ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

» மலச்சிக்கலுக்கு காரணமும் இயற்கையான தீர்வு
by Admin Thu 08 Jul 2021, 8:21 am

» வெள்ளைப்படுதல் ஆபத்தா ? இயல்பா ? | மேக வெட்டைக்கு ஆயுர்வேதம் காட்டும் முறைகள் | Lecorrohea in Tamil
by Admin Tue 06 Jul 2021, 10:43 am

» தயிர் உடலுக்கு கேடு
by Admin Sun 27 Jun 2021, 11:55 am

» அதிக இரத்த போக்கா ? எளிய ஆயுர்வேத சிகிச்சைகள் | ஆயுர்வேதம் | ஆயுர்வேத மருத்துவம் |உதிர போக்கு நிற்க
by Admin Fri 21 May 2021, 9:22 pm

» IMCOPS Small ayuhs book
by Admin Wed 12 May 2021, 3:04 pm

» கோவிட் ஆயுர்வேத மருந்து
by Admin Tue 11 May 2021, 3:57 pm

» பத்து பைசா செலவில்லாமல் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ..
by Admin Sun 09 May 2021, 5:36 pm

» நீங்களும் ஆகலாம் Family Doctor !!!
by Admin Sat 08 May 2021, 7:20 pm

» பல வருடங்களுக்கு பின் இந்த தளமும் புத்துயிர் பெறுகிறது
by Admin Sat 08 May 2021, 11:52 am

» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள்

  2 posters

  Go down

  காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள் Empty காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள்

  Post by Admin Mon 18 Oct 2010, 5:23 pm

  காசரோகசிகிச்சை
  வாதகாசங்களுக்கு தசமூலகியாழம் :- தசமூலங்களாகிய வில்வவேர், முன்னைவேர், ஈச்சுரமூலி, பாதிரி, பெருமரவேர்பட்டை கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, ஈரிலைத்தாமரை, மூவிலைத்தாமரை நெரிஞ்சில் இவைகளுடன் சுக்கும் சேர்த்து சமஎடையாகத் தூக்கிமுறைப்படி கியாழம் வைத்து அதில் தேன் கூட்டிச் சாப்பிட்டால் காசம் விக்கல் இவைகள் நீங்கும்.

  பஞ்சமூல கியாழம் :- ஈரிலைத்தாமரை, மூவிலைத்தாமரை கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, நெரிஞ்சில் இவைகளின் வேர் களை சமஎடை கியாழம் போட்டு அதில் திப்பிலிச் சூரணம் கலந்து
  சாப்பிட்டுவர வாதகபகாசம் நிவர்த்தியாகும்.

  பித்தகாசங்களுக்கு வாசாதிகியாழம் :- ஆடாதோடை, சீந்தில் கொடி, கண்டங்கத்திரி இவைகளை கியாழம் போட்டு தேன் கூட்டிச்சாப்பிட்டால் பித்தகபகாசம், சுரம், இரைப்பு முதலியன நீங்கும்.

  பலாதி கியாழம் :- சிற்றாமுட்டிவேர், கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, திரா¨க்ஷ, ஆடாதோடை, இவைகளில் சமஎடை கியாழம் போட்டு தேன் கூட்டிச் சாப்பிட்டால் பித்தகாசம் நிவர்த்தியாகும்.

  சட்யாதி கியாழம் :- கிச்சிலிக்கிழங்கு, குருவேர், கண்டங்கத்திரி, சுக்கு இவைகள் சமஎடை கியாழம் போட்டு அதில் நெய் சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பித்தகாசம் நிவர்த்தியாகும்.

  வேறு முறை :- கோரைக்கிழங்கு, தசமூலங்கள், திப்பிலி,திரா¨க்ஷ இவைகள் சமஎடை கியாழம் போட்டு அதில் பால், தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் காசங்கள் நிவர்த்தியாகும்.

  கண்டகாரியாதி கியாழம் :- கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, திரா¨க்ஷ, ஆடாதோடை, கிச்சிலிக்கிழங்கு, குறுவேர், சுக்கு, திப்பிலி, இவைகளை கியாழம் வைத்து அதில் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிட்டால் பித்தகாசம் நிவர்த்தியாகும்.

  பிப்பல்யாதி கியாழம் :- திப்பிலி, சாதிக்காய், சுக்கு, அதிவிடயம், கண்டுபாரங்கி, மிளகு, ஓமம், கண்டங்கத்திரி, நொச்சி, குரோ சானியோமம், சித்திரமூலம், ஆடாதோடை இவைகள் சமஎடை கியாழம் வைத்து திப்பிலிசூரணத்தை கலந்து சாப்பிட்டால் கபகாசம் நிவர்த்தியாகும்.

  கபகாசத்திற்கு சிறுதேக்காதி கியாழம் :- கண்டுபாரங்கி,சுக்கு, கண்டங்கத்திரி, கொள்ளுவேர் இவைகளை கியாழம் வைத்து திப்பிலிசூரணத்தை கலந்து சாப்பிட்டால் கபகாசம், காசசுவாசங்கள் நிவர்த்தியாகும்.

  குலித்தாதி கியாழம் :- புஷ்க்கரமூலம், இஞ்சி, கண்டுபாரங்கி, சுக்கு, திப்பிலி இவைகளை கியாழம் வைத்து சாப்பிட்டால் கபகாசங்கள், சுவாசங்கள், ஹிருதயரோகம் இவைகள் நீங்கும்.

  சர்வகாசங்கட்கும் வாசாதி கியாழம் :- ஆடாதோடை, மர மஞ்சள், கொத்தமல்லி, சீந்தில்கொடி, கண்டுபாரங்கி, திப்பிலி, கோஷ்டம், கண்டங்கத்திரி இவைகள் சமஎடை கியாழம் வைத்து மிளகு சூரணங் கலந்து சாப்பிட்டுவர காசங்கள் யாவுங் நீங்கும்.

  காசங்களுக்கு ருத்திர பர்ப்படீ ரசம் :- சுத்திசெய்த பாதரசம் 1-பாகம், கெந்தி 2-பாகம், இவைகளைக் கல்வத்திலிட்டு ஆமணக்கு வேர், இஞ்சி, கடுக்காய்ப்பூ, மணத்தக்காளி, முன்னை இவைகளின் சாறுகளினால் தனித்தனி ஒவ்வொருநாளரைத்து ரசகெந்திகளுக்குநாலில் ஒருபாகம் தாம்பிரபஸ்பம் கலந்து மந்தாக்கினியால் எரிக்கும் போது சிகப்புவர்ணமாக தோன்றின வுடனே சாணிமீது வாழை இலை பரப்பி அதன்மீது அவிழ்தத்தைப்போட்டு பரப்பி, அதன்மீதுமறுபடியும் ஒரு வாழைஇலை போட்டு அதன்மீது சாணியால்மூடி, ஆறியபிறகு அவிழ்தத்தை யெடுத்துச் சூரணித்து இதற்கு நாலில் ஒரு பாகம் சுத்திசெய்த நாபியைக் கலந்து அரைத்து குன்றிஎடை
  அனுபானயுக்தமாக சேவித்து பிறகு நொச்சி இலைச் சூரணத்தை 1/2 தோலா வீதமாவது அல்லது கரிசனாங்கண்ணி ரசத்தில் தேன் கலந்தாவது சேவித்தால் சகலவாத காசங்கள் நிவர்த்தியாகும்.

  பூதாங்கு ரசம் :- சுத்திசெய்தரசம் 1 பாகம், சுத்திசெய்தகெந்தி 2 பாகம், தாம்பிரபஸ்பம் 3 பாகம், மிளகு 10 பாகம், அப்பி ரகபற்பம் 4 பாகம், நாபி 1 பாகம், இவைகளை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழ ரசத்தில் 4 சாமம் நன்கு அரைத்து சிமிழியில் வைத்து குன்றி எடை ஒளஷதத்தை தானிகாய்சூரணம் தேன் இந்த அனுபானத்தில் ஒரு மாதம் சாப்பிட்டால் வாதகாசம் நிவர்த்தியாகும்.

  பித்தகாச ரசம் :- தாம்பிரபற்பம், அப்பிரகபற்பம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு போயாவரை, தண்ணீர்விட்டன் கிழங்கு புளிப்புமோர், நெல்லிக்கனிரசம் இவைகளை தனித்தனி ஒவ்வொருநாள் அரைத்து குன்றி எடை இரண்டு மாதம் சாப்பிட்டால் பித்தகாசம் நிவர்த்தியாகும்.

  தாரேசுரம் :- சுத்திசெய்தபாதரசம் 1 பாகம், வெள்ளிபற்பம் 1/4 பாகம், மனோசிலை 1/4 பாகம், ஆடாதோடை கரும்பு இவைகளினால் இரண்டு சாமங்கள் அரைத்து பிறகு காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு சாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து மறுபடியுஞ் சூரணித்து மாதுழை, திரிபலை, திரிகடுகு இவைகளை சமஎடை சூரணித்து சூரணத்திற்கு சமமாக சர்க்கரையை கலந்து 1 தோலா சூரணத்தில் 2 குன்றி எடை சிந்தூரத்தைக் கலந்து சாப்பிட்டால் க்ஷதகாசங்கள் நீங்கும்.

  சூரிய ரசம் :- சுத்திசெய்தபாதரசம் 1 தோலா, கெந்தி 2 தோலா, சுவர்ணமாஷிகம் 3 தோலா, தாளகம் 5தோலா, அப்பிரக பற்பம் 4 தோலா, வசம்பு, கோஷ்டம், இந்துப்பு, வசநாபி, சுக்கு, மிளகு திப்பிலி, சுட்டவெண்காரம் இவைகள் வகைக்கு 1/4 பாகம், இவைகள் யாவும் கரிசனாங்கண்ணி சாற்றினால் ஒரு நாள் அரைத்து சிமிழியில் வைத்து குன்றி எடை பிரமாணம் ஒரு மாதம் சாப்பிட்டால் விக்கல், குரற்கம்மல், காசம் இவைகள் நீக்கும். ஆட்டுப்பால் அதற்கு சமமாக சலத்தை கலந்து நெரிஞ்சல் வேர், சுக்கு இவைகளை போட்டு நீர்சுண்டி பால் அளவிற்கு வரும் வரையில் காய்ச்சி வடிகட்டி திப்பிலிச் சூரணங்கலந்து குன்றி எடை பிரமாணம் மருந்தைக்கலந்து இரவில் சாப்பிட்டால் க்ஷதகாசங்கள் நீங்கும்.

  காசவிதூனன ரசம் :- சுத்திசெய்தரசம் 1 பாகம், கெந்தி 2 பாகம், யவக்ஷ¡ரம் 3 பாகம், பாதரிலவணம் 4 பாகம், மிளகு 5 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு இஞ்சி ரசத்தால் அரைத்து சாப்பிட்டால் பஞ்சவிதகாச ரோகங்கள், பஞ்சவித சுவாச ரோகங்கள் தீரும்.

  பர்ப்படீ ரசம் :- பாதரசம் 12-பாகம், லோஹபஸ்பம் 12-பாகம், இவைகளை சிறிதுநேரம் மந்தாக்கினியால் வேகவைத்து சாணி மீது வாழைஇலை பரப்பி அதன்மீது மருந்தை பரப்பி, மேலே வாழைஇலை மூடி அதன்மீது சாணிபோட்டு ஆறியபிறகு எடுத்து அத்துடன் கண்டுபாரங்கி, சுக்கு, கடுக்காய், நொச்சி, மிளகு,திப்பிலி, ஆடாதோடை, கற்றாழை, இஞ்சி இவைகளின் கியாழத்தினால் அரைத்து உலர்த்தி லகுடபுடமிட்டால் இதை அகந்த கர்ப்பா நாமரசமென்றும், பர்ப்படீ ரசமென்றுஞ் சொல்லுவார்கள். இதில்
  வேளைக்கு 2-குன்றிஎடை பிரமாணம் அனுபானத்துடன் கொடுத் தால் சகல ரோகங்கள் நீங்கும். வெற்றிலை ரசத்திலாவது அல்லது துளசி கியாழத்தில் திப்பிலி சூரணம் போட்டாவது அல்லது கோமூத்திரத்துடனாவது சாப்பிட்டால், காசங்கள், சுவாசங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

  காசகேசரீ ரசம் :- சுத்திசெய்த லிங்கம், மிளகு, கோரைக்கிழங்கு, பொரித்த வெங்காரம், சுத்திசெய்த நாபி இவைகளை சம எடையாக எலுமிச்சம் பழச்சாற்றினால் ஒரு சாமம் அரைத்து உளுந்து அளவு மாத்திரைசெய்து இஞ்சி ரசத்தில் கொடுத்தால் காசங்கள், சுவாசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

  நீலகண்ட ரசம் :- ரசம், கெந்தி, லோஹபஸ்பம், நாபி, சித்திரமூலம், இலவங்கம், இலவங்கபத்திரி, காட்டுமிளகு, கோரைக் கிழங்கு, மோடி, சிறுநாகப்பூ, திரிபலை, திரிகடுகு, தாம்பிரபஸ்பம் இவைகள் யாவும் சமஎடை, இவைகளுக்கு இரண்டுபாகம் வெல்லத்தை கலந்து அரைத்து கடலை அளவு மாத்திரைசெய்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், குன்மங்கள், பிரமேகங்கள், விஷசுரம்,மூத்திரகிருச்சரம், மூட்கர்ப்பம், சூதகட்டி, வாதரோகங்கள் இவையாவும் நிவர்த்தியாகும்.

  லோகநாத போடலீ ரசம் :- சுத்திசெய்த கெந்தி, பாதரசம்இவைகள் சமஎடை, எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து குழம்பு போலாக்கி இதற்குச் சமஎடை தாம்பிரத்தினால் டப்பிசெய்து அதில் ஔஷதத்தை போட்டு மேல்மூடி பிறகு ஒரு பானையில் பேர்பாதி உப்பு போட்டு அதின்மீது டப்பியை வைத்து மறுபடியும் பானை நிறையும்படி உப்பு போட்டு பானை வாயைமூடி சிலைமண் செய்து 8-ஜாமங்கள் அக்கினியில் எரித்து ஆறியபிறகு எடுத்து அந்த டப்பியுடன் ஔஷதத்தையும் அதற்கு சமஎடை பலகறை பற்பமும் கலந்து சித்திரமூல ரசத்தில் அரைத்து புடமிட்டு, ஆறியபிறகு எடுத்து அத்துடன் நாபி, மிளகு சூரணஞ்சேர்த்து யாவும்மைப்போல் அரைத்து சூரணித்தால் இதை லோகநாத போடலீ ரசமெனப்படும். இதை அனுபான விசேஷத்துடன் கொடுத்தால் துர்ப்பலம், தேகமெலிவு, வீக்கம், ஆமவாதம், குன்மம், சூலை, காசங்கள், இரைப்பு, கிரகணி, மூலவியாதி, க்ஷயங்கள், பாண்டுரோகம், அக்கினிமாந்தம் அரிசி இவைகள் நிவர்த்தியாகும்.

  அமிருதாரணவ ரசம் :- ரசம், கெந்தி, லோஹபஸ்பம், வெண் காரம், சித்தரத்தை, வாய்விளக்கம், திரிபலை, தேவதாரு, திரிகடுகு சீந்தில்கொடி, தாமரைத்தண்டு, நாபி, இவைகள் யாவையும் சமஎடையாக கலந்து சூரணித்து 5 முதல் 10 குன்றி எடை தேனுடன் கொடுத்தால் சகலகாசங்கள் நிவர்த்தியாகும்.

  அக்கினி ரசம் :- இரசம், கெந்தி, திப்பிலி, கடுக்காய்ஆடாதோடை, அதிமதூரம் இவைகள் யாவையும் சமஎடையாகச் சூரணித்து வெல்லத்தைப் போட்டு அரைத்து கருவேலம் கியாழத்தினால் 21 நாள் பாவணை செய்து மாத்திரைகள் செய்து உலர்த்தி தேனுடன் சாப்பிட்டால் காசங்கள் நீங்கும்.


  ரசயோகாக்கினி குமாரரசம் :- சுத்திசெய்தரசம், சுத்திசெய்த கெந்தி இவைகள் சமஎடை இதற்கு பேர்பாதிவசநாபி, ரசத்திற்குச்சமம் தாம்பிரபஸ்பம், இவைகளை கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தினால் அரைத்து மாத்திரை செய்து வாலுகாயந்திரத்தில் 13 சாமங்கள் எரித்து ஆறிய பிறகுஎடுத்து ஓளஷதத்திற்கு சமஎடை சித்திரமூலம், திரிகடுகுச்சூரணம், கருவூமத்தன் விரை, சூரணத்தை கலந்து மறுபடியும் அரைத்து
  குன்றி எடை இஞ்சிரசத்தில் கொடுத்தால் மந்தாக்கினி சந்நிபாதங்கள், காசங்கள், சுவாசங்கள், குன்மங்கள், தனூர்வாதம் அஜீரணம், சூலைகள், க்ஷயங்கள் இவைகள் யாவையும் நிவர்த்தியாகும்.

  சுவயமக்கினி ரசம் :- சுத்தரசம் 1 பாகம், சுத்தி கெந்தி2 பாகம் இவைகளை கல்வத்திலிட்டு அரைத்து இதற்கு சமம் எழுகுபற்பத்தை கலந்து கற்றாழை சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து உருண்டை செய்து செம்பு மடக்கில் வைத்து மூடி அதை 2 நாள் அரைத்து கல்வத்திலிட்டு மைபோல் சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து ஜலத்
  தின் மீது விட்டால் மிதக்கும். இந்தலோகச் சூரணத்திற்கு சமஎடை திரிகடுகு, திரிபலை, ஏலக்காய், ஜாதிக்காய், இலவங்கம் இவைகள் யாவையும் சூரணித்து கலந்து 2 குன்றி எடை தேனுடன் அருந்த அல்லது 2 குன்றி எடை ஆடுத்தும்மட்டன் வேர், கரிசனாங்கண்ணி, திப்பிலி, எள்ளு இவைகள் அனுபானத்தில் சாப்பிட்டால் க்ஷ்யகாஷங்கள் நிவர்த்தியாகும்.

  சர்வாங்க சுந்தரரசம் :- ரசம், நாபி, கெந்தி, தாளகம், ஹேம மாஷிகம் இவைகள் யாவும் சுத்திசெய்து சமஎடை கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து காசிக்குப்பியில் வைத்து வாலுகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் மிருது அக்கினி யால் எரித்து ஆறியபிறகு எடுத்து 10-மிளகு, கடுக்காய்-1 இந்த இரண்டையும் சலத்தில் அரைத்து இந்த அனுபானத்தில் இரண்டு குன்றிஎடை கொடுத்தால் சிப்பிகாகாசம், சகல காசங்கள் க்ஷயரோகம் இவைகள் நிவர்த்தியாகும்.

  விஜயபைரவ ரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்தகெந்தி 2-பாகம், திப்பிலி 3-பாகம், கடுக்காய் 4-பாகம், தானிக்காய் தோல் 5-பாகம், ஆடாதோடை ஈர்க்கு 6-பாகம், கண்டுபாரங்கி 7-பாகம், இவைகள் யாவையுஞ் சூரணித்து அரைத்து நொச்சிவேர் கஷாயத்தில் 21-நாள் அரைத்து நெல்லிக்காய் அளவு மாத்திரைசெய்து உலர்த்தி ஒரு மாத்திரை விகிதம் காலையில் தேன் அனுபானத்தில்
  கொடுத்தால் சகல காசங்கள், சுவாசங்கள் நிவர்த்தியாகும்.

  திரிநேத்திரக ரசம் :- தாம்பிரபஸ்பம், அப்பிரகபஸ்பம், எழுகு பஸ்பம் இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு பேயாவரை, தண்ணீர் விட்டான்கிழங்கு, அத்தி இலை, புளிவஞ்சி, இவைகள் ரசங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருநாள் அரைத்து இரண்டு குன்றிஎடை அளவாக மாத்திரைகள் செய்து உலர்த்தி ஒவ்வொரு மாத்திரை விகிதம் கொடுத்தால் பித்தகாசங்கள், சகல காசங்கள் நீங்கும்.

  ஆமகாசத்திற்கு சந்திராமிருத ரசம் :- ரசம், நாபி, கெந்தி, நேர்வாளம் இவைகளை சுத்திசெய்து சமஎடையாக கல்வத்திலிட்டு எருக்கன்வேர் கியாழத்தினால் 3-சாமங்கள் அரைத்து பிறகு துலாயந்திரத்தில் ஒருசாமம் எரித்து குன்றிஎடை மாத்திரைசெய்து உலர்த்தி ஒவ்வொரு மாத்திரை விகிதம் கொடுத்தால் ஆமகாசம்
  நிவர்த்தியாகும்.

  பாண்டுகாசங்களுக்கு காசசம்ஹார பைரவரசம் :- ரசபஸ்பம், அப்பிரகபஸ்பம், சுத்திசெய்த லிங்கம், சுத்திசெய்த நாபி, சுத்தி செய்த தாளகம், இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை கியாழத்தால் இரண்டு நாள் அரைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து சூரணித்து உளுந்து அளவு திப்பிலி சூரணம்
  தேன்கலந்து சாப்பிட்டால் பாண்டு காசங்கள், சகலமான இருமல் கள் நிவர்த்தியாகும்.

  சிலேஷ்ம ஜிம்மககாசங்களுக்கு சிலாதாளரசம் :-சுத்ததாளகம், சுத்த மனோசிலை இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு ஆடாதோடை ரசத்தால் ஒருநாள் அரைத்து நெரிஞ்சல்வேர் கியாழத்தால் ஒருநாள் அரைத்து காசிகுப்பியில் வைத்து வாலுகா யந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறியபிறகு எடுத்து சூரணித்து இதற்கு சமம் திரிகடுகு சூரணம் நொச்சிவேர்ப்பட்டை சூரணம் கலந்து அரைத்து 2-குன்றிஎடை ஔஷதத்தை முன்னை, கடுக்காய் இவைகளின் கியா ழத்தில் தேன்போட்டு சாப்பிட்டாலும் அல்லது நெரிஞ்சல்வேர்கியாழத்தில் திரிகடுகு சூரணத்தைப்போட்டு இந்த அனுபானத்துடன் சாப்பிட்டாலும் சிலேஷ்மஜிம்ம காசரோகம் நிவர்த்தி
  யாகும்.

  சித்திரகாதிலேகியம் :- சித்திரமூலம், மோடி, சுக்கு, திப்பிலி, மிளகு, கோரைக்கிழங்கு, பூனைக்காஞ்சொரிவேர், கிச்சிலிக்கிழங்கு புஷ்கரமூலம், கடுக்காய், துளசி, வசம்பு, கண்டுபாரங்கி, சீந்தில்கொடி சித்தரத்தை, கடுக்காய்ப்பு இவைகள் வகைக்கு 1/4 பாகம் விகிதம் சேர்த்து அரைத்து கல்கஞ்செய்து 200 பலம் ஜலத்தில் கலக்கி 20 பலம் மீறும்படி கியாழம் காய்ச்சி வடிகட்டி அதில் வெல்லம் 10 பலம் நெய் 4 பலம் சேர்த்து லேகியாபாகமாக கிளறி ஆறிய பிறகு தேன் 4 பலம், திப்பிலிச்சூரணம் 4 பலம், மூங்கிலும்புச் சூரணம் 4 பலம், போட்டு கலந்து வைத்துக்கொண்டு சாப்பிட்டால் காசங்கள், மார்புநோய், சுவாசங்கள், குன்மங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

  ஷீத்திராவ லேகியம் :- கண்டங்கத்திரி 100 பலம், கடுக்காய் 100 பலம் இவைகளை இடித்து 256 பலம் ஜலத்தில் போட்டு நாலில் ஒரு பங்கு கியாழம் மீறும்படி சுண்டக்காய்ச்சி அதில் பழைய வெல்லம் 100 பலம் கலந்து அடுப்பிலேற்றி பாகுபதம் வரும்போது திரிகடுகுசூரணம் 2 பலம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி ஏலக்காய், அகரு, நாககேசரம்,இவைகள் யாவையும் பிரத்தியே கமாக சூரணித்து ஆறின பின்பு நெய் தேன் கூட்டிப் பிசைந்து வைத்துக்கொண்டு கொடுத்தால் சிலேஷ்மரோகங்கள், கோழை ஐந்து வித இருமல்கள், விக்கல், மார்புநோய், அபஸ்மாரமிவைகளை
  நிவர்த்திசெய்து அக்கினி தீபனத்தை உண்டாக்கும்.

  மஹாஷீத்திராதி லேகியம் :- கண்டங்கத்திரிவேர் 100 பலம், பஞ்சகோலங்கள் 50 பலம், மோடி 25 பலம், கண்டுபாரங்கி, சித்தரத்தை இவைகளில் தனித்தனி 1 பலம்,கடுக்காய்த்தோல் 100 பலம், இவைகள் யாவையும் 512 பலம் ஜலம் விட்டு நாலில் ஒரு பாகம் மீறும்படியாக சுண்டக்காய்ச்சி அதில் ஆடாதோடைகளீன் ரசம்
  வகைக்கு 16 பலம், பழையவெல்லம் 100 பலம் போட்டு அடுப்பிலேற்றி காய்ச்சி பாகுபதம் வரும்போது அதில் திரிகடுகு திரிபலை, மோடி, சதூர்சாதங்கள், சக்திக்ஷ¡ரம், இந்துப்பு பஞ்சலவணங்கள், பொரித்த வெண்காரம், பொரித்தப் பெருங்காயம் இவைகள் வகைக்கு 1 பலம் சூரணித்து அதில் போட்டு லேகிய பக்குவமாக கிளறி வைத்துக் கொள்ளவும். இதை சாப்பிட்டால்
  இருபது வித இருமல்கள் நீங்கும்.

  கண்டகாரி சூரணம் :- கண்டகத்திரி, சமூலம், திப்பிலி,மோடி, நாயுருவிவிரை, சீரகம், இந்துப்பு இவைகளை சமஎடை யாகச் சூரணித்து தேன்கலந்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயரோகம், தீவிரமான கபரத்தவாந்திகள் நீங்கும்.

  க்ஷதகாசங்களுக்கு இக்ஷ£வாதி லேகியம் :- தாமரைப்பூ, தாமரைத்தண்டு, நீலோற்பலம், சந்தனம், அதிமதுரம், திப்பிலி திரா¨க்ஷ, அரக்கு, கடுக்காய்ப்பூ, தண்ணீர்விட்டான்கிழங்கு இவை களை சமஎடையாக சூரணித்து சூரணத்திற்கு இரண்டுபாகம் தவக்ஷ£ரி கலந்துவைத்துகொள்க. பிறகு இதற்கு நான்கு பங்கு சர்க்க
  ரையைக் கரும்புரசத்தில் கரைத்து அடுப்பிலேற்றி பாகுபதம்வரும் போது சூரணத்தைக் கொட்டி தேவையான அளவு நெய் கூட்டி லேகியமாய்க் கிளறி ஆறினபின்பு தேன் கூட்டிக் கலந்து வைத்துக் கொள்க. இதை முறைப்படி அருந்திவர காசரோகங்கள் தீரும்.

  வாசாகூஷ்மாண்ட லேகியம் :- கலியாண பூசினிக்காய் சிறிய துண்டு 50-பலம், 16-பலம் நெய்யில் பக்குவமாக வறுத்து அதில் கற்கண்டு 100-பலம்போட்டு 64-பலம் ஆடாதோடை கியாழத்தைச்சேர்த்து அடுப்பிலேற்றி எரித்து பாகுபதம் வரும்போது அதில் தவக்ஷ£ரி, நெல்லிவற்றல், கோரைக்கிழங்கு, கண்டுபாரங்கி, இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி இவைகள் வகைக்கு1/4-பலம், ஏலக்காய், அதிவிடயம், கொத்தமல்லி, மிளகு இவைகள் வகைக்கு 1-பலம், திப்பிலி 4-பலம் இவைகளைச் சூரணித்து அதில் போட்டு 8-பலம் தேன்விட்டுக் கலந்து லேகியபதமாய்க் கிளறிச்சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயங்கள், விக்கல், ரத்த பித்தம், பிலீகம், ஹிருதயரோகம், ஆமிலபித்தம், பீனசம் இவைகள் நிவர்த்தியாகும்.

  பிப்பில்யாதி லேகியம் :- திப்பிலி, அதிமதுரம் இவைகளை இடித்துப்போட்டு கியாழம் காய்ச்சி அதில் சர்க்கரை, பசும்பால், நெய், கரும்புரசம் இவைகள் வகைக்கு 16-பலம், யவைமாவு, கோதுமைமாவு, திரா¨க்ஷ, நெல்லிக்காய்ரசம், நல்லெண்ணெய் இவைகள் வகைக்கு பலம்-2 சேர்த்து மந்தாக்கினியால் லேகிய
  பக்குவமாய்க் கிளறி பிறகு நெய், தேன் சேர்த்து சாப்பிட்டால் காசங்கள், சுவாசங்கள், க்ஷயரோகங்கள், ஹிருதயரோகம் இவை கள் நிவர்த்தியாகும்.

  கண்டகாரியாதி லேகியம் :- கண்டகத்திரி 100-பலம்,
  256-பலம் ஜலத்தில்போட்டு நாலிலொன்றாய் கியாழமிட்டு 20-பலம் சர்க்கரை சேர்த்து பாகுபதமாய்க் காய்ச்சி அதில் சீந்தில்கொடி, செவ்வியம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு, கடுக்காய்ப்பூ, திரிகடுகு பூனைக்காஞ்சொரி, கண்டுபாரங்கி, சிற்றரத்தை, கிச்சிலிக்கிழங்கு இவைகள் வகைக்கு 1-பலம் சூரணித்து கலந்து நெய், லோகபஸ்பம் இவைகள் வகைக்கு 8 பலம் சேர்த்து பக்குவமாக லேகியபதமாய்ஆறிய பிறகு 8 பலம் தேன், மூங்கிலுப்புச்சூரணம் 4 பலம்,திப்பிலிச்சூரணம் 4 பலம் கலந்து கெட்டியான மட்பாண்டத்தி வைத்து சிலநாள் தானிய புடத்தில் கொடுத்துவர காசங்கள் விக்கல், சுவாசங்கள் இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

  அகஸ்தியஹரீ தக்யாதி லேகியம் :- தசமூலம், பூனைகாஞ்சொரிசங்கபுஷ்பி, கிச்சிலிக்கிழங்கு, சிற்றாமுட்டி, ஆனைத்திப்பிலி நாயுருவி, மோடி, சித்திரமூலம், கண்டுபாரங்கி, புஷ்கரமூலம் இவைகள் வகைக்கு 2 பலம், யவதானியம் 25 பலம், சலத்தில் விட்டு எட்டில் ஒன்றாக கியாழம்காய்ச்சி யவதானியம் வெந்தபிறகு வடிகட்டி கியாழத்தி லிருக்கும் கடுக்காய் விரையை, நீக்கியும் வெல்லம் 100 பலம் இவைகள் யாவையும் கலந்து லேகியமாகமாய் கிளறி ஆறிய பிறகு4 பலம் தேன் கலந்து பழகிய பானையில் வைத்து தானியபுடமிட்டு தினம் இரண்டு கடுக்காய் பிரமாணம் சாப்பிட்டுவந்தால் ஐந்துவிதகாசங்கள், கஷயங்கள், சுவாசங்கள், விக்கல், விஷமசுரம், சங்கிர ஹணி, மூலவியாதி, அருசி, ஜலுப்பு இவைகளை நிவர்த்திக்கும்.
  மேனி ஆயுசுவிருத்தி, பலம் இவைகளை யுண்டாக்கும்.

  ஆர்த்திரகாதி லேகியம் :- இஞ்சி 50 பலம், வெல்லம் 50 பலம், கொத்தமல்லி,ஓமம், இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக் காய், கடுகுரோகணி, சீரகம், லோஹபஸ்பம், இவைகள் வகைக்கு 1/2 பலம் வீதஞ் சூரணித்து சேர்த்து லேகிய பதமாய் கிளறி சாப்பிட்டால், காசம், மூலம், சுவாசம், பீனசம், வீக்கம், குன்மம், க்ஷயங்கள் இவைகளை நாசமாக்கும்.

  வியாக்கிரிஹரீதக்யாதி லேகியம் :- கண்டங்கத்திரி சமூலம் 100 பலம், கடுக்காய் 100 பலம், 512 பலம் சலத்தில்போட்டு நாலாவது பாகம் மீறும் படி கியாழத்தை பாகுபதகாய்ச்சி பிறகு சுக்கு, இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய், சிறுநாகப்பு, இவைகள் வகைக்கு 1 பலம் சூரணம் லேகியமாய் செய்து பலத்தை அறிந்து கொடுத்தால் பித்தம், கபம், தொந்தசந்நிபாத காசம், ஷதகாசங்கள், க்ஷயரோகம் பீனசம், சுவாசரோகம், உரக்ஷதரோகம், 11 வித க்ஷயங்கள் நிவர்த்தியாகும்.

  கண்டாமலக லேகியம் :- நெல்லிவற்றல் 1 1/2 சேர் 64 பலம் ஜலத்தில்போட்டு, அடுப்பிலேற்றி கியாழம்காய்ச்சி எட்டிலொன் றாக்கி வடிகட்டி அதில் கற்கண்டு 10 பலஞ் சேர்த்து பாகுபதமாக சமைத்து அதில் கர்ஜீரபழம் 2 பலம், திரா¨க்ஷ 2 பலம், சுக்கு 1-பலம், திப்பிலி 1-பலம், மிளகு 1 1/2-பலம், ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, ஓமம், சீரகம், கருஞ்சீரகம், தாளிசப்பத்திரி இவைகள் ஒவ்வொன்றும் 1 1/2-தோலா விகிதஞ் சூரணித்துப்போட்டு லேகிய பக்குவமாக சமைத்து அதில் 10-பலம் தேன்கலந்து காலை மாலை 40-நாள் சாப்பிட்டால் சகல காசங்கள், சுவாசங்கள், பித்தாதிக்கம் இவைகள் நிவர்த்தியாகும்.

  காசங்களுக்கு சுண்டியாதி சூரணம் :- சுக்கு, பூனைக்காஞ்சொரி, ஆமணக்குவேர், கடுக்காய்ப்பூ, தேவதாரு இவைகளை சமஎடை யாகச் சூரணித்து வெந்நீரில் கொடுத்தாலும் அல்லது ஆமணக்கு
  நெய்யிலாவது, தேனிலாவது கொடுத்தாலும் வாதகாசங்கள், சிலேஷ்ம காசங்கள் இவைகள் நிவர்த்தியாகும்.

  பத்திர முஸ்தாதி சூரணம் :- கோரைக்கிழங்கு, திப்பிலி,இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேனுடன் சாப்பிட்டால் சிலேஷ்ம காசங்கள் நிவர்த்தியாகும்.

  கடுதிரியாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, சித்திரமூலம், தேவதாரு, சிற்றரத்தை, வாய்விளங்கம், கடுக்காய், தானிக்காய், நெல்லிப்பருப்பு, சீந்தில் சர்க்கரை இவைகளை சமஎடையாகச்சூரணித்து சூரணத்திற்கு சமம் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் காசங்கள் நிவர்த்தியாகும்.

  காசச் சூரணம் :- கண்டுபாரங்கி, சுக்கு, திப்பிலி, இவைகள் சமஎடையாகச் சூரணித்து வெல்லங்கலந்து சாப்பிட்டாலும் அல்லது திரிகடுகு இவைகளை சூரணித்து அதில் தேன் நெய் கலந்துச் சாப்பிட்டாலும் காசசுவாசங்கள் நிவர்த்தியாகும்.

  இலவங்காதி சூரணம் :- இலவங்கம், சாதிக்காய், திப்பிலி இவைகள் வகைக்கு 1-தோலா, தானிக்காய் 3-தோலா, மிளகு 2-தோலா, சுக்கு 4-தோலா, இவைகள் யாவையுஞ் சூரணித்து, இதற்கு சமஎடை சர்க்கரைகலந்து சாப்பிட்டால், காசசுரம், அருசி, மேகம், குன்மம், சுவாசங்கள், அக்கினிமந்தம், கிறாணி
  இவைகள் யாவும் நிவர்த்தியாகும்.

  பிப்பல்யாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மோடி, தானிக்காய் இவைகளை சமஎடையாகச் சூரணித்து தேன்கலந்து சாப்பிட்டால் திரிதோஷ காசங்கள் நிவர்த்தியாகும்.

  கர்ப்பூராதி சூரணம் :- பச்சைகற்பூரம், வெட்டிவேர், வாள்மிளகு, ஜாதிக்காய், ஜாபத்திரி இவைகள் சமஎடை இலவங்கம், சிறுநாகப்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவைகள் 1, 2, 3, 4, 5, பாகங்களாகச் சேர்த்து இவைகள் யாவையுஞ் சூரணித்து சமமாக சர்க்கரை கலந்து சாப்பிட்டால், க்ஷயம், காசம், சுவாசகாசம் வாந்தி, இவைகளை நிவர்த்திக்கும். ருசியை உண்டாக்கும்.

  திரிகடுகாதி சூரணம் :- சுக்கு, திப்பிலி, மிளகு, சீரகம், சீந்தில் கொடி, சித்திரமூலம், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், வால் மிளகு, சிற்றரத்தை இவைகள் யாவையுஞ் சமஎடையாக சூரணித்து அதற்குச் சமமாக சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.

  திவிக்ஷ¡ராதி சூரணம் :- சர்ஜாக்ஷ¡ரம், யவக்ஷ¡ரம், பஞ்சமூலம், பஞ்சலவணம், கிச்சிலிக்கிழங்கு, சுக்கு, குருவேர் இவைகளைச் சமஎடையாக சூரணித்து வஸ்திரகாயஞ்செய்து சாப்பிட்டால் சகல காசங்கள் நிவர்த்தியாகும்.

  கணாதி குடிகைகள் :- கோரைக்கிழங்கு, சுக்கு, கடுக்காய்த்தோல் இவைகள் சமஎடையாக சூரணித்து அத்துடன் வெல்லத்தை கலந்து சுண்டையளவு மாத்திரை செய்து 3 நாள் சாப்பிட்டால் சுவாச காசங்கள் நிவர்த்தியாகும்.

  ஹரீதக்யாதி குடிகைகள் :- கடுக்காய்த்தோல், திரிகடுகு இவைகள் சமஎடையாக சூரணித்து அத்துடன் வெல்லத்தைகலந்து சுண்டையளவு மாத்திரை செய்து சாப்பிட்டுவர காசங்கள் நிவர்த்தியாகும். அக்கினிதீபனம் உண்டாகும்.

  திரிஜாதாதி மாத்திரைகள் :- இலவங்கப்பட்டை, இலவங்கப்பத்திரி, ஏலக்காய் இவைகள் வகைக்கு 1/2 தோலா, திப்பிலி 2 தோலா கற்கண்டு, திரா¨க்ஷ, அதிமதூரம், கர்ஜீரக்காய் இவைகள் வகைக்கு 4 தோலா இவைகள் யாவையும் மைபோல் சூரணித்து தேன் கலந்து மாத்திரை பதமாக்கி சிறுநெல்லிக்காய் அளவு மாத்திரை செய்து கொடுத்தால் பித்தாந்தம், இருமல், இரைப்பு, அருசி, வாந்தி, விக்கல், மூர்ச்சை, பிரமை, கஷயங்கள், தொண்டைக்கம்மல், காசம், ஆட்யவாதம் ரத்தவாந்தி, இருதயரோகம், பாரிசசூலை, தாகம், சுரம், இவையாவும் குணமாகும்.

  மரீச்யாதி மாத்திரைகள்: - மிளகு1/4 பலம், திப்பிலி 1/2 பலம் பொரித்தவெங்காரம் 1/8 பலம், மாதுழம்பழத்தோல் 1/2 பலம் இவைகளைச் சூரணித்து அத்துடன் வெல்லம் 2 பலம் சேர்த்து 7 குன்றி எடை மாத்திரை செய்து சாப்பிட்டால் சகல காசங்கள் நிவர்த்தியாகும்.

  இலவங்காதி மாத்திரைகள் :- இலவங்கம், மிளகு, தானிக்காய் தோல், பொரித்தவெங்காரம், சங்குபற்பம், இவைகளைச் சமஎடையா சேர்த்து இலவங்கக்கியாழத்தால் அரைத்து குன்றியளவு மாத்திரைகள்செய்து வேளைக்கு 1-2 மாத்திரை தேனில் சாப்பிட்டால் ஒரு ஜாமத்தில் காசரோகங்கள் நிவர்த்தியாகும்.

  தனஞ்சய மாத்திரைகள் :- மருதமரப்பட்டை, இலவங்க பட்டை, இலவங்கபத்திரி, ஏலக்காய், திப்பிலிமூலம், திரிகடுகு இவைகளை சமஎடையாகச் சூரணித்து இஞ்சிரசத்தால் மாத்திரை பக்குவமாகும் வரையிலும் சிறு சுண்டையளவு மாத்திரை கள் செய்து சாப்பிட்டால் பிரபலமான காசங்கள் நிவர்த்தியாகும்.

  கதிராதி மாத்திரைகள் :- கருங்காலி மரப்பட்டை, புஷ்க்கர மூலம், கடுக்காய்ப்பூ, காயபலம், கண்டுபாரங்கிமூலம், கடுக்காய்த்தோல், இலவங்கம், திரிகடுகு அதிவிடயம், ஓமம், பூனைகாஞ்சொரி,
  சீந்தில்கொடி, கண்டங்கத்திரி, முள்ளங்கத்திரி, தானிக்காய்த்தோல் இவைகள் வகைக்கு 1/2-பல்ம் விகிதம் சேர்த்து மைப்போல் சூரணித்து இதற்கு சமபாகம் கருங்காலிசக்கை சுரணத்தை கலந்து, மாதுளம்
  பழத்தோல், கண்டங்கத்திரிவேர், கருங்காலிபட்டை, இஞ்சி இவைகளின் சாறுகள், கருவேலன்பட்டை இலை இவைகளின் கியாழம், ஆடாதோடை இலைரசம் இவைகளால் தனித்தனி 7-நாள் அரைத்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து கொடுத்தால் காசசுவாசங்கள் வெகுகாலமா யிருந்தாலும் நிவர்த்தியாகும்.

  வியோஷாதி மாத்திரைகள் :- திரிகடுகு, சரக்கொன்றைப்புளி, செவ்வியம், தாளிசப்பத்திரி, சித்திரமூலம், சீரகம், புளித்தோல் இவைகள் வகைக்கு 1/4-பலம், இலவங்கபட்டை, ஏலக்காய், இலவங்கபத்திரி இவைகள் வகைக்கு 1/8-பலம் எடை, வெல்லம் 20-தோலா இவைகள் யாவையும் மாத்திரை பதமாய் அரைத்து 1/4-பலம் பிரமாண மாத்திரைகள் செய்து காலையில் சாப்பிட்டால் சகல காசங்கள், பீநசம், இரைப்பு, அருசி, தொண்டைக்கம்மல் இவைகள் நிவர்த்தியாகும்.

  பிப்பல்யாதி மாத்திரைகள் :- திப்பிலி, புஷ்க்கரமூலம், கடுக் காய்த்தோல், கடுகு, கிச்சிலிக்கிழங்கு, கோரைக்கிழங்கு இவைகள் சமஎடையாகச் சூரணித்து வெல்லத்தை கலந்து சுண்டையளவு மாத்திரைகள் செய்து சாப்பிட்டால் வெகுநாளாக விருத்தியடைந்தசுவாசகாசங்கள் நிவர்த்தியாகும்.

  கபாக்கினி மாத்திரைகள் :- பச்சைகர்ப்பூரம் 1/8-பலம், கஸ்தூரி 1/8-பலம், இலவங்கம் 1/2-பலம், மிளகு, திப்பிலி, தானிக்காய்த்தோல், கோரோசனம் இவைகள் வகைக்கு 1/2-பலம், மாதுளம் பழத்தோல் 1-தோலா இவைகள் யாவுக்கும் சமம் கருங்காலிவேர்ப்பட்டைச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து உளுந்தளவு மாத்திரை செய்து சாப்பிட்டால் காசங்கள் நிவர்த்தியாகும்.

  இருமலுக்கு தசமூலாதி கிருதம் :- தசமூலகியாழம், கண்டு பாரங்கி கல்கம், 10 காடை பஷீகளின் மாமிசக்கியாழம் இவைகளுடன் நெய்யை கலந்து கிருதபக்குவமாக காய்ச்சிக் கொடுத்தால் வாதகாசங்கள் நிவர்த்தியாகும்.

  வியோஷாதி கிருதம் :- திரிகடுகு, ஓமம், சித்திரமூலம், சீரகம், வசம்பு, செவ்வியம், இவைகளைச் சமஎடையாகக் கல்கஞ்செய்து ஆடதோடை ரசமும் தேனும் கலந்து நெய்வார்த்து கிருதபக்கு வமாகச் சமைத்து கொடுத்தால் கபம்சம்பந்தமான காசசுவாசங்கள் நிவர்த்

  Admin
  Admin
  Admin

  Posts : 1697
  Points : 4763
  Reputation : 11
  Join date : 15/09/2010

  https://ayurvedamaruthuvam.forumta.net

  Back to top Go down

  காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள் Empty Re: காச ரோகத்திற்கு( இருமல் & சளி ) சிகிச்சைகள்

  Post by Dr.S.Soundarapandian Sat 24 May 2014, 1:20 pm

  Rolling Eyes 
  Dr.S.Soundarapandian
  Dr.S.Soundarapandian
  உதய நிலா
  உதய நிலா

  Posts : 55
  Points : 83
  Reputation : 0
  Join date : 12/03/2013
  Age : 72
  Location : Chennai - 33

  http://ssoundarapandian.blogspot.in

  Back to top Go down

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum