என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
கற்பம் .............
4 posters
ஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA
Page 1 of 1
கற்பம் .............
கற்பம்’ என்பது உடலைக் காக்கும் மருந்து அல்லது உடலைக் கற்போல் மாற்றுகின்ற கருவி. கற்பம் உண்பவர், நீண்ட நாள் வாழ்வர் என்பதும், கற்பம் உண்டவர் நோயற்ற நிலையடைவார் என்பதும் பொது வழக்கு.
கற்பம் இரண்டு வகையாக உரைக்கப் பெறும். ஒன்று மருந்து கற்பம்; மற்றொன்று யோகக் கற்பம்.
‘கற்பம்’ எல்லாப் பொருளினும் சிறந்தது. அல்லது எல்லா முறையினும் சிறந்தது என்பதும் பொருந்தும்.
"" காலமே யிஞ்சி யுண்ணக் காட்டினார் சூத்தி ரத்தில்
மாலையதி லேக டுக்காய் மத்தியானஞ் சுக்க ருந்த
சூலமே தேக மடா சுக்கிலத்தைக் கட்டி விடும்
ஞாலமே உனது விந்து நற்றேங் காய்போ லாமே''
காலையில் இஞ்சியும், கடும்பகலில் சுக்கும், மாலையில் கடுக்காயும் அருந்தி வந்தால் துரும்பான உடல் இரும்பாகும். விந்து கட்டி, இறுகும். என்பது இதன் கருத்தானாலும், இந்த முறை ஒன்று மட்டும் கற்பமல்ல. மருந்துகளில், மூலிகைளில், சாதன முறைகளில் கற்பங்கள் பல உள்ளன.
"" கற்பமுறை முக்க டுகுணவி கற்பமுறை
மூவருக்கங் கட்டை முதலொடு நென் மாத்திரமன்
மூவருக்கங் கட்டையது முன்.''
முக்கடுகு என்பது சுக்கு, திப்பிலி, மிளகு ஆகியன. முதிர்ந்த எருக் கங்கட்டையை வேருடன் கொணர்ந்து வரிசைப் படியே ஒரு மண்டலம், ஒரு நெல்லளவு, சுக்குடன் தண்ணீரில் உண்டால், வாதப் பிணியும், திப்பிலியுடன் உண்டால் பித்தப் பிணியும், மிளகுடன் உண்டால் ஐயப்பிணியும் அற்றுப் போகும் என்பதும் கற்ப முறையில் ஒன்றாகும்.
மூன்று வகை நோயும் இருக்கவொட்டாமற் செய்வதே கற்பத்தின் சிறப்பு என்பதனால், கற்பம் என்பது உடலைக் காக்கும் மருந்தாகும். கற்பம் உண்டால், நெடுங்காலம் உயிர் வாழலாம். உடம்பு கற்×ணைப் போல் உறுதி கொண்டு விளங்கும். சித்தொளி தோன்ற வாழலாம் என்னும் அகத்தியர் வாக்கினால் கற்பத்தின் சிறப்பினை அறியலாம்.
கற்பமுறை:
‘இருக்கவென்று மனம் உரைத்தால்’ கற்பம் உண்க, என்று கற்ப நூல் கூறுகின்றது. இந்த உடலம் நீண்டநாள் நிலைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கற்பம் என்னும் முறை கண்டறியப்பட்டிருக்கிறது.
"" கேளப்பா மண்டலந்தான் ஒருமா வீதம்
கொண்டாக்கால் சிவனவனாய்க் கூடி வாழ்வான்
கொள்ள கற்பமிது கொண்டா யானால்
கோடியுகஞ் சென்றாலுமோ சாவில்லைதான்''
ஒரு சிறிய அளவு, ஒரு மண்டலம் (48 நாள்கள்) கற்பம் உண்டால் மரணமில்லை என்று அறிவிக்கப்படுகிறது. இம்மருந்தை உண்பது எளிது–அரிது எனக் கருதத் தோன்றுகிறது. ஆனாலும்,
"" உருக்கமுடன் பெண்ணாசை பிள்ளை யாø
ஒட்டினால் கற்பமெல்லாம் ஓடிப் போமே.''
கற்பம் உண்ணுகின்ற காலத்திலும், உண்டபின்பும் ஆசைக்கும், பாசத்திற்கும் இடமளித்தால் கற்பம் உண்டது வீணாகும் என்று உரைக்கப்படும். இருப்பினும், உடலில் நோய்கள் தங்காமல் பாதுகாக்க கற்பம் வகை செய்யும். கற்பங்கள், காசினியில் நூற்றெட்டுக் கப்ப மானால், பேசாது மவுனமுற்றுக் கொள்ள வேண்டும்,என்று, கடுமையான கட்டளை பிறப்பிக்கப் படுவதனால், கற்பங்கள் 108 என அறிய முடிகிறது. மூலிகைகள், இரசங்கள், உப்புகள், உபரசங்கள் முதலியவற்றைச் சிறந்த முறையில் மருந்துகளாக அமைத்து, அவற்றை உடல் அழியாமல் இருத்தற் பொருட்டு உபயோகித்தார்கள். அவ்வாறு உபயோகித்த மருந்துகளையே ‘கற்பம்’ என்பர்.
கற்பம் உண்ணும் காலம்
கற்பம் எப்பொழுது வேண்டுமானாலும், எப்படி வேண்டு மானாலும் உண்ணக் கூடியதாக இல்லை. காலத்திற்கு ஏற்றவாறு உண்ணுகின்ற முறையில் வேறுபாடு வேண்டும் என்று தெரிவிக்கப் படுகிறது. அதாவது,
“ ஆனி, ஆவணி மாதங்களில் வெல்லத்திலும், சித்திரை, வைகாசி யில் சுக்கு கசாயத்திலும், புரட்டாசி, ஆடியில் குறிஞ்சித் தேனிலும், ஐப்பசி, கார்த்திகையில் குமரிச் சோற்றிலும், மார்கழி, தை, மாசியில் கற்கண்டிலும், பங்குனியில் நெய்யிலும்” உண்ணுமாறு உரைக்கப் பட்டுள்ளது.
இதனால், கற்ப மருந்திற்கும், இயற்கைச் சூழலுக்கும் தொடர்பு இருப்பதாகப் புலப்படுகிறது. மருந்தின் துணைப் பொருளாக உரைக்கப் பெற்ற வெல்லம், சுக்கு, குறிஞ்சித் தேன், குமரிச் சோறு, கற்கண்டு, நெய் ஆகிய பொருள்களின் குணத்திற்கும், மேற்கண்ட மாதங்களின் பெரும்பொழுது குணத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளதை உணரலாம்.
"" நானுண்ட படி சொன்னேன் நீயும் உண்ணு''
என்று, தாம் உண்ட முறையைப் பிறர்க்கும் உரைக்கின்ற பாங்கு சிறப்பிற்குரியதாகும்.
கடுக்காய் கற்பம்:
கடுக்காயைத் தேர்ந்தெடுத்து உடைத்து, அமுரியில் ஊறவைத்து மறுநாள் வெய்யலில் காயவைக்க வேண்டும். இவ்வாறு பத்து முறை செய்ய கடுக்காய் சுத்தியாகும். சுத்தி செய்த கடுக்காய் செங்கடுக்காய் ஆகும்.
பத்திய முறைகள்:
காலை வல்லாரை, மதியம் அமுது, மாலையில் கடுக்காய்த்தூள் வெருகடி அளவு உண்ணவும். சிறுபயறு, சர்க்கரை, பழம், நல்ல காய்கறிகள் உண்டுவர காய சித்தியாகும்.கற்பம் உண்போர் ஒரு வேளை உணவே உட்கொள்ள வேண்டும். பச்சரிசியும் சிறு பயறும் சேர்த்து சமைத்த சோறும், சர்க்கரை, தேன், முக்கனி, பால் இவற்றுடன் ஒரு போதே உண்ண வேண்டும். ‘ஒரு வேளை உண்பவன் யோகி’என உரைப்பதும் நோக்கத் தக்கது. ஒரு படி அமுதுடன் துவரம் பருப்பும் சேர்த்து சோறு பொங்கி, அத்துடன் தேங்காய்ப்பூ, சர்க்கரை, நெய்யுங் கூட்டி உண்ணவும். அதன்பின் கற்பம் உண்ணவும். அப்படி உண்டால் உடல் உறுதியாகும்.266
இவ்வாறு பல்வேறு முறைகளில் கற்பங்கள் உரைக்கப்படு கின்றன. ஒரு வேளை உணவும், உணவுக்குப் பின் கற்ப மருந்து என்பதும் எல்லா முறைகளிலும் ஒன்றாகவே காணப்படுகின்றன.
"" பானென்ற பச்சையுப்பை தின்றா னானால்
பட்டுதா கண்ரெண்டும் பரிந்து காணே.''
"" வாய்பட்ட கொழுப்பாலே (பச்சை) யுப்பைத் தின்றால்
வாய்த்திருந்த சித்தியது மண்ணாய்ப் போமே.''
கற்பங்கள் உண்ணும் போது, சாதாரணமான உப்பைத் தின்றால் கற்பத்தினால் கிடைத்த பலன் கெடுவதுடன், கண்ணிரண்டும் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. எனவே, கட்டிய உப்பை மட்டுமே உண்ண வேண்டும் என்னும் சிறப்பு விதிகள் உரைக்கப் படுவதனால், மருந்துண் போர் நலனை நுணுக்கமாகக் கண்காணித்து உரைக்கப்படுவது தெரிகிறது. மருந்து பயனுடையதாக இருந்த போதிலும், மருந்துண் போரின் நலனைக் கண்காணிப்பதும், பாதுகாப்பதும் மருத்துவத்தின் தலையாய கடன் என்பது தெற்றென விளங்கும்.
கற்பங்கள் உண்ணும் முறைகளையும், பத்திய உணவுகளையும் பின்பற்றி உடலைப் பாதுகாப்பதைப் போலவே, சாதாரணமாகத் தலைமுழுகப் பயன்படுத்தும் பொருளும் கற்பமுறையாக உரைக்கப் படுகிறது.
"" நேமேதான் நெல்லிக்காய் பலந்தான் ஆறு
நிலையாக நீர்மிளகு பலந்தான் அஞ்÷
அஞ்சப்பா கடுக்காய்தான் பலந்தான் நாலு
அப்பனே வேப்பரிசி பலந்தான் மூன்று
மஞ்சளப்பா மஞ்சளது பலந்தான் ரெண்டு
வகையாக இவைகளைக் கூட்டிக் கொண்டு''
என்று பொருள்களை வரிசைப்படுத்திய முறையை அவற்றின் அளவைக் கொண்டே அமைந்திருப்பதும் நோக்கத் தக்கது. இதனையே,
"" பூ நெல்லி நீர்மிளகு பொற்கடுக்காய் வான்மஞ்சள்
கானகத்து வேம்பரிசி காரிகையே மானங்கேள்
ஒன்றரை ஒன்றே கால் ஒன்று உறுதிமுக்கால்
கன்றரைக்கை யான் நீரில் தேய்.''
இச்செய்யுளும் மேற்கண்ட ஐந்து பொருள்களையே உரைத்திருந் தாலும், வேம்பரிசியும், மஞ்சளும் அளவில் மாறுபடுகின்றன.
மேற்கண்ட கற்பத்தினால் தலை (கபாலம்) இறுகும் என்று திருமூலரும் (கற்பமுறை. செய். 37) திருமந். செய். 849), (கபாலம்) தலை இறுகுவதுடன், முடி கருக்கும்; பகலில் வான்மீன்கள் தோன்றும். உடலிலுள்ள நச்சு நீர் வற்றும், உடல் பொன் போலாகும் என்று நந்தீசரும் உரைக்கக் காணலாம்.
தூதுவளையைக் கறி, வற்றல், ஊறுகாய், கீரை இப்படி முறைப் படுத்தி, ஒரு மண்டலம் உண்டு வந்தால் இரவும் பகல்போலத் தோன்ற கண்ணொளி கூடும்.இதனை இலக்கிய நயத்துடன்,
"" திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவையே னல்ல
திருக்குளத்தைப் போலே திருத்துந் திருக்குளத்தை
யெல்லா மிரவுவிளை யென்னவருந் தூதுவளை
யெல்லா மிரவு மிளி யென்''
நீர்க்குளத்தைத் திருத்தி விளங்கச் செய்வதைப் போல் கண்குளமான நேத்திரத்திலிருக்கின்ற பித்த நீர் முதலான மலினங்களைப் போக்கும் செயலைத் தூதுவளை செய்யும் என்பதைக் அறியலாம்.
கூறப்படும் கற்பத்தின் பொருள்கள் சிறந்த பொருள்களிலிருந்து மட்டுந்தான் செய்யப்படுகின்றன என்ற நிலையில்லை. குப்பைக்குச் செல்ல வேண்டிய பொருள் என்று தூக்கி எரியப்படுகின்ற பொருள்கள் கூட கற்பங்களாக ஆகின்றன என்பது வியப்பிற்குரிய ஒன்றாகவும், அதனால் விளையக் கூடிய நன்மை அதனினும் வியப்பாகவும் தோன்றும்.
பல்வேறு வகைப்பட்ட பறவைகளின் முட்டை ஓடுகள் கற்ப மாகின்றன. கோழி, பருந்து, கிளி, காக்கை, காடை, மயில் ஆகிய வற்றின் முட்டை ஓடுகள் பற்பம் எனும் முறையில் கற்பமாகின்றன. அவை, முறையே, அத்திசுரம், மூர்ச்சை, காசம், சத்தி , பிடிப்பு, வெட்டை, உப்புசம், பெருவியாதி, வெப்பம், மாரடைப்பு, கபமிகுதி, சன்னி ஆகியவற்றைப் போக்குகின்றன.

Re: கற்பம் .............
அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள், மெத்த நன்றி. ஆனால் மொத்தமாக எல்லாவற்றையும் கூறியுள்ளதால் கற்பம் உண்ண எங்கு தொடங்குவது என்ற கேள்வி எழும்புகிறது.
கடுக்காய், மிளகு, சிறுபயிறு, தேன், குருவையரிசி இவையெல்லாம் சித்தர் நூல்களில் சொல்லப்பட்டுள்ள கற்பமாக இருந்தாலும் இவைகளை உண்ணும் கால அளவு நேரம் என அனைத்தும் சொல்லப் பட்டு இருந்தாலும், தங்களைப் போன்ற மருத்துவரால் தான் இவைகளை மேலும் விளக்கி உண்ணும் முறைகளை ஒவ்வொரு வரியாக அதாவது எதை எப்பொழுது எந்த நேரத்தில் எந்த மாதத்தில் என்பது போல கூற முடியும் என்பது அடியேனுடைய நம்பிக்கை.
ஆதலால் கற்பம் உண்ணத் தொடங்கும் மாணவருக்கு கற்பம் உறுதியாக எங்கு தொடங்கலாம் என்பது போல வரி வரியாக சித்தர் பாடலையும் குறிப்பிட்டு, மேலும் தங்களின் கருத்துகளையும் விவரித்து சொன்னால் மென்மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி
- சிவசத்தியடியான்

ram_soft2003- உதய நிலா
- Posts : 30
Points : 62
Reputation : 0
Join date : 04/12/2010
Re: கற்பம் .............
மிக அருமையான விளக்கம் -நன்றி
மருத்துவன்- உதய நிலா
- Posts : 110
Points : 280
Reputation : 2
Join date : 06/12/2010
கற்பம்
கற்பம் பற்றிய விளக்கம் மிக நன்று. திரிபலா கற்பம் பற்றி விளக்கவும்,நன்றி.
draksn- Posts : 1
Points : 1
Reputation : 0
Join date : 01/02/2011
Similar topics
» அகஸ்தியர் முனிவரின் -கற்பம் -முப்பு -குரு பற்றிய நூல் ..
» அகஸ்தியர் முனிவரின் -கற்பம் -முப்பு -குரு பற்றிய நூல் ..
» அகஸ்தியர் முனிவரின் -கற்பம் -முப்பு -குரு பற்றிய நூல் ..
ஆயுர்வேத மருத்துவம் :: சித்த மருத்துவம்- SIDDHA MEDICINE :: அடிப்படை தத்துவம் -BASIC PRINCIPLES OF SIDDHA
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum