ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 12:15 pm

» இடுப்பு வலி.. கழுத்து வலிகளுக்கு Belt எத்தனை நாட்கள் வரை அணியலாம்.?
by Admin Mon 02 Jan 2023, 10:34 am

» வயிற்று பூச்சிகள்.. கிருமிகளுக்கு ஆயுர்வேத Home Remedy
by Admin Mon 02 Jan 2023, 10:09 am

» இன்றே காணுங்கள் இடுப்பு வலிக்கான சிறந்த தீர்வை
by Admin Mon 19 Jul 2021, 7:34 pm

» சைனசைடீஸ் காரணமும் .. முழுமையான தீர்வும்
by Admin Fri 09 Jul 2021, 7:32 am

Most Viewed Topics
டாக்டர் நாராயண ரெட்டியின் -உயிர் -அந்தரங்க தொடர்
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
ஆண்குறி பருக்க ?
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
தமிழில் மருத்துவ நூல்கள் -விரிவான அலசல்கள்
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
தகவலை எளிதில் என்னிடம் பரிமாற நீங்கள் செய்யவேண்டிய தொடர்பு பற்றி ..

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

  No ads available.


  புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2

  Go down

  புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2 Empty புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -2

  Post by Admin Fri 05 Nov 2010, 9:34 pm

  பாடம் : 16
  (நோய்த்) தொல்லையின் காரணத்தால் தலைமுடியை மழித்துக்கொள்வது.
  5703 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  ஹுதைபிய்யா நிகழ்ச்சியின் போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அடுப்பின் கீழே தீ மூட்டிக் கொண்டிருந்தேன். பேன்கள் என் தலையிலிருந்து உதிர்ந்து கொண்டிருந்தன. நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்),உங்கள் (தலை யிலுள்ள) பேன்கள் உங்களைத் தொந்தரவு செய்கின்றனவா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் தலை மழித்துக் கொண்டு (இஹ்ராமின் விதியை மீறியதற்குப் பரிகாரமாக) மூன்று நாட்கள் நோன்பு நோறுங்கள்; அல்லது ஆறு பேருக்கு உணவளியுங்கள்; அல்லது ஒரு தியாகப் பிராணியை அறுத்து (குர்பானி) கொடுங்கள் என்றார்கள்.25
  (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவற்றில் எதை முதலில் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
  பாடம் : 17
  (மருத்துவ சிகிச்சைக்காக) சூடிட்டுக்கொள்வது அல்லது பிறருக்குச் சூடிடுவது. மேலும், சூடிட்டுக்கொள்ளமல் இருப்பதன் சிறப்பு.26
  5704 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  உங்கள் மருந்துகளில் ஏதேனும் ஒன்றில் நன்மை ஏதும் இருக்குமானால் குருதி உறிஞ்சும் கருவியால் (உடம்பில்) கீறுவது, அல்லது நெருப்பால் சூடிட்டுக்கொள்வதில் தான் அது இருக்கும். ஆயினும், நான் சூடிட்டுக்கொள்வதை விரும்பவில்லை.
  இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.27
  5705 ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
  இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கண்ணேறு, அல்லது விஷக்கடி தவிர வேறெதற்காகவும் ஓதிப்பார்த்த(-)ல் (சிறப்பு) கிடையாது என்று கூறினார்கள்.
  ளஅறிவிப்பாளர் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:ன
  நான் இதை சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அவர்கள் தமக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்று கூறினார்கள்:
  (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஅராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப் பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களுடைய சமுதாயத் தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், இது எந்தச் சமுதாயம்? இது என் சமுதாயமா? என்று கேட்டேன். அப்போது, அல்ல. இது (இறைத் தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும் என்று எனக்குச் சொல்லப்பட்டது.28 அப்போது அடிவானத்தைப் பாருங்கள் என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளை நான் பார்த்தேன். பிறகு என்னிடம்,அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள் எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்தி ருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர் என்று எனக்குச் சொல்லப்பட்டது.
  (விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி (ஸல்) அவர்கள் (தமது வீட்டுக்குள்) நுழைந்து விட்டார்கள். (அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். நாம்தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்;அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்,) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம் என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. ஆகவே, அவர்கள் புறப்பட்டு வந்து, (விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்க மாட்டார்கள்;பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ள மாட்டார்கள். தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து,அவர்களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, அவர்களில் நானும் ஒருவனா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்கள்.
  பாடம் : 18
  கண்நோய்க்காக அஞ்சனக்கல் மற்றும் அஞ்சனத்தைப் பயன்படுத்துதல்.29
  இது குறித்து உம்மு அ(த்)திய்யா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகின்றது.30
  5706 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். (அதற்காக இத்தா' இருக்கும் போது) அப்பெண்ணுக்குக் கண்வ- ஏற்பட்டது. அப்பெண்ணைப் பற்றி மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்டு, அவளுடைய கண் பழுதாகிவிடும் அபாயமிருப்பதால் அவள் (கண்ணில் சிகிச்சைக்காக) அஞ்சனம் தீட்டிக் கொள்ளலாமா? என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், (அறியாமைக் காலத்தில்) உங்களில் ஒருத்தி (தன் கணவன் இறந்தபின்) மோசமான ஆடையணிந்தவளாக தன் வீட்டில் தங்கியிருப்பாள்' அல்லது மோசமான வீட்டில் சாதாரண ஆடை அணிந்தவளாக (ஆண்டு முழுதும்) தங்கியிருப்பாள்'. (ஓராண்டு கழிந்தபின் அவ்வழியாக) ஏதேனும் ஒரு நாய் கடந்து சென்றால் அதன் மீது ஒட்டகச் சாணத்தை வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) ஆகவே, அவள் நான்கு மாதம் பத்து நாட்கள் (கழியும்வரை) அஞ்சனம் இடவேண்டாம்31 என்று பதில் சொன்னார்கள்.
  பாடம் : 19
  தொழுநோய்32
  5707 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  தொற்றுநோய் என்பது கிடையாது. பறவைகளைக் கொண்டு சகுனம் பார்ப்பதும் ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது. ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது. சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடு வாயோ அப்படி தொழுநோயாளியிடமிருந்து வெருண்டோடு.33
  இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
  பாடம் : 20
  மன்னு' கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.34
  5708 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  சமையல் காளான் மன்னு' வகையைச் சேர்ந்தது ஆகும். அதன் சாறு கண்ணுக்கு நிவரணமாகும்.
  இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.35
  ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
  இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் எனக்கு இந்த ஹதீஸை அறிவித்தார்கள். அவர்கள் இந்த ஹதீஸை அறிவித்த போது தான் அப்தில் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டிருந்த (இந்த ஹதீஸ் எனக்கு உறுதியானது.) இந்த ஹதீஸை நிராகரிக்காத நிலைக்கு நான் வந்தேன்.36
  பாடம் : 21
  வாயில் ஊற்றப்படும் மருந்து
  5709,5710,5711 இப்னு அப்பாஸ்
  (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் கூறியதாவது:
  நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட நிலையில் அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள்.37
  5712 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  நாங்கள் நபி (ஸல்) அவர்கள் நோயுற்று (மயக்கமடைந்து) இருந்த போது அவர் களுடைய வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். உடனே அவர்கள் மருந்து ஊற்ற வேண்டாம் என்று எங்களுக்கு சைகை செய்யலானார்கள்.
  நோயாளி மருந்தை வெறுப்பது போன்று தான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள்; ஊற்றவேண்டாமெனத் தடைசெய்யவில்லை) என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.
  அவர்கள் மயக்கத்திலிருந்து (முழுமை யாகத்) தெளிந்த போது என் வாயில் மருந்து ஊற்றவேண்டாமென்று நான் உங்களைத் தடுக்கவில்லையா? என்று கேட்டார்கள். நாங்கள், ஆம். ஆனால், நோயாளி மருந்தை வெறுப்பது போன்றுதான் (நீங்களும் வெறுக்கிறீர்கள் என நினைத்தோம்) என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருவர் பாக்கியில்லாமல் வீட்டிலுள்ள அனைவரது வாயிலும் மருந்தூற்றப்பட வேண்டும். அப்பாஸ் அவர்களைத் தவிர. ஏனெனில், (வாயில் மருந்து ஊற்றும் போது) உங்களுடன் அவர் இருக்கவில்லை என்று சொன்னார்கள்.38
  5713 உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் என்னுடைய ஆண் குழந்தையை அழைத்துச் சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டி ருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியி ருந்தேன்.39 (இதைக் கண்ணுற்ற) நபி (ஸல்) அவர்கள் இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத்தசை வாதத்தால் ஏற்படும்) விலா வ-யாகும். அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். விலா வ-க்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும் என்று கூறினார்கள்.40
  அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
  நபி (ஸல்) அவர்கள் (ஏழில்) இரண்டை (மட்டும்) நமக்கு விவரித்தார்கள். (மீதி) ஐந்தை விவரிக்கவில்லை என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூற நான் கேட்டேன்.41
  அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
  சுஃப்யான் (ரஹ்) அவர்கள், குழந்தையின் அண்ணத்தை விரலால் அழுத்துவது குறித்து விவரிக்கையில், தமது விரலை மேல்வாயின் உட்புறத்தில் நுழைத்து அழுத்திக் காட்டினார்கள். (இது தான் நோக்கமே தவிர, மூலத்தில் இஃலாக்'எனும் சொல் இடம் பெற்றிருப்பதற்காகத்) தொண்டையில் எதையும் மாட்டுவது நோக்கமாகாது.
  பாடம் : 22
  5714 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு அவர்களுக்கு வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள்.
  அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொரு மனிதருக்கும் இடையே தொங்கியபடி (எனது வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.
  (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகி றார்கள்: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம் இச்செய்தியைத் தெரிவித்தேன். அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று உங்களுக்குத்தெரியுமா? என்று கேட்க, நான் இல்லை (தெரியாது) என்று சொன்னேன். அவர்கள்,அவர் அலீ (ரலி) அவர்கள்தாம் என்று கூறினார்கள். (தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
  நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்து நோய் கடுமையாகிவிட்ட போது வாய்ப் பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். மக்களுக்கு நான் இறுதியுபதேசம் செய்யக் கூடும் என்று சொன்னார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடைய (இன்னொரு) துணைவி யாரான ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தில் அவர்களை அமரச் செய்து, அவர்கள் மீது அந்தத் தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்ற லானோம். அவர்கள் இறுதியில் எங்களை நோக்கி, (சொன்னபடி) செய்துவிட்டீர்கள் (போதும்) என்று சைகை காட்டலானார்கள். பிறகு மக்களை நோக்கி (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டுச் சென்று மக்களுக்கு தொழுகை நடத்தி உரையும் நிகழ்த்தினார்கள்.42
  பாடம் : 23
  அடிநாக்கு அழற்சி
  5715 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
  குஸைமா குலத்து அசத்' கிளையைச் சேர்ந்த உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் அல் அசதிய்யா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர் களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடுதுறந்த) பெண்களில் ஒருவர் ஆவார். அவர் உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரி ஆவார். அவர் கூறினார்:
  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டி ருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந் தேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தை களை (அடிநாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்து கிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வ-யாகும் என்று கூறினார்கள்.
  குஸ்த்' எனும் கோஷ்டமே இந்தியக் குச்சி' எனப்படுகிறது.43
  பாடம் : 24
  வயிற்றுப் போக்கு மருந்து44
  5716 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
  நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என் சகோதரருக்குத் தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்து வருகிறதுஎன்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், அவருக்குத் தேன் ஊட்டுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவரும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார். பிறகு அவர் வந்து, என் சகோதரருக்குத் தேன் ஊட்டினேன்; ஆனால், அது அவருக்கு வயிற்றுப் போக்கை அதிகமாக்கவே செய்தது எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் உண்மை சொன்னான். உன் சகோதரரின் வயிறுதான் பொய் பேசியது என்று பதில் சொன்னார்கள்.45
  இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  பாடம் : 25
  ஸஃபர்' எனும் வயிற்று நோய் ஒரு தொற்று நோயன்று.46
  5717 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொற்று நோய் கிடையாது. ஸஃபர்' தொற்று நோயன்று; ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று சொன்னார்கள்.
  அப்போது கிராமவாசியொருவர், அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே! அவற்றின் நிலையென்ன (தொற்று நோயில்லையா)? என்று கேட்டார்.
  அதற்கு நபி (ஸல்) அவர்கள், அப்படி யென்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்? என்று திருப்பிக் கேட் டார்கள்.47
  பாடம் : 26
  (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வ-.48
  5718 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
  உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நம்பிக்கைப் பிரமாணம் செய்திருந்த ஆரம்பக் கால முஹாஜிர் (நாடுதுறந்த) பெண்களில் ஒருவர் ஆவார். இவர் உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களுடைய சகோதரி ஆவார். அவர் கூறினார்:
  நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் என்னுடைய ஆண் குழந்தையைக் கொண்டு சென்றேன். (அவனுக்கு ஏற்பட்டி ருந்த) அடிநாக்கு அழற்சியைப் போக்க (அக்கால முறைப்படி) தொண்டையில் திரியைத் திணித்து விரலால் அழுத்தியிருந் தேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இந்த சிகிச்சை முறையால் உங்கள் குழந்தைகளை (அடி நாக்கைக் குத்தி) ஏன் துன்புறுத்துகிறீர்கள்? இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு (நோய்களுக்கு) நிவாரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று (மார்புத் தசை வாதத்தால் ஏற்படும்) விலா வ-யாகும் என்று சொன்னார்கள். இந்தியக் குச்சி' என்பது குஸ்த்' எனும் செய்கோஷ்டத்தைக் குறிக்கிறது.49
  5719,5720,5721 ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
  அய்யூப் (ரஹ்) அவர்களுக்கு அபூகிலாபா (ரஹ்) அவர்களின் (ஹதீஸ் தொகுப்பு) நூல்கள் வாசித்துக் காட்டப்பட்டன. அவற்றில் அய்யூப் (ரஹ்) அவர்கள் ளஅபூகிலாபா (ரஹ்) அவர்களிடமிருந்துன அறிவித்த ஹதீஸ்களும் இருந்தன;அய்யூப் (ரஹ்) அவர்களுக்கு (முன்பே) வாசித்துக் காட்டப்பட்ட ஹதீஸ் களும் இருந்தன. அந்த நூலில் (பின்வரும்) இந்த ஹதீஸும் இடம்பெற்றிருந்தது.
  அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
  அபூதல்ஹா (ரலி) அவர்களும் அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்களும் எனக்கு (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட விலா வ-க்காக) சூடிட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது கையால் எனக்குச் சூடிட்டார்கள்.
  அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
  அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு வீட்டாருக்கு விஷக் கடிக்காகவும், காது வ-க்காகவும் ஓதிப்பார்க்க அனுமதியளித்தார்கள்.
  அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:
  (மார்புத் தசை வாதத்தால் ஏற்பட்ட) விலா வ-க்காக எனக்குச் சூடிடப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உயிரோடிருந்தார்கள். அந்த நேரத்தில் அபூதல்ஹா (ரலி), அனஸ் பின் நள்ர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) ஆகியோர் என்னுடன் இருந்தனர். அபூ தல்ஹா (ரலி) அவர்கள்தாம் எனக்குச் சூடிட்டார்கள்.
  பாடம் : 27
  இரத்தம் வழிவதை நிறுத்த பாயை எரி(த்து அதன் சாம்பலை வை)ப்பது.50
  5722 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ
  (ரலி) அவர்கள் கூறியதாவது:
  (உஹுதுப் போரில்)ன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தலைக் கவசம் அவர்களுடைய தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களுடைய (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்துபோய்க் கொண்டு இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவிவிட்டுக் கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து அதை எரித்து (அது சாம்பலான தும்) அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.51
  பாடம் : 28
  காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாவதாகும்.52
  5723 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகிறது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
  அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
  இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இறைவா!) எங்களை விட்டு நரகத்தின் வேதனையை நீக்கு வாயாக என்று பிரார்த்தித்துவந்தார்கள்.53
  5724 ஃபாத்திமா பின்த் முன்திர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
  அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் தம்மிடம் கொண்டுவரப்பட்டால் அவளுக்காக பிரார்த்தனை புரிந்துவிட்டு தண்ணீரை எடுத்து அவளுடைய ஆடையின் உட்பகுதி யில் தெளிப்பார்கள். மேலும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காய்ச்சலைத் தண்ணீரால் தணிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டுவந்தார்கள்என்றும் சொன்னார்கள்.
  5725 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
  காய்ச்சல் நரகத்தின் வெப்பக் காற்றினால் உண்டாகின்றது. ஆகவே, அதைத் தண்ணீரால் (குளிர்வித்துத்) தணியுங்கள்.
  இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க

  Admin
  Admin
  Admin

  Posts : 1721
  Points : 4835
  Reputation : 11
  Join date : 15/09/2010

  https://ayurvedamaruthuvam.forumta.net

  Back to top Go down

  Back to top

  - Similar topics

   
  Permissions in this forum:
  You cannot reply to topics in this forum