சகலசூலைகள், கபம்முதலிய வியாதிகளை வெகுசீக்கிரமாக நிவர்த்திக்கும். இந்தவெள்ளைப்பூண்டு
லேகியமானது வாதரோகமென்கிற யானைக்கு சிங்கத்தைப்போல் இருக்கும். வலிவு புஷ்டி இவைகளையுமுண்டாக்கும்.
ஆட்யவாதத்திற்கு பிரபாவதி வடுகங்கள் :- சுத்திசெய்த இரசகற்பூரம் 1-பாகம், சுத்திசெய்தகெந்தி 1/2-பாகம், வாய்விளங்கம் 1/2-பாகம், கிறாம்பு 1-பாகம், ஜாதிப்பத்திரி 1-பாகம், ஜாதிக்காய் 1-பாகம், ஏலக்காய் 1-பாகம், சுக்கு 1-பாகம், திப்பிலி 1-பாகம், மிளகு 1-பாகம் இந்த தினுசுகள் யாவையுஞ் சூரணித்து கல்வத்தி லிட்டு தேன்விட்டு ஒருஜாமம் அரைத்து உளுந்தளவு மாத்திரைகள் செய்து வேளைக்குகொரு மாத்திரை விகிதஞ் சாப்பிட்டால் ஆட்யவாதம் நீங்கும்.
பங்குவாதத்திற்கு பிரபாவதி வடுகங்கள் :- மஞ்சள், வேப்பன் இலை, திப்பிலி, மிளகு, வாய்விளங்கம், கோரைக்கிழங்கு, சீரகம், சுக்கு, சித்திரமூலம், இந்துப்பு, கோஷ்டம், அதிவிடயம், வட்டத்திருப்பி, கடுக்காய்த்தோல் இவைகள் யாவையுஞ் சமஎடையாகச்சூரணித்து கல்வத்திலிட்டு வெள்ளாட்டு மூத்திரத்தினால் நான்கு ஜாமங்கள் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து உலர்த்தி வேளைக்குகொரு மாத்திரையாக வெந்நீரில்கொடுத்துவர பங்குவாதம் குணமாகும். மற்றும் இதனை வெல்லத்துடன் கொடுக்க வாதநோய்களும்,கரிசாலை சாற்றில் கொடுக்க சிரோவாதம், கோமூத்திரத்தில் கொடுக்க பீலிகநோய்களும், ஆட்டுப்பால் அமுக்கிறாக்கிழங்கு சூரணத்துடன் கொடுக்க கக்ஷயகாசங்களும் குணமாகும். இம்மாத்திரையை கோமூத்திரத்தில் அரைத்து மேலுக்கு பூசவிஸ்போடக ரணங்களும், எருக்கன் பாலில் அரைத்து மேலுக்கு கடி வாயில் பூச தேள் கடி விஷமும் நீங்கும்.
தசமூலத் தைலம் :- தசமூலமெனப்படும் கண்டங்கத்திரி, சிறு வழுதுளை, சிற்றாமல்லி, போராமல்லி, நெரிஞ்சில், கூவினை, பெருங்குமிள், தழுதாழை, பாதரி வாகை என்னும் பத்து மூலிகைகளின் வேர்கள் வகைக்கொன்று பலம் 10 வீதம் நன்கு சதைத்து ஓர் பாண்டத்தில் விட்டு இரண்டு தூனி ஜலம் விட்டு ஒரு மரக்கால் அளவிற்கு சுண்டக்காய்ச்சி வடித்து அத்துடன் உழுந்து கியாழம் 1/2 படியும் நல்லெண்ணெய் ஒரு மரக்காலும் சேர்த்து எட்டிவிதை, விலாமிச்சவேர், ஏலம், கோரைக்கிழங்கு, சந்தனம், செஞ்சந்தனம்,
தேவதாரு, சரளதேவதாரு, கோஷ்டம், கடுக்காய், நெல்லிக்காய் தான்றிக்காய், அதிமதூரம், வெட்பாலைவேர்ப்பட்டை, சதகுப்பை நீர்முள்ளிவிதை, மஞ்சிஷ்டி, மரமஞ்சள், கூகை நீர், சுக்கு,
மிளகு, திப்பிலி, இந்துப்பு, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், பெருங்காயம் வகைக்கு பலம் 1/2 வீதம் பொடித்து பால்விட்டரைத்து கற்க்கமாக்கி முன் திரவத்துடன் அடுப்பிலேற்றிப் பதமுறத்தைலங் காய்ச்சிவடித்து வைத்துக்கொள்க.
இதில் வேளைக்கு 1/2 முதல் 1 தேக்கரண்டி வீதம் தினம் ஒரு வேளையாக உள்ளுக்கு அருந்திவர தலைக்கு தேய்த்தல் உடலில் பூசிப்பிடித்தல் முதலியவைகளும் செய்து வர நோய்கள் யாவும் வெகு சீக்கிரத்தில் நீங்கும்.
வாதகேசரித்தைலம் :- நொச்சி, தழுதாளை சதுரங்கள்ளி இவைகளின் சாறு, வெள்ளாட்டுப்பால், எருக்கம்பால், எண்ணெய் ஆமணக்குநெய் வகைக்கு படி 1 வீதம் ஓர் தைல பாண்டத்திலிட்டு நெல்லிக்காய் கந்தகம், கோஷ்டம், சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 8 காசெடையாக எடுத்து பால்விட்டரைத்து அடுப்பிலேற்றி எரித்து பதமுற தைலமாக காய்ச்சி எடுத்து வைத்துக்கொள்க. இதை மேலுக்கு தேய்த்துப் பிடிக்க சகலவாத ரோகங்களும் நீங்கும்.
எருக்கன்பால் தைலம் :- எருக்கம்பால், எருக்கிலைச்சாறு, சதுரங்கள்ளிச்சாறு, பிறண்டைச்சாறு, பற்பாடகைச்சாறு, மெருகன் கிழங்குச்சாறு வகைக்கு 5 பலம் இத்துடன் 10 பலம் நல்லெண்ணெய்
யைச் சேர்த்து அடுப்பிலேற்றி பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொள்க. இதைச்சிறு அளவில் லேசாக மேலுக்கு
பால்விட்டரைத்து முன் திரவங்களுடன் கலந்து தைலபாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து தைலபக்கு வமாக வடித்து வைத்துக்கொள்க.
இத்தைலத்தை பிடித்தைலமாக உடலுக்கு தேய்த்துப் பிடித்துவர கைநடுக்கம், கால்நடுக்கம், தலைநடுக்கம், முதலிய நடுக்கல் வாதங்களை நன்கு குணப்படுத்தும். மேலும் இத்தைலத்தை தைலமாக சிரசில் தேய்த்து ஸ்தானஞ்செய்து வர பாதிரியரோகமென்னும் செவிட்டுரோகம், உபஜிக்வாரோகம் முதலியவைகளும் குணமாகும்.
வாதஹர தைலம் :- சிற்றாமுட்டி, ஆமணக்குவேர், நொச்சி கண்டங்கத்திரி, சிறுவழுதுளை, சிற்றாமல்லி, போராமல்லி, நெரிஞ்சில் வில்வம், செம்முள்ளி, பெருங்குமிள், தழுதாதை,பாதிரி வகை
இவைகளில் வகைக்கு பலம் 10 பலம் சதைத்து ஓர் பாண்டத்திலிட்டு இரண்டு தூணி நீர் விட்டு எட்டிலொன்றாக குடிநீரிட்டு வகைக்கு படி 1 வெள்ளாட்டுப்பால் படி 3 சேர்த்து கலக்கி அமுக்கிறாக்கிழங்கு, கோரைக்கிழங்கு, சதகுப்பை, மஞ்சள், இந்துப்பு ஏலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, சுக்கு, வசம்பு அகில், தேவதாரு, சிற்றரத்தை, வகைக்கு பலம் 1/4 வீதம் சன்னமாய் பொடித்து வஸ்திராயஞ்செய்து மேற்படி திரவங்களுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து பதமுற காய்ச்சி வடித்து ஆறின பின்பு நெற்புடத்தில் ஒரு வாரம் வைத்து எடுக்கவும். இதை மேலுக்கு தேய்த்துப் பிடிக்க சகலவாத ரோகங்களும் நீங்கும்.
வேம்புச்சுடர் தைலம் :- வேப்பண்ணெய், நல்லெண்ணெய் வகைக்கு பலம் 5 இவைகளைக் கலந்து வைத்துக் கொள்க. நெல்லிக்காய் கந்தகம், பெருங்காயம் இவையிரண்டையும் வகைக்கு பலம் 4
வீதம் பொடித்து கல்வத்திலிட்டு தோலுரித்த வெள்ளைப்பூண்டு பலம் 8 கூட்டி அரைத்து ஒரு அடி சதுரமுள்ள ஒரு சுத்தமான சீலையில் தடவி சிறிது உலர்த்தி வேளைச்செடியின் வேர்கள்
நாலைந்து துண்டுகளை கத்தையாக கட்டி அதன் மீது மருந்து பூசிய சீலையை சுற்றி இரும்புக்கம்பியால் சுற்றி கட்டித் தொங்கவிட்டு முன்பு வேப்பண்ணெய்யும், நல்லெண்ணெய்யும் கலந்து வைத்ததில்
தோய்த்துக்கொழுத்தவும் இப்படியே எண்ணெய்யை சிறிது சிறிதாய் கரண்டியால் மொண்டு எரியுஞ்சுடரில் விட்டுக்கொண்டே வரவும். எண்ணெய் எல்லாம் முடிந்த பின்பு சேகரஞ்செய்த சுடர்தைலத்தை முன்மாதிரியே சிறிது சிறிதாய்விட்டு கொளுத்தி சுடர் தைலம் வாங்கவும். அதாவது ஒரு முறை கிடைக்கப்பெற்ற
தேய்த்துவர மகாவாதரோகக் கூட்டங்கள் நீங்கும். இதில் ஒரு துளிகாதில் விட கடூர கர்ணசூலையும் குணமாகும். இன்னும் இதில் 1/2 முதல் 1 தேக்கரண்டியளவு வீதம் கருங்குருவையரிசிமாவில் விட்டு
பிசறி தினம் ஒருவேளையாக 10-20 நாள் அருந்த குன்மம், சோபை, பாண்டு, சூலை, வாய்வு முதலியன குணமாகும். இச்சா பத்தியமா யிருத்தல்வேண்டும்.
வாதநாசத் தைலம் :- நொச்சி, முடக்கற்றான், வீழி, வெண்சாரனை, உத்தாமணி, பாவட்டை, பொடுதலை இவைகளின் சாறுகள், தேங்காய்ப்பால், சிற்றாமணக்கு, நெய் வகைக்கு ஒரு படி-1/4, இதில் சுக்கு, வசம்பு, தேவதாரு, சீரகம், கப்புமஞ்சள், கஸ்தூரிமஞ்சள், வெள்ளைப்பூண்டு, உத்தாமணி வேர், பெருங்காயம், மிளகு, சுட்டஆமையோடு வகைக்கு வராகனெடை 1-வீதம், தேங்காய்ப்பால்விட்டரைத்துக் கலக்கி அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து பதமுறத்தைலங்காய்ச்சி வடித்து வைத்துகொள்க.
இதில் வேளைக்கு 1/2 முதல் 1 பலம் வீதம் தேக பலத்தையும் நோயின் வன்மையையும் கவனித்து தினம் 1 வேளையாக காலையில் கொடுக்க நாலைந்து முறை நன்கு பேதியாகும். இப்படி 1-முதல் 3-வரையில் கொடுக்கலாம். பத்தியமாக இருத்தல் வேண்டும். இதனால் வாதநோய்கள், கை கால் பிடிப்பு, குடைச்சல், இடுப்புவலி, கீல்வாயு, உடலில் ஓடி ஓடி வீங்கி துன்பத்தை தராநின்ற ஓடு வாய்வு, விப்புருதிக் கட்டிகள் முதலியன யாவும் குணமாகும். இதில் வேளைக்கு 1/2 முதல் 1 தேக்கரண்டி வீதம் தினம் 1 வேளையாக காலையில் பாலர்கட்கு 1-2 நாள் புகட்டி பின்பு ஆமையோடு பற்பம்,மாந்தக்குடிநீர் முதலியவைகளை கொடுத்துவர மாந்தரோகம் குணமாகும்.
இலகு விஷமுட்டித் தைலம் :- நல்லெண்ணெய் படி-1, வெள்ளாட்டுப்பாலில் ஓர் இரவி ஊறவைத்து மறு நாள் சிறு துண்டுகளாக நறுக்கிய எட்டிக்கொட்டை சீவல் பலம்-1 1/4, தோலுரித்த வெள்ளைப்பூண்டு பலம் 1 1/4, முருங்கைப்பட்டை தூள் பலம் 3/4 இவைகளை ஒன்றுக்கூட்டி ஓர் தைலப்பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றிச் சிறுதீயாக எரித்து சரக்குகள் சிவந்து மிதக்கும்பதத்தில் வடித்து வைத்துக் கொள்க. இத்தைலத்தை வாதரோகங்களில் பிடித்தைலமாக பயன்படுத்திரவர மிக நல்ல பலனைத் தரும்.
மாஷ தைலம் :- ஒரு படி உளுந்தை ஓர் பாண்டத்திலிட்டு 4-படி ஜலம்விட்டு அடுப்பிலேற்றி காய்ச்சி ஒருபடியாக குடிநீரிட்டு அத்துடன் வெள்ளாட்டுப் பால் படி-1, நல்லெண்ணெய் படி-1 கூட்டி, பூனைக்காலி பருப்பு, சதபுட்பி, அரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, வெட்பாலைமரப்பட்டை, அதிமதுரம், இந்துப்பு, வசம்பு
இவைகள் வகைக்கு வராகனெடை-1 வீதம் எடுத்து வெள்ளாட்டுப் தைலத்தைக்கொண்டே மீண்டும் மடக்கித் தைலம் வாங்குவதால் இதனை மடக்குத் தைலம் எனப்பட்டது.) இப்படி மூன்று முறை
மடக்கி கடைசியில் வருந் தைலத்தை எடுத்து வைத்துகொள்க, வேண்டியபோது இதில் சிறிதளவு எடுத்து அனலில் வெதுப்பி தாளக்கூடிய சூட்டில் உடலில் தேய்த்துப்பிடிக்க வாதநோய்கள் குணமாகும். சிறப்பாக இசிவு ரோகத்திற்கு மிகவும் நன்மையை பயக்கும்.
சம்பீராதித் தைலம் :- நன்கு பழுத்த பெரிய எலுமிச்சங்கனி கள் பத்து சேகரித்து ஒவ்வொன்றையும் நான்கு பிளப்பாய்க் கீறி ஓர் பாண்டத்திலிட்டு அதில் ஆமணக்கெண்ணெய் படி-1/2, கோமூத்திரம் படி-1/2, இலுப்பைப்பட்டைச் சூரணம் பலம் 10-சேர்த்துக்கலக்கி அப்பானையின் வாய்க்கு ஓடு மூடிச் சீலைமண் செய்து பூமியில் குழித்தோண்டி புதைத்து ஒரு மண்டலம் (அதாவது 40 நாள்) சென்றபின்பு எடுத்தி தினந்தோறும் காலையில் ஒரு பழத்தில் நாலில் ஒரு பாகமும் 1/4 பலம் தைலமும் அருந்திவரவும். இப்படியே அரை
முதல் ஒரு மண்டலம் அருந்தி இச்சாபத்தியமாய் இருந்துவர வாத ரோக கூட்டங்கள் யாவும் அணுகாது.
மெருகுள்ளித் தைலம் :- தோலைச்சீவி மெல்லிய துண்டுகளாக நறுக்கிய மெருகன்கிழங்கு பலம் 10, தோலுரித்த வெள்ளைப்பூண்டு திரி பலம் 10 இவைகளிரண்டையும் ஓர் பாண்டத்திலிட்டு அதில்
சிற்றாமணக்கு நெய் வீசை 1/2 சேர்த்து அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து சரக்குகள் சிவந்து மிதக்குஞ் சமயத்தில் கீழிறக்கி ஆறின பின்பு வடித்துவைத்துக்கொள்க.
இதில் வேளைக்கு 1/2 பலம் முதல் 2 பலம் வீதம் தேக திடததிற்கும், நோயின் வன்மை மென்மைக்குத் தக்கபடி தினம் ஒரு வேளையாக காலையில் மட்டும் கொடுத்துவரவும். இப்படி 3-முதல் 5-நாள் வரையில் கொடுக்கலாம். தேவையாயின் 10-15 நாள் விட்டு வைத்து மீண்டும் முன்போல் ஒருமுறை கொடுக்கலாம். இப்படி விட்டுவிட்டு 2-3 முறை கொடுப்பதற்குள் அவசியம் குணமாகும். இதனால் கீல்வாதம் என்னும் சந்நிகசிலேஷ்ம, ரோகம், உடலில் ஓடி ஓடி வரும் வாத வீக்கங்கள், விரணம், மேகசூலை, பிடிப்பு முதலியனயாவும் குணமாகும். மருந்து சாப்பிட்டு வரும்போது உப்பு, புளி நீக்கி பத்தியமிருந்து வருதல் நன்று.
மெழுகுத் தைலம் :- தேன் மெழுகு வீசை 1, சக்கிமுக்கிகல் வீசை 1, சோற்றுப்பு வீசை 1, ஆற்றுமணல் வீசை 1/2, ஓமம், பலம் 5, கப்புமஞ்சள் பலம் 5, சடாமாஞ்சி பலம் 2 1/2, இவற்றுள் தேன்மெழுகையும், சக்கிமுக்கிகல்லையும் சிறு துண்டுகளாக நறுக்கி, ஓமம், கப்புமஞ்சள் இவைகளை ஒன்றிரண்டாக சிறிது இடித்துத்தூள்செய்து, சடாமாஞ்சியை சிறு துண்டுகளாக கத்தரித்து பிறகுயாவையும் ஒன்று சேர்த்துக் கலந்துவைத்துக்கொள்க.
மேற்கூறிய சரக்குகள் யாவும் அரைபாகத்தில் அடங்கும்படி யான ஓர் கழுத்து நீண்ட மட்பானையையும், அதில் மூன்றிலொரு பங்குள்ள மற்றொரு சிறிய பானையையும் சேகரித்து, பெரிய பானையின் பக்கவாட்டில் இரண்டங்குல வட்டமுள்ள ஓர் துவாரத்தையும், சிறிய பானையின் பக்கவாட்டில் துடப்பச் சுப்பல் நுழையும்படியான நாலைந்து சிறு துவ

Re: வாத ரோக மருந்துகள் வாத ரோக சிகிச்சைகள் -2
நன்றி!!!
பாசத்துடன் - பாஸ்கர் ராஜரத்தினம்
பாசத்துடன் - பாஸ்கர் ராஜரத்தினம்
baskarr76- Posts : 2
Points : 2
Reputation : 0
Join date : 22/02/2011
Similar topics
» அக மருந்துகள் 32
» புற மருந்துகள் 32
» விக்கலுக்கான சித்த மருந்துகள்
» தலை வலிக்கான சித்த மருந்துகள்
» மசக்கைக்கு ஹோமியோ மருந்துகள்
» புற மருந்துகள் 32
» விக்கலுக்கான சித்த மருந்துகள்
» தலை வலிக்கான சித்த மருந்துகள்
» மசக்கைக்கு ஹோமியோ மருந்துகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: எலும்பு ,முதுகெலும்பு,சதை ,வலி சார்ந்த நோய்கள் - MUSUCUL SEKELTON SYSTEM DISEASES
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum