ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    ஹ்ருத் ரோகதிற்க்கு ( இதய நோய்க்கு ) சிகிச்சைகள்

    Go down

    ஹ்ருத் ரோகதிற்க்கு ( இதய நோய்க்கு ) சிகிச்சைகள்  Empty ஹ்ருத் ரோகதிற்க்கு ( இதய நோய்க்கு ) சிகிச்சைகள்

    Post by Admin Mon 18 Oct 2010, 5:48 pm

    பெளஷ்க்கராதி கியாழம் :- புஷ்கரமூலம், கொடிமாதுழம் பழவேர், முருங்கன்வேர், ஓமம், கிச்சிலிக்கிழங்கு, தேவதாரு சுக்கு, சீரகம், வசம்பு, இவைகள் சமஎடையாக கியாழம் வைத்து அதில் யவாக்ஷ¡ரம், சத்திக்ஷ¡ரம், இந்துப்பு, சவ்வர்ச்சலவணம் இவைகளை கலந்து சாப்பிட்டால் ஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

    தசமூலாதி கியாழம் :- தசமூலத்தை கியாழம் வைத்து அதில் யவாக்ஷ¡ரம், இந்துப்பு, கலந்து சாப்பிட்டால் ஹிருதரோகம், குன்மம், சூலை, காசரோகம், சுவாசரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.

    ஏரண்டாதி கியாழம் :- ஆமணக்குவேர் 2 பலம் 16 பலம்ஜலத்தில் போட்டு கியாழம் காய்ச்சி அதில் யவாக்ஷ¡ரம் போட்டு சாப்பிட்டால் ஹிருதயசூலை, பாரிசசூலை இவைகள் நிவர்த்தியாகும்.

    பாம்ஹிலீகாதி கியாழம் :- பெருங்காயம், சுக்கு, சித்திரமூலம் யவக்ஷ¡ரம், க்டுக்காய்த்தோல், கோஷ்டம், பீடாலவணம், திப்பிலி பாதிரிலவணம், புஷ்கரமூலம் இவைகளை சமஎடையாக கியாழம் போட்டு சாப்பிட்டால் ஹிருத்ரோகம், அக்கினிமந்தம், மலபந்தம் இவைகள் நிவர்த்தியாகும்.

    நாகராதி கியாழம் :- சுக்கு கியாழம் போட்டு கொஞ்சம் உஷ்ணமாக சாப்பிட்டால் அக்கினிதீபனம் உண்டாகும், காசரோகம், சுவாசரோகம், வாதரோகம், சூலை, ஹிருத்ரோகம், இவைகள் நிவர்த்தியாகும்.

    வாதஹிருத்ரோகத்திற்கு பப்பல்யாதி சூரணம் :- திப்பிலி ஏலக்காய், வசம்பு, சுக்கு, ஓமம், பெருங்காயம், சவ்வர்ச்சி லவணம், யவக்ஷ¡ரம், இந்துப்பு இவைகளை சமஎடையாச் சூரணித்து இதில் மூன்று விராகனெடை நெல்லிவற்றல் அல்லது விளாம்பழங்களில் எதிலாவது வாந்தியாகவும் பேதியாகவும் மருந்து கொடுத்து
    பின்பு கொடுத்துவர ஹிருதயரோகம், நிவர்த்தியாகும்.

    திருவிருகாதிசூரணம் :- சிவதைவேர், கோரைக்கிழங்கு, சிற்றாமுட்டிவேர், சிற்றரத்தை, சுக்கு, கடுக்காய்த்தோல், கோஷ்டம் இவைகளைச் சூரணித்தாவது அல்லது கியாழம் வைத்தாவது கோமூத்திரத்தைச் சேர்த்து சாப்பிட்டால் ஹிருதயரோகம், நிவர்த்தியாகும்.

    சூஷ்மைலா சூரணம் :- சிறிய ஏலக்காய், மோடி, இவைகளைச்சூரணித்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் உபத்திரவத்துடன் கூடிய கபஹிருதயரோகம், நிவர்த்தியாகும்.

    ஹிங்குபஞ்சக சூரணம் :- சுக்கு, சவ்வர்ச்சலவணம், மாதுளம் பழத்தோல், கொன்னைப்புளி, சுட்டபெருங்காயம் இவைகள் சமஎடை யாகச் சூரணித்து உட்கொண்டால் ஹிருதயரோகம் நிவர்த்தி யாகும்.

    ஹிங்குவாதி சூரணம் :- பெருங்காயம், வசம்பு, பிடாலவணம், சுக்கு, திப்பிலி, கோஷ்டம், கடுக்காய்த்தோல், சித்திரமூலம், யவ க்ஷ¡ரம், சவ்வர்ச்சலவணம், புஷ்க்கரமூலம், இவைகளை சூரணித்து யவதானிய கியாழத்தில் சேர்த்து சாப்பிட்டால் சூலை, ஹிருதயரோகம் இவைகள் நீங்கும்.

    பாடாதி சூரணம் :- வட்டத்திருப்பிவேர், வசம்பு, யவக்ஷ¡ரம், கடுக்காய்த்தோல், கொன்னைப்புளி, பூனைகாஞ்சோரி, சித்திர மூலம், திரிகடுகு, திரிபலை, புஷ்க்கரமூலம், புளியங்க்காய்த்தோல், மாதுளம்பழத்தோல், கொடிமாதுளவேர் இவைகள் சமஎடையாய்மைபோல் சூரணித்து வெந்நீர், சாராயம், கள் இத்துடன் கொடுத்தால் மூலவியாதி, சூலை, ஹிருதயரோகம், குன்மம் இவைகள் நிவர்த்தியாகும்.

    ஹிருதயாரவை ரசம் :- சுத்திசெய்த ரசம், தாம்பிரபஸ்பம், சுத்திசெய்த கெந்தி இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு திரிபலை கியாழத்தினால் ஒரு நாள் அரைத்து மறுபடியும் அம்மருந்தை
    மணத்தக்காளி இலை ரசத்தினால் ஒரு நாள் அரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து அதில் ஒரு மாத்திரை விகிதம் சாப்பிட்டால் ஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

    ரசாயனம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி அப்பிரகபற்பம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டு மருதம்பட்டை ரசத்தினால் 21-நாடகள் அரைத்து 3-குன்றிஎடை தேனுடன் கலந்து சாப்பிட்டால் திரிதோஷ ஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

    யஷ்டியாதி கிருதம் :- அதிமதுரம், நாகமல்லி, வெட்டிவேர், மருதம்பட்டை இவகளை சேர்த்து காய்ச்சிய நெய்யை சாப்பிட்டால் ஹிருதயரோகம், க்ஷயரோகம், பித்தரத்தம், சுவாசம், காசம் சுரம், பீடை இவைகள் நிவர்த்தியாகும்.

    புனர்னவாதி தைலம் :- வெள்ளைச்சாரணை, மரமஞ்சள், பஞ்சமூலங்கள், சிற்றரத்தை, யவதானியம், இலந்தைவேர், விலாம்வேர், விலவபழம் இவைகளின் கியாழத்தில் நெய்கலந்து தைலபக்குவமாய் காய்ச்சி, அப்பியங்கனம், பானம் இவைகளை செய்தால் வாதஹிருதயரோகம் நிவர்த்தியாகும்.

    கோமூத்திரபானம் :- வாய்விளங்கம், கோஷ்டம் இவைகளை சூரணித்து கோமூத்திரத்தில் கலந்து சாப்பிட்டால் ஹிருதயத்திலிருக்கும் அசாத்தியமான கிருமிகள் போம்.

    துக்தபானம் :- பசும்பால் 24 பலம், மந்தாக்கினியால் பேர்பாதி மீறும்படியாய்ச் சுண்டக்காய்ச்சி ஆறிய பிறகு சர்க்கரை தேன் நெய் இவைகளை வகைக்கு 1/2 பலம் விகிதம் சேர்த்து திப்பிலி சூரணம் 1/4 பலம் சேர்த்து சாப்பிட்டால் சகலதோஷங்களினால் உண்டான ஹிருதயரோகம், சுரம், காசங்கள், க்ஷயங்கள் இவைகள்
    சூரியனைக் கண்ட இருளைப்போ நிவர்த்தியாகும்.

    நாக பலாதி துக்தபானம் :- சிற்றாமுட்டி மூலத்தை பசும்பாலி போட்டு காய்ச்சி சாப்பிட்டால் ஹிருத்ரோகம், சுவாசம், காசம் இவைகள் நீங்கும். இலவன்பட்டையை பாலில் போட்டு காய்ச்சி குடித்தால் மிகவும் பலத்தை விருத்தியாக்குவதுடன் வாதத்தை நாசஞ்செய்யும், இதை ஒரு வருஷம் சாப்பிட்டால் 100 வருஷங்கள் உயிருடன் வியாதிகளற்று இருப்பான்.

    ஹரிண சுருங்க பற்பம் :- மான்கொம்பு பஸ்பத்தை பசும்நெய் யுடன் சாப்பிட்டால் ஹிருதயசூலை நிவர்த்தியாகும்.

    ஹிருதுரோக பத்தியங்கள் :- வியர்வை வாங்குதல், பேதியாகும் படிக்கு மருந்து கொள்ளல், வாந்தியாவதற்கு மருந்து கொள்ளல், லங்கனம் செய்தல், வஸ்தி, லேபனம் செய்தல், பழைய சிகப்பு அரிசி, காட்டில் வாழும் ஜந்துக்கள், பஷிகள் இவைகள் மாமிசங்கள், பச்சைப்பயறு, கொள்ளு, இவைகளின் கூட்டு, புடலங்காய், வாழைகச்சல், மாங்காய், மாதுழம், எண்ணெய், மழைஜலம், இந்துப்பு, ஆடு, செம்மரிஆடு, இவைகளீன் மோர், பழையவெல்லம்சுக்கு, ஓமம், கடுக்காய், வெள்ளைப்பூண்டு, கோஷ்டம், கொத்தமல்லி இஞ்சி, மிளகு, கஞ்சி, தேன், கள் அல்லது சாராயம், கஸ்தூரி சந்தனம், தாம்பூலம், இவைகள் ஹிருத்ரோகிகளுக்கு பத்தியங்கள்.

    அபத்தியங்கள் :- தாகம், வாயு, இருமல், பொடி, வாந்தி, மூத்திரம் அலுப்பு, மேல்மூச்சு, மலம் கண்ணீர் இவைகளைத் தடுத்தல் சிந்துநதி, இமயமலை, விந்தியமலை இவைகளின் ஆறுகளில் உள்ள சலம், ஆட்டுப்பால், கெட்டநீர், புளிப்பு, அதிமதூரம் பல்குச்சி, ரத்தம் வாங்குதல் இவைகளை ஹிருத்ரோகி நிவர்த்திக்கவேண்டியது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum