என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
சுர சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
சுர சிகிச்சைகள்
சுர சிகிச்சைகள்
சுர சிகிச்சை
வாதசுர கியாழம் :- சந்தனத்தூள், சீந்தில்கொடி, கோரைக் கிழங்கு, சுக்கு, சிவதை, பூனைக்காலிவேர், இவைகள் சம எடையாக இடித்து அரையடி ஜலம் சேர்த்து அதை ஆழாக்காகச் சுண்டக்காய்ச்சி கொடுத்துவர வாதசுரம் நீங்கும்.
ஆமணக்குவேர், சிற்றாமல்லிவேர், சுக்கு, தக்கோலவேர், செருப்படைவேர், இவை சம எடையாக கியாழம்வைத்து கொடுத்தால் வாதசுரம் நீங்கும்.
சீந்தில்கொடி, மோடி, சுக்கு இவைகளை கியாழம்வைத்து வாதசுர பிரகோபத்தில் ஏழுநாள் கொடுத்தால் வாதசுரம் குணமாகும்.
சீந்தில்கொடி, நன்னாரிப்பட்டை, திரா¨க்ஷ, சதாப்பிலை,வெள்ளைசாணைவேர், இவைகளை சம எடையாக கியாழம் வைத்து அதில் வெல்லம்போட்டு கொடுத்தால் வாதசுரம் குணமாகும்.
திரா¨க்ஷ, சீந்தில்கொடி, பூசனி, கொத்துபுங்கன், செவ்வியம் இவைகளை சமனாகக் கியாழம்வைத்து கொடுக்கலாம்.
சீந்தில்கொடி, சுக்கு, கொத்தமல்லி, வில்வவேர் இவை சம எடை கியாழம்வைத்து வெல்லம் கலந்து அருந்தினால் வாதசுரம் நீங்கும்.
திப்பிலி, நன்னாரிப்பட்டை, திரா¨க்ஷ, சதாப்பிலை, மிளகு இவைகளை கியாழம்வைத்து வெல்லத்துடன் குடித்தால் வாதசுரம் நீங்கும்.
காட்டுகஞ்சா இலை, சிற்றாமுட்டி, திரா¨க்ஷ, சீந்தில்கொடி
நன்னாரிவேர்பட்டை, இவைகளை சமனாகக் கியாழம்வைத்து சாப்பிட்டால் அதிதீவிரமான வாதசுரம் போகும்.
நிலப்பனங்கிழங்கு, நன்னாரிவேர்ப்பட்டை, திராஷை, கொத்து புங்கன், சீந்தில்கொடி இவைகளை கியாழம் வைத்து வெல்லத்துடன் சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.
கண்டங்கத்திரிவேர், சிற்றாமுட்டி, சுக்கு, கடுக்காய் தோல் இவைகளை சமனெடையாகத் தூக்கி முறைப்படி கியாழம் வைத்துக் கொடுத்தால் வாதசுரம் நீங்கும்.
நிலவேம்பு, உத்தாமணிவேர், திரிபலை, விஷ்ணுகிரந்தி, சுக்கு இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து அதில் திப்பிலி சூரணம் கலந்து கொடுத்தால் வாதசுரம் நீங்கும்.
ஆலம்விழுது, குருவேர், அவுரிவேர், தக்காளிவேர், மஞ்சள், சுக்கு, தானிக்காய் இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.
பேரரத்தை, கொன்றைப்பட்டை, தேவதாறு, அதிமதூரம், திராஷை, திப்பிலி, காட்டுமிளகு, நன்னாரிவேர், வெள்ளைச்சாரணை வசம்பு, ஜடாமாஞ்சி, சதாப்பிலை, கோரைக்கிழங்கு, நிலப்பனங்கிழங்கு, கோஷ்டம், இலவம்பிசின், கொத்தமல்லி, ஆலம்விழுது, அவுரிவேர் , சுக்கு, இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வாதசுரம் நீங்கும்.
பித்தசுரகியாழம் :- நாட்டுப்பச்சைப்பயறு, கோரைக்கிழங்கு, குருவேர், சீந்தில்கொடி, சிற்றாமுட்டி, சுக்கு, போராமுட்டி, சீரகம் இவைகளை சமனெடையாக கியாழம் விட்டு சாப்பிட்டால் பித்தசுரம் போகும்.
பற்பாடகம், ஆடாதோடை, கடுகுரோகணி, சீமை நிலவேம்பு பூனைக்காஞ்சொறிவேர் இவைகளை சமனெடையாக கியாழம் வைத்த அதில் சர்க்கரை போட்டு சாப்பிட்டால் தாகம், தாபம், பித்தாந்தம் இவைகளுடன் கலந்த பித்தசுரம் நீங்கும்.
பற்பாடகம், பேய்ப்புடல், சந்தணத்தூள், வேப்பம் ஈர்க்கு குருவேர், சுக்கு, இவைகளை யாவற்றையும் கியாழம் வைத்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.
நிலவேம்பு, சீந்தில், பற்பாடகம், நெல்லிவற்றல் இவைகளை சமனெடையாக கியாழம் காய்ச்சி அத்துடன் தேனும் சர்க்கரையும்கலந்து சாப்பிட்டால் பித்தசுரம் சூரியனைக்கண்ட பனிபோல் நீங்கும்.
பேரிச்சம்பழம், சந்தணத்தூள், திராஷை, நெல்லிவற்றல் சீந்தில்கொடி, சமனெடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் தாகம்அனலுடன் கூடிய பித்தசுரம் நீங்கும்.
சீந்தில்கொடி, கியாழம்வைத்து அதில் அதிமதுரசூரணத்தை சர்க் கரை இவைகளை கலந்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.
சீந்தில்கொடி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, கோஷ்டம், சந்தனத்தூள், சுக்கு இவைகளை சம எடை கியாழம்வைத்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.
உத்தாமணி, பேராமுட்டி, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, சுக்கு, நெல்லிவற்றல், கொத்தமல்லி இவைகள் சம எடை கியாழ மிட்டு கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.
தண்ணீவிட்டான்கிழங்கு, கொத்தமல்லி, அதிமதுரம், தும்ப ராஷ்டகம், கோரைக்கிழங்கு, சதாப்புவிரை, முசுமுசுக்கை, சுக்கு, குறுவேர் இவைகளை சம எடை கியாழம்வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.
முசுமுசுக்கை, பனிப்பயறு, சீந்தில்கொடி, ஜடாமாஞ்சி, கோரைக்கிழங்கு, சுக்கு, சிற்றாமுட்டி, அதிமதுரம் இவை சம எடை கியாழம்வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.
சிறுகாஞ்சொரி, பற்பாடகம், நிலவேம்பு, ஆடாதோடை, கடுகு ரோகணி இவைகள் சம எடை கியாழம்வைத்து சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் பித்தசுரம் நீங்கும்.
கோரைக்கிழங்கு, சந்தனத்தூள், குறுவேர், சீந்தில்கொடி, நன் னாரிவேர், சுக்கு, கோஷ்டம், நிலவேம்பு, இவைகள் சம எடையாகக் கியாழம்வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.
சந்தனத்தூள், நன்னாரிவேர், வெட்டிவேர், கரும்பு, பூசனிக்கிழங்கு, பச்சைபயறு, ஏல்க்காய் இவைகள் சம எடை கியாழம் வைத்து கொடுத்தால் பித்தசுரம் நீங்கும்.
திரா¨க்ஷ, பற்பாடகம், கொன்றைப்பட்டை, கடுகுரோகிணி,கோரைக்கிழங்கு, கடுக்காய்பிஞ்சு, இவைகள் சம எடை கியாழம் வைத்து கொடுத்தால் மூர்ச்சை, சோ¨க்ஷ, சரீர அனல், தாகம் பிதற்றல், சித்தப்பிரமை முதலியது கூடிய பித்தசுரம் நீங்கும்.
காஞ்சொரிவேர், அதிவிடயம், சீமைநிலவேம்பு, கடுகுரோகணி, ஆடாதோடை, பற்பாடகம், இவைகளை சம எடையாகக் கியாழம் வைத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் ரத்தபித்தசுரம் போகும்.
சிலேத்துமசுர கியாழம் :- ஆடாதோடை ஈர்க்கு, வசம்பு, பிரண்டை, கண்டகத்திரிவேர், சுக்கு, கடுகுரோகிணி, இவைகள் சம எடையாகக் கியாழம்வைத்து திப்பிலிசூரணம் போட்டு தேன்கலந்து சாப்பிட்டால் கோழையுடன்கூடிய கபசுரம் போம்.
கண்டங்கத்திரிவேர், ஆடாதோடை ஈர்க்கு, வெற்றிலைவேர் பஞ்சகோலங்கள் இவைகளை கியாழம் வைத்து தேன் கலந்து கொடுத்தால் சூலையுடன் கூடிய சிலேஷ்மசுரம் நீங்கும்.
கண்டங்கத்திரிவேர், சீந்தில்கொடி, சுக்கு இவைகளை கியாழம் வைத்து திப்பிலிசூரணம் போட்டு சாப்பிட்டால் ரஜீணசுரம், அருசி காசம், சூலை, சுவாசம், அக்கினிமாந்தம், பீனசம் இவைகளப் போக்கும்.
கோஷ்டம், பெருங்குறும்பு, வெட்பாலை, பேய்ப்புடல், இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து மிளகு சூரணம் கலந்து சாப்பிட்டால் சிலேஷ்மசுரம் நீங்கும்.
நெல்லிவற்றல், சீந்தில்கொடி, கொன்றைவேர்ப்பட்டை, வேப்பன் ஈர்க்கு, பேய்ப்புடல், பெருங்குறும்பை, கடுகுரோகணி, கடுக்காய், கண்டங்கத்திரிவேர், மரமஞ்சள், மஞ்சள், இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து திப்பிலிசூரணம் தேன் கலந்து சாப்பிட்டால் காசசுவாச சிலேஷ்மசுரம் நீங்கும்.
கண்டங்கத்திரி, கரசனாங்கன்னி, வெள்ளுள்ளி, பூசனி, வசம்பு சுக்கு, ஒமம் இவை சமனெடையாக கியாழம் போட்டு கொடுத்தால் சிலேஷ்மசுரம் நீங்கும்.
சீமைநிலவேம்பு, வேப்பம்பட்டை, திப்பிலி, கிச்சிலிகிழங்கு, சுக்கு, தண்ணீர்விட்டான் கிழங்கு, சீந்தில்கொடி, சீறியகண்டங்கத்திரி, இவைகளை கியாழம் வைத்து கொடுத்தால் சிலேஷ்மசுரம் நீங்கும்.
கொடிமாதுளைவேர், கடிக்காய்பிஞ்சு, சுக்கு, மோடி, இவைக கள் சமனெடையாக கியாழம் வைத்து அதில் யவாஷாரம் கலந்து சுரம்கண்ட ப்ன்னிரண்டு நாட்களுக்கு கொடுத்தால் சிலேஷ்மசுரம் நீங்கும்.
பேய்ப்புடல், கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், கடுகு ரோகணி, கிச்சிலிக்கிழங்கு, ஆடாதோடை, சீந்தில்கொடி இவைகளை கியாழம் வைத்து அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சிலேத்துமசுரம் நீங்கும்.
கண்டங்கத்திரிவேர், கொள்ளுக்காய்வேளைவேர், ஆடாதோடை ஈர்க்கு, விஷ்ணுகிரந்தி, சுக்கு, இவைகளை சமனெடையாக கியாழம் வைத்து திப்பிலிசூரணம் கலந்து கொடுத்தால் சிலேத்துமசுரம் நீங்கும்.
வாதபித்தசுரகியாழம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், இலவம்பிசின், வெற்றிலைவேர், கொன்னம்பட்டை, ஆடா தோடை, இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் வாதபித்த
சுரம் நீங்கும்.
அதிவிடயம், கடுக்காய்பிஞ்சு, சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு, நிலவேம்பு, இவைகளை சம எடை கியாழம்வைத்து உட்கொண்டால் வாதபித்தசுரம் நீங்கும்.
பற்பாடகம், சீந்தில்கொடி, கோரைக்கிழங்கு, அதிவிடயம், நிலவேம்பு, இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் வாதபித்த சுரம் நீங்கும். இதற்கு பஞ்சபத்திர கியாழமென்றும் பெயர்.
வாதசிலேத்தும சுரகியாழம் :- கொன்றைமரப்பட்டை, மோடி,கோரைக்கிழங்கு, கடுகுரோகணி, கடுக்காய்பிஞ்சு, இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் வாதசிலேத்துமசுரம் நீங்கும். இதுஆமசூலையைபோக்கி பேதி, தீபனம், ஜீரணம் இவைகளை யுண்டுபண்ணும்.
சிற்றாமுட்டிவேர், குரட்டைவேர், சிறிய கண்டகத்திரிவேர்,பெரிய முள்ளங்கத்திரிவேர், நெருஞ்சிவேர், வில்வவேர், முன்னை வேர், பெருவாகைவேர், நிலபனங்கிழங்குவேர், பாதரிவேர, இவைகள் சமஎடை கியாழம்வைத்து திப்பிலிசூரணம் கலந்து சாப்பிட்டால் வாதசிலேத்துமசுரம் நீங்கும்.
பித்தசிலேத்தும சுரகியாழம் :- வெட்டிவேர், கொத்தமல்லி, நெல்லிப்பட்டை, நிலவிளா, ஈசுரமூலி, கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சுக்கு இவைகள் சமஎடை கியாழம் சாப்பிட்டால் பித்தசிலேத்துமசுரம் நீங்கும்.
சிகப்பு சந்தனம், தாமரைத்தண்டு, கொத்தமல்லி, சீந்தில்கொடி, வேப்பன் ஈர்க்கு, இவைகளை கியாழம்செய்து உண்டால் பித்த சிலேத்தும சுரம், அனல், தாகம், வாந்தி இவைகளைப் போக்குவ துடன் பசியையும் உண்டாக்கும்.
பேய்புடல் சிகப்பு சந்தனம், பெருங்குரும்பை, கடுகுரோகணி, சீந்தில்கொடி, இவைகள் சமஎடை கியாழம்வைத்து
சாப்பிட்டால் பித்தசிலேத்துமசுரம் நீங்கும்.
தொந்தசுர கியாழம் :- சீந்தில்கொடி, சுக்கு, கோரைக்கிழங்கு,நிலவேம்பு, பேராமுட்டி, சிற்றாமல்லி, அதிமதுரம், கடுக்காய், தானிக்காய், இவைகளை கியாழம்வைத்து கொடுத்தால் தொந்த சுரம் நீங்கும்.
அஜீரணசுர கியாழம் :- கடுக்காய், தானிக்காய், நெல்லிவற்றல், சுக்கு, திப்பிலி, மிளகு, மோசடி, ஓமம், வசம்பு, சித்திரமூலம் இவைகளை சமஎடையாக கியாழமிட்டு சாப்பிட்டால் அசீரண சுரம் நீங்கும்.
முறைக்காய்ச்சல் கியாழம் :- போராமுட்டி, நிலவேம்பு, கடுக் காய், தானிக்காய், நெல்லிவற்றல், இரு விதபாலைவேர், சுக்கு சமஎடை கியாழம் வைத்திருக்க முறைசுரம் போம்.
துவாஹிகசுரகியாழம் :- பேய்ப்புடல், கோரைக்கிழங்கு,சுக்கு, தும்மட்டி, சீந்தில்கொடி, பற்பாடகம் இவைகளை சமஎடை கியாழம் போட்டு அதில் திப்பிலிசூரணம் கூட்டி சாப்பிட்டால் இரண்டு நாளுக்கு ஒருதரம் வரும் சுரம் நீங்கும்.
திரியாகிதசுரக்கியாழம் :- காட்டுத்துளசி, திராஷை, சுக்கு,கண்டுபாரங்கி, தும்மட்டிவேர், நெய்ச்சட்டி, சிற்றாமுட்டி, இவைகளை சமஎடை கியாழம் போட்டு சாப்பிட போம்.
சாதர்த்திகசுரக்கியாழம் :- பேய்ப்புடல், செவ்வியம், சுக்கு, துளசி, போரமுட்டி, விஷ்ணுகிரந்தி, வெட்பாலை இவை சமஎடை கியாழம் போட்டு சாப்பிட போம்.
பஞ்சாகிகசுரக்கியாழம் :- போராமுட்டி, சிற்றாமுட்டி, நாக முட்டி, நிலப்பனங்கிழங்கு, பாலை, சீந்தில்கொடி, கடுகுரோகணி மரமஞ்சள், மஞ்சள், இவை சமஎடை கியாழம் போட்டு சாப்பிட போம்.
சகலமுறைசுரங்கட்கும் கியாழம் :- போராமுட்டி, சிற்றாமுட்டி, சீந்தில், நிலவேப்பு, வேப்பன் ஈர்க்கு, சித்திரமூலம், நிலப்பனங்கிழங்கு, சுக்கு, இவைககளை சமனெடையாக கியாழம் வைத்து சாப்பிட்டால் சகல முறைக்காய்ச்சலும் நீங்கும்.
பேய்ப்புடல், வெட்பாலைப்பட்டை, தேவதாரு, திரிபலை,கோரைக்கிழங்கு, திராஷை, அதிமதூரம், ஆடாதோடை
இவைககளை சமனெடையாக கியாழம் வைத்து தேன் கலந்து சாப்பிட்டால் ஒரு நாள் விட்டுவருதல், நான்கு நாள் விட்டு வருதல், முதலிய விட்டு விட்டு வருகின்ற காய்ச்சல்கள் முதலியன யாவுந் தீரும்.
அந்தர்க்கதசுரக்கியாழம் :- பேய்ப்புடல், கடுகுரோகணிநிலவேப்பு, கோரைக்கிழங்கு, தும்மட்டிவேர், பற்பாடகம்
இவை கியாழம் வைத்து கொடுத்தால் அந்தர்க்கசுரம் நீங்கும்.
புராணசுரக்கியாழம் :- திராஷை, சீந்தில்கொடி, நிலவேப்பு நெய்ச்சட்டி, போராமுட்டி, திப்பிலி இவை கியாழம் வைத்து உட்கொண்டால் புராணசுரமென்ற நாட்பட்ட பழைய சுரம் நீங்கும்.
வெலுமசந்தி, சிற்றாமுட்டி, கண்டங்கத்திரிசமூலம், வசம்பு சுக்கு, மரமஞ்சள், மஞ்சள், இவை கியாழம் வைத்து கொடுத்தால் புராணசுரம் நீங்கும்.
ரக்த கதசுர கியாழம் :- தாமரை, நிலநீர்முள்ளி, அமுக்கிறா கிழங்கு, சித்திரமூலம், பேராமுட்டி, சுக்கு, வசம்பு இவை சமஎடை கியாழம்வைத்து உட்கொண்டால் ரக்த கதசுரம் நீங்கும்.
விஷமசுர கியாழம் :- கோரைக்கிழங்கு, சிறிய கண்டங்கத்திரிவேர், சீந்தில்கொடி, சுக்கு, நெல்லிக்காய்த்தோல் இவைகளை கியாழம் வைத்து திப்பிலிச் சூரணம் கலந்துட்கொண்டால் விஷம சுரம் நீங்கும்.
சித்திரமூலம், வெள்ளைப்பூண்டு, வட்டத்திருப்பி, பேய்ப்புடல், வேப்பன் ஈர்க்கு, பற்பாடகம், செவ்வியம், சுக்கு இவைகளை சம எடையாக கியாழம் வைத்து சாப்பிட விஷமசுரம் தீரும்.
நிலவேம்பு, சந்தனத்தூள், சுக்கு, அதிமதுரம், இவை சமஎடை கியாழம் வைத்து சாப்பிட விஷமசுரம் தீரும்.
அறுக்கன்வேர், சித்திரமூல வேர்ப்பட்டை, ஆடாதோடை ஈர்க்கு, நொச்சிவேர், கண்டகத்திரிவேர், சிறுகாஞ்சொறிவேர், சுக்கு, செவ்வியம் இவைகளை சமஎடையாக கியாழமிட்டருந்த விஷமசுரம் தீரும்.
சீதசுர கியாழம் :- அரசன்பட்டை, சுக்கு, வசம்பு, வேப்பன் ஈர்க்கு, பேராமுட்டி இவை சமஎடை கியாழமிட்டருந்த சீதசுரம் போம்.
விஷ்ணுகிரந்தி, சகதேவி, சுக்கு, நிலவேம்பு, பாலைபட்டை இவைகளை கியாழம்வைத்து தேன் திப்பிலிசூரணம் கலந்து சாப்பிட்டால் சீதசுரம் நீங்கும்.
இலந்தை இலை, பேராமுட்டி, சிற்றாமுட்டி, நாகமுட்டி, சுக்கு, பாலைபட்டை, கோரைகிழங்கு, பற்பாடகம் சகதேவி இவைகள் சமஎடை கியாழமிட்டருந்த சீதசுரம் நீங்கும்.
காட்டுத்துளசி, சுக்கு, விஷ்ணுகிராந்தி, தாமரைத்தண்டு, பேராமுட்டி இவைகளை சமஎடையாக கியாழம் வைத்து திப்பி லிச் சூரணம் கலந்து சாப்பிட்டால் சீதசுரம் நீங்கும்.
தோஷஹேது சுர கியாழம் :- சித்திரமூலம், வில்வவேர், வெள்ளை உப்பிலாங் கொடிவேர், நொச்சி இலை, சிற்றாமல்லி, நில மல்லி, சுக்கு இவை சமஎடை கியாழமிட்டருந்த தோஷசுரம் போம்.
அந்தர்தாஹ சுர கியாழம் :- அதிமதுரம், சீரகம், குறுவேர் வெட்டிவேர், கோஷ்டம், கொத்தமல்லி, சதாப்பிலை, சுக்கு இவை சமஎடை கியாழம்.
பாதிரிப்பூ, அதிமதுரம், தாமரைத்தண்டு, வெட்டிவேர், சந்தனத்தூள், நெல்லிப்பருப்பு, கோஷ்டம் இவை சமஎடை கியாழம்.
மா,அரசு, ஆல், இரளி, காவல், இவைகளின் பட்டை கொழுந்து, முதலியவைகளுடன் அதிமதூரம், சீரகம், இவை
சமஎடை கியாழம் .
விஷமசீதசுரகியாழம் :- சித்திரமூலம், போராமுட்டி, சிற்றாமுட்டி, வட்டத்திருப்பி, ஈசுரமூலி, சுக்கு, பாலைவேர், துளசி வேர்இவை சமஎடை கியாழம் .
தும்பராஷ்டம், அவுரிவேர், நொச்சியிலை, சிற்றாமுட்டி, நிலமல்லி, வசம்பு, சுக்கு இவை சமஎடை கியாழம் .
தோஷசுரக்கியாழம் :- திப்பிலி, மோடி, செவ்வியம், சித்திரமூலம், சுக்கு, இவைகளை சமஎடை கியாழம் விட்டு கொடுக்க தோஷ சுரம் தீரும். இதுதான் பஞ்சலோகக்கியாழம்.
மூன்றுவிதமுட்டிகள், நிலமல்லி, வில்வம், பெரியகண்டங்கத்திரிவேர், சிறிய கிகண்டங்கத்திரிவேர், சுக்கு இவை
சமஎடை கியாழம் .இதுதான் அஷ்டமூலக்கியாழம்.
அஷ்டாதசமூலகியாழம் :- சிறிய கண்டங்கத்திரி, பெரியகண்டங்கத்திரி, முன்னை, சிற்றாமுட்டி, வில்வம், பாதிரி, பெரியபூசினி, சிற்றாமல்லி, நிலமல்லி, சித்திரமூலம், பாலை, அருக்கண் நொச்சி, முருங்கன், கருப்பு, உப்பிலாங்கொடி, வெள்ளை உப்பி லாங்கொடி, இந்த மூலிகைகளை சமஎடை சேர்த்து கியாழம் வைத்து சாப்பிட்டால் தோஷசுரம் நீங்கும்.
சகலசுரக்கியாழம் :- நிலவேம்பு, பற்பாடகம், செவ்வியம்,பிரியங்கணப்பூ, சித்திரமூலம், கடுக்காய்ப்பிஞ்சு, முன்னைவேர், இஞ்சி, சுக்கு இவைகளை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.
பேய்ப்புடல், வெள்ளை உப்பிலாங்கொடி, கண்டங்கத்திரிபூசினி, செருப்படை, அருக்கன்வேர், பாலைவேர், சுக்கு இவை களை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.
கோரைக்கிழங்கு, பற்பாடகம், ஆமணக்குவேர், பிரியங்கணப்பூ, சிறுகீறை, வசம்பு, சித்திரமூலம், சுக்கு இவை
களை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.
கொன்றைப்பழம், சுக்கு, போயாவரைவேர், ஆடாதோடைஈர்க்கு, பேய்ப்புடல், கொத்தமல்லி, பேய்ப்புடல், கோரைக்கிழங்கு இவைகளை சமஎடை கியாழமிட்டருந்த சகல சுரமும் போம்.
நிலவேம்பு, சித்திரமூலம், செவ்வியம், முள்வேலன், சீந்தில்கொடி, விஷ்ணுகிராந்தி, சுக்கு, இவைகளை சமஎடை கியாழமிட் டருந்த சகல சுரமும் போம்.
சந்நியாசசுர கியாழம் :- நிலவேம்பு, திப்பிலி, கடுகுரோகணி, கண்டங்கத்திரிவேர், நெல்லிப்பருப்பு, பேய்ப்புடல், தும்மட்டிவேர்,ுக்கு சமனெடை கியாழமிட்டருந்தவும்.
இராத்திரிசுர கியாழம் :- விஷ்ணுகிராந்தி, பாலைவேர், சுக்கு, பேராமுட்டி, சிற்றாமுட்டி, நாகமுட்டி, கடுகுரோகணி, இவை சமனெடை கியாழமிட்டருந்தவும்.
தும்மட்டிவேர், நிலபாலைவேர், சுக்கு, சகதேவிவேர், பாலைவேர், பேராமுட்டி, மிளகு சமனெடை கியாழமிட்டருந்தவும்.
சரபேசுர ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, நாபி, லிங்கம்,வெண்காரம் இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் அரைத்து வஜ்ரமூசையில் வைத்து வாலூகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறியப்பின் சூரணித்து குன்றிஎடை பிரமாணம் திரிகடுகுச் சூரணத்தில் கொடுக்க வாத பித்த கப சந்நிபாத சுரங்கள் குணமாகும்.
நரசிம்ம ரசம் :- சுத்திசெய்த பாதரசம், நாபி, கெந்தி, நேர்
வாளம் இவைகள் சமஎடையாக கல்வத்திலிட்டு அருக்கன்வேர் கியாழத்தால் மூன்று ஜாமங்கள் அரைத்து டோலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறியப்பின் எடுத்து மறுபடியும் சூரணத்து குன்றி எடை அனுபானத்துடன் கொடுத்தால் சகல சுரங்களும் நிவர்த்தியாகும்.
கருட துவஜ ரசம் :- சுத்திசெய்த நாபி, சுத்திசெய்த ரசம்,சுத்திசெய்த அப்பிரகம், சுத்திசெய்த கெந்தி, சுக்கு, மிளகு, திப்பிலி, லிங்கம், சைந்தலவணம், இலவங்கம், திப்பிலிமூலம் இவைசமஎடை கல்வத்திலிட்டு செருப்பட்டை இலை சாற்றினால் ஒருநாள் முழுதும்அரைத்து அகலிடக்கி சீலைமண்செய்து குக்குடபுடமிட்டு சாங்க சீதளத்தில் எடுத்து பொடித்து இரண்டு குன்றி எடை அனுபானயுக்தமாக கொடுத்தால் சுரம் நிவர்த்தியாகும்.
நாராயண ரசம் :- சுத்திசெய்த இரசம், கெந்தி, சுக்கு, திப்பிலி, மிளகு, சுத்திசெய்த அப்பிரகம், கடுகுரோகணி, சுத்திசெய்த தாளகம் சமஎடையாக கல்வத்திலிட்டு பஞ்சகோல கியாழத்தில் இரண்டு நாள் அரைத்து காசிகுப்பியில் வைத்து சீலைசெய்து பூ புடமிட்டு சாங்க சீதளத்தில் எடுத்து மறுபடியும் நரி, மீன் இவைகள்
பித்தத்தால் இரண்டு நாள் அரைத்து குன்றி எடை பிரமாணம் வெற்றிலை சாற்றில் கொடுத்தால் சகல சுரங்கள், சந்நிபாத சுரங்கள், தோஷங்கள் இவைகள் எல்லாம் நிவர்த்தியாகும்.
வைஷ்ணவீ ரசம் :- சுத்திசெய்த லிங்கம், நாபி, கடுகுரோகணி, சுக்கு, திப்பிலி, மிளகு, இவைசமஎடை கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் ஒரு ஜாமம் அரைத்து பிறகு அந்த கியாழத்தில் துலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரிந்து சாங்கசீதளத்தில் இறங்கி இரண்டுகுன்றி பிரமாணம் இஞ்சிரசத்தில் கொடுத்தால் தொந்தசுரங்கள் சந்நிபாதங்கள், புராணசுரங்கள், விஷசுரங்கள், இவைகளெல்லாம் நிவர்த்தியாகும்.
சகலசுரங்களுக்கும்லக்ஷ்மிநாராயணரசம் :- கெந்தி, மயில் துத்தம், வெண்காரம், தாளகம், இவைகள் சுத்தி செய்து சமஎடை யாக எடுத்துக்கொண்டு கல்வத்திலிட்டு வெள்ளைச்சாரணை ரசத்தி னால் மூன்று ஜமங்கள் அரைத்து இந்த ரசத்திலேயே தோலா யந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து இரண்டு
அரிசி எடை அனுபானத்துடன் அருந்த சகல சுரங்கள் தோஷ சுரங்கள் இவை நிவர்த்தியாகும்.
சகலசுரங்களுக்கும் பூதேசுரரசம் :- சுத்தி செய்த ரசம்,
சுத்தி செய்த நாபி, சுத்தி செய்த கிரந்தி, சுத்தி செய்த நேர்வாளம் சுத்தி செய்த இலிங்கம் இவைகளை சமஎடையாக எடுத்துக்கொண்டு கல்வத்திலிட்டு சித்திரமூல கியாழத்தால் அரைத்து பிறகு மீன் பீய்ச்சு நீரினால் ஒர்முறை அரைத்து பிறகு சதுரங்கள்ளிபாலால் ஒருமுறை அரைத்து அரை முதல் ஒரு குன்றி எடை இஞ்சி ரசத்தில் கொடுத்தால் சகல சுரங்களும் அருக்கன் வேர்கியாழத்தால் கொடுத்தால் சகல சந்நிபாதமும் நீக்கிவிடும். பத்தியம் தயிர்சாதம் தாகத்திற்கு மோர் கொடுக்கவேண்டியது.
சகலசுரங்களுக்கும் திருபுராந்தகசுரம் :- சுத்தி செய்த ரசம், சுத்தி செய்த கிரந்தி, சுத்தி செய்த அப்பிரகம், இம்முறையும் சமஎடையாக கல்வத்திலிட்டு கரிசலாங்கண்ணி சாற்றினால் ஒரு நாள்
முழுவதும் அரைத்து மாத்திரை செய்து ஆறவைத்து காசிகுப்பியில் வைத்து குக்குடபுடமிட ஆறிய பிறகு எடுத்து மீன் ஆடு, காட்டுப்பன்றி, இவைகளின் பித்தங்களினால், மூன்று ஜாமங்கள் அரைத்து குன்றி எடை இஞ்சி ரசத்தில் கொடுத்தால் வாத, பித்த சுரங்கள் நீங்கும். மேலும் திரிதோஷசுரம், தொந்தசுரம், இவைகளும் அனுபானபேதங்களில் நீங்கும். பத்தியம் தயிர்சாதம் தாகத்திற்கு பானகம் கொடுக்கவேண்டியது.
காலகண்டரசம் :- சுத்தி செய்த நாபி, சுத்தி செய்த மனோசிலை சுத்தி செய்த ரசம், சுத்தி செய்த கிரந்தி, சுத்தி செய்த வெண்காரம் திப்பிலி, ஊமத்தன்விரை, இவைகளை சமஎடையாக கல்வத்திலிட்டு செருப்படை ரசத்தால் அரைத்து பில்லைத்தட்டி அகலிலடக்கி சதுரங்கள்ளிபாலினால் ஒரு ஜாமம் அரைத்து பிறகு மீன் பித்தத்தினால் அரைத்துலர்த்தி குன்றி எடை அனுபானபேதங்களினால் கொடுத்தால் சகலசுரங்களும் நீங்கும். கரும்பு சாறு கொடுக்கவேண்டியது.
சாம்பவீ ரசம் :- சுத்திசெய்த ரசம், கெந்தி, வெங்காரம், சுக்கு கடுக்காய், ஆமணக்கு விரை, நேர்வாளம், கௌரிபாஷாணம், இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு எலுபிச்சபழச் சாற்றினால் மூன்று நாள் அரைத்து பில்லைதட்டி அகலிலி வைத்து மேலகல்மூடி சீலைமண் செய்து குக்கிடபுடமிட்டு, ஆறிய பிறகு எடுத்து ஆமணக்கெண்ணை யால் அரைத்து மருந்துக்கு பத்தாவது பாகம் மிளகு அதில் பாதிபாகம் நாபியை சேர்த்து மறுபடியும் அரைத்து குன்றி எடை அனிபானங்களுடன் கொடுத்தால் சகல சுரங்கள் நிவர்த்தியாகும்.
தயிர்சாதம் பத்தியம், இளநீர் தாகத்திற்கு கொடுக்கவேண்டியது.
சுரங்களுக்கு பத்திரகாளி ரசம் :- ரசம், நாபி, அப்பிரகம்,சுக்கு, திப்பிலி,மிளகு, கெந்தி, வெண்காரம், கருவூமத்தை விதை, சைந்தலவணம், இவைகள் சமஎடை எடுத்து, சூரணித்து வஜ்ர முசையில் வைத்து வாலூகாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து மீன்பித்தத்தில் அரைத்து குன்றி எடை அனு பானங்களுடன் கொடுத்தால் தோஷசுரம் சகல சுரங்கள் நீங்கும்.
புவனேசுவர ரசம் :- கௌரிபாஷாணம், அப்பிரகம், வசநாபி, மனோசிலை, பாதரசம், கெந்தி, நேர்வாளம், இவைகள் சுத்தி செய்தது சமஎடையாக கல்வத்திலிட்டு பாகலிலை சாற்றினால் மூன்று நாள் அரைத்து பில்லைசெய்து அகலில் வைத்து மேலகல்மூடி சிலை மண் செய்து குக்கிடபுடமிட்டு ஆறிய பிறகு எடுத்து மறுபடியும்கல்வத்திலிட்டு இரண்டு ஜாமங்கள் அரைத்து குன்றி எடை இஞ்சி ரசத்திலாவது அல்லது திரிகடுகு கியாழத்திலாவது கொடுத்தால் சகல சுரங்கள் நீங்கும்.
உமாமஹேசுர ரசம் :-பாதரசம், அப்பிரகம், சுத்துசெய்து சமஎடை கல்வத்திலிட்டு ஒருநாள் வெலுமசந்தி கியாழத்தில் அரைத்து தோலாயந்திரத்தில் இரண்டு ஜாமங்கள் காடாக்கினியாய் எரித்து ஆறிய பிறகு எடுத்து மயில், கோழி இவைகளின் பித்தத்தினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து ஒரு குன்றி எடை இஞ்சிரசத்
தில் கொடுத்தால் சகல சுரங்கள் நீங்கும். பத்தியம் கத்திரிக்காய் தயிர்சாத மிடவும்.
உக்கிரசுரங்களுக்கு பிதாமஹாரசம் :- பாதரசம், நாபி, லிங்கம் இவைகள் சுத்தி செய்தது, கடுகுரோகணி, லோகபஸ்பம், தாம் பிரபஸ்பம், எழுகு பஸ்பம், தாளகம் இவைகள் சமஎடை கல்வத்திலிட்டு அறுக்கன் வேர் கியாழத்தில் மிருதுவாகும்படி அரைத்து குளிகைகள் செய்து காசிகுப்பியில் வைத்து சீலைசெய்து வாலுகாயந்
திரத்தில் மிருதுவாக்கினியால் மூன்று ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்து குன்றி எடை அனுபான விசேஷமாய் கொடுத்தால் சகல சுரங்கள் நீங்கும்.
சகலசுரங்களுக்கும் பாரதி ரசம் :- வசம்பு, பாதரசம், சந்தணம், அப்பிரகம், நாபி இவை சமஎடை கல்வத்திலிட்டு சிவகரத்தை இலை ரசத்தில் ஒரு நாள் அரைத்து வஜ்ர மூசையில் வைத்து பூப்புட மிட்டு ஊர்குருவி பித்தத்தில் இரண்டு நாள் அரைத்து குன்றி எடை அனுபானத்துடன் கொடுத்தால் சகல சுரங்களும் நீங்கும்.
கல்யாண ரஸம் :- தாளகம், கெந்தி, சங்குசுன்னம் இவை சமஎடை கல்வத்திலிட்டு எலுமிச்சம்பழச்சாற்றினால் அரைத்து தோலா யந்திரத்தில் எரித்து ஆறிய பிறகு எடுத்து சூரணித்து ஒரு குன்றி எடை அனுபானங்களுடன் கொடுத்தால் சகல சுரங்களும் நீங்கும்.
விஷமசுரங்களுக்கு பார்கவீரசம் :- சுத்தி செய்த பாதரசம் கெந்தி, இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு அரசம்பட்டை கியாழத்தால் அரைத்து அந்த கியாழத்தில் துலாயந்திரமாக ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து ஒரு குன்றி எடை மாத்திரைகள் செய்து சர்க்கரை, திப்பிலி, சூரணம் முதலிய அனுபானங்களுடன்
கொடுத்தால் விஷமசுரங்கள், சகல சுரங்களும் நீங்கும்.
தோஷ சுரங்களுக்கு ரசேந்திரரசம் :- பாதரசம், அப்பிரகம், தாம்பிரபஸ்பம், வசநாபி, கெந்தி இவைகள் சுத்தி செய்தது சமஎடை எருக்கன் வேர் கியாழத்தில் அரைத்து மூசையில் வைத்து வாலுகா யந்திரதில் ஒரு நாள் மந்தாக்னியில் எரித்து ஆறிய பிறகு மிருதுவாக சூரணித்து ஒரு குன்றி எடை அனுபான பேதங்களுடன் கொடுத்தால் தோஷசுரங்கள், சந்நிபாத சுரங்கள், நீங்கும்.
தோஷ சுரங்களுக்கு விஸ்வம்பரரசம் :- சுத்தி செய்த ரசம், அப்பிரகம், விஸ்வம், தாளகம், லிங்கம், நாபி இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு செருப்படை கியாழத்தால் இரண்டு நாள் அரைத்து குக்குட புடமிட்டு ஆறிய பிறகு எடுத்து ஆமை, பன்றி, மீன் இவைகள் பித்தத்தினால் மூன்று நாள் அரைத்து குன்றி எடை அனுபானங்களுடன் கொடுத்தால் தோஷசுரங்கள், சந்நிபாத சுரங்கள், தீவிர சுரங்கள், நிவர்த்தியாகும். பத்தியம் இச்சாபத்தியம்.
அர்த்தநாரீசுர ரசம் :- சுத்தி செய்த ரசம், நாபி, வங்கபஸ்பம் இவை சமஎடைகல்வத்திலிட்டு வெள்ளை அருக்கன்வேர் கியாழத்தால் மூன்று நாள் அரைத்து அந்த கியாழத்திலேயே ஒரு நாள் எரித்து தோலாயந்திரத்தில் மீந்தசாற்றினால் மேற்படி மருந்தை யரைத்துஒரு துளி காதில் விட பாரிச சுரம் நீங்கும்.
அஜீரணசுரங்களுக்கு ஹீதர்சனரசம் :- சுத்தி செய்த கோஷ்டம் கெந்தி, நாபி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், தானிக்காய், நெல்லி வற்றல், இவைகளை சமஎடை கல்வத்திலிட்டு கரிசரலை சாற்றினால் அரைத்து உளுந்து அளவு மாத்திரை செய்து கொடுத்தால் அசீரண சுரம், சுவாசகாசம் முதலியன குணமாகும். அக்கினிதீபனம் ருசி
இவைகளை யுண்டுபண்ணும்.
சீதசுரத்திற்கு ராமபாணசுரம் :- சுத்திசெய்த லிங்கம், ரசம்,துத்தம் இவை சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தை இலை சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து உளுந்தளவு மாத்திரைசெய்து பசும் பாலில் மூன்று நாள் சாப்பிட்டால் சீதசுரம் நிவர்த்தியாகும்.
திரிமூர்த்தி ரசம் :- சுத்திசெய்த துரிசு, பால்துத்தம், எலிபாஷாணம் இவைகள் சமஎடை தேனில் 1 ஜாமம் சுருக்கு கொடுத்து மறுபடியும் பாவக்காயிலைச்சாற்றினா லரைத்து தோலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறியபிறகு எடுத்து ஊமத்தன் இலை சாற்றில் அரைத்து 1-2 அரிசி எடை பசும்பாலில் கொடுத்தால் சீதசுரம் நீங்கும்.
சீதசுரங்களுக்கு சண்டபானு ரசம் :- சுத்திசெய்த பால்துத்தம் 1-பாகம், சுத்திசெய்த தாளகம் 2-பாகம், சிலாக்ஷ¡ரம் 4-பா கம் இவைகளை கல்வத்திலிட்டு காற்றாழைச் சாற்றினால் அரைத்து வஜ்ர மூசையில் வைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து வைத்துக்கொண்டு குன்றி எடை சீரகம் அனுபானத்தில் கலந்து
கொடுக்க சீதசுரம் நீங்கும். பத்தியம் பச்சைபயறு கஞ்சிகொடுக்க வேண்டியது.
சூரியபாவக ரசம் :- சுத்திசெய்த எலிபாஷாணம், கௌரிபாஷாணம், தொட்டிபாஷாணம், துருசு, பால்துத்தம், நேர்வாளம் தாளகம் இவை சமஎடை கல்வத்திலிட்டு ஊமத்தன் இலை சாற்றினால் அரைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து காட்டுபன்றி பித்தத்தினால் அரைத்து ஒரு குன்றி எடை அனுபானத்துடன் கொடுக்க சீதசுரம் நீங்கும்.
சீத கஜாங்குஷம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்தநாபி 2-பாகம், சுத்திசெய்த துரிசு 3-பாகம், பலகறை 4 பாகம்இவைகளை கல்வத்திலிட்டு ஊமத்தன் இலை சாற்றில்அரைத்து தோலாயந்திரத்தில் எரித்து ஆறியபிறகு எடுத்து சூரணித்து குன்றிஎடை அனுபானத்துடன் கொடுக்க சீதசுரம் நீங்கும்.
சீதப்பஞ்சன இரசம் :- சுத்திசெய்த துரிசு, பால்துத்தம்,மிளகு, பாதரசம், எலிபாஷாணம், சுக்கு இவைகள் சமஎடை கல் வத்திலிட்டு பாகலிலைச் சாற்றினா லரைத்து குக்குடபுடமிட்டு ஆறியபிறகு எடுத்து மறுபடியும் மீன்பிச்சியினா லரைத்து குன்றி எடை சர்க்கரை அனுபானத்தில் கொடுத்தால் சீதசுரம் நிவர்த்தியாகும்.
ஆஹிக அஸ்திகத சீதசுரங்களுக்கு பஞ்சமூர்த்திரசம் :-
சுத்தி செய்த நேர்வாளம், எலிபாஷாணம், துருசு, பால் துத்து, தாளகம் இவை சமஎடைகல்வத்திலிட்டு கற்றாழை சாற்றினால் இரண்டு ஜாமங்கள் அரைத்து தோலாயந்திரத்தில் ஒரு ஜாமம் எரித்து ஆறிய பிறகு எடுத்து மீன் பிச்சியால் அரைத்து குன்றியளவு பசும்பாலில் கொடுத்தால் மேற்கூறிய சுரங்கள் நீங்கும்.
முறைக்காய்ச்சல்களுக்கு மஹாசுராங்குச ரசம் :- பாதரசம் 1-பாகம், நீர்விஷம் 1-பாகம், கெந்தி 1-பாகம், ஊமத்தன் விரை 3- பாகம், சுக்கு, திப்பிலி, மிளகு இவைகள் மூன்றும் 12- பாகம் இவை களை சுத்தி செய்து கல்வத்திலிட்டுஎலுமிச்சம்பழச்சாற்றிலும், இஞ்சி ரசத்தாலும் அரைத்து ஒன்றிரண்டு குன்றி எடை உட்
கொண்டால் சகலமுறைக்காய்ச்சல்கள், விஷமசுரங்கள், திரிதோஷ சுரங்கள் நீங்கும்.
ஆஹிக அஸ்திகத சுரங்களுக்கு நவநாதரசம் :- சுத்திசெய்த நாபி, எலிபாஷாணம், மயில்சத்து, பால்துத்தம், ரசம், தொட்டி பாஷணம், வசம்பு, தாளகம், கெந்தி இவைகள் சுத்திசெய்தது சம எடை எடுத்து வெள்ளைப்பூண்டுரசத்தாலரைத்து தோலாயந்திரத்தில்ஒரு நாள் எரித்து ஆறிய பிறகு எடுத்து நரி பிச்சியால் அரைத்து ஒரு குன்றி எடை ஆட்டுப்பாலில் கொடுத்தால் மேற்கூறிய சுரங்கள் நீங்கும். பத்தியம் சர்க்கரைப்பால் நெய் கலந்த அன்னபானத்தை சாப்பிடவேண்டியது. தாக

Similar topics
» தாஹ ரோக சிகிச்சைகள்
» க்ஷய ரோக சிகிச்சைகள்
» வாத ரக்த ரோக சிகிச்சைகள்
» பாண்டு ரோக சிகிச்சைகள்
» ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள்
» க்ஷய ரோக சிகிச்சைகள்
» வாத ரக்த ரோக சிகிச்சைகள்
» பாண்டு ரோக சிகிச்சைகள்
» ஊரு ஸ்தம்ப ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum