என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm
» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm
» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm
» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm
» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm
» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am
» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am
» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am
» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm
» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm
» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm
» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm
» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm
» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm
» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm
» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm
» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm
» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm
» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm
» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am
» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am
» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am
» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm
» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm
» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm
Most Viewed Topics
Log in
Ads
No ads available.
ஜிஹ்வா ,தாளு,கர்ண ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
ஜிஹ்வா ,தாளு,கர்ண ரோக சிகிச்சைகள்
ஜிம்மரோகசிகிச்சை
உபஜிம்மைக்கு வியோக்ஷ¡தி சூரணம் :- திரிகடுகு, யாவாக்ஷ¡ரம் கடுக்காய்,இவைகளின் சூரணத்தினால், பற்களைத்துலக்கினால் இவைகளையே குடிநீரிட்டு,வாய்கொப்பளிக்கச்செய்தாலும், மேலும் அதில் தேனும் இந்துப்பு இவைகளைஅரைத்து கையினால் தடவினாலும் உபஜிம்மரோகம் சாந்தியாகும்.
கண்டசுண்டியாதி சூரணம் :- துண்டிகேரி, திருமம், கூர்மம் சங்காதம்,தாலுபுப்புடம், இவைகளில் சஸ்திரகர்மம் செய்யும்போது அடியில் சொல்லியசிகிச்சைகளை செய்யவேண்டியது.
தாலுதோஷ தாலுபாக சிகிச்சை :- தாலுதோஷத்தில் வியர்வையும் சிநேஹத்தையும் வாதகரமான அவுக்ஷத சேவைகளையும் செய்யவேண்டியது.
தாலுபாகத்தில் பித்தநாசகர சிகிச்சைகளை செய்யவேண்டியது.
களசுண்டி சேதனவிதி :- நாக்கு மீது இருக்கும் முள்ளைஅங்குஷ்டத்தினால் பிடித்து இழுத்து அறுக்கவேண்டியது.திப்பிலி, அதிவிடயம்,கோஷ்டம், வசம்பு, மிளகு, சுக்கு
இவைகளை சூரணித்து தேன் உப்பு கலந்து விரலினால் தேய்த்தால் நாக்குமுள்ளு நிவர்த்தியாகும்.
ரோகணீ சாமானிய சிகிச்சை :- பஞ்சரோகிணிகளில் சாத்தியாமானவைகளிலிருந்து ரத்தத்தை வெளியாக்கி வமனம், தூமபானம் கண்டூஷம், நசியகருமம் இவைகளை செய்யவேண்டியது.
வாதரோகணி சிகிச்சை :- ரத்தத்தை வெளியாக்கி உப்பினால் தேய்க்கவேண்டியது. சுக உஸ்ணமான சிநேக கண்டூஷங்களை அடிக்கடிவைக்க வேண்டியது.
பித்தரோகணீ சிகிச்சை :- இந்தரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கிசர்க்கரை தேன் இவைகளுடன் ஞாழல்பூ சூரணத்தைக்கலந்து தேய்த்துதிரா¨க்ஷகர்ஜீரக்காய் இவைகளில் கியாழத்தை வாயில் வைத்திருக்கவேண்டியது.
ரத்தரோகணி சிகிச்சை :- இந்த ரோகத்தில் பித்தரோகணீசிகிச்சைகளை செய்யவேண்டியது.
கண்டசாலுக சிகிச்சை :- ரத்தத்தை வெளிபடுத்தி துண்டீகேரி மாதிரி சிகிச்சைகளை செய்யவேண்டியது.
இதில் நெய்யில் சமைத்த யவதானிய அன்னத்தை ஒருவேளை சாப்பிடவேண்டியது.
கபரோகணீ சிகிச்சை :- கபரோகணிரோகத்தில் கருதூபத்தை காரமாயுள்ளஔஷதங்களுடன் சேர்த்து தேய்க்கவேண்டியது. வெள்ளைதுளசி, வாய்விளங்கம்,தந்திவேர் இவைகளுடன் தயிலத்தை காய்ச்சி அதில் இந்துப்பை கலந்து நசியமும்வாயில் வைத்துக்கொள்ளவும் செய்யவேண்டியது.
அதிஜிம்மரோகத்தில் உபஜிம்மரோக சிகிச்சைகளை செய்ய வேண்டியது.
ஏகபிருந்தரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி பிற்குசோதனை விதிகளை செய்யவேண்டியது.
பிருந்தரோகத்தில் ஏகபிருந்த சிகிச்சைகளை செய்யவேண்டியது. கிளாயுவுரோகத்தில் சஸ்திரசிகிச்சையை செய்யவேண்டியது.
களவித்திரதிக்கு மர்மரஹித்தளங்களில் உண்டாகி பழுத்தவைகளை சேதிக்கவேண்டியது.
சர்வசர சாமானிய சிகிச்சை :- வாதஜ சர்வசரமென்றால்வாதஜ முகபாகத்தில்அதை உப்பினால்தேய்த்து வாதநாசக அவுஷ தங்களினால் தயார்செய்த தயிலத்தினால்கண்டூஷம் நசியம் இவைகளை செய்யவேண்டியது.
பித்தஜ சர்வசரத்தில் முதலில் பேதியாகும்படி செய்து பிறகு பித்த நிவர்த்தங்களான சகல மதுர சீதகர சிகிச்சைகளைச் செய்ய வேண்டியது.
கபஜசர்வசரத்தில் பிரதிசாரண, கண்டூஷ, பூம, பானசோதனங்களை சகல கபஹர சிகிச்சைகளை செய்யவேண்டியது.
களரோக சிகிச்சை :- களரோகத்தில் ரத்தத்தை வெளியாக்கி தீக்ஷணகரமான ஔஷங்களைக் கொடுத்து நசியாதி கருமங்களை செய்யவேண்டியது.
மிருத்விகாதி சூரணம் :-திரா¨க்ஷ, கடுகுரோகணி, திரிகடுகு, மரமஞ்சள், திரிபலை, இலவங்கப்பட்டை,கோரைக்கிழங்கு வட்டத்திருப்பி, ரசாஞ்சாணம், அறுகம்புல், வாலுளுவைகொடிஇவைகள் சூரணத்தில் தேன் கலந்து களத்தில் லேபனம் செய்ய வேண்டியது.
முகபாக சாமானியசிகிச்சை :- சகலமுகபாகத்தில்சிராவேதனம், சிரோவிரோசனம், இவைகளை செய்து தேன், கோமூத்திரம், பால், நெய்,சீதகரபதார்த்தங்கள், இவைகள் கலகத்தை முகத்தின்மீது தடவவேண்டியது.
பஞ்சவல்கலகியழத்திலாவது திரிபலை கியாழத்திலாவது தேன்கலந்து வாயில் போட்டு கொப்பளித்தால் முகபாவம் ஹரிக்கும்.
யஷ்டி மதவாதி தைலம் :- அதிமதூரம் 1 பலம், கருமல்லிக்கிழங்கு 30 பலம், எண்ணெய் 16 பலம், பால் 40 பலம்
இவைகள் யாவையும் ஒன்றாக கலந்து மந்தாக்கினியால் தைலபதமாக காய்ச்சி ரத்திரிகாலங்களில் நசியம் செய்வித்தால் முகசிராவ ரோகம், தேகத்தில் தடவினால்சாரைதோஷம் நிவர்த்தியாகி பொன்போல் தேககாந்தி யுண்டாகும்.
கதிராதி குடிகைகள் :-100 பலம் கருங்காலிப்பட்¨டாயை இடித்து 256 பலம் ஜலம்கொட்டி எட்டில் ஒருபாகம் மீறும்படி யாக கியாழம் சுண்டக்காய்ச்சி வடிகட்டி ஜாபத்திரி,பச்சைக்கற்பூரம் பாக்கு, இலவங்கப்பத்திரி, சிறுநாகப்பூ, கஸ்தூரிஇவைகளைச்சூரணித்து வகைக்கு பலம் 1/4 வீதமாக கலவத்திலிட்டு மேற்படி
கியாழம் விட்டரைத்து கடலை அளவு மாத்திரைகள் செய்து வாயில் வைத்துக்கொண்டுஅதன ரசத்தை விழுங்கிக்கொண்டிருந்தால் சகலமான முகரோகங்கள், ஜிம்மரோகங்கள்உதடுரோகங்கள் தந்தரோகங்கள், நிவர்த்தியாகும்.
முகரோகத்தில் பத்தியங்கள் :-வியர்வை வாங்குதல், விரேசனம், வமனம், கொப்பளித்தல், பிரதிசாரணம்,கபலதாரணம், ரக்த மோக்ஷணம், நசியம், தூமபானம், சஸ்திரகருமம்,அக்கினிகருமம், மூங்கில் அரிசி, யவதானியம், பச்சைபயறு, கொள்ளு, ஐந்துமாமிசங்கள், கீழாநெல்லி, பாவக்காய், தண்ணீர்விட்டான்கிழங்கு,
பேய்ப்புடல், இளமுள்ளங்கி, பச்சைகர்ப்பூரம், வெந்நீர், தாம்பூலம்,கருவேலன்கியாழம், காரம், கசப்பான ரசங்கள், இவைகள் முகரோகத்தில்பத்தியங்கள்.
அபத்தியங்கள் :-பல்லை குச்சியினால் துலக்கல், நீராடல், புளிப்பு, மீன், தயிர்பால்,வெல்லம், உளுந்து, ரூக்ஷ¡ன்னம், ஜடான்னம், பக்ஷணங்கள், பகல் நித்திரைஇவைகள் ஆகாது.
கர்ணரோக சிகிச்சை
கருணசூலைக்கு சிருங்கபேராதி தைலம்:- இஞ்சிரசம், தேன், இந்துப்பு, வெள்ளைகடுகு முதலியவைகளை எண்ணெயிலிட்டுக்காய்ச்சி கொஞ்சம் சூடாயிருக்கும்போதே காதில் துளிக்க கர்ணசூலைநிவர்த்தியாகும்.
லசுனாதி சுரசம் :- வெள்ளைப்பூண்டு,இஞ்சி, முருங்கைவேர்ப்பட்டை, முள்ளங்கி, வாழை இவைகளின் ரசத்தை பிழிந்துஎண்ணெயில்ப்போட்டு காய்ச்சி கொஞ்சம் உஷ்ணமாகவே காதில் விட கர்ணசூலைகள்நிவர்த்தியாகும்.
அர்க்கபத்திர ரசம் :- பழுத்த எருக்கன் இலைக்கு நெய்யைத்தடவி நெருப்பனலில் வாட்டி காதில் கொஞ்சம் உஷ்ணமாக பிழிந்தால் கர்ணசூலைகள் நிவர்த்தியாகும்.
சுயோநாக தைலம் :- பெரும்வாகைவேர் கற்கத்தில் எண்
ணெயைக் கலந்து மந்தாக்கினியால் பக்குவமாக காய்ச்சி காதில் துளிக்க திரிதோஷத்தினாலுண்டான காதுகுத்தல் நிவர்த்தியாகும்.
ஹிங்குவாதி தைலம் :-பெருங்காயம், இந்துப்பு, சுக்குஇவைகளின் கற்கத்தில் நல்லெண்ணெய் அல்லதுகடுகு எண்ணெயை சேர்த்துக் காய்ச்சி கொஞ்சம் சூடாக காதில்விட காதுகுத்தல்நிவர்த்தியாகும்.
நாகராதி தைலம் :-இந்துப்பு, சுக்கு, கோரைக்கிழங்கு, திப்பிலி, பெருங்காயம், வசம்பு,வெள்ளைப்பூண்டு இவைகளின் கற்கம், எள் எண்ணெய், பழுத்த எறுக்கன் இலைரசம்,முருங்கைரசம் இவைகளை கலந்து தைலம் காய்ச்சி காதில்விட காதுகுத்தல், செவிடுஇவைகள் குணமாகும்.
கர்ணநாத பாதைகளுக்கு அபமார்க்க தைலம் :-நாயுர்வி உப்பினின்று சனித்த ஜெயநீர், நாயுருவி கற்கம் இவைகளுடன்நல்லெண்ணெய் கூட்டித் தைலமாக காய்ச்சி காதில் விட்டுவர கர்ணநாதம், செவிடுகுணமாகும்.
விலவ தைலம் :-விலவபழத்தை கோமூத்திரத்தி லரைத்து அதில் சலம் ஆட்டுப்பால் நல்லெண்ணெய்இவைகளை கலந்து காய்ச்சி காதில் துளிக்க காது செவிடு நீங்கும்.
பீஜபூர ரசம் :- கொடிமாதுளம்பழ ரசத்தில் சர்ஜக்ஷ¡ரம்கலந்து காதில் வார்த்தால் சீழ் வடிதல், சலம் வடிதல், குத்தல் இவைகள் நீங்கும்.
சமுத்திரபேன சூரணம் :- கடல்நுரை சூரணத்தை காதில்தூவ காதிலிருக்கும் சீழ் ஜலம், மலினம் முதலியன நிவர்த்தியாகும்.
கர்ணசிராவ சிகிச்சை :-பழுத்தநாவலிலை, மாயிலை இவைகளை சமஎடையாகச் சூரணித்து அதில் இளவிளாங்காய்ரசத்தையும் பருத்திகாய் ரசத்தையும் தேனையுங் கலந்து காதில் வார்த்தாலும்அல்லது மேற்கூறிய தினுசுடன் வேம்பன் புங்கன் இவைகளைசேர்த்து அத்துடன்கடுகு எண்ணெயை கலந்து காய்ச்சி காதில் விட்டுவந்தாலும் கர்ணசிராவம்நிவர்த்தியாகும்.
கர்ணரோகத்திற்கு ராஷ்ணாதி சூரணம் :-சித்தரத்தை, சீந்தில் கொடி, ஆமணக்குவேர், தேவதாரு, சுக்கு இவைகளைச்சூரணித்து சமஎடையாகச் சேர்த்து சேவித்தால் வாதரோகம், கர்ணரோகம்,சிரோரோகம், நாடீவிரணம், பகந்தரம் முதலியன நிவர்த்தியாகும்.
கிருமிகர்ண சிகிச்சை :-கார்த்திகை கிழங்கு, கரிசாலை, திரி கடுகு இவைகளை அரைத்து துணியில் கட்டிகாதிற் பிழிந்தால் கர்ணத்திலிருக்கும் கிருமிகள், எறும்புகள்,தலையிருக்கும் பூச்சிகள் இவைகள் யாவும் விழுந்துவிடும்.
ஆம்பிராதி தயிலம் :-மா, நாவல், இலுப்பன், ஆலன் இவைகளின் துளிர்களை கற்கஞ்செய்து அத்துடன்நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி காதில்விட்டால் சீழ் வடிதல் நிற்கும்.
சதாவரீ தயிலம் :-தண்ணீர்விட்டான்கிழங்கு, அமுக்கிறாக்கிழங்கு, ஆமணக்குவிரை இவைகளை மோரில்அரைத்து கற்கஞ் செய்து அத்துடன் எண்ணெய், பால் கலந்து காய்ச்சி காதுக்கு வெளிபுறங்களில் லேபனஞ்செய்தால் காதுநோய் வீக்கம் முதலியவைநிவர்த்தியாகும்.
வில்வத் தயிலம் :-ஒரு வில்வப்பழத்திலுள்ள சதையை பால் விட்டரைத்து கற்கஞ்செய்து ஐந்துபலம்நல்லெண்ணெயுடன் சேர்த்து தைலபதமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டுஇத்தயிலத்தை காதில்விட்டு வருவதுடன் சிறிதளவு சிரசிலும் தினந்தோறும்தேய்த்துவர நெடுநாளாக காதில் சீழ்வடிதல் காது
விரணம் முதலியன குணமாகும்.
கர்ணரோக பத்தியங்கள் :-கோதுமை அரிசி, பச்சைபயறு, யவதானியம், நெய், கவுதாரி, மயில், மான், காடை,காட்டுகோழி, புடங்க்காய், முருங்கக்காய், கத்திரிக்காய், பாவல்கீரை சகலரசயனம், பிரம்மசரியம், பேசாமலிருக்குதல் இவைகள் பத்தியங்கள்.
அபத்தியங்கள் :- பல்பொம்பு, தலைஸ்நானம், திரிதல், கபகர அன்னம், ஜடான்னம், சொரிதல், பனி, சீதள்காற்று இவைகள் ஆகாது.

Similar topics
» தாஹ ரோக சிகிச்சைகள்
» சுர சிகிச்சைகள்
» நாசி ரோக சிகிச்சைகள்
» காமாலைக்கு சிகிச்சைகள்
» விக்கல் ரோக சிகிச்சைகள்
» சுர சிகிச்சைகள்
» நாசி ரோக சிகிச்சைகள்
» காமாலைக்கு சிகிச்சைகள்
» விக்கல் ரோக சிகிச்சைகள்
ஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: சிகிச்சைகளின் தொகுப்பு -KAAYA CHIKICHA- AUYRVEDIC GENERAL MEDICINE
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum