என்னைப் பற்றி
எனது பெயர் Dr.curesure .,BAMS.,
M.Sc(Psy).,M.Sc(Yoga).,M.Sc(Varmam).,
MBA(Hos.Mgt).,PG.Dip.Nutrition & Dietics.,
PG.Dip.Acupuncture.,
PG.Dip.Panchakarma.,
PGDGC.,PGDHM.,PGDHC.,FCLR.,
Latest topics
» HOMEOPATHY FOR PRE_MENSTURAL SYMPTOM
by Dr.G.Vardini Fri 17 Mar 2017, 1:33 pm

» Homeopathy and Occupational diseases
by Dr.G.Vardini Mon 13 Mar 2017, 1:55 pm

» Yes!!! Homeopathy can change your Habit.
by Dr.G.Vardini Sat 11 Mar 2017, 12:22 pm

» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
by srikanth Sat 25 Jun 2016, 3:56 pm

» ஆண்குறி பருக்க ?
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:23 pm

» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by PRADEEP D Thu 23 Jun 2016, 4:14 pm

» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:25 am

» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:23 am

» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:22 am

» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:20 am

» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:19 am

» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:18 am

» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:17 am

» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:15 am

» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:13 am

» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:12 am

» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:11 am

» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:08 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:06 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:05 am

» தலை அரிப்பு -வழுக்கை விழ ? ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:03 am

» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 3:01 am

» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:59 am

» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:57 am

» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்
by Admin Fri 03 Jun 2016, 2:54 am

Tamil Blogs & Sites
Tamil 10 top sites [www.tamil10 .com ] TamilTopsiteUlavan
Most Viewed Topics
ஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்
ஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2
போகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-
Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு
வாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி ?
தாம்பத்திய இரகசியங்கள் தெரிஞ்சிக்கணுமா?
ஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..
ஆண்குறி பருக்க ?
நீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்
ஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )

Log in

I forgot my password

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை
சொடுக்குங்கள்

(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)
Related Posts Plugin for WordPress, Blogger...

கர்ப்ப ரோக நிதானம் & சிகிச்சைகள்

Go down

கர்ப்ப ரோக நிதானம் & சிகிச்சைகள்  Empty கர்ப்ப ரோக நிதானம் & சிகிச்சைகள்

Post by Admin on Sun 03 Oct 2010, 5:50 pm

கருப்பரோகங்கள்

அழிகருப்பலக்ஷணம் :- வயிற்றில் உருவம் ஏற்படாத இளங்கருவாய் இருக்கும்போது விலாகீழ்வயிறு மேல்வயிறு பிட்டம் ஆகிய இவ்விடங்களில் அதிக உக்கிரமான வேதனையும் மார்பு நோயும், முகவெளுப்பும், நாபியின் கீழ் உபத்திரவமும், ஆபாசமும் வயிற்றில் வாளால் அறுப்பது போல் யிருத்தலும் உண்டானால் கருப்பங்கரைந்து விழுமென்றரியவும்.

கருப்பபேதம் :- கருப்பமானது உபவிஷ்டககருப்பம், நாகோ தரகருப்பம், லீனாக்கிய கருப்பம் என மூன்று வகைப்படும்.

1. உபவிஷ்டககருப்பலக்ஷணம் :- சில ஸ்திரீகலுக்கு கருப்பம் தரித்தும், மாதா மாதம் ருது காலத்தில் சோணிதம் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அப்படி வெளிப்படுவதால் அச்சிசுவுக்கு கெடுதியிராது. ஆனால் சிசு திடகாத்திரமாய் யில்லாமல் மிகவும் இளைத்து மரப்பாவையை யொத்து தாயாருக்கும் தெரியாமல் வயிற்றுக்குள்
அசைவதாயிருக்கும். வயிறு பருக்கமாட்டாது. இதனை உபவிஷ்டம் தங்கு பிண்டம் என்வுங் கூறுவர்.

2. நாகோதரகருப்பலக்ஷணம் :- துக்கம், உபவாசம், உஷ்ண திரவிய போஜனம், அல்குலில் மாறாமல் ரத்தம் வடிதல், வாதாதிக்கம் இவைகளில் கருப்பமானது விருத்திஅடையாமலிருப்பதுமன்றி வயிற்றில் ஒவ்வொரு வேளை கொஞ்சம் அதிரலை யுண்டாக்கும். அந்தமாதருக்கு சில நாள் வயிறு பருத்தது போலிருந்தாலும் பின்பு வாடும். (நாகம் என்பது பாம்பு, உதரம் என்பது வயிறு).

3. லீனாக்கிய கருப்பலக்ஷணம் :- இது முற்கூறிய கருப்பத்தைப் போலவே யிருந்தாலும், அசைவு மாத்திரம் இல்லாமல் மூன்று வருஷத்திற்கு மேல் பிரயாசத்தோடு சிசு பிறக்கும். அல்லது மறைந்தாலும் மறையும். இது வயிற்றிற்குள் அந்தரங்கமாக யிருக்கும் காரணத்தால் வீநாக்கிய கருப்பம் எனப் பேர்பெற்றது. இதனை மும்மாங்காய் எனவும் வழங்கி வருகிறார்கள்.

கருப்பகாலத்தில் ஆகாதவஸ்துக்களைப் புசித்தலினாலும், சிற்சில ரோகங்களினாலும் காரணம் இல்லாமல் ருதுவாவது, சூலை யாவது உதாவர்த்தவாயுவானது காணுவதுண்டு. இதற்கு உடனே சிகிச்சை செய்யவேண்டும். அப்படிக்கு செய்யாவிடில் கருப்பம் சிதைவதுடன் தாய்க்கும் அபாயம் நேரிடுமென்றும் அறிக.

கருப்பம் மரிக்கும் லக்ஷணம் :- கருப்ப ஸ்திரீகளுக்கு மல மூத்திரபந்தம், வளையல் ஒட்டைப்போல் தேகங்கறுத்தல், வாயில் அதிக துர்கந்தம் வீசுதல், கையும் காலும் மிகவும் கறுத்தல், தலை யிலும் முகத்திலும் வீக்கம், அடிக்கடி நெட்டுயிருப்பு என்னுங்குணங்களை யுண்டாக்கில் சிசு மரிக்குமென்றறிக. இதனைக் கருப்ப வியாப்தி என்றுஞ் சொல்வர்.

அகமரித்த கருப்ப லக்ஷணம் :- தெய்வச்செயல் திரிதோஷ விகற்பம், அபத்தியம் ஆகிய இவைகளால் வயிற்றுக்குள் சிசு இறக்கும். இதனால் தொப்புளைச் சுற்றிலுமாவது வயிறு முற்றிலுமாவது தேக முற்றிலுமாவது சீதளம், வயிறு கெட்டியாக உப்புதல்,அதிசங்கடம், பிண்டம் அசையாதிருத்தல், மிகுந்த தாகம், ஸ்தனம்தளால், பிரயாசத்தின்மேல் சுவாசம் வருதல். இளைப்பு, எந்த வஸ்துவிலும் அருவருப்பு. துர்க்கந்தத்துடன் குழம்பாக மூத்திரம்இறங்குதல், கண்வட்டமிட்டுச்சுழலல், எந்தபக்கந் திரும்பினாலும் அந்த பக்கம் பிண்டம் கனமாகத்தோற்றல், பிரமை, மரத்தல், வெந்நீர் ஆவி பிடித்த கையை வயிற்றின்மேல் வைக்கில் அதிரல் இல்லாதிருத்தல் என்னுங் குணங்களுண்டாயின் சிசு மறித்ததென்றறியவும், அப்போது தாயாருக்குச் சேதமில்லாமல் அந்த சிசுவைக்கைப்பழக்கத்தினாலாவது ஆயுதப்பிரயோகத்தினாலாவது மருந்தினா லாவது நஞ்சுக்கொடியுடன் சீக்கிரத்தில் வெளிப்படுத்துதல் வேண்டும்.

தருணப் பிரசவ லக்ஷணம் :- வயிற்றில் கருப்பம் நிறைந்து இன்றைக்கோ நாளைக்கோ பிரசவம் என்றிருக்கும் காலத்தில் ஆயாசம், வயிறு தளரல், கண்கள் குழிவிழுதல், பலவித இளைப்பு, கீழ்வயிறு கனத்தல், அரோசகம், வாய்நீருதல், அடிக்கடி நீரிறங்கல்,தொடை வயிறு முதுகு இடுப்பு மார்புகீழ்வயிறு இரு கவுட்டி, அபா
னம் என்னும் இவ்விடங்களில் நோய், அல்குல் விரிதல், அதிரல்,வேதனை, ஒருவேளை ஊசியால் குத்துவதுப்போல் குத்தல், சலம் பெருகுதல், வயிற்றில் மிகுநோய் முதலிய குணங்கள் கண்டு சலோதயமும் உண்டாகும். இதுவே தருணப்பிரசவமாம்.

மல்கலாக்கிய சூலை லக்ஷணம் :- பிரசவித்தவுடனே ஸ்திரீகளுக்கு அழுக்கின் குற்றத்தால் மார்பிலாவது, சிரசிலாவது, கீழ் வயிற்றிலாவது சகிக்ககூடாத குத்தலும் நோயும் உண்டாகும். இதனை மண்குத்து நோய்யென்று கூறுவர்.

அசாத்தியக்கருப்பக்குறிகள் :- சிசு வெளிப்படாதிருத்தல், அல்குல் தடித்துக் கொண்டு கொஞ்சம் வெளியில் நோய்போலிருத்தல், மேல்சுவாசம் துர்க்கந்த ஏப்பம், தேகஞ்சில்லிடல் என்னும் குணங்களுண்டாகில் சிகிச்சை செய்வதில் பயனில்லை. வஸ்த்திஸ்தானக்கருப்பத்தினால் சிக்கிக்கொண்ட கருப்பத்தினால் தாயிறந்தும் வயிறு மாத்திரம் ஆவிக்கு அதிருமாகில் அவ்வயிற்றை உபாயகமாக கீறியுஞ்சிசுவை எடுத்துக் கொண்டு வளர்க்கவும்.

மூடவிஷ்டம்ப கருப்பங்களின் லக்ஷணம் :- மேடு பள்ள ஸ்தானபடுக்கை முதலிய குணங்களினாலும் அபாணவாயுவின் விருணத்தினாலும், பிரசவகாலத்தில் தாறுமாறாக புரண்ட விகற்பத்தினாலும் வயிற்றிலிருக்கும் சிசுவினது சிரசும் கையும், காலும் ஸ்தானம் தப்பி ஸ்தானத்தில் சிக்கிக்கொள்ளும். இதுவே மூடகருப்பம். யோனிஸ்தானத்தில் ஒரு காலும் குதஸ்தானத்தில் ஒருகாலும்மாட்டிக்கொண்டு ஸ்தம்பித்து பிரசவமுகம் காணாதிருக்கும். இதுவே விஷ்டம்ப கருப்பம். இதானால் அந்த ஸ்திரீக்கு இரண்டு மூன்று நாள் பிரசவ வேதனை காண்பதும் சிசுவை வெளிப்படாமல் இருக்க அவ்வேதனை நின்று போவதுமுண்டு. அந்தத்தருணத்தில்உயிர்த்திருக்கின்ற சிசுவை கைப்பழக்கத்தினாலும் அயுதங்களினாலும் உபாயமாக வெளிப்படுதல் வேண்டும். அதைவிட்டு மரித்ததென நினைத்து அச்சிசுவை சோதிப்பார்களாகில், அத்துடன்
தாய்க்கும் சேதமுண்டாகும். இக்கருப்பங்கள் உள்ளில் உபத்திரவம் செய்வதும் ஸ்தம்பிப்பதுமாக இருக்கும்.

பிரசவித்த மூன்று விதமான ஸ்திரீகளுக்கு ஆமாசய ஸ்தானத்தில்ருட்சை காணுவதுண்டு.

எந்த ஸ்திரீகளுக்கு கர்ப்பமடைந்த மாதமுதல் ஏழுமாதம் வரையிலும், இளநீர் வழுக்கையின் தன்மையையொத்து வளருகின்றஇளங்கருவானது வாதாதிதோஷங்களினாலும் தகாத நடத்தைகளினாலும் ஒரு வேளை கரைந்தும் கரையாமலும் விழும். அப்படி விழவொட்டாமல் மாதந்தோறும் தகுந்த சிகிச்சைகள் செய்தல் வேண்டும்.

சில ஸ்திரீகளுக்கு கருப்பஸ்தானத்தில் வாதாதிக்கத்தால் கட்டுப்பட்ட ரத்தமானது காரசார உஸ்ணமுள்ள வஸ்த்துகளினால்கரைந்து விழுவதுமுண்டு. அதைசிலர் பிண்டமென நினைத்து பைசாசு அரைத்ததினால் கரைந்து விழுந்ததென வீண்தூறு செய்வார்கள்.

வஷ்டி ரோக லக்ஷணம் :- பிரவித்து சரீரமுழுதும் பச்சைப்புண்போலிருக்கின்ற ஸ்திரீகளுக்கு எந்நேரமும் உடம்பு அதிரும்படி யான மிகுபோகத்தினாலும், பதினான்கு வேகத்தையடக்கலினாலும்,கருப்பகால அபத்தியத்தினாலும், கருப்பஸ்தானத்தில் இருக்கிற வாயுவானது அதுகரித்து, இடுப்பு பிட்டம், திரிகஸ்தானம், கவுட்டி,யோனி, கீழ்வயிறு தொப்புள், முலைக்காம்புக்குக் கீழ்பாகம் ஆகிய இவ்விடங்களில் சகிக்கக்கூடாத பிரசவ நோயை பார்க்கிலும் அதிக நோயை உண்டாக்கும். இதை சிற்சிலர் ரத்தகுன்மகட்டி அஷ்டிலிகா வாதகட்டியென்றும் சொல்லுவார்கள். அது இவ்விரண்டும் அல்ல. சையோகத்தினால் உண்டான வாதகட்டி யென்று சொல்லவேண்டியது. ஏனெனில் இது பக்கங்களில் குத்தலையும் நோயையும் தபிக்கலையும் உண்டாக்கச் செய்வதுமன்றி, தான் அநுசரித்த பக்கத்தில் மிகுந்த வேதனையைக் கொடுத்து சமுத்திரதவளையைப்போல் கருப்பமுகத்தை அடைத்துக்கொள்ளும். முற்கூறிய கட்டிகளேயாயின், அவைகட்கு எளிதில் கரைந்துவிழுகின்ற தன்மை இராது. இதுவோவென்றால் மாதாந்த ருதுகாலத்தில் அதிகரித்த வாயுவின் வேகத்தால் அடிப்பட்டு அல்குல்வழியாகப்பட்டை கஷாயத்தைப்போலும், மாமிசங்கலந்த சலத்தைப்போலுங்கரைந்து ஒழுகுவதுமன்றி தெளிந்தும், குழம்பியும், கறுத்தும், குறைந்தும், அதிகரித்தும் உதிரமாக பெருகும்.

கருப்ப சலனம் :- கருப்ப சலனம் என்பது கருப்பத்தின் அசைவைக் குறிக்கும். இது பெரும்பாலும் கருப்பையின் பலயீனம்முதலிய காரணங்களினால் ஏற்படும். சாதாரணமாக கருப்ப ஸ்திரீ கட்கு முதல் மாதம் முதல் ஒன்பதாம் மாதம் வரையில் இச்சலனம் ஏற்படலாம். முதல் மூன்று அல்லது ஆறுமாதங்கள் வரையில் இந்த கருப்பசலனத்திற்கு தகுந்த சிகிச்சை செய்யாவிடில் இதுகரு அழிவிற்கு ஏதுவாகுமாகையால் அப்போதைக்கப்போது தகுந்த சிகிச்சைகளைச் செய்துருவது நன்று.

முதல்மாத கருப்ப சலன சிகிச்சை :- முதல் மாதத்தில் கருப்ப சலனமுண்டானால் திராட்சை, அதிமதுரம், சந்தனம், ரத்தசந்தனம்இவைகளை அரைத்து பசும்பாலில் கலந்து குடித்தால் கருப்ப சலனம் நீங்கி கருப்பம் பலப்பட்டு நிலைத்திருக்கும்.

இரண்டாவது மாத சலன சிகிச்சை :- இரண்டாவது மாதம் கர்ப்பம் அசைந்தால் தாமரைத்தண்டு நாககேசரங்கள் இவைகளை சலத்தினால் அரைத்து பாலில் கலந்து கொடுத்துவர கருப்பம்நிலைக்கும்.

மூன்றாம் மாத சலன சிகிச்சை :- மூன்றாவது மாதத்தில் சலனமுண்டானால் நாககேசரங்கள் பாலில் அரைத்து பாலில் கலந்து குடித்தால் கர்ப்பம் நிலைத்திருக்கும். அல்லது தாமரைத்தண்டு, சந்தனம், வெட்டி வேர் தாமரைப்பூ, இவைகளை சலம் விட்டு அரைத்து பசும் பாலில்கலந்து குடித்தால் கர்ப்பசலனமுண்டாகாமல் நிலைத்துருக்
கும். கர்ப்பசூலையும் நீங்கும்.

நாலாவது மாத சலன சிகிச்சை :- நாலாவது மாதம் கருப்ப சலனத்தினால் தாகம், சூலை, தாபம், காய்ச்சல் இவைகள் உண்டானால் வாழைக்கிழங்கு, கரும் அல்லி, வெட்டி வேர், இவைகளை சம எடையாக பால் விட்டு அரைத்து குடித்தால் கர்ப்பம் நிலைக்கும்.சுரம் முதலியது நீங்கும்.

ஐந்தாவது மாத சலன சிகிச்சை :- ஐந்தாவது மாதம் ரத்தத்தில் கருப்ப சலனமும், சூலையும் உண்டானால் மாதுளம்கொழுந்து, சந்தணம் இவைகளை அரைத்து தயிரில் கலந்து தேன் விட்டு குடித்தால் கருப்பசலனம் சூலை இவைகள் நீங்கும்.

ஆறாவது மாத சலன சிகிச்சை :- ஆறாவது மாதம் கருப்ப சலன மாகில் காவிக்கல் பசுஞ்சாணிபற்பம், கறுப்புமணல் இவைகளை கியாழம் வைத்து ஆறிய பிறகு பால், சந்தணம், சர்க்கரை இவைகள் கலந்து குடித்தால் கருப்ப சலனம் நீங்கும்.

ஏழாவது மாத சலன சிகிச்சை :- ஏழாவது மாதத்தில் கருப்ப சலனம் உண்டாகில் வெட்டிவேர், ஆனை ரிஞ்சல், கோரைக்கிழங்கு, மண்சிருஷ்டி, நாககேசரங்கள், தாமரைக்கிழங்கு, இவைகளை கியாழம் வைத்து சர்க்கரை கலந்து குடித்தால் கருப்பம் நிலைப்பெரும்.

எட்டாவது மாத சலன சிகிச்சை :- எட்டாவது மாதத்தில் கருப்பசலனம் உண்டாகில் லோதிரப்பட்டை, திப்பிலி இவைகளை சூரணித்து தேன் விட்டு கலந்து கொடுக்க கருப்பம் நிலைப்பெரும்.

முதல் மாதம் முதல் கர்ப்ப சலனாதிகளில் மேல் கூறிய சிகிச்சைகள் செய்தால் ஒன்பதாவது மாதத்தில் சுசுமாக பிரசவமாகும். இந்த பிரகாரம் கர்ப்பபோஷைனையை செய்ய வேண்டியது.

கர்ப்ப பதனம்(கரு அழிவு) :- அடிபடுதல், பயம், மிகுபேதி உஷ்ணவீரிய உணவு முதலிய காரணங்களினாலும், கருப்பையின் பலயீனத்தினாலும் கடினமான வலை முதலியவைகளினாலும் கருவானத
சிதைந்து வெளியாகும். இதையே கருஅழிவு அல்லது கர்ப்பபதனம்என்பர். இது முதல் மாதத்திலிருந்து ஆறுமாதம் வரையில் ஏற்படும்.

முதல் மாதம் முதல் நாலு மாதம் வரையிலும் கரு அழிவு ஏற்படுமாகில் அது திரவரூபமாக இருப்பதால் அதனை கருப்பச் சிராவம் என்றும், ஐந்து ஆறாவது மாதங்களில் உண்டாகும் கரு அழிவின் பிண்டப்பொருட்கள் காணப்படுவதால் அதனை கருப்ப பாதமென்றும் கூறப்படும்.

அச்சமயத்தி லெரிச்சல், அடிவயிறு, பிட்டம், இடுப்பு, இவை களில் சூலை, இரத்தப்போக்கு, வாய்வு, மூத்திரபந்தம் இவைகளை உண்டாயிருக்கும்.

பரிகாரம் :- அதிமதுரம், நன்னாரிவேர், தண்ணீர்விட்டான் கிழங்கு, தாமரைப்பூ, நிலப்பூசணி கிழங்கு, நெருஞ்சில், திராட்சை, கோரைக்கிழங்கு இவைகளை வகைக்குக் கால்பலம் வீதம் சூரணித்தோ அல்லது குடிநீரிட்டோ சர்க்கரையும் பாலும் சேர்த்து அருந்தி வர கருப்பகாலத்தில் ஏற்படும் சூலை முதலியன நீங்கி கருப்பம் நிலைக்கும்.

வெட்டிவேர், அதிவிடயம், கோரைக்கிழங்கு, இலவம்பட்டை,வெட்பாலைவிரை இவைகளை முறைப்படி கியாழமிட்டு கொடுக்ககருப்பிணிகட்கு காணும் கர்ப்பசலனம், பெரும்பாடு, கருப்பசூலை முதலியன குணமாகும்.

அந்தரத்தாமரை, காட்டாத்திப்பூ, கருஅல்லி, அதிமதுரம், லோத்திரப்பட்டை இவைகளைக் கியாழமிட்டு ஸ்திரீயை மாரளவு ஜலத்தில் உட்காரவைத்து மேற்படி கியாழத்தை அருந்தச் செய்யகெர்ப்ப பாதம் நிவர்த்தியாகும்.

மூடகர்ப்பம் :- கர்ப்பிணிகளுக்கு கருப்பாசயத்திலுள்ள சிசு வாதாதி தோஷத்தால் இயக்கமுற்று நேகவிதங்களாக யோனி துவாரத்தை அடைக்கும். இதுவே மூடகர்ப்ப மெனப்படும். இது முக்கியமாய் எட்டுவகைப்படும். அவையாவன :-

அவைகளிலொன்று தலையில் யோனிதுவாரத்தை தடுக்கும்.மற்றொன்று வயிற்றினால் யோனிதுவாரத்தை தடுக்கும். சரீரத்தள சேர்க்கையினால் உண்டான தோஷத்தை யுடையதாய் யோனிதுவாரத்தை தடுக்கும். மற்றொன்று ஒரு புஜத்தினால் அல்லது இருபுஜத்தினால் குறுக்கேநின்று யோனிதுவாரத்தை தடுக்கும். கீழ்முகமாக மற்றொன்று யோனிதுவாரத்தை தடுக்கும். மற்றொன்று இட வலது பாரிசங்களினால் குறுக்காக யோனிதுவாரத்தை தடுக்கும்.

கர்ப்பஸ்தானமான சிசு யோனியை தடுக்கும்விதங்கள் சங்கீலமென்றும், பிரதிகுலமென்றும், வரிகமென்றும், பீஜமென்றும், நான்கு விதங்களாக யிருக்கும். மேற்புறமாக கைகள் பாதங்கள் சிரசு இவைகளை ஆணியைப்போல் யோனிதுவாரத்தை தடுப்பது சங்கீலமென்றும், குதிரை முதலியவைகளின் குளம்புகளைப்போல்
தடுப்பது பிரதிகுலமென்றும், கதவு தாழ்ப்பாளைப்போல் தடுப்பது வரிக என்றும், இரண்டு புஜங்கள் தலை இவைகளினால் தடுப்பது பீஜமென்றும் பெயர்.

பரிகர்ப்ப லக்ஷணம் :- பிரசவ காலத்தில் கர்ப்பம் கோபுரத் துவாரத்தின் கதவு தாழ்ப்பாளைப்போல் பிண்டம் குறுக்காக திருப்பியிருந்தால் அதை பரிகர்ப்பமென்றும் சொல்லுவார்கள். இது அசாத்தியம்.

சுகப்பிரசவ சிகிச்சை :- கர்ப்பிணி பிரசவத்திற்கு காலதாமதம் ஆனால் யோனித்துவாரத்தில் கிரந்தி தகரத்தை தூபம் போட்டாலும் அல்லது பொடுதலை வேரையாவது அல்லது ஆற்று துமட்டி வேராவது நூலினால் கைகளுக்கும் கால்களுக்கும் ர¨க்ஷ பந்தனஞ்செய்தாலும் சுகமாக பிரசவமாகும்.

வேறு :- திப்பிலி, வசம்பு, இவைகளை ஜலத்தி லரைத்து அத்துடன் ஆமணக்கெண்ணெய் கலந்து கர்ப்பிணியின் நாபியில் தடவி னால் எந்த உபத்திரவத்தினால் தாமதம் உண்டானாலும் அவைகள் நீங்கிசுகபிரசவமாகும்.

வேறு :- கொடி மாதுளம் வேர், அதிமதூரம் இவைகளை சூரணித்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் சுகமாகபிரசவமாகும்.

கர்போத்தாரணை :- கர்பத்தில் சிசு மரணமடைந்திருந்தால் அப்பொழுது சஸ்திரசாஸ்திரங்களை அறிந்து வைத்தியன் தனது அஸ்தங்களுக்கு நெய்யை தடவிக்கொண்டு கர்பிணியின் யோனித்துவாரமாக சஸ்திரத்தை பிரவேசிக்கச் செய்து(கர்ப்பத்திலிருக்கும் சிசு உயிருடன் இருந்தால் சஸ்திரங்களால் சேதிக்கக்கூடாது, அப்படி
சேதித்தால் சிசு மரணமடைவதுமன்றி தாயாருக்கும் ஆபத்துண்டாகும்) வெகு ஜாக்கிரதையாய் எவருக்கும் ஆபத்துண்டாகாத வண்ணம் சிசுவை வெளிப்படுத்த முயலவேண்டும். ஒரு வேளை சிசு மரணமடைந்திருந்தால்
சஸ்திரத்தினால் சிசுவை சேதித்தெடுக்க வேண்டியது அப்படி செய்யாமல் கொஞ்சநேரம் சும்மாயிருந்தால் மரணமடைந்த சிசு தாயாரையும் கொன்றுவிடும்.

மரணமடைந்த சிசுவின் எந்தெந்த அங்கங்கள் யோனித்துவாரத்தை தடங்கல் செய்திருக்கின்றதோ அந்தந்த அங்கத்தைச் சேதித்து வெளிக்கு எடுத்து கர்ப்பிணியை காப்பாற்ற வேண்டியது.

பிரசவித்தவளுக்கு மாய்கை விழாமல் போனால் அதனால் ஆகும் உபத்திரவம் :- கர்பிணிபிரசவிக்குங்காலத்தில் வயிற்றிலிருந்து மாய்கை வெளியாகாமல் போனால் அது வயிற்றில் சூலை அக்கினிமாந்தம்இவைகளை உண்டாக்கும்.

மாய்கை வெளியாக :- பேய்ச்சுரை, கோரைக்கிழங்கு வெள்ளை கடுகு, சூரணித்து கடுகு எண்ணெய்யில் கலந்து யோனித்துவாரத்தில் தடவ வெளியாகும்.

வேறு :- பொடுதலைவேரை சலத்தில் சேர்த்து சூரணித்து செய்து கர்ப்பிணியின் பாதத்திற்கும் கைகளுக்கும் தடவினால்மாய்கை வெளியில் வரும்.

வேறு :- கைவிரல்களில் நகங்களை எடுத்து சேர்த்து கழுவித்தைலத்தை தடவிக்கொண்டு பிரசவித்த யொனியில்
மெள்ள நுழைப்பித்து அந்த மாய்கையை தேய்க்க வேண்டியது.

யோனிகாயத்திற்கு சிகிச்சை :- கடுக்காய் லோத்திரப்பட்டை இவைகளை நீர் விட்டரைத்து யோனிக்கு லேபனஞ்செய் தால் பிரசவ காலத்தில் உண்டான காயம் நீங்கும்.

யோனிசங்குதசிகிச்சை :- முருக்கன்விரை, அத்திப்பழம்இவைகளை அரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து யோனிக்கு லேபனஞ்செய்தால் பிரசவ காலத்தில் உண்டான யோனி சுருங்கும்.

மக்கல்லநிதானம் :- மாது பிரசவித்தக்ஷணமே யோனியைசெவ்வையாக பிசைந்து அந்த யோனியில் வெளிக்காற்று பிரவேசிக் காமலிருக்கும்படி துணியால் இருக்கி கட்டி பாதுகாக்கவேண்டியது.
அப்படி செய்யாமற் போனால் யோனியில் வாயுவானது குபிதமாகிஒழுகும். ரத்தத்தை நிரோதித்து கர்பிணியின் ஹிருதயம், தலை அடிவயிறு இவைகளில் மக்கல்லமென்ற சூலையை உண்டாக்கும்.

மக்கல்ல சிகிச்சை :- மக்கல்லவாயு உண்டானால் யாவக்ஷ¡ரத்தை சூரணித்து வெந்நீரூடனாவது நெய்யுடனாவது பானஞ் செய்தாய் அது நிவர்த்தியாகும்.

வேறு :- திப்பிலி, மோடி, மிளகு, ஆனைத்திப்பிலி, சுக்கு, சித்திரமூலம், செவ்வியம், காட்டு மிளகு, இலவங்கப்பட்டை, ஒமம், கடுகு, சுட்டப்பெருங்காயம், கண்டுபாரங்கி, வெட்பாலை சுரை சீரகம், மலைவேப்பிலை, பெருங்குரும்பை, அதிவிடயம், கடுகு ரோகணி, வாய்விளங்கம் இவைகளை கியாழம் வைத்து உப்பு கலந்து சாப்பிட்டால், கபரோகம், வாதரோகம், குன்மம், சூலை, சுரம் மக்கல்லசூலை, இவைகளை நிவர்த்திப்பதுடன் அக்கினி தீபனம்சீரணம் இவைகளை உண்டு பண்ணும்.

வேறு :- சுக்கு, திப்பிலி, மிளகு, தால்கின்னி, இலவங்கப்பத்திரி, சிறு நாகப்பூ, ஏலக்காய், கொத்தமல்லி, இவைகளை சூரணித்து பழயவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் மக்கல்லசூலை நிவர்த்தியாகும்.

வேறு :- சுட்டப்பெருங்காயத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் மக்கல்லசூலை நிவர்த்தியாகும்.

கருப்பம் தரிக்க :- கர்ப்பமுண்டாகாத மாது, கொடி மாதுளம் விரை, ஆமணக்குவிரை இவைகளை அரைத்து நெய்யுடன் கலந்து சாப்பிட்டால் கர்ப்பத்தை யுண்டாவாள். கர்ப்பிணி எள் எண்ணை, பசும்பால், சர்க்கரை, தயிர், நெய், இவைகளை ஒரு பாண்டத்தில் ஒன்றாய்கலந்து கையினால் ஒன்றாக சேரும்படி செய்து அத்துடன் திப்பிலி சூரணம் போட்டு சாப்பிட்டால் புருஷப்பிரஜை யுண்டாகும். மாது ருது ஸ்தானம் செய்தநாளில் ஒருகொடி மாதுளம் பழத்தின் விரைகள் முழுதும் சம்பூர்ணமாக பாலால் அரைத்து குடித்தால் ஆண் சிசு பிறக்கும். ருது ஸ்தானம் செய்த நாளில் அமுக்கிறாக்கிழங்கை கியாழம் வைத்து அத்துடன் பால் கலந்து சாப்பிட்டால் கருதரிக்கும்.

கருப்பநிவாரணம் :- ருது காலத்தில் திப்பிலி வாய்விளங்கம் வெங்காரம் இவைகளை சமமாக சூரணித்து பாலில் கலந்து சாப்பிட்டால் என்றைக்கும் கருப்பம் தரிக்கமாட்டாள்.

வேறு :- ருது காலத்தில் சப்பாத்திப்பூவை நீச்ச சலத்தில் அரைத்து மூன்று நாள் குடித்தால் அல்லது ஒரு பிடி பழய வெல்லம் சாப்பிட்டாலும் கருப்பம் தரிக்காள்.

வேறு :- கருப்ப இச்சை இல்லாத மாது இந்துப்பூ துண்டுகளை எண்ணெய்யில் நனைத்து யோனிமத்தியில் வைத்துக்கொண்டு புருஷ சம்போகம் செய்தால் கரு தரிக்காது.

வேறு :- ருது ஸ்தானம் செய்த முதல் மூன்று நாள் வரையிலும் சிருகீரை வேரை அரிசி, கழுநீரால் அரைத்து குடித்து வந்தால் மலடியாவாள்.

சூதிகாரோகம் :- தேகநோய், காய்ச்சல், நடுக்கல், தாகம், தேகம் பளுவாயிருத்தல், வீக்கம், சூலை, இவைகள் உண்டானால்இது சூதிகாரோகம் என்று அறிய வேண்டும்.

பிரசவித்த ஸ்திரீகளுக்கு செய்யக்கூடிய உபச்சாரங்கள் வேறு விதமாக செய்தல் விசனம், அசீரணபோசனம், இவைகளினால் வாயுவானது பிரகோபித்து ரத்த ஒழுக்கை தடுத்து ஹிருதயம், தலை அடிவயிறு, சூலை, அருசி, வியர்வை இவைகள் உண்டாகி அதனால், உடல் இளைத்தல், பலயீனம், பசிமந்தம் முதலியவைகளை உண்டாக்
கும். இது தான் குதிகாரோகம் என்று சொல்லப்படும்.

பரிகாரம் :- மேற்கூறிய குதிகாரோகத்தை சமனம் செய்ய சாமானிய வாதநாச சிகிச்சைகளைச் செய்ய வேண்டியது.

தசமூலத்தின் கியாழம், கொஞ்சம் சூடாய் இருக்கும் போதே பசு நெய்யில் கலந்து சாப்பிட்டால் குதிகாரோகம் நிவர்த்தியாகும்.

குதிகாரோகத்திற்கு நாகராதி லேகியம் :- பசு நெய் 80 துலாம், பசும்பால் துலாம் 256, கற்கண்டு துலாம் 200, சுக்கு மிளகு, திப்பிலி, இலவங்கப்பட்டை, சீரகம், ஏலக்காய் இலவங்கப்பத்திரி, ஒமம், பெரியசோம்பு, செவ்வியம், சித்திரமூலம், கோரைக்கிழங்கு இவைகள் வகைக்கு 4-துலாம் இவைகளை முறைப்படி லேகிய
பக்குவமாக கிளறி நெல்லிக்காய் அளவு தினம் இரு வேளையாக பிரசவித்த ஸ்திரீகட்கு கொடுத்து வர சூதிகாவாயு, மந்தம் முதலியன நீங்கி, நல்ல பசி தீபனமும் தேக புஸ்டியும் உண்டாகும்.

Admin
Admin
Admin

Posts : 1685
Points : 4727
Reputation : 11
Join date : 15/09/2010

https://ayurvedamaruthuvam.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum