என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
நேத்ர ரோக(கண் நோய்க்கான ) சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
நேத்ர ரோக(கண் நோய்க்கான ) சிகிச்சைகள்
நேத்திரரோகசிகிச்சை
திலபுஷ்பாஞ்சனம் :-மிளகு 2 பாகம், சுத்திசெய்த பலகறை 4 பாகம், எள்ளுப்பூ 8 பாகம், இவைகள்யாவையும் ஒன்றாக கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழரசத்தில் அரைத்துமாத்திரைகள் செய்து ஜலம் விட்டு அரைத்து கண்களுக்கு கலிக்கமிட,திமிரங்கள் கண்புரை, நமைச்சல், அர்புதரோகம், துர்மாமிசம், கண்சிகப்புமுதலியன நிவர்த்தியாகும்.
மரீசாஞ்சனம் :-மிளகு 1 பாகம், நெல்லிவற்றல் 2 பாகம்புங்கன்விரை 3 பாகம் இவைகளைகல்வத்திலிட்டு கரிசனாங் கண்ணி சாற்றினால் அரைத்து மாத்திரைகள் செய்துகண்களுக்கு கலிக்கமிட்டுக்கொண்டால் பார்வை இல்லாத கண்கள் புரைகள் காசம்இவைகள் நிவர்த்தியாகும்.
தார்வியாத் யஞ்சனம் :- ரசாஞ்சனம் கண்களுக்குகலிக்கமிட்டால் கண் புரை காசம் சிகப்பு அர்புதம் சலம் வடிதல்
அர்மரோகம், மாலைக்கண், நமைச்சல் கண்கள் ஒட்டிக்கொள்ளுதல் இவைகள் நிவர்த்தியாகும்.
காட்டுமல்லியை அரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் கண்நோய், வர்த்துமரோகம், கண்பூ இவைகள் நிவர்த்தியாகும்.
கிரிகர்ணிகாத் யஞ்சனம் :-வெள்ளைச்சுக்கட்டான்வேர்அதன்விரைகள், பூக்கள், சுட்டசங்கு, மஞ்சள்,கடுக்காய், சுக்கு இவைகள் சமஎடையாய் சேர்த்து காக்கட்டான் வேர்ரசத்தினால் அரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால் பார்வையற்றுப்போனகண்களுக்கு மறுபடியும் பார்வை யுண்டாகும்.
நாரிகே ளாஞ்சனம் :-மரமஞ்சள், கடுக்காய், தானிக்காய்நெல்லிவற்றல் அதிமதூரம் இவைகள் வகைக்கு 1பலம் விகிதம் சேர்த்து இடித்து ஒரு படி தேங்காய் ஜலத்தில் போட்டு எட்டில்ஒரு பாகம் மீறும்படி கியாழம் காய்ச்சி மற்றொரு பானையில் வார்த்துமந்தாக்கினியால் ஒரு ஆழாக்கு மீறும்படியாக காய்ச்சி ஆறவைத்து அதி 1/2ரூபாய் எடை பச்சைக்கற்பூரம் 1 ரூபாய் எடை இந்துப்பு, 15 குன்றி எடை தேன்விட்டரைத்து கண்க ளுக்குகலிக்க மிட சகலமான கண்நோய்கள் சுவஸ்தமாகும்.
மகாநாரிகே ளாஞ்சனம் :-மரமஞ்சள், கடுக்காய், தானிக்காய் நெல்லிவற்றல் அதிமதூரம் இவைகள் வகைக்கு 1பலம் விகிதம் சேர்த்து இடித்து 16 பலம் இளநீர் விட்டு எட்டில்ஒரு பாகம்மீறும்படிகியாழம் சுண்டக்காய்ச்சி மற்றொரு பானையில் வைத்து ந்தாக்கினியில் மறுபடியும் காய்ச்சி 5-பலமாக சுண்டக்காய்ச்சி
இறக்கிகொண்டு ஆறவைத்து பிறகு அதில் சுத்திசெய்த மயில்துத்தம்,பச்சைகற்பூரம், கடல்நுரை, காவிக்கல், இந்துப்பு, ரசாஞ்சனம், மிளகு இவைகள்சூரணத்தை வகைக்கு 1/8-பலம் விகித்ங்கலந்து தேன் 1 1/2-தோலா கலந்துகண்களுக்குப்போட்டால் 96-நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.
புஷ்ப்பாஞ்சனம் :-மஞ்சிஷ்டி, அதிமதுரம், கரும் அல்லிப்பூ, தயிர், திப்பிலி, இலவங்கப்பட்டை,செவ்வியம், கோரோசனம், ஜடாமாஞ்சி, சந்தனம், சுட்டசங்கு, காவிக்கல்,சுத்திசெய்த மயில் துத்தம், புஷ்ப்பாஞ்சன்ம், இவைகள் சமஎடையாக அரைத்துநேத்திரத்தில் சதாப்போட்டுக் கொண்டிருந்தால் சகல கண்வியாதிகள்
நிவர்த்தியாகும்.
திராத் யஞ்சனம் :-நெல்லிக்காய், கடுக்காய், தானிக்காய்,இவைகளின் பருப்புகளை சூரணித்துஎலுமிச்சம்பழ ரசம்விட்டு அரைத்து மாத்திரை செய்து கண்களுக்குகலிக்கம்போட்டால் கண்களில் சலம்வடிதல், திமிரம் முதலியன நிவர்த்தியாகும்.
வடக்ஷ£ராதி யஞ்சனம் :- பச்சைகற்பூரத்தை ஆலன்பாலினால் அரைத்து கண்களுக்கு இரண்டு மாதக்காலம் கலிக்கமிட்டால் கண்களின்பூ நிவர்த்தியாகும்.
பிப்பல்யஞ்சனம் :-திப்பிலி, சமுத்திரநிரை, இந்துப்பு இவைகளைச் சூரணித்து வெங்கலபாத்திரத்தில் வைத்து தேனினால் அரைத்து அஞ்சனமிட்டால் சுக்கிரரோகம்நிவர்த்தியாகும்.
காஸ்மரியாத் யஞ்சனம் :-பூசினிப்பூ, அதிமதுரம், மரமஞ்சள், லோத்திரம், ரசாஞ்சனம் இவைகளைசமஎடையாய்ச் சூரணித்து தேனுடன் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால்பித்தநேத்திர
வியாதி நிவர்த்தியாகும்.
நக்தாந்தியத்திற்கு கணாத்யஞ்சனம் :-திப்பிலியை ஆட்டுமலத்தின் நடுவில்வைத்து பக்குவம்செய்து அந்தஆட்டுமலத்தின் ரசத்தினாலரைத்து கலிக்கமிட்டால் நக்தாந்தியம்நிவர்த்தியாகும். சுக்கு, திப்பிலி, மிளகு தேனுடன் அரைத்துகலிக்கமிட்டால் நக்தாந்தியம் நிவர்த்தியாகும்.
ரசாஞ்சனாத்யஞ்சனம் :-ரசாஞ்சனம், சுட்டசங்கு, தேவதாரு, இவைகளை ஜாதீபத்திர ரசத்தினால் அரைத்துதேன்கலந்து கண்க ளுக்கு கலிக்கமிட ரக்தாந்தியம் நிவர்த்தியாகும்.
பிப்பல்யாத்யஞ்சனம் :-திப்பிலி, திரிபலை, அரக்கு, லோத்திரரம், இந்துப்பு இவைகளை சமஎடையாய்கல்வத்திலிட்டு கரினாங்கண்ணி ரசத்தினால் அரைத்து மாத்திரைசெய்துகண்களுக்கு கலிக்கமிட்டால் அர்மரோகம், திமிரம், காசம், நமைச்சல்,லக்கிலம்,அர்சூனம், இன்னும் ம்ற்றநேத்திரரோகங்கள் யாவும் நிவர்த்
தியாகும்.
துளசியாத் யஞ்சனம் :-துளசிஇலை ரசம், வில்வஇலைரசம் இவைகள் சமஎடை, இவைகளுக்கு சமஎடை முலைப்பால்இந்த மூன்றையும் வெங்கல பாத்திரத்தில் வைத்து அரைத்து அத்துடன் ஆனைத்
திப்பிலி சூரணத்தைக் கலந்து செப்புச் செம்பினால் ஒருஜாம அரைத்து கூழு போல்செய்து கண்களுக்குகலிக்க மிட்டால் நேத்திரரோகம்பாகத்தினாலுண்டானநேத்திரசூலை முதலியன நிவர்த்தியாகும்.
கதகாத்யஞ்சனம் :-தேத்தாங்கொட்டை, சங்கு, இந்துப்புசுக்கு, திப்பிலி, மிளகு, சர்க்கரை,கடல்நுரை, ரசாஞ்சனம், தேன் வாய்விளங்கம், சுட்டசங்கு, இவை யாவும்சமஎடையாய் கல்வத்திலிட்டு முலைப்பால் விட்டரைத்து கண்களுக்குகலிக்கமிட்டால் திமிரம், படலம், காசம், அர்வம், நேந்திரசுக்கிரம் நமைச்சல்,குத்தல், அர்ப்புதம், மலம், ஊளை முதலியன நிவர்த்தியாகும்.
புனர்னவாத் யஞ்சனம் :-சுத்திசெய்த வெள்ளைச்சாரணை வேரை பாலிலரைத்து கண்களுக்குகலிக்க மிட்டால்நமைச்சலும் தேனுடன் கலந்து போட்டால் கண்ணிர் வடிதலும், நெய்யுடன் அரைத்துகலிக்க மிட்டால் திமிரமும், காஞ்சிகத்தில் அரைத்து போட்டால் மாலைக்கண்முதலியனவும் குணமாகும்.
உத்பலாத் யஞ்சனம் :-அல்லிப்பு, இந்துப்பு, ரத்தசந்தனம்திரிபலை இவைகளைஎலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து அஞ்சனமிட்டால், மாலைக்கண், திமிர்,கண்புரை, முதலியன நிவர்த்தியாகும்.
சர்வநேத்திர ரோகத்திற்கு சவ்வீராஞ்சனம்:- கருமாக்கல்லை நெருப்பிலி சுட்டு திரிபலை கியாழத்தில் ஏழுமுறையும்முலைப்பாலில் ஏழுமுறையும் தேய்த்து எடுத்து வாஇத்துக்கொள்ளவும். இம்மாதிரி
செய்தபிறகு அந்த கருமாக்கல்லை மைபோலரைத்து கண்களுக்கு மையிட்டால்சகலநேத்திரரோகங்கள் நிவர்த்தியாகி கண்களுக்கு மிகவும் ஹிதமாயிருக்கும்.
சகல நேத்திர ரோகங்களுக்கு மிருது சூரணாஞ்சனம் :-கல்கப்பரியை மைபோல் அரைத்து ஜலத்தில் கலந்து அதன்மீதுள்ள தேட்டைநீரைஎடுத்துக்கொண்டு அடியிலிருக்கும் சூரணத்தைப்போட்டுவிட்டு அந்த தேட்டைநீர்கண்டுகிற வரையிலும் காய்ச்சினால் அடியில் பில்லைப்போல் நிற்கும். அந்தபில்லையை திரிபலைகியாழத்தினால் மூன்றுமுறைஅரைத்து மூன்று புடமிட்டு பிறகுசூரணித்து இதற்கு பத்தாவது பாகம் பச்சைக்கற்பூரம் கலந்து கண்களுக்குகலிக்கமிட்டால் சகல நேத்திரரோகம் நிவர்த்தியாகும்.
மஞ்சிஷ்டாத் யஞ்சனம் :-மஞ்சிஷ்டி, அதிமதுரம், அல்லிக் கிழங்கு, திப்பிலி, கடல்நுரை, இலவங்கசக்கை,வெட்டிவேர், கோரோசனம், ஜடாமாஞ்சி, ரத்தசந்தனம், சங்கு, இலவங்கப்பத்திரி,புஷ்பாஞ்சனம் இவைகளை சமஎடையாக ஜலம்விட்டரைத்து மாத்திரைசெய்துநிழலிலுலர்த்தி அரைத்து கண்களுக்கு இட்டால்
நமைச்சல், ஒட்டிக்கொள்ளுதல், கண்மலம், ஜலம்வடிதல், சிவப்பு வலி, பில்லை, ஊரிகிறது, சுக்கிரம் முதலியன நிவர்த்தியாகும்.
அன்யன்னய நாமிருதம் :-இந்துப்பு, சுத்திசெய்த பால்துத்தம், கடல்நுரை, ரசாஞ்சனம், வெங்காரம்,மிளகு இவைகள் சம எடையாக தாம்பிரபாத்திரத்தில் வைத்துஎலுமிச்சம்பழரசத்தினால் மூன்றுநாள் அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால்காசம், அர்மம்,புரைகள், நமச்சல், விரணம் முதலியன குணமாகும்.
திமிரபடலத்திற்கு வர்த்தி :-தானிக்காய் பருப்பு, அதிமதுரம், நெல்லிபருப்பு, மிளகு, பால்துத்தம் இவைகளைசமஎடையாக ஜலம்விட்டரைத்து வத்திப்போல் செய்து நிழலிலுலர்த்தி ஜலத்தில்அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் திமிரம் நிவர்த்தி யாகும்.
பத்தியாதி வர்த்தி :-கடுக்காய்ப்பிஞ்சி 3-பாகம், தானிக்காய் 2- பாகம், நெல்லிபருப்பு 1-பாகம்இவைகள் யாவையும் ஒன்றாக ஜலம்விட்டரைத்து வத்திகள்செய்து நிழலிலுலர்த்திவைத்துக்கொள்ளவேண்டியது. அரைத்து கண்களுக்கு கலிக்கமிட்டால் கண்ஜலம்விட்டு நோய்கள் யாவும் நிவர்த்தியாகும்.
கண்பூ முதலியவைகளுக்கு லேகனவர்த்தி :-புங்கன்விரை சூரணத்தை முருக்கன்பூரசத்தில் பலதடவை பாவனைச்செய்து மைப்போல்அரைத்து வர்த்தி செய்து அவைகளை ஜலத்தில் அரைத்து கண்களுக்குகலிக்கமிட்டுக்கொண்டால் கண்பூ, மாமிசவிருத்திநஞ்சு முதலிய ரோகங்கள்சஸ்திரத்தினால் சேதிப்பதுபோல் நிவர்த்தியாகும்.
திமிர்களுக்கு ரோபணரச கிரியைகள் :-1/4-பலம் சீந்தில்கொடி ரசத்தில், 1/4-பலம் தேனும், இந்துப்பு 1/4-பலமும்சேர்த்தரைத்து நேத்திரங்களுக்கு அஞ்சனமிட்டால் பில்லம், அர்மம், திமிரம்,காசபிந்து, நமை, லிங்க நாசனம், வெள்ளை அண்டம் இவைகளில் உண்டாகும் ரோகங்கள்நிவர்த்தியாகும்.
நேத்திரசிராவங்களுக்கு ரோபணீ ரசகிரியைகள் :-கரும்வேலன் இலையை கியாழம் காய்ச்சி அதில் கொஞ்சம் தேன் விட்டு அரைத்துகண்களுக்கு அஞ்சனம் போட்டால் நேத்திரசிராவம், நீர் வடிதல் சந்தேகமின்றிநிவர்த்தியாகும்.
நேத்திரரோகத்திற்கு பற்றுகள் :- முருங்க இலை ரசத்தில் தேன் கலந்து கண்களுக்கு பற்று போட்டால் சகலமான கண் நோய்கள் நிவர்த்தியாகும்.
குருவிக்கல், சூரத்துக்கடுக்காய், இந்துப்பு, மரமஞ்சள் இவைகள்சுத்தஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால் நேத்திரரோகம்நிவர்த்தியாகும்.
கர்பூரசிலாசித்து, கடுக்காய், மரமஞ்சள், நாவிக்கல், இந்துப்பு, இவைகளைசமஎடையாக ஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றி பற்று போட்டால்சகலநேத்திரரோகங்களையும் நிவர்த்தியாகும்.
அதிமதூரம், நாவிக்கல், இந்துப்பு, மரமஞ்சள், கல்கபரி இவைகளை சமஎடையாகஜலத்தில் அரைத்து கண்களைச்சுற்றிலும் லேபனம் செய்தால் அபிஸ்யந்தாதிரோகங்கள் நிவர்த்தியாகும்.
ரசாஞ்சனம், சுக்கு, இலவங்கப்பத்திரி அல்லது கடுக்காய்இவைகளையாவது கற்றாழை,சித்திரமூலம்இலை இவைகளையாவது மாதுழம்பழதுளிராவது , வசம்பு, மஞ்சள்,சுக்கு, நாவிக்கல் இவைகளையாவது ஜலம் விட்டு அரைத்து கண்களுக்கு லேபனம்செய்தால் கண்ரோகங்கள் நிவர்த்தியாகும்.
இந்துப்பு, லோத்திரச்சக்கை இவைகளை வறுத்து அத்துடன்மொழுக்கையையும்நெய்யையும் கலந்து அரைத்து கண்கள் சுற்றிலும் பற்று போட்டாலும்அஞ்சனமிட்டாலும் நேத்திரரோகம் அந்த க்ஷணமே நிவர்த்தியாகும்.
இருப்பு பாத்திரத்தில் எலுமிச்சம்பழச்சாற்றை விட்டு கொஞ்சம் சுண்டுகிறவரையிலும் இரும்புப்பால் அரைத்து கண்களைச்சுற்றிலும் பற்றுப்போட்டால்நேத்திரரோகம் முழுவதும் நிவர்த்தியாகும்.
மிளகை கரிசனாங்கண்ணிசாற்றினால் அரைத்து கண்களைச்சுற்றிலும்பற்றுப்போட்டால் அதிமாமிச அர்மரோகம் முதலியநேத்திர டோகங்களுடன்சேர்ந்திருக்கும் அர்மரோகம் நிவர்த்தியாகும்.
நேத்திர பிந்து :- நந்தியாவட்டைபூவின் இதழ்கள் பலம்1சிறு களாப்பூவின் இதழ்கள் பலம்1, எள்ளை சுத்தமாககழுவி யுலர்த்தி செக்கில் ஆட்டிஎடுத்த சுத்தமான நல்லெண்ணெய் பலம் 10இவைகளை ஒரு சுத்தமான சீசாவிலிட்டு கார்கிட்டு அடைத்து அல்லது மெழுகினால்அல்லது அரக்கினால் சீல் செய்து பசுவின
தொழுவத்தின் பூமியில் குழிதோண்டி புதைத்துவைத்து 40 நாட்கள் சென்றபின்புஎடுத்து சூரியபுடமாக 21-நாள் வைத்து பின்பு சுத்தமான சீலையில் வடிகட்டிவைத்துக்கொள்க. இதில் வேளைக்கு 1-2
துளிவீதம் தினம் இருவேளையாக கண்களில் விட்டுவர கண்களில் பூ விழுதல், சதைவளர்ச்சி, பார்வைமந்தம், நீர்ப்படலம், ரத்தபடலம், சதை படலம் முதலிய பலநேத்திரபிணிகள் குணமாகும்.
சகல நேத்திரரோகங்களுக்கும் சிகிச்சை :- ஓர் கோழிமுட்டையை வேகவைத்து குறுக்கே இரண்டாக அரிந்து மஞ்சட்கருவை நீக்கிவிட்டு வெள்ளைக் கருவிலுள்ள பள்ளத்தில் சீனாக்கற்கண்டை
பொடித்து வைத்து இரண்டு துண்டுகளையும் மூடி நூலால் கட்டி ஒரு எனாமில்தட்டுஅல்லது பேசனில் வைத்து பனியில் வைத்து எடுக்க கற்கண்டானது முட்டையின்சத்துடன் ஊறிக் கரைந்து ஜெயநீர்போல் இறங்கும். இதைச் சேகரித்து சிறிதுலேசாக வெதுப்பி சுத்தமான சீலையில் வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்துக.இதில் வேளைக்கு 1-2துளிவீதம் தினம் இருவேளையாக கண்களில் விட்டுவரசகலகண்ரோகங்களும் குணமாகும்.
நேத்திரரோகங்களுக்கு பத்தியங்கள் :- நெல் அரிசி கோதுமை, பச்சைபயறு, இந்துப்பு, பசும்நெய், பசும்பால், கற்கண்டு, தேன் இவைகள் நேத்திரரோகத்தின் பத்தியங்கள்.
நேத்திரரோகங்களுக்கு அபத்தியங்கள்:-சிறுகீரை, கரிசாலை, பொன்னாங்கண்ணி, வெள்ளைச்சாரணை இவைகள் தவிர மற்றகீரைதினுசுக்கள், கள்ளு, தயிர், பெருங்காயம், உப்பு, இலுப்பைக்கட்டிபக்ஷணங்கள், நீராடுதல், திரிதல், சலபானம், தாம்பூலம், கோபம்,வெய்யிலைப்பார்க்குதல், அக்கினிசுவாலை இவைகள் அபத்தியங்கள்.

Similar topics
» சிரோ ரோக( தலை நோய்க்கான ) சிகிச்சைகள்
» குஷ்ட ரோக ( தோல் நோய்க்கான ) சிகிச்சைகள்
» பல் நோய்க்கான சித்த மருந்து
» சுர சிகிச்சைகள்
» பெண்களின் நோய்க்கான எளிய மருந்துகள் -ஸ்திரீரோகசிகிச்சைகள்
» குஷ்ட ரோக ( தோல் நோய்க்கான ) சிகிச்சைகள்
» பல் நோய்க்கான சித்த மருந்து
» சுர சிகிச்சைகள்
» பெண்களின் நோய்க்கான எளிய மருந்துகள் -ஸ்திரீரோகசிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum