ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    அக்குபஞ்சரை பற்றி தெரிந்ததும் -தெரியாததும் ..

    Go down

    அக்குபஞ்சரை பற்றி தெரிந்ததும் -தெரியாததும் .. Empty அக்குபஞ்சரை பற்றி தெரிந்ததும் -தெரியாததும் ..

    Post by ஜவாஹிரா Tue 23 Nov 2010, 11:44 pm

    நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம். இயற்கைச் சக்திகள் இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள்,தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் 'அருட்கொடை' என்றுதான் சொல்ல வேண்டும்.

    நம் ஊர் மருத்துவ முறைகள் பின்தங்கிப் போனதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது, பரம்பரை மருத்துவம் என்று ஒவ்வொரு தாத்தாக்களும் தன் மகன்களிடமும், பேரன்களிடமும் மட்டும்தான் இந்த மருத்துவக்குறிப்புகளை ஒப்படைப்பேன் என்று வீம்பு பிடித்ததுதான். இப்படி வீம்பு பிடித்த தாத்தாக்களால் எத்தனையோ அறிய மருத்துவக் குறிப்புகள் ம(ற)றைந்து போயிற்று. ஆனால், அந்த காலத்து மருத்துவ முன்னோடிகளாக இருந்த எகிப்தியர்கள், எல்லாக் குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டதால் இன்றளவும் அது நமக்கு உதவுகிறது.

    நல்லவேளையாக அக்குபஞ்சர் தப்பிப் பிழைத்து இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருக்கிறது. பலபேர் இன்றைக்கு ஆபரேஷன் இல்லாமல் பல சிக்கல்களை இந்த அக்குபஞ்சர் முறையில தங்களை குணப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

    அதெப்படி மருந்து மாத்திரையிலும், ஆபரேஷன் பண்ணியும் குணமாகக்கூடிய வியாதி ஒரு சின்ன ஊசியினால குணமாகிவிடும் என்று, நாம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் வரும். நியாயமான சந்தேகம்தான்!

    நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.

    [You must be registered and logged in to see this image.]

    நம் உடம்பிலுள்ள எல்லா பாகங்களிலும், ஒவ்வொரு உறுப்புக்கான அக்குபஞ்சர் புள்ளிகள் உண்டு. அந்த அக்குபஞ்சர் புள்ளிகளிருக்கும் சரியான இடத்தில், ஊசிகுத்தப்படும்போது, அந்தந்த உறுப்புக்கான புள்ளிகள் ஸ்டிமுலேட் ஆகும். நம் உடம்பிற்குள் QI('ச்சீ' என்று படிக்கவும்) எனர்ஜி என்று ஒன்று உண்டு, அந்த எனர்ஜியை ஊசியின் ஸ்டீமுலேஷனால் செயல்படுத்தி குறிப்பிட்ட உறுப்பிற்கு செலுத்தி குணமடையச் செய்ய வைப்பதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.


    அக்குபஞ்சர் ஊசிகளின் அம்சங்கள்

    எந்த ஒரு குண்டூசியையும் இந்த மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம் என்று யாரும் தயவு செய்து முயன்றுவிடவேண்டாம். அது மிகவும் ஆபத்து. அக்குபஞ்சருக்கு என்று பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஊசிகளை மட்டுமே சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பொதுவாக, அக்குபஞ்சர் ஊசி 0.5 இன்ச்சிலிருந்து 7 இன்ச்வரை கிடைக்கிறது.

    இந்த ஊசிகளில் சிரெஞ்ஜ் போல் துளைகளிருக்காது. அதனால் இந்த ஊசிகளுக்குள் இரத்தம் தங்காது. எனவே, இரத்தத்தின்மூலம் பரவும் STD போன்ற வியாதிகள் இந்த ஊசிகளினால் பரவாது என்பது நல்ல விஷயம். இருந்தாலும், ஒருவருக்கு உபயோகிக்கப்படும் அக்குபஞ்சர் ஊசிகள் அடுத்தவருக்கு பெரும்பாலும் உபயோகிப்பதில்லை.

    சீனா, இலங்கை போன்ற நாடுகளில் 7 இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை ஆபரேஷன் செய்வதற்குமுன் மயக்கமருந்திற்கு பதிலாக மயக்கம் வரவழைக்க உபயோகிக்கிறார்கள். அதேபோல், பிரசவத்தின்போது, ஒரு இன்ச் அக்குபஞ்சர் ஊசிகளை உபயோகித்து, வலியில்லாமல் குழந்தைபிறக்க செய்கிறார்கள். இப்படி இதன் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

    [You must be registered and logged in to see this image.]



    அக்குபஞ்சர் ஊசிகள் காப்பர், வெள்ளி, தங்கம் என்று வெவ்வேறு உலோகங்களில் கிடைக்கிறது.


    எத்தனை ஊசிகள் உடம்பில் குத்தப்படும்?

    ஏழைக்கேற்ற எள்ளுருண்டை என்பதுபோல், நோய்க்கு தகுந்தபடி ஊசிகளின் எண்ணிக்கையை கூட்டியும் குறைத்தும் உபயோகிக்கப்படும். உதாரணத்திற்கு தலைவலி, உடல்வலிக்கு 4 ஊசிகள் போடப்படும். சாதாரண ஜூரத்தில் வாடும் ஒருவருக்கு 3 நாட்களுக்கு சுமார் 7 ஊசிகள் என்று போடலாம்.

    நம் ஊரிலுள்ள பெண்களுக்கு, நமது முன்னோர்கள் அக்குபஞ்சர் மருத்துவமுறையை மறைமுகமாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள் என்றால் நம்பமுடிகிறதா..?

    ஆம், இதோ உதாரணம்...

    1) ஒரு பெண் தனது காதுகளில் கம்மல் மாட்டுவதால், EARPINT இயக்கப்படுகிறது, இது கண்பார்வைக்கு நல்லது. மூக்கு-குத்தி அணிவதால், LI-20 Ying Xiang என்ற அக்கு பாய்ண்டுகள் இயக்கப்படுகிறது. இதனால் கன்னங்களில் சுருக்கம் விழாது, முகம் தெளிவாகத் இருக்கும். மேலும், பெண்களுக்கு உடம்பில் நளினங்கள் கொடுக்கும். ஹார்மோன்களை சீராகச் சுரக்கச் செய்யும்.
    2) நெத்திச்சுட்டி அணியும்போது நடுமண்டையிலிருக்கும் DU-20 Baihui என்ற பாய்ண்டானது இயக்கப்படுகிறது, இது உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் நல்லது. இதை KING F ALL PINTS என்று சொல்வார்கள். நெற்றிக்கு கொஞ்சம் கீழே, இரண்டு புருவங்களுக்கு மத்தியிலிருக்குமிடத்தை ஸ்பெஷல் பாய்ண்ட் என்பார்க்ள். இங்கு ஸ்டிமுலேட் செய்வதால் ஞாபகசக்தி அதிகமாகும், சுருக்கங்கள் விழுவது குறையும்.. இங்கு நம்மூர் பெண்கள் கைவிரலால் அழுந்தத்தேய்த்து பொட்டு வைப்பதாலும் இந்த பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகும்.

    3) கொலுசு அணிவதால், K3 அல்லது TAIXI என்ற பாய்ண்ட் ஸ்டிமுலேட் ஆகி, கொலுசு அணிபவரின் கிட்னி நல்லமுறையில் இயங்க உறுதுணையளிக்கும் இப்படி நம் நாட்டு பெண்கள் சம்பிரதாயத்துக்காக அணியும் ஆபரணங்களும், செய்துக்கொள்ளும் அலங்காரங்களும் அவர்களது உடம்பை நல்ல முறையில் பராமரிக்க உதவுகிறது.

    ஒருவருக்கு வாந்திவருவது போல் இருந்தால், அவர்களின் இடது அல்லது வலது கை மணிக்கட்டுக்கு கீழே 3 விரல்களால் பிடித்து மிதமாக அழுத்தம் கொடுக்க, வாந்தி வருவது நின்று போகும்.

    அக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்

    அக்குபங்சர் மருத்துவம் மிக எளிமையானது, பக்க விளைவில்லாதது, பாதுகாப்பானது தான், என்றாலும் உயிரோடு தொடர்புடைய ஒரு பணி என்பதால் நாம் கூடுதல் கவனத்தோடு இருப்பது நல்லது. இக்கண்ணோட்டத்தின் அடிப்படையிலே உலக சுகாதார நிறுவனம் அக்குபஞ்சர் பயிற்சியை பாதுகாப்பாக மேற்கொள்வது பற்றிய சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு
    ஒவ்வொரு அக்குபங்சர் பயிற்சியாளரும் கீழ்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் அவசியம்.

    பணிச்சூழலை தூய்மையாக வைத்திருத்தல்

    கைகளை தூய்மையாக வைத்திருத்தல்

    குத்தப்போகும் அக்கு புள்ளியை ஸ்பிரிட் கொண்டு தயார் படுத்துதல்.

    உரிய வகையில் பாதுகாக்கப்பட்ட குறைபாடில்லாத ஊசி மற்றும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

    பயன்படுத்தப்பட்ட ஊசி மற்றும் பஞ்சு ஆகிய கழிவுகளை கவனமாய் கையாள வேண்டும்.

    கர்ப்பமுற்ற பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சையளித்தலை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது.

    மருந்து சார்ந்த முதலுதவி மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் அவசர நேரங்களில் அக்குபங்சர் சிகிச்சையளித்தல் பலனளிக்காது.

    புற்று கட்டிகள் மற்றும் கேடு விளைவிக்கும் அழுகிய கட்டிகளுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை தனித்து உதவாது. மேலும் அத்தகைய கட்டியுள்ள பகுதிகளில் உள்ள அக்கு புள்ளிகளில் ஊசி செருகுதலை தவிர்க்க வேண்டும்.

    கடும் இரத்தப்போக்கு, இரத்தத் தேக்கம் உள்ள நோயாளிகள், இரத்த உறைவை உருவாக்கும் மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் மற்றும் இரத்த உறைவு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு ஊசி குத்துதலை தவிர்க்க வேண்டும்.

    துருப்பிடிக்காத இரும்பு அல்லது வேறு வகையான உலோகங்கள் என எதில் தயாரிக்கப்பட்ட ஊசியினாலும் அதனை பயன்படுத்தும் முன் கவனமாக பரிசீலிக்க வேண்டும். வளைந்த ஊசி, கொக்கி போன்ற முனையுடைய ஊசி, முனை மழுங்கிய ஊசி, சேத மடைந்த ஊசி போன்றவை கேடு விளைவிப்பவை. அவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

    ஊசி ஏற்றுவதற்கு முன் நோயாளியை அவருக்கு வசதியானவாறு இருக்கச்செய்ய வேண்டும். சிகிச்சையளிக்கும் போது இருக்கும் நிலையை மாற்றிக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    முதல் முறையாக அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளியை கிடை நிலையில் மென்மையாகவும், திறமையாகவும் கையாள வேண்டும். சில நேரங்களில் மயக்க உணர்வு ஏற்படலாம் என்பதை முன்னதாகவே தெரிவித்திட வேண்டும். ஊசி ஏற்றிய பின் ஏற்படும் மாற்றங்களை உற்று கவனித்து வர வேண்டும். நாடி பரிசோதனை அடிக்கடி செய்து வர வேண்டும்.

    ஊசியேற்றும் போது மயக்கம், கிறுகிறுப்பு, அசௌகரியம். பலவீனம், பசி, வாந்தி, குமட்டல், படபடப்பு, குளிர், குளிர்ந்த வியர்வை போன்றவை ஏற்பட்டால் அவை எச்சரிக்கை குறிகளாகும்.

    எச்சரிக்கை குறிகள் ஏற்பட்டால் உடனடியாக ஊசியை நீக்கி விட்டு கால் நீட்டி கிடைநிலையில் படுக்க வைக்க வேண்டும் சமநிலைக்கு சற்று தலையை தாழ்த்தி வைக்க வேண்டும். தேவைப்பட்டால் வெதுவெதுப்பான இனிப்பு பானங்கள் அருந்தச்செய்யலாம். அவசியமெனில் சூழலுக்கேற்ப CV6, P6, DU20 ஆகிய புள்ளிகளை கையாளலாம்.

    அக்குபங்சர் சிகிச்சைக்கு வரும் அனைத்தும் நோயாளிகளிடமும் வலிப்பு வந்ததுண்டா என விசாரித்தறிய வேண்டும். ஊசி ஏற்றும் போது வலிப்பு ஏற்பட்டால் உடனடியாக வேறு மருத்துவ முறைக்கு மாற்றிட வேண்டும்.

    திறமையான ஊசியேற்றலில் பெரும்பாலும் நோயாளிகள் வலியை உணர்வதில்லை. ஊசி யேற்றிய புள்ளியில் லேசான வலி, கூச்சம் மதமதப்பு கனத்த உணர்வு ஏற்பட்டால் ஆற்றல் தூண்டப்பட்டு நன்கு வினைபுரிகிறது என பொருள். ஊசியேற்றிய பின் கடு கடுக்கும் ஊசியை நீக்கிவிட்டு சரியான புள்ளியில் குத்த வேண்டும். ஊசியை நீக்கிய பின், புள்ளிகளில் லேசாக அழுத்துதல் அவசியம்.

    அக்குபங்சர் என்பது ஊசியேற்றுதல் மட்டுமல்ல, அக்குபங்சர் - எலக்ட்ரோ - அக்குபங்சர், லேசர் அக்குபங்சர், மாக்ஸிபஸன், கப்பிங், ஸ்கிராபிங் மற்றும் காந்த சிகிச்சை ஆகியவையும் அடங்கும்.

    குழந்தைகளின் உச்சிகுழி, புற பிறப்பு உறுப்புகள், மார்பு காம்பு, தொப்புள் மற்றும் கண்மணிகளில் கண்டிப்பாக ஊசியேற்றக் கூடாது.

    இந்த எச்சரிக்கை குறிப்புகளையும், அக்குபங்சர் நிபுணர்களின் அனுபவ ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் வெற்றிதான்.
    Source : [You must be registered and logged in to see this link.]

    ஜவாஹிரா
    உதய நிலா
    உதய நிலா

    Posts : 305
    Points : 909
    Reputation : 2
    Join date : 16/11/2010

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum