என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
தும்பை -துரோண புஸ்பி
ஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகள் -AYURVEDIC HERBALS
Page 1 of 1
தும்பை -துரோண புஸ்பி
ஆயுர்வேதத்தில் இதனை துரோன புஸ்பி என்று சொல்வோம்
குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு ,பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் .
காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்
மஞ்சள் காமாலைக்கு -இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்
தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு.
வரலாறு
<blockquote class="webkit-indent-blockquote" style="border-style: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;">மற்றும் வான்படை வானவர் மார்பிடைஇற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)
இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .
</blockquote>
<blockquote class="webkit-indent-blockquote" style="border-style: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;">அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.
</blockquote>
குணமாகும் நோய்களில் -சளி போகும்,விஷம் தீரும் ,தோல் நோய் போகும்
குணமாக்கும் நோய்களில் -விஷம ஜ்வரம்.அக்னி மாந்த்யம் என்னும் பசி இன்மைக்கு ,காமாலை என்னும் மஞ்சள் காமாலைக்கு ,பக்ஷாகாதம் என்னும் பக்கவாதத்திற்கு ,ப்ரமேஹம் என்னும் சர்க்கரை நோய்க்கு ,விஷ ரோகங்களுக்கு ,மூல நோய்க்கும் நல்ல பலனை தரும் .
காரணம் தெரியாத அரிப்பு அதனுடன் மறைந்து விடும் தடிப்புக்கும் நல்ல பலனை தரும்
மஞ்சள் காமாலைக்கு -இந்த தும்பை பூவில் செய்யும் கண் மை நல்ல பலன் தரும்
தும்பையில் பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித் தும்பை என்று பல வகைகளுண்டு.
வரலாறு
- தும்பை பூ மாலை அணிந்து விட்டாலே அடுத்து வருவது போர் தான்.கம்ப ராமாயணத்தில் சில பாடல்களில் இதனை காணலாம்
<blockquote class="webkit-indent-blockquote" style="border-style: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;">மற்றும் வான்படை வானவர் மார்பிடைஇற்று இலாதன எண்ணும் இலாதன
பற்றினான்; கவசம் படர் மார்பிடைச
சுற்றினான்; நெடுந் தும்பையும் சூடினான். (யுத்த 1054)
அளவு அரு செஞ்சுடர்ப் பட்டம் ஆர்த்தனன்;
இளவரிக் கவட்டு இலை ஆரொடு ஏர் பெறத்
துளவொடு தும்பையும் சுழியச் சூடினான். (யுத்த 1072)
இவ்வாறு சங்க இலக்கியங்களிலும் தும்பைப்பூச் சூடிப் போருக்குச்சென்ற மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன .
</blockquote>
<blockquote class="webkit-indent-blockquote" style="border-style: none; margin: 0px 0px 0px 40px; padding: 0px;">அரையாப்புக் கட்டி யனிலமுதிரம்
பிரியாச் சீதக் கடுப்பும் பேருந் - தரையிற்
பழுதைக் கொள்ளாச் செய்ய பங்கயப் பெண்ணே கேள்!
கழுதைத் தும்பைச் செடியைக் கண்டு'கழுதைத் தும்பை எனும் கவிழ் தும்பை மூலிகையால் அரையாப்புக் கட்டி, வாத நோய், ரத்தமும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு அத்தனையும் நீங்கும் என்கிறார் ஒரு சித்தர்.
</blockquote>
- தும்பைப் பூவையும், பெருங்காயத்தையும் அரைத்து சுத்தமான எண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
- தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூசினால் பூரான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும். தும்பை இலைச்சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர்க்கோவை குணமாகும். பாம்புக்கடிகளுக்கும் தும்பையும் மிளகும் சேர்த்து முதலுதவியாக அளிக்கலாம்.
- தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்புக் கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சிரங்கு , சொறி , நமச்சல்போகும்.
- தும்பை இலைச் சாறை 3 சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் நீரோ, கபால நீரோ, மண்டைக்குத்தலோ, மண்டையிடியோ குணமாகும்.
- தும்பையிலைச் சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல் சூடு அடையும்.புதுப்பானையில் பச்சரிசி, பாசிப்பயறு பொங்கி உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாட்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றினை நசியமிடலாம். நசியத்தில் தெளியவில்லையென்றால் இறப்பது உறுதி.
- நச்சு முறிவில் தும்பை தனித்த ஒரு இடம் பெறுகிறது.
- தும்பை இலை, கீழா நெல்லி இலை இரண்டையும் சம அளவாக எடுத்து அரைத்துச் சுண்டைக்காய் அளவு 1 டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.
- தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும். தும்பைச் செடியை அரைத்துத் தேமல் உள்ள இடத்தில் பூசி வரத் தேமல் குணமாகும். தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும்; கண் பார்வை தெளிவடையும். இன்னும் எத்தனையோ பலன்கள் தும்பைக்கு; இதன் பயன்பாடு பாரம்பரியாமாக நம் நாட்டு மக்களிடையே இருந்துவருகிறது.
- அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்கத் தர விக்கல் நீங்கும்.
- தும்பை இலையையும், மிளகையும் அறைத்து உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூச விசம் இறங்கும்.
- தும்பை இலையையும் தேள் கொடுக்கு இலையையும் அரைத்துத் தரத் தேள் கடி விசம் நீங்கும்.
- தும்பை வேரையும், மருக்காரை வேரையும் அரைத்து உடலில் பூசிக் குளிக்க வசம் இறங்கும்.
- தும்பைப் பூவையும், ஆடுதீண்டாப் பாலை விதையையும் அரைத்துக் கொடுத்துப் பசும் பால் பருகிவர ஆண்மை அதிகரிக்கும்.
- தும்பைச் சாறு, முசுமுசுக்கைச் சாறு, வல்லாரைச் சாறு இவைகளில் சீரகத்தைத் தனித்தனியே ஆறவைத்து உலர்த்திச் சூரணம் செய்து கொடுத்து வர இதயப் பலவீனம் நீங்கும். சுரத்திற்குப் பின் ஏற்பட்ட சோர்வு தீரும். பசி அதிகரிக்கும். காமாலை குணமாகும். பித்த மயக்கம், வாந்தி குணமாகும். நினைவாற்றல் அதிகரிக்கும்.
- தும்பைச் சாறு 200 மி.லி. வெங்காயச் சாறு 100 மி.லி. பசு நெய் 150 மி லி. ஆமணுக்கு நெய் 150 மி.லி. கலந்து காய்ச்சி வடிகட்டிக் குழந்தைகளுக்குக் கால் உச்சிக் கரண்டியளவு கொடுத்து வர மாந்தம், கணை தீரும். இருமல், இளைப்பு மாறும். மலர்ச்சிக்கல் நீங்கும். வயிற்றிலுள்ள பூச்சிகள் வெளிப்படும். உடல் சூடுதணிந்து குழந்தை ஆரோக்கியமாய் வளரும்.
- பெருந்தும்பைச் சாறு மோரில் கலந்து தரச் செரியாமை, கழிச்சல், மந்தம் நீங்கும்.
- தும்பைப் பூவையும், ஊமத்தம் பூவையும் அரைத்துப் புங்கு நெய்யில் கலந்து காய்ச்சி வடித்துக் காதிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தி வரக்காதுப் புண், காதில் சீழ் வடிதல், காது இரைச்சல் தீரும்.
- தும்பைப் பூவையும், பெருங்காயத்தையிம் அரைத்துக் கடுகெண்ணெய்யில் கலந்து காய்ச்சி வடித்து வைத்ததுக் கொண்டு சொட்டு மருந்தாகக் காதிற்கு விட்டு வரக் காதில் சீழ்வடிதல் குணமாகும்.
- தும்பைச் சாற்றைத் தேனில் கலந்து சுட வைத்துக் குழந்தைகளுக்குப் புகட்ட இசிவு நீங்கும்.
- தும்பைச்சாறு 200 மி.லி. கழுதை மூத்திரம் 100 மி.லி. பசுநெய் 200 மி.லி. கலந்து காய்ச்சி மெழுகு பதத்தில் வடித்து உச்சிக் கரண்டியளவு உள்ளுக்குக் கொடுத்து, வெளியிலும் பூசிவரக் கிராந்தி புண் குணமாகும்.
- தும்பை இலைச்சாறு 10 மி.லி. எலுமிச்சம் பழச்சாறு 10 மி.லி. வெங்காயச்சாறு 5 மி.லி. எண்ணெய் 5 மி.லி. கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வரப் பெரும்பாடு நீஙுகும்.
- தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவு எடுத்து அரைத்துக் கோலிக் காயளவு பசும்பாலில் கொடுத்து வர மாத விலக்கினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
- தும்பைப் பூவை வெள்ளாட்டுப் பாலில் கலந்து காயச்சி வடிகட்டிப் பாலைமட்டும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து நாற்பது நாள் கொடுத்துவரக் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் குணமாகும்.
- தும்பைப் பூவையும், ஒருமிளகையும் அரைத்து நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி, தலைபாரம், நீர்க்கோர்வை நீங்கும்.
- தும்பைச் சாற்றையும்,பழச்சாற்றையும் சம அளவு எடுத்துக் கலந்து கொடுத்து வர ஆனந்த வாயு தீரும்.
- கழுதைத்தும்பை வேரை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச அரையாப்பு குணமாகும்.
- தும்பைச்சாற்றைக் கண், காது, மூக்கில் நசியமாய்ப் பயன்படுத்தி உள்ளுக்கும் கொடுத்துக் கடிவாயிலும் பூசப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
- கவிழ்தும்பைச் சாற்றைப் பசும் பாலில் கலந்து தர இரத்தக் கழிச்சல், சீதக் கழிச்சல், மூலக் கடுப்பு தீரும்.
- தும்பை இலையை அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, வெளியிலும் பூச்ச் செய்யான் கடி குணமாகும். அதனால் ஏற்பட்ட தடிப்பும், அரிப்பும் மறையும்.
- தும்பை இலை, அவுரி இலை, மிளகு ஆகிய இவற்றைச்சேர்த்து அரைத்து உள்ளுக்கும் கொடுத்து, உடல் முழுவதும் பூசிவர எந்தக் கடிவிடமும் மாறும்.
- தும்பைப் பூ, நந்தியாவட்டப் பூ, புளியம்பூ, புங்கம் பூ, எள் பூ, திப்பிலி, ஆகியவற்றைச் சேர்த்துக் கண்ணுக்கு மையாகத் தீட்டிவர வெள்ளெழுத்து மாறும். கண் பார்வை தெளிவடையும்.
- தும்பைச்சாறு 500 மி.லி. தேங்காய்எண்ணெய் 500 மி.லி.இரண்டையும் கலந்து காய்ச்சி வெளிப் பிரயோகமாகப் பயன்படுத்த வெட்டுக் காயம், ஆறாத இரண்ங்கள் ஆறும்.
- தும்பை வேர், சுண்டைவேர் சூரணம், இலப்பைப் பிண்ணாக்கு சுட்ட சாம்பல் மூன்றையும் சன்னமாய் சலித்து எடுத்து மூக்கில் பொடியாய் பயன் படுத்ததலைபாரம், தலைவலி, மூக்கு நீர்பாய்தல், தலையில் உள்ள ரோகங்கள் எல்லாம் மாறும்.
- தும்பை, குப்பைமேனி, கையான்தகரையைச்சூரண்ம் செய்து தொடர்ந்து கற்ப முறையில் சாப்பிட்டுவர உடலில் ஏற்படுகின்ற நோய்களும், மன விகாரமும் தீரும். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும். நோயின்றி வாழலாம்.
- தும்பை வேர், சாரணைவேர், நாய்வேளை வேர், சித்துர மூல வேர், மிளகு, கழற்சுப் பருப்ப், கருஞ்சீரகம், பறங்கிப் பட்டை, பூண்டு ஆகிய இவற்றை ஓர் அளவாய் எடுத்துச் சூரணித்துத் தும்பைச் சாற்றில் பாவனை செய்து உலர்த்திப் பொடித்து ஒரு கிராம் அளவு பாலுல் அனுபானித்துத் தரச் சூலை, வாதம், முடக்கு வாதம், அண்டவாதம், வாயுக்குத்து, வயிற்றுப் பெருமல் தீரும்.
- சீரகம், காயம், வசம்பு ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் எடுத்துத் தும்பைச் சாறு விட்டு அரைத்து மிளகளவு மாத்திரை செய்து குழந்தைகளின் உடல்வன்மை அறிந்து இஞ்சிச் சாறு, தேன், தாய்பால் ஏதாவது ஒன்றில் உரைத்துத் தரக் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற மாந்தம், அதனடியாய்ப் பிறக்கின்ற மாந்த வலிப்பு, இசிவு, பொருமல், செரியாக் கழிச்சல் தீரும்.
- தும்பைச் சாறு 30 மி.லி. துத்தி இலைச் சாறு 30 மி.லி. பசும் பாலில் கலந்து கொடுத்து வர உள் மூலம், புற மூலம், இரத்த மூலம் தீரும்.
- ஒமத்தை அரைத்துத் தும்பை இலைச் சாறு கூட்டித் தர மாந்தம், மாந்தக் கழிச்சல், வயிற்றுப் பொருமல் தூரும்.
- தும்பைச் சாறு; பொடுதலைச் சாற்றில் பெருங்காயத்தை உரசித் தரச் சுழிமாந்தம், போர்மாந்தம் நீங்கும்.
- தும்பைச் சாறு, கண்டங்கத்திரிச் சாறு இரண்டையும் தேனில் கலந்து தரக் கணை மாந்தம், மந்தாரக்கணம் தீரும். இருமல், இசிவு நீங்கும்.
- கவிழ் தும்பைச்சாறு, எண்ணெய் இரண்டையும் கலந்து மூன்று நாள் தர எலிக் கடி நஞ்சு தீரும்.
- தும்பை வேர், தைவேளை இலை, ஈர வெங்காயம் மூன்றையும் அரைத்து வைத்துக் கட்டப் பவுத்திரம் குணமாகும்.
- தும்பைப் பூ, தும்பை இலை, திப்பிலிச் சூரணத் ஆகிய இவற்றுடன் அக்கரகாரம் கலந்து தேனில் குழைத்துத் தரத் தொண்டைச் சதை வளர்ச்சி கட்டுப்படும்.
- தும்பை, மிளகு, வசம்பு, ஆகிய இம்மூன்றையும் அரைத்துத் துணியில் பொட்டலம் கட்டி நசியம் செய்யச் சன்னி தீரும்.
- தும்பைச் சாற்றை மூக்கில் நசியமிடப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
- தும்பைச் சாற்றைத் தேன் கலந்து உள்ளுக்குத் தர நீர் கோவை குணமாகும்.
- தும்பைப் பூவைத் தாய் பாலில் ஊறவைத்துக் கண்ணில் பிளியச் சன்னி தீரும்.
- தும்பைப் பூவைப் பசும்பால் விட்டரைத்து எண்ணெய்யில் கலந்து காய்ச்சித் தலை முழுகி வரத் தலைபாரம், ஒற்றைதுதலைவலி,மூக்கடைப்பு, நீரேற்றம் நீங்கும்.
- பல் முளைக்கும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் பேதியைத் தடுக்கப் பெருந்தும்பை இலைக் குடிநீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவரலாம்.
- தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்றுப்பு கலந்து கரைத்து மேலுக்குப் பூசி உலரவிட்டுக் குழித்துவரச் சரங்கு, சோறி, நமச்சல் தீரும்.
- தும்பைச் செடியைஅரைத்துத் தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவரத் தேமல் குணமாகும்.
- தும்பைக் குடி நீர் செய்து தர வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், மந்தம் தீரும்.
- தும்பைச் சாற்றைக் கண்ணிற்குச் சொட்டு மருந்தாகப் பயன்படுத்தக் கண் பூ மாறும்.
- தும்பை இலையை அரைத்துக் கற்பமாக்கி எருமை மோரில் கலந்து பத்து நாள் தரச்சுக்கிலமேகம் தீரும்.
- தும்பை இலை, துளசி இலை, இஞ்சி வகைக்குச் சம எடையும், இதறுகு இரு மடங்கு பூண்டும் எடுத்து அரைத்துச் சிற்றாமணுக்கு இலையில் வைத்துச் சுருட்டி நெருப்பில் காட்டி வெதும்பிச்சாறு பிழிந்து துட்டெடை தரப் புற இசிவு தீரும்.
- தும்பைச் சாறும், வெங்காயச்சாறும் கலந்து ஐந்து நாள் தர ஆசனப் புண் குணமாகும்.
- தும்பைச் சாறும், விளக்கெண்ணெய்யும் கலந்து தர வயிற்றில் உள்ள கிருமிகள் வெளிப்படும்.
- கவிள் தும்பை வேர், நத்தைச் சூரி வேர் இரண்டையும் அரைத்து வெண்ணெயில் கலந்து தர மூல நோய் தூரும்.
- ஆண்பனைக் குருத்தைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பாலில் கலந்து தர அன்றே தீட்டாவாள். அன்று இரவு சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை கவிழ்தும்பைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி வடக்கு முகமாய் இருந்து குடிக்க மலட்டு தன்மை நீங்கி ஆண்குழந்தை பிறக்கும்.
- கவிழ் தும்பை வேரைப் பிடுங்கிக் கர்பிணியின் நெற்றியில் குளிசமாடி இருக்கக் குழந்தை சிரம மில்லாமல் பிறக்கும். சுக பிரசவமாகும்.
- தும்பை இலைச் சாறு, பூனைக் காஞ்சொரி இலைச் சாறும் கலந்து தரப் பாம்புக் கடி நஞ்சு தீரும்.
- கவிழ் தும்பையை உலர்த்திச் சூரணமாக்கிக் குருவை அரிசி மா கலந்து கருப்பட்டி சேர்த்துப் பிசைந்து தர பெரும்பாடு தீரும்.
- தும்பை இலை, சாரணை இலை, ஓருள்ளிப் பூடு, வசம்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துத் துணியில் முடிந்து நாசியில் பிழியப் பைத்தியம் தீரும்.
- கவிழ்தும்பை வேர், கறி மஞ்சள் இரண்டையும் சம அளவெடுத்து அரைத்துத் துணியில் தடவித் திரியாக்கி நெருப்பில் கொளுத்திப் புகைப் பிடிக்கச் சிரசு நோய்கள் எல்லாம் தீரும்.
[You must be registered and logged in to see this image.]
குணமாகும் நோய்களில் -சளி போகும்,விஷம் தீரும் ,தோல் நோய் போகும்
ஆயுர்வேத மருத்துவம் :: மூலிகைகள்,மருத்துவ மூலிகைகள் ,ஆயர்வேத மூலிகைகள்-HERBALS :: ஆயுர்வேத மூலிகைகள் -AYURVEDIC HERBALS
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum