ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    சிரோ ரோக( தலை நோய்க்கான ) சிகிச்சைகள்

    Go down

    சிரோ ரோக( தலை நோய்க்கான ) சிகிச்சைகள் Empty சிரோ ரோக( தலை நோய்க்கான ) சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 8:54 pm

    சிரோரோக சிகிச்சை

    வாதசிரோரோக சிகிச்சை :- வாதசிரோரோக சிகிச்சையில் வாதரோக சிகிச்சையை செய்தல் வேண்டும். இரவில் தலைக்கு நெய்யைத் தடவி பாலை குடிக்கவேண்டும்.

    பித்தசிரோரோக சிகிச்சை :- பித்தசிரோரோகத்தில், திரா¨க்ஷ, திரிபலை, கரும்பு இவைகளின் ரசங்கள், பால், நெய் இவைகளினால் விரேசனம் செய்விக்கவேண்டியது.

    கபசிரோரோக சிகிச்சை :- கபசிரோ ரோகத்தில் சந்தனம் ரூஷக்ர திரவியங்கள் இவைகளை சிரசுக்கு தடவுதல் புகைபோடுதல் முதலிய கருமங்களை செய்தல்வேண்டும்.

    சந்நிபாத சிரோரோக சிகிச்சை :-சந்நிபாத சிரோரோகத்தில், நெய், எண்ணெய் இவைகளினால் தலைக்கு புகைகொடுப்பதன்றி நாசிகத்தினால் புகையை நுகர்தல், நெற்றியில் வியர்வை வரும்படிசெய்தல், தலைக்கு பற்றுப்போடுதல், புகைபோடுதல் முதலியவை
    களை செய்யவேண்டியது.

    நெய், கோதுமை இவைகளையாவது நொச்சியையாவது கியாழம் காய்ச்சி அதனால் வியர்வை பிடித்தலும் நன்மை தரும்.

    ரத்த சிரோரோக சிகிச்சை :- ரத்தசிரோரோகத்தில் சர்வபித்த நாசஹர போஜனங்கள், லேபனங்கள், சிதோஷ்ண பதார்த்தங்கள், தலையில் அணிதல், விஷேஷமாய் ரத்தத்தை வெளிப்படுத்தல் முதலியவைகளைசெய்தல் வேண்டும்.

    கிருமிசிரோரோகசிகிச்சை :- திரிகடுகு, புங்கன்பட்டை,முருங்கன்பட்டை இவைகளை ஆட்டுமூத்திரம்விட்டு அரைத்து நசியம் செய்தால் கிருமிகள் நாசமாகும்.

    சூரியவர்த்த சிகிச்சை :-நெய்யில் வெல்லத்தைக் கலந்துகுடித்தாலும் அல்லது எள்ளை பாலில் விட்டரைத்துலேபனம் செய்தாலும் சூரியவர்த்தம் மூன்று நாளில் நிவர்த்தியாகும்.

    சூரியவர்த்த சிரோரோக சிகிச்சை :-சிரசிற்கு வேது பிடிப்பதுடன் பால் நெய் இவைகளை கலந்து நசியம் செய்தால்உள்ளுக்கும் மருந்தருந்தல் நன்று. இப்படி செய்வதனா சூரியவர்த்த சிரோரோகம்
    நிவர்த்தியாகும்.

    அனந்தவாத சிரோரோகசிகிச்சை :- மேற்கூறிய சிகிச்சைகளை செய்து சிரோவேதனம் செய்தால் அனந்தவாதம் நிவர்த்தியாகும்.

    வாதசிரோரோகத்தில் ஏரண்டாதி லேபனம் :- அமணக்கு விரை, தகரைவிரை இவைகளை புளித்த கழுநீரால் அரைத்து நெற்றியில் தடவ வாதத்தினால் உண்டான தலை நோய் நீங்கும்.

    கோஷ்டம், ஆமணக்குவேர், சுக்கு இவைகளை மோரினால்வேகவைத்து இளஞ்சூட்டில் நெற்றியில் தடவ வாத தலைவலி நீங்கும்.

    கோஷ்டம், ஆமணக்குவேர், இவைகளை கடியில் அரைத்துதடவினால் வாதசிரோரோகம் நிவர்த்தியாகும்.

    பித்தசிரோரோகத்திற்கு சந்தனாதி லேபனம்:- சந்தனம், வெட்டிவேர், அதிமதூரம், சிற்றாமுட்டி, புலிநகம், கரும்அல்லிக்கிழங்கு, இவைகளை பாலில் அரைத்து நெற்றியி தடவினால் அல்லது இதையேதலைக்கு தடவிக்கொண்டு குளித்தாலும் பித்தத்தினால் உண்டான தலைவலி நீங்கும்.

    நெல்லிவற்றல்,கிச்சிலிக்கிழங்கு, கரும் அல்லிக்கிழங்கு, தாமர வளையம், சந்தனம்,அருகம்புல், வெட்டிவேர், நகம் இவைகளை அரைத்து தடவினால் பித்தத்தினால்உண்டான தலைவலி, ரத்தபித்த ஜனிதமான தலைவலி நீங்கும்

    கபசிரோகத்திற்கு ஹரேணீயாதி லேபனம் :-காட்டிமிளகு, கிரந்திதகரம், சிலாசத்து, கோரைக்கிழங்கு, ஏலக்காய்,கிருஷ்ணாகரு, தேவதாரு, ஜடாமாஞ்சி, சிற்றரத்தை, ஆமணக்குவேர் இவைகளை அரைத்துவேகவைத்து கொஞ்சம் சூடாயிருக்கும்போதுதலைக்கு தடவினால் கபதலைவலிநிவர்த்தியாகும்.

    பிரபுன்னாடாதி லேபனம் :-சுக்கு, கோஷ்டம், தகரைவிரை, தேவதாரு, குங்கிலியம் இவைகளை கோமூத்திரத்தில்அரைத்து வேகவைத்து சிறிது தலைக்கு தடவினால் சிலேஷ்மத்தினாலுண்டான தலைநோய்,வலி, குத்தல் நிவர்த்தியாகும்.

    ரத்தசிரோரோகத்திற்கு கிருஷ்ணாதி லேபனம் :-திப்பிலி, வெட்டிவேர், சுக்கு, அதிமதுரம், தண்ணீர்விட்டான்கிழங்கு, கரும்அல்லி, குறும்வேர் இவைகளை சலத்தினால் அரைத்து தலைக்கு தடவிக்
    கொண்டால் அப்பொழுதே குத்தல் நிவர்த்தியாகும்.

    சூரியவர்த்தத்திற்கு சாரியாதி லேபனம் :- நன்னாரிவேர், கரும் அல்லிக்கிழங்கு, அதிமதுரம், கோஷ்டம் இவைகளை புளித்த திரவியங்களினால் அரைத்து அத்துடன் நெய், எண்ணெய் கலந்து
    தலைக்கு லேபனம் செய்தால் சூரியாவர்த்தம், ஒருபக்க தலைவலி குணமாகும்.

    பாதிதலைவலிக்கு மரீசாதி லேபனம் :-மிளகு அல்லது மிளகு அரிசி இவைகளை கரிசாலைசாறுவிட்டு அரைத்து லேபனம்செய்தாலும் அல்லது சுக்கை ஜலம்விட்டு அரைத்து தடவினாலும் ஒற்றைத்
    தலைவலி குணமாகும்.

    சாரியாதி லேபனம் :-நன்னாரிவேர், கோஷ்டம், அதிமதுரம், வசம்பு, திப்பிலி, கரும் அல்லி இவைகளைகாடிவிட்டு அரைத்து தடவினால் அல்லது நெய்யுடனாவது லேபனம் செய்தாலும்சூர்யா வர்த்தம், அர்த்தபேதம் இவைகள் நிவர்த்தியாகும்.

    சங்கத்திற்கு தாருவாதி லேபனம் :- மரமஞ்சள், மஞ்சள், மஞ்சிஷ்டி, வேப்பன்வேர், வெட்டிவேர், தாமரைவளையம் இவைகளை அரைத்து தடவினால் சிரோரோகம் நிவர்த்தியாகும்.

    பேராமுட்டி, கரும் அல்லி, அருகம்புல், கரும் எள்ளு, வெள்ளைச்சாரணை இவைகளைஅரைத்து தடவினால் சங்கம், அனந்தவாதம், சகலமான தலைவலி இவைகள் சுவஸ்தமாகும்.


    தலைவலிக்கு அமிருதாமலக தைலம் :-சீந்தில்கொடி, நெல்லிக்காய், முசுமுசுக்கை, கரிசாலை இலை, தாழம்புக்கொத்து,கற்றாழை இவைகளின் சாறுகள் வகைக்கு 16 பலம், எண்ணெய் 16 பலம்,
    பால் 20 பலம், இவைகள் யாவையும் ஒன்றாகச் சேர்த்து அதில் அதிமதூரம்,ஏலக்காய், இலவங்கம், இலவங்கப்பத்திரி, கோஷ்டம் சாதிக்காய்,திரா¨க்ஷப்பழம், சதாப்பிலை, சந்தனத்தூள், வெட்டி வேர், குருவேர்,தானிகாய்விரை இவைகள் சூரணம் வகைக்கு1 தோலா கலந்து தைலபதமாக காய்ச்சிதலைக்கு தடவிக்கொண்டு குளித்து வந்தால் நடுக்கல், தலைநோய், கண்நோய்,ஒற்றைத்தலைவலி, கபாலநோய் இவைகள் நீங்கும்.

    பிருங்காமலக தைலம்
    :-கரிசாலைச்சாறு, நெல்லிச்சாறு,நல்லெண்ணெய் இவைகள் வகைக்கு 64 பலம், பால்256 பலம் இவைகளை ஒன்றாகச் சேர்த்து காய்ச்சி அதில் அதிமதூரம், சந்தனம்கொஷ்டம், பேரரத்தை, வெட்டிவேர், சிற்றாமுட்டி, போராமுட்டி, நாகமுட்டிஇவைகளின் வேர்கள் கிச்சிலிக்கிழங்கு மஞ்சள் அரக்கு
    இலவங்கப்பட்டை, ஏலக்காய், இலவங்கப்பத்திரி, கொத்தமல்லி, சதாப்பிலை,குறுவேர் இவைகளை சதைத்து வகைக்கு 1 தோலா வீதம் அத்துடன் சேர்த்து தைலபதமாககாய்ச்சி ஸ்னானம் செய்து சிரசிற்குந்தேய்த்துவர தலைநோய், பல்நோய் காதுநோய், விஷசுரம், க்ஷயங்கள், அபஸ்மாரம், வாதம், குஷ்டம் முதலியனநிவர்த்தியாகும்.

    நீலோத்பலாதி தைலம் :- கரும்அல்லிக்கிழங்கு, திப்பிலிஅதிமதூரம், சந்தனம், வெள்ளைத்தாமரைப்பூ இவைகள்வகைக்கு 1/2 பலம், எளெண்ணெய் 16 பலம், நெல்லிக்காய் ரசம் 64 பலம், இவைகள்யாவையும் ஒன்றாக கலந்து தைலபக்குவமாக காய்ச்சி நசியமாவது அப்பயங்கனமாவதுசெய்தால் தலைவலி நிவர்த்தியாகும்.

    நாகராதி நசியம் :-சுக்கு கல்கத்தில் பாலைக்கலந்து நசியம் செய்தால் நானாவிததோஷங்களினாலுண்டான சிரோரோதம் நிவர்த்தியாகும். நொச்சீலையை அரைத்து லேபனம்செய்தால் தலைவலி நிவர்த்தியாகும்.

    பிப்பல்யாதி நசியம் :-திப்பிலி, இந்துப்பு, இவைகளை சூரணித்து எண்ணெய்யுடனாவது அல்லதுநெய்யுடனாவது கலந்து காய்ச்சி நசியம் செய்தால் தலைவலிகள் யாவும்நிவர்த்தியாகும்.

    சூரியவர்த்தத்திற்கு தசமூலாதி நசியம் :- தசமூலகஷாயத்தில் நெய், இந்துப்பு கலந்து நசியம் செய்தால் ஒற்றைத்தலைநோய் சூர்யாவர்த்தம் இவைகள் நிவர்த்தியாகும்.


    பிருங்கராஜாதி நசியம் :- கரிசாலை சாற்றுக்கு சமமாக ஆட்டுப்பால் கலந்து சூரிய புடமிட்டு நசியஞ் செய்தால் சூர்யவர்த்தரோகம் நிவர்த்தியாகும்.

    துவரியாதி நசியம் :- துவரை இலை, அருகம்புல் இவைகள் ரசத்தை நசியஞ் செய்தால் ஒத்தைத் தலைநோய் நிவர்த்தியாகும்.

    விடங்காதி நசியம் :- வாய்விளங்கம், கரும் எள்ளு இவைகளை சமஎடையாக அரைத்து தடவி நசியஞ் செய்தால் ஒத்தைத் தலைநோய் நிவர்த்தியாகும்.

    கிரகரணாதி நசியம் :-வெள்ளை காக்கட்டான் விரையாவது அல்லது அதன் வேரையாவது தண்ணீர்விட்டுஅரைத்து நசியஞ் செய்தாலும் அல்லது அதன் வேரை காதுக்கு கட்டிக்கொண்டாலும்ஒத்தைத் தலைவலி நிவர்த்தியாகும்.

    குடாதி நசியம் :- வெல்லம், இஞ்சிரசம், திப்பிலி, இந்துப்புஇவைகளை ஜலம்விட்டு அரைத்து நசியஞ் செய்தால் சகலமான சிரோரோகங்கள் நிவர்த்தியாகும்.

    சர்க்கராதி நசியம் :-நெய்யில்வருத்த குங்குமப்பூடன் கற்கண்டு சேர்த்தரைத்து நசியஞ் செய்தால்வாதரத்தத்தினால் கண்புருவம், கண்கள், செவி, கர்ணமூலம் இவைகளில் உண்டானகுத்தல், ஒத்தைத் தலைநோய், சூர்யவர்த்தம் இவைகள் குணமாகும்.

    தாடிம்பாதி யோகம் :-மாதுளம்ப்பூ, அருகம்புல் இவைகள் ரசத்தையாவது, கர்ப்பூரம், தேன், பால்இவைகளையாவது தலைக்கு தடவினாலும், நசியம், பானம் இவைகள் செய்தாலும்தலைவலியினால்
    உண்டான ரத்தசிராவம் நிவர்த்தியாகும். இதை குடிக்கும்போது கற்கண்டு, பால் இதனை சேர்க்கவேண்டியது.

    உதும்பர யோகம் :-பழுத்த அத்திப்பழத்தில் நெய், கற்கண்டு கலந்து பாகம் செய்து ஏலக்காய்,மிளகு இவைகள் சூரணத்தை கலந்து சாப்பிட்டால் நாசிகாரத்த சிராவம்நிவர்த்தியாகும். கண்டகத்திரிக்காய் ரசத்தை தலைக்கு தடவினால் தலைவலிநிவர்த்தியாகும்.

    சுக்குத் தைலம் :-தோல்சீவிய சுக்கு பலம்-80 எடுத்துசதைத்து ஓர் பாண்டத்திலிட்டு 8-மரக்கால்சலம்விட்டு எட்டொன் றாக காய்ச்சி வடித்து இத்துடன் நல்லெண்ணெய் படி-2,பசுவின் பால் படி-2, சிற்றரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி, கோரைக்கிழங்கு,மஞ்சிஷ்டி, கடுக்காய், நெல்லிவற்றல், தான்றிக்காய், அகில்,தண்ணீர்விட்டான்கிழங்கு, எருக்கன் வேர்ப்பட்டை, கடுகுரோகணி, கோஷ்டம்,சித்திரமூல வேர்ப்பட்டை, தேவதாரு,

    சந்தனம், குங்கிலியம், செவ்வியம், ஆமணக்குவேர், வெள்ளி லோத்திரப்பட்டை,பேரிச்சங்காய், கொடிமாதுழப்பழம் இந்துப்பு வகைக்கு 1/4 பலம் வீதம்சூரணித்து சேர்த்து பதமுறக்காய்ச்சி வடிகடத்தில் கஸ்தூரி, குங்குமப்புவகைக்கு வராகனெடை 1/2 வீதம், அரைத்துப் போட்டு அதில் காய்ச்சிய
    தைலத்தை வடித்து ஆறின பின்பு நன்கு கலக்கி வைத்துக்கொள்க. இதை ஒரு மாதம்நெற்குவியலில் வத்தெடுத்து பயன்படுத்த வேண்டும். இதை மேலுக்கு தேய்த்துப்பிடிக்க ஆவர்த்த வாதம் முதல் சகல வாதரோகங்கள் குணமாகும்.சிரசிற்கிட்டுவரசிரோரோகங்கள் யாவும் தீரும். காதில் துளிக்க கர்ணசூலைதீரும். நசியம் செய்ய நாசிரோகங்களும், பீனச நோயும், தலைவலியும் கபாலசூலையும் தீரும்.

    கருஞ்செம்பைத்தைலம் :- கருஞ்செம்பை, வெள்ளுள்லளிகாரெள்ளு இவைகளின் ரசம் சமஎடையாக எடுத்து பத
    முறக்காய்ச்சி முறைப்படி அப்பியங்கன ஸ்கானஞ்செய்துவர கபாசூலை, நெற்றி புருவம் நேந்திரம் இவ்விடங்களைப் பற்றிய வலி முதலியன குணமாகும்.

    நொச்சித்தைலம் :-கருநொச்சீலைச்சாறு 1 படி, நல்லெண்ணெய் படி 1, இவைகளை ஒருதைலபாண்டத்திலிட்டு அதில் சுக்கு மிளகு, சடாமாஞ்சி, கோஷ்டம் வகைக்கு படி1/2, வீதம் பால் விட்டரைத்து சேர்த்து தைலபதமாகக்காய்ச்சி வடித்துஸ்கானஞ்செய்து வர சிரோரோகங்கள் தலைவலி முதலிய யாவும்
    குணமாகும்.

    சிரோரோக பத்தியங்கள் :-வேதுபிடித்தல், வியர்வை வாங்கல், நசியம், தூமபானம், விரேசனம், லேபனம்,லங்கனம், சேசனம், சிரோவஸ்தி, ரத்தத்திரவம், ரக்ஷ¡பந்தனம் செய்தல், கட்டுகட்டல், லக்காய், முருங்கக்காய், திரா¨க்ஷபழம்,சக்கரவர்த்திகீரை,பாவக்காய், நெல்லிக்காய், கொடிமாதுழங்காய், மாதுழங்காய்எண்ணெய், மோர், புளித்தநீர், தேங்காய், கடுக்காய், கோஷ்டம் கரிசனாங்கண்ணி,கற்றாழை, கோரைக்கிழங்கு, வெட்டிவேர், அமுக் கிறாக்கிழங்கு, சந்தனம்,கற்பூரம், இவைகள் சிரோரோகத்தில்பத்தியங்கள்.

    அபத்தியங்கள் :-தும்மல், கோட்டுவாய், கண்ணீர், மூத்திரம் தூக்கம், மலம் இவைகள் வேகத்தைதடுத்தல், அஞ்சனம், பால் கெட்ட ஜலத்தில் குளித்தல், பல்குச்சி,பகல்நித்திரை இவைகள் சிரோரோகத்தில் அபத்தியங்கள்.

    நேத்திர ரோகங்கள் (வேறு)

    நேத்திர நோய்களுக்கு காரணம் :-வெய்யிலில் உட்கார்ந்திருந்து பிறகு ஜலத்தில் உடனே குளித்தல்,அதிமதுரமாயிருக்கும் பொருள்களை உற்றுப்பார்க்குதல், பகலில் நித்திரைசெய்தல், இரவில் விழித்துக்கொண்டு இருக்குதல், கண்களுக்கு நெருப்புஅனல்வீசும்படிசெய்துகொள்ளுதல், கண்ணில் தூசு முதலியவைகள் விழுந்துஅப்படியே படர்ந்திருக்குதல், புகைப்பிடித்தல், வாந்தியின் வேகத்தைதடுக்குதல், அதிகமாய் வாந்தியாகுதல், கஞ்சி முதலிய திரவரூப மானஅன்னபானதிகளை சதாசாப்பிடுதல், மலம், மூத்திரம்,
    அபானவாயு இவைகளின் வேகத்தை தடுக்குதல், சதா கண்ணீர் வடியும் படிச்செய்தல்,துக்கித்தல், கோபித்துகொள்ளுதல், சிரசின் மீது அதிகமாய் அடிபடுதல்,அதிகமாய் லாகிரி வஸ்த்துகளை குடித்தல், சீதள்காலத்தில் வெப்பமும்,வெப்பகாலத்தில் சீதளமும்,உண்டாகுதல், மனோதுக்கத்தையும்,காமாதிதுக்கத்தையும் அதிகமாய் சம்பவித்தல், அதிக புணர்ச்சி செய்தல்,கண்ணீரின் வேகத்தை தடுத்தல், அதிசூக்ஷ்ம பொருள்களை சதாஉற்றுப்பார்க்குதல், வெகுநடை நடத்தல், மிகுசுமை யெடுத்தல் முதலியகாரணங்களினால் வாதாதி தோஷங்கள் பிரகோபித்து நேர்த்திரரோகங்களை
    உண்டாக்குகின்றன.

    அர்மரோக பேதம் :-இந்தரோகம் ஐந்து வகைப்படும்.கண்களின் வெந்நிறத்தின் மீது லேசாயும்படர்ந்தாற்போலும் கருநிறமாயும், சிகப்பு நிறமாயும் மாமிசம் உண்டனால்அதற்கு பிரஸ் தாரிகமென்று பெயர்.

    வெந்நிறமாயும் மிருதுவாயும் மாமிசம் உண்டாகி வரவர பெருகிவந்தால் சுக்கிலார்மமென்று பெயர்.
    தாம்பிரத்தைப்போல் சிகப்பாயும் மிருதுவாயும் மாமிசம் பெருகினால் ரக்த்தார்மமென்று பெயர்.

    முழுதும் பரவினாற்போலும் மிருதுவாயும் இருதயம்போல ஸ்தூலமாயும் கருப்புநிறமாயும் மாமிசம் விருத்தியானால் அதிமாமி சார்மமென்று பெயர்.

    கடினமாயும், பரவுகிறதாயும் இரத்த வொழுக்களில்லாமல்மாமிசம் உண்டனால் சினாயவர்மமென்று பெயர். (அர்மமென்றால் துர்மாமிசம்.)

    சுத்திரோக லக்ஷணம் :-கண்களின் வெள்ளை அண்டத்தின் மீது கருப்பாயும் மாமிசப் பரவலைப்போலும்முத்துசிப்பியின் நிறத்தோடும் பிந்துகள் உண்டானால் அவைகளுக்கு சுத்திரோகம்என்று பெயர்.

    அர்ஜீனலக்ஷணம் :-கண்களில்வெள்ளை, அண்டத்தின் மீது முயல் ரத்தத்தைப்போல் சிகப்பு நிறமானபிந்துக்கள் ஜனித்தால் அவைகளுக்கு அர்ஜீன ரோகம் என்று பெயர்.

    பிஷ்டக லக்ஷணம் :- கபமும்,வாதமும் அதிகரித்தலினால் கண்களின் வெள்ளை அண்டத்தின்மீது மாவைப்போல்வெளுத்த நிறமான மாமிசம் விருத்தியானால் இதற்கு பிஷ்டகமென்று பெயர்.
    இது மலத்துடன் கூடிய தாய் கண்ணாடி போல் பிரகாசிக்கும்.

    சிராஜால லக்ஷணம் :-கண்களின் வெள்ளை அண்டத்தின்மீது கடினமாயும் சிகப்புநிறமாயும், பெரியதாயும்உள்ள நரம்புகள் பரவி பின்னல் போல் தோணும். இதற்கு சிராஜாலமென்று பெயர்.

    சிராஜபிடிக லக்ஷணம் :-கண்களின் வெள்ளை அண்டத்தின் மீதுள்ள கருப்பு விழியைச் சேர்ந்தாற் போல்நரம்புகள் வியாபித்து வெளுத்த நிறமுடன் சிறிய கட்டிகள் உண்டாகும். இதற்குசிராஜ பிடிகை என்று பெயர்.

    பலாச லக்ஷணம் :-கண்களின் கருப்புவிழிகளில் வெண்கலத்தைப்போல் பிரகாசமாயும் கடினமாயும்அல்லது சலபிந்துகளுக்கு சமானமாயும் கிரந்தி உண்டாகி சிறிது பெருத்துவட்டமாயும் இருந்தால் இதற்கு பலாசமென்று பெயர்.

    இம்மாதிரியாய் கண்களின் வெள்ளை அண்டத்தின்மீதும் உண்டாகும். அதற்கும் பலாசமென்றுதான் கூறுவார்கள்.

    பூயாலச லக்ஷணம்
    :-கண்களின் சந்துகளில் வீக்கம் உண்டாகி ஊசிகளால் குத்துவது போல் வேதனையுடன்துர்நாற்றமுடன் சீழ்வடிந்து கொண்டிருந்தால் அதற்கு பூயாலசமென்று பெயர்.

    உபநாஹ லக்ஷணம் :-நேந்திர சந்துகளில் பெருத்தும் பக்குவத்திற்கு வந்ததாகவும் அதிக நமையுடன்வேதனையற்றதுமான கிரந்தி உண்டானால் அதற்கு உபநாஹமென்று பெயர்.

    நேத்திர நாடீலக்ஷணம் :-வாதாதி தோஷங்கள் நரம்புகளின் மார்கத்தினால் நேத்திர சந்திகளுக்குபிரவேசித்து தோஷங்களின் பிரகோபத்தின் படி ரத்தம் அல்லது சீழைவடியச்செய்தால் நேத்திர
    நாடீரோகமென்று பெயர்.

    (1) நேத்திர சந்துகளில் வீக்கம் உண்டாகி பழுத்து சீழ் வடித்துக்கொண்டு சந்நிபாத லக்ஷணத்துடன் கூடியிருந்தால் பூயசிராவ மென்று பெயர்.

    (2) வெண்மையாயும் கடினமாயும் சீதம்போலும் சீழ்வடிந்து கொண்டிருந்தால் சிலேஷ்ம சிராவ மென்று பெயர்.

    (3). இரத்தபிரகோபத்தினால் அதிகமாயும் உஷ்ணமாயும்இரத்தம் வடிந்துகொண்டிருந்தால் இரத்தசிராவமென்று பெயர்.

    (4). நேத்திரசந்துக்களில் மஞ்சள் நிறமாயும் உஷ்ணமாயும் நீர் வடிந்து கொண்டிருந்தால் அதற்கு பித்தசிராவமென்று பெயர்.

    சர்வணீ அலஜீ லக்ஷணம் :-கண்களின் வெந்நிறமான சந்தியின்மீதாவது அல்லது கருப்புநிறமானசந்தியின்மீதாவது சிவப்பாயும் சிறிதாயும் வட்டமாயும் கட்டிகள் உண்டாகி அதிதாபத்துடன் பழுத்தால் அதற்கு சர்வணீயென்று பெயர்.

    அந்த இடத்திலேயே பிரமேகக் கட்டிகளைப்போல் இலக்ஷணங்களுடன் மிகவும் பெரியதாய்க் கட்டிகள் உண்டானால் அலஜீ என்று பெயர்.

    கிருமிகிரந்தி லக்ஷணம் :-நேத்திர ரப்பைகளிலும், ரப்பைமயிர்களின் சந்துக்களிலும் நானாவிதங்களானகிருமிகளினால் அதிக நமைச்சல் உண்டானால் அதற்கு கிருமிகிரந்தி என்று பெயர்.

    மேலும் அது நேத்திரத்தின் வெண்மைநிறமான பாகத்தின்சந்துகளில் வியாபித்துகண்களின் உள்பாகத்தை கெடுத்து உட்புறமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தால்அதற்கும் கிருமிகிரந்தி என்று பெயர்.

    வர்த்தரோகம் உத்சங்க பீடீகா லக்ஷணம் :-நேத்திரங்களின் உள்பாகத்தில் முகத்துடன் கூடிய கட்டிகள் உண்டாகி சிவப்புநிறத்த்டன் கடினமாய் கண்ரப்பைகளின் வெளி மத்திய பாகத்தில் பருத்திஇருந்தால் அதற்கு உத்சங்க பீடிகைகள் என்று பெயர். இது திரிதோஷத்தினால்உண்டாகும்.

    கும்பிகா லக்ஷணம் :-நேத்திரத்தின் ஒரு பாரிசத்தில் மாது ளம் பழவிதைப்போல் ஒரு சிரங்கு உண்டாகிபெருகி பழுத்து உடைந்து கருப்புநிறமாக சீழ் ஒழுகுகல் இருந்தால் இதற்குகும்பிகை யென்று சொல்லுவார்கள். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

    போதகீ லக்ஷணம் :-கண்ரப்பைகளின் உள்பாகத்தில் செந்நிறமான கட்டியுண்டாகி இரத்தம்வடிந்துகொண்டு நமையுடன் கூடி மிகவும் வேதனையுடன் கூடியிருந்தால் அதற்குபோதகீ என்று பெயர்.

    வர்த்தமசர்க்கரா லக்ஷணம் :-நேத்திரங்களில் கடினமாயும் பெருத்தும் கட்டியுண்டாகி அதைச்சுற்றி சிறியசிரங்குகளினால் சூழப்பட்டிருந்தால் இதற்கு வர்த்தமசர்க்கரா என்று பெயர்.இந்த நோய் கண் ரப்பைகளை கெடுத்துவிடும்.


    அர்சோவர்த்தம ரோக லட்சணம் :-கண்ரப்பைகளில் வெள்ளரி விரையைப் போன்ற சிரங்குகள் உண்டாகி சிறு வேதனை,கடினம், மழுமழுப்பு உடையதாயிருந்தால் அர்சோவர்த்தமென்று பெயர்.

    சுஷ்கார்சோ லட்சணம் :-கண்களுக்குள் உயரமாயும், கரகரப்பாயும், கடினாமாயும், வேதனையுடன்கூடினதாயுமுள்ள மாமிசமூளைகள் உண்டானால் அதற்கு சுஷ்க்ரசமென்று பெயர்.

    அஞ்சன லட்சணம் :-கண்ரப்பைகளில் தாகம், வேதனைஇவைகளுடன் கூடி சிகப்பாயும் மிருதுவாயும்சிறிதாயும் கொஞ்சம் வேதனையுடன் கூடிய கட்டிகள் உண்டானால் அவைகளுக்கு அஞ்சனமென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

    பஹீளவர்த்தும லட்சணம் :
    -கண்ரப்பைகளில் உள்புறமெல்லாம் சருமத்திற்கு சமானமாயும் கடினமாயுமிருக்கும். சிரங்குகள் உண்டாகி பருத்திருந்தால் இதற்கு பஹீளவர்த்தம்மென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

    வர்த்தமபந்த லட்சணம்
    :-கண்ரப்பைகள் வீங்கி, நமைவேதனை இவைகளுடன் கூடியிருத்தல் மூடமுடியாமற்போகும். இதற்கு வர்த்தமபந்தரோகமென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

    கிளிஷ்டவர்த்தம ரோகம் :-கண்களின் கீழ் மேல் ரப்பைகள் ஒரே காலத்தில் மிருதுவாய் சிறு வேதனையுடன்கூடி அதிகசிகப்பு நிறமாக இருந்தால் அதற்கு கிளிஷ்டவர்த்தம ரோகமென்று பெயர்.
    இது கபரத்தத்தினால் உண்டாகும்.

    வர்த்தகர்ம லட்சணம் :- பித்தயுக்தமானரத்தமானதுவடிந்துகொண்டிருப்பதினால் அது சேறுக்கொப்பாயிருக்கும். இதற்குவர்த்தகர்மமென்று பெயர். இது பித்தாதிக்க சந்நி பாதத்தினால் உண்டாகும்.

    சியாவர்த்தம லட்சணம் :-கண்ரப்பைகளில் கீழ் மேல்பாகங்கள் கறு நிறத்துடன் வீங்கி வேதனையுடன்கூடியிருந்தால் சியாவர்த்தம மென்று பெயர். இது வாதாதிக்கதிரிதோஷத்தினால் உண்டாகும்.

    பிரக்கிளின்னவர்த்தம லட்சணம் :-கண்ரப்பைக்குட்புறம்வேதனையும், வெளிப்புறம் வீக்கமும் உண்டாகி சந்துகளில்மினுமினுப்புடன் கூடியிருந்தால் பிரக்கிளின்னவர்த்தம ரோக மென்று பெயர்.

    அக்கிளின்ன வர்த்த லக்ஷணம் :-கண்ரப்பைகளை கழுவினாலும் கழுவாவிட்டாலும், பிசினைப்போல் பலதடவைஒட்டிக்கொண்டு உட்புறமாக பழுக்காமல் சீழ்தோன்றாமல் இருந்தால் அக்கிளின்னவருத்தமென்று பெயர்.

    வாதஹதவர்த்தம லக்ஷணம் :-கண் ரப்பைகளின் சந்துக்கள் திறந்துகொள்வதினால் கண்கள் திறப்பதற்கும்மூடுவதற்கும் முடியாமல் சிறியதாய் மூடமுடியாமல் இருந்தால் வாதஹதவர்த்தமரோகமென்று பெயர்.

    அர்ப்புத லக்ஷணம் :-கண் ரப்பைகளின் உள்பாகத்தில், மந்தமான வேதனையும், சிகப்பு நிறமும்சீக்கிரமாக விருத்தியாகுந் தன்மையும் விஷத்திற் கொப்பாயும், ஒரு கிரந்தியுண்டாகில் அதற்கு அர்ப்புதமென்று பெயர். இது திரிதோஷத்தினால் உண்டாகும்.

    நிமேஷ லக்ஷணம் :- கண்ரப்பைகளை அனுசரித்திருக்கும் வாயுவானது அதை அசையச் செய்யும் நரம்புகளைச்சேர்த்து ரப்பைகளை சதா அடிக்கும்படி செய்தால் அதற்கு நிமேஷமென்று பெயர்.

    சோணிதார சோலக்ஷணம் :-ரத்த சம்பத்தத்தினால் ரப்பை களின் உள்பாகத்தில் சிகப்பு நிறத்துடன் மிருதுவான முளைகள் உண்டானால் இதற்கு சோணிதார ரசமென்று பெயர். இதை அடிக்கடிசஸ்திரத்தினால் சேதித்தாலும் வளர்ந்து கொண்டேவரும்.

    லகண லக்ஷணம் :-ரப்பைகளில் இலந்தைக்காயைப் போல் கடினமாயும், தூலமாயும், நமையுடன்கூடினவைகளாகவும் பிசுபிசுப் பாயிருக்கும் கிரந்திகள் உண்டானால் இதற்குலகணமென்று பெயர். இது கபாதிக்கத்தினால் உற்பவிக்கும். இதில் குத்தல்,பாக்கம், அதாவது பழுத்தல் முதலியவைகள் இல்லாமலிருக்கும்.

    பிசவர்த்தம லக்ஷணம் :-திரிதோஷபிரகோபத்தினால் ரப்பைகளின் மேல் பாகம் மூடிக்கொண்டு நானாவிதமாகதாமரைத்தண்டை போன்று நீர்வடிந்து கொண்டிருந்தால் பிசவர்த்தம மென்று பெயர்.

    குன்சன லக்ஷணம் :-வாதாதி தோஷங்கள் பிரகோபித்துரப்பைகளை சிறிதாக்கி கண்கள் திறப்பதற்குமுடியாமலிருந்தால் இதற்கு குன்சனமென்றும் கிருச்சிரோனமீலனமென்று பெயர்.

    பக்ஷ்மகோப லக்ஷணம் :-வாதத்தினால் கண்ரெப்பைகளை அசையச்செய்வதினால் ரப்பைமயிர்கள் கண்களில்பிரவேசித்து அடிக்கடி கண்களை அண்டத்திலும் கருப்பு விழியிலும் உராய்ந்துகொள்வதினால் வீக்கமுண்டாகி கண்ரெப்பை மயிர்கள் உதிரும்.இதற்குபக்ஷ்மகோபமென்று பெயர். இதனை உப பக்ஷமென்றுஞ் சொல்வார்கள். இது மிகவும்பயங்கரமானது.

    பக்ஷமசாத லட்சணம் :-ரப்பைகள், ரப்பைமயிர்கள் இவைகளின் மூலத்திலிருக்கும் பித்தமானதுபிரகோபிப்பதனால் மயிர்கள் உதிர்ந்து ரப்பைகளில் நமை, தாபம், இவைகளைஉண்டாக்கினால் இதற்கு பக்ஷமசாத மென்று பெயர்.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum