ஆயுர்வேத மருத்துவம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
என்னைப் பற்றி
எனது பெயர் Dr.A,MOHAMAD SALEEM(CURESURE).,BAMS.,MD(Ayu)
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» do you want solution for your lumbar disc problem?
by alshifaayushhospitaltheni Wed 17 Jul 2024, 7:46 pm

» do you want to increase your immunity
by alshifaayushhospitaltheni Sun 14 Jul 2024, 8:40 pm

» உங்கள் மன அழுத்தத்திற்கு தீர்வு தேடுகிறீர்களா?
by alshifaayushhospitaltheni Fri 12 Jul 2024, 9:08 pm

» ரத்தத்தை சுத்தம் செய்யும் அட்டைவிடல் சிகிச்சை
by alshifaayushhospitaltheni Thu 27 Jun 2024, 7:50 pm

» பல பிரச்சனைகளுக்கானா ஒரு தீர்வு நஸ்யம் என்னும் ஆயுர்வேத சிகிச்சை
by alshifaayushhospitaltheni Tue 25 Jun 2024, 12:55 pm

» மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்..
by Admin Tue 17 Jan 2023, 1:37 am

» முதுகுதண்டுவட நோய்களில் ஆயுஷ் ஒருங்கிணைந்த சிகிச்சை அளிப்பது ஒன்றே மிக சிறந்த தீர்வை தருவது ஏன் ?
by Admin Tue 17 Jan 2023, 1:02 am

» ஆராய்ச்சிகளில் சொன்னா சரியாக இருக்குமா ?In YouTube is it just say its's in research without evidence
by Admin Tue 17 Jan 2023, 12:39 am

» டாக்டர் நீங்க எதற்காக எனக்கு மருந்தை கொடுத்து இருக்கீங்க ?
by Admin Mon 16 Jan 2023, 10:31 pm

» கழுத்தை சொடக்கு போடலாமா ?
by Admin Mon 16 Jan 2023, 4:09 pm

» மயக்கவியல் மருத்துவத்தில் பாரம்பரிய மருத்துவங்கள். அக்குபஞ்சர் அனஸ்த்தீஸியா
by Admin Mon 16 Jan 2023, 3:44 pm

» எடையை குறைத்து விட்டு வாருங்கள் என்று உங்கள் மருத்துவர் சொல்கிறாரா ?
by Admin Mon 16 Jan 2023, 12:23 pm

» நோயாளியிடம் நலம் விசாரிக்கும் போது செய்ய வேண்டியவை..
by Admin Mon 16 Jan 2023, 12:02 pm

» ஹோமியோபதியும் ஆயுர்வேதமும் இணைந்து சிகிச்சை செய்வதால் ஏற்படும் பலன்கள்
by Admin Sun 15 Jan 2023, 9:22 pm

» வாத நோய் நரம்பியல் நோய்களில் ஆயுர்வேத அணுகு முறைகள்..
by Admin Sun 15 Jan 2023, 9:00 pm

» அதி வேக வலி நிவாரண அக்னி கர்ம சிகிச்சை
by Admin Sun 15 Jan 2023, 6:09 pm

» வாழைத்தண்டை தொடர்ந்து சாப்பிடலாமா?
by Admin Sun 15 Jan 2023, 5:50 pm

» போகி பண்டிகையில் நீங்கள் செய்ய வேண்டிய 3 விஷயங்கள்
by Admin Sun 15 Jan 2023, 5:18 pm

» பொங்கலின் பெருமை | மிழர் திருநாள் தைத்திங்கள் வாழ்த்துக்கள்
by Admin Sun 15 Jan 2023, 4:55 pm

» உங்களது மூத்திரத்தை அடக்க முடியவில்லையா அது Spinal பிரச்சினைகளாக கூட இருக்கலாம்
by Admin Sat 14 Jan 2023, 9:21 am

» இந்த உலர் பழங்கள் + nuts ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு கேடு
by Admin Sat 14 Jan 2023, 8:38 am

» உங்கள் தோலை பளபளப்பாகும் பஞ்ச கல்ப குளியல் பொடி
by Admin Thu 12 Jan 2023, 12:33 am

» நீங்கள் சமூக வலை தளத்தில் உங்களை யாருடன் ஒப்பிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள் ?
by Admin Wed 11 Jan 2023, 1:38 pm

» போர் மருத்துவம் - முதுகு தண்டுவட நோய்களுக்கு முழுமையான தீர்வு
by Admin Wed 11 Jan 2023, 12:52 pm

» சித்த மருத்துவத்தின் தனி சிறப்புகள் என்ன ? 6 வது தேசிய சித்த மருத்துவ தின வாழ்த்துக்கள்...
by Admin Wed 11 Jan 2023, 12:34 pm

Log in

I forgot my password

Related Posts Plugin for WordPress, Blogger...
Ads

    No ads available.


    பகந்தர ரோக சிகிச்சைகள்

    Go down

    பகந்தர ரோக சிகிச்சைகள் Empty பகந்தர ரோக சிகிச்சைகள்

    Post by Admin Tue 21 Sep 2010, 8:59 pm

    பகந்தரத்திற்கு கதிராதிகியாழம் :-கருங்காலிவேர், திரிபலை இவைகளை சமஎடையாய் கியாழம் வைத்து அதில் பசும்நெய்வாய்விளங்கம் சூரணம் சேர்த்து சாப்பிட்டால் பகந்தரம் குணமாகும்.

    ரசாஞ்சனாதிகியாழம் :- கஸ்தூரிமஞ்சள், மஞ்சள், மரமஞ்சள் சிவதை,மஞ்சிஷ்டி, வேப்பனிலை இவைகளை கற்கஞ்செய்து குடித்தால் நாடீ விரணம்பகந்தரம் முதலியன நிவர்த்தியாகும்.

    ரவிதாண்டவ ரசம் :- சுத்திசெய்த ரசம் 1-பாகம், சுத்திசெய்த கெந்தி2-பாகம் இவைகளை கல்வத்திலிட்டு கற்றாழைச்சாற்றினால் 3-நாள் அரைத்துஉருண்டைசெய்து மேற்கூறிய ரசகெந்திகளுக்கு சமஎடையாய்ச் செம்பை சேகரித்துடப்பிசெய்து அதில் அந்த உருண்டையை வைத்து சந்துகளை லேபனஞ் செய்துவாலுகாயந்த்திரத்
    தில் வைத்து அது நிறைய சாம்பல்போட்டு அடுப்பிலேற்றி தீவிரமான அக்கினியால்3-ஜாமங்கள் எரித்து ஆறிய பிறகு எடுத்துn கல்வத்திலிட்டு சூரணித்துஎலுமிச்சம்பழச்சாற்றினால் ஏழுமுறை அரைத்து ஏழுமுறை புடமிட்டு அதில் ஒருகுன்றுஎடை தேனுடனாவது அல்லது நெய்யுடனாவது அல்லது நிலபனங்கிழங்கு வெள்ளைப்
    பூண்டு இவைகளை காடியினால் அரைத்து இந்த அனுபானத்துடனாவது கொடுத்துவர பகந்தரம் குணமாகும்.

    இந்த ரசம் சாப்பிடும்போது மதுரமான ஆகாரங்கள் சாப்பிடவேண்டியது. பகல் நித்திரை, புணர்ச்சி, சீதள ஆகாரம் இவைகளை விடவேண்டியது.

    பிடால அஸ்தி லேபனம் :- திரிபலை கியாழத்தினால் காட்டுபூனை எலும்பை அரைத்து தடவினால் துஷ்டவிரணங்கள் பகந்தரம் குணமாகும்.

    குஷ்டாதி லேபனம் :- கோஷ்டம், சிவதை, எள்ளு, தந்திமூலம், திப்பிலி,இந்துப்பு, தேன், மஞ்சள், திரிபலை, துத்தம் இவை சமஎடையாய் அரைத்துதடவினால் பகந்தரம் குணமாகும்.

    திலாதி லேபனம் :- எள்ளு, சிவதைவேர், நாகதந்தி, மஞ்சிஷ்டி,இந்துப்பு இவைகளைச் சமஎடையாய் சூரணித்து நெய், தேன் இவைகளைவிட்டு அரைத்துலேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.

    வடபத்திராதி லேபனம் :- ஆலிலை, செங்கல், சுக்கு, சீந்தில் கொடி,வெள்ளைச்சாரணைவேர், இவைகளைச் சமஎடையாய் மைபோல் அரைத்து லேபனம் செய்தால்பகந்தரம் குணமாகும்.

    திலாதி லேபனம்
    :- எள்ளு, கடுக்காய், லோத்திரம், வேப்பன் இலை,மஞ்சள், வசம்பு, கோஷ்டம் இவைகளை சமஎடையாய் அரைத்து லேபனம் செய்தால்பகந்தரம், நாடீவிரணம், உபதம்சம், துஷ்ட விரணம் முதலியன குணமாகும்.

    யஷ்டியாதி லேபனம் :- அதிமதுரம், சீந்தில்கொடி, சுக்கு,ஆலிலை,வெள்ளைச்சாரணைவேர் இவைகளைச் சமஎடையாய்த் தண்ணீர் விட்டு அரைத்து தடவினால்பித்தபகந்தரம் குணமாகும்.

    சிலேஷ்ம பகந்தரத்திற்கு கான்சன்யாதி லேபனம் :- தேவ ாஞ்சனம்,மஞ்சள், மரமஞ்சள், சிவகரந்தை, மஞ்சிஷ்டி, தண்ணீர் விட்டான்கிழங்கு,கெந்தி, காட்டாத்திப்பூ, பஞ்சலவணம் இவைகளை சமஎடையாய் கல்வத்திலிட்டுகற்றாழை சாற்றினால் அரைத்து தடவினால் சிலேஷ்ம பகந்தரம் குணமாகு.

    கிருமியுக்தபகந்தரத்திற்கு விடங்காதி லேபனம் :- வாய் விளங்கம்,திரிபலை, திப்பிலி, இவைகளை சமஎடையாய் சூரணித்து தேன் எண்ணெய் கலந்துலேபனம் செய்தால் கிருமியுடன் நீர் ஒழுகிக்கொண்டிருக்கும் பகந்தரம்குணமாகும்.

    அபக்குவபகந்தர சிகிச்சை :- அபக்குவமான பகந்தர விரணங்களை புகைகள்,சுரங்கள், சுரதாரங்கள், முதலியவைகளினாலும் அட்டைகளினாலும் ரத்தத்தைஎடுத்து கார்த்திகை கிழங்கு, கரும் ஊமத்தை, விஷமுட்டி, இவைகளை அரைத்துஅல்லது எருகன் வேரை நொச்சி இலை சாற்றினால் அரைத்து தடவவேண்டியது.

    வாதபகந்தரவிரணங்களுக்கு விடங்காதி வடுகங்கள் :-வாய் விளங்கம்,வெட்பாலை, திப்பிலி இவைகளை சமஎடையாகச்சூரணித்து இந்தச் சூரணத்திற்குஇரண்டு பாகம் அதிகமாக குங்கிலிய சூரணம் இதற்குச் சமஎடை திரிபலை சூரணம்சேர்த்து நெய்யுடன் அரைத்து 1/4 பலம் வீதம் தேனுடன் சாப்பிட்டால்வாதபகந்தரம்
    குணமாகும்.

    பகந்தரத்திற்கு யோகராஜ குக்குலு :- திப்பிலி, மோடி, செவ்வியம்,சித்திரமூலம், சுக்கு, வட்டத்திருப்பி, வாய்விளங்கம், வெட்பாலை,கண்டுபாரங்கி, வசம்பு, வெள்ளைக்கடுகு, சீரகம், காடுமிளகு கடுகுரோகணி,பெருங்கடம்பைவேர், இவைகளை சமஎடையாகச்சூரணித்து இந்தச் சூரணத்திற்குஇரண்டுபாகம் அதிகமாக திரிபலை சூரணம் இவைகள் யாவற்றிற்கும் சமம்சுத்திசெய்த குங்கிலியம் கலந்து நெய்யுடன் அரைத்து தானிக்காய் அளவுமாத்திரைகள் செய்துநாலுமண்டலங்கள் காலை மாலை சாப்பிட்டுவந்தால் மூலம்வாதகுன்மம், பாண்டுரோகம், வீக்கம், அருசி, நாபி, சூலை, உதாவர்த்தம்,பிரமேகம், ரத்தவாதம், குஷ்டம், க்ஷயம், அபஸ்மாரம், இருத்ரோகம், கிறாணி,அக்கினிமந்தம், சுவாசம், இருமல், பகந்தரம் கீழத்தனம், சுக்கிலதோஷம்,யோஇதோஷம், சகலதோஷம், இவைகள்யாவும் நிவர்த்தியாகும்.

    நிஷாதைலம் :- மஞ்சள், எருக்கம்பால், இந்துப்பு, சித்திரமூலம்,கொள்ளுக்காவேளை, மஞ்சிஷ்டி, வெட்பாலை இவைகளினால் தயார் செய்த தைலத்தைலேபனம் செய்தால் பகந்தரம் குணமாகும்.

    தார்விகவர்த்தி :- சதுரக்கள்ளி, எருக்கன் பால், இவைகளால் மரமஞ்சளைரைத்து வஸ்திரத்திற்கு தடவி வத்திசெய்து பகந்தரம்

    நாடீவிரணங்களில் வைத்தால் நாடீவிரணம் பகந்தரம் இவைகள் குணமாகும்.

    நிசா வர்த்தி :- கடுகு, மஞ்சள், இந்துப்பு, குங்கிலியம் இவைகளைதேனுடன் அரைத்து வஸ்திரத்திற்கு தடவி நாடீவிரணம் பகந்த ரத்தில் வைத்தால்நாடீவிரணம் பகந்தரம் இவைகள் நிவர்த்தியாகும்.

    பகந்தரத்திற்கு புகை :- நரிமலத்தைப் பொடித்து கரிநெருப்பினிலிட்டுஅதினின்று எழும் புகையை பகந்திர விரணங்களில் தாக்கும்படிச் செய்துவரவிரணம் விரைவில் ஆறும்.

    பகந்தர விரணத்திற்கு பத்தியம் :- பகந்தரம் பக்குவமாகாம லிருந்தால் சோதனம், லேதனம், லங்கனம், ரத்தமோஷம் இவைகளைச் செய்யவேண்டியது.

    பக்குவமான விரணத்தில் சஸ்திரகருமம், க்ஷ¡ராக்கினி கருமங்களைச் செய்யவேண்டியது.

    மேலும் அரிசி, பச்சைபயறு கூட்டு, கஞ்சி, மாமிசரசம், புடலங்காய்,முருங்கைகாய், பொடுதலை, இளமுள்ளங்கி, எள் எண்ணெய், கடுகு எண்ணெய்,துவர்ப்பான பதார்த்தங்கள், நெய், தேன் இவைகள் ஆகும்.

    அபத்தியங்கள் :- புணர்ச்சி, சண்டை, யானைஏற்றம், குதிரை ஏற்றம், குருத்துவமான பதார்த்தங்கள் இவைகளை பகந்தரரோகி நிவர்த்திக்க வேண்டியது.

    Admin
    Admin
    Admin

    Posts : 1721
    Points : 4835
    Reputation : 11
    Join date : 15/09/2010

    https://ayurvedamaruthuvam.forumta.net

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum